அவர் நம்முடன் வாழ்கிறார் என்பது தான் நினைவு..
அது தான் நிஜம்...// நன்றாக அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள் ராகவேந்திரர் சார்.. நன்றி..
Printable View
அவர் நம்முடன் வாழ்கிறார் என்பது தான் நினைவு..
அது தான் நிஜம்...// நன்றாக அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள் ராகவேந்திரர் சார்.. நன்றி..
From GG's Treasure Island with Pleasure!
ஆயிரம் நினைவு ஆயிரம் கனவு காணுது மனது ....மன்னரின் தன்னம்பிக்கைக் கனவுகள்!
நாளை நாமொரு ராஜாங்கம் அமைப்போம் ....புன்னகை வண்ணங்கள்!
https://www.youtube.com/watch?v=TwiWbFoDyEY
இது நடிகர்திலகத்தின் தன்னம்பிக்கைக் கனவுப்பறவை சிறகடிக்கும் ...நெஞ்சிருக்கும் வரை...நினைவிருக்கும்!
https://www.youtube.com/watch?v=NaItT2DZVXU
Quote:
மனமிருந்தால் பறவைக் கூட்டில் மான்கள் வாழலாம் வழியிருந்தால் கடுகுக்குள்ளே மலையைக் காணலாம் .....சுமைதாங்கும் நெஞ்சக் கனவலைகள்...இதமான கடற்கரை காற்றின் ஸ்பரிசத்தில்......... மணலில் பதிந்த பாதச் சுவடுகளில்....அந்தி முடிந்த ஆரம்ப இரவின் மடியில்...
https://www.youtube.com/watch?v=6Eg20JQwGYY
ராகவேந்திரன் சார்,
http://www.penmai.com/forums/attachm...nth-65motw.gif
சான்ஸே இல்லை. பட்டை உரித்து விட்டீர்கள். நான் ஊமைப் பெண்ணின் உறவைப் பெற்றி என்னென்ன எழுத வேண்டுமென்று நினைத்திருந்தேனோ அதைவிட பலமடங்கு பிரமாதமாக எழுதி குறிப்பாக சாரங்கி, புல்லாங்குழல் வாத்தியங்களின் ஆளுமையை அற்புதமாக விவரித்து அணுஅணுவாக ரசிக்க செய்து விட்டீர்கள். இதைத்தான் விஸ்வரூபம் எடுப்பது என்பார்களோ.
வாஸ்ஸூ வந்தாதிட்டுவார்..பாட் இங்க கேக்கலாம்..எக்ஸ்ப்ளனேஷன் அவர் கொடுக்கட்டும்...
https://youtu.be/F7uQPqQpGuU
காலம் எனக்கொருபாட்டெழுதும்
காற்று வந்தே இசை அமைக்கும்
தாளம் போடும் நீர் அலைகள்
தாவி பாயும் நினைவலைகள்
https://youtu.be/M_qPZWuHpT0
நெடு நாள் ஆசை ஒன்று இந்த நெஞ்சினில் உதித்ததுண்டு
அதை நேரிடையாகச் சொல்ல நான் நாணமில்லாதவள் அல்ல..
இந்தப் பாடலும் ஏனோ மனதில் பாரம் ஏற்றுகிறது. பாரத்தை ஏற்றுவது 'சிசுபாலன்'.
https://i1.ytimg.com/vi/UzjqNGEAN7o/hqdefault.jpg
பாடலின் சிச்சுவேஷன் இதுதானா?
ருக்மணி நினைவில் உலகை வெறுப்பதாக நடிக்கும் சிசுபாலன் மனைவி வைசாலினியையும் மறந்து, பெற்ற தாய் சொல்லையும் கேளாமல், தான் திருமணம் செய்யவிருந்த ருக்மணியை கவர்ந்து சென்ற கண்ணனை மேலும் எதிர்க்க முடிவு செய்கிறான். நூறு குற்றங்கள வரை பொறுத்துக் கொள்வதாக கிருஷ்ணன் கெடு வைக்க, 60 குற்றங்களுக்கு மேல் தவறுகள் புரிகிறான் சிசு. (ஆனால் கண்ணனை உண்மையாக மனதில் வைத்து பொய்யாக எதிர்க்கும் வேஷம். பிறவி சாபங்கள் முடிந்து திருமாலை சீக்கிரம் அடையவே இந்த குறுக்கு வழிகள். வேண்டுமென்றே.)
மனைவியும், தாயும் புத்திமதி சொல்ல அவர்களை வேண்டுமென்றே எடுத்தெறிந்து பேசிவிட்டு, பின் மன உளைச்சலில் நிம்மதியற்று இந்தப் பாடலைப் பாடுகிறான்.
காட்சிக்கான கதை இதுதான் என்று நினைக்கிறேன்.
குன்னக்குடியார் போட்ட நல்லதொரு டியூன். தான் வேஷதாரியாய் இருக்க வேண்டிய துர்நிலையையும், வெளியே சொல்ல முடியாத ரகசியங்களை மனதில் வைத்து படும் வேதனைகளையும், தாய், மனைவியைக் கூட அலட்சியப்படுத்துவதிற்கான அவலநிலையையும் உணர்த்தும் சிசுபாலனின் இந்தப் பாடல் அற்புதமாய் நம்முள் ஆழமாக இறங்குகிறது.
நாடகக் காவலருக்கு டைட்டில் ரோல். அவருக்கு திருநெல்வேலி சாப்பிடுவது போல. ஒரு பக்கத்து நெஞ்சை ஏற்றி இறக்கி, இரண்டு கால்களில் ஒன்றை மாற்றி மாற்றி அடிக்கடி தாங்கியவாறே கலக்கி விடுவார்.
(கடலூரில் மஞ்சை நகர் மைதானத்தில் நடந்த ஒரு பொருட்காட்சியில் நாடகம் போட்டு, மேக் -அப் கலைக்கும் போது 'புளித்த ஏப்பமாக வருகிறது' என்று சோடா குடித்துக் கொண்டே இருந்தார் மனோகர். அனைவரையும் ஏப்பம் விட்ட ராவணேஸ்வரனுக்கே இந்த நிலைமை. 'ஆ' என்று வாய் பிளக்காமல் பார்த்து வியந்து கொண்டிருந்தேன் சிறுவயதில்).
பாடிய பாடகரின் வித்தியாசக் குரல் நன்றாக இருக்கிறது. ஆனால் யாரென்று எளிதில் உணரமுடியவில்லை. ராஜேஷ் என்று டைட்டிலில் போடுகிறார்கள். (குன்னக்குடி பெயரும் உண்டு) இவர் வேறு ஏதும் பாடல் பாடியிருக்கிறாரா இல்லை இந்தப் பாடலைப் பாடியது வேறு யாராவதா என்பதை ஜாம்பவான்கள் விளக்குக.
பாடலின் ஆரம்பத்தில் மனோகரின் நடை சற்று சிரிப்பை வரவழைக்கிறது. பின் சமாளித்துக் கொள்வார். வில்லன் அழுதால் விவகாரம்தானே!
பூவை செங்குட்டுவனின் பாடல் வரிகள். நல்ல பாடல்.
இறைவனுக்கே தெரிந்து விடும்
எண்ணமெல்லாம் புரிந்து விடும்
என் நிலையில் அவன் இருந்தால்
அவன் மனமும் கல்லாகும்
தாமரையில் நூலெடுத்தே
தறி நெய்தால் பலனுமில்லை
பாமரரின் கண்களுக்கு
பாவபுண்யம் தெரிவதில்லை
ஒருவர் செய்த பாவபுண்யம்
மற்றவர்க்கே சேர்வதில்லை
தண்ணீரும் உலகினிலே
மூன்றுமுறை பிழை பொறுக்கும்
கண்ணனோ நூறுமுறை நான் செய்யும் பிழை பொறுப்பான்
பொன்னான மனையாளும் முன்னூறு பிழை பொறுப்பாள்
என் தாயும் எனக்காக எத்தனைதான் பிழை பொறுப்பாள்?
https://youtu.be/Zo3vp1blmaw
//நெடு நாள் ஆசை ஒன்று இந்த நெஞ்சினில் உதித்ததுண்டு
அதை நேரிடையாகச் சொல்ல நான் நாணமில்லாதவள் அல்ல..//
ஏன் இந்த சுருக்?... இந்த சரணாலயம் பாடலுக்கு சரண்டர் ஆன காலம் ஒன்றுண்டு. கொஞ்சம் மறந்திருந்தேன். நினைவில் மலரச் செய்து விட்டீர். நிஜமாகவே ரசித்த ரசிக்கக் கூடிய பாடல். தேங்க்ஸ் சின்னா.
ஏன் இந்த சுருக்?..// ஏற்கெனவே எழுதியிருக்கிறேன் என நினைவு வாஸ்ஸூ.. நல்ல பாட்டு தான்..இன்னொன்று காட்டுக்கும் மலருக்கும் கல்யாணமாம் கானக் கருங்குயில்கள் கச்சேரியாம்..
namakku raghu dhasai oomai penninaal.:ty::ty::ty::ty:
டியர் வாசு சார் மற்றும் ராகவேந்தர் சார்,
அலைகள் படத்தின் "ஊமைப் பெண்ணை பேசச்சொன்ன உறவோ" பாடலை விவரமாக எழுதி மனதை கனக்க வைத்து விட்டீர்கள். உங்கள் இருவருக்கும் எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை.
எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த பாடல். யாராவது ஒரு எழுத்து வேந்தர் இப்பாடலைப் பற்றி எழுத மாட்டார்களா என்று ஆவலோடு காத்திருந்தேன். அபூர்வங்களைத் தோண்டியெடுத்து தருவதை வாடிக்கையாக கொண்ட நீங்கள் இருவரும் அதை செவ்வனே செய்து விட்டீர்கள்.
'கண்ணிலே என்ன உண்டு' மெட்டை நிராகரித்து இந்த மெட்டை தேர்ந்தெடுத்த ஸ்ரீதர் ஒரு ஜீனியஸ். சிச்சுவேஷனுக்கு தகுந்த ட்யூனை செலெக்ட் செய்வதில் அவரை மிஞ்ச ஆள் கிடையாது என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிரார்.
நானும் ஓடியனில் தான் பார்த்தேன். முதல்முறை பார்த்தபோதே இப்பாடல் மனதில் இனம்புரியாத பாதிப்பை ஏற்படுத்தியது. கௌரவம், பூக்காரி, பாக்தாத் பேரழகிஎல்லாம் பார்த்த பிறகு மீண்டும் அலைகள் பார்த்தேன், (இந்தப் பாடலுக்காகவே). நெகிழ்ந்து போனேன்.
நீண்ட இடைவெளிக்குப்பின் மீண்டும் அந்த நினைவுகளை உள்ளத்தில் ஏற்படுத்திய உங்கள் இருவருக்கும் நன்றிகள்.
பாவம் ஊமைப் பெண்ணைப் பேசச் சொன்னால் பாடல் கேட்டு எல்லாரும் மனம் கனத்து இருக்கிறார்கள்..எனில் ஒரு பாஸ்ட் சாங்க் போட்டு விட்டுடலாமா :)
ஆக்சுவலா நேத்திக்கு ஸ்ரீ ராம நவமிக்குப் போட்டிருக்க வேண்டியது.. ஏன்னாக படம் பெயர் ஜானகி ராமுடு..:)
அதிரண்டி மாமா அதிரண்டி லோ.. புதிரண்டி.. சம்திங் சம்திங் லோ...
நாகார்ஜுன் விஜயஷாந்த்தி.. எஸ்பி பி. சுசீலாம்மா..என ப் போட்டிருக்கிறது சுசீலாம்மா தானா.. இரண்டு பேர் வாய்ஸும் டிஃபரண்ட்டாக இருப்பது போல் பிரமை..
https://youtu.be/yl_HcuTQoOQ
வாசு தமிழ் டப் வந்ததா பார்த்திருக்கிறீரா..
டியர் வாசு சார்,
பத்து மணி ஸ்பெஷல் காட்சிகள் ஆய்வில் அன்றைய தெலுங்கு டப்பிங் படங்களின் சூறாவளியை தங்களுக்கே உரித்தான நடையில் நகைச்சுவை மிளிர தந்திருந்த விதம் அட்டகாசம்.
சென்னையில் இவை ரெகுலர் ஷோக்களிலேயே வந்து ஒருவாரம் ஓடி வசூலை அள்ளின. எல்லாப்படங்களும் ஒரே மாதிரியாக இருந்தும் திரும்ப திரும்ப இவற்றுக்கு கூட்டம் குவிந்ததுதான் ஆச்சரியம். அதற்குக் காரணம் தியேட்டர்களில் இப்படங்களுக்கு வைக்கப்படும் ஸ்பெஷல் ஸ்டில்கள். படத்தில் இடம்பெறும் "அந்த மாதிரியான" காட்சிகளை மட்டும் கொண்டு அந்த ஸ்டில்கள் தயாரிக்கப்படும். நம்ம ஆட்களுக்குத்தான் அது போதுமே. அரங்கை நிறைத்துவிட மாட்டார்களா. தமிழ்ப்படங்கள் தாய்க்குலத்தை நம்பியே ஓடின என்றால், இப்படங்கள் தாய்க்குலத்தை நம்பாமலே ஓடி அசத்தின.
நீங்கள் சொன்ன படங்களோடு இன்னும் நினைவுக்கு வரும் சில படங்கள்
ஜாக்பாட் ஜாங்கோ
பெண்ணின் சவால்
கராத்தே கமலா
ராஜ்மகால் ரகசியம்
கப்பல்தீவு காதல் ராணிகள்
ஜில்ஜில்மேனி செக்ஸ் ராணி (பயங்கர திகில்)
ரைபிள் ராஜா
இப்படி நிறைய. எல்லாவற்றுக்கும் ஒரே திரைக்கதைதான்.
இவை போக மலையாள படங்களும் நிறைய வந்து ரசிகர்கள் பாக்கெட்டை கொள்ளையடித்தன. அந்த சமயத்தில் வந்த படங்களென்று பார்த்தால்
அவளோட ராவுகள்
சத்திரத்தில் ஒரு ராத்திரி
ரதி நிர்வேதம்
மழு (மழு என்றால் மலையாளத்தில் கோடரி என்று அர்த்தமாம். ஆனால் அதுக்கு தமிழ் விநியோகஸ்தர் கொடுத்த டைட்டில் 'மாமனாரின் இன்ப வெறி'.... கொடுமை)
உங்கள் ஆய்வில் மூன்று பிரிவாக மாயாஜால யுகம், ஜேம்ஸ்பாண்ட் யுகம், லேடி ஜேம்ஸ்பாண்ட் யுகம் என்று பிரித்து ஆய்ந்திருக்கிறீர்கள். எப்படி எந்த ஒரு ஆய்வையும் டாக்டரேட் அளவுக்கு உங்களால் பண்ண முடிகிறது என்று எனக்கு ஆச்சரியம்.
அடுத்த அதிரடி ஆய்வு என்ன (சொல்ல மாட்டீர்கள். பதித்த பின்னர்தான் தெரியும்)
காலை 10 மணிக் காட்சி பக்கா அனுபவங்கள். ...தொடர்கிறது.
மிக்க நன்றி ஆதிராம் சார்!
தங்கள் ஊக்கப்படுத்தலுக்கும், உற்சாகப்படுத்தலுக்கும் நன்றி. எந்த ஒரு பதிவுக்கும் மேலதிக விவரங்களை மிகச் சரியாக தந்து பதிவுகளை தாங்கள் மேம்படுத்துவதற்கும் மிக்க நன்றி.
ஒரே ஒரு குறை. உங்களை நாங்கள் மிகவும் மிஸ் செய்கிறோம். நடிகர் திலகம் திரியிலும் சரி....மதுர கானங்களிலும் சரி! அடிக்கடி காணமல் போய் விடுகிறீர்கள். அதனால் இழப்பு எங்களுக்குத்தான்.
தங்களுடைய விவரப்பதிவுகளுக்கு நான் முதல் ரசிகன் என்றே சொல்லலாம். விடுபட்டுப் போன அல்லது மறந்து போன நினைவுகளை 'அட... ஆமாமில்லே... ஆதிராம் சரியாக நினைவு கூர்ந்து விட்டாரே' என்று நான் பலமுறை ஆச்சரயப்படுமளவிற்கு நீங்கள் விஷய ஞானம் உள்ளவர் என்பது நித்ய உண்மை. நிச்சயமாக இதை நான் வெறும் புகழ்ச்சிக்கு சொல்லவில்லை.
மது அண்ணா, நீங்கள், ராகவேந்திரன் சார், கோபால் போன்ற அனைவரும் நிச்சயம் காலைக் காட்சிகளை கண்டு மகிழ்ந்திருக்கிறோம். பொதுவாக சிட்டியில் உள்ளவர்களுக்கு இது போன்ற வாய்ப்புகள் கம்மி. சிட்டி தள்ளி உள்ள பகுதிகளிலும், நடுத்தரமான கடலூர், சிதம்பரம், விழுப்புரம் போன்ற நகரங்களிலும் இந்த காலை 10.30 மணிக் காட்சி மிகவும் பிரசித்தம். 'எப்படா சனி, ஞாயிறு வரும்' என்று தவம் கிடப்போம். வெள்ளிக் கிழமைதான் தியேட்டர் வாசலில் அது சம்பந்தமான போஸ்டர் ஒட்டுவார்கள்.
மறந்து போன, இது போன்ற, மேலும் உள்ள டப்பிங் படங்களை நீங்களும், மது அண்ணாவும் அட்டகாசமாக தந்து விட்டீர்கள். கொஞ்சம் 'டீப்'பாக சிந்தனை செய்த போது இன்னும் சில படங்கள் கூட ஞாபகத்துக்கு வந்தன. தெலுங்குப் படங்கள் அல்லாது கன்னடப் படங்களுக்கும் இத்தகைய பெருமை உண்டு.
https://i.ytimg.com/vi/9yI7gT17EVc/hqdefault.jpg
அதில் முக்கியமானது விஷ்ணுவர்தன், துவாரகீஷ் நடித்த 'கள்ளா குள்ளா' என்ற படம் நிஜமாகவே நல்லா 'கல்லா' கட்டியது. கடலூர் முத்தையாவில் ரெகுலர் ஷோவாக கலக்கி எடுத்து பின் காலைக் காட்சியாகவும் இன்னொரு ரவுண்ட் வந்தது. செம என்டெர்டெயின்மென்ட் மூவி. கலர் வேறு.
அப்புறம் கன்னட ராஜ்குமார் நடித்த 'மயூரா' என்ற 'அரச' படம் தமிழ் பேசி ஏகோபித்த பாராட்டுதல்களை பெற்றது. ராஜ்குமாரின் லாவகமான வாள்வீச்சு படத்தை தூக்கி நிறுத்தியது. பிரம்மாண்டமான தயாரிப்பு.
https://i.ytimg.com/vi/nvOHSxDrEbU/hqdefault.jpg
'சகோதர சவால்' என்ற கன்னடப்படம் 'சகோதர சபதம்' என்று வெளிவந்து விஷுணுவர்த்தன், ரஜினி நடிப்பில் நன்றாக ஓடியது. ரஜினி அப்போது தமிழில் வேகமாக முன்னுக்கு வந்து கொண்டிருந்த நேரத்தை தயாரிப்பாளர்கள் விடுவார்களோ! செமையாக பயன்படுத்திக் கொண்டார்கள்.
http://4.bp.blogspot.com/-w6StyR2PAk...MANTHA+RAO.jpg
தெலுங்கில் கிருஷ்ணாவும், என்.டி.ஆரும் இணைந்து நடித்த 'கடவுள் படைத்த மனிதர்கள்' (தெலுங்கில் 'தேவுடு சேசின மனுஷுலு') அந்த மாதிரி இன்னொரு படம். நாயகி ஜெயா மேடம்.
அப்புறம் நாகேஸ்வரராவ் நடிப்பில் வெளிவந்த ஆக்ஷன் மூவி 'வைரக் கிரீடம்'
ராமகிருஷ்ணா இன்னொரு ஆக்ஷன் ஹீரோ. இவர் நடித்து வெளிவந்த 'பைட்டர் பகவான்' சக்கைப் போடு போட்டது.
ரஜினியின் வளர்ச்சி காலத்தில் அவர் நடித்த மொழி மாற்றுப் படம் 'இன்ஸ்பெக்டர் ரஜினி'. 'உங்க சௌத்ரியை எங்கள் இன்ஸ்பெக்டர் ரஜினி முந்திட்டார்' என்று அப்போதைய ரஜினி ரசிகர்கள் எங்களிடம் செம காமெடி பண்ணினர்.
https://upload.wikimedia.org/wikiped...telugufilm.jpg
பிறகு ரஜினியும், என்.டி ஆரும் இணைந்த படம்' என்ற விளம்பர வாசகத்தில் வெளிவந்து தோல்வியைத் தழுவிய 'டைகர்'. ரஜினிக்கு ஜெயசுதாவின் தங்கை சுபாஷிணியும், ராமாராவிற்கு ராதா சலூஜாவும் ஜோடி
என்.டி.ஆர் தனியே ஹீரோவாக நடித்த 'ராயல் டைகர் ராமு',
என்.டி.ஆர், வாணிஸ்ரீ ஜோடியில் 'சிம்மக்குரல்'.
கிருஷ்ணா நடித்த 'ரத்த சம்பந்தம்'
லேடி ஆக்ஷன் மூவி 'பொல்லாத பெண்'. இதில் லதா, சரத்பாபு ஜோடி.
இன்னும்
https://i.ytimg.com/vi/s2P6Xr-63go/maxresdefault.jpg
கௌபாய் குள்ளன்,
ஜூடோ சுந்தரி,
லேடி பைட்டர் ரேகா,
நேபாளத்தில் சி.ஐ.டி 999,
'டெத் ரைட்ஸ் எ ஹார்ஸ்' ஆங்கிலப்படத்தின் தழுவலான, மிக பாப்புலரான 'ரிவால்வார் ரீட்டா',
துப்பாக்கி ரங்கன்,
கத்திக்குத்து கந்தன்,
http://www.mangomobiletv.com/vod_images/B0000001A61.jpg
டூபான் மெயில் (இந்தப் பெயரில் மஞ்சுளா நடித்த தெலுங்கு தழுவல் ஒன்றை பார்த்திருக்கிறேன். 'அழகி'க்கு ஹீரோ நரசிம்ம ராஜு. கிரிபாபு, விஜயலலிதாவும் உண்டு )
டூபான் க்வின்
இப்படி நிறைய.
ஆதிராம் சார்,
இன்னொரு படம் தங்களுக்கு நினைவில் இருக்கும் என்று நினைக்கிறேன்.
'நகரத்தில் திருடர்கள்' என்று ஒரு படம் வந்ததே...நினைவிருக்கிறதா?...படுபயங்கரமான படம். காலைக் காட்சி பார்த்துவிட்டே நடுங்கிப் போய் வீட்டுக்கு வந்தேன் வேர்க்க விறு விறுக்க.
இன்னும் கூட சில நினைவுக்கு வருகின்றன.
பூதம் எனது நண்பன்,
மாய சக்தி,
ராக்கெட் ராணி,
நாக சக்தி
இப்படியும் படங்கள் காலை காட்சியாக உலா வந்தன.
மலையாளத்தில் வின்சென்ட் நடித்த (அவரது நூறாவது படம் என்று நினைக்கிறேன்) 'பிக்னிக்' என்ற படம் பார்த்ததும் உண்டு.
https://upload.wikimedia.org/wikiped...Ponni_film.jpg
நம்ம கமல், லஷ்மி நடித்த 'பொன்னி' என்ற படம் கூட பின்னாளில் கமல் ஸ்டாரான பிறகு 'கொல்லிமலை மாவீரன்' என்று வெளிவந்தது.
https://merryfrolics.files.wordpress...6&h=351&crop=1
அப்புறம் கமல் நடித்த 'ஏழாம் இரவில்' என்ற மொழி மாற்றுப் படமும் இந்தக் காலைக் காட்சி லிஸ்ட்டில் சேருமே. கமலுக்கு கோராமை மேக்-அப். இது இந்தியிலும் 'பியாசா சைத்தான்' என்று மொழி மாறியது
https://horrorpediadotcom.files.word...y-brothers.jpg
இதுவல்லாமல் நேரிடையாகவே வந்த இந்திப்படம்... பேய்ப்படம் ஒன்று 'தர்வாஜா'. ஐயோ! குலை நடுங்க வைக்கும் படமல்லவா அது.
இன்னும் நிறைய இருக்கிறது. ஞாபகம் வர,வர தரலாம்.
இதெல்லாம் செம ஜாலியான காலங்கள். பின் இவைகளின் காலம் போய் நீங்கள் சொன்ன மாதிரி மலையாள 'A' சர்டிபிகேட் படங்களே பின்பு காலைக்காட்சி படங்களாய் நெடுநாள் கோலோச்சின. இந்தப் படங்கள் வெறும் முக்கால் மணி நேரத்தில் முடிந்து விடும். இவைகளிலும் சண்டைக் காட்சிகள் உண்டு. உடலுறவு சண்டைக் காட்சிகள்.
https://i.ytimg.com/vi/Jw5tqA1b_Mk/hqdefault.jpg
நீங்கள் குறிப்பிட்ட 'மழு' (ஆயுதம்) நிஜமாகவே நல்ல படம். பாலன் கே.நாயரின் கடின உழைப்புக்கு ஒரு சான்று அந்தப் படம். 'பாப்பாத்தி' ரதி தேவி மருமகள். சந்தர்ப்பவசத்தால் ஒருமுறை மருமகளுக்கும், மாமனாருக்கும் ரசாபாசம் நடந்துவிட (இது படத்தில் டீசென்ட்டாகவே இருக்கும்... அது கூட படத்தின் முக்கால்வாசி பாகத்திற்குப் பிறகு... சுகுமாரன் என்ட்டர் ஆவதற்கு முன் ) நம்ம ஆளுங்க அதை மட்டும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, முண்டு உடுத்திய 'பாப்பாத்தி' ரதிதேவியின் போஸை எட்டு சீட் போஸ்டராக ஒட்டி,'மாமனாரின் இன்ப வெறி'யாக மாற்றி, தமிழகத்தையே காம வெறி பிடிக்கச் செய்து விட்டார்கள் பாவிகள். அந்தப் படத்தில் கடும் கிராமத்து உழைப்பாளியாக வாழ்ந்து காட்டியிருப்பார் நாயர்.
அது போல ஜெயபாரதியின் முதுகை மட்டும் பெரிதான போஸ்டராக்கி 'இதோ இவிட வரே' படத்துக்கு பெரியவர் முதல் சிறியவர் எல்லோரையும் வரச் செய்து விட்டார்கள். நல்ல வேளை. 'சோமனின் காமம்' என்று இதற்கு தமிழில் பெயர் சூட்டாமல் விட்டார்களே! அதுவரை பிழைத்தோம்.
சரி! சப்ஜெக்ட் வேறு திசை நோக்கி பாய எத்தனிக்கிறது. நிறுத்திக் கொள்வோம்.
எது எப்படியிருந்தாலும் சரி! எழுபதுகளின் வெயிலில் தியேட்டர்களின் கதவுகளைத் திறந்து வைத்து, காற்றுக்காக அங்கேயே ஏங்கி, வேர்த்து நின்று விஜயலலிதா, கிருஷ்ணா, ஜோதி இவர்களின் பழுப்பு கலர் திரைப்படங்களின் சண்டைக் காட்சிகளையும், குதிரையோட்டங்களையும் ரசித்த காலங்களை காலாகாலத்துக்கும் மறக்க முடியாது.
காலைக்காட்சி அல்லாது மீதி மூன்று ஷோக்களும் என் 'இதய தெய்வ'த்தின் படங்களுக்கே முதலிடம். அதிலும் 'ஞான ஒளி'க்கு பிரதான இடம் அன்றும் இன்றும் என்றும். அப்புறம்தான் மற்ற படங்கள் எல்லாம்.
காலைக்காட்சிகள் நினைவை மீண்டும் கிண்டி விட்ட தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
//அதில் முக்கியமானது விஷ்ணுவர்தன், துவாரகீஷ் நடித்த 'கள்ளா குள்ளா' என்ற படம் நிஜமாகவே நல்லா 'கல்லா' கட்டியது. கடலூர் முத்தையாவில் ரெகுலர் ஷோவாக கலக்கி எடுத்து பின் காலைக் காட்சியாகவும் இன்னொரு ரவுண்ட் வந்தது. செம என்டெர்டெயின்மென்ட் மூவி. கலர் வேறு// மதுரையில் சிந்தாமணியில் கள்ளனும் குள்ளனும் என்று பார்த்த நினைவு..மாட்னி ஷோ.அப்போது பத்தாவது படித்துக்கொண்டிருந்தேன். பார்த்துவிட்டு பின் செய்ண்ட்மேரிஸ் ஸ்கூலில் ஏதோ ஒரு கண்காட்சிக்குப் போய்விட்டு 12 ஏ மஹால் டு ஆரப்பாளையம் பஸ் பிடித்து எட்டு மணிக்கு வீடுவந்த நினைவு..
மதுரையைப் பொறுத்த வரை காலைக் காட்சி என்றால்பதினொரு மணிக் காட்சி தான்..அதுவும் பழைய படங்கள் தான்..ரெகுலராகவே இந்த மலையாளப்படங்கள் வாடகைக்கு ஒரு இருதயம், இன்ப தாகம் (ஈட்டா), அவளுடே ராவுகள் (சென் ட்ரல் என நினைவு) மா இ வெ(மீனாட்சி என நினைவு) ..போட்டிருந்தார்கள்.. பட் நான் எதுவும் பார்த்ததில்லை..சீரியஸாகவே..
ஏனெனில் தமிழில் விட்டுப்போன சிவாஜி படங்கள் எனத் தொடர்ந்து பார்த்திருந்தபருவம் பத்து,ப்ளஸ் ஒன் ப்ளஸ் டூ.. காலேஜ் போன பிறகு தான் கொஞ்சம் அக்கரைக்குச் சென்று படம் பார்க்க முடிந்தது..காலேஜ் கட்டடிப்பது என்பது சனிக்கிழமை மட்டுமே.. மார்னிங்க் ஷோமோஸ்ட்லி சென் ட்ரல் என நினைக்கிறேன்.. பேய் ப் படம் ஹிந்தி என்றால் நினைவில் வருவது புராணா மந்திர்.. அப்புறம் த்ரில்லர் பஹேலி..இதுவும் சென் ட்ரல் தான் ..
காலேஜ் முடித்து ப்ரொபஷனல் கோர்ஸ் சேர்ந்த பிறகு பார்த்த படம் ஒன்று நினைவில் சுந்தரம் ஏ.சி.யில் (அண்ணா நகர்) ஹீரோ.. ஐ திங்க் ஹிந்திப்படத்தில் நான் பார்த்த ஐந்தாவதோ ஆறாவதோ படம்.
மலையாளம் எப்போது பார்த்தேன் என நினைவில்லை..பார்த்த தியேட்டர் நினைவிருக்கிறது.. தங்கம். படம் சலனம்..லஷ்மி மோகன் ப்ளாக் அண்ட் வொய்ட்..தூஷிக்கிறான் என்பது போல ஒரு பாட்டுவரும்..
தேவி தியேட்டர் வொர்க்*ஷாப் ரோட்டிலேயே கொஞ்சம் ஆறு முச்சந்தி தாண்டி சிம்மக்கல் போகும் பாதையில் ஆட்டு மந்தைக்கு முன்னால் ஒரு பெரிய பஸ் ஷெட் வித் லாட் ஆஃப் எம்ப்டி ஸ்பேஸ் இருக்கும் சிலபல பஸ்கள் ரிப்பேர் செய்யப் படுவதை அரைடிராயர் வயதில் பார்த்திருக்கிறேன்..பிற்காலத்தில் அந்த பஸ் ஷெட் மாறி அங்கு தீபா ரூபா தியேட்டர்கள் குட்டியாய் வந்தன..அங்கு தான் நீங்கள் சொன்ன சில படங்கள் ஏ ரெகுலர் ஷோபோடுவார்கள்..குப்பை தியேட்டர் ஏசி மற்றும் விலை அதிகம் (பாக்கெட் மணிக்குக்கட்டாது) எனில் ஸ்ரீதேவியே சரணமாக இருந்த நாட்கள்..
ம்ம் உங்க அளவுக்கு காலைக் காட்சி பார்த்ததில்லை வாசு.. :).
பரமேஸ்வரியில் யாதோங்கி பாரத் 200 நாட்களுக்கும் மேல் ஓடியதாக நினைவு. ஷோலேயும் அப்படியே.. காலேஜ் டயமா பள்ளி டயமா தெரியவில்லை.. அவுர் கோன் என்ற திரைப்படம் பரமேஸ்வரியில் திரையிடப் பட அதைப்பார்த்த என் நண்பன் என்னிடம் கதைகதையாகச் சொல்ல ஆ என க் கேட்டது இப்போது நினைவுக்கு வருகிறது.. (மார்ச்சுவரிக்குள்ள அந்த ஹீரோவோட ஃப்ரெண்ட் போய் ஒவ்வொரு பாடியாப் பாப்பான் பாரு..அப்பஒரு பாடியத்தெறக்கறச்சே ஒருகை வந்துஅவ்னைத் தொடுமா..
அப்புறம் என்ன ஆகுண்டா.. - விரல் நகம் கடித்தபடி நான்..
ம்ம் ஒண்ணும் ஆகாது..இல்லை அந்த ஃப்ரெண்ட் ஷாக்லயே ஹார்ட் அட்டாக் வந்து செத்துடுவான்..
பிற்காலத்தில் ராதா நடித்து அதுவே அதே இரவில் லோ வேறுபெயரோ வந்த நினைவு..
ராகவ் ஜி...
ஊமைப் பெண்ணின் தாக்கம் எப்போதுமே அடி மனதில் இருக்கும். இப்போ நீங்க கிளறி விட்டுட்டீங்க...
ஆரம்ப வரிகளில் ஃப்ரேமுக்குள் தெரியும் சந்திரகலாவின் பிம்பம் "ஊமைப் பெண்ணை பேசச் சொன்ன" என்ற வரிகள் வரை மௌனமாக சிலை போலிருந்து விட்டு "உறவோ.." என்ற வார்த்தையிலிருந்து வாயசைக்கும் விதத்தில் ஸ்ரீதரின் அனுபவம் பேசும்.
நான் ஒரு லிரிக்ஸ் பித்தன் என்பதால் சில வார்த்தைகளை சரி செய்து பாடல் வரிகளை மீண்டும் எழுதுகிறேன் ( உங்க அனுமதியுடந்தான் )
ஊமைப் பெண்ணை பேசச் சொன்ன உறவோ
இது நினைவோ வெறும் கனவோ
ஊமைப் பெண்ணை பேசச் சொன்ன உறவோ
இது நினைவோ வெறும் கனவோ
இது நினைவோ வெறும் கனவோ
வெறும் கனவோ
கூண்டுக் கிளி போல வாழ நினைத்தேன்
தாங்கும் கையொன்று கண்டேன்
மீண்டன சொர்க்கங்கள் என் வாழ்வில் என்று
வேண்டி வரம் கேட்டு நின்றேன்
இது நினைவோ வெறும் கனவோ
ஊமைப் பெண்ணை பேசச் சொன்ன உறவோ
இது நினைவோ வெறும் கனவோ
இது நினைவோ வெறும் கனவோ
பெண்ணின் மனசாட்சி பேசும்போது
என்னை நீ காண முடியும்
கண்களில் தீர்த்தங்கள் அபிஷேகமானால்
உண்மை உனைத் தேடி அடையும்
இது நினைவோ வெறும் கனவோ
இது நினைவோ வெறும் கனவோ
பாலும் சிலர் கண்ணில் நீராகத் தெரியும்
காணும் கண் செய்த தவறு
பாவையின் பாவங்கள் ஏதேனும் இருந்தால்
யாவும் நான் கொண்ட அழகு
ஊமைப் பெண்ணை பேசச் சொன்ன உறவோ
இது நினைவோ வெறும் கனவோ
நினைவோ.. கனவோ..கனவோ..
சிக்கா... நீங்க சொன்ன "காலம் எனக்கொரு பாட்டெழுதும்" பாடலுக்கு இசை அமைத்தவர் ஒரு பிரபலத்தின் தந்தை.. தெரியுமில்லே ?
மது அண்ணா,
திலீப்பின் பெருமைக்குரிய ஆனால் துரதிருஷ்ட சாலியான தந்தை குலசேகரை பற்றி பாகம் ஒன்றில் அலசும் போது ,இந்த பாடலை குறிப்பிட்டு தங்கள் புதிருக்கு விடையளித்திருந்தோம்.
சேகர் ஒரு திறமைசாலி. முழு ரகுமான் இல்லாவிட்டாலும் முக்கால் ரகுமான் என்று அவரை நன்கு தெரிந்தவர்கள்,அறிந்தவர்கள்,புரிந்தவர்கள் கூறுவார்கள்.
ஏ.கே .வேலன், நீர்க் குமிழியில் பாலச்சந்தரும் புதுசு, வாய்ப்பை ஏற்க தயங்கிய குமாரும் புதுசு என்பதால் அனுபவசாலி சேகர் சேர்த்து கொள்ள பட்டார். குமாரின் ஆரம்ப கால சாதனைகளில் சேகரின் பெயரும் எழுத பட்டே ஆக வேண்டும். வண்ண விழி மேடை, என்னதான் பாடுவது,நேற்று நீ போன்ற பாடல்கள் சேகரின் கை வண்ணமே.தவிர பின்னணி ,இணைப்பு இசை எல்லாமே சேகரின் தலையில்.
சேகர் ,தமிழில் ஒரு படம் கூட சொந்தமாக இசைக்கா விட்டாலும், மலையாளத்தில் தீவிர இசை ரசிகர்களை தீவிரமாக கவர்ந்து போற்ற படுபவர். இவரின் நூறு பாடல்களும் மலையாள தேசத்து பிரத்யேக மண்ணிசை சாதனை சரித்திரம்.
புகழேந்தியும் ,இவரும் ரொம்ப நெருக்கம். அவரிடம் சொல்வாராம் ,நாம ஜெயிக்காட்டாலும்,நம்ம பசங்க ஜெயிப்பாங்க.திலீப் ஜெயித்த பிறகு தன் தந்தையை நினைத்ததை விட காதன் ஹசரி போன்றவர்களை நினைத்தது , ஹூம்.... என்ன சொல்ல? ராஜகோபாலும்,குலசேகரனும் கல்லறையில் சுழன்றிருப்பார்கள்.
மது
ரொம்ப ரொம்ப நன்றி. காதில் வைத்துக் கேட்கும் பொழுது ஒரு சில வார்த்தைகள் தவறாக கேட்டு எழுதியிருக்கிறேன். போலும். பிழை திருத்தி சரியான வரிகளைத் தந்தமைக்கு உள்ளபடியே உளமார்ந்த நன்றி.
சரியான வரிகளைப் படிக்கும் போது தான் பாடலின் பரிமாணம் முழுமையாகத் தெரிகிறது.
கோபால்
ஆர்.கே. சேகர் எ குலசேகர் தமிழில் தனியாக இசையமைத்து ஓரிரு படங்கள் உள்ளன. கிராமஃபோன் ரிக்கார்டுகள் பார்த்த ஞாபகம். அதில் இந்தப் பாடல் இடம் பெற்ற படமும் இன்னும் ஓரிரு படங்களும் உள்ளன.
வி.குமாரைப் பொறுத்த மட்டில் குணசிங்கும் சேகரும் இல்லையென்றால் இந்த அளவிற்கு அவரால் வந்திருக்க முடியாது. எம்.எஸ்.வி.க்கு கோவர்தன் போல குமாருக்கு குணசிங். துரதிருஷ்டவசமாக அதிகம் வெளியே அறியப்படாமலே இருந்து விட்டார். சங்கு புஷ்பங்கள் படம் என்றும் குணசிங்கின் பெயர் சொல்லும்.
வாசு சார்
இனிமேல் கடிகாரத்தில் காலை 10 மணியானால் போதும் அந்தக் காலம் மீண்டும் நினைவுக்கு வரும் அளவிற்கு எழுதி அசத்தி விட்டீர்கள்.
எப்படிப் பாராட்டுவது..
யூ ஆர் கிரேட்
மிகப் பெரும்பாலான காலைக் காட்சிகளில் நான் பார்த்தது நடிகர் திலகத்தின் படங்கள் மட்டுமே. அது மட்டுமின்றி காலைக் காட்சிகளில் சென்னை நகரைப் பொறுத்த மட்டில் டப்பிங் படங்கள் அதிகம் போட மாட்டார்கள். பழைய தமிழ்ப்படங்கள் மட்டுமே. அதனால் இந்தப் படங்களின் பெயர்களெல்லாம் கேள்விப்பட்டதுண்டே தவிர பார்க்கும் வாய்ப்பு ...ம்ஹ்ம்... கிடைக்கவேயில்லை...ஒரு சில மட்டும் ரெகுலர் ஷோவில் வெளியாகும். அசல் தமிழ்ப்படங்களைப் பார்ப்பதற்கே முன்னுரிமை கொடுத்துப் பழகிவிட்ட காரணத்தால் மேற்கூறிய படங்களெல்லாம் பெயரோடு நெஞ்சில் நிலைத்து விட்டன. பார்ப்பதற்கு மனம் செல்லவில்லை..
வாசு,
சொன்னால் நம்புவாயோ என்னவோ, ராகவேந்தர் டென்ட் கொட்டாய் என்று ஒன்று ஆரம்பித்ததாய் ஞாபகம்.(இவர் ஆரம்பித்து தபேலென்று விட்டு விட்ட திரிகளின் புள்ளி விவர கணக்கை வைக்க இனி ஒரு பிலிம் நியூஸ் ஆனந்தன் பிறந்து வந்தால் மட்டுமே சாத்தியம்)
அதில் எழுத நினைத்தவை இந்த பத்து மணி காட்சிகள். நெய்வேலி அமராவதி திரையரங்கில் ,மாதம் இரு சனி ,ஞாயிறுகளில் ஆங்கில படங்கள்.(கன்ஸ் ஆப் நவரான்,டோரா டோரா டோரா,கிளியோ பாத்ரா போன்று).மீண்ட இரு சனி,ஞாயிரு நம் டப்பிங் படங்கள். கான்வென்டில் படித்த பொறியியலாள தந்தை(தாத்தா ,அப்பா,நான் எல்லோருமே கிண்டி பொறியியல் கூடமே) ஆங்கில படங்களையும்,என்.எல்.சி பாய்ஸ் ஹை ஸ்கூல் ,திடீர் குப்ப நண்பர்களை கொண்ட தனயன் டப்பிங் படங்களையும்தேர்வு செய்தது இயற்கையே. நானும் என் தந்தை வழியில் ஆரம்பம் முதல் சென்றிருந்தால்,இந்த திரி நல்ல சில எழுத்துக்களை இழக்க நேர்ந்திருக்கலாம்.
நிற்க, எனது டப்பிங் தேர்வுகள். மாய மோதிரம்(இந்தா இந்தா எடுத்துக்கோ),கப்பல் தீவு காதல் ராணிகள்,மாய மன்னன்,பல்லவ செல்வங்கள்,கோவாவில் சி.ஐ.டி 999(லட்சுமி நீச்சல் உடையில்),
நைட் கிளப் மோகினி (நான் குளு குளு தாரகை),அவளோட ராவுகள் (எல்பின்ஸ்டன்),சத்திரதண்டே ஒரு ராத்திரி (பெருத்த ஏமாற்றம்),மழு (மாமனாரின் இன்ப வெறி),தூமம் (இண்டர்வல் முடிந்து ஐந்து நிமிட சொர்க்க காட்சிகள்),நடுவில் சுதேசி கொள்கைக்காக ஜம்பு (சென்சாரின் கண்ணில் மண் பரங்கி மலை ஜோதி),ஆடதண்டே அலசா (என் வீடு எங்கே தெரியுமா ,நேரா போனா ரெண்டு மலை ,ஒரு பால் கடை, அதையும் தாண்டினா சின்ன பள்ளம், அதையும் தாண்டினா காட்டிற்கு நடுவில் பெரிய பள்ளம்,தங்குவதற்கு வா) ,தேவிகாவின் நிஜமு செப்பிதே நம்மரு, சுஜாதாவின் 60 நம்பூதிரிகளை பழி வாங்கும் வீர வரலாறு, சாவித்திரி அம்மாவாக ,சுஜாதா மகளாக ஒரு மலையாள படம்.
80 வாக்கில் டெக் வந்து விட்டதால் ,பேசாத, நல்ல பின்னணி இசை கொண்ட (ஒ யா , ஹாங் ,ஹாங் ,ஆஆஆஆஒ, டக் டக் டக் ,ஆங்கிலம் பக்கம் திரும்பி விட்டாலும், 90 களில் அறுபது நாடுகளிலும் அவர்கள் கலாசார பெருமை அறிய ஒவ்வொரு நாட்டு படங்களையும் தேர்வு செய்து ,கண்டு களித்து ,உண்டு,உயிர்த்து ,உற்றறிந்தேன்.
காலம் எனக்கொரு பாட்டெழுதும் போன்ற பாடல்கள் ,மலையாள ரசிகர்களின் போற்றுதலுக்குரிய மெட்டுக்கள்.
ஞாபகம் இருக்கா ,தேவராஜன் மாஸ்டர் இதே அடித்தளம் கொண்ட இசையில் ,டி.எம்.எஸ் ஐ வைத்து கொடுத்த துலாபார சிரிப்போ,இல்லை நடிப்போ ? எனது பிடித்தங்களில் ஒன்று.
கோ,
நீங்கள் குறிப்பிட்ட திலீபின் பெருமைப்படக் கூடிய தந்தையார் ராஜகோபால குலசேகரா இவர்தானே! சலீல், தேவராஜன் மாஸ்டர் இவர்களிடமும் பணி புரிந்தவர்.
http://1.bp.blogspot.com/-rJa8uFf3XN...7s+father2.JPG
https://rahmaniac.files.wordpress.co...khar.jpg?w=510
http://speechable.s3.amazonaws.com/images/88d5p1em.png
https://rahmaniac.files.wordpress.co...boss-11931.jpg
ஏற்கனவே எழுதியது நினைவுக்கு வந்தது கோ.
இன்றைய ஸ்பெஷல் (61)
நேற்றைய விடுமுறைக்கும் சேர்த்து 'இன்றைய ஸ்பெஷலி'ல் ஓர் அருமையான பாடலைப் பார்க்கப் போகிறீர்கள்.
உங்களுக்கு மனது சரியில்லையா? சோகமாய் இருப்பது போல் உணருகிறீர்களா? போரடிக்கிறதா? உறசாகம் குறைந்து களையிழந்து காணப்படுகிறீர்களா?
கவலையே படாதீர்கள்.
இன்றைய இந்தப் பாடலை 'புக்மார்க்' செய்து வைத்துக் கொள்ளுங்கள். தேவைப்படும் போது 'கிளிக்'குங்கள். கரை புரண்ட உற்சாக வெள்ளம் உங்களை சூழ ஆரம்பிப்பதை நீங்கள் உணரலாம்.
நான் மிக மிக அனுபவித்து ரசித்து ரசித்து எழுதிய பதிவு இது. 'இன்றைய ஸ்பெஷலி'ல் மிக மிக சந்தோஷமாக நான் இட்ட பதிவும் கூட.
படம்: துலாபாரம்
மூலக்கதை: தோப்பில் பாஸி
வசனம்: 'சவாலே சமாளி' புகழ் 'மல்லியம்' ராஜகோபால்.
இசை: தேவராஜன்
ஒளிப்பதிவு: நம்முடைய பி.என்.சுந்தரம்.
தயாரிப்பு: ராமண்ணா
இயக்கம்: வின்சென்ட்
'துலாபாரம்' படத்தில் டேம் பிக்னிக் செல்லும் கல்லூரி மாணவ மாணவிகள். இளமை பொங்கத் துள்ளும் கல்லூரி மாணவன் 'நவரசத் திலகம்' முத்துராமன். படு கியூட்டாக. இதுவரை எந்தப் படத்திலும் பார்த்திராத வகையில் படு ஸ்டைலாக, உற்சாகம் கரைபுரண்டோட செம ஜோர் அண்ணாச்சி. அருமையாக 'tuck in' செய்யப்பட்ட சிறுசிறு கட்டங்கள் அடங்கிய கைகள் மடித்துவிடப்பட்ட செக்டு ஷர்ட். அதற்கு தோதாக 'நச்'சென்று பொருந்தும் வகையில் பிளிட் வைத்து தைக்கப்பட்ட டைட் பேன்ட். பேண்டின் சைடு பாக்கெட்டுகள் இரண்டும் விரிந்து கொடுத்து கொள்ளை அழகாக இருக்கும் முத்துராமனுக்கு. முத்துராமன் அதைவிட அருமையான அழகாக, படு ஸ்லிம்மாக, கல்லூரி மாணவனைப் போல் இருப்பார் இந்தப் பாடலில்.
கண்களை கசக்கி கசக்கிப் பார்த்தேன். முத்துராமனா அது?! அடேங்கப்பா! என்ன ஒரு துள்ளல்! என்ன ஒரு உற்சாகக் கொண்டாட்டம்! என்ன ஒரு சுறுசுறுப்பு! துறுதுறுப்பு! இப்படி இவரைப் பார்ப்பதே அபூர்வம். சிருங்கார ரசம் சொட்ட சொட்ட, ஜாலியாக ஆடிக் கொண்டும் பாடிக்கொண்டும், இளசுகளைக் கலாய்த்துக் கொண்டும் மனிதர் அமர்க்கள அநியாயம் பண்ணி விட்டார் போங்கள். சில இடங்களில் எம்ஜிஆர் அவர்களை ஞாபகப்படுத்தும் விதமாக அவர் ஸ்டைலில் ஆக்ஷன்கள், கை அசைப்புகள் வேறு.
'இளம் கொடிவிட்ட பூவென இடைவிட்ட பூவுக்கு
ஆசையை விரிப்பேனா'
இந்த வரிகள் வரும் இடத்தில் பேண்ட் சைட் பாக்கெட்டுகளின் இரு பக்கங்களிலும் கட்டைவிரல்களால் கிடுக்குப் பிடி பிடித்து, ஸ்டைலாக துள்ளாட்டம் போட்டபடியே ஒரு அருமையான நடை நடப்பார் பாருங்கள் முத்துராமன். நிஜமாகவே அசந்து போவீர்கள். ராஜாங்கம் நடத்துவார் 'நவரசத் திலகம்' அவர்கள். (அப்படியே பின்னாட்களில் அவர் மகன் கார்த்திக் நடப்பது போலவே குறும்பு கொப்பளிப்பதை நன்றாக கவனிக்கலாம்! விதை ஒன்று போட்டால் துரை ஒன்றா முளைக்கும்?) அதே போல பாடலின் இடையிசையின் போது ஓட்டமும், நடையுமாக அவர் நடப்பது இன்னும் அருமை.
கல்லூரி மாணவிகளாக ஊர்வசி சாரதாவும், கட்டழகி காஞ்சனாவும். இணைபிரியா தோழிகளாக இருவரும் கைகளை இணைத்தபடியே.
முத்துராமன் தங்களை சுற்றி சுற்றி வந்து பாடும் போதெலாம் அதுவும் இரட்டை அர்த்தம் தொனிக்க அவர் பாட, அதை தோழியர் இருவரும் புரிந்து கொண்டு வெட்கப்பட்டு ஓடுவதும், திரும்பிக் கொள்வதும் சுகமோ சுகம். 'சிரிப்போ இல்லை நடிப்போ' என்று முத்து பாடும் போதெல்லாம் காஞ்சனாவும் சாரதாவும் 'இல்லை' என்பது போல ஜாலியாக தலையாட்டுமிடம் அப்படியே அள்ளும் சுகம். அதுவும் 'விழிப்போ... வலை விரிப்போ' என்னும் போது காஞ்சனா நாக்கைத் துருத்தி, சற்று வெளியே நீட்டி முத்துவை பழித்துக் காட்டி கேலி செய்யும்போது பார்க்கும் அனைவரும் அம்பேல்! என்ன அழகான பழிகாட்டல்!
'பார்க்கின்ற நெஞ்சுக்கு பால் தருவாள்
என்று பாத்திரம் படைத்தானோ'
என்ற கவிஞனின் பொல்லாக் காம வரிகளின் போது அதைப் புரிந்து கொண்டு காஞ்சனா வெட்கத்துடன் முன்னழகை மறைத்து பின்னழகைக் காட்டி, அதே சமயத்தில் சட்டென்று சாரதாவையும் திருப்பிவிடுவது ரசமான இடம்.
'அந்த பனிமுத்துத் துளிகளைப் பருகிடவே
எனை மாத்திரம் படைத்தானோ'
என்று முத்துராமன் பாடும்போது அதைப் புரிந்து கொண்டு காஞ்சனா சாரதாவிடம் 'பார்த்தியா?' என்பது போல ஒரு பார்வை பார்த்து, பின் வெளியே எதையும் காட்டிக் கொள்ளாமல் பெண்மைக்கே உண்டான வெட்க அமைதி காப்பார். காஞ்சனா கொடிகட்டுவார் இந்தக் காட்சியில்.
இப்பாடலுக்கு அர்த்தம் கேட்டீர்களானால் வண்டி வண்டியாக எழுதலாம். அவ்வளவு அர்த்தங்கள் புதைந்து கிடக்கின்றன இந்தப் பாடலில். காமரசம் சொட்டும் இப்பாடலை சற்றும் விரசமில்லாமல் எடுத்திருப்பது பாராட்டுக்குரியது. அதே சமயத்தில் கவிஞனும் பாடகனும், நடித்தவர்களும், இசையமைப்பாளரும் ஒருசேர வெற்றி பெற்ற பாடல் இது.
மலையாள தேவராஜனின் மயக்கும் இசையில் பாடல்கள் அனைத்தும் மாம்பழச் சுவை.
இப்படத்தின் டைட்டில் பாடல் வாழ்விலே மறக்க முடியாத மகோன்னதப் பாடல்.
சாரதாவும், காஞ்சனாவும் 'கல்லூரி' விழாவில் பாடும்
'வாடி தோழி கதாநாயகி'
ஜேசுதாசின் எவர்க்ரீன் பாடல்
'காற்றினிலே பெருங்க காற்றினிலே'
பாடகர் திலகமும், பாடகியர் திலகமும் அருமையாகப் பாடி அமைதியாக நம் கண்களில் நம்மையறியாமலேயே கண்களில் நீரை வரவழைத்த, நம் நெஞ்சில் ஆழ ஊடுருவிய காவியப்பாடல்
'பூஞ்சிட்டுக் கன்னங்கள் பொன்மணி தீபத்தில்
பால் பொங்கல் பொங்குது கண்ணீரிலே'
'சங்கம் வளர்த்த தமிழ் தாய்ப் புலவர் காத்த தமிழ்'
என்று நம் மனதில் ஆழமாய் ஊறிவிட்ட பாடல்கள்.
இன்னொன்று.'ஊர்வசி' விருது என்றாலே சாரதாதான் என்று உடனே நாம் நினைக்குமளவிற்கு மலையாளத்திலேயும்,தமிழிலேயும் 'துலாபாரத்'தில் அருமையாக நடித்து சிறந்த தேசிய நடிகை விருது
பெற்ற, நடிகர் திலகம் தமிழில் நாயகியாக 'குங்கும'த்தில் அறிமுகப்படுத்திய சாரதாவை மறக்க முடியுமா?
சரி! 'இன்றைய ஸ்பெஷல்' பாடலுக்கு வந்து விடுவோம்.
பாடகர் திலகத்தின் பட்டை கிளப்பும் 'கணீர்'க் குரலில்,
இனி பாடலின் வரிகள்
சிரிப்போ இல்லை நடிப்போ
இது சிங்காரப் பொன்னூஞ்சல் அழைப்போ
விழிப்போ வலை விரிப்போ
எனை விருந்து பருகச் சொல்லும் துடிப்போ
சிரிப்போ இல்லை நடிப்போ
இது சிங்காரப் பொன்னூஞ்சல் அழைப்போ
விழிப்போ வலை விரிப்போ
எனை விருந்து பருகச் சொல்லும் துடிப்போ
சிரிப்போ ஹோஹோஹோஹஹோ
கோபுரக் கலசத்தைக் கூந்தலில் மறைக்கும்
கோலத்தை ரசிப்பேனா
கோபுரக் கலசத்தைக் கூந்தலில் மறைக்கும்
கோலத்தை ரசிப்பேனா
இளம் கொடிவிட்ட பூவென இடைவிட்ட பூவுக்கு
ஆசையை விரிப்பேனா
இளம் கொடிவிட்ட பூவென இடைவிட்ட பூவுக்கு
ஆசையை விரிப்பேனா
அந்த ஆற்றினில் மிதப்பேனா
ஆ....ற்றினில் மிதப்பேனா
சிரிப்போ இல்லை நடிப்போ
இது சிங்காரப் பொன்னூஞ்சல் அழைப்போ
விழிப்போ வலை விரிப்போ
எனை விருந்து பருகச் சொல்லும் துடிப்போ
சிரிப்போ ஹோஹோஹோஹஹோ
ஊர்வலம் போகின்ற தேவியர் மேனியை
நான் வலம் வருவேனா
ஊர்வலம் போகின்ற தேவியர் மேனியை
நான் வலம் வருவேனா
அவர் ஒரு பக்க ஜாடையை கலைவட்ட மேடையை
ஓவியம் வரைவேனா
அவர் ஒரு பக்க ஜாடையை கலைவட்ட மேடையை
ஓவியம் வரைவேனா
அதில் என் உள்ளத்தை வரைவேனா
உள்...ளத்தை வரைவேனா
சிரிப்போ இல்லை நடிப்போ
இது சிங்காரப் பொன்னூஞ்சல் அழைப்போ
விழிப்போ வலை விரிப்போ
எனை விருந்து பருகச் சொல்லும் துடிப்போ
சிரிப்போ....ஹோஹோஹோஹோ
பார்க்கின்ற நெஞ்சுக்கு பால் தருவாள்
என்று பாத்திரம் படைத்தானோ
பார்க்கின்ற நெஞ்சுக்கு பால் தருவாள்
என்று பாத்திரம் படைத்தானோ
அந்த பனிமுத்துத் துளிகளைப் பருகிடவே
எனை மாத்திரம் படைத்தானோ
அந்த பனிமுத்துத் துளிகளைப் பருகிடவே
எனை மாத்திரம் படைத்தானோ
இதுதான் வாழ்க்கை என்றுரைத்தானோ
வா...ழ்க்கை என்றுரைத்தானோ
சிரிப்போ இல்லை நடிப்போ
இது சிங்காரப் பொன்னூஞ்சல் அழைப்போ
விழிப்போ வலை விரிப்போ
எனை விருந்து பருகச் சொல்லும் துடிப்போ
ஹஹ்ஹஹ்ஹஹ்ஹ ஹோ.
https://youtu.be/k92VcSvmkt8
திருச்சியில் நான் படித்த (.p .u .c )ஒரு வருடம்(1974-1975),திருச்சி ராஜா திரையரங்கில் 30 சிவாஜி படம் காலை காட்சி பார்த்துள்ளேன். (நண்பன் ராஜா குண சிங் உடன்.பஞ்சாபி அல்ல திருநெல்வேலி பாத்திரக்கடை நாடார்)அருணோதயம்,தங்கைக்காக,எங்க ஊர் ராஜா, வளர்பிறை,பார்த்தால் பசி தீரும்,தங்க மலை ரகசியம் இப்படி சில)
அருணோதயம் பார்த்து வெறுத்து போனேன். சிவாஜி-சரோஜாதேவி,மதுரை திருமாறன் ,கே.வீ.மகாதேவன் இப்படி பல திறமைசாலிகள் உழைப்பு வீண். சிவாஜி கொள்ளை அழகு. திராவிட மன்மதனின் அழகு பொற்காலம். (1968-1974)1971 இல் இருதுருவம்,தங்கைக்காக,அருணோதயம் ,குலமா குணமா(ஓடி விட்டதால் மன்னிக்கலாம்),பிராப்தம் என்று அவர் அழகின் வீரியத்தை வீணடித்த படங்கள். சி.வீ.ஆர் வாழ்க. சுமதி என் சுந்தரி வந்து அழகு கோட்டையை கொடி நாட்ட வைத்தது. தொடர்ந்த சவாலே சமாளியில் வேட்டி கட்டிய திராவிட மன்மதனை ஆயுட்காலம் முழுதும் கண் கொட்டாமல் ரசிக்கலாம். வேட்டிக்கே ஒரு தனி களை வந்து விடும்.(சங்கு மார்க் லுங்கிகளுக்கு எங்க மாமா, பைசன் பனியன்களுக்கு ஊட்டி வரை உறவு)
அருணோதயத்தின் ஆச்சர்யங்களில் ஒன்று. தங்கை கணவனை திருத்த திட்டமிட்டு (கொக்கு தலையில் வெண்ணை-உபயம் முக்தா சூத்திரம்) தன்னுடைய பெயரை கெடுத்து கொண்டு ,உலகம் தன்னை பழிக்கிறதே என்ற கதாநாயக புலம்பல்.(தண்ணி பாம்புக்காக படம் முழுதும் மகுடி)
வாசு,
எப்படி ரஜினியின் அத்தனை படங்களின் நடிப்பும் ,உத்தம புத்திரன் விக்ரம்,நவராத்திரி டீ .ஐ.ஜி ,எங்கள் தங்க ராஜா பைரவனிடம் மையம் கொண்டே இயங்குகிறதோ , அதே போல கார்த்திக்கின் அத்தனை படங்களின் ஈர்ப்பு நடிப்பும் முத்துராமனின் துலாபாரம்,உறவு சொல்ல ஒருவன் (ஹை கவிதா, ஹ ஆங்)நடிப்பை மையம் கொண்டது.
//நடுவில் சுதேசி கொள்கைக்காக ஜம்பு//
வாழ்க சுதேசி:)
//நானும் என் தந்தை வழியில் ஆரம்பம் முதல் சென்றிருந்தால்,இந்த திரி நல்ல சில எழுத்துக்களை இழக்க நேர்ந்திருக்கலாம்.//
அதானே பார்த்தேன்... ம்...இருந்தாலும் உண்மை. என்ன செய்து தொலைக்க.:)
//சத்திரதண்டே ஒரு ராத்திரி (பெருத்த ஏமாற்றம்)//
எனக்கும்தான். ஆனால் மஞ்சுபார்கவியும், சின்ன அம்பிகாவும் வரும் ஒரு காட்சி நினைவிருக்கா?:) சங்கரன் நாயர் மேல் சலிப்பு ஏற்பட்டது உண்மை.
//(சென்சாரின் கண்ணில் மண் பரங்கி மலை ஜோதி)//
'சென்சாரின் கண்களில் பரங்கிமலை' என்றே படிக்கிறேன்.
//சுஜாதாவின் 60 நம்பூதிரிகளை பழி வாங்கும் வீர வரலாறு//
படம் பெயர் 'பிரஷ்து'
//சாவித்திரி அம்மாவாக ,சுஜாதா மகளாக ஒரு மலையாள படம்.//
'சுழி'
https://i.ytimg.com/vi/bd5I-qki_0Q/hqdefault.jpg
சாவித்திரியின் குலம் கெடுக்க வந்த படம். குடிகார, வயதான, முகமெல்லாம் ஊதிப் போன, சாவித்திரி. படத்திலும். சாவித்திரி அதிக சம்பளம் வாங்கிய படமும் கூட. சாவித்திரியின் வறுமையை சாமர்த்தியமாக பயன்படுத்திக் கொண்டது மலையாள பட உலகம். ஜெமினியின் வேண்டுகோளையும், கட்டளையையும் நிராகரித்து சாவித்திரி நைட் கவுனில் விரகதாபம் பொங்க நடித்தார். 'சுழி' சும்மா இருந்தாதானே! நிஜமாகவே அதிர்ச்சி. ஆனால் சகிக்காது.
நீங்கள் விட்டுவிட்ட ஒரு ஆங்கிலம் சொல்கிறேன். மொழிமாற்றுதான்.
'It is hot in paradise'. (Orijinal டைட்டில் 'Spider Island') தமிழில் டைட்டில் என்ன தெரியுமா?
'சொர்க்கத்தில் சூடான சுந்தரிகள்'. ஞாபகம் வருதா?:)
http://s3.amazonaws.com/auteurs_prod...der-island.jpg
'சுந்தரிகள் எங்கே'? என்று சின்னா கேட்காமல் இருக்க மாட்டார். ஆனால் போட்டால் தாங்க மாட்டார்.:)
ராமண்ணா விற்கு ,வின்சென்டுக்கு ,டி.எம்.எஸ் ஓபன் வாய்ஸ் க்கு முத்துராமன் வாயசைத்து நடித்த விதம் பிடிக்கவில்லையாம். தங்க சுரங்கம் கட்டழகு பாப்பாவை காட்டி அவரை நடிக்க வைத்ததாய்,ராமண்ணா விடம் இந்த பாடலை சுட்டி நான் சொன்ன போது (சிரிப்போ) அவர் என்னிடம் சொன்னது. இது நடந்தது என்னை போல் ஒருவன் படத்தின் ஜெமினி லேப் பிரத்யேக காட்சியில்.
அறுபதுகளின் பிற்பகுதிகளில், மூவேந்தர்கள்,கலையுலக இளவரசன் தவிர்த்த படங்களில் எனக்கு நிறைய ஆச்சயம் தந்தவர் குமார். இவரின் வெகுளி பெண்ணில் டி.எம்.எஸ் இன் எங்கெல்லாம் வளையோசை, எனக்கு சிரிப்போ அளவிற்கு பிடித்தம்.
இதே வெகுளி பெண்ணில் ,மது அண்ணா ஒரு அற்புத ராட்ஷஷி பாடலை குறித்துள்ளார் .
எந்தத் திரியுமே நமக்கு எப்போது வேண்டுமோ அப்போது பதிவு செய்து கொள்ளலாம் என்கிற சௌகரியத்திற்காகத் தான். இதற்கு வரையறை ஏதுமில்லை. அதனால் தொங்கலில் விடவுமில்லை. அப்படியே தொங்கல் என்று வைத்தாலும் கூட எப்போது வேண்டுமானாலும் பிடித்துக் கொண்டு ஏறுவதற்கோ இறங்குவதற்கோ பயன்படுமல்லவா.Quote:
சொன்னால் நம்புவாயோ என்னவோ, ராகவேந்தர் டென்ட் கொட்டாய் என்று ஒன்று ஆரம்பித்ததாய் ஞாபகம்.(இவர் ஆரம்பித்து தபேலென்று விட்டு விட்ட திரிகளின் புள்ளி விவர கணக்கை வைக்க இனி ஒரு பிலிம் நியூஸ் ஆனந்தன் பிறந்து வந்தால் மட்டுமே சாத்தியம்)
இன்னும் சொல்லப்போனால் இந்தக் காலைக்காட்சி தொடர் கீற்றுக்கொட்டகைத் திரிக்காகவே வாசு எழுதியது போல் அமைந்துள்ளது. இதை அதிலும் பதிவிட அவரிடம் நான் வேண்டுகிறேன்.
எஸ்.வீ,
அந்த திரிக்கு மட்டுமே உரியதை அங்கு விட்டு விட்டு,எங்களுடன் பொது ஜோதியில் இணையுங்கள் ,ஜமாய்க்கலாம்.எங்களை துளி கூட கவராத மூன்றெழுத்தை திணிக்காமல், நண்பராக வந்தால் ,உங்கள் பங்கெடுப்பு மெருகேறும்.
மது அண்ணா!
'ஊமைப் பெண்ணை பேசச் சொன்னால் உறவோ' என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் அர்த்தம் ஒட்டவில்லை. சரியாக ஆதிராம் சார் 'ஊமைப் பெண்ணை பேசச் சொன்ன உறவோ' என்று தன்னுடைய பதில் பதிவில் அழகாக குறிப்பிட்டிருந்தார். அப்புறம் காதுகளை தீட்டி வைத்துக் கொண்டு 'சொன்ன' வார்த்தையை உணர்ந்தேன். சிலது மனதில் பதிந்தால் அவ்வளவு எளிதாக மாறுவேனா என்கிறது. நீங்களும் அதை அழகாக, அதுவும் முழுப் பாடல் வரிகளையும் அளித்து ஊர்ஜிதப்படுத்தி விட்டீர்கள். நன்றி அண்ணா!
ஆதிராம் சாருக்கும் மிக்க நன்றி!.
பதித்து விட்டேன் ராகவேந்திரன் சார்.
அத்தனை பேர் பங்களிப்பிலும் 'மதுர கானங்கள்' அற்புதமாய் பரிமளிக்கிறது. அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றி!