http://i66.tinypic.com/14lj51g.jpg
Printable View
இன்று (19/06/17) மாலை காட்சி துவங்கும் முன்பு , சென்னை அகஸ்தியா அரங்கில்
எடுக்கப்பட்ட புகைப்படங்கள் நண்பர்களின் பார்வைக்கு .
http://i63.tinypic.com/15xsahy.jpg
இன்று மேட்னி காட்சி முடிந்து , பக்தர்கள் /ரசிகர்கள் ,அரங்கை விட்டு வெளியேறும் காட்சி .
http://i68.tinypic.com/1494cv6.jpg
இரங்கல் செய்தி
--------------------------
சென்னை புறநகர் திருநின்றவூர் அருகில் உள்ள நத்தமேடு பகுதியில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். கோயில் நிர்வாகி திரு.கலைவாணன் அவர்களின் அன்பு மனைவி திருமதி சாந்தி கலைவாணன் அவர்கள் இன்று பிற்பகல் உடல்நல குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிர் நீத்தார் .
அன்னாரது பூத உடல் நாளை (21/06/17) காலை 11 மணியளவில் திருநின்றவூர்
மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது .
திருநின்றவூரில் உள்ள புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். ஆலயம் உருவாக்குவதில்
திருமதி சாந்தி , தனது கணவர் திரு. கலைவாணன் அவர்களுக்கு எல்லா வகையிலும் பேருதவி புரிந்தவர் என்பது நினைவு கொள்ள தக்கது .
அவரது ஆத்மா சாந்தி அடைய அவர் அன்றாடம் வழிபட்டு வந்த இறைவன் எம்.ஜி.ஆர். அருள் புரிவாராக
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு கோயில் உருவாக உறுதுணை புரிந்த
திருமதி சாந்தி அவர்களின் இறுதி ஊர்வலத்தில் அனைவரும் கலந்து கொண்டு
அஞ்சலி செலுத்துமாறு வேண்டுகோள் விடுக்கப்படுகிறது .
தனது மனைவியை இழந்து வாடும் திரு. கலைவாணன் மற்றும் அவரது உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு சார்பாகவும், மற்றும் அனைத்து எம்.ஜி.ஆர். மன்றங்களின் கூட்டமைப்பு சார்பாகவும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் .
ஆர். லோகநாதன் .
இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு .
சென்னை.
https://s29.postimg.org/geiy9x46v/IMG_4505.jpg
மக்கள் திலகம் எம்ஜிஆருக்கு
ஆலயம்
நிறுவிய
திரு.கலைவாணன்
அவர்களது
துணைவியார்
திருமதி சாந்திகலைவாணன்
அவர்கள்
இன்று காலை
இறைவ(எம்ஜிஆரின் திருவடி)னடி
சேர்ந்தார் என்பதை திரு கலைவாணன்
அலைபேசியில் எனக்கு தெரிவித்தார்.
அவரது ஆன்மா
சாந்தியடைய
எல்லாம் வல்ல
இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
நமது மக்கள் திலகம் திரியின்
சார்பாகவும் ஆழ்ந்த இரங்கலைத்
தெரிவித்துக்கொள்கிறேன்.
அன்புடன்
எஸ் ரவிச்சந்திரன்
சங்கரய்யா பெரியாரின் குடியரசு பத்திரிகையில் பணியாற்றிய மூத்த பத்திரிகையாளர். 74 வயதில் இருபதாண்டுகளுக்கும் மேலாக முரசொலி பத்திரிகையில் சீனியர் கட்டுரையாளராக வெறும் 300 ரூபாய் சம்பளத்துக்கு பணியாற்றி வந்தார்.
எம்ஜிஆர் முதல்வரான புதிது. ஒருநாள் மதியம் சங்கரய்யாவின் மனைவி ரத்தவாந்தி எடுத்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். உடனடியாக 10,000 தேவை. தன் தலைமையை தேடி ஓடுகிறார். சந்திக்கவே விடவில்லை. பணம் கட்டவில்லையென்றால், ஆபரேசன் செய்ய இயலாமல் மனைவி உயிர் போய்விடும். அழுது புலம்பும் சங்கரய்யாவை நண்பர்கள் அடுத்தநாள் காலை8மணிக்கு ராமாவரம் தோட்டத்தில் பொது மக்களிடம் மனுக்கள் பெறும் முதல்வரை சந்திக்க சொல்கிறார்கள். சங்கரய்யாவிற்கு உயிர் போகும் தேவையிருப்பினும், தன்மானமும், யாரை கடந்த ஆறு ஆண்டுகளாக கடுமையாக தாக்கி எழுதுகிறோமே அவரை சந்தித்து உதவி கேட்பதா எண்ணும் வெட்கமும் தடுக்கிறது.
அப்படியே சந்தித்தாலும், உறுதியாக எதிரிக்கு உதவ மாட்டார் என்று நண்பர்களிடம் சொல்கிறார். ஆபத்துக்கு பாவமில்லை என்று நண்பர்கள் அடுத்த நாள் காலை 7 மணிக்கே தோட்டத்திற்கு அழைத்துப்போகிறார்கள்.
காலை 8.30மணி. தோட்டம் பரபரப்பாகிறது. வெளி வந்த சொக்கத்தங்கம் மனுக்கள் வாங்குகிறது.(இந்த மனுக்கள் மீது 48 மணிநேரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது முதல்வர் உத்தரவு) கூனிக்குறுகி சங்கரய்யா வரிசையை விட்டு தள்ளி பார்வையாளர்களோடு நின்று கொள்கிறார்.
மனுக்கள் பெற்று முடித்த முதல்வரின் கண்கள் பார்வையாளர்கள் பகுதிக்கு செல்கிறது. அழுக்கு ஜிப்பா அணிந்து, நான்கடி உயரமே இருந்த சங்கரய்யாவின் நல்லநேரம் தலைவர் கண்களில் பட்டு விடுகிறார்.
தலைவருக்கு ஆச்சரியம்...!
இவர் முரசாெலியில் வேலை செய்பவராயிற்றே, இங்கே எதற்கு வந்திருக்கிறார்? வினாவாவோடு"சங்கரய்யா, என்ன இங்கே?" அசந்து போகிறார் சங்கரய்யா. எத்தனை ஆண்டுகள் ஆகிறது? பெயர் ஞாபகம் வைத்து அழைக்கிறாரே! அதிர்ச்சியில் வார்த்தை வரவில்லை. நண்பர்கள்தான் தலைவரிடம் சங்கரய்யா நிலையை சொல்கிறார்கள்.
உடனே உதவியாளரை அழைத்த எம்ஜிஆர் ரூ50,000 யை சங்கரய்யாவிடம் தருகிறார், ஆஸ்பத்திரி செலவு போக மீதியை வங்கியில் டெபாசிட் செய்ய சொல்கிறார்.
மனைவி உயிர் பிழைத்து வந்ததும் சங்கரய்யா செய்த முதல் வேலை முரசொலியை விட்டு நின்றது, இரண்டாவது எம்ஜிஆரின் சிபாரிசால், கட்சி அலுவலகத்தில் தொலைபேசி பொறுப்பாளரானது.
300ரூபாய் சம்பளத்துக்கு முக்கிக்கொண்டிருந்த சங்கரய்யாவிற்கு தலைவர் தந்த மாதசம்பளம் எவ்வளவு தெரியுமா? ரூபாய்15,000.
நன்றி - திரு பாலசுப்பிரமணியம் - சென்னை
சென்னை புறநகர் திருநின்றவூர் அருகில் உள்ள நத்தமேடு கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு எம்.ஜி.ஆர். ஆலய நிர்வாகி திரு. கலைவாணன்
அவர்களின் அன்பு மனைவி திருமதி சாந்தி அவர்களின் பூத உடல் , கோயிலுக்கு
பின்புறம் உள்ள மயானத்தில் இன்று காலை 11.30 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது
நேற்று மாலையில் இருந்து ஏராளமான எம்.ஜி.ஆர். பக்தர்கள் ,அ.தி.மு.க தொண்டர்கள் தங்களுடைய இறுதி அஞ்சலியை செலுத்திய வண்ணம் இருந்தனர் .
இன்று காலையில் சென்னையில் இருந்து அனைத்து எம்.ஜி.ஆர் மன்ற . பக்தர்கள் தங்களது இறுதி மரியாதையை செலுத்தினர் . பத்திரிகை ஆசிரியர் திரு.சிரஞ்சீவி அனீஸ், பெங்களூரு திரு. கா .நா. பழனி , திருவண்ணாமலை திரு.கலீல் பாட்சா , கோவை திருமதி பெரிய நாயகி , திருவனந்தபுரம் திரு.வாமதேவன் மற்றும் சிலர்
இறுதி வரை இருந்து தங்களது இறுதி அஞ்சலியை செலுத்தினார்கள்
அனைத்து எம்.ஜி.ஆர். மன்ற பக்தர்களின் சார்பாக பேனரும் சுவரொட்டியும்
திருநின்றவூர் மற்றும் நத்தமேடு பகுதியில் ஒட்டப்பட்டிருந்தது .
http://i65.tinypic.com/29n8qjr.jpg
திரு. எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு இறுதியாக அனைத்து தினசரிகளிலும் , மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா
தமிழகம் முழுவதும் , அனைத்து முக்கிய நகரங்களில் கொண்டாடுவது குறித்து
வெளியிட்ட அரசு விளம்பரம் நண்பர்களின் பார்வைக்கு .
அ.இ .அ. தி.மு.க. நிறுவனர் எம்.ஜி.ஆர். உருவத்தை முதன் முதலாக சற்று பெரியதாக தினசரிகளில் பிரசுரம் செய்து அரசு விளம்பரமாக வெளியிட்ட தமிழக
முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களுக்கு நன்றி . இது தொடருமா ?
http://i66.tinypic.com/2ujr2wx.jpg
தமிழ் இந்து -22/06/17
http://i1077.photobucket.com/albums/...ps4dz3fg0q.jpg
மதுரை நகருக்கு மேலும் ஒரு சிறப்பினை மக்கள் திலகம் எம்ஜிஆர் தருகிறார் .
மதுரை வீரன் - 1956
மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் - 1978
மதுரை மாநகராட்சி - 1978
மதுரை மேற்கு - 1980
மதுரை 5வது உலகத்தமிழ் மாநாடு - 1981
மதுரை மாவட்டம் திண்டுக்கல் இடைத்தேர்தல் - 1973
மதுரை - மீனாக்ஷி - உலகம் சுற்றும் வாலிபன் - 1973
மதுரை - சினிப்ரியா - உரிமைக்குரல் - 1974
மதுரை மாவட்டம் - ஆண்டிப்பட்டி - 1984
இன்னும் பல சாதனைகளை நிகழ்த்திய மக்கள் திலகத்தின் நூற்றாண்டு விழா
30.6.2017 அன்று மதுரை மண்னில் நடப்பது அறிந்து அவருடைய கோடிக்கணக்கான உலகமெங்கும் வாழ்ந்து கொண்டிருக்கும் எம்ஜிஆர் ரசிகர்களுக்கு பெருமைக்கு பெருமை என்பது நிதர்சனமான உண்மை .
40 ஆண்டுகளுக்கு முன்பு 30.6.1977 அன்று புரட்சித்தலைவர் எம்ஜிஆர் முதல் முறையாக தமிழக முதல்வராக பதவி ஏற்ற அந்த தினத்திலே எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடப்பது மேலும் ஒரு சிறப்பு .
மக்கள் திலகத்தின் நூற்றாண்டு விழா நேரத்தில் நாம் நினைவு கூற விரும்பும் மக்கள் திலகத்தின் மனித நேயம் அரசியல் , திரை உலகம் மூன்று துறையிலும் வெற்றி பெற உறுதுணையாக இருந்தவர்கள்
கந்தசாமி முதலியார்
எம்.கே ராதா
பேரறிஞர் அண்ணா
கலைவாணர்
டி .வி .நாராயணசாமி
நாவலர்
கலைஞர்
திருமதி வி .என் ஜானகி எம்ஜிஆர்
சின்னப்பா தேவர்
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
கண்ணதாசன்
வாலி
புலமைப்பித்தன்
இராம வீரப்பன்
வித்துவான் லக்ஷ்மணன்
மணியன்
கே.ஏ. கிருஷ்ணா சாமி
காளிமுத்து
வலம்புரி ஜான்
ஜெயலலிதா
முசிறி புத்தன்
ஆர். கே . சண்முகம்
சொர்ணம்
நீலகண்டன்
டி .எம். சவுந்தரராஜன்
மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி
கே.வி .மஹாதேவன்
சுப்பையா நாயுடு
தஞ்சை ராமதாஸ்
மோகனரங்கம்
பட்டியல் தொடரும் .......................
வெள்ளி முதல் (23/06/2017) சென்னை பாலாஜியில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த
"வேட்டைக்காரன் " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i65.tinypic.com/qnrygl.jpg
http://i67.tinypic.com/e862kk.jpg
தற்போது ராஜ் டிவியில் புரட்சி தலைவர் / மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். இருவேடங்களில் கலக்கிய "நாடோடி மன்னன் " திரைப்படம் இரவு 10 மணி முதல்
ஒளிபரப்பாகி வருகிறது .
புதிய தலைமுறை வார இதழ் -29/06/17
http://i64.tinypic.com/fwkfts.jpg
http://i63.tinypic.com/2z3nss5.jpg
http://i68.tinypic.com/1zxac8g.jpg
http://i64.tinypic.com/14lu9w0.jpg
தின இதழ் -24/06/17
http://i68.tinypic.com/e84un7.jpg
இன்று இரவு 8 மணிக்கு ராஜ் டிஜிட்டல் பிளஸ்சில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த
"புதுமை பித்தன் " திரைப்படம் ஒளிபரப்பாகிறது .
http://i63.tinypic.com/dqn8jp.jpg
https://s17.postimg.org/3mmekgvnj/IMG_4525.jpg
டிலைட் திரையரங்கில் மக்கள் திலகத்தின் பக்தர் வி கே எம்
இன்று முதல்
கோவை
டிலைட்
திரையரங்கில்
மக்கள் திலகத்தின்
இதய வீணை
நண்பர்களே, இது முத்து செல்வரத்தினம் அவர்கள் முகநூல் பதிவு. இந்த பதிவை பிரச்சினை என்று நீக்காதீர்கள் ரவிச்சந்திரன். மாற்றுத்திரியை பாருங்கள். அவர்கள் இதுமாதிரி போடும்போது நாமும் இந்த மாதிரி பதிவை போடுவதில் தப்பு இல்லை.
-----------------------------------------------
http://i67.tinypic.com/2lsvgur.jpg
நன்றி . முத்து செல்வரத்தினம் முகநூல் பக்கம்
புரட்சித் தலைவர் காமராஜர் மீது மரியாதை வைத்திருந்தார். திமுகவில் புரட்சித் தலைவர் இருந்தபோதே காமராஜர் என் தலைவர் அண்ணா என் வழிகாட்டி என்று காமராஜர் பிறந்த நாள் விழாவிலே பேசினார். இதற்கு அப்போது திமுகவிலேயே எதிர்ப்பு வந்தது. அதனால் எம்.எல்.சி. பதவியை புரட்சித் தலைவர் ராஜினாமா செய்தார். என் கடமை என்ற படம் அப்போது சரியாக போகவில்லை. திமுக தொண்டர்கள் புரட்சித் தலைவரை புறக்கணித்து விட்டார்கள் அதுதான் படம் சரியாக ஓடவில்லை என்றார்கள்.
ஆனால், தான் சொன்னதை புரட்சித் தலைவர் வாபஸ் வாங்கவில்லை. தான் சொன்னதில் உறுதியாக இருந்தார். இதற்காக அண்ணாவும் புரட்சித் தலைவர் மீது வருத்தம் கொள்ளவில்லை. அதற்கு அப்புறம் 1967 தேர்தலின்போதுதான் அண்ணாவே புரட்சித் தலைவரை பார்த்து முகத்தை காட்டினாலே 3 லட்சம் வாக்குகள் கிடைக்கும் எ்ன்றார். திமுக தொண்டர்களும் புரட்சித் தலைவர் பக்கம்தான் இருந்தார்கள்.
1967 தேர்தலில் எம்.ஆர்.ராதாவால் துப்பாக்கியால் சுடப்படுவதற்கு முன்பு தென்மாவட்டங்களில் புரட்சித் தலைவர் பிரசாரம் செய்தார். ஆனால், தான் மதித்த காமராஜர் போட்டியிட்ட விருதுநகரில் அவர் பிரசாரம் செய்யவில்லை. அந்த தேர்தலில் விருதுநகரில் சிவாஜி கணேசன் காமராஜருக்காக தீவிரமாக பிரசாரம் செய்தார். ஆனாலும் புரட்சித் தலைவர் துப்பாக்கியால் சுடப்பட்டதால் திமுகவுக்கு ஆதரவாக எழுந்த அலையில் காமராஜரும் தோற்றுப்போனார்.
அதற்குப் பின்னர், நாகர் கோயில் பார்லிமென்ட் தேர்தலில் காமராஜர் போட்டிபோட்டார். அப்போதும் புரட்சித் தலைவர் அங்கே பிரசாரம் செய்யவில்லை. காங்கிரசில் பெரும் பணக்காரர்கள், மிட்டா மிராஸ்தார்கள் கருப்பு பணக்கார முதலைகள் இருந்தாலும் காமராஜர் மீது எம்.ஜி.ஆர். மரியாதை வைத்திருந்தார்.
சில பின்னூட்டங்கள்
Raja gopal திண்டுக்கல் இடைத் தேர்தலில் காமராஜர் எம்.ஜி.ஆரை கடுமையாக பேசினாலும் எம்ஜிஆர் அவரை தவறாக பேசியது கிடையாது.
Mari Muthu காமராஜர் நல்லவர்தான். ஆனால் காங்கிரஸ்காரர்கள் ஊழல்வாதிகள்.
Ramasamy Devar காமராஜர் தனது ஜாதியை சேர்ந்தவர்களை முன்னேற்றிவிட்டார். நாகர்கோயில் நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பு மனுவில் காமராஜ் நாடார் என்று கையெழுத்து போட்டு குறுகிப்போய்விட்டார். அரசியல் போட்டியால் பசும்பொன் தேவர் அய்யா மீது கொலைகுற்றம் சாட்டி ஜெயிலில் போட்டார். பின்னர் தேவர் அய்யா நிரபராதி என்று விடுதலை ஆனார். தனக்கு கீழே உள்ள மூப்பானார், வாண்டையார் பணக்காரர்கள் காங்கிரஸ்காரர்கள் கருப்பு பணம் வைத்திருந்தால் கண்டு கொள்ள மாட்டார். ஊழல் இந்திராவோடு காமராஜரும் சிவாஜிகணேசனும் சமரசம் செய்து கொண்டார்கள்.
Bala Subramaniyan புரட்சித் தலைவர் எல்லா தலைவர்களையும் போற்றிய உயர்ந்த தலைவராக விளங்கினார்.
தன்னை எதிர்ப்பவர்களுக்கும் புரட்சித் தலைவர் நன்மையே செய்வார். 1967 தேர்தல் பிரசாரத்தில் தனது தொகுதியில் தனக்கு எதிராக பிரசாரம் செய்த பத்மினி பற்றி புரட்சித் தலைவர் கேள்வி – பதிலில் சொல்கிறார்.
http://i67.tinypic.com/rco5fc.jpg
தன்னை எதிர்த்து பிரசாரம் செய்து எம்ஜிஆருக்கு ஓட்டு போடக் கூடாது என்று பத்மினி கூறினாலும் பிறகு ரிக்க்ஷாக்காரன் படத்தில் பத்மினிக்கு முக்கிய பாத்திரம் கொடுத்தார். படத்தில் நடித்து முடித்து பத்மினி சீக்கிரம் அமெரிக்கா செல்ல வேண்டும். அதனால், அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை விரைவாக முடிக்கச் சொல்லி பத்மினிக்கு உதவினார். பத்மினி காங்கிரசில் சேர்ந்ததற்கு அப்போது சில காரணங்கள் சொல்லப்பட்டது. ஆனாலும் அவரால் காங்கிரசில் தாக்குபிடிக்க முடியவில்லை.
புரட்சித் தலைவரை மோசமாக தரக்குறைவாக ஒருமையில் பேசிய கண்ணதாசன், மதுரை முத்து போன்றவர்களைக் கூட புரட்சித் தலைவர் மன்னித்து அவர்களுக்கு பதவியும் கொடுத்தார். புரட்சித் தலைவர் வெளிநாடுகளுக்கு சென்றதை கண்ணதாசன் விமர்சித்தார். ஆனால், கண்ணதாசனுக்கு பதவியும் கொடுத்து கண்ணதாசன் அமெரிக்காவில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தபோது அவருக்கு மருத்துவம் செய்ய தமிழக அரசு சார்பில் மருத்துவ சிறப்பு நிபுணரை புரட்சித் தலைவர் அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தார்.
நன்றி ரெ.ஜெயராமன் முகநூல்
http://i64.tinypic.com/1218wmx.jpg
தன்னை தூற்றியவர்களுக்கும் நன்மை செய்த புரட்சித் தலைவர் ஒரு மனித வடிவில் வந்த தெய்வம்.
http://i66.tinypic.com/34fn11z.jpg