இன்று திருப்பூர்
மணீஸ் திரையரங்கிற்கு
(மாலைக்காட்சிக்கு)
சென்றிருந்தேன்.
புதிய தொழில் நுட்பத்தில்
நினைத்ததை முடிப்பவன்
கண்டுகளித்தேன்.
மக்கள் திலகமும்
கலையரசியும்
மிகவும் சுறுசுறுப்பாக
நடித்த படம். இனிமையான
பாடல்கள்.
Printable View
இன்று திருப்பூர்
மணீஸ் திரையரங்கிற்கு
(மாலைக்காட்சிக்கு)
சென்றிருந்தேன்.
புதிய தொழில் நுட்பத்தில்
நினைத்ததை முடிப்பவன்
கண்டுகளித்தேன்.
மக்கள் திலகமும்
கலையரசியும்
மிகவும் சுறுசுறுப்பாக
நடித்த படம். இனிமையான
பாடல்கள்.
கோவையில் 2019 ம் ஆண்டிலும் சாதனை படைத்த ஒரே தலைவர் 1.ஜனவரி 17-2019 நினைத்ததை முடிப்பவன்( நாஸ் 4 நாள்) 2.ஜனவரி 20- குடியிருந்த கோயில்( ராயல் 7 நாள்) 3. பிப்ரவரி 22- முகராசி( ராயல் 7 நாள்) 4. மார்ச் 8- பறக்கும் பாவை( ராயல் 7 நாள்) 5. மார்ச் 20- பெரிய இடத்துப் பெண்( ராயல் 7 நாள்) 6.மே 31- உழைக்கும் கரங்கள்( சண்முகா 4 நாள்) 7. ஜூன் 7- ரிக்சாக்காரன்( சண்முகா 4 நாள்) 8. ஜூன் 14- பணக்கார குடும்பம்( சண்முகா 3 நாள்) 9. ஜூன் 30- இதயவீணை( சண்முகா 4 நாள்) 10. ஜூலை 12- அடிமைப்பெண்( சண்முகா 7 நாள்) 11. ஜூலை 19- நேற்று இன்று நாளை( சண்முகால4 நாள்) 12. ஜூலை 25- தாய்க்கு தலைமகன்( சண்முகா 4 நாள்) 13. ஆகஸ்ட் 2- நினைத்ததை முடிப்பவன்( டிலைட் 7 நாள்) 14. ஆகஸ்ட் 9- குடியிருந்த கோயில்( சண்முகா 4 நாள்) 15. ஆகஸ்ட் 17- குடும்பத்தலைவன்( சண்முகா 4 நாள்) 16. ஆகஸ்ட் 23- நீதிக்கு தலைவணங்கு( சண்முகா 4 நாள்) 17. ஆகஸ்ட் 30- ஊருக்கு உழைப்பவன்( டிலைட் 4 நாள்) 18. செப்டம்பர் 6- எங்க வீட்டுப் பிள்ளை( நாஸ் 7 நாட்கள்) 19. செப்டம்பர் 20- சிரித்து வாழ வேண்டும்( டிலைட் 7 நாள்) 20. செப்டம்பர் 27- குமரிக்கோட்டம்( டிலைட் 5 நாள்) 21. செப்டம்பர் 27- நவரத்தினம்( சண்முகா 5 நாள்) 22. அக்டோபர் 4- ஒருதாய் மக்கள்( சண்முகா 5 நாள்) 23. அக்டோபர் 12- பட்டிக்காட்டு பொன்னையா( டிலைட் 5 நாள்) 24. அக்டோபர் 25- ரிக்சாக்காரன்( டிலைட் 7 நாள்) 25. அக்டோபர் 25- ஆயிரத்தில் ஒருவன்( சண்முகா 11 நாள்) 26. நவம்பர் 8- நீதிக்குப் பின் பாசம்( டிலைட் 4 நாள்) 27. நவம்பர் 15- தொழிலாளி( சண்முகா 4 நாள்) 28. நவம்பர் 22- உழைக்கும் கரங்கள்( டிலைட் 4 நாள்) 29. நவம்பர் 29- பாக்தாத் திருடன்( சண்முகா 4 நாள்) 30. டிசம்பர் 8- முகராசி( சண்முகா 4 நாள்) 31. டிசம்பர் 13- விவசாயி( டிலைட்ல5 நாள்) 32. டிசம்பர் 20- பறக்கும் பாவை( சண்முகா 7 நாள்) 33. டிசம்பர் 27- தாய் சொல்லைத் தட்டாதே( சண்முகா 7 நாள்) 34. டிசம்பர் 27- பணக்கார குடும்பம்( டிலைட் 5 நாள்).... தகவல் V.P.ஹரிதாஸ், மக்கள் திலகம் MGR மனித நேயம் மாமன்றம், கவுண்டம்பாளையம், கோவை......... Thanks.........
https://youtu.be/xFEZeBDZ9wE.......... Thanks.........
https://i.postimg.cc/MKTmkQCg/IMG-4734.jpg
நம்நாடு திரைப்படம் நவீன தொழிற்நுட்பத்தில்
மெருகேற்றப்பட்டு கோவை செந்தில் திரையரங்கில்
திரையிடப்பட்டது. ஏராளமான ரசிகர்கள் வந்திருந்து
படத்தை ரசித்து மகிழ்ந்தனர்.
எம்.ஜி.ஆர். எனும் மூன்றெழுத்து
எம்.ஜி.ஆர். எனும் மூன்றெழுத்து…
தமிழ் என்பது மூன்றெழுத்து.. சினிமா என்பது மூன்றெழுத்து.. அந்த தமிழ் சினிமா உலகில் தனக்கென தனி இடம் பிடித்த மூன்றெழுத்து..எம்.ஜி.ஆர். என்னும் சிகரம். அந்தச் சிகரத்திற்கு அறிமுகம் தேவையில்லை.
இளம் சூரியன் உந்தன் வடிவானதோ..
செவ்வானமே உந்தன் நிறமானதோ ..
பொன் மாளிகை உந்தன் மனமானதோ ..
என்ற பாடலுக்கேற்ப மாளிகை போன்ற மனதை உடையவர் எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆர். என்ற பெருமழை தந்த ஈரத்தால் இன்னும் வாடாமல் தழைத்தோங்கும் பயிர்கள் (உயிர்கள்) ஏராளம்.
அவர் பிறந்தது இலங்கையாக இருந்தாலும் .. தஞ்சம் புகுந்தது தமிழ்நாட்டில். அதனால்தானோ என்னவோ “வந்தாரை வாழவைக்கும் தமிழகத்தின் பண்பு – அவரைத் தேடி வந்தவரை எல்லாம் வாழவைத்துக் கொண்டிருந்தார்.
நடிகரில் மனிதர்: மனிதர்கள் நடிகராக வருவது இயல்பு. ஆனால், “நடிகருள் மனிதராக மக்கள் திலகம் வாழ்ந்தவர்”. இன்னும் சொல்லப் போனால் மனிதருள் கடவுளாகவே பலருக்குத் தென்பட்டவர்.
அவரது தோற்றம் போலவே எண்ணமும் அழகு..அதனால்தான் புகழின் உச்சத்தையே அவர் அடைந்தார். திரை உலகில் அவர் தான் ஏந்தி வரும் ஒவ்வொரு வேடத்தையும் அதற்கான முயற்சிகளையும் தானே மேற்பார்வை காட்டினார்; உதாரணம் – அவர் எங்க வீட்டு பிள்ளையில் பாடி நடித்ததை பார்த்து மக்கள் அவரை தங்கள் வீட்டுப் பிள்ளையாகவே பார்த்தனர். எல்லா படங்களிலும் சண்டைக் காட்சிகள் அமைப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டினார். ஏன்? தன்னை ஒரு பயில்வானாக காட்டிக்கொள்ளவா? இல்லை. ஸ்டன்ட் நடிகரின் பிழைப்பிற்காகவே தனது எல்லா படங்களிலும் சண்டைக் காட்சி வைத்த ஒரே நடிகர் நம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தான். மனிதாபிமானத்தின் காவலராக இறுதி வரை இருந்தார்.
திரையில் அவர் நடித்த படங்களில் இடம்பெற்ற பாடல்களில் கருத்தாழம் நிறைந்தது. ஏதாவது ஒரு நல்ல விஷயத்தை மக்களுக்கு பாடல் மூலம் பறை சாற்றிக் கொண்டிருந்தார். அது 2 வயது குழந்தை முதல் 100 வயது வரையிலான வயோதிகர் வரை சென்று சேர்ந்தது.
விழி போல எண்ணி நம் மொழி காக்க வேண்டும்..
தவறான பேர்க்கு நேர் வழி காட்ட வேண்டும்..
என்ற வரிகளுக்கேற்ப தமிழினத்திற்காக பாடுபட்ட ‘மன்னாதி மன்னன்’ .. அவர்.
அவரது பாடல்களைக் கேட்டாலே புத்துணர்வு பிறக்கும். அது காதல் பாடல்களாக இருந்தாலும் சரி.. நல் அறிவுரை கூறும் பாடல்களாக இருந்தாலும் சரி.. எதிர்மறை எண்ணங்களே இல்லாது பார்த்துக் கொண்டிருந்தார். பாடல்கள் மட்டுமல்லாமல் அவருடைய படத்தின் பெயரும் எதிர்மறை எண்ணத்தைத் தவிர்த்து .. உதாரணம் – தாய் சொல்லை தட்டாதே.. மன்னாதி மன்னன், நல்லவன் வாழ்வான், தர்மம் தலைகாக்கும், காவல்காரன், ஒளி விளக்கு, இன்னும் பல..
இந்தப் பெயர்களால் ஒரு விதமான நம்பிக்கை மனதில் தோன்றுகிறதல்லவா.. தானும் உயர்ந்து தன்னை சார்ந்தவரையும் உயர்த்துபவன் தான் தலைவன். அந்த வகையில் எம்.ஜி.ஆர். ஒரு உண்மையான தலைவன்.
எதோ நடித்தோம், பணம் சம்பாதித்தோம், மறைந்தோம் என வாழும் நடிகர்களுக்கு மத்தியில் அவரின் சிந்தனையே சொல்லானது.. சொல்லே செயலானது.. அந்த செயலும் புனிதமானது. அந்த வகையில் அவர் புத்தனாகவும் யேசுவாகவும் கண்ணில் தென்பட்டார்.
அவர் பற்றி எழுதும் இந்தக் கட்டுரையில் எனக்கு தெரிந்த இருவரின் அனுபவங்களை இங்கே குறிப்பிடுகிறேன்.
1. பட்டப்படிப்பு வரை படித்த இளைஞன் ஒருவர் – அரசாங்க உத்தியோகத்திற்கு முயற்சி செய்த காலத்தில், பல முறை தேர்வு எழுதியும் பலனில்லை. தேர்ச்சி பெறவில்லை. குடும்ப சூழலின் காரணமாக வேலைக்காக மிகவும் பாடுபட்ட காலமது. மனம் வெறுத்து இதுதான் கடைசிமுறை என நினைந்து தேர்வு எழுத சென்றார். அதில் ” உனக்குப் பிடித்த தலைவர் பற்றி” ஒரு கட்டுரை வரையும்படி கேள்வி இருந்தது. அவர் உடனே.. எம்.ஜி.ஆர். எனும் தலைவர் என்னும் தலைப்பில் எழுதினார். தன் மனதில் ஆழப் பதிந்திருந்த .. எண்ணி நெகிழ்ந்திருந்த விஷயங்களை எழுதினார். அந்த முறை தேர்ச்சி பெற்றார். அவரைப் பொறுத்தவரை எம்.ஜி.ஆர்.தான் தன்னை இன்னும் வாழ வைத்துக் கொண்டிருக்கிறார்.
2. ஒரு முதியவர் .. ஒரு நாள் .. எம்.ஜி.ஆர் அவர்களிடம் வந்து உன்னை நம்பி என் பையனை படிக்க வைத்தேன். நீதான் வாழ வழி காட்ட வேண்டும் என்றார். உடனே எம்.ஜி.ஆர். முதலில் நீங்கள் சாப்பிடுங்கள்.. பின்னர் பேசுவோம் என்றார். அனால் முதியவர் விடவில்லை. தன் குறையை அழுது புலம்பிக் கொண்டிருந்தார். எம்.ஜி.ஆர். நீங்கள் சாப்பிடுங்கள்.. உங்கள் மகன் அடுத்த மாதம் அரசாங்க சம்பளம் உங்களுக்கு கொண்டு வருவான் என்றார். அதுபோலவே, அடுத்த மாதம் அந்தப் பெரியவர் தன் மகனின் சம்பளக் கவரோடு முதல்வரை (மக்கள் திலகத்தை) காண வந்தார்.
எந்த முதல்வரையாவது இப்படி எளிதில் எளிய மக்கள் காண முடியுமா? ஆனால் மக்கள் திலகம் அவர்களை காண முடிந்தது. கர்ணன் மறுபிறப்பு எடுத்து இவராக இம் மண்ணில் தோன்றினாரோ என்று தோன்றுகிறது.
இன்று பலர் அவரைப்போலவே நடித்து, ஆடிப்பாடிப் பிழைக்கிறார்கள். ஒரு சிலருக்கு அவருடைய வேடம் ஒத்துப்போகுமாயின், அதைக் காணும் பொது மக்களும், தாய் மார்களும், “வாங்கையா வாத்தியாரைய்யா’ என பெருமை கொள்வது அவரின் மீது உள்ள பற்றும் ஈடுபாடும் தான் காரணம். அவரை ஓர் அவதார புருஷனாகவே எண்ணியிருக்கிறார்கள்.
தமிழ் நாட்டையும் தாண்டி மேல் நாடுகளில் அவரைப் பற்றித் தெரியும். இது ஒரு நடிகனாக இருந்ததால் மட்டுமலா.. அவர் செய்த ஒவ்வொரு நல்ல செயலும் அங்கும் எதிரொலித்தது. நடிப்பதைத் தொழிலாகவும், கொடுப்பதைக் கொள்கையாகவும் கொண்டவர் எம்.ஜி.ஆர். எல்லோருக்கும் எலும்பிலும் தசையிலும் உடல் இருக்கும். ஆனால். இவருக்கோ தங்கத்தால் வார்த்த உடம்பு….அதனால்தான் எமனையும் ஒரு முறை வென்றார்.
புரட்சித் தலைவர் பள்ளியில் படிக்காவிட்டாலும் பல்கலைக் கழகமாக தன்னை மாற்றிக் கொண்டவர். அதனால்தான் அவர் தியாகரஜ சட்டக் கல்லூரியில் சேர்மேனாக அமர முடிந்தது.
மனிதன் உயிர் வாழத் தேவையானது உணவு. மனிதனாக வாழ வைப்பது கல்வி. இந்த இரண்டையும் தான் பிறருக்காக அள்ளி வழங்கிய வள்ளல். அவரது சத்துணவு திட்டம், அவர் காலத்தில் திறக்கப்பட்ட அரசு பள்ளிகளும் சாட்சி.
முடியாது.. இல்லை.. என்ற இரண்டு வார்த்தைகளையும் தமிழில் உள்ள அனாவசிய வார்த்தைகள் என அப்புறப்படுத்தியவர் பொன் மனச் செம்மல்.
எம்.ஜி.ஆர்.
அரிதாரம் இட்டு அடையாளமாகி ..
அகம் நுழைந்து ஜகம் ஆண்டவன்..
மக்கள் மனதில் குடியிருந்த கோவில்
என்றென்றும் ஊருக்கு உழைப்பவன்
அள்ளிக் கொடுப்பதில் அவர் மன்னாதி மன்னன்
மொத்தத்தில் என்றென்றும் அவர் எங்க வீட்டுப் பிள்ளை..
காலத்தை வென்றவர் அவர்..
காவியமானவர் அவர்..
— புவனா, மும்பை............ Thanks..........
நேற்று முன் தினம் (5-01-2020) கோவை- செந்தில் A/C DTS., திரையரங்கில் புரட்சித்தலைவரின் "நம்நாடு" திரை காவியம் காண வந்த பக்தர்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் ,திருவிழா போல் காட்சியளித்தது,பக்தர்கள் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கியும் மகிழ்ந்தனர் ,தலைவர்க்கு புரட்சிமலர் சிவா ஜெயக்குமார் அவர்கள் மாலை அணிவித்து திரையில் மலர்தூவி சிறப்பு சேர்த்தனர்............மகிழ்ந்தனர்... Thanks.........
"உலகம் சுற்றும் வாலிபன்" காவியத்தின் Trailor க்கு சென்சார் போர்டு சான்றிதழ் மக்கள் திலகம் நல்லாசியோடு கடந்த மாதம் அன்னாரின் நினைவு நாள் 24-12-2019 அன்று கிடைக்க பெற்றது ஒரு ஆச்சரியம் கலந்த நிகழ்வு... வருகின்ற தை பொங்கல் திருநாள் 15-01-2020 அன்று ட்ரைலர் வெளியிட படுகிறது... மற்றும் நாளிதழ் விளம்பரம் வருவதாக மகிழ்ச்சி தகவல்கள்...
https://i.postimg.cc/hvK3mHsR/IMG-4770.jpg
Thanks to Mr Ranjith
https://i.postimg.cc/CxpRH0X6/IMG-4778.jpg
அபிநயசரஸ்வதி சரோஜாதேவி அவர்களின் பிறந்த தினம் இன்று.
நமது திரியின் சார்பாக அவர்களுக்கு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
எஸ் ரவிச்சந்திரன்
M.G.R. எல்லாருக்கும் உதவும் நல்ல உள்ளம் கொண்டவர். என்றாலும், சில நேரங்களில் சிலரால் அவர் தவறாக புரிந்து கொள்ளப்பட்டார். தன்னைப் பற்றி வரும் தவறான செய்திகளுக்கும் வதந்திகளுக்கும் அவர் விளக்கம் அளிக்க மாட்டார். மக்கள் தன்னை தவறாக நினைக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை மட்டுமல்ல; விளக்கம் அளிப்பதன் மூலம் யாருடைய பெயரும் கெடக் கூடாது என்ற எண்ணம் எம்.ஜி.ஆருக்கு.
நடிகர் சந்திரபாபு பன்முகத் திறமை வாய்ந்த கலைஞர். நடிப்பு, நடனம், இசை என்று பல துறைகளிலும் முத்திரை பதித்தவர். எப்போதும் வெளிநாட்டவர்போல கோட்டும் சூட்டும் அணிந்து மிடுக்காகக் காட்சி தருவார். ‘குலேபகாவலி’ படப்பிடிப்பின்போது எம்.ஜி.ஆருக்கும் அவருக்கும் நட்பு மலர்ந்தது. படப்பிடிப்பில் ஒருநாள் சந்திரபாபுவின் கைகளைப் பற்றிக் கொண்டு ‘‘இனி நீங்கள் எங்கள் குடும்பத்தில் ஒருவர்’’ என்று நெகிழ்ந்துபோய் எம்.ஜி.ஆர். கூறினார்.
அப்போதைய எம்.ஜி.ஆரின் படங்களில் சந்திரபாபுவும் கட்டாயம் இடம் பெறுவார். தனது சொந்த தயாரிப்பான ‘நாடோடி மன்னன்’ படத்திலும் அவருக்கு எம்.ஜி.ஆர். வாய்ப்பளித்தார். அப்படத்தில் முட்டைகளை குடித்து விட்டு, பிறகு வாயிலிருந்து கோழிக் குஞ்சை அவர் வெளியே எடுக்கும் காட்சியில் சிரிக்காதவர் இருக்க முடியுமா?
கோழிக்குஞ்சு தொண்டையை பிறாண்டும் அபாயம் இருக்கிறது என்று எம்.ஜி.ஆர். தடுத்தும் கேட்காமல் அந்தக் காட்சியில் பிடிவாதமாக அர்ப்பணிப் போடு நடித்தவர் சந்திரபாபு. படத்தின் தயாரிப்பாளருமான எம்.ஜி.ஆர் கவலை அடையும் அளவுக்கு சில நேரங்களில் அவரின் வேடிக்கை விளையாட்டுக்கள் சென்றுவிடும். ‘நாடோடி மன்னன்’ படப் பிடிப்பின்போது ஒருநாள் எம்.ஜி.ஆர். எச்சரித்தும் கேட்காமல் ஒரு முரட்டுக் குதிரை மீது ஏறி கீழே விழுந்து மயக்க மடைந்துவிட்டார். நல்லவேளையாக, பெரிய காயம் எதுவும் இல்லை.
‘‘எண்ணங்கள் ஏப்பங்கள் அல்ல, அப்படியே வெளியே விடுவதற்கு’’ என்று நயமான உவமையை பேரறிஞர் அண்ணா சொல்வது உண்டு. சந்திரபாபு தனது எண்ணங்களை அப்படியே வெளியே விடக்கூடியவர். கேலியும், கிண்டலும், அலட்சியமும் அவருடைய நகைச்சுவை போலவே உடன் பிறந்தவை. எல்லாரையும் கிண்டல் செய்யும் ஜாலி பேர்வழி. எம்.ஜி.ஆரைப் பற்றியும் அவருடைய நடிப்பைப் பற்றியும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் கிண்டல் செய்வார் சந்திரபாபு.
இதில் வேடிக்கை என்னவென்றால் அப்படி தன்னால் கிண்டல் செய்யப் படும் எம்.ஜி.ஆரை வைத்தே ஜூபிளி பிக்சர்ஸ் கோவிந்தராஜூடன் சேர்ந்து ஒரு படம் எடுக்க அவர் முடிவு செய்தது சுவாரஸ்யமான முரண். படத்தின் இயக்குநரும் சந்திரபாபுதான். கதாநாயகி அவரது தோழி சாவித்திரி. படத்தின் கதையை சந்திரபாபு சொல்ல எம்.ஜி.ஆருக்கும் பிடித்துப் போனது. ‘‘எனக்கு நிறைய படங்கள் ‘கமிட்’ ஆகியிருக்கு.கொஞ்சம் பொறுமையா இருங்க. நானே நடிச்சுத் தரேன்’’ என்று எம்.ஜி.ஆர். உறுதியளித்தார். ‘‘இருந்தாலும் என் பொறுமைக்கும் எல்லை இருக்கு இல்லியா?’’ என்று சந்திரபாபு துரிதப்படுத்தினார்.
பரணி ஸ்டுடியோவில் பூஜை போடப்பட்டு இரண்டு நாட்கள் படப்பிடிப்பும் நடந்தது. எம்.ஜி.ஆரை வைத்தே படம் எடுக்கும்போதும் அவரைப் பற்றிய விமர்சனங்களை சந்திரபாபு நிறுத்தவில்லை. அந்த நேரத்தில், எம்.ஜி.ஆருக்கும் பல படங்களின் படப்பிடிப்பு. உடனடியாக, சந்திரபாபுவுக்கு கால்ஷீட் தரமுடியாத நிலை. ஒரு படப்பிடிப்பில் இருந்த எம்.ஜி.ஆரிடமே கேட்டார் சந்திரபாபு. கால்ஷீ்ட் விவகாரங்களைப் பார்த்துக் கொள்ளும் தனது அண்ணன் சக்ரபாணியை பார்க்குமாறு எம்.ஜி.ஆர். சொன்னார். பொதுவாக கலைஞர்கள் உணர்ச்சிமயமானவர்கள். சந்திரபாபு என்ற பெரும் கலைஞனைப் பற்றி கேட்கவே வேண்டாம். எம்.ஜி.ஆரின் கால்ஷீட் தொடர்பாக சக்ரபாணியுடன் பேசும்போது இருவருக்கும் இடையே வார்த்தைகள் தடித்தன. நிலைமை ரசாபாசமானது. ‘‘நான் நாற்காலியைத் தலைக்கு மேல் தூக்கி விட்டேன். நண்பர்கள் என்னைத் தடுத்திருக்காவிட்டால் ஒன்று நாற்காலி உடைந்திருக்கும். இல்லை…’’ என்று சந்திரபாபு பதிவு செய்திருக்கிறார்.அதோடு, படமும் நின்றுபோனது.
அதன் பிறகும் சந்திரபாபுவை ஒரு நிகழ்ச்சியில் சந்தித்த எம்.ஜி.ஆர். ‘‘என்ன பாபு சார்?’’ என்று நலம் விசாரித்தார். படத்துக்கு ‘மாடிவீட்டு ஏழை’ என்று பெயர் வைத்த ராசியோ என்னவோ, சந்திரபாபுவுக்கு கஷ்டகாலம் ஏற்பட்டது. தனது பழைய நண்பர் கஷ்டப்படுவதைப் பொறுக்காத எம்.ஜி.ஆர்., ‘பறக்கும் பாவை’, ‘கண்ணன் என் காதலன்’, தனது சொந்தப் படமான ‘அடிமைப் பெண்’ ஆகிய படங்களில் சந்திரபாபுவுக்கு நடிக்க வாய்ப்புகள் அளித்தார். ‘அடிமைப் பெண்’ படத்தில் நடிக்க அவருக்கு கணிசமான தொகை யையும் ஊதியமாக அளித்தார்.
பி.யு.சின்னப்பா நடித்த ‘கண்ணகி’ படத்தில் கண்ணகியாக நடித்த கண்ணாம்பா பேசும் அனல்தெறிக்கும் வசனங்கள் 60-ஐக் கடந்த பலருக்கு இன்னும் காதுகளில் ரீங்காரமிடும். கண்ணாம்பாவின் கணவர் கே.பி.நாகபூஷணம். எம்.ஜி.ஆர். நடித்த ‘தாலிபாக்கியம்’ படத்தை தயாரித்து இயக்கினார்.
இப்படத்தின் படப்பிடிப்பு மைசூர் அருகே ஸ்ரீரங்கப்பட்டினம் என்ற இடத்தில் நடந்தது. படப்பிடிப்புக் குழுவினர் மைசூரில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கியிருந்தனர். திடீரென, நாகபூஷணம் பதறியபடி எம்.ஜி.ஆரை சந்தித்து, ‘‘தயாரிப்பு செலவுக்காக கொண்டு வந்திருந்த 3 லட்ச ரூபாய் தொலைந்து விட்டது. படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு திரும்ப வேண்டியதுதான்’’ என்று கலங்கினார். 1966-ம் ஆண்டில் ரூ.3 லட்சம் மிகப்பெரிய தொகை.
அவரைத் தேற்றி ஆறுதல் கூறிய எம்.ஜி.ஆர்., தனது அண்ணன் சக்ரபாணியின் மைத்துனர் குஞ்சப்பன் மூலம் சென்னையில் இருந்து ரூ.3 லட்சம் கொண்டுவரச் சொல்லி உதவினார். அதோடு மட்டுமல்ல, ‘‘இந்தப் பணத்தை நீங்கள் திருப்பித் தரவேண்டாம்’’ என்றும் சொல்லிவிட்டார். எம்.ஜி.ஆரை பார்த்து கண்களில் கண்ணீருடன் கைகூப்பி நின்றார் நாகபூஷணம்.
‘நாடோடி மன்னன்’ படத்தில் எம்.ஜி.ஆர். சொல்வார்… ‘‘என்னை நம்பாமல் கெட்டவர்கள் அதிகம். நம்பிக் கெட்டவர்கள் இன்றுவரை இல்லை.’’✍🏼🌹........... Thanks..........
தலைவருக்கு7தான் ராசி என்பது போல் ஒரு தோற்றத்தை உருவாக்கிவிட்டனர் ...சிலர் ஆனால் உண்மையில் அப்படி தலைவர் பார்த்ததில்லை,அவர் கதாநாயகனாக நடித்த முதல் படம் ராஜகுமாரி 5எழுத்து,அவருக்குப் புரட்சிநடிகர் பட்டம் கிடைத்த மர்மயோகி 5 எழுத்து,ஏன்பலரும் பயப்படும்8ம் நம்பரில்தான் புரட்சிநடிகர் என்றும் மக்கள்திலகம் என்றும் மக்கள் மனதார அழைத்து மகிழ்ந்தனர்......... Thanks.........
எம் ஜி ஆர்
----------------
புரட்சிதலைவர் பொன்மன செம்மல் பிறந்தநாள் 17.1.2020 அன்று வந்து கொண்டுள்ளது இந்த நேரத்தில் இந்த காணொளி அவசியம் பாருங்கள்
புரட்சிதலைவருக்கு பின்வந்த நடிகர்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும் தலைவர் போல் இதயம் உண்டா? என்றால் இல்லையென்பதே நிதர்சனம்
அரசியல் தலைவர்களும் அவ்வாறே இருக்கும் போதும் சரி இறந்த பின்னும் சரி தனக்கென வாழாத நெஞ்சம் தலைவர் ஒருவரே மாற்றானும் போற்ற கூடிய ஒரே தலைவர்
இறந்தவர்கள்
மறைந்து விடவில்லை
இனிய இதயம்
இருந்ததால்
இன்னும்
இருந்து கொண்டுதான்
இருக்கிறார்கள்....
உதாரணம் எம். ஜி .ஆர்.,. Thanks.........
#"எங்கவீட்டுப்பிள்ளை".........
1965 ல் வெளி வந்து வெள்ளி விழா கண்ட எவரும் மறக்க முடியா படம் பி.நாகிரெட்டி அவர்கள் தெலுங்கு நிறுவனமான தயாரிப்பை தமிழில் எம்ஜிஆரை வைத்து எடுத்தார்.
இப்படத்தின் திரை அரங்கின் உரிமைகளை அண்ணன் MG சக்கரபாணி ஏற்றுக்கொண்டார். படம் வெளி வந்து சக்கை போடு போட்டது லாபமோ இரட்டிப்பாக இருந்தது அப்போது அண்ணன் சக்கரபாணி எம்ஜிஆரிடம் கணக்கு காண்பித்தார் கூடுதலாக ஒரு லட்சம் வந்திருக்கு என்றார்.அதை உடனே அண்ணன் நாகீரெட்டி பெயரில் அனுப்பி விடுங்கள் இது அவருக்கு தான் சொந்தம் என்றார் எம்ஜிஆர்.
அதை வாங்கிய நாகிரெட்டி கடிதம் ஒன்றை எழுதி லாபமாய் வந்த பணம் உதவும் கரமாகிய உங்கள் கைகளுக்கு தான் சொந்தம் என்று ஒரு லட்சத்து ஒன்று ...என திருப்பி அனுப்பி விட்டார்.
இதில் என்னவென்றால் எம்ஜிஆர் சிரித்து கொண்டே இப்படத்தில் நல்லவனாக நான் நடிக்கவில்லை காசு கொடுக்காமல் ஓட்டலில் சாப்பிடுவதும் பெரிய இடத்தில் ஆள் மாறாட்டம் செய்வதும் எனக்கு பிடிக்க வில்லை இப்படி நடித்தற்கே இவ்வளவு பெரிய லாபமா? என்று தன்னை நொந்து கொண்டாராம்
சினிமாவாக இருந்தாலும் தன் மனதில் தவறு என்று பட்டால் ஏற்றுக் கொள்ள மாட்டார் எம்ஜிஆர் இயற்கையிலே தங்க குணம் படைத்த வாத்தியாரை வாழ்த்து வதற்கு வயது இங்கு யாருக்கும் இல்லை...
#எல்லாபுகழும். எம்.ஜி.ஆர்.கே......... Thanks.........
சேலம் அலங்காரில் கடந்த வெள்ளி முதல் (3/1/20) புரட்சி தலைவர் /மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் கலக்கிய டிஜிட்டல் "எங்க வீட்டு பிள்ளை "
தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .
தகவல் உதவி : நெல்லை நண்பர் திரு.வி.ராஜா .
கோவை சண்முகாவில் வெள்ளி முதல் (03/01/20) புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரின் " நல்ல நேரம் " தினசரி 4 காட்சிகளில்* 4 நாட்கள்* நடைபெற்றது .
கோவை சண்முகாவில் 07/01/20 முதல்* நடிக மன்னன் எம்.ஜி.ஆர். "தனிப்பிறவி "3 நாட்களுக்கு மட்டும் தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .
கோவை சண்முகாவில் வெள்ளி முதல் (10/01/20) ஏழை பங்காளன் எம்.ஜி.ஆரின்*"குமரிக்கோட்டம் " தினசரி 4 காட்சிகளில் (கண்டிப்பாக 4 நாட்கள் மட்டும் ) நடைபெறுகிறது .
பொங்கல் முதல் , கோவை சண்முகாவில் (14/01/20) வசூல் சக்கரவர்த்தி எம்.ஜி.ஆர்.வழங்கும் மீண்டும் டிஜிட்டல் "அடிமைப்பெண் " தினசரி 4 காட்சிகளில் விஜயம்*
தகவல்கள் உதவி :நெல்லை நண்பர் திரு.ராஜா .
புதுச்சேரி கரிக்கலாம்பாக்கம் திவ்யா அரங்கில் கடந்த வெள்ளி முதல் (03/01/20)*நிருத்திய* சக்கரவர்த்தி எம்.ஜி.ஆரின் மகத்தான வெற்றிப்படைப்பான டிஜிட்டல் "ரிக்ஷாக்காரன் " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது . புதுவையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு கலைவேந்தன் எம்.ஜி.ஆர். படம் வெளியீடு .
தகவல் உதவி : புதுவை நண்பர் திரு.கலியபெருமாள் .
கள்ளக்குறிச்சி மாவட்டம் ...சின்ன சேலம் -
செங்குந்தர் DTS திரையரங்கில் மக்கள் தலைவரின் பிரம்மாண்ட வெற்றி படைப்பு "ரிக்சாக்காரன் " காவிய திரைப்படம் 07.01.2020 முதல் திரையிடப்பட்டுள்ளது. 70948 77415 த.சேரன் சின்ன சேலம்........... Thanks.........
https://i.postimg.cc/NG70WTDG/IMG-4789.jpg
Thanks to Mr Ranjith
தலைவரின் இரத்தத்தின்
இரத்தமான அன்பு
உடன்ப்பிறப்புகளுக்கு
வணக்கம் ....
கவிஞர் மருதகாசி அவர்கள்
பத்தாண்டு இடைவெளிக்கு
பிறகு தலைவருக்கு
எழுதிய பாடல்
கண்ணை நம்பாதே
உன்னை ஏமாற்றும்
என்ற பாடல்....
குள்ளநரி கூட்டம்
வந்து குறுக்கிடும்
நல்லவர்க்கு தொல்லை
தந்து மடக்கிடும்
என்ற பாடல் வரிகள்
ரஞ்சனுக்காக எழுதிய
காரணத்தினால்
தலைவரை கோபப்படுத்தியது.....
மருதகாசி பாடல்
எழுத வாய்ப்பு இல்லாமல்
போன காரணத்தினால்
வறுமையில் வாடினார்...
நினைத்ததை முடிப்பவன்
பட தயாரிப்பாளர்
திரு ஜி என் வேலுமணி அவர்கள்
தலைவரிடம் தெரியப்படுத்தாமல்
மருதகாசிக்கு வாய்ப்பு
தருகிறார்.....
மன்னரின் இசையில்
பாடல் பதிவு முடிந்து
தலைவருக்கு பாடலை
போட்டு காண்பிக்க
தயாரிப்பாளர் ஜி என் வேலுமணி
மற்றும் மெல்லிசை மன்னரும்
தோட்டத்திற்கு செல்கின்றனர்
தலைவர் பாடலை கேட்டவுடன்
இந்த பாடலை
எழுதியது மருதகாசியா என்று
கேட்டு அசத்திவிட்டார்...
திகைத்துப்போன தயாரிப்பாளரும்
மெல்லிசை மன்னரும்
பாடல் பிடிக்கவில்லை என்றால்
மாற்றிவிடலாம் என்று கூற
தலைவர் பாடல்
படத்தில் இருந்து போகட்டும்
கூறி மருதகாசியை தன்னை
வந்து பார்க்குமாறு கூறினார்...
வித்வான் வே லட்சுமணனனோடு
தலைவரை பார்க்க வந்த
மருதகாசி ஒரு ஈர துணிப்பையை
தலைவருக்கு கொடுத்தார்
அதை வாங்கி பார்த்த
தலைவர்
பக்கத்தில் வைத்துக்கொண்டார்...
வெளியில் வந்த
வித்வான் வே லட்சுமணன்
என்னையா தலைவருக்கு
கொடுத்தாய் என்று
கேட்க
மருதகாசி அவல் பொட்டலத்தை
கொடுத்தேன் என்றார்....
மகாபாரதத்தில் குசேலன்
கண்ணனுக்கு அவல் கொடுத்து
அடுத்த கணமே
குபேரனானதை படித்துள்ளோம்..
ஆனால் நிச வாழ்க்கையில்
மருதகாசியின் அனைத்து
கடன்களையும் அடைத்து
அவரின் வாழ்க்கை தரத்தை
உயர்த்தியவர்
புரட்சித்தலைவர்....
இப்போது பாடலுக்கு
வருகிறேன்....
1973 இல் மிகப்பெரிய செட்
போட்டு எடுத்த பாடல்
கண்ணை நம்பாதே என்ற
பாடல்....
ரோமாபுரி அரசன் அரசி.....
கிரேக்க அரசன் அரசி.....
முகலாய அரசர் அரசி.....
சீன அரசர்...
இங்கிலாந்து அரசர் அரசி...
சம்பல் பள்ளத்தாக்கு கொள்ளையன்...
கடற்கொள்ளைக்காரன்...
அரபு நாட்டு சேக்...
ஜப்பானிய பெண்...
ஆப்கானியர்...
அலெக்ஸாண்டர்...
சாமியார்...
பிச்சைக்காரன்.....
மராத்தி
குஜராத்தி
ஆந்திரா
கர்நாடகா
கேரளா பெண்கள்....
பிலிப்பைன்ஸ் சிகரெட் விற்கும் பெண்கள்...
மேற்க்கத்திய தீவு பெண்கள்...
கோட் சூட் அணிந்த
இசைக்கலைஞர்கள்
என
பல தரப்பட்ட வேடங்களை
இப்பாடலில் சேர்த்திருப்பது
தனி சிறப்பு....
பாடல் முடியும் வரை
தலைவர் முழு செட்டையும்
தனது ஆடலில்
ஓடி ஆடி
அசத்தியிருப்பது
கூடுதல் சிறப்பு....
"பொன் பொருளை கண்டவுடன்
வந்த வழி மறந்து விட்டு
கண் முன்னே
போகிறவர் போகட்டுமே",
என்ற வரிகளில்
தலைவர் ஓடி வந்து
உட்காரும் சோபா
கறுப்பு சிவப்பு நிறத்தில்
இருக்கும்..
தலைவரின் அறிவு சார்ந்த
அரசியல் கூர்மை இது...
இறுதியில் நான் கூற வந்தது
மருதகாசி அவர்கள்
தலைவருக்கு தந்த
ஈர துணிப்பையை
தலைவர் மறக்காமல்
இப்பாடலில் தனது
இடுப்பில் கட்டி
ஆடியிருப்பது
தலைவரின் மாசு மருவற்ற மாண்பு அது..
கணினி மூலம் மெருகேற்றுப்பட்ட
பாடல்......................
நன்றி...
பொன்மனம் பேரவை...
சென்னை............. Thanks.........