அஜித் கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்த ஆர்யா - ருசிகர செய்தி !
தமிழ் திரை உலகில் சூப்பர் ஸ்டாருக்கு பிறகு சினிமா பிரபலங்களே அதிகம் ரசிக்க கூடிய ஹீரோ என்றால் அது நம்ம அஜித் தான்.
சூர்யா, சிம்பு, ஜெய் போன்றவர்கள் அஜித்தை தங்கள் படத்தில் எதாவது ஒரு காட்சியில் கொண்டு வந்து தியேட்டரில் அதிக கைதட்டுகளையும், விசில்களையும் பெறுவார்கள். இதெல்லாம் தூக்கி சாப்பாடும் அளவுக்கு ஆர்யா ஒரு காரியம் செய்துள்ளார் .
அதாவது அஜித் வைத்து ஆரம்பம் படத்தை எடுத்த விஷ்ணுவர்தன் தற்போது ஆர்யா, கிருஷ்ணாவை வைத்து யட்சன் என்ற படத்தை எடுத்து வருகிறார். இப்படத்தில், அஜித் ரசிகர் மன்றத் தலைவராக ஆர்யா நடிக்கிறார் என்பது அறிந்ததே.
ஏற்கனவே இந்தப் படத்தில் கௌரவ தோற்றத்தில் அஜித் நடிக்க இருக்கிறார் என்ற செய்தி சில மாதங்களுக்கு முன் வெளியானது. ஆனால் அந்த செய்த வதந்தி என்று தற்போது தெரியவந்துள்ளது. அதே சமயம் அஜித் நடிக்காவிட்டாலும், அவரது ரசிகர்மன்ற தலைவராக ஆர்யா நடிப்பது உண்மை என்ற செய்தி உறுதியாகியுள்ளது.
அஜித் நடித்த ‘வீரம்' படத்திற்காக வைக்கப்பட்ட மிகப்பெரிய கட்அவுட் மேல் ஏறி ஆர்யா பாலாபிஷேகம் செய்வது போன்ற காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டது.
இந்தப் படத்தில் அஜித்தின் தீவிர ரசிகர் கூட்டங்கள் என ஒரு படையே நடிக்கின்றனராம். இதை அப்படியே படத்தின் புரமோஷன் காட்சிகளில் இணைத்து, அஜித் ரசிகர்களை தியேட்டருக்கு திரட்டிக்கொண்டு வர விஷ்ணுவர்தணும், ஆர்யாவும் மெகா ப்ளான் போட்டுள்ளனர் என தகவல்கள் வந்துள்ளன. இந்த படத்தில் ஆர்யாவின் பெயர் ‘சின்னா' வாம்.