சரி சரி..எனக்குக் காலில் அடிபட்ட காரணத்தினால் இப்போது மறுபடிஒரு மீள் பதிவு(ஹிஹி..புதிதா எழுதலை எனில் நொண்டிச்சாக்கு)
*
பாட்டுப் பேச வா - 4
*-****************************
ஒன்று என்றால் தனி..இரண்டு என்றால் ஜோடி.. மூன்று அதற்கு மேல் என்றால் என்னவாம்..
*
ஒரு குட்டிக் கவிதை (?!!)
*
நிலவெனும் நல்லாள் மெல்ல
.. நேர்படச் சிரித்து நிற்க
கலகல வென்ற ஓசை
..காதிலே தேனாய்ப் பாய
களவினை மனத்தில் தாங்கி
…கண்களைத் தார கைகள்
வளமுடன் சிமிட்டிப் பார்க்க
…வானிலிக் காட்சி அன்றோ...
*
மூன்றுக்கு மேல் என்றால் கூட்டம் தானே.. ம்ம் கரெக்ட்..கூட்டம் என்ற பாடல்கள் இருக்கிறதா என நினைத்தால் என் மனதில் வந்தது இரண்டு பாடல்கள் தான்.. ஆனால் தேடினால் கூட்டம் கூட்டமாய்க் கொட்டுகிறது பாடல்கள்- திரையிசைப் பாடல்கள்..
*
முதலில் மனதில் வந்தது ஒருஜொள் பாட்டு.. அது சரி ஜொள் என்றால் என்னவாம்..
ஜொள்ளெனப் பட்டது யாதெனில் யாதொன்றும்
வன்மை இலாத செயல்!
அப்படின்னு யாரோ சொல்லியிருக்காங்க..
*
அவன் துறு துறு இளைஞன்.. பின் என்ன…அவன் தொடர்வது இளம் பெண்களை.. என்ன பாடுகிறான்..
காதல் மலர் கூட்டம் ஒன்று
வீதி வழி போகும் என்று
யாரோ சொன்னார் யாரோ சொன்னார்
பாதம் முதல் கூந்தல் வரை
பால் வடியும் கிளிகள் என
பாதம் முதல் கூந்தல் வரை
பால் வடியும் கிளிகள் என
யாரோ சொன்னார் யாரோ சொன்னார்
*
ம்ம் சிவாஜி ப்ளஸ் ஜெயலலிதா அண்ட் கோ.. நல்ல வேகப் பாடல்..
*
கூட்டத்திலே யார் தான் கொடுத்து வைத்தவரோ
என் தோட்டத்திலே ஆடத் துணிந்து வந்தவரோ.. – இதுவும் மனதில் வந்தது..
*
ஒட்டுக்க எல்லாப் பெண்களையும் பார்த்துப் பாடினால் ஜொள் என்று சொல்லலாம்..ஆனால் தன் காதலியைப் பார்க்கும் போது இந்த ஆளுக்கு என்ன ஆகுது.. நட்சத்திரக் கூட்டம் லாம் வந்து அவன்கிட்ட மொய்க்குதாம்..கொஞ்சம் ஓவர் தான் இல்லை..
*
ஒரு சின்னத் தாமரை என் கண்ணில் பூத்ததே
அதன் மின்னல் வார்த்தைகள் என் உள்ளம் தேடி தைக்கின்றதே
இதை உண்மை என்பதா இல்லை பொய் தான் என்பதா
என் தேகம் முழுவதும் ஒரு விண்மீன் கூட்டம் மொய்க்கின்றதே
*
அப்புறம் தேடினால் வைரமுத்து அதிசயப்பட்ட பாடல்..
பூவிற்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்..(உண்மை தான்)
*
பாகம் பிரித்துதான் பக்குவமாய் உண்டிடும்
காகம் கருத்தை அறி..
*
கரெக்ட் தானே ..காக்கை என்ன செய்யறது.. ஏதாவது இரை கிடைத்தால் சிலோன் ரேடியோவில் பிறந்த நாள் வாழ்த்துச் சொல்வது போல தனது அப்பா அம்மா அப்பத்தா சித்தப்பா சித்தி பெரியம்மா மாமி என எல்லாரையும் கூவி அழைத்து ஒற்றுமையாய் உண்ணும் (ம்ம் என் கையில் இருக்கும் சாக்லேட் உங்களுக்குத் தரமாட்டேன் )
*
இந்தப் பாட்டும் அஃதே..
*
ஒண்ணா இருக்கக் கத்துக்கணும் அந்த
உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்
காக்கா கூட்டத்த ப் பாருங்க அதுக்குக் கத்துக் கொடுத்தது யாருங்க..
*
அவர் சூப்பர் ஸ்டார்..அவரே இயந்திரமாய் நடிக்கிறார்..ஸோ என்ன பண்ணலாம்.. ரோபோக்கும் கூட்டமாம்..
ஆட்டோ ஆட்டோக்காரா - யே
ஆட்டோமேட்டிக் காரா
கூட்டம் கூட்டம் பாரு - உன்
ஆட்டோக்ராப்க்கா
*
ஏதாவது தப்பு நடந்தா மக்கள் கூட்டமே தண்டிக்கும் என்பது ஜன நாயக மரபு.. இந்தப் பொண்ணு என்ன சொல்றா..
கேட்டு ப் பார் கேட்டுப் பார்
கேட்டுப்பாரு கேள்விகள் நூறு
பாட்டுப் பாடு பாவை என்னோடு
கேட்டகேள்விக்கு பதிலில்லை என்றால்
கூட்டம் பார்த்து கும்பிடு போடு..
ம்ம் நல்ல பாட்டு..
*
அந்தக்காலத்தில மருதகாசி என்ன சொல்றார்..
சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா செல்லடா
குள்ள்நரிக் கூட்டம் வந்து குறுக்கிடும்
நல்லவர்க்குத் தொல்லை தந்து மடக்கிடும் - நீ
எள்ளளவும் பயங்கொண்டு மயங்காதேடா
எள்ளளவும் பயங்கொண்டு மயங்காதேடா - அவற்றை
எமனுலகு அனுப்பி வைக்கத் தயங்காதேடா
நல்லாத் தான் இருக்கு.. பட் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரமும் பார்ப்போமே..
*
திட்டம் போட்டு திருடுற கூட்டம்
திருடிக் கொண்டே இருக்குது - அதை
சட்டம் போட்டு தடுக்குற கூட்டம்
தடுத்துக் கொண்டே இருக்குது
*
இன்றளவுக்கும் உண்மை தானே..
*
அழகா வானத்தில பறவைகள் சென்ற் கொண்டிருக்கின்றன.. ஹலோ.. அப்படின்னு நாம கீழ இருந்து கூப்பிட்டா அதுக்குக் கேக்குமா என்ன..அதுக்குக் கேக்கும்னு நினைக்கறது தப்புதான்..அப்படி நினைச்சா – அதை எதுக்கு இந்தக் கவிஞர் கம்பேர் பண்ணியிருக்கார்..
*
அழைப்பதை கானல் நீராய், அறியாது பறவை கூட்டம்
தொடுவானம் போலே காதல், அழகான மாய தோற்றம்
*
ஸ்வர்ணலதா பாடின பாட்டு .. நான்கேட்டதில்லை..கேட்கணும்..
*
இன்னொரு அழகான டூயட்ல கொழுக் மொழுக் ஹீரோ கொஞ்சம் ஷார்ட்டான ஹீரோயினோட திடீர்னு ஒரு அழகான பாட்டுபாடிடுவாரு படத்துல..
*
தேவாதி தேவர் கூட்டம் துதி பாடும் தெய்வ ரூபம்
பாதாதி தேகமெங்கும் ஒளி வீசும் கோவில் தீபம்
வாடாத பாரிஜாதம் நடை போடும் வண்ண பாதம்
கேளாத வேணு காணம் கிளி பேச்சை கூட்டக் கூடும்
அடியாளின் ஜீவன் ஏறி அதிகாரம் செய்வதென்ன?
அலங்கார தேவ தேவி அவதாரம் செய்வதென்ன
இசை வீணை வாடுதோ இதமான கைகளில் மீட்ட
சுதியோடு சேருமோ சுகமான ராகமே காட்ட
*
மிலிட்டரில்லருந்து ஹீரோ லிவுல ஊருக்கு வர்ற்ச்சே நடுவில் நண்பர்களோட ஆடறார்..என்ன தான் பெரிய மேஜர் போஸ்ட்ல இருந்தாலும்.. தன்னடக்கம் ஜாஸ்தி.. தன்னையும் தன்னைச் சேர்ந்தவர்களையும் என்னவா வர்ணிக்கிறார்?
*
குட்டி புலி கூட்டம் வெட்ட வெளி ஆட்டம்
பல்லே பல்லே பட்டு தோட்டம்
சுத்தி மேக மூட்டம் லீவு விட்டா ஓட்டம்
சாலை எங்கும் சேலை தோட்டம்
*
*
பட்டாம் பூச்சிக் கூட்டமும், நண்பர் கூட்டமும் இன்னும் இருபாடல்களில்..
உந்தன் வார்த்தையில் எந்தன் கவிதைகள்
என்ன காரணம்...ஓ ஓ ஹோ
உந்தன் கண்களில் எந்தன் பார்வைகள்
என்ன காரணம்...ஓ ஓ ஹோ
ஒரு பட்டாம்பூச்சி கூட்டம்
என்னை என்னை மெல்ல மிரட்டுதே மிரட்டுதே
ஒரு சூறாவளிக்காற்று வந்து வந்து குடை பிடிக்குதே
ஓ...ஓ... ஹோ இதுதானோ காதல் கலவரம்
ஓ...ஓ... ஹோ உனக்குள்ளே என்ன நிலவரம்
ஓ...ஓ... ஹோ
*
பானுப்ரியா அகலக் கண்களோட ஆடும் நடனம்..
*
அகப்பட்ட இடம் தொட்டு கோவில் கட்ட நினைக்கிற
நண்பர் கூட்டம் இங்கே
நண்பர் கூட்டம் இங்கே
அட நான்முகன் தலையிலே போட்டது பொய் எழுத்து
நான் ரசிகனின் நெற்றியில் இடுவது கை எழுத்து
ரசனை வாழ்க ...ரசிகன் வாழ்க
ரசனை வாழ்க ...ரசிகன் வாழ்க
நாடோடி மன்னர்களே வணக்கம் வணக்கம்
*
கடைசியா (அப்பாடா முடிச்சுட்டான்யா..) ஒரு அழகானபாட்டோட இன்னிக்கு செஷன் கம்ப்ளீட் பண்ணலாமா..
*
மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச
தேகம் கூடலே ஓ மோகம் வந்ததோ
மோகம் வந்ததும் ஓ மௌனம் வந்ததோ
நெஞ்சமே பாட்டெழுது அதில் நாயகன் பேரெழுது
*
வருவான் காதல் தேவன் என்றும் காற்றும் கூர
வரட்டும் வாசல் தேடி இன்று காவல் மீற
வளையல் ஓசை ராகமாக இசைத்தேன் வாழ்த்து பாட
ஒரு நாள் வண்ண மாலை சூட
வளர்த்தேன் ஆசை காதலை நெஞ்சமே பாட்டெழுது
அதில் நாயகன் பேரெழுது
*
கரைமேல் நானும் காற்று வாங்கி விண்ணை பார்க்க
கடல் மீன் கூட்டம் ஓடி வந்து
கண்ணை பார்க்க அடடா நானும்
மீனைப் போல கடலில் பாயத் தோணுமோ
அலைகள் வெள்ளி ஆடை போல
உடலின் மீது ஆடுமோ நெஞ்சமே பாட்டெழுது
அதில் நாயகன் பேரெழுது
*
ம்ம் இப்படி நிறைய பாட்டுக் கூட்டம் இங்கிருந்தாலும் கொஞ்சம் மிஸ் ஆகியிருக்கும்.. :)