Re: Excellent Cinematography
Quote:
Originally Posted by Prabhu Ram
While I have seen AN a few times I had the chance to see it fully with the attention it deserved only over the last few days.
One of the things that was really impressive was the cinematography. Quite obviously the blinking light is for effect and the cinematographer would have had to have dip-dip light source within the set to sync with it. The sync is perfect. The pace is unchanged and is not off by even a fraction of a second
when we do see the advert light outside.
And all this happens in a matter of fact manner without screaming for attention, as the story goes on. The cinematographer is S.Maruthi Rao :clap:
The movie was made in 1954 :shock:
Dear Prabhu Ram,
When talking about cinematography of 'Andha Naal', I think there is no harm in re-producing a small portion of my review about the movie earlier. I wrote.....
கேமரா வழியாக கதை சொல்லும் பாணி முதலில் இந்தப்படத்தில்தான் பரீட்சித்துப் பார்க்கப்பட்டிருக்கும் என்பது பலரின் எண்ணம். நான் முன்பு சொன்னது போல அறையைப்பூட்டிக்கொண்டு சிவாஜி போகும்போது அவரோடேயே கேமராவும் போகும். கையிலிருக்கும் சாவிக்கொத்தை மேலும் கீழும் தூக்கிப்போட்டுப் பிடித்தபடி அவர் செல்லும்போது, கேமராவும் சாவியோடு மேலும் கீழும் போகும்.
அதே போல இறுதிக்காட்சியில், தான் சுடப்படுவதற்கு முன்பாக, சுழல் நாற்காலியில் அமர்ந்த படி மனைவி பணடரிபாயுடன் பேசும்போது கேமரா இவரிடத்தில் (in his chair) அமர்ந்து கொண்டு இவர் பார்வை போகும் திசையெல்லாம் போகும். அறை முழுக்க சுற்றி சுற்றி அலையும்.
( 'இருகோடுகள்' படத்தில் கலெக்டர் சௌகார், முதலமைச்சர் அண்ணாவை பேட்டியெடுக்கும் காட்சியில், அண்ணாவின் இருக்கையில் கேமரா அமர்ந்து, அவர் பார்வை போகும் திசைகளில் போவதைக்கண்டுவியந்தேன். அதன் பின்னரே 'அந்தநாள்' பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த உத்தி ஏற்கெனவே (15 ஆண்டுகளுக்கு முன்பே) அந்த நாளில் (I mean "அந்த நாளில்") பயன்படுத்தப் பட்டிருப்பதைக் கண்டு வியப்பின் எல்லையை அடைந்தேன். (பாலச்சந்தர் என்று பெயர் வைத்தாலே புதுமைகள் செய்யதோன்றுமோ).