http://i57.tinypic.com/2dm4pi.jpg
Printable View
சிரிப்பவர் சிலபேர் அழுபவர் பலபேர்
இருக்கும் நிலை என்று மாறுமோ?
உழைப்பவன் வாழ்வே வீதியிலே
உறங்குவதோ நடைபாதையிலே
இரக்கம் காட்டத் தான் நாதியில்லே !
இருப்பவர் உள்ளம் திறந்திடுமா?
ஏழ்மையும் வறுமையும் பறந்திடுமா?
அழுபவர் சிரிக்கும் நாள் வருமா?
உயர்ந்தவர் தாழ்ந்திடத் தேவையில்லை
உள்ளதை இழந்திடச் சொல்லவில்லை
உழைப்பவர் உயர்ந்தால் போதுமையா !
தினம் சிரிப்பவர் சிலபேர் அழுபவர் பலபேர்
இருக்கும் நிலை என்று மாறுமோ?
சிரிப்பவர் சிலபேர் அழுபவர் பலபேர்
இருக்கும் நிலை என்று மாறுமோ?
http://i58.tinypic.com/11lufso.jpg
எம்.ஜி.ஆர். இறந்து கிட்டத்தட்டக் கால் நூற்றாண்டு ஆகிவிட்டது. இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அவரைப் பற்றிய செய்திகள் காற்றில் உலவிக்கொண்டேயிருக்கும். திரையுலகத்திலும் அரசியல் உலகத்திலும் எம்.ஜி.ஆரின் நினைவுகள் வற்றாத நதியாக இன்னும் ஓடிக்கொண்டிருப்பதைப்போல மருத்துவ உலகத்திலும் அவரது மாண்பைப் பேசிக்கொண்டேயிருக்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான் டாக்டர் மனோகரன். எம்.ஜி.ஆரைப் பற்றி உலகமே பேசிக் கொண்டிருக்க, அவர் பேசாத நாட்களில் அவருக்குப் பேச்சுப் பயிற்சி அளித்தவர் இவர். அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுச் சென்னை திரும்பியதிலிருந்து இறுதிக் காலம்வரை அவரோடு இருந்தவர். எம்.ஜி.ஆர். பற்றிய தன்னுடைய மறக்க முடியாத நினைவுகளை இங்கே பகிர்ந்துகொள்கிறார்.
நீங்கள் எப்படி எம்.ஜி.ஆருக்கு அறிமுகமானீர்கள்?
எம்.ஜி.ஆர். அமெரிக்காவில் சிகிச்சை பெற்று சென்னை திரும்பிய பிறகும்கூட அவரால் சரியாகப் பேச முடியவில்லை. அவருக்குப் பேச்சு பயிற்சி அளிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியிருந்தார்கள். அப்போதிருந்த ஹெல்த் மினிஸ்டர், ஹெல்த் செகரட்டரி, டி.எம்.இ. ஆகியோர், அரசு பொது மருத்துவமனையில் காது மூக்கு தொண்டை பிரிவில் பணியாற்றிக்கொண்டிருந்த என்னைத் தேர்வு செய்தார்கள். எம்.ஜி.ஆருக்குப் பேச்சுப் பயிற்சி அளிக்க வேண்டும் என்று என்னை அவர்கள் அழைத்தபோது நான் தயங்கினேன். ஏனென்றால், என் குடும்பம் பெரியது. நான் ஒருவன்தான் சம்பாதிப்பவன். காலையில் அரசு மருத்துவமனையில் பணியாற்றிவிட்டு மாலையில் தனியாகக் கிளினிக் வைத்திருந்தேன். அந்தத் தொழில் பாதிக்குமே என்பதுதான் என் தயக்கம்.
சரியான ஆள் நீதான் என்று என்னைக் கொண்டுபோய் எம்.ஜி.ஆர். முன் நிறுத்திவிட்டார்கள். ஒருமுறை என்னை அளவெடுப்பது போலப் பார்த்தார். எவ்வளவு வேணும் என்று சைகையிலேயே கேட்டார். நான், ‘ஐயா... நான் அரசு ஊழியன். அங்குக் கொடுக்கிற சம்பளமே போதும்’ என்றேன். தினமும் காலை ஆறு மணிக்கெல்லாம் நான் ராமாவரம் தோட்டத்திற்குப் போய்விட வேண்டும். இரவு பத்து மணிவரை அவரோடு இருக்க வேண்டும். இதுதான் என்னுடைய பணி. காலையில் நாலு மணிக்கே எழுந்து என்னைத் தயார்படுத்திக்கொண்டால்தான் ஆறு மணிக்காவது அங்குப் போக முடியும். எனக்கென ஒரு அரசு காரையும் டிரைவரையும் தனியாகவே தந்துவிட்டார்கள்.
ஆறு மணிக்கெல்லாம் அவரும் தயாராக இருப்பார். ஒன்பது மணி வரையிலும் அவருக்கு ஒவ்வொரு வார்த்தையாகச் சொல்லிக் கொடுப்பேன். பயிற்சியை அசுர வேகத்தில் பழகிக்கொண்டார். சில வார்த்தைகளைச் சொல்ல முடியா மல் கஷ்டப்படும்போதுகூடப் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று விட்ட தில்லை. சிரமப்பட்டுப் பேசிவிடுவார். ஒன்பது மணிக்குப் பிறகு அவர் காரிலேயே நானும் கோட்டைக்குச் செல்வேன். முன் சீட்டில் நான் அமர்ந்துகொள்ள அவர் பின் சீட்டில் அமர்வார்.
கோட்டையில் அவரது அறையிலேயே எனக்கும் ஒரு சேர் போடப்பட்டிருக்கும். அவர் அருகிலேயே அமர்ந்திருப்பேன். அவர் பேசுவது புரியாவிட்டால் அதை நான் விளக்க வேண்டியிருந்தது.
அவருடன் இருந்து சேவை செய்த அந்தச் சில வாரங்களில் என்னுடைய செயல்பாடுகள் பற்றியும், நான் எந்த விஷயத்தையும் வெளியில் பகிர்ந்து கொள்வதில்லை என்கிற தகவலும் அவருக்குப் போயிருக்க வேண்டும். என்னை ஒரு மகன் போலப் பார்க்க ஆரம்பித்தார். சில விவாதங்களின்போது நான் சொல்கிற கருத்தை ஏற்றுக்கொள்கிற அளவுக்கு அவருடைய மனதில் எனக்கும் இடம் இருந்தது.
மறக்க முடியாத ஏதேனும் ஒரு சம்பவம்?
ஒருமுறை கோவைக்குச் சென்றிருந் தோம். கிட்டத்தட்ட மூன்று நாட்கள் அங்கு தங்கியிருந்தோம். விமானத்தில்தான் சென்றோம். எனக்கு அது முதல் விமானப் பயணம். சற்றே அச்சத்தோடு ஏறினேன். பெரிய பெரிய அமைச்சர்கள் எல்லாரும் அந்தப் பிளைட்டில் இருக்க, என்னை அவர் அருகில் உட்கார வைத்துக் கொண்டார். சீட் பெல்ட்டை அவரே மாட்டிவிட்டார். ஜூஸ் வந்தது. ஒரு கிளாசை அவரே தன் கையால் எடுத்து என்னிடம் கொடுத்து ‘குடிங்க’ என்றதை என்னால் இப்போதும் மறக்க முடியாது. பக்கத்தில்தான் அவர் பிறந்த ஊரான பாலக்காடும் இருந்தது. மூன்றாவது நாள் அங்குக் கிளம்புகிற நேரம். எனக்குத் திடீரெனக் காய்ச்சல் வந்துவிட்டது. நான் படுத்துவிட்டேன்.
நான் வராததைக் கவனித்த எம்.ஜி.ஆர், ‘மனோகரன் வரலயா?’ என்றாராம். அவர்கள் எனக்கு உடம்பு சரியில்லாத தகவலைச் சொல்லியிருக்கிறார்கள். பாலக்காட்டிலிருந்து திரும்பியதும் என்னைப் பார்க்க வந்துவிட்டார். நான் அவர் வருவது தெரியாமல் படுத்திருந்தேன். திடீரென்று யாரோ பக்கத்தில் நிற்கிற உணர்வு. திரும்பிப் பார்ப்பதற்குள் அவர் என் கன்னத்தில் கை வைத்து, ‘ஆமாம்.. ரொம்ப காய்ச்சலா இருக்கே’ என்று கூறியவர், ‘உடம்ப பார்த்துக்கங்க’ என்று கூறிவிட்டுப் பக்கத்தில் அவருக்காக நியமிக்கப்பட்டிருந்த மருத்துவக் குழுவிடம், ‘மனோகரனை கவனிச்சுக்கங்க’ என்று கூறிவிட்டுக் கிளம்பினார். நான் உருகிப் போனேன்.
அப்போது அவர் பொதுக்கூட்டங்களில் பேசிவந்தாரே?
ஆமாம்... அந்தப் பேச்சை நான்தான் தயார் செய்வேன். எந்தெந்த வார்த்தைகளை எளிதாக அவரால் பேச முடியுமோ, அதை மட்டுமே வைத்துப் பேச்சைத் தயார் செய்வது என் வேலை. அமெரிக்காவிலிருந்து வந்த பின்பு எம்.ஜி.ஆர் கலந்துகொண்ட முதல் மீட்டிங் ஜேப்பியார் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த மீட்டிங்தான். நான் எழுதி வைத்திருந்த பேச்சை அவர் பலமுறை பயிற்சி எடுத்துக்கொண்டார். மிகச் சிறப்பாகப் பேசியும் முடித்தார். மதுரையில் நடந்த எம்.ஜி.ஆர் மன்ற விழாவிலும் நிறைவாகப் பேசினார். அந்த விழாவில்தான் இப்போதைய முதல்வரம்மாவுக்கு செங்கோல் பரிசளித்து, தனது வாரிசு அவர்தான் என்பதையும் உணர்த்தினார் எம்.ஜி.ஆர்.
அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த செய்தி ஏதாவது?
அதைப்பற்றி நான் அதிகம் சொல்லக்கூடாது. பட்... சில விஷயங்களை பகிர்ந்துக்கலாம். 87ஆம் வருஷம் மீண்டும் நியூயார்க் போயிருந்தார் எம்.ஜி.ஆர். மறு சோதனைக்கான ட்ரிப் அது. வழக்கம்போல நான், ஹெல்த் செகரட்ரின்னு ஒரு மருத்துவக் குழுவே கிளம்பினோம். அங்கிருந்தபடியே இங்குள்ள அரசியல் மற்றும் சட்டம் ஒழுங்கையும் கவனிச்சார் எம்.ஜி.ஆர். அப்போதான் இலங்கை தொடர்பான சில முடிவுகளை அவர் எடுத்திருந்தார். அதுமட்டும் அவர் நினைத்த மாதிரி அமைஞ்சிருந்தா பிரபாகரன் பற்றி நாம் இப்போ கேள்விப்படுகிற விஷயமும், தற்போது நடந்த துயரச் சம்பவங்களும் நடக்காமல் போயிருக்கும். ம்... என்ன செய்வது?
http://i61.tinypic.com/20iwbxl.jpg

Today Aayirathil oruvan evening show in satyam complex only 30 tickets balance ( this is 13.30 hrs position)
THIRAI ULAGAM - SPECIAL EDITION - MAKKAL THAILAGAM MGR AMERICA VISIT -1974http://i58.tinypic.com/23wqglv.jpg
MGR, the box-office Baadshah of Tamil films, is back in business. The late and legendary actor-turned-politician ruled Tamil Nadu for 10 years from 1977 till his demise. He was an indisputable king not only in film circles but also in politics as his foes could only watch as mute spectators as MGR went on to amass successes in successive elections.
One of MGR’s super-duper hit films, Aayirathil Oruvan which released almost five decades back in 1965, is to be re-released in more than 100 cinema halls in Tamil Nadu and Kerala. The record-breaking film has been converted digitally with high-quality picture and sound effects. Aayirathil Oruvan, incidentall, was MGR’s first film opposite J. Jayalalithaa, with whom he went on to star in the most number of films.Starring MGR, Jayalalithaa, Nagesh, M.N. Nambiar, R.S. Manohar and many others, the film was produced in a grand manner by B.R. Bandulu, who had been facing severe financial hardships at that time. The film’s success retrieved Bandulu’s career in a huge way. Released on 09.7.1965, Aayirathil Oruvan had music by Viswanathan-Ramamurthy and lyrics by Kannadasan and Vaali. MGR’s majestic, handsome looks and Jayalalithaa’s unlimited beauty ensured the film’s stupendous success.
The digitized version is to hit the sceens in Chennai, elsewhere in Tamil Nadu and Kerala from tomorrow (14th March). It may be recalled that MGR’s films such as Nadodi Mannan, Ulagam Sutrum Vaaliban and Adimaipenn, which were re-released in the past, enjoyed huge success at the box-office.- COURTESY NET
மேடைப்பேச்சில் தென்றல் வீசட்டுமே!
அரசியல் கட்சிகள் பல இருக்கின்றன. ஒவ்வொரு கட்சிக்கும், தனித்தனியான கொள்கைகள் இருக்கின்றன. அந்தந்த கட்சியின் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டு, பலர் அந்தந்த கட்சிகளில் சேருவார்கள். பலர் உறுப்பினர்களாக சேராமல், அனுதாபிகளாக இருப்பார்கள். இவர்களையெல்லாம் தவிர, ஒருபகுதி மக்கள் எந்த கட்சியையும் சேராதவர்களாக இருப்பார்கள். ஒவ்வொரு தேர்தலின்போதும், அவ்வப்போது உள்ள நிலைமைகளைப்பார்த்து, மனத்தராசில் அனைத்து கட்சிகளையும் எடை போட்டு, யாருக்கு ஓட்டுபோடவேண்டும்? என்று முடிவு செய்து வாக்களிப்பார்கள். பெரும்பாலும் இந்த பிரிவு மக்கள் யாருக்கு ஓட்டுப்போடுவார்களோ?, அவர்கள் பக்கம்தான் வெற்றிக்காற்று வீச வாய்ப்பு இருக்கிறது. இவர்கள், அனைத்து கட்சிகளின் வேட்பாளர் தகுதிகள், தேர்தல் அறிக்கைகள், பொதுக்கூட்ட பேச்சுகள், வாக்குறுதிகளை உன்னிப்பாக கவனிப்பார்கள். இவர்கள் பெரிதும் எதிர்பார்ப்பது, அரசியல் மேடைகளில் அரசியல் நாகரீகத்தைத்தான்.
அரசியல் கட்சிகள், மற்ற கட்சிகளை கொள்கை ரீதியாகத்தான் எதிராக பார்க்கவேண்டுமே தவிர, தனிப்பட்ட முறையில் அல்ல. மாற்றுக்கட்சியினர்; அவ்வளவுதானே தவிர, இருவரும் ஒருவருக்கொருவர் எதிரிகள் அல்ல. இதே நடைமுறைதான் அவர்களின் மேடை பேச்சுகளிலும், பிரசாரங்களிலும் எதிரொலிக்க வேண்டும். எங்களை மக்கள் தேர்ந்தெடுத்தால் என்ன செய்வோம்?, எதிர்க்கட்சிகள் என்ன செய்ய தவறியது?, எங்கள் நிறை என்ன?, எதிர்க்கட்சிகளின் குறை என்ன? என்ற கொள்கை ரீதியான பேச்சுகள்தான் வேண்டும். ஆனால், இந்த தேர்தலில் எல்லா எல்லைகளையும் தாண்டி, மேடைகளில் நாராச நடையில் ஒருவரையொருவர் திட்டித்தீர்ப்பதைத்தான் சகித்துக்கொள்ள முடியவில்லை. சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் நாஹித் ஹாசன், நரேந்திரமோடியையும், மாயாவதியையும் பற்றிப்பேசும்போது, ‘மாயாவதி, மோடியின் மடியில் 3 முறை உட்கார்ந்தார், இருவருமே திருமணமாகாதவர்கள்’ என்று பேசியதற்காக அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு வேட்பாளர் வாயில் இருந்து இப்படிப்பட்ட அபாசமான பேச்சு வந்தால், ஜனநாயகம் எங்கே போகிறது?. இதுபோல, காங்கிரஸ் வேட்பாளர் இம்ரான் மசூத், ‘உத்தரபிரதேசத்தை, குஜராத்தாக்க மோடி முயற்சித்தால், அவரை துண்டு துண்டாக வெட்டி கூறுபோடுவேன்’ என்று பேசியதற்காக அவர் மீது வழக்குப்போடப்பட்டுள்ளது.
கண்ணியமிக்க பாராளுமன்றத்துக்கு செல்வதற்காக நடக்கும் தேர்தலில் போட்டியிடும் ஒரு வேட்பாளர், இப்படி ஒரு தீவிரவாதிபோல பேசுவதை நாடு எப்படி சகித்துக்கொள்ளும். இந்த தலைமுறை இப்படிப்பட்ட பேச்சுகளை வெறுக்கிறது. தி.மு.க.வில் இருந்து விலகி, அண்ணா தி.மு.க.வை மறைந்த எம்.ஜி.ஆர். தொடங்கிய நேரத்தில், ஒரு பொதுக்கூட்டத்தில் கே.ஏ.கிருஷ்ணசாமி, தி.மு.க. தலைவர் கருணாநிதி பற்றி பேசிய ஒரு பேச்சுக்காக, அந்த மேடையிலேயே அவரை எம்.ஜி.ஆர். மன்னிப்பு கேட்க வைத்தார். தமிழக அரசியல் மேடைகளில், தேர்தல் பிரசார கூட்டங்களில் இப்படி ஆபாசமான பேச்சுகளோ, அல்லது கொலைவெறி பேச்சுகளோ இல்லை. ஆனால், தலைவர்களிடம் இல்லாவிட்டாலும், இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை தலைவர்களிடம் தனிப்பட்ட தாக்குதல்கள், தரம்தாழ்ந்த பேச்சுகள் இருப்பதை மறுத்துவிட முடியாது. அரசியல் கட்சித்தலைவர்கள் தங்கள் கூட்டங்களில் அக்னி பிழம்பு வீசாமல், தென்றல் தவழ வகை செய்யவேண்டும். தேர்தல் கமிஷன் மிகத்தெளிவாக தேர்தல் நடத்தை விதிகளை வகுத்துக்கொடுத்துள்ளது. அடுத்த அரசியல் கட்சிகளைப்பற்றி விமர்சனம் செய்யும்போது, அந்த கட்சியின் கொள்கைகள், திட்டங்கள், முந்தைய செயல்பாடுகள், பணிகளைப்பற்றித்தான் பேச்சுகள் இருக்கவேண்டுமே தவிர, அந்த கட்சித்தலைவர்கள், தொண்டர்களின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றியோ, அவர்களின் பொது செயல்பாடுகள் அன்னியிலான மற்ற செயல்கள் பற்றியோ எதுவும் பேசக்கூடாது. உண்மையற்ற குற்றச்சாட்டுகளையோ, திரித்துக்கூறப்படும் குற்றச்சாட்டுகளையோ தவிர்க்கவேண்டும் என்பது உள்பட பல நடத்தை விதிமுறைகள் கூறப்பட்டுள்ளது.
இதுபோல, இந்திய தண்டனை சட்டத்தின் பல விதிகளும், மேடைபேச்சுகளில் எல்லை மீறும் நேரத்தில் போலீஸ் நடவடிக்கைகளுக்கு உறுதி செய்துள்ளன. மொத்தத்தில், அரசியல் கட்சிகளும், தேர்தல் நடத்தை விதிகளும், இந்திய தண்டனை சட்டம் வகுத்துக்கொடுத்துள்ள எல்லைகளை மீறாமல் இருக்கவேண்டும். தேர்தல் கமிஷனும் ஏதோ விதியில் இருக்கிறது என்பதோடு நிறுத்திக்கொள்ளாமல், எல்லை மீறுகிற நேரத்தில் நடவடிக்கை எடுக்கவேண்டும். மொத்தத்தில், தமிழ்நாடு பல விஷயங்களில், மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக இருப்பதுபோல, தேர்தல் பிரசாரங்களிலும் நாகரீகத்தின் உச்சிக்கு சென்று எடுத்துக்காட்டாக விளங்கவேண்டும்.- daily thanthi today thalayangam 01.04.14
AAYIRATHIL ORUVAN TODAY POSITION IN SINGAPORE THEATERES (01.04.14)
Date: Tuesday, 01 Apr 2014
Lotus Five Star - Sentul Cineplex, Kuala Lumpur
Tel: 03-40422525
Aayirathil Oruvan, 2D (P13)
12:00PM 09:00PM
Lotus Five Star - Coliseum Cineplex, Kuala Lumpur
Tel: 03-26925995
Aayirathil Oruvan, 2D (P13)
03:00PM 09:00PM
Lotus Five Star - State Cineplex PJ, Petaling Jaya
Tel: 03-79607881
Aayirathil Oruvan, 2D (P13)
12:15PM 09:15PM
Lotus Five Star - Shaw Centrepoint, Klang
Tel: 03-33422381
Aayirathil Oruvan, 2D (P13)
06:15PM
Lotus Five Star - KM Plaza, Seremban
Tel: 06-7675718
Aayirathil Oruvan, 2D (P13)
12:00PM 06:00PM
Lotus Five Star - Bukit Jambul Penang, Bayan Lepas
Tel: 04-6401515
Aayirathil Oruvan, 2D (P13)
06:00PM
Lotus Five Star - Butterworth, Butterworth
Tel: 04-3101081
Aayirathil Oruvan, 2D (P13)
02:45PM 06:00PM 09:15PM
Lotus Five Star - Seri Kinta Ipoh, Ipoh
Tel: 05-2490881
Aayirathil Oruvan, 2D (P13)
06:00PM
Lotus Five Star - Broadway JB, Johor Bahru
Tel: 07-2238080
Aayirathil Oruvan, 2D (P13)
12:00PM 09:00PM
Lotus Five Star - Cineplex Perling Mall, Johor Bahru
Tel: 07-2413775
Aayirathil Oruvan, 2D (P13)
12:00PM 03:00PM 06:00PM 09:00PM
MY Cinema - Teluk Intan, Teluk Intan
Tel: 05-6216178
Aayirathil Oruvan, 2D (P13)
03:00PM 06:00PM 09:00PM
COURTESY - CINEMA.COM
http://www.cinema.com.my/movies/movi...tion=showtimes
AAYIRATHIL ORUVAN TOMORROW POSITION IN SINGAPORE REX THEATERES (02.04.14)
https://www.google.co.in/url?sa=t&rc...mQly5ZJYIF2kqw
AAYIRATHIL ORUVAN TODAY POSITION IN CANADA WOODSIDE THEATERES (01.04.14)
http://newwoodsidecinemas.com/images...vies/oru.T.jpg
https://www.google.co.in/url?sa=t&rc...Svxmyj18X6oFlQ
இனிய நண்பர் திரு யூகேஷ் சார்
ஆயிரத்தில் ஒருவன் - படத்தின் செய்திகளை முன்பதிவு நிலவரங்களை உடனுக்குடன் திரியில் பதிவிடும் உங்களின் ஆர்வத்திற்கு மிக்க நன்றி .
இனிய நண்பர் திரு லோகநாதன் சார்
திருவள்ளூர் நகரில் துளசி அரங்கை பற்றிய தகவல்களுக்கு நன்றி .மக்கள் திலகத்தின் பல்லாண்டு வாழ்க
இலவசமாக காண்பிப்பது உண்மையிலேயே பாராட்டப்படவேண்டிய செயலாகும் .
ஏப்ரல் மாதத்தில் வந்த மக்கள் திலகத்தின் படங்கள் .
01. மாய மசீந்திரா -1939
02. தமிழ் அறியும் பெருமாள் -1942
03. ராஜகுமாரி -1947
04. மருத நாட்டு இளவரசி -1950
05. குமாரி -1952
06. பணக்காரி - 1954
07. மதுரை வீரன் - 1956
08. ராஜராஜன் - 1957
09. பாக்தாத் திருடன் -1960
10. தாயை காத்த தனயன் -1962
11. கலை அரசி - 1963
12. பணக்கார குடும்பம் -1964
13. நாடோடி -1966
14. கண்ணன் என் காதலன் -1968
15. ராமன் தேடிய சீதை - 1972.
மக்கள் திலகம் நடித்த மருத நாட்டு இளவரசி 64th anniversary -2.4.2014
http://i58.tinypic.com/sdmzdh.jpg
மக்கள் திலகத்தின் அருமையான நடிப்பிலும் சண்டை காட்சிகளும் நிறைந்த படம் .
ராஜகுமாரி படத்திற்கு பின் இந்த படம் அவருக்கு பெயரையும் புகழையும் தந்த படம்
http://i59.tinypic.com/6gbrb7.jpg
MSG FROM MR.R.SARAVANAN, MADURAI