http://i59.tinypic.com/2wpjtlk.jpg
Printable View
இனிய நண்பர் திரு சிவாஜி செந்தில் சார்
உங்களின் அன்பான பாராட்டுக்கு என் அன்பு நன்றி .தங்களின் கடுமையான உழைப்பில் பதிவிட்டும் வரும் ஆராய்ச்சி
கட்டுரையும் வீடியோ பாடல்களும் மிகவும் அருமை .
இனிய நண்பர் திரு கலைவேந்தன் சார்
பாகிஸ்தானில் நடைபெற்ற பள்ளிகூட மாணவர்களை தீவிரவாதிகள் கொன்ற கொடூர சம்பவம் - மனதை மிகவும் பாதித்தது ,சிரித்து வாழ வேண்டும் படத்தில் இடம் பெற்ற காட்சியுடன் ஒப்பிட்டு நீங்கள் பதிவிட்ட கட்டுரை பொருத்தமாக இருந்தது .
http://i57.tinypic.com/s32gzp.png
WE WISHTO K.B. SIR FOR SPEEDY RECOVERY.
thalaivar fantastic dialogue scene from nadodi mannan
யாரிவன் , எங்கிருந்து வந்தான் ,என்ன இவன் பழைய கதை ? என்றெல்லாம் குழம்பும் உன் மனசாட்சி . தெள்ளிய நீருக்கும் , இல்லறத்துப் பெண்ணுக்கும் கள்ளம் புரியாது ; கபடம் தெரியாது . கண்ணாடி உன் மனம் ; அதிலே நீ காண்பது உன் கணவனின் முகம் . அரண்மனை , அதிகாரம் , ஆள் ,அம்பு , சேனை , இதுதான் நீ காணும் உலகம் . இன்னொரு உலகம் உண்டு ; நான் கண்டது ; நீ காணாதது . கேள் சகோதரி , காடு சுற்றுவார்கள் ; கலப்பை பிடிப்பார்கள் ; உழுவார்கள் , விதைப்பார்கள் , அறுப்பார்கள் , சுமப்பார்கள் .
ஆனால் உண்ண மட்டும் உணவின்றித் தவிப்பார்கள் .
அத்தகைய மாபெரும் கூட்டத்தில் நானும் ஒருவன் . படையிலே சேர்ந்தேன் மக்களைக் காக்க , நாட்டைக் காக்க .சேர்ந்த பின்பே அறிந்தேன் , வாழ வைக்க வேண்டிய படை மக்களை , சாக வைத்தது ; ஆற்ற வேண்டிய படை மக்களை அழ வைத்தது என்பதை உணர்ந்தேன் . சண்டை வேண்டாம் , உணவு வேண்டும் ; வாழ்வு வேண்டும் என்று அலறுவார்கள் மக்கள் , அடிக்கச் சொல்வார் தளபதி . ஏன் இப்படி ? எதற்காக ? நடக்கலாமா ? சரிதானா ? என்று எனக்குள் நானே கேட்டுக்கொண்டேன் .
படையிலிருந்து விலகினேன் , புரட்சிக் கூட்டத்தில் இணைந்தேன் . புரட்சி என்றதும் பயந்து விடாதே ! இது ஆளைத் தீர்க்கும் ஆயுதப் புரட்சி அல்ல ! அதில் எங்களுக்கு நம்பிக்கையும் இல்லை . நாங்கள் தீயிடுவோம் தீமைக்கு ! கொள்ளை அடிப்போம் மக்கள் உள்ளங்களை ! குவித்து வைத்து அனுபவிப்போம் அறிவுப் பொருள்களை . கத்தி எடுக்காத , ரத்தம் சிந்தாத அறிவுப் புரட்சி அது . பொல்லாமையைப் போக்கி மக்கள் குணத்தை மாற்றியதைக் கொடுமை என்றது உங்கள் அரசாட்சி .
பிடிபட்டேன் ஒருநாள் ; உதைபட்டேன் ; சிறையில் வதை பட்டேன் . பாராளும் மன்னனாகப் பார்க்கிறாயே இப்போது , அவன் சிறையிலே இருந்தபோது பாராளுவோர் தந்த பரிசு . சவுக்கடி , சூடு .
செல்வந்தன் வீட்டு மாட்டுக்கும் வைத்திய வசதி உண்டு ; ஏழை அதனினும் இழிந்தவனா உங்கள் நாட்டிலே , என்று கேட்டதற்காகவா இந்த தண்டனை ? பட்டேனே பல துயரம் , கெட்டேனா ? பழி வாங்கத்
துடித்தேனா ? இல்லை . நான் பலனளிக்கும் கருவியானேன் . "
என் தலைவர் :
திரை துறையில் இன்றுவரை என்னால் எந்த நடிகரையும் என் உள்ளம் கவர்ந்த கதாநாயகனாக பார்க்க முடியாததன் காரணம் எம் ஜி ஆர் . இன்று வரை அவரின் தாக்கம் என்னுள் அதிகம். மனக்கவலை தீர ஒரு எம் ஜி ஆர் படம் போதும். வீட்டில் தாயிடம் சண்டை போட்டு விட்டு எம் ஜி ஆர் படம் பார்க்க போனால் திரும்பி வந்து தாயிடம் மன்னிப்பு கேட்பார்களாம் அந்த கால இளைஞர்கள் . சிலர் சொல்லி கேட்டிருக்கிறேன். எனக்கு என் தாயின் மீதான பாசம் அதிகரிக்க புரட்சி தலைவரின் "ஒரு பச்சை கிளிக்கொரு செவ்வந்திப்பூவில் தொட்டிலை கட்டி வைத்தேன்" பாடல் மிக பெரிய காரணம்.
எனது 12 வயதில் என் தாயோடு அந்த படத்தை பார்த்தேன். இன்று வரையிலும் அந்த நாள் என் நெஞ்சில் நீங்காத அற்புத காட்சி. தான் நடித்த எந்த படத்திலும் மது , மங்கை , போதை இல்லாமல் இளைஞர்களை வழி நடத்தியவர். அப்படி பட்ட புரட்சி நடிகர் புரட்சி தலைவர் அவதாரம் எடுத்தும் மக்களை இதயத்தில் வைத்தும் மக்களின் இதயத்தில் வாழ்ந்தும் "மக்கள் திலகமாக" ஆட்சி செய்தவர் அவரே எனது தலைவராய் இன்றும் வங்கத்து கடற்கரையில் துயில் கொண்டிருக்கிறார்.
Curious to know who is the moderator of this section.
allowing to calling names and openly vomiting political hatred.
I know any extend of outright venom and abuse on DMK and Karunanithi is exempted in this so-called forum.
But this is too much.
Good for you RR, NOV :sigh:
புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். அவர்களின் "தாயின் மடியில் " வெளியாகி 50 ஆண்டுகள்
நிறைவு பெற்றது. வெளிவந்த நாள் :18/12/1964.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
http://i60.tinypic.com/lbaxl.jpg