இருதுருவம் திரைப்படக்காட்சிகள்
பேசும்படம் இதழில் இருந்து... http://i1065.photobucket.com/albums/...psiv9737ut.jpg
Printable View
இருதுருவம் திரைப்படக்காட்சிகள்
பேசும்படம் இதழில் இருந்து... http://i1065.photobucket.com/albums/...psiv9737ut.jpg
தமிழ் கூறும் நல்லுகமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும்
தமிழ் தாயின் தலைமகன்
நடிகர் திலகமே!
என்றென்றும் உங்கள் நினைவில்
அன்புடன்
இன்று மாலை மியூசிக் அகாடமியில் நடைபெற்ற நடிகர் திலகத்தின் பிறந்த நாள் விழா மிக பிரமாதமாக நடைபெற்றது. மிக சரியான திட்டமிடலுடன் நடைபெற்ற விழாவில் இரண்டு சிறப்பு அம்சங்கள். ஒன்று Bank of Doha-வின் CEO திரு சீதாராமனின் பேச்சு. யாருமே எதிர்பார்க்காத வகையில் மிக அழகான தமிழில் அவர் பேசியது ஒரு ஆச்சரியம் என்றால் தன்னை ஒரு சிவாஜி பகதனாக அடையாளப்படுத்திகொண்டது அதை விட ஆச்சரியம். திருவிளையாடல் படத்தில் தருமி வரும் பகுதியின் வசனங்களை அப்படியே பேசிக் காட்டினார். தான் இன்றைக்கு அடைந்திருக்கும் உயரங்களுக்கு எல்லாம் முழு காரணம் நடிகர் திலகம்தான் என்றார். விரைவில் அதை நீங்கள் காணொளிக் காட்சியில் காணலாம் என்பதனால் அதை விவரிக்க வேண்டாம் என நினைக்கிறேன்.
மற்றொரு சிறப்பு அம்சம் நடிகர் திலகம் விருது வழங்கப்பட்ட ஆறு திரைப்பட கலைஞர்கள் நடிகர் திலகத்தோடு இணைந்து பணியாற்றிய படங்களிலிருந்து காட்சிகளும் நடிகர் திலகத்தை பாராட்டி எழுதப்பட்ட பொன்னான திருநாள் பாடல் ஒலிப்பரப்பட்டு அதற்கு நடிகர் திலகத்தின் பல்வேறு படங்களிலிருந்து எடுத்து இணைக்கப்பட்டிருந்த காட்சிகளும் அற்புதமாக அமைந்திருந்தன. தொகுத்தவர் இணைத்தவர் ராகவேந்தர் சார் எனும்போது அதன் தரத்திற்கு கேட்பானேன்? இந்த முறை அவர் மேடைக்கு அழைக்கப்பட்டு இளைய திலகம் பிரபு அவர்களிடமிருந்து ஒரு நினைவு பரிசினை பெற்றார்.
நடிகர் திலகத்தின் மூத்த ரசிகர்கள் இருவர் இந்த விழாவில் கௌரவிக்கப்பட்டது மற்றொரு சிறப்பு அம்சம். சென்னையை சேர்ந்த திரு சந்திரசேகர் மற்றும் பெங்களூரை சேர்ந்த திரு நடராஜ் அவர்கள்.இருவரும் இந்த மரியாதையை பெற்றனர்.
சுருக்கமாக சொன்னால் மறக்க முடியாத விழா! சரியான கூட்டம். இருக்க இடமில்லாமல் மக்கள் நின்றுக் கொண்டே பார்த்த விழா!
அன்புடன்
Part II Gana Oli
http://i58.tinypic.com/14scxdu.jpg