https://www.facebook.com/photo.php?f...4997241&type=1
Vijayabhaskaran Karunanithi
பாபநாசம் படத்தை நான் விழுப்புரம், திரைஅரங்கில் பார்த்தேன், ரஜினி, விஜய், அஜித் படங்களுக்கு அல்லோல படும் தியேட்டர், குடும்பம் குடும்பமாய் கூடி இருந்த அமைதியான கூட்டம் பார்க்கவே கண் கொள்ளா காட்சியா இருந்தது, படத்தில் நெல்லை பாஷை ஆரம்பத்தில் கொஞ்சம் கூர்ந்து கவனிக்க வைத்தாலும், பதினைத்து நிமிடத்தில் அந்த பாஷைக்கு நம்மை சாமர்த்தியமாக பழக்கி விட்டார்கள், சின்ன சின்ன காமடிக்கு சிரிக்கும் போது மட்டுமே நாம் திரை அரங்கில் பெரும் கூட்டத்தோடு உக்காந்து இருப்பது நினைவுக்கு வருகிறது, அதுவும் இறுதி காட்சியில் பிண்ணனி இசை இல்லாமல் கமல் பேசும் அந்த இடம், Pin Drop Silence!
தன் குடும்பமே காப்பாற்ற பட்டதை போல, சந்தோசாமாக மக்கள் கலைகிறார்கள்! மக்களை A, B, C என்று மூன்று தரப்பாக பிரித்து, "இந்த இடத்தில் தான் இந்த படம் வியாபாரமாகும், இந்த தரப்பு மக்கள் தான் படத்தை அங்கீகரிப்பார்கள், "நல்ல படம் எடுத்தேன், ரசிக்க தெரியாத மக்கள்" என்று ஜீனியஸ் தனமாக பேசுவது போன்ற பேச்சுக்களை இனிமேலாவது திரை துறையினர் நிறுத்தி கொள்ள வேண்டும், எல்லோரும் பார்க்கும் நல்ல படம், ரீமேக் பண்ணாலோ, எடுத்தாலோ, அதை என்றுமே மக்கள் அங்கீகரிப்பார்கள்னு, இதை பார்த்தாவது நம்புவார்கள் என்று நம்புவோம்!
திரையில் நாயகனுக்கு சூடம் ஏற்றும் அதே கும்பல் தான் இங்கே பிரார்த்தனை கூட்டத்துக்கு போன மாதிரி அமைதியா இருந்தார்கள் என்பதில் ஆச்சரியம் இல்லை, ஏன்னா இங்க திரை கதை தான் நாயகனே!
கிளப் டான்சையும், பிட்டு படத்தையும் நாங்க கூகிள்ல பார்த்துக்கிறோம், நல்ல கதை கொடுங்கப்பா போதும்!
Cleavage இருந்தா தான் படத்திற்க்கு வருவான்னு தயவு செஞ்சு Underestimate பண்ணாதிங்க!
அப்புறம் ஒரு முக்கியமான விஷியம்,
படத்தில எதிர் விமர்சனம் செய்ய விஷியம் கிடக்கலை"னா, இருப்பதை தான் விமர்சனம் செய்ய முடியும் என்பதை போல, "கமல் படத்தில மிட் நைட் மூவீஸ் பார்கிறாராம், கடைசியில ஒரு பிட்டு படத்தால தான் அவர் வாழ்க்கையே மாறுதாம்" இப்படி ஒரு விமர்சனம் படிச்சேன்!
"ரஞ்சிதாவும், சங்கவியும், மழைல டான்ஸ் ஆடுற பாட்டு வந்தா, கன்னத்தில போட்டு கிட்டு யோக்கியமா சானலை மாற்றிய அந்த உத்தமர்கள் கிட்ட நான் கேக்குறது ஒண்ணே ஒண்ணு தான், Blue Film"க்கும், Hidden Scandal"க்கும், வித்தியாசம் தெரியாம எல்லாத்தையும் "செக்ஸ்"னு ஒரே புள்ளியில் யோசிக்கும் நீங்க தான் சமூகத்துக்கு பிரச்சனையே, இந்த செக்ஸ் ஏதாவது ஒரு விதத்தில் பதிவு செய்யப்பட்டு கொண்டே இருக்கும்! ஒரு HD கேமிரா இருந்திருந்தா, கஜுராவோ சிற்பங்களை மாச கணக்கா ஏன் சிற்பி செதுக்கி கொண்டு இருந்திருக்க போறான், சுயமா தெரிஞ்சிக்கணும் என்பதால் தான், அப்பா அம்மா சொல்லி கொடுக்கிற விஷியம் அல்ல அதுவெல்லாம்! ரகசியமா தெரிந்து கொள்ள வேண்டியவையும், இன்னொருவர் அனுமதி இல்லாமல் ரகசியமா பதிவு செய்வதும் ஒண்ணு கிடையாது பிரண்ட்ஸ்!
மோகன் லால் கிட்ட இல்லாதது, கமல் கிட்ட எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடித்தது படத்தில் இந்த பார்வை தான்