என்ன மிரட்டலா என் நன்மைக்கு என்று சொல்லும் பொழுதே தெரிகிறது நான் இந்த சல சல ப்புக்கு அஞ்சமாட்டேன் எனக்கே வினையாக முடியுமா பார்க்கலாம் ?
Printable View
what is your problem yukesh? Do you have issues with NT itself? or his BO records?
Or, you have problem with NT general rereleases? Though I do not live in India, I do see NT movies have good and colorful rerelease record.
Or, you have issues with NT fans, who are giving this world the facts about MGR's record?
Still, I would like to know what your issue is. Why do you deny simple proven facts such as Karnan has always killed other rereleases, especially AO. You must admit rerelease 2014 AO failed miserably. Keep in mind rereleased Karnan gave tough competition to new rerelease then and collected 5 Crores.. what is AO number?
Plus, if you don't know NTs records prior to 1987, first learn it from your seniors before commenting. Just because MGR was successful in politics doesn't mean that he was equally successful in films. Understand this basic fact!!
Regards
Dear Yukesh Babu sir
You added happiness to NT fans like me by way of your incessant postings related to NT as a part of encouraging some good understanding between NT thread and MGR thread. My sincere thanks joining hands with Murali sir.
If you assume the part of His Master's Voice for your icon, we too have that liberty for our own icon. Being in an era of well developed network of Information Technology we have to be very careful in our way of writing particularly when we are prompted to project data alongside information. You know very well that Karnan remains the pioneering movie to taste an unbelievable success of rerun establishing the iconic image of NT even in the minds of the younger generation. Only after witnessing the mega success of Karnan attempts were made from your side to project AO too in a modern format with success expected. We do not want to comment on AO at this stage as the whole world has witnessed as what had happened.
I request you to kindly restrain with wordings in your postings in order to add laurels to your icon as a dedicated fan keeping up interthread manners and friendship everlasting.NT fans never exhibit such a bitterness on your icon MGR as he was respected by NT.
இங்கே நடக்கிற அக்கப்போருக்குள் நுழைய விரும்பவில்லை என்றாலும்... சிங்கப்பூரில் வசிக்கிறவன் என்ற முறையில்..
கர்ணன் சிங்கப்பூரில் மறு வெளியீடு கண்டது உண்மை ..நானும் சென்று பார்த்தேன்.
ஆனால் ஆயிரத்தில் ஒருவன் சிங்கப்பூரில் மறு வெளியீடு கண்டது என்பதே ஒரு டுபாக்கூர் ..சிலருக்கு மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் வித்தியாசம் தெரியவில்லை என நினைக்கிறேன் .. இல்லையென்றால் சிங்கப்பூரில் மறுவெளியீடு கண்ட திரையரங்கத்தின் பெயரை தருவார்களா ?
முரளி சார்,Quote:
[இப்ராமு என்று அவர் கூப்பிடும் அழகே அழகு],
இதைத் தான் நானும் எழுத நினைத்தேன். ஒரே அலைவரிசையில் ரசனை பயணிப்பதன் சான்று என்று இதைச் சொல்லலாம். அந்த இப்ராமு என்பதில் எத்தனை எத்தனை அர்த்தங்களை வெளிப்படுத்துகிறார். யதார்த்தமான ஒரு கிராமத்தான் ஒரு வடமொழி கலந்த வார்த்தையை உச்சரிக்கும் போது இந்த ஹ, ஜ, போன்ற எழுத்துக்களை ஒன்று தவிப்பார்கள் அல்லது அதில் வேறு எழுத்தைப் பயன் படுத்துவார்கள். இதற்கு மிகச் சிறந்த உதாரணம் நம் நடிகர் திலகத்தின் பெயர் இன்றும் கூட சில கிராமங்களில் சிவாஜி என மாட்டார்கள், சிவாசி என்பார்கள் அல்லது சிவகாசி என்பார்கள். இன்னோர் சான்று கமலஹாசன் பெயரைக் கூறும் போது இன்றும் கூட கமல்தாசன் என்று கூறுபவர்களை நானே பலமுறை பார்த்திருக்கிறேன். ஒரு கிராமத்தானை எந்த அளவிற்கு அந்த குணாதிசயத்தோடு உள் வாங்கியிருந்தால் இது போன்ற நுணுக்கமான பிரயோகங்களை அவர் பயன் படுத்துவார்..
இதில் மறைமுகமாக மத நல்லிணக்கத்தையும் அவர் புகுத்தியுள்ளார். இப்ராமு என்பதில் ராமு என முடிப்பதன் மூலம் மத நல்லிணக்கத்தையும் அவர் நுழைத்திருப்பார்.
பழநி,,
ஒவ்வொரு சிவாஜி ரசிகனும் குறைந்தது நூறு முறையாவது பார்க்க வேண்டிய உன்னதச் சித்திரம்.
மகாலட்சுமி திரை அரங்கிலும்.....டிலைட் திரைஅரங்கிலும் வெளியீடுகளை பற்றி......ஹ்ம்ம் ....சரி.....புரியாமல் பேசுகிறவர்கள் பதிவிற்கு எதற்கு பதில் சொல்வது என்று நினைத்தாலும் ஒரு சில விஷயங்கள் பகிர்வதில் தவறில்லை என்று நினைக்கிறன். காரணம் திரு யுகேஷ் அவர்களுக்கு உண்மை தெரியவேண்டும் என்பதற்க்காக மட்டும். ...!
பூனை கண் மூடினால் உலகம் இருண்டுவிட்டது என்ற அசையாத நம்பிக்கை. அது தவறான நம்பிக்கை யுகேஷ் சார் !
எல்லா ஏரியாக்களில் நடக்கும் ஊழல்களை நான் கூற வரவில்லை. நீங்கள் குறிப்பிட்டு எழுதிய ஒன்றிரண்டு மட்டும் உண்மை நிலையை உரைக்க நான் கடமை பட்டுள்ளேன்.
இருக்கும் திரை அரங்குகளில் mgr படங்கள் மட்டும் அதிகம் வெளிவர காரணம் உங்களுக்கு நிச்சயம் தெரிந்திரிக்க வாய்ப்பில்லை. காரணம் நீங்கள் ஆராய முயற்சிக்கவும் இல்லை. அது உங்களுக்கு தேவையும் இல்லை என்கின்ற காரணம்.
சிவாஜி அவர்களின் படங்கள் உங்கள் படங்கள் அளவிற்கு வரவில்லை என்பதால் அவர் படம் வாங்க, திரை இடஆள் இல்லை என்பது மறைபொருள். உண்மை கடுகளவும் இலாத ஒரு மஹா மெகா பொய். அப்படி ஒரு மாயையை ஏற்படுத்தியது யார் தெரியுமா. தம்வசம் mgr படங்கள் அடுக்கி வைத்திருக்கும் அதே விநியோகஸ்தர்கள் தான். அடிப்படையில் இவர்கள் அனைவரும் mgr ரசிகர்கள். இதில் ஒரு சிலர் கைவசம் திரை அரங்குகள் lease வேறு. இதை நான் சொன்னால் நம்பமாடீர்கள். நீங்களே விசாரித்து பாருங்கள். உண்மையை தெரிந்துகொள்ளுங்கள்.
ஒரே ஒரு statistic information......மேற்கூறிய திரை அரங்கு மற்றும் அண்மைய கால மதுரை திரை அரங்கு மற்றும் திருச்சி கெய்டி அரங்கம் யாருடைய கட்டுபாட்டில் இருந்தது . கட்டுபாட்டில் வைத்திருந்தவர் யாருடைய பரம ரசிகர்?
உதாரணமாக அதில் கோயமுத்தூர் திரை அரங்கத்தை தன கட்டுபாட்டில் (lease) வைத்து தனது படம் 90% திரையிட்ட ஒருவரிடம் சொந்தமாக எத்துனை படங்கள் mgr படம் வைத்திரிந்தார் தெரியுமா ? சுமார் 18 - 20 படங்கள். இவர் சமீபத்தில் வாங்கிய படம் என்ன தெரியுமா ? தெரிந்துகொள்ளுங்கள் .....சிரித்து வாழ வேண்டும்...!
சிரித்து வாழ வேண்டும் படம் "சாரதா" அல்லது "சாந்தி" திரைஅரங்கில் திரையிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது சார் ...அது கிடைக்காத பட்சத்தில் ஷன்முகவில் வெளிவரும். KINDLY OBSERVE !
அதனை தவிர எத்தனை படங்கள், மற்றவர்கள் படங்களை அவர் தனது கட்டுபாட்டில் வைத்திருந்த (LEASE) DELITE திரையிட அனுமதித்தார் ?
அண்ணன் ஒரு கோவில் திரைப்படம் மிக நன்றாக போய்கொண்டிருந்த சமயத்தில் 5 நாளில் வேண்டுமென்றே நிறுத்தி தனது படத்தை 4 நான்கு நாட்கள் ஓட்டியவர்.
அதே போல ஊமை விழிகள் படம் வெளிவந்தபொது நன்றாக வசூல் இருந்தும் இவருக்கு எதிர்பாராமல் விலக சொல்லி திரை அரங்க உரிமையாளர் அந்த மாதத்தோடு கல்தா கெடு கொடுத்த இரெண்டாவது நாளில் எங்கே அப்போது தான் தாம் வாங்கிய என்கடமை திரைப்படம் போடுவதற்கு தாமதம் சிறிது ஆகிவிடுமோ என்று நினைத்து ... வாங்கிய உடனே போடுவதற்காக 5 நாட்களில் ஊமை விழிகள் படம் நிறுத்தினார். இது நடந்த உண்மை.
இது போன்று இவர் பலதடவை தனது சொந்த விருப்புக்காக தன கைவசம் வாங்கிவைத்துள்ள mgr படங்களை மட்டுமே திரையிட்டு தனது அதிகாரத்தை துஷ்ப்ரயோகம் செய்ததற்காக இதர விநியோகஸ்தரை வேண்டுமென்றே இப்படி செய்ததன் பலன், லோக்கல் விநியோகஸ்தர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் உரிமையாளர் எடுத்த முடிவினால் இன்று டிலைட்டு இவர் வசம் இல்லை. இவரை கிளம்பசொல்லிவிட்டார்கள்.
இப்போது இவர் ஷண்முக திரை அரங்கில் தன்னுடைய mgr படங்களை வாடகைக்கு திரயிட்டுகொண்டிருக்கிறார். ஷன்முகாவில் சமீபத்தில் வெளிவந்த MGR படங்கள் இவர் கைவசம் வைத்துள்ள படங்களே - நேற்று இன்று நாளை, புதுமைபித்தன், உட்பட இப்போது நவரத்தினம்......! விசாரித்து பாருங்கள் !
இவர் கை வசம் இருந்த டிலைட்டில் 2 வாரம் ஓடிய நவரத்தினமோ மற்ற படங்களோ இப்போது இரேண்டுவாரம் ஷன்முகாவில் ஓடுகிறத என்று நீங்களே பாருங்களேன்.
டிலைட் திரை அரங்கில் இப்போது திரு முரளி என்பவர் mgr படங்களை போட்டுகொண்டிருக்கிறார். முக்கால் வாசி உண்மையான உரிமம் பெறாமல் திரையிடப்படும் படங்கள் இவருடைய படங்கள். இப்போது எந்த படம் போட்டாலும் fixed hire என்ற முறையில் தான் DELITE திரை அரங்கில் திர்யிடுகின்றனர்.
ஒரு படத்திற்கு 2,500 ருபாய் fixed hire including 200 போஸ்டர் . யார் படமாக இருந்தாலும் அதே கதி தான்.
இதனால் அவர்களுக்கு விநியோகஸ்தர்கல் உள்ளூர் படம் கொடுப்பதில்லை.
காரணம் கட்டுபடியாவதில்லை. இதனால் அடுத்த படம் கிடைக்கும் வரை முந்தைய படமே இவர்கள் இரெண்டாம் வாரம் தொடரும் நிலை. இதுதான் இன்றைய DELITE திரையரங்கு நிலைமை.
Equal opportunity கொடுத்து இந்த திரை அரங்கு உரிமையாளரோ அல்லது LEASE வைத்திருப்பவரோ படங்களை திரையிட்டால் MGR, SIVAJI படங்கள் மட்டுமல்ல ஜெமினி, ஜெய்ஷங்கர், ரவிச்சந்திரன் படங்கள் கூட நன்றாக வசூல் கொடுக்கும் படங்களே.
ஜெய்ஷங்கர் மற்றும் ரவிச்சந்திரன் திரைப்படங்களில் உள்ள SUSPENSE மற்றும் FIGHTS காட்சிகளை விட வேறு படங்களின் சண்டைகாட்சிகளில் திரில் அதிகம் உண்டா ? அதனை பார்க்க அவர்தம் ரசிகரோ அல்லது மக்களோ யாரும் வரமாட்டார்களா என்ன ?
அல்லது MGR அல்லது SIVAJI படங்கள் அனைத்தும் ரசிகர்களால் மட்டுமே ஓடுகின்றனவா ? பொதுமக்கள் யாருமே பார்க்க வரமாட்டார்களா ?
இன்னும் ஒரு உதாரணம் - ராயல் திரை அரங்கில் திரையிட்ட ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி திரைப்பட வசூல் ருபாய் 90,000 துக்கும் அதிகம் முதல்வாரம். தொடர்ந்து இரெண்டாவது வாரமும் திரையிட்டார்கள் . இத்தனைக்கும் சூப்பர் ஸ்டார் அந்தஸ்த்து இல்லாத நடிகர்கள் நடித்த படம்....! ஆட்கள் காண வராமலா இந்த வசூல் வந்தது ?
மேற்கூறிய அந்த இரெண்டுமே இல்லை. புரிந்துகொள்ளுங்கள்.
சம வாய்ப்பை வழங்காமல் இது போல நேர்மையற்ற முறையில் நடந்து அதை நீங்கள் சாதனை சாதனை என்றால் அது ஒரு நேர்மையான பெருமைக்குரிய சாதனையா சொல்லுங்கள் ?
நண்பர்களே,
நம்முடைய பாதையில் நாம் பயணிக்க வேண்டிய தூரம் இன்னும் நீண்டு கொண்டே இருக்கிறது. நடிகர் திலகம் என்னும் உலக அதிசயம் ஒவ்வொரு அணுத்துகளாக அலசி ஆராய வேண்டிய படைப்பு. இதற்கு நமக்கு தேவைப்படும் காலமோ நம் ஆயுளி்ல் பல மடங்கு.. கிடைக்கும் ஒவ்வொரு மணித்துளியும் நமக்கு பொக்கிஷங்கள். நம் வாழ்வில் இறைவன் நமக்களித்த ஆயுளில் மீதத்தில் எந்த அளவிற்கு நம்மால் செலவிட முடியுமோ அந்த அளவிற்கு ஒவ்வொரு மணித்துளியும் நம் எழுத்தின் மூலம் சரங்களாக்கி அவருக்கு படைக்க வேண்டிய பணிகள் உள்ளன.
இன்னும் 21ம் நூற்றாண்டின் புதிய தலைமுறையினர் இந்திய விடுதலைப் போர், அதில் தமிழகத்தின் பங்கு இவற்றையெல்லாம் அறிந்து கொள்ள முதல் திறவு கோலாக உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் காண விருக்கும் மறு வெளியீடு, அது அடுத்த தலைமுறையின் மத்தியில் ஏற்படுத்த உள்ள தாக்கம், இவற்றைப் பற்றி நாம் விவாதிக்க வேண்டும்.
எனவே இவற்றைக் கருத்தில் கொண்டு நம் கவனத்தை நம் பாதையை விட்டு விலகாதிருக்கும் வண்ணம் செலுத்தி நடிகர் திலகத்தின் புகழ் பாடுவதில் ஈடுபடுவோம். சாதனைகளை மறைக்கவோ மறுக்கவோ முடியாது. நடிகர் திலகத்தின் சாதனைகள் தாங்களே கட்டியம் கூறும்.
இனி வரும் பதிவுகள் நடிகர் திலகத்தின் புகழ் பாடும் பதிவுகளாக மட்டுமே இருக்கட்டும். என வேண்டிக் கொள்கிறேன்.