http://i63.tinypic.com/fazp75.jpg
The Hindu - Tamil daily
Printable View
http://i63.tinypic.com/fazp75.jpg
The Hindu - Tamil daily
https://s27.postimg.org/88gy8ask3/IMG_3374.jpg
The Hindu - Tamil daily
வரலாற்று பெட்டகம் - இந்துவின் ''எம்ஜிஆர் '' -100
மக்கள் திலகம் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இந்து தமிழ் நாளிதழில் வெளிவந்த மக்கள் திலகம் எம்ஜிஆர் -100 கட்டுரை தற்போது புத்தக வடிவில் '' காலத்தை வென்ற காவியத் தலைவர்'' வந்துள்ளது அறிந்து மிக்க மகிழ்ச்சி .
மக்கள் திலகத்தின் ரசிகர்களின் அனைவரும் பெருமை கொள்ளும் விதத்தில் மக்கள் திலகம் எம்ஜிஆர் பற்றிய சிறப்பு தகவல்கள் , நிழற்படங்கள் , இடம் பெற்று இருந்தது வரவேற்கத்தக்கது .
இந்திய திரை உலகிலும் , உலக திரைப்பட வரலாற்றிலும் , அரசியல் உலகிலும் , மனித நேயத்திலும் உச்சக்கட்ட புகழ் பெற்ற நம் மக்கள் திலகத்தின் சாதனைகளை இன்றைய தலை முறையினரும் அறிந்து கொள்ளும் விதத்தில் இந்த புத்தகம் அமைந்துள்ளது .
மக்கள் திலகத்தின் அரிய சாதனைகளை அருமையாக கட்டுரை வடித்த திரு ஸ்ரீதர் அவர்களுக்கும் , அதனை புத்தக வடிவில் நமக்கு விருந்தது படைத்த இந்து நாளிதழ் நிறுவனத்திற்கும் நம்முடைய நன்றியினை தெரிவித்து கொள்வோம் .
மக்கள் திலகம் அன்றும் எல்லோரையும் வாழ வைத்தார் . இன்றும் இந்து நிறுவனம் வெளியிட்டுள்ள்ள மக்கள் திலகம் எம்ஜிஆர் -100 விற்பனையில் அமோக வெற்றி பெற்று அந்த நிறுவனம் பெருமை பட போகிறது .
வியக்க வைக்கும் தலைவன்
ஜனவரி, 17 இன்று காலை முதல் சில நூறு மீட்டர் இடைவெளிகளில் இவரின் படங்களின் தத்துவ பாடல்கள் ஒலித்தபடியே உள்ளன. டேபிள்மேல் படம் வைத்து மாலையிட்டு ஊதுவற்றி, சூடம் ஏற்றி வெத்திலை பாக்கு சகிதமாய் படையலிட்டதற்கான அடையாளங்கள் இல்லாத தெருக்களே இல்லை..
ஒரு கட்சித்தலைவனுக்கு அவனது கட்சியினர், நிர்வாகிகள் செய்வது காலம் காலமாய் நடப்பதுதான். இங்கே இவற்றை உள்ளன்போடு வெகு சிரத்தையாய் செய்திருப்பவர்கள் பாமர மக்கள். காரணம், எம்.ஜி.ஆர். என்ற மூன்றெழுத்து மந்திரம்..
மறைந்து 29 ஆண்டுகள் ஆன பிறகும் இப்படியொரு பிணைப்பு இந்தியாவில் வேறந்த தலைவருக்காவது உண்டா என்றால் அது சந்தேகமே.
நடிக்கும் காலத்தில் அவர் தன்னையும் தன் படங்களையும் கட்டமைத்துக்கொண்ட விதம் அலாதியானது. எத்தனையோ சோகங்களோடு கொட்டகைகளுக்குள் நுழைந்த அவர்களுக்கு, தாய்மையை போற்றுதல், பெண்ணை மதித்தல், வீரம், காதல், சமயோசிதம், நீதிபோதனை, எல்லாவற்றையும்விட மற்றவர்களின் துயர்துடைக்க உதவிக்கரம் நீட்டுவது போன்ற நேர்மறை அம்சங்கள் அனைத்தும் அமைந்திருப்பது மாதிரி கட்டமைத்திருப்பார்
இளைஞர்கள் அவரின் பிம்பமாகவே தங்களை பாவித்துக்கொண்டனர். பெண்கள் தங்கள் வீட்டு பிள்ளையாய் மானசீகமாய் சுவீகரித்தனர். கொள்கையை பிடித்துப்போனவர்கள், தலைவனாய் பின்பற்றிக்கொண்டனர்.
உதவி கேட்டு வந்தவர்களுக்கு சொந்த பணத்தை அள்ளிக் கொடுத்து உதவும் அவரின் பாங்கு அவரின் புகழை மேலும் வளர்த்தது.
நம் வீட்டில் உலைவைத்தால் பொங்கும் என்ற நம்பிக்கையுடன் உதவிக்காக தமிழ்நாட்டில ஒருவர் வீட்டிற்கு செல்லமுடியும் என்றால் அது எம்ஜிஆர்வீடுதான் என்று பழம்பெரும் நடிகர் சட்டாம்பிள்ளை வெங்கட்ராமன் சொன்னது அவ்வளவு நிஜமான ஒன்று.
இப்படியும் ஓரு மனிதனா என வியக்க வைக்கும் அவரின் வள்ளல் தன்மை பட்டிதொட்டியெல்லாம் அவரைப் பற்றிப் பேச வைத்தது. பல நிஜமான சம்பவங்களோடு, சில செவிச்செய்திகள் நெஞ்சுருகவைக்கும் அளவுக்கு அவரால் பலன் பெற்றவர்கள் மூலம் சேர்த்தும் சொல்லப்பட்டன.
தமிழகத்தில் எங்கே எந்த வேலை பார்த்துக்கொண்டிருந்தாலும் வீரத்தையும் தன்னம்பிக்கையையும் ஊட்டும் எம்ஜிஆரின் படப்பாடல்களும், எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத காதல் பாடல்களும் வசனங்களும் காதில் விழுந்துகொண்டே இருந்தது அவரைக் காவிய நாயகனாகவே மாறிவிட்டது.
தன்னை நேசித்த மக்களை, பின்னாளில் அவர் கையாண்டவிதம்தான் எல்லாவற்றையும்விட முக்கியமானது. திரை உலகில் சக்கரவர்த்தியாக வலம் வந்து, தனிக்கட்சி ஆரம்பித்து ஆட்சியை பிடித்த எம்ஜிஆர், தொலைநோக்கு திட்டங்களுக்கு முக்கியத்துவம் தந்ததை விட, அடித்தட்டு மக்களுக்கு நேரடியாக போய் சேரும் சமூக நல திட்டங்களைத்தான் கையில் எடுத்தார்.
பல கிலோ மீட்டர் தூரம் கிளைச்சாலைகள் வழியாக நடந்து பிரதான சாலைக்கு வந்தால் மட்டும் பேருந்துகளை பிடிக்கமுடியும் என்றிருந்த தமிழக குக்கிராமங்களுக்குள் நேரடியாக டவுன் பஸ்களை ஓடவிட்டார்.
மின்சாரம் கனவாகவே இருந்த கிராமத்து குடிசைகளுக்கு ஒன்லைட் சர்வீஸ் எட்டிப்பார்த்தது.. குடிசை வீடுகளுக்குள் முதன் முறையாய் குழல் விளக்கு, அதுவும் இலவசமாய் வந்ததைக்கண்டு, ராந்தல் விளக்கில் அவதிப்பட்டு வந்தவர்கள் முகத்தில் அப்படியொரு பிரகாரம் மின்னியது.
தொண்டனாகட்டும், பொதுஜனமாகட்டும், எளிதில் அணுக முடிந்த தலைவராய் தன்னை பார்த்துக்கொண்டார். ஏராளமானோர் கூடியிருந்தாலும், தலைவா, இந்த ஆள் இப்படியெல்லாம் தப்பு செய்யறான், கேளு தலைவா என்று நேரடியாக தொண்டர்கள் பயமே இல்லாமல் அவரிடம் முறையிட முடிந்தது.
‘’பொண்டாட்டியோட டபுள்ஸ் போனா போலீஸ்காரன் புடிக்கிறான் தலைவா, இதுக்கு ஒரு முடிவுசொல்லுங்க’’ என்று பொதுக்கூட்டத்தில் ஒரு தொண்டர், முதலமைச்சர் எம்ஜிஆரை பார்த்து கேட்டார், உடனே அவர் யோசிக்கவில்லை. ‘’காவலர்களே இதோ முதலமைச்சர் ஆணையிடுகிறேன்.. இனி டபுள்ஸ் கேஸ் பிடிக்கக்கூடாது’’ என்று கைத்தட்டல் விண்ணைப்பிளக்க சொல்லப்படும் விவகாரங்களும் இதில் அடக்கம்.
மாலைபேசுவார் என்று அறிவிக்கப்படும் பொதுக்கூட்டங்களில் விடியற்காலையில வந்து எம்ஜிஆர் பேசினாலும், கூட்டம் அதுவரை கலையாமல் அப்படியே காத்துக் கிடந்தது என்பதெல்லாம் அவர் மேல் மக்கள் வைத்திருந்த வெறித்தனமான பாசத்தின் அம்சமே.. பட்டினியோடு பள்ளிக்கு தாம் சிறுவயதில் சென்ற கொடுமை, யாருக்கும் வரவேகூடாது என்ற எண்ணத்தில் சத்துணவு கொண்டு வந்ததும், பாமர மக்களின் வயிற்றில் நேரடியாக பால்வார்த்த சமாச்சாரங்களில் முதன்மையானது.
ஆரம்பத்தில் கடுமையாய் விமர்சித்த கருணாநிதிகூட பின்னாளில் முதலமைச்சராக வந்தபோது சத்துணவில் முட்டைகளை சேர்க்கும் அளவிற்கு தவிர்க்கமுடியாத திட்டமாவிட்டது அது..
அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச புத்தகங்கள், செருப்பு, பல்பொடி, சீருடைகள் என ஆரம்பித்து வைத்தது, தற்போது சைக்கிள், லேப்டாப் வரை வந்திருக்கிறது.
, நூற்றாண்டு பிறந்தநாள் காணும் இன்றைய தினத்திலும் பாமர மக்கள் மனதில் இருந்து அவரையும் அவரது செல்வாக்கையும் பிரிக்கவே முடியவில்லை என்பதுதான் தமிழக வரலாற்றில் வியப்பிலும் வியப்பான உண்மை...
- ஏழுமலை வெங்கடேசன், மூத்த பத்திரிகையாளர்
http://i66.tinypic.com/deoc43.jpg
எம்ஜிஆர் புகழைப் போற்றும் வகை யில் சென்னையில் எம்.ஜி.ராமச்சந் திரன் நகர் என்ற புதிய சட்டப்பேரவை தொகுதியை உருவாக்க வேண்டும் என்று எம்ஜிஆர் கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன் கூறினார்.
எம்ஜிஆர் கழகம் சார்பில் எம்ஜிஆர் பிறந்தநாள் நூற்றாண்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. விழாவுக்கு முன்னிலை வகித்து எம்ஜிஆர் கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன் பேசும்போது, ‘‘நடிகராக இருந்து அரசியல் தலைவராகி, முதல்வராகி 10 ஆண்டுகள் மக்கள் பணியாற்றியது எம்ஜிஆர் மட்டும்தான். அவரது புகழைப் போற்றும் வகை யில், ஆர்.கே.நகர் தொகுதி என்று இருப்பதுபோல, சென்னையில் சத்யா ஸ்டுடியோ இருந்த பகுதியை எம்.ஜி.ராமச்சந்திரன் நகர் என்ற புதிய தொகுதியாக உருவாக்கி அறிவிக்க வேண்டும் என்று தமிழக அரசைக் கேட் டுக் கொள்கிறேன்’’ என்றார்.
தொடர்ந்து மற்ற தலைவர்கள் பேசியதாவது:
பாமக நிறுவனர் ராமதாஸ்:
புரட்சி என்ற வார்த்தைக்கு தகுதியுடையவர் எம்ஜிஆர் மட்டுமே. காமராஜரின் மதிய உணவுத் திட்டத்தை விரிவுபடுத்தி சத்துணவுத் திட்டம் என மாற்றியது, அவரது புகழைப் பாடிக் கொண்டே இருக்கும்.
தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர்:
எம்ஜிஆர் ஆட்சியில்தான் நிர்வாக வசதிக்காக பல மாவட்டங்கள் பிரிக்கப்பட்டன. பல்கலைக்கழகங்கள் அதிகம் தொடங் கப்பட்டன. இன்று பொறியியல் கல் லூரிகள், பாலிடெக் னிக், மருத்துவக் கல்லூரிகள் ஏராள மான இருப்பதற்கு அஸ்திவாரம் போட்டதே அவர்தான்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்:
சினிமா, அரசியல் என அனைத்திலும் உச்சத்தைத் தொட்டவர். அவர் ஒரு வரலாறாகவே வாழ்ந்து காட்டியவர்.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்:
எம்ஜிஆரிடம் மிக வும் பிடித்தது அவரது மனிதாபி மானம். திரைப்படத்தில்கூட ஒழுக் கத்தை நிலை நாட்டினார். அரசியல் தலைவர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்பவர். இவ்வாறு பேசினர்.
நீதிபதி பு.ரா.கோகுலகிருஷ்ணன் தலைமை உரையாற்றினார். முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.ஜெகத்ரட் சகன், திமுக எம்எல்ஏ மா.சுப்பிர மணியன், தொழிலதிபர் பழனி ஜி.பெரியசாமி வாழ்த்துரை வழங் கினர். முன்னதாக எம்ஜிஆர் கழகப் பொருளாளர் டி.ராமலிங்கம் வரவேற்றார். லயோலா கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் ஆர்.அருண்குமரன் நன்றி கூறினார்.