:exactly: :cool2:Quote:
Originally Posted by Shakthiprabha
:ty:
Printable View
:exactly: :cool2:Quote:
Originally Posted by Shakthiprabha
:ty:
June 08 -2009
Quote:
Thanks to IsaiTamilNet - Prabhu
[html:f5b0dd4e4c] <div align="center"><object width="512" height="322"><param name="movie" value="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.40" /><param name="allowFullScreen" value="true" /><param name="AllowScriptAccess" VALUE="always" /><param name="bgcolor" value="#000000" /><param name="flashVars" value="id=13889808&vid=5265181&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/9337/87121907.jpeg&embed=1" /><embed src="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.40" type="application/x-shockwave-flash" width="512" height="322" allowFullScreen="true" AllowScriptAccess="always" bgcolor="#000000" flashVars="id=13889808&vid=5265181&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/9337/87121907.jpeg&embed=1" ></embed></object>
</div>[/html:f5b0dd4e4c]
June - 09 - 09
Quote:
Thanks to IsaiTamilNet - Prabhu
[html:fb16ff11e6]<div align="center"><object width="512" height="322"><param name="movie" value="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.40" /><param name="allowFullScreen" value="true" /><param name="AllowScriptAccess" VALUE="always" /><param name="bgcolor" value="#000000" /><param name="flashVars" value="id=13891505&vid=5265885&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/9338/87128392.jpeg&embed=1" /><embed src="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.40" type="application/x-shockwave-flash" width="512" height="322" allowFullScreen="true" AllowScriptAccess="always" bgcolor="#000000" flashVars="id=13891505&vid=5265885&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/9338/87128392[/html:fb16ff11e6].jpeg&embed=1" ></embed></object>
</div>
10-06-09
திருமயிலையில் சித்திரக்குளத்தருகே விளங்கும் பழங்காலக் கோவில்களுள் ஒன்று கேசவபெருமாள் கோவில். பெருமாளுக்கு கேசவன் என்ற பெயர் வர பல காரணங்கள் கூறப்படுகின்றன. கேசி என்ற அரக்கனை க்ருஷ்ணன் கொன்றவன். அதனால் அவன் கேசவன் என்று கொண்டாடப்படுகிறான். கம்சனின் ஆணைப்படி கேசி கண்ணனை அழிக்க குதிரை உரு கொண்டு தாக்குகிறான், இறுதியில் சம்ஹாரம் செய்யப்படுகிறான். பிருந்தாவனத்தில் இருக்கும் இந்த இடம் "கேசி கடம்" என்ற பெயரில் வழங்கப்படுகிறது. கேசவனைக் கொன்ற பின், அக்குளத்தில் முங்கி கண்ணன் குளித்ததாக ஐதீகம்.
மயிலையில் இருக்கும் கேசவ பெருமாளுக்கு வேறு ஒரு சரிதை சொல்வதுண்டு. இதில் குடிகொண்டுள்ள பெருமாளை ஆதிகேசவன் என்று அழைப்பர். முன்காலத்தில் மயிலாப்பூருக்கு மயூரபுரி பட்டிணம் என்று பெயர். பிருகு என்ற முனிவரின் யாகத்தை மது என்ற அரக்கன் அழிக்க முற்பட்டான். அவர் மஹாவிஷ்ணுவின் உதவியை நாடினார். யக்ஞத்திலிருந்து, விஷ்ணு லக்ஷ்மியுடன் தோன்றி அரக்கனை வதம் செய்தார். யக்ஞத்திலிருந்து தோன்றிய மஹாபுருஷன், நவரத்தினங்கள் பதித்த மகுடத்தை அணிந்திருந்தார், அவரின் கருமையான அடர்ந்த கேசம் ஜொலித்ததாம். அதனால் அவருக்கு கேசவன் என்று பெயர் என்பது இன்னொரு கருத்து. இங்கு தாயாராக மயூரவல்லி வீற்றிருக்கிறார்.
http://www.harekrsna.com/philosophy/...daban/kesi.htm
http://www.dinamalar.com/anmegamnews...=HIN&ncat1=WRI
http://chennaionline.com/Religion/Te...al-Temple.aspx
ஆழ்வார்களின் ஒருவரான பேயாழ்வாருக்கு இங்கு சன்னிதி இருக்கிறது. பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார் பேயாழ்வார் மூவருக்கும் மஹாவிஷ்ணு தரிசனம் கொடுத்ததாக புராணம் கூறுகிறது. மஹாவிஷ்ணுவைக் கண்ட பொய்கையாழ்வார் கடலையே எண்ணையாக வரித்து சூரியனை விளக்காக்கி துதிக்கிறார். பூதத்தாழ்வாரும் அன்பையே விளக்காக வைத்து இறை ஆர்வத்தை நெய்யாக்கி இறைவனை துதிக்கிறார். அதன் பின்னர், பேயாழ்வாருக்கு தரிசனம் தெரிகிறது. இவர் கேசவபெருமாள் கோவில் கிணற்றில் பிறந்தார் என வரலாறு கூறுகிறது.
"திரு கண்டேன் பொன் மேனி கண்டேன்
நிகழும் அருக்கன் அணிநிறமும் கண்டேன்
செருக்கிளரும் பொன்னாழி கண்டேன்
புரிசங்கம் கைக்கண்டேன்
என்னாழி வண்ணன்பால் இன்று"
என்று திருவந்தாதி பாடுகிறார்.
http://azhvaar.wordpress.com/category/uncategorized/
கேசவ பெருமாள் கோவில் திருவத்தூரிலும் இருக்கிறது. இங்குள்ள தாயார் மரகதவல்லி. இறைவனாம் திருமால், கேசன் கேசி என்ற அரக்கர்களை வென்ற பின் இங்கு எழுந்தருளியதாக ஸ்தல புராணம் சொல்கிறது. கேசி என்ற அரக்கன் தாமிரபரணி ஆறாக ஓடுகிறான். அவனை ஒடுக்கி வென்று கேசவ பெருமாள் என்ற பெயருடன் இங்கு மஹாவிஷ்ணு திகழ்கிறார். விஷ்ணுவிற்கும் கேசிக்கும் நடக்கும் போரை சிவன் பனிரெண்டு உருவங்கள் தாங்கி கண்டு, பின் கேசவனை வழிபட்டதாகவும் கூறுகின்றனர்.
http://www.templenet.com/Tamilnadu/df087.html
ஆலயங்களின் சிறப்பும் சரித்திரமும் ஸ்தலபுராணமும் கேட்கத் திகட்டாதவை. ஆலய தரிசனம் ஒன்றே மன அமைதியைத் தரவல்லது என்றால் ஆலயத்தை நிறுவுதல் அதை விட சிறந்தது அதை போல் பன்படங்கு சிறந்தது ஒருவனுக்கு எழுத்தறிவித்தல்.
நம் உடல் பஞ்ச பூதங்களால் ஆனது. இப்பூதங்களைக் குளிர்வித்தல் புண்ய காரியம். அதாவது உடற்பசி போக்குதல், கண்ணுக்கு /செவிக்கு விருந்து, இவையெல்லாம் உடலை சாந்திப்படுத்தக்கூடியது. அடுத்தது மனம். மனம் என்னும் இந்திரியத்தை அமைதியைக் கொண்டு சாந்தப்படுத்தலாம். ஆலயம் செல்வதோ, இறை வழிபாடோ, இறை நம்பிக்கை அற்ற பொதுவானதொரு நற்சிந்தனையோ கூட மனதை சாந்தி படுத்த போதுமானது. உடலைக் காட்டிலும் மனம் சூட்சுமம் என்றால், மனதைக் கட்டிலும் அறிவு சூட்சுமம். அந்த அறிவுக்கு கல்வி அவசியம். கல்வி என்றால் இங்கு உயர்ந்த ஞானத்தை புகட்டக்கூடிய கல்வி என்று பொருள் கொள்ள வேண்டும். ஆகவே தான் அறிவை சுடர் விட்டு எரியச்செய்யும் கல்விக்கு மேலும் உயர்ந்த இடம். இதைச் சுட்டிக்காட்டி பாரதியாரின் கவிதைகளுள் சில ஞானத்தின் இருப்பிடமான சரஸ்வதி தேவியை பாடியுள்ளது.
”வீடுதோறும் கலையின் விளக்கம்
வீதிதோறும் இரண்டொரு பள்ளி
நாடு முழுதும் உள்ளன ஊர்கள்
நகர்களெங்கும் பலப்பல பள்ளி”
என பள்ளியின் பெருமையைப் பாடியுள்ளார். மேலும் ஒரு படி சென்று அவரே, புண்ணியம் யாவிலும் சிறந்தது எழுத்தறிவித்தலே ஆகும் என்கிறார்.
"இன்னறுங்கனிச் சோலைகள் செய்தல்,
இனிய நீர்த்தண் சுனைகள் அமைத்தல்
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்,
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
பின்னருள்ள தருமங்கள் யாவும்,
பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்
அன்ன யாவினும் புண்ணியம் கோடி,
ஆங்கோர் ஏழைக் கெழுத்தறிவித்தல்"
மேலே உள்ள கவிதையில் பேசப்படுவது பலன் பொருள் எதிர்பாராது ஒருவருக்கேனும் அறிவை ஊட்டுவது. பலன்/பொருள் எதிர்பார்த்தே இருந்தாலும் கூட, அறிவை ஊட்டும் ஆசிரியர் பணி, உயர்ந்ததாக இன்றும் கருதப்படுகிறது.
பஞ்ச கர்மங்களாக ஐந்து கர்மங்கள் மனிதனுக்கு விதிக்கப்பட்டுள்ளன. இதைப்பற்றி முந்தைய தொடர் ஒன்றில் ஏற்கனவே விவாதிருந்தனர். பஞ்ச கர்மங்களாக
"தேவ யக்ஞம்" : தேவர்களின் ப்ரீதிக்காக ஆற்றப்படும் யாகங்கள் யக்ஞங்கள் தொண்டுகள், பூஜைகள். யக்ஞம் என்றால் நெய் ஆஹுதி வளர்த்து என்று மட்டும் பொருள் கொள்ளல் வேண்டாம். தேவர்களின் பிரியத்திற்காக நம்மால் முடிந்த ஸ்தோதிரங்கள் சொல்லி துதி பாடுவதும் இவ்வகையைச் சேரும்.
"மனுஷ்ய யக்ஞம்" : இன்வார்த்தைகள் பேசுதல், பிறரை வாக்கால், மனதால், செயலால், துன்புறுத்தாமை, விருந்தோம்பல் முதலியன அடக்கம்.
"பித்ரு யக்ஞம்" : பித்ருக்களுக்கான கடன், அமாவாசை தர்பணங்கள், திதிகள் முதலியன
"ப்ரம்ம யக்ஞம்" : பிரம்ம ஞானத்தை நோக்கிய பயணங்கள், வேதம் கற்றல், அதை பிறருக்கு கற்பித்தல், பிரம்ம ஞானத்தை பிறருக்கு எடுத்துரைத்தல்.
"பூத யக்ஞம்" : என்ற ஐந்தாவது கர்மம், தெரியாமல் செய்த ஹிம்ஸைகளுக்கு பிராயச்சித்தமாக செய்யப்படுவது. வாயில்லா ஜீவன்களுக்கு உணவிடுதல் இதில் அடக்கம். நம் அன்றாட வாழ்வில், நம் ஜீவனத்திற்காக பல நுண்ணுயிர்கள், பூச்சிகள் முதலியன கொல்லப்படுகின்றன. நம் மூச்சுக்காற்றில் பல கிருமிகள் மடிகின்றன. நம் ஆரோக்கிய வாழ்விற்காக நம்முள்ளும் புறமும் வாழும் பல கிருமிகளை நாசம் செய்கிறோம். நடக்கும் போது சிறிய உரு கொண்ட பூச்சிகள் கொல்லப்படுகின்றன. நம் பசிக்காக வெட்டப்படும் மரங்கள், செடிகள், காய்கள் கனிகளில் உள்ள நுண்ணுயிர்கள் அழிக்கப்படுகின்றன. இவற்றிற்காக செய்யும் பிராயச்சித்த கர்மாவாக பூத யக்ஞம் செய்யப்படுகிறது.
ஜைன மதத்தை சேர்ந்த துறவிகள் தாம் செல்லும் பாதையை பெருக்கி சுத்தப்படுத்திக்கொண்டும், தம் மூச்சுக்காற்றின் வழியாக நுண்ணுயிர்கள் கிருமிகளை சுவாசித்து அதை அழிக்காது இருக்க, சுவாச உரை ஒன்றும் அணிந்து கொள்கின்றனர்.
(வளரும்)
11-06-09
சாம்பு சாஸ்த்ரிகளுக்கு வேதபாடசாலை நிறுவ மிகுந்த ஆர்வம் இருக்கிறது. ஆர்வம் இருந்தும் என்ன பயன் அதற்கு உரிய பணபலம் அவரிடம் இல்லை. உலகில் பல உன்னத காரியங்கள் தனியொரு மனிதனால் நிறைவேற்றப்படுவதில்லை. தனிமனிதனின் பின் பலர் இருந்து ஒத்துழைத்து நற்காரியங்கள் பெரும் அளவில் நிறைவேற்றப்படுகிறது.
(couldn't help remembering kannathasan's beautiful verses
"பணம் இருக்கும் மனிதனிடம் மனம் இருப்பதில்லை,
மனம் இருக்கும் மனிதனிடம் பணம் இருப்பதில்லை" )
ஆலயம் நிறுவவோ கல்லூரிகள் பள்ளிகள் உருவாக்கவோ எளிதில் எவருக்கும் ஆசை எழும்புவதில்லை. மனம் கொண்ட ஒருவனிடம் பணம் இருப்பினும், அதனைத் தூண்டும் ஊந்துகோலாய் இன்னொருவன் செயல் படுகிறான். அதனை வழி நடத்துகிறான் மற்றொருவன். பலர் முன்னின்று பணம், உழைப்பு, சிந்தனை முதலியவற்றால் பாடுபடுகின்றனர். அதன் பின்னரே முழுமையாக ஆலயமோ பள்ளியோ கல்லூரியோ உருபெறுகிறது. அன்னை தெரசா ஆசிரமம் துவங்க நினைத்த போது அவரிடம் இருந்தது ஐந்து ரூபாய் மட்டுமே. சிலரின் உயர்ந்த நோக்கங்களின் பின்னால், ஆசைகளின் பின்னால் தெய்வ சித்தம் துணை நிற்கிறது. அது காரியங்களை எளிதில் நடத்திக்கொடுக்கிறது.
அதனால் சாம்பு சாஸ்த்ரிகளின் வேதபாடசாலை கட்டுவது முடவன் கொம்புதேனுக்கு ஆசைப்படுவது போல் என்று எளிதில் புறந்தள்ளிவிட முடியாது. மனிதனின் முயற்சியுடன் தெய்வ ஷக்தியின் ஊந்துதலும் சேர்ந்து கொண்டால், முடியாததும் நடவாததும் கூட நடந்துவிடும். வாய்ப்பும் வெற்றியும் கனிந்து வரும். சாம்பு சாஸ்த்ரிகளின் வேதபாடசாலை நிறுவும் பணிக்கு அஷோக் தன் முழு உழைப்பையும் ஊக்கத்தையும் ஊட்டுகிறான். ப்ரியாவின் தந்தையும் சாம்புசாஸ்த்ரியின் சம்பந்தியுமான ஜட்ஜ் ஜகன்னாதன் வேதபாடசாலை நிறுவும் பணிக்கு நிதி சேர்க்கும் பணியை ஏற்றுக்கொள்கிறார். பெரிய மனிதர்கள் என்று சொல்லப்படும் (creamy layered) பணம் படைத்தவர்கள் பணியில் இறங்கிவிட்டால், தடைகள் பல நீங்கிவிடும். தன் மகன் பணிந்து கேட்டுக்கொண்டபோது பணம் கொடுத்து உதவ மறுக்கும் நாதன் கூட, பின்னர் பெரிய மனிதர்கள் பலர் கொடை வழங்கியுள்ளதாய் கேள்வியுற்று தன் கௌரவத்திற்கு இழுக்கு வாராது பணம் வழங்கிவிடுகிறார்.
தங்களின் ஆயுளுக்குப் பிறகு செல்வங்கள் அனைத்தையும் அஷோக் வேதபாடசாலை நிறுவுவதில் திருப்பப்போவதாய் சொல்வதைக்கேட்டதும் மனம் உடைந்து போகின்றனர் நாதன் தம்பதியர். "சொத்துக்களை வேறு உலகத்திற்கு எடுத்துச்செல்ல முடிந்தால் எவனும் சொந்த மகன் மகள்களுக்கு எழுதி வைக்க மாட்டான்" என்கிறார் நாதன். மிகச் சரியான வார்த்தைகள். ஒவ்வொருவரும் அதிகம் நேசிப்பது தன்னைத் தான். அதன் பின்னர் வருவதே மனைவி மக்களிடம் செலுத்தப்படும் அன்பும் கூட. பிருகதாரண்யக உபநிஷதம் கூறுவது கசப்பான மறுக்க முடியாத உண்மை. " 'எனக்காக' என் மனைவி/ கணவன் அன்பு செலுத்தப்படுகிறான். 'எனக்காக' என் மக்கள் என்னால் அன்புசெலுத்தப்படுகிறார்கள். "என்"னைத் திருப்திப்படுத்தாவிட்டால் என் அன்பு அகன்று விடும் ". இது தான் "சுயம்" அகலாத ஆத்மாவின் அடிப்படைத் தத்துவம்.
"இறப்பு" என்ற வார்த்தை அஷோக்கை கலவரப்படுத்தாததைக் கண்டு வருந்துகிறாள் வசுமதி. "நான் ஹாலில் இருந்து அடுத்த ரூம் போனா, நான் காணாம போய்ட்டதா நினைச்சு நீங்க அழுவேளா"? என்கிறான் அஷோக். நம்மில் பலரால், ஏன் தொண்ணூறு சதவிகிதம் மக்களால் அஷோக்கைப் போல் சலனமற்று இருக்க முடியாது. ஞானத்தை ஊட்டும் புத்தகங்கள் படித்தும், அதைத் தேடி ஓடி இளைத்தாலும் கூட, நமக்கென வரும்போது சலனங்கள் விடுபடுவதில்லை. ஏனெனில், ஞானத்தை புத்தகத்தில் படிக்கிறோம். அதை புரிந்து கொள்ள பிரயத்தனப்படுகிறோம். ஆனால் இன்னமும் முழுமையாய் உணர்ந்து கொள்ளவில்லை. ஞானியைப் பற்றி பேச முடியும், விவாதிக்க முடியும், ஞானத் தன்மையைப் பற்றி படிக்க முடியும், ஞானியைப் போல் நடிக்கக் கூட முடியும், ஆனால் அவனைப் போல் நடத்தல் அத்தனை சுலபமாக சாத்தியப்படுவதில்லை. கீதையில் கண்ணன் அர்ஜூனனைப் பார்த்து "நீ ஞானியைப் போல் உயர்ந்த வார்த்தைகள் பேசுகிறாய்! ஆனாலும் இப்படி சலனப்படுகிறாயே" என்று கேலிக்கிறான்.
(வளரும்)Quote:
Originally Posted by Shakthiprabha.
12.06.09
யாகத்திற்கும் யக்ஞத்திற்கும் செலவழித்தலை விட தான தர்மங்கள் செய்தல் உயர்ந்த காரியம். பாலையும் நெய்யையும் கற்சிலைக்கு அபிஷேகம் செய்வித்தலை விடவும், ஆஹுதிக்கு நெய் சொரிதலை விடவும் ஏழையின் பசிக்கு உணவளித்தால் அதன் உபயோகம் பன்மடங்கு, என்று சில நேரங்களில் நம்மில் பலருக்கு தோன்றலாம்.
அதற்கு விடையாய் பஞ்ச கர்மாக்கள் மனிதனுக்கு விதிக்கப்பட்டுள்ளதாய் கூறுவதையே மீண்டும் வலியுறுத்துகிறார் சோ. அக்கர்மங்களில் தானம் தர்மம் செய்தல் உயர்ந்த பண்பு, புண்ய காரியமாகவும், பலனை எதிர்பார்த்து செய்தாலும் கூட பலன் தர வல்லது என்றும் சாஸ்திரங்கள் வலியுறுத்துகின்றன. அப்படிப்பட்ட தான தர்மங்கள், மனுஷனுக்கு செய்யும் போது, அது மனுஷ கர்மாவாக பாவிக்கப்படுகிறது. தேய்வத்திற்கும்
தேவர்களுக்கும் செய்யப்படவேண்டிய கர்மா, யக்ஞங்கள் யாகங்கள் மூலம் நிறைவேற்றப்படுகின்றன.
திருமூலர் தம் திருமந்திரத்தில்
யாவர்க்குமாம் இறைவற்கொரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே.
எனக்கூறுகிறார்.
எல்லோருக்கும் விதிக்கப்பட்டுள்ள கர்மங்கள் இறைவனுக்கு அளிக்க ஒரு இலை. கீதையில் கண்ணன் "பக்தியுடன் எனக்கு ஒரு பழமாவது, ஒரு பூவாவது, ஒரு இலையாவது அர்பணி" என்கிறான். இறைவனுக்குறிய கர்மாவைப் போல் வாயில்லா ஜீவன்களுக்கு சிறிது உணவளிப்பதும் நமது கடமை. இதுவே பூத யக்ஞமாக கூறப்படுவது. தினம் செய்யப்பட வேண்டிய கர்மாக்களில் இன்னொன்று நாம் உண்ணும் உணவை பகிர்ந்து ஒரு பிடி உணவாவது இன்னொருவனுக்கு அளித்து உண்ண வேண்டியது. இதுவே தான தர்மங்களாக விரிவடையும் மனுஷ்ய கர்மா அல்லது யாகம். இதையும் தாண்டி இன்னொன்றும் செய்ய வெண்டுமாம், அது, பிறருக்கு இதம் தரும்படி நம் பேச்சும் செயலும் அமைவது ஆகும்.
மனுஷ்ய யக்ஞம் செய்வதால் தேவர்களுக்குறிய கடமைகளை செய்ய வேண்டாம் என புறம் தள்ளக்கூடாது. தேவ கார்யங்கள் நடை பெறுவதால், பூமியில் செழிப்பும், சுபீக்ஷமும், நம்மைச் சுற்றியுள்ள அதிர்வாற்றல் இணக்கத்திற்குறியதாகவும் அமைகின்றன (we call it, inducing postive vibes).
கண்ணுக்கு அல்லது புலன்களுக்கு எட்டாத / அப்பாற்பட்ட விஷயமாக இருப்பதால் நம்பிக்கை குறைந்துவிடுகிறது. சில செயல்களுக்கு விஞ்ஞான விளக்கங்கள் கொடுத்து நம்மை நாமே சாந்தப்படுத்திக் கொள்கிறோம். விஞ்ஞானத்திற்கு விளங்காத விஷயங்களை, "மூடநம்பிக்கைகளாக" முத்திரை குத்தி ஒதுக்கி வைத்துவிடுகிறோம்.
பரிசேஷனம் செய்வது ஒரு சில சாரார் கடமையாக செய்து வருகின்றனர். அதற்கு விஞ்ஞான விளக்கங்கள் கண்டு பிடித்து, தங்களின் reasoning ability குறித்து பெருமை படுகின்றனர். பரிசேஷனம் என்பது "ஆபோஜனம், பிராணஹுத்தி, உத்தராபோஜனம்" என்று மூன்று பகுதியாக செய்யப்படுகிறது. மந்திரங்கள் பிராணன், அபானன், துவங்கி பிரம்மத்தில் முடித்து அர்பணிக்கபடுகிறது. உண்டு முடித்த பின்பு உத்தரபோஜனம் செய்து பரிசேஷனத்தை முடிக்கவேண்டும். (இப்படி யாரேனும் செய்கிறார்களா என்னும் கேள்விக்குறியே வேண்டாம். வைதீகம் செய்வோர்கள் சிலரைத் தவிர, வேதத்தில் நாட்டம் கொண்டுள்ள வெகு சிலரைத் தவிர மீதி யாரும் செய்வதில்லை. )
தோர்பிக்கரணம் என்னும் தோப்புக்கரணம் போடுவது முதற்கொண்டு, நமஸ்காரம் செய்வது வரை எல்லாவற்றிற்கும் விஞ்ஞான அடிப்படையும் இருந்தால் நம்மை நாமே "அறிவாளிகள்" என்று மெச்சிக் கொள்கிறோம். "நம்பிக்கை"யின் அடிப்படையில் செய்யப்பட வேண்டியவைகளுக்கும் விஞ்ஞான விளக்கங்கள் தேவைப்படுவதால், நம்பிக்கையே அடிப்பட்டுப்போகிறது.
இரண்டு மூன்று நாட்களாக நடந்த கதையின் சுருக்கம்:
சார்யார் தனக்கென்று வரும் போது நியாய தர்மங்கள் மாறுபட்டு ரத்தபாசத்தால் பேதலிக்கிறார். சாம்பு சாஸ்திரிகளின் வேதபாடசாலை எழுப்பும் பிரயத்தனங்கள் ஜோராய் நடைபெறுகிறது. தர்ம கர்மாக்களுக்கு பணம் உதவி தன் பிராயச்சித்தத்திற்கு வழி தேட வையாபுரி நினைத்தாலும், நல்ல
காரியங்களுக்கு வையாபுரியிடமிருந்து பணம் வாங்க மறுத்துவிடுகிறான் அஷோக். நடேச முதலியாரிடம் உறவை ஒட்ட வைக்க முற்பட்டு, ஜெயந்தி தோற்றுப்போகிறாள். ஆனாலும் அவர் மகள் ஷோபனாவுடன், ஜெயந்தி/கிரி குடும்பத்தினர் உறவை புதுப்பித்துக்கொள்கின்றனர். ரமேஷுக்கு நீரில் கண்டம் என்று கண்டறிந்த உமா மிகவும் கவலைக்கொள்கிறாள். ரமேஷை "ம்ருத்யுஞ்சய மஹாமந்திரம்" ஜபிக்க சொல்கிறான் அஷோக்.
(வளரும்)
:ty:Quote:
Originally Posted by Shakthiprabha
June 10 - 3009
Quote:
Thanks to isaiTamilNEt - Prabhu
[html:192df87d8e] <div align="center"><object width="512" height="322"><param name="movie" value="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.40" /><param name="allowFullScreen" value="true" /><param name="AllowScriptAccess" VALUE="always" /><param name="bgcolor" value="#000000" /><param name="flashVars" value="id=13911789&vid=5274413&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/9361/87206937.jpeg&embed=1" /><embed src="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.40" type="application/x-shockwave-flash" width="512" height="322" allowFullScreen="true" AllowScriptAccess="always" bgcolor="#000000" flashVars="id=13911789&vid=5274413&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/9361/87206937.jpeg&embed=1" ></embed></object>
</div>[/html:192df87d8e]
June 11 -2009
Quote:
Thanks to IsaiTamilNet -- Prabhu
[html:56582b5877] <div align="center"><object width="512" height="322"><param name="movie" value="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.40" /><param name="allowFullScreen" value="true" /><param name="AllowScriptAccess" VALUE="always" /><param name="bgcolor" value="#000000" /><param name="flashVars" value="id=13931920&vid=5281892&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/9378/87275797.jpeg&embed=1" /><embed src="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.40" type="application/x-shockwave-flash" width="512" height="322" allowFullScreen="true" AllowScriptAccess="always" bgcolor="#000000" flashVars="id=13931920&vid=5281892&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/9378/87275797.jpeg&embed=1" ></embed></object>
</div>[/html:56582b5877]
June 12- 2009
Quote:
Thanks to IsaiTamilNet - Prabhu
[html:e9d6686c03] <div align="center"><object width="512" height="322"><param name="movie" value="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.40" /><param name="allowFullScreen" value="true" /><param name="AllowScriptAccess" VALUE="always" /><param name="bgcolor" value="#000000" /><param name="flashVars" value="id=13948000&vid=5288113&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/9394/87333224.jpeg&embed=1" /><embed src="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.40" type="application/x-shockwave-flash" width="512" height="322" allowFullScreen="true" AllowScriptAccess="always" bgcolor="#000000" flashVars="id=13948000&vid=5288113&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/9394/87333224.jpeg&embed=1" ></embed></object>
</div>[/html:e9d6686c03]