Quote:
உண்மை வாழ்வில் நம்மால் அநீதி இழைக்கும் யாரையும் சவுக்கால் விளாச முடியாது ......ஆசை இருந்தால் கூட! அதை நம் சார்பாக மக்கள் திலகம் நிறைவேற்றும் போது மனம் நிறைகிறதே! என்னைப் பொறுத்த வரை மக்கள் திலகத்தின் ஒப்பனை துடிப்பும் துள்ளலுமாக வாழ்நாள் முழுவதும் மனதில்
பசுமரத்தாணியாக இறங்கியது அவரது வாழ்நாள் உச்ச சாதனைப் படமான எங்கவீட்டுப் பிள்ளையின் இந்த முத்திரைப் பாடலிலேதான் ! அந்த கால கட்டத்தில் இந்த சவுக்கடி ZORROவாக தன்னை கற்பனை செய்து பாராதவர் எவருமில்லையே! எம்ஜிஆரிடம் சவுக்கடி வாங்க நம்பியாராக மாறவும் துடித்தவர் நிறைந்ததால்தான் இந்த ஒரே பாடல் அவரை ஆட்சி நாயகனாகவும் காட்சி மாற்றம் காண வைத்தது !!