டியர் முரளி,Quote:
Originally Posted by Murali Srinivas
ராமன் எத்தனை ராமனடி படத்தைப்பற்றிய (இதுவரை பதியப்படாத) விவரங்கள் அருமை. அப்படத்தைப் பார்க்கும்போதெல்லாம் இதுபோல புதிய புதிய கோணங்களில் சிந்தனை பாய்ந்துகொண்டேயிருக்கும்.
இவரைப்போலவே நம்மைக்கவரும் இன்னொருவர், மறைந்த நடிகர் பக்கோடா காதர். பெரும்பாலும் மாதவன் இயக்கிய எல்லாப்படங்களிலும் இருப்பார். 'டேய் சாப்பாட்டு ராமா' என்று வசனம் பேசிவிட்டு, ஷாட் முடிந்ததும் நடிகர்திலகத்திடம் போய் 'அண்ணே உங்களை இந்த மாதிரி கூப்பிட மனசுக்கு கூச்சமா இருக்குண்ணே' என்பாராம். அதற்கு நடிகர்திலகம் 'இதுக்கெல்லாம் நீ கூச்சப்பட்டா உன்னை நடிகனே இல்லேன்னுடுவாங்க. அதுனால சும்மா பேசு' என்பாராம். ('இந்தியன் மூவி நியூஸ்' (சிங்கப்பூர்) மாத இதழில் பக்கோடா காதரின் 'இமயங்களுடன் என் அனுபவங்கள்' கட்டுரை).Quote:
Originally Posted by Murali Srinivas
இந்தக்காட்சியில் அவர் கே.ஆர்.விஜயாவின் குடிசையில் பேசும் காட்சி படத்தில் Highlight-களில் ஒன்று (படமே ஒரு Highlight-தானே என்கிறீர்களா?. அதுவும் சரிதான்). அதிலும் குறிப்பாக "எங்கிருந்தோ வந்த ஒரு புயல் காற்று அந்த மலரை அதளபாதாளத்தில் உள்ள முள் புதரில் போட்டுவிட்டது" என்ற வசனத்தின் போது, அவர் கைகளின் ஆக்ஷன்.Quote:
Originally Posted by Murali Srinivas
அப்படியென்றால், ஒரு காட்சியில் 'நாகரீக' எஸ்.என்.லட்சுமியம்மா, தனது கோல்டுபிரேம் கண்ணாடியைத்தூக்கி விட்டுக்கொண்டு நடிகர்திலகத்தோடு பேசும் காட்சியில், அவருக்குப்பின்னால் ஒரு காலரியில், திரைப்படங்களின் 100-வது நாள் கேடயங்கள் இடம்பெற்றிருக்குமே, அதுவும் கே.ஆர்.விஜயா வீட்டில் உள்ளவைதானா?.Quote:
Originally Posted by Murali Srinivas
"தாத்தாரியர் தந்த புரவியில் அமர்ந்து ஆர்த்தெழுந்த சிவாஜியைக்கண்டு நாட்டுக்குரிய நல்லவனென்றும், போர் பாட்டுக்குரிய மன்னவனென்றும் ஆரத்தி எடுத்த மக்கள் (எனது உயிரினும் மேலான ரசிகர்கள்) எங்கே, ஓரத்தில் நின்று 'வெற்றிவரட்டும், அதன் சாரத்தை மட்டும் அனுபவிப்போம்' என்ற இந்த ஆணவக்காரர்கள் (என்னை வைத்து பலனடைபவர்கள்) எங்கே"Quote:
Originally Posted by Murali Srinivas
"எவனோ வந்தவன் (??) சொன்ன வாய்ப்பறை கேட்டு நொந்துபோக நான் நோயாளி அல்ல. உறையை விட்டு வாளையெடுத்த ஒவ்வொரு கணமும் எங்கே பகைவர், எங்கே பகைவர் என்று வெறிகொண்டு ஓடினேன், பகைவரைத்தேடினேன், வாள்கொண்டு சாடினேன், வெற்றியை நாடினேன். படைகொண்டு பகைவெல்ல மட்டும் சிவாஜி வேண்டுமாம். ஆனால் முடிசூட்டிக்கொள்ள மட்டும் முடியாதாம் (நெத்தியடி)"
"கொட்டிய முரசும் கூவிய படையும் எட்டியவரையில் எழுந்து நடந்து, கோட்டை மதிலைச்சுற்றி வளைத்து 'வாழ்க சிவாஜி வாழ்க' என்று முழங்கியபோது 'ஓகோகோ' என்று எதிரொலித்ததே இந்தக்கோட்டைதான்"
"ஆடுவோர் ஆட்டமும் பாடுவோர் பாட்டுமாய் அந்நியர் (??) களித்திருக்க, யாரது மண்ணிலே யாரது நாடகம் பார்ப்போம் என்று நான் படையெடுக்க, 'என்னடா முடியும் உன்னால்?' என்று என் எதிரிகள் கொக்கரிக்க, 'இதுவும் முடியும் இன்னன்மும் முடியும்' என்று நான் வாளெடுக்க......