TM Release date 22nd or 27th ?
Printable View
TM Release date 22nd or 27th ?
தேனும் பாலும்
இன்றைய தினம் (1971) வெளியான தேனும் பாலும் படத்துக்கு இன்று வயது 40 நிறைந்தது. பம்மலார் சார், ராகவேந்தர் சார் ஆகியோரின் பதிவுகள் அன்றைய நினைவுகளைக் கிளறி விட்டுள்ளன. அப்போது மாணவப்பருவம். எனவே நினைவுகள் பசுமையாக உள்ளன.
நடிகர்திலகத்தின் 150-வது படம் சவாலே சமாளி வெளியாகி 19 நாட்களிலேயே இப்படம் வெளியானது. போதிய விளம்பரம் இல்லை. அதனால் ரசிகர்கள் மத்தியிலும் எதிர்பார்ப்புகள் இல்லை. இருபதுக்கும் குறைவான இவ்வளவு குறுகிய நாட்களில் இப்படம் வெளியானது ரசிகர்களில் எத்தரப்பினருக்கும் பிடிக்கவில்லை. அதனால் இதன் வெளியீட்டை ரசிகர்கள் கொண்டாடும் மனநிலையில் இல்லை. இவ்வாண்டின் முதல் பாதியில் பெற்ற பாடம் போதுமானதாக இருந்தது.
தினத்தந்தியில் இன்றுமுதல் விளம்பரம் பார்த்தபிறகே பெரும்பாலோருக்கு இப்பட வெளியீடு தெரிந்தது. முதல்நாள்வரை 'அவளுக்கென்று ஓர் மனம்' ஓடிக்கொண்டிருந்த மிட்லண்ட் தியேட்டரில் திடீரென்று இப்படத்தின் பானர்கள் முளைத்திருந்தன. மிட்லண்டின் பக்கவாட்டில் ஒரேயொரு கட்-அவுட் வைக்கப்பட்டு மாலையிடப்பட்டிருந்தது. (பக்கவாட்டில் வைத்தால்தான் ஜெனரல் பேட்டர்ஸ் ரோட்டில் திரும்பும்போது பளிச்சென்று தெரியும். அதனால் எல்லாப்படங்களுக்கும் அப்படி வைப்பார்கள்). எப்படியும் இன்று முதல் நாள் மேட்னிக்காட்சி பார்த்து விடுவது என்று எங்கள் நண்பர்களுக்கிடையில் ஒரு முடிவு செய்தோம்.
அப்போது லியோ தியேட்டர் கட்டப்படவில்லையாதலால் இப்போதுள்ள இடத்தில் டிக்கட் கவுண்ட்டர் இல்லை. அது கார்பார்க்கிங் இடமாக இருந்தது. மிட்லண்ட் தியேட்டரை ஒட்டினாற்போலவே இரண்டு வரிசை கவுண்ட்டர்கள் இருக்கும். கடைசி வகுப்பு டிக்கட்டுக்கு ரோட்டுப்பக்கம் திறப்பும், அதற்கடுத்த வகுப்புக்கு காம்பவுண்ட் உள்ளே திறப்பும் இருக்கும். அந்த கூண்டுக்குள் நுழைந்துவிட்டால் எப்படியும் டிக்கட் கிடைத்து விடும் என்பது ஐதீகம். கூண்டுக்குள் மத்தியில் மாட்டிக்கொண்டோம். அப்போதே டிக்கட் கன்பர்ம். காலைக்காட்சி முடிந்து வெளியே வரும் கூட்டத்தை கம்பிக்கிராதிகள் வழியாகப் பார்க்க முடிந்தது. பெரும்பாலோர் முகத்தில் அவ்வளவு சுரத்து இல்லை. அதனால் எங்கள் மனதிலும் பெரிய எதிர்பார்ப்பும் இல்லை. வெயிலிலும் புழுக்கத்திலும் நின்று உள்ளே சென்றதும் குளுகுளுவென்று இருந்தது. (அப்போது மிட்லண்டில் ஏ.சி.அதிகமாகவே போடுவார்கள்).
எதிர்பார்ப்பில்லாமல் பார்த்ததாலோ என்னவோ படம் நன்றாக இருந்தது. ஒவ்வொரு காட்சியும் சுவாரஸ்யமாக இருந்தது. சந்தர்ப்ப வசத்தால் நடிகர்திலகமும் சரோஜாதேவியும் தவறிப்போகும் காட்சி விரசமில்லாமல் எடுக்கப்பட்டிருந்தது. சகஜநிலைக்குத் திரும்பியதும், சரோஜாதேவி கட்டிலின் பக்கவாட்டில் கலைந்த தலையுடன் ஒருக்களித்து சாய்ந்து, விரக்தியுடன் பார்க்கும் காட்சி பரிதாபத்தை ஏற்படுத்தியது. இடைவேளையின்போது பத்மினியும், சரோஜாதேவியும் தோழிகள் என்ற சஸ்பென்ஸ் ஆர்வத்தை மேலும் தூண்டியது.
மெல்லிசை மன்னர் இசையில் ஜானகியும், ஜிக்கியும் பாடிய 'மஞ்சளும் தந்தாள் மலர்கள் தந்தாள்' பாடல், சுசீலாவின் தனிப்பாடலை சாப்பிட்டு ஏப்பம் விட்டது. இதே ஜோடியை பாடவைத்து, மெல்லிசை மன்னரின் சீடர்கள் சங்கர் கணேஷ் அடுத்த ஆண்டில் தந்த 'தலைவாழை இலைபோட்டு' பாடலும் மக்கள் மத்தியில் எடுபட்டது. (எம்.ஜி.ஆரின் ஒரு நல்ல படம் சரியாக ஓடவில்லையே என்று சிவாஜி ரசிகர்களைக்கூட வருத்தப்பட வைத்த படம் 'நான் ஏன் பிறந்தேன்').
ராகவேந்தர் சார் சொன்னதுபோல 'நதியினில் வெள்ளம், கரையினில் நெருப்பு' பாடல் ரசிகர்களால் ஆரவாரத்துடன் ரசிக்கப்பட்டது. படம் பார்த்துவிட்டு வெளியே வந்தபோது மனதுக்கு நிறைவாகவே இருந்தது. இருந்தாலும் படம் பெரிய அளவில் ஓடாது என்பது அப்போதே கணிக்கப்பட்டது. ஏற்கெனவே சவாலே சமாளி, தமிழகமெங்கும் ஆரவாரத்துடன் ஓடிக்கொண்டிருக்கிறது. இதனிடையே இன்னும் 22 நாட்களில் (ஆகஸ்ட் 15) மூன்று தெய்வங்கள் வெளியாக இருக்கிறது. எனவே தேனும் பாலும் சுமார் ஓட்டம்தான் என்று சொல்லப்பட்டது சரியாகவே அமைந்தது.
இப்படத்தில் நடிகர்திலகத்துக்கு டூயட் பாடல் இல்லையென்பது மட்டுமல்ல. வரிசையாக நான்கு படங்களிலும் அவருக்கு ஒரு டூயட் கூடக் கிடையாது.
'சவாலே சமாளி'யில் நாயகனும் நாயகியும் எலியும் பூனையும். அப்புறம் எங்கே டூயட் பாட?. (கனவில் டூயட் பாடுவது போன்ற அபத்தங்களைச் செருகாத மல்லியத்துக்கு கோடி நன்றிகள்)
'தேனும் பாலும்' படத்தில் இரண்டு நாயகிகள் இருந்தும் டூயட் இல்லை. முழுக்க முழுக்க சீரியஸ்.
'மூன்று தெய்வங்கள்' படத்திலோ ஜோடியே கிடையாது. அப்புறம் யாருடன் டூயட் பாடுவது?.
'பாபு' படத்தில் பதினைந்து நிமிட ஜோடியாக மின்னலாக வந்துபோகும் விஜயஸ்ரீ. ரயில்வே ட்ராக்கில் சின்ன காதல் காட்சி. அதனால் அதிலும் டூயட் இல்லை.
வந்தார் சி.வி.ராஜேந்திரன்..... ராகவேந்தர் சாரும், சாரதா மேடமும் சொல்வது போல அவர் சிவாஜி ரசிகர்களின் டார்லிங். நான் முடித்து வைத்த டூயட் காட்சியை நானே தொடர்கிறேன் என்று, ஏப்ரல் 14 அன்று அவர் படத்தில் ஒலித்த 'ஒருதரம் ஒரேதரம்' என்ற கடைசி டூயட்டுக்குப்பின் ஜனவரி 26-ல் ராஜாவில் மீண்டும் தொடர்ந்தார். ஒவ்வொரு சிவாஜி ரசிகரும் சி.வி.ஆரைப்பார்த்துப் பாடினார்கள்..... 'நீ வரவேண்டும் என்று எதிர்பார்த்தேன்'.
ஆகா... இனிய நினைவுகளை அசைபோடுவதுதான் எவ்வளவு சுவையானது.
நடிகர்திலகம் சிவாஜிகணேசனின் பத்தாவது நினைவுநாள் 21 -07 -11 அன்று பெங்களூர் பிரகாஷ் நகரில் உள்ள சிவாஜி அறக்கட்டளை அலுவலகத்தில் நடைபெற்றது.
சிவகணபதி டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் சிவப்ரகாஷ் ஏழை குழந்தைகளுக்கு புத்தகப்பை வழங்கினார் .அறக்கட்டளை நிர்வாகி மா.நடராஜ் மற்றும் பிரமுகர்கள் உடன் இருந்தனர்.
கர்நாடக சிவாஜி பிரபு அறக்கட்டளை சார்பில் சிவாஜி நினைவு நாள் விழா பெங்களூர் காட்டன்பேட்டையில் நடைபெற்றது.அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சிவாஜியின் படத்துக்கு மன்ற நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
சிவாஜிகணேசன் நினைவுநாள் பெங்களூர் பிரகாஷ் நகர் 2 வது மெயின் 2 வது கிராசில் தீனசேவா சங்கத்தின் மாணவர்கள் சங்க செயலாளர் சடையாண்டி தலைமையில் நடைபெற்றது.இதையொட்டி நடிகர்திலகத்தின் படம் மலரால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.காலை 10 மணி அளவில் சிவாஜி ரசிகர்கள் சார்பில் மலரஞ்சலியும் மௌன அஞ்சலியும் நடைபெற்றது.இதில் திரளான ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர் .
பெங்களூர் பாஷியம்நகரில் சிவாஜி நற்பணி மன்றம் சார்பில் நடைபெற்ற நினைவஞ்சலி நிகழ்ச்சியில் ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
பெங்களூர் ஸ்ரீராமபுரம் சன்ரைஸ் சர்க்கிளில் நடைபெற்ற நினைவுநாள் நிகழ்ச்சியில் காந்திநகர் எம்எல்ஏ தினேஷ் குண்டுராவ் கலந்து கொண்டு நடிகர்திலகத்தின் உருவ படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினார்.
அன்புள்ள நண்பரே அழகு கண்களே என்று நம்மவர் தெய்வ மகன் பாடும் பாடல் போல எல்லோரையும் ஒன்று சேர அன்புள்ள நண்பர்களே என்று அழைக விரும்புகிறேன் ஒரு நாள் நம்முடைய திரி பார்கவில்லை என்றல் 10 பக்கம் கூடிவிடுகிறது அதுவும் இப்போது பம்மலர் சார் மற்றும் ராகவேந்தர் சார் கார்த்திக் சார் மற்றும் நம் உறவினர்கள் ellorum அடிக்கும் கொட்டம் (ஜாலி ஆக) அருமையோ அருமையோ (எத்தனை எத்தனை தகவல்கள் ) இன்று ஒரு தகவல் தென்கச்சி கோ சுவாமிநாதன் போல் . தர்மம் எங்கே சினிமா குண்டூசி கட்டுரை மறு பதிப்பு மிக அருமை
சவாலே சமாளி தேனும் பாலும் மற்றும் மூன்று தெய்வங்கள் ஓரே நேரத்தில் ஓடி கொண்டு இருந்தது நினைவுக்கு வந்தது கார்த்திக் அவர்கள் கட்டுரை படித்த போது அப்போது நெல்லையில் மொத்தமே 6 திரை அரங்குகள் தான் புது படங்கள் போடுவார்கள்
(சென்ட்ரல் ரத்னா பார்வதி லக்ஷ்மி பாப்புலர் நியூ ராயல் )
அதில் சென்ட்ரல் தேனும் பாலும் ரத்னா மூன்று தெய்வங்கள் பார்வதி சவாலே சமாளி நம்மவர் படங்கள் லக்ஷ்மியில் ரிக்ஷாக்காரன்
வேறு நடிகர் படங்கள் எதுவேமே இருக்காது
Thanks Pammalar
From Reporteronlive
http://www.youtube.com/user/reporter.../0/G_VSczQaEWA
இறவா சரித்திரம்
இதயதெய்வத்தின் பத்தாவது அவதார நிறைவு நாளன்று [21.7.2011 : வியாழன்] அடியார்களின் அஞ்சலி
http://i1094.photobucket.com/albums/...r/GEDC4025.jpg
http://i1094.photobucket.com/albums/...r/GEDC4029.jpg
http://i1094.photobucket.com/albums/...r/GEDC4033.jpg
http://i1094.photobucket.com/albums/...r/GEDC4028.jpg
பக்தியுடன்,
பம்மல் ஆர். சுவாமிநாதன்.
இரண்டாவது [உத்தம தலைவரே !] மற்றும் நான்காவது [தியாக உள்ளத்துக்கு] சுவரொட்டிகளுக்கு அருகே காணப்படும் கருப்பு நிறப் பொருள் தலைக்கு அணிந்து கொள்ளக் கூடிய ஒரு தொப்பி.
இறவா சரித்திரம்
இதயதெய்வத்தின் பத்தாவது அவதார நிறைவு நாளன்று [21.7.2011 : வியாழன்] அடியார்களின் அஞ்சலி
http://i1094.photobucket.com/albums/...r/GEDC4041.jpg
http://i1094.photobucket.com/albums/...r/GEDC4035.jpg
http://i1094.photobucket.com/albums/...r/GEDC4037.jpg
http://i1094.photobucket.com/albums/.../GEDC4054a.jpg
பக்தியுடன்,
பம்மல் ஆர். சுவாமிநாதன்.