Best Supporting Actor and Actress in NT's movies as far as myself concerned
is none other than S V Ranga Rao and Kannamba. They both rocks along with
NT in numerous films like Manohara,Uthama Puthiran,Iruvar Ullam and Padikkatha Medhai.
Printable View
Best Supporting Actor and Actress in NT's movies as far as myself concerned
is none other than S V Ranga Rao and Kannamba. They both rocks along with
NT in numerous films like Manohara,Uthama Puthiran,Iruvar Ullam and Padikkatha Medhai.
source Nadigar Thilagam Sivaji Ganesan - Filmography, News and Events
From Ragavendra Saar on Muthal thethi
" முதல் தேதி சிறப்புச் செய்திகள்
பல்வேறு பின்னணிப் பாடகர்களோடு, கதாநாயகனின் துயரமான சூழ்நிலையில் அசரீரியாக ஒலிக்கும் பாடல் காட்சியில் இசையரசர் தண்டபாணி தேசிகர் பாடியிருப்பது சிறப்பு. சோகமான படம் போல் தோற்றமளித்தாலும் எதிர்பாராத முடிவு படத்தின் சுவாரஸ்யத்தைக் கூட்டும். ஒரு நடுத்தரக் குடும்பத்தில் சந்திக்கும் இன்னல்களே படத்தின் கதை. அந்தக் காலத்தின் பொருளாதார நிலையினை சித்தரிக்கும் இப்பாடல் கலைவாணரின் மிகப் பிரபலமான பாடல்களில் ஒன்று."
From Kaveri kannan
முதல் தேதி..
அக்காலத்தை விஞ்சிய கதைக்களம்..
வித்தியாசமான முடிவே அதன் பலம்+ பலவீனம்!
அந்த இளம்வயதில் அந்தத் தோற்றத்தில் அசத்திய நாயகருக்கு
என்னை என்றும் ரசிகனாய் மாற்றிய படங்களில் இதுவும் ஒன்று!
From Neyveli Vasu
மனைவி பிள்ளைகளின் துயரைக் கண்டு செய்வதறியாது துன்புறும் ஆவி வடிவிலான தந்தையாக வித்தியாசமான வேடத்தில் நடிகர் திலகம்.
Dear Ragul sir,
***** to your analysis thread by thread of Thalaivar Film.
No words can equate the writing talent of yours ! Gopal Sir's writing is one type of fruit juice and yours is a different type of delicious juice.
Superb sir !
Hyderabad Ravi sir always serves the delicious Hyderabadi Dhum Biriyani !!!
Great Work by all contributors !
Regards
RKS
This Great song was written by " Kalaimamani" K.D. Santhanam. This song will be applicable to all times. It reflects a middle class life in a humorous style. Hats off to the writer. Simple tamil words with great meaning & flow.
http://youtu.be/7iyKReUPxNQ
Mr Ragul,
I salute your work in taking up the reviews of unknown NT's Classics.
Pls continue your good work.
Regards
thanks for the information g. Thookkuthookki paraded the multifacets of acting by NT like the other movie Pudhiya Paravai. The storyline was very interesting and boosted by the fantastic acting and facial expressions by NT, coupled with the song and dance sequences that are indelible in our memory. A truly 'janaranjagamana' movie which in all reruns, like thanga padumai, minted money for the distributors. thanks again for the solace information
டியர் ராகுல் ராம்,
1952-ல் அறிமுகமாகிய நடிகர்திலகம், 1953-ல் திரும்பிப்பார்-ல் கதாநாயக வில்லனாகவும், 1954-ல் மனோகராவில் வீரவசனத்திலும், 1954-ல் பாடல்களே இல்லாமல் வெளிவந்த அந்தநாளில் மீண்டும் negative role லிலும், அதே ஆண்டில் முழு நீள நகைச்சுவைப்படமாக வெளிவந்த கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரியிலும், தூக்குத்தூக்கியிலும், அதன்பிறகு 1955-ல் art film ஆக வெளியான முதல் தேதியிலுமாக - எந்த கதாப் பாத்திரத்தை எடுத்துக்கொண்டாலும், அதில் ஜொலித்து, கலக்குபவர்தான் நடிகர்திலகம்.
தாங்கள் குறிப்பிட்டிருப்பதுபோல முதல் படத்திலேயே சூப்பர் ஸ்டாராக அறிமுகமாகியிருந்தாலும் - இமேஜ் என்பது ரசிகர்கள் அங்கீகரிக்கும் தன்னுடைய நடிப்புதான் என்பதையே இலக்கணமாகக் கொண்டிருந்தார் நடிகர்திலகம்.
தூக்குத் தூக்கி என்னுடைய எனிடைம் ஃபேவ்ரைட் படம்..மனம் சோர்வாக இருக்கும் போது டிவிடி எடுத்து எத்தனை முறை அந்த சுந்தரி செளந்தரி பாட்டு முதல் க்ளைமேகஸ் வரைபார்த்திருப்பேன்.. ஆரமப்க் காட்சிகளும் பிடிக்கும்..இருந்தாலும் அந்த டான்ஸ்.. கவலைப் படாதே டொய்ங்..டொய்ங்க்.. டபக்கென்று தனது தூக்குத் தூக்கிக் கம்பை சட்டாம்பிள்ளையின் மீது அடிப்பது போல் காட்டித் திரும்புவது..குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் பாடலில் தெரியும் முகபாவங்கள்.ம்ம் மறக்கவே முடியாது..
ராகுல் முதல் தேதி பார்த்ததில்லை.பார்த்த உணர்வைத் தந்த்து உங்கள் கட்டுரை என்றால் மிகையில்லை.
அன்புள்ள சிவாஜி செந்தில் - மற்றும் ஒரு உண்மை , நமது
Nadigar Thilagam Sivaji Ganesan - Filmography, News and Events - லிருந்து கண்டு பிடிக்க பட்டது
From ராகவேந்திரா சார் - பதிவு எண் 989
தங்கப் பதுமை பிரதான ஊர்களில் ஓடிய நாட்கள் விவரம் - தகவல் பம்மலார் மற்றும் இதய வேந்தன் வரலாற்றுச்சுவடுகள் 4.
சேலம் - நியூசினிமா - 102 நாட்கள் - ஷிப்டிங்கில் வெள்ளி விழா
மதுரை - லட்சுமி - 94 நாட்கள் - ஷிப்டிங்கில் வெள்ளி விழா
சென்னை - பாரகன், கிரௌன், சயானி - 56 நாட்கள்.
From முரளி - பதிவு எண் 988
ஒன்றை குறிப்பிட மறந்து விட்டீர்களே! தமிழகத்திலேயே அதிக நாட்கள் ஓடியது எங்கள் மதுரையில்தான். அன்றைய நாளில் லக்ஷ்மி என்ற பெயரில் இயங்கி வந்து பின்னாட்களில் அலங்கார் என்று பெயர் மாற்றம் பெற்ற திரையரங்கில்தான் இந்த படம் வெளியாகி வெற்றி வாகை சூடியது. நமது படங்களுக்கே உரிய சாபக்கேடு இந்த படத்திற்கும் இருந்தது. பொங்கலுக்கு ஒரு சில நாட்கள் முன் வெளியாகி தமிழ் புத்தாண்டு வரை 94 நாட்கள் ஓடியது.
மறு வெளியீடுகளில் தாய்மார்கள் கூட்டம் அலைகடலென திரண்டு வந்த காட்சி ஒரு கண் கொள்ளா காட்சி. அந்த நாட்களில் மட்டுமல்ல அண்மையில் அதாவது சென்ற வருடம் தஞ்சை குடந்தை போன்ற நகரங்களை சுற்றியுள்ள டூரிங் மற்றும் c சென்டர்களில் படத்திற்கு வந்த கூட்டத்தையும் கிடைத்த வசூலையும் பார்த்துவிட்டு அரங்க உரிமையாளர்களே திகைத்துப் போனார்களாம். அதை நமது திரியிலும் நாம் பதிவு செய்திருக்கிறோம் எனபது உங்களுக்கு நினைவிருக்கும்.
From கோபால் - பதிவு எண் 990
தகவலுக்கு நன்றி. இந்த படம் நூறு நாள் ஓடியது ரசிகர்களாகிய எங்களுக்கே சரியாக தெரியாது. நடந்தவற்றை பற்றி கூட சரியான விளம்பரம் இல்லை. பம்மலார் வந்து உலகத்தின் கண்களை திறந்து யார் நிஜமான சூப்பர் ஸ்டார் என்று உலகிற்கே உணர்த்தி விட்டார்.
இதன் மூலம் 100 நாட்கள் ஓடவில்லை என்று நாமே ஒரு முடிவுக்கு வந்த படங்கள் 100 நாட்களை கடந்து ஓடியவைகள் மட்டும் அல்ல வசூலிலும் புரட்சியை ஏற்படுத்தின , ஏற்படுத்துகின்றன , நாளையும் ஏற்படுத்தும் படங்கள்
அன்புள்ள முரளி , ராகவேந்திரா சார் ,
சிலர் சரியாக பழைய பதிவுகளை படிக்காததாலேயும் , உடனே தவறான செய்திகளை மறுத்து நாம் நமது உண்மைகளை வெளியிடாமல் இருப்பதாலும் , பல தரமான , வெற்றி அடைந்த NT யின் படங்களை , தோல்வி அடைந்தவைகளோ என்று நாமே சந்தேக படும்படியாக சில சமயம் ஆகிவிடுகின்றது - மேலும் it is time that we update both nadigarthilagam.com and our thread regarding the statistics about Theaters , date of release , collection details , no of days run in 1st release and in subsequent releases , cities including Srilanka , paper evidences etc.,
காலம் காலமாக பொக்கிஷம் போல பாதுக்காக்க வேண்டிய விபரங்கள் இவைகள் - ஓடாத படங்களை ஓடிய படங்கள் என்று கொண்டாடும் கூட்டத்தின் நடுவே , நன்றாக ஓடிய படங்களை நாம் ஏன் ஓட வில்லை என்று சிலர் சொல்ல வாய்ப்பு தர வேண்டும்?
நீங்கள் செய்யும் இந்த சேவை நாளை தலைமுறைக்கும் , பழைய பதிவுகளை படிக்காதவர்களுக்கும் , படித்து மறந்தவர்களுக்கும் பெரிய உதவியாக இருக்கும்
அன்புடன் ரவி
கேட்டவைகளில் பிடித்தது -16
படம் : ஆண்டவன் கட்டளை
பாடல் : அமைதியான நதியினிலே
Theme : Sometimes we fail to understand the feelings of very close people in our life because a book held very near to eyes is difficult to read.
நிறைகுடம் என்றும் ததும்புவதில்லை - நாணலை போல வளைந்து கொடுத்தால் வாழ்க்கை உங்களுக்கு என்றும் இனியதாகவே இருக்கும் என்பதை அழகாக சொல்லும் பாடல் இது
This song is heart touching and melodious.
ஆண்
அமைதியான நதியினிலே ஓடம் - அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
காற்றினிலும் மழையினிலும் , கலங்கவைக்கும் இடியினிலும் கரையினிலே ஒதுங்கி நின்றால் வாழும் - ஒய் ஒய்
(அமைதியான நதியினிலே)
தென்னம் இளங்கீற்றினிலே தாலாட்டும் தென்றல் அது - தென்னை தனை சாய்த்துவிடும் புயலாக வரும் பொழுது
தென்னை தனை சாய்த்துவிடும் புயலாக வரும் பொழுது
(அமைதியான நதியினிலே)
ஆத்தங்கரை மேட்டினிலே ஆடிநிற்கும் நாணல் அது
காற்றடித்தால் சாய்வதில்லை , கனிந்த மனம் வீழ்வதில்லை
(அமைதியான நதியினிலே)
பெண்
நாணலிலே கால் எடுத்து நடந்து வந்த பெண்மை இது , நாணம் என்னும் தென்றலிலே தொட்டில் கட்டும் பெண்மை இது
(அமைதியான நதியினிலே)
அந்தியில் மயங்கி விடும் காலையில் தெளிந்து விடும் -அன்பு மொழி கேட்டு விட்டால் துன்ப நிலை மாறிவிடும்
(அமைதியான நதியினிலே)
http://www.youtube.com/watch?v=lviVO...=share&index=1
கேட்டவைகளில் பிடித்தது -17
பாடல் : ஒரே ஒரு ஊரிலே
Theme : Respect Parents
ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா - ஒரே ஒரு
ராஜாவிற்கு ஒரே ஒரு ராணி - அந்த ஒரே ஒரு ராணி பெற்றால் ஒன்பது பிள்ளை - அந்த ஒன்பதிலே ஒன்று கூட உருப்படி இல்லை - உருப்படி இல்லை
(ஒரே ஒரு ஊரிலே)
படித்திருந்தும் தந்தை தாயை மதிக்க மறந்தான் ஒருவன் படுக்கையிலே முள்ளே வைத்து பார்த்து மகிழ்ந்தான் - பிடித்த முயல் அத்தனைக்கும் முன்று கால் என்றான் - ஒருவன் பெண்டாட்டியின் கால்களுக்கு காவல் இருந்தான்
(ஒரே ஒரு ஊரிலே)
பிள்ளை பெற்ற ராஜா ஒரு நாயை வளர்த்தான் வளர்த்தான் - அதை பிள்ளைக்கு மேல் கண்களை போல் காத்து வளர்த்தான்
உண்மை , அன்பு , தேவை என முன்றும் கொடுத்தார் , அதன் உள்ளத்திலே வீடு கட்டி தானும் இருந்தார் ;தானும் இருந்தார்
(ஒரே ஒரு ஊரிலே)
சொந்தம் என்று வந்ததல்லாம் சொந்தமும் இல்லை - ஒரு துணை இல்லாமல் வந்ததல்லாம் பாரமும் இல்லை
நன்றி உள்ள உயிர்களெல்லாம் பிள்ளை தானடா - தம்பி நன்றி கெட்ட மகனை விட நாய்கள் மேலடா ; நாய்கள் மேலடா
(ஒரே ஒரு ஊரிலே)
http://www.youtube.com/watch?v=Uh398...&feature=share
கேட்டவைகளில் பிடித்தது -18
பாடல் : "நல்லவன் எனக்கு நானே நல்லவன் "
படம் : படித்தால் மட்டும் போதுமா ?
theme :
Man said to God – Give me everything so that I can enjoy Life.
God replied – I have given you Life to enjoy everything.
சந்தோஷமும் , மனநிம்மதியும் நாம் வெளியே தேடி சென்று அடைய கூடியவைகள் அல்ல , நம் எண்ணங்களிலும் , செயல்களிலும் தான் உள்ளது. தொல்லை என்னும் பாம்பை கவ்வி கொல்ல வேண்டும் , சிட்டு போலே வானில் துள்ளி செல்ல வேண்டும் - கீரிபிள்ளை போலே மண்ணில் ஊர்ந்து செல்லவேண்டும் - வாழ்கையை சந்தோஷமாக வைத்துகொள்ளுங்கள் - ஒவ்வொரு வினாடியும் அனுபவியுங்கள் - தூய உள்ளம் வரும் போது , மற்றவர்களுக்கு சேவை செய்யும் எண்ணம் தானாகவே வந்து விடும் ----
இந்த தத்துவத்தை மிக அழகாக சொல்லும் பாடல் இது
நல்லவன் எனக்கு நானே நல்லவன்- சொல்லிலும் செயலிலும் நல்லவன்
நல்லவன் எனக்கு நானே நல்லவன்- சொல்லிலும் செயலிலும் நல்லவன் --
உள்ளம் சொன்னதை மறைப்பவன் இல்லை - ஊருக்கு தீமை செய்பவன் இல்லை - வல்லவன் ஆயினும் நல்லவன் ;வல்லவன் ஆயினும் நல்லவன்
(நல்லவன் எனக்கு நானே நல்லவன்)
பள்ளம் மேடு கண்டால் பார்த்து செல்லும் பிள்ளை - நான் பாசம் என்னும் நூலில் சேர்த்து கட்டிய முல்லை
பள்ளம் மேடு கண்டால் பார்த்து செல்லும் பிள்ளை - நான் பாசம் என்னும் நூலில் சேர்த்து கட்டிய முல்லை
இல்லை இல்லை என்று என்றும் சொன்னவன் இல்லை - என் கண்ணை நானே கண்டேன் - அதில் என்னை நானே கண்டேன்
(நல்லவன் எனக்கு நானே நல்லவன்)
சிட்டு போலே வானில் துள்ளி செல்ல வேண்டும் -
சிட்டு வானில் துள்ளி செல்ல வேண்டும்
கீரிபிள்ளை போலே ஊர்ந்து செல்ல வேண்டும் -மண்ணில் கீரிபிள்ளை போலே ஊர்ந்து செல்ல வேண்டும் ஓய் !
தொல்லை என்ற பாம்பை கவ்வி கொல்ல வேண்டும் -
தொல்லை என்ற பாம்பை கவ்வி கொல்ல வேண்டும் -
தூய உள்ளம் வேண்டும் - என்றும் சேவை செய்ய வேண்டும்
தூய உள்ளம் வேண்டும் - என்றும் சேவை செய்ய வேண்டும்
(நல்லவன் எனக்கு நானே நல்லவன்)
http://youtu.be/0lvwBSwz8eo
ராகுல்
கல்யாணியின் கணவன் போன்று அபூர்வமான படங்களைத் தேடிப் பிடித்து இங்கே விமர்சனம் தங்கள் பாணியில் மிகச் சிறப்பாக எழுதி வருகிறீர்கள். தங்கள் மற்றும் ரவி இருவருடைய பங்களிப்பு இத்திரியில் இளைஞர்களின் பங்களிப்பில் உள்ள வித்தியாசத்தையும் சிறப்பையும் எடுத்துரைக்கிறது. தொடருங்கள். பாராட்டுக்கள்.
முரளி சார்
அந்த நாள் ஞாபகங்கள் குறிப்பாக சிவாஜி ரசிகர்களின் நினைவுகள் இந்நாளைய தலைமுறைக்கு மிகவும் சுவாரஸ்யமான புதிய தகவல்களையும் அளிக்க வல்லவை. கிட்டத் தட்ட தங்கள் அனுபவங்கள் ஒவ்வொரு சிவாஜி ரசிகருக்கும் வாழ்க்கையில் ஏற்பட்டிருக்கும் என்பதால் தங்கள் எழுத்துக்களில் ஒவ்வொரு சிவாஜி ரசிகரும் ஈர்க்கப் படுவதோடு மட்டுமல்லாமல் தானும் அங்கு இருப்பது போல் உணர்வு ஏற்படுவது, தங்களுக்கே உரிய சிறப்பு.
தாங்கள் கல்யாணியின் கணவன் பற்றி எழுதிய போது குறிப்பிட்டது போல் எல்லாம் அவன் செய்தது என்ற அப்போதே சொன்னேனே கேட்டியா படப் பாடல் சிலோன் ரேடியோவில் சூப்பர் ஹிட் பாடலாகும். பொங்கும் பூம்புனல் நிகழ்ச்சியில் கிட்டத் தட்ட தினமும் ஒலிபரப்பப் படும். அருமையான பாடல்.
அப்பாடல் இணைய தளத்தில் கேட்கக் கிடைக்கிறது. அதற்கான இணைப்பு http://www.inbaminge.com/t/a/Appothe...ene%20Kettiya/
//சிட்டுப் போல வானில் துள்ளி செல்ல வேண்டும்
கீரிபிள்ளை போலே ஊர்ந்து செல்ல வேண்டும் -மண்ணில் கீரிபிள்ளை போலே ஊர்ந்து செல்ல வேண்டும் !//
அவன் முரடன்...ஆனால் வெள்ளந்தியானவன்.. காட்டில் மிருகங்களை வேட்டையாடிப் பழகினாலும் - அது ஹாபி - மற்றவ்ருக்குக்கெடுதல் நினைக்காத மனது..அண்ணனுக்கோ அப்படி இல்லை..தம்பிக்காக ப் பெண் பார்க்கப் போன இடத்தில் அந்தப் பெண்் பிடித்து விட்ட பொய்யாய் கடிதம் எழுதி அந்தப் பெண்ணையே மணம் புரிந்துகொள்பவன்..
தம்பியான ந.தி படித்த பெண்ணைக் கட்டிக் கொண்டு அவஸ்தைப் படும் சமயத்தில் சந்தோஷ வாழ்க்கை வாழ்பவன்.ம்ம் அவன் சொல்லும் வரிகள் தொல்லை என்ற பாம்பைக் கவ்விக் கொள்ளஃ வேண்டும்..அதுக்கப்புறம் ஏன் தூய உள்ளம் வேண்டும் என்கிறான்.. ஜஸ்ட் தன்னுடைய சுய நலத்தை மறைப்பதற்காகச் சொல்லும் வரிகள் அவை..
இன்னொஸண்ட் முரடனாக ந.தி.சூப்பர் பர்ஃபார்மன்ஸ்.. மறக்க முடியாத படம்..( நான் கவிஞனுமில்லை மறக்கமுடியாத நடிப்பு).
//Theme : Sometimes we fail to understand the feelings of very close people in our life because a book held very near to eyes is difficult to read.// இந்த வரி பெண்களுக்குத் தான் பொருந்தும் ரவி.. என்ன படித்த விஞ்ஞானியாக இருந்தாலும் பெண் மனசு ஆழமானது..சரீ..ஆண்டவன் கட்டளையைப் போட்டு என்னைக் கிளறி விட்டீர்கள்..
*
அவர் வெளி நாடுகளில் எல்லாம் சென்று மெத்தப் படித்தவர்..கல்லூரியில் டிபார்மெண்டல் ஹெட்.. சுயக்கட்டுப்பாடு, ஒழுக்கம் நேரம் தவறாமை தொழில் பக்தி கொண்ட பேராசிரியர்.. ஆண் பெண் இணைந்து படிப்பது அபூர்வமாக இருந்த அந்தக் கால கட்டத்தில் இருந்த ஒரு் கல்லூரியில் வேலை பார்ப்பவர்..
சீரிய நீரோடை போல இருந்த அவர் வாழ்வில், கறந்த பாலைப் போலத் தூய்மையான உள்ளம் படைத்த அவர் மனதில் - கலக்கம் வருகிறது.காரணம்.. பெண்..
கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்டொடி கண்ணே உள
ஐம்புலன்களும் ஒரு கொடிபோன்ற மெல்லியலாள் ஆன பெண்ணிடம் உள்ளது என்று திருவள்ளுவரும்
மாயத்தைச் செய்திடுவாள் மங்கையும் ஆடவரின்
காயத்தின் உள்ளேதான் காண்
என வேறு பெரியவர்களும் (ம்க்கும்) எழுதியதை அவர் அறிந்தவர் தான். இருந்தும் என்ன.
ஒரு கேள்வியை உன்னிடம் கேட்டுவிட்டேன் நான் கேட்டதை எங்கே போட்டுவிட்டாய்
என்ன தேடுகிறாய் எங்கே ஓடுகிறாய்
உன் தேவைகளை ஏன் மூடுகிறாயு
எனக் கேட்கிறாள் அவர் மனதைக் கலைத்த மாயக்காரி...
ப்ரொபசர் குழம்புகிறார்..கொந்தளிக்கிறார். ஏன் ஏன் ஏன் எனக்கு இப்படி ஆகிறது.கட்டுக் கோப்பு நிறைந்த
வாழ்க்கை அல்லவா நான் வாழ்வது.அவள் யார். என் மாணவி. நான் அவளை வேறு கண் கொண்டு பார்க்கலாகுமா
தவறல்லவா..
அதற்கும் அவளே பதில் தருகிறாள்.
ஒரு மொழியறியாத பறாவைகளும் இந்த வழியறியும் இந்த உறவறியும்
நம் முன்னவர்கள் வெறும் முனிவரில்லை..
அசடே.. நீ என்ன படித்தால் என்ன. இளமைப் பருவத்தில் தான் இணையுடன் இருக்க வேண்டும்.இன்ப வாழ்க்கை வாழ வேண்டும் அதில் ஒன்றும் தவறில்லை.தப்பொன்றுமில்லையடா
இருந்தும் ஏக மனப் போராட்டத்திற்கப்புறம் மனதில் மீண்டும் மீண்டும் அவளது உருவம் மனதில் எழுந்து காதல் உணர்வு ஆக்கிரமிக்க. அவளும் தேடி வருகிறாள்.அவளுக்கும் அதே அவரை மறக்க இயலாத நிலைமை.
காதல் பூத்து மணம்பரப்பி வீசுகின்ற பொழுதில்..உலகம் வேறு விதமாய்ப் பார்க்கிறது.
அவர் இது வரை கடைப்பிடித்த ஒழுக்கம் எல்லாம் ச்சும்மா டுபாக்கூர் போங்கு எனச் சொல்கையில்
காதலரிருவருக்கும் குழப்பம்.காதலைத் துறக்க வேண்டுமா
முகம் உதடு உடல் மனம் இருவருக்கும் துடிக்கிறது. ப்ரொபசர் காதலியின் செந்தாமரை முகத்தைத் தொட்டு பட்டுக் கன்னங்களைப் பிடித்துக் கேட்கிறார் - காதல்னா தானே திட்டறாங்க. நாம கல்யாணம் பண்ணிக்கலாமா.
கபகபவெனப் பசிக்கையில் எதுவும் கிடைக்காமல் தவித்துக் கொண்டிருந்த ஒருவனுக்கு பலவித காய்கறிகள் கூட்டு சாம்பார் பொரியல் அவியல் என நள பாகத்தில் கல்யாண விருந்து கிடைத்தால் எப்படி இருக்குமோ அது போல ஆகிறது அவளுக்கு.
மனம் முகம் எல்லாம் பூரிக்க - தாங்க்ஸ்டா செல்லம் என்று சொல்ல- இப்ப என்ன செய்யலாம் பாடலாம் என
இருவரும் பாடுவது தான். அமைதியான நதியினிலே ஓடம்.(அப்பாடா விஷயத்துக்கு வந்துட்டேன் :) )
//காற்றினிலும் மழையினிலும் , கலங்கவைக்கும் இடியினிலும் கரையினிலே ஒதுங்கி நின்றால் வாழும் - ஹோய் ஹோய்//
அடி பெண்ணே நாம் காதல் என்னும் ஆற்றினிலேயே நீந்திக் கொண்டிருக்க முடியாது. கல்யாணம் என்று கட்டுக்குள் வந்து விட்டால் யாரும் எதுவும் சொல்ல இயலாது.
//நாணலிலே கால் எடுத்து நடந்து வந்த பெண்மை இது , நாணம் என்னும் தென்றலிலே தொட்டில் கட்டும் மென்மை இது
அந்தியில் மயங்கி விடும் காலையில் தெளிந்து விடும் -அன்பு மொழி கேட்டு விட்டால் துன்ப நிலை மாறிவிடும் /
ஏதோ நீங்க சொல்லிட்டீங்க மாமா. எனக்குப் புரியறது.ஒண்ணு தெரிஞ்சுக்கங்க.ஒங்க பேச்சு தான் என்னோட ஜீவன்.உங்க அன்பு தான் என்னோட உசுரு..ம்ம் எனக்கு இப்போ தெளிவாய்டுச்சு மாமா.
**
வெகு அழகிய நடிப்பில் நடிகர் திலகம் இணையாக தேவிகா..ம்ம் எவ்ளோ அழகிய ரொமாண்டிக் ஸாஃங்க். எத்தனை முறை கேட்டிருப்பேன்.எத்தனை முறை பார்த்திருப்பேன்.
**
சிந்தனைத் தூண்டி எழுத வைத்த ரவிக்கு ஒரு ஸ்பெஷல் தாங்க்ஸ்.:)
கேட்டவைகளில் பிடித்தது -19
பாடல் : "ஓஹோ ஹோஹோ மனிதர்களே "
படம் : படித்தால் மட்டும் போதுமா ?
Message : If you correct your mind , the rest of your life will fall into place
The verses of this song contain many profound truths. Great lyrics sung by a great singer for a great actor. Pity that today's songs are mostly junk. இந்த பாடல் வாழ்க்கையை எப்படி வாழவேண்டும் , எப்படி எடுத்துகொள்ள வேண்டும் என்று மிகவும் அழகாக எடுத்து சொல்கின்றது - பல பாடல்களின் மொத்த சாரமும் இந்த பாட்டு ஒன்றிலேயே கிடைத்து விடுகின்றது
ஓஹோ ஹோஹோ மனிதர்களே - ஓடுவது எங்கே சொல்லுங்கள் உண்மையை வாங்கி , பொய்களை வித்து
உருப்பட வாருங்கள்
(ஓஹோ ஹோஹோ)
அழுகிபோனால் காய்கறி கூட சமையலுக்கு ஆகாது
அறிவில்லாதவன் உயிரும் மனமும் ஊருக்கு உதவாது
பிரித்து பார்த்தால் வெங்காயத்தில் ஒன்றும்
இருக்காது - உளறி திரிபவன் வார்த்தையிலே ஒரு உருப்படி தேறாது
காலம் போனால் திருப்புவது இல்லை - காசுகள் உயிரை காப்பதும் இல்லை
(ஓஹோ ஹோஹோ)
அடிப்படை இன்றி கட்டிய மாளிகை காத்துக்கு நிற்காது
அழகாய் இருக்கும் காகித ( காங்கிரை ??)பழங்கள் சந்தையில் விற்காது
விளம்பரத்தாலே உயர்ந்தவன் வாழ்க்கை நிரந்தரமாகாது
விளக்கு இருந்தாலும் எண்ணை இல்லாமல் வெளிச்சம் கிடைக்காது
கண்ணை மூடும் பெருமைகளாலே தம்மை மறந்து வீரர் கள் போலே
(ஓஹோ ஹோஹோ)
மொதிய (??) மரங்கள் பெருத்திருந்தாலும் உத்திரம் ஆகாது
உருவத்தில் சிறியது கடுகானாலும் காரம் போகாது
படிப்பதினாலே தெளிவுள்ள மனது பாழ்பட்டு போகாது
பாதையை விட்டு விலகிய கால்கள் ஊர் போய் சேராது
காத்தை கையில் பிடித்தவன் இல்லை - தூற்றி தூற்றி வாழ்பவன் இல்லை
(ஓஹோ ஹோஹோ)
http://youtu.be/_pyYU7U4kQs
கேட்டவைகளில் பிடித்தது -20
பாடல் : "தாயெனும் செல்வங்கள் "
படம் : மூன்று தெய்வங்கள்
Message : Our lives are not determined by what happens to us ! but by how we react to what happens , not by what life brings to us but by the attitude we bring to life!!
A silent hug means a thousands words to an unhappy heart .
தாயினும் செல்வங்கள் தாலாட்டும் தீபம் - வையிரங்கள் போலே ஒளி விடட்டும்
தாயினும் செல்வங்கள் தாலாட்டும் தீபம் - வையிரங்கள் போலே ஒளி விடட்டும்
சந்தோஷம் கொண்டாடும் உள்ளங்களில்
பொன்னான எண்ணங்கள் உருவாகட்டும்
எல்லோரும் வாழும் நிலை வரட்டும்
நல்லோரை வரவேற்கும் இல்லம் உண்டு
நாள்தோறும் பரிமாற அன்னம் உண்டு - எப்போதும் ஒளி வீசும் கண்கள் உண்டு
இல்லை என்று எண்ணாத உள்ளம் உண்டு
(தாயினும் செல்வங்கள் ----)
பாவங்கள் இ(ல்)லை என்று நீராடுங்கள்
பண்பாடும் புகழ் என்று மலர் சூடுங்கள்
சமுதாயம் வாழ் என்று இசை பாடுங்கள்
எதிர்காலம் உண்டு என்று நடமாடுங்கள்
(தாயினும் செல்வங்கள் ----)
எங்கு எங்கு பிறந்தாலும் ஒன்றாகலாம்
இல்லாத சொந்தங்கள் உருவாகலாம்
( இந்த வரிகள் இந்த அருமையான திரியில் உள்ள எல்லா NT fans க்கும் பொருந்தும் - எங்கோ இருந்தோம் - எப்படியோ வளர்ந்தோம் - ஆனால் இந்த திரியின் மூலம் இல்லாத சகோதர உறவுகளை ஏற்படுத்திகொண்டுள்ளோம் - ஒருவரை
ஒருவர் பார்க்காமலே/சந்திக்காமலேயே அந்த சகோதர உணர்வு நம்மிடையே அதி தீவிரமாக வளர்ந்து உள்ளதே - இது ஒரு ஒப்புக்கொள்ள வேண்டிய உண்மை தானே !! )
தாயாக மகனாக உறவாடலாம் - தந்தைகள் , தங்கைகள் குறையாகலாம்
சந்தோஷம் கொண்டாடும் உள்ளங்களில்
பொன்னான எண்ணங்கள் உருவாகட்டும்
எல்லோரும் வாழும் நிலை வரட்டும்
(தாயினும் செல்வங்கள் ----)
http://youtu.be/0lFpu5z0oPU
http://www.tamilcinetalk.com/shootin...aaligai-movie/
today saw one videio of vasantha maligai shooting spot
just sharing
regards
gk
நல்லோரை வரவேற்கும் இல்லம் உண்டு
நாள்தோறும் பரிமாற அன்னம் உண்டு - எப்போதும் ஒளி வீசும் கண்கள் உண்டு
இல்லை என்று எண்ணாத உள்ளம் உண்டு
"Annai Illam"
gk
One more eye opening for me on my ignorance of data on 100 days movies of NT, Thanks again g. Thanga Padumai.... when I was a school boy in Udamalpet, a small town hardly with three theatres, I have witnessed the thundering response to this movie with a beeline of ladies.. during its rerun for nearly 50 solid days in theatre Bravo! Scene by scene NT was the scene stealer with Padminis's performance on par. I hope Pammalar's update may help us.
rare video
http://www.youtube.com/watch?v=UQWyclTmXzo
கேட்டவைகளில் பிடித்தது -21
பாடல் : கவலைகள் கிடக்கட்டும் மறந்து விடு
படம் : பந்த பாசம்
இன்னுமொரு தன்னபிக்கையை ஊட்டும் பாடல்
Life is a mixture of sunshine and rain ; laughter and pleasure ; teardrops and pain
all days can't be bright - but it's certainly true , there was never a cloud the sun
didn't shine through - just forget your worries and keep going !!
when you smile your day will be brighter and all your burdens would seem so much lighter
அற்புதமான பாடல் - முதலில் சோகமே உருவாக GG - தன்னம்பிக்கையை இழந்து , வெறுப்பின் உச்சியில் இருப்பார் - NT அவருக்கு தெம்பை ஊட்டி உற்சாகபடுத்துவார் - கடைசியில் GG யின் முகத்தில் ஒளி பிறக்கும்
கவலைகள் கிடக்கட்டும் மறந்துவிடு - காரியம் நடக்கட்டும் துணிந்து விடு
எடுத்தவர் யாரோ , மறைத்தவர் யாரோ இருக்குது நீதி - சிரித்துவிடு
கவலைகள் கிடக்கட்டும் மறந்துவிடு - காரியம் நடக்கட்டும் துணிந்து விடு
எடுத்தவர் யாரோ , மறைத்தவர் யாரோ இருக்குது நீதி - சிரித்துவிடு
நீதியும் நெருப்பும் ஒன்றென்பார் , நெருங்கிடும்போதே சுடும் என்பார்
யாரையும் எதுவும் சுடவில்லை -என்னையும்
பழியோ விடவில்லை
சுட்டதும் தங்கத்தின் நிறம் போமோ - தொட்டதின் மலர்களின் மனம் போமோ
கற்றவன் கலங்குதல் அழகாமோ
சட்டமும் கற்பனை கதையாமோ
கவலைகள் கிடக்கட்டும் மறந்துவிடு - காரியம் நடக்கட்டும் துணிந்து விடு
எடுத்தவர் யாரோ , மறைத்தவர் யாரோ இருக்குது நீதி - சிரித்துவிடு
நாவுக்கும் மனதிற்கும் உள்ள வழி -நான்கு விரல் கடை தூரவழி
நாவுக்கும் மனதிற்கும் உள்ள வழி -நான்கு விரல் கடை தூரவழி
சொல்லுக்கும் செயலுக்கும் காத வழி - துக்கமும் சுகமும் வேறு வழி
வந்ததில் எல்லாம் பொருள் உண்டு - வருவதில் வெற்றியும் நமக்குண்டு -நிச்சயம்
இரவுக்கு பகலுண்டு - நீதியின் கண்களில்
ஒளி உண்டு
கவலைகள் கிடக்கட்டும் மறந்துவிடு - காரியம் நடக்கட்டும் துணிந்து விடு
எடுத்தவர் யாரோ , மறைத்தவர் யாரோ இருக்குது நீதி - சிரித்துவிடு
அண்ணனில் ஆயிரம் பேருண்டு -ஆயினும் உன்போல் யாருண்டு ? படிகளில் ஆயிரம் வகை உண்டு - பார்ப்போம் இதற்க்கு ஒரு முடிவுண்டு
வந்ததில் எல்லாம் பொருள் உண்டு - வருவதில் வெற்றியும் நமக்குண்டு -நிச்சயம்
இரவுக்கு பகலுண்டு - நீதியின் கண்களில் ஒளி உண்டு
http://youtu.be/hQjCTpgfaqw
பார்த்ததில் பிடித்தது 28
இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கும் படம் 1957 ல் வெளி வந்து வெற்றிகரமாக 100 நாட்கள் ஓடி ஒரு சாதனையும் மற்றும் சென்னை நகர திரையரங்க வரலாற்றில் முதல் முதலாக 80 அடிக்கும் மேல் உயரமாக கட் அவுட் வைக்கப் பட்ட வணங்காமுடி படத்தை பற்றி தான் .
கதை :
ராஜா ராணி கதை தான் . இளவரசி தேவசுந்தரியும்(சாவித்திரி ) அவளது தோழியும் உலாவப் போகும் போது பாடி கொண்டு வருகிறார்கள் , அப்படி பாடும் பொது இளவரசி ஒரு இனிமையான குரலை கேட்க , அந்த குரல்வளத்தில் கவரப்பட்டு அந்த குரல் வந்த திசை நோக்கி செல்லுகிறார் , அந்த குரலுக்கு சொந்தகாரர் ஒரு சிற்பி சித்திரசேனன். மிக அழகாக சிலைகளை செதுக்குவதில் வல்லவர் . பார்த்த மாத்திரத்தில் காதல் வயபடுகிறார் இளவரசி. யார் என்று தெரியாமல் சகஜமாக பழககிறார் சிற்பி (சிவாஜி ). தன் மகள் சிற்பியுடன் அதிக நேரம் செலவிடுவது அறிந்து அவளை கண்டிக்கிறார் ராஜா ,இளவரசி அந்த சிற்பியின் பாடல் திறைமையை பற்றி கூற , சிற்பி , மற்றும் அவர் நண்பர் பரம்ஜோதி (தங்கவேலு ) இருவரையும் இழுத்து வருகிறார்கள் ராஜாவின் ஆட்கள் . பாட சொல்லி பரம்ஜோதியை கூற , அவர் மறுக்க , ராஜசபையில் பரம்ஜோதியை அடித்து விடுகிறார்கள் , கோபம் கொப்ளிக்க , பாடல் பாடுகிறார் (ஓங்காரமாய் விளங்கும் நாதம்) சிற்பி .
சிற்பியை தன் சபையில் வைத்து கொள்ள அசைபடுக்கிறார் ராஜா . சிற்பி தன் தொழில் சிலை செய்வது என்று மறுத்து விடவே , அவர் கைவனத்தில் தமிழ் தாயின் சிலையை செதுக்க சொல்லி கேட்கிறார் ராஜா , அவரும் செய்து தந்து ராஜாவின் நன்மதிப்பை பெறுகிறார் , நாட்டை கைபற்ற நினைக்கும் தளபதி நரேந்திரன் (mn நம்பியார் ) சூழ்ச்சி செய்ய நினைக்கிறார் . சிற்பியின் தந்தை மன்னனின் மெய்க் காப்பாளன்.அந்தஸ்து வித்தியாசம் காரணமாக இளவரசியின் காதலை அங்கீகரிக்க மறுக்கிறான் மன்ன்ன் . சிற்பியும் காதலை ஏற்க மறுக்கிறார் . இளவரசி தன் காதலரின் தாயின் அன்பை பெற முயற்சி செய்து , அதில் வெற்றி பெறுகிறார்.
அரசியை காதலித்தால் தளபதி , மற்றும் ராஜாவின் உத்தரவினால் சிற்பி கைது செய்ய பட , சிற்பியின் தாய் வந்து மன்றாட , மரண தண்டனை குறைக்க பட்டு , நாடு கடத்த படுகிறார் சிற்பி . நாடு கடத்த பட்ட இடத்தில் ஒரு யானை மலை போட, வாரிசு இல்லாத ராஜ்யத்துக்கு மன்னன் மலைரசன் ஆகிறார் சிற்பி . தன் மகனை காணாத தூக்கத்தில் துவண்டு போகிறார் சிற்பியின் தாய் , தன் காதலனை காணாத இளவரசி தன் காதலனை தேடி அலைகிறார் , இளவரசியை தேடி தளபதி நரேந்திரன் மலைரசன் (சிவாஜி ) நாட்டுக்கு வந்து உதவி கோருகிறார் , சில நாட்கள் முன்பு தான் நகர்வலம் வரும் பொது இளவரசி போல் உள்ள ஒரு பெண்ணை பார்த்த ஞாபகம் வர , தளபதி அந்த பெண்ணை (சாவித்திரி போல் உள்ள பெண் ) இளவரசியின் இடத்துக்கு கொண்டு வருகிறார் , ராஜாவை ஏமாற்றி அவருக்கு மருமகன் ஆகிறார் நரேந்திரன் , இளவரசி தோற்றத்தில் இருக்கும் சாவித்திரி , தன்னை மலைரசன் சித்ரவதை படுத்தியதை பொய் சொல்ல , மலைரசன் கைது செய்ய பட , மங்களம் (சிற்பியின் தாய் ) இறந்து போகிறார் பரம்ஜோதியின் முயற்சியால் உண்மையான இளவரசி தேவசுந்தரி அங்கு வர , ராஜாவுக்கு உண்மை புரிய தளபதி விழ்த்த பட , இளவரசிக்கும் , சிற்பிக்கும் திருமணம் நடக்க
சுபம்
படத்தை பற்றி ஆய்வு :
வழக்கமான ராஜா ராணி படம் தான் இருந்தாலும் விறு விருப்பு , 1952 ல் நம்மவர் வந்த பிறகு தான் social படங்களுக்கு கிராக்கி வந்தது , அது வரையில் வெறும் ராஜா ராணி படங்களும் , புராண படங்களும் மட்டுமே வந்தது , அப்படி மாற்றத்துக்கு விதிட்ட நடிகர் திலகம் மீண்டும் ஒரு மாறுதலை கொண்டு வந்து , ராஜா ராணி படங்களுக்கு மதிப்பு ஏற்படுத்தி கொடுத்த படம் தான் இந்த படம் . இந்த படத்தின் கட் அவுட் யை பார்த்த பல சின்ன பசங்களில் ஒரு 7 வயது சிறுவனின் மகன் தான் நான் . நடிகர் திலகம் கைகள் கட்டுண்டு இருப்பது போன்ற ஸ்டில் இரவில் ஜொலிக்கும் என்பது , அவருடை இடுப்பு அளவிற்கே நீரில் பிரதிபலிப்பு இருக்குமாம் , திரு ராகவேந்திரன் சாரின் பதிவை படித்து விட்டு என் தந்தையிடம் கேட்ட பொது இதை அவர் விவரித்த விதம் கண்ணுக்குள் இருக்கிறது . பாடல்கள் மீண்டும் கேட்க தூண்டும் தேனில் ஊறிய பலாச்சோலை .
ராஜ யோகமே பாரீர் என்ற அறிமுக பாடலை பற்றி எழுதுவதா
ஓங்காரமாய் விளங்கும் நாதம் என்ற எனக்கு பிடித்த பாடலை பற்றி எழுதுவதா
சாவித்ரி ஆடும் குத்து பாடல் பற்றி எழுதுவதா எதை எழுத , எதை விட
(கேட்டதில் பிடித்தது - எழுதும் ரவி எழுதுவார் என்று நினைக்கிறன் )
ராமநாதன் அவர்களின் இசையும் ,தஞ்சை ராமையா தாஸ் வரிகளும் , பாடல் என்ற மகுடத்தில் ஜொலிக்கும் வைர கல்
பாத்திரத்தின் பங்களிப்பு
சிற்பி சித்ரசேனன்/ மலைரசன் :
சிவாஜி சாரின் அழகை பாரட்ட வார்த்தை இல்லை , சில நாட்களுக்கு முன்பு பார்த்த முதல் தேதியில் பார்த்த நபரா இவர் என்று ஒரு நிமிடம் ஆச்சர்ய பட்டு போனேன் , இவருக்கு கூடு விட்டு கூடு பாய தெரியுமோ .
முதலில் அவர் அறிமுகம் ஆகும் மலையே உன் நிலையை நீ பாராய் பாடலில் இருந்து படம் முழுவதும் அவர் ராஜாங்கம் தான் , சாவித்ரியை முதலில் அலட்சியாமாக handle செய்வது , தங்கவேலு ஏன் சிலை வடிக்கிறாய் , வேறு எதாவது செய்வது தானே என்று கேட்கும் பொது , அதற்கு பதில் அளிப்பதில் ஒரு கர்வம் , தான் பழகிய பெண் இளவரசி என்று அறிந்து அவர் மூஞ்சியில் காடும் அதிர்ச்சி , அதை தாங்கி கொள்ள முடியாமல் சாவித்திரி தலை குனியும் காட்சி , தன் நண்பர் அடி வாங்கிய உடன் சினம் கொண்டு ஓங்காரமாய் விளங்கும் நாதம் என்ற பாடலின் மூலம் கோபம் , ஆத்திரம் , புத்திமதி , அனைத்தையும் சொல்லும் பொது , அதற்கு ஏற்ப முகபாவத்தை மாத்துவதும், ராஜா தன்னை ராஜசபையில் வைத்து கொள்ள விரும்பும் பொது , தன் ஒரு சிற்பி என்று மீண்டும் ஒரு முறை கர்வமாக எடுத்து சொல்லி விட்டு வருவதும் , சாவித்திரி தன்னுக்கு பிடித்த பெண் என்பதை அறிந்து கொண்டு அவரிடம் அன்பு செலுத்துவது , தான் சிறைபிடிக்க பட்டு ஊரை விட்டு அனுப்ப பாடும் பொது சிங்கம் போல் பேசுவது (3-4 நிமிடம்) ஓடும் அந்த காட்சி ஒரே டேக் மொழி வீரன் , அந்த மாதிரி வசனத்தை பேசும் பொது ஒரு நடிகருக்கு எந்த அளவுக்கு conviction இருந்தால் இப்படி பேச முடியும் , இந்த காலத்துக்கு ஏற்ப சொல்ல வேண்டும் என்றால் , பில்லாவில் தல அஜித் பேசும் என் வாழ்கையில் என்று பேசும் வசனமும் , கடவுள் தத்துவத்தை தலைவர் ரஜினி பேசும் பொது We feel connected
சிற்பி சித்ரசேனன் பேச்சில் வல்லவர் என்றால் , / மலைரசன் பேச்சு கம்மி வீச்சு அதிகம் , வீச்சு என்றால் வால் வீச்சு ,. நடிகர் திலகத்தின் படங்களில் சண்டை காட்சிகள் அதிகம் இல்லை என்றும் , சண்டை போட முடியுமா என்றும் , அதிலும் வாள்வீச்சு வருமா என்று கிண்டல் செய்த நபர்கள் மூக்கில் விரல் வைக்கும் அளவுக்கு இருந்தது அவர் வால் வீச்சு , முதல் முறையாக தான் ராஜாவாக பதவி எற்றுடன் அவர் வீரத்தின் மீது சந்தேகம் எழுப்பும் நபருடன் அவர் போடும் சண்டை , வாலை இரு கையால் பிடித்து கொண்டு , தன்னுடன் மோதும் நபருக்கு ஏற்ப ஏறி இறங்கி , அதுவும் படியின் மேல் ஏறி இறங்கி , குதித்து ஒரு சின்ன குன்று போல் ஒரு இடத்தில ஒரு கால் வைத்து , இன்னொரு கால் எதிரி பக்கத்தில் வைத்து சண்டை போடும் லாவகம் என்ன வென்று சொல்ல .இப்படத்தின் படப் பிடிப்பின் போது சுமார் 300 அடி உயரத்திலிருந்து விழுந்திருப்பேன், ரசிகர்களின் நல்லாசியால் உயிர் பிழைத்தேன், சிறுகதையாகி இருக்க வேண்டிய நான் தொடர் கதையாகி விட்டேன் என கூறியுள்ளார் நடிகர் திலகம். கடைசி காட்சியில் நம்பியாருடன் அவர் போடும் சண்டை மீண்டும் அவர் வால் வீச்சுயை பறைசாற்றியது . நல்ல வேகம் , நல்ல timing மொத்தத்தில் superb – ஸ்டன்ட் சோமு அவர்களுக்கு சபாஷ்.
மன்னனான உடன் தன் எதிரி நம்பியார் வந்துடன் அவர் தன் முகத்தில் ஒரு அதிர்ச்சி பிரதிபலிக்க , நான் தான் மன்னன் அதற்கு என்ன என்பதை போல் ஒரு பாவனை செய்வார் பாருங்கள் MASTER STROKE . சாவித்திரி உடனான காதல் காட்சியில் தான் என்ன ஒரு கவித்துவம் , அதே சமயம் ஒரு பெண்ணை எப்படி handle செய்ய வேண்டும் என்பதற்கு ஒரு இலக்கணம்
என்னக்கு மலைரசன் தான் மிகவும் பிடித்தது , சிற்பியின் நெற்றியில் இருக்கும் போட்டு – டாப்
சாவித்ரி :
நடிகையர் திலகம் பெயருக்கு ஏற்ப தேர்ந்த நடிப்பு , மிடுக்கான இளவரசி பாத்திரத்திலும் , தன் விருப்பதை அழகாக தன் தந்தைடம் சொல்லும் விதமும் , தன் வருங்கால மாமியாரின் அன்பை பெற அவர் பாடும் நீ என்னைப் போல் பெண்ணல்லவோ பாடலில் அவர் காட்டும் முகபாவம் எத்தனை கனிவு ,ஒரு இளவரசி இத்தனை அன்பாக இருக்க முடியுமா என்று ஆச்சர்ய பட வைக்கிறார் , தன் காதலனை கை பிடிக்க தன் தந்தையும் சமாளித்து , சதிசெய்யும் தளபதயின் சூழ்ச்சியில் இருந்து தப்பித்து , முதலில் தன் காதலை ஏற்க மறுக்கும் தன் மனம் கவர்ந்த நபரின் அன்பையும் பெறுவதும் , கடைசியில் ஒரு வழியாக வெற்றி பெறுவதும் ஒரு பாத்திரம் என்றால் இதற்கு total contrast ஆக totally freak out tribal girl பாத்திரம் வேறு பரிணாமம் அதில் ஒரு பாடலில் நன்றாக ஆடி இருப்பார்
தங்கவேலு :
ஒரே வார்த்தையில் தங்கம் வேலு , இவரின் நகைச்சுவை timing பற்றி சொல்லவேண்டியது இல்லை , ஆனால் இவர் ஒரு அரை வாங்கிய உடன் அவர் காட்டும் reaction விழி ஓரத்தில் கண்ணீர் , தன்னை சபையில் அடித்து விட்டர்களே என்று அவமான பட்டு நிற்பதும் , பின் கை கட்டி நிற்பதும் , தன் நண்பரின் தாயை தன் நண்பனின் absence ல் பார்த்து கொண்டு , மொத்தத்தில் கேரக்டர் ரோளில் கலக்கி இருப்பார் .
M N நம்பியார் :
பல ஆண்டு காலமாக வில்லன் , இதிலும் ஒரு cunning தளபதி பாத்திரத்தில் , தன் நினைத்ததை முடிக்க எதையும் செய்ய நினைக்கும் , செய்யும் பாத்திரம் - as usual சூப்பர். இதில் அவர் hair style தான் என்னை மிகவும் கவர்ந்தது
ராஜா சுலோச்சனா :
எப்போதும் வில்லன் பாத்திரம் எதில் ராஜா நர்த்தகி , இதில் positive கதாபாத்திரம் , இவர் இறக்கும் பொது நம்மளும் இவருக்கு இரக்கப்படும் படி நன்றாக நடித்து இருக்கார்
கண்ணாம்பா :
பழைய MGR ,சிவாஜி படங்களில் நிரந்திர அம்மா , கொஞ்சம் கத்துகிறார் , நிறைய அழுகிறார்
நாகையா , MK ராதா :
இவர்களுக்கு இன்னும் space கொடுத்து இருக்கலாம்
கதை வசனம் – ஏ.கே. வேலன்
டைரக்ஷன் – பி.புல்லையா
நடிகர் திலகத்தின் சுய விமர்சனம் :
இப்படத்தின் படப் பிடிப்பின் போது சுமார் 300 அடி உயரத்திலிருந்து விழுந்திருப்பேன், ரசிகர்களின் நல்லாசியால் உயிர் பிழைத்தேன், சிறுகதையாகி இருக்க வேண்டிய நான் தொடர் கதையாகி விட்டேன்
இந்த வணங்காமுடி ரசிகர்களின் அன்புக்கு மட்டும் தலை வணங்கி ரசிகர்களை வணங்காமுடி ஆகியவர் .
BLAST FROM PAST
Sivaji Ganesan, K. Savithri, Pasupuleti Kannamba, M. K. Radha, Rajasulochana, M. N. Nambiar, Chittoor V. Nagaiah, K. A. Thangavelu, M. Saroja, M. R. Santhanam, Nott Annaji Rao, ‘Gemini' Balu and Helen (dance)
Savithri was a talented star in South Indian Cinema. She excelled in playing a variety of roles, each with its unique characteristics and sentiment. Hailing from Andhra Pradesh, she began her career in a modest manner as an extra — one in a group of girls in a car sequence in the successful Telugu film Samsaram directed by the iconic L. V. Prasad. Later, she did a short dance sequence in Pathala Bhairavi. From such modest beginnings, she reached the zenith of success, playing lead roles in Tamil, Telugu and Hindi movies, many of which were big hits. She also did a few Malayalam movies. She married the top Tamil film star ‘Gemini' Ganesan, with whom she acted in ‘Manampol Mangalyam' (1953), the first movie where ‘Gemini' played the hero. Savithri was compared to the top star of Indian Cinema, Hindi film actor Meenakumari. One of her successful movies in Tamil was Vanangamudi. Written by the Tamil scholar-turned-filmmaker, producer and studio-owner, A. K.Velan, it was directed by veteran multilingual filmmaker P. Pullaiah. Hailing from Nellore, he entered filmdom after graduation and worked in Kolhapur, enjoying the rare privilege of being associated with the founding father of Indian Cinema, Dadasaheb Phalke. Pullaiah, a tough no-nonsense guy, directed films in Telugu and Tamil with many hits such as Manam Pol Mangalyam, and Vanangamudi was one such box office success of his.
The film revolves around a king (Radha) and a talented sculptor (Sivaji Ganesan). Chitrashilpi, the sculptor, could make stones sing and dance with his artistic touch. Son of the king's bodyguard (Nagaiah), whose kind-hearted wife is played by Kannamba, he meets the princess (Savithri) in a forest and falls in love with her. However, each is not aware of the other's identity.
Enters the villain (Nambiar) who has an eye on the throne and the princess. He has a mistress — a court dancer with a heart of gold (Rajasulochana). He employees all the tricks in his bag to get his desire fulfilled. He throws the sculptor in prison and introduces a princess-look-alike, a tribal girl (Savithri, again) and pulls the wool over the eyes of the king and marries the fake princess!
After many events, somewhat predictable, the hero exposes the villain and happiness is restored inthe royal family.
The film had melodious music composed by G. Ramanthan, with lyrics by Thanjai Ramaiah Das. One of the songs in the Carnatic raga ‘Thodi', ‘Ennai Pol Penn', rendered by P. Susheela with much feeling attracted attention. Even Carnatic musicians considered it the best film song composition in Thodi. The popular comedy pair, Thangavelu-Saroja, provided the laughs and there was a sizzling dance number by Helen (choreographer K. N. Dhandayuthapani Pillai).
The film was produced by Saravanabhava–Unity Pictures, which had some links to the famous Jupiter Pictures. One of the producers, A.K. Balasubramaniam, was a son-in-law of the famed ‘Jupiter Somu', while the other was C. Sundaram who rose from the lowest rungs to achieve success, before sliding down the grease pole.
Well-known singers M. L. Vasanthakumari. P. Susheela, Jikki, T. M. Soundararajan, Sirgazhi Govindarajan, A. M. Raja, T. V. Ratnam and S. C. Krishnan lent their voices to the songs. The film had pleasing photography by P. Ramasami who had done good work in Coimbatore Central Studios. This film was shot at Neptune Studios which was taken on lease by Jupiter Pictures after they shifted to Madras. This studio no longer exists and the historic site now owned by the MGR family houses the MGR College for Women.
Remembered for the excellent performances by Sivaji Ganesan, Savithri and Nambiar and the melodious music.
கேட்டவைகளில் பிடித்தது -20
பாடல் : "தாயெனும் செல்வங்கள் "
படம் : மூன்று தெய்வங்கள்
my favourite thanks sir, your description very nice
thanks for re posting articles about Mudhal theti
Thanks for your valuable , kind words of appreciation
Ragavendran sir, Chinnakannan sir, KC Chandrasekaran sir and Ravi kiran surya sir
these words mean a lot to me
dear ragul. now Bravo is extinct. But my memories exist. we share when we meet on 2nd at royal.
சிவாஜியுடன் 30 படங்களில் நடித்தார், ஒய்.ஜி.மகேந்திரன்
http://mmimages.maalaimalar.com/Arti...4_S_secvpf.gif
நடிகர் சிவாஜிகணேசனுடன் "கவுரவம்'', "பரீட்சைக்கு நேரமாச்சு'' உள்பட 30 படங்களில் ஒய்.ஜி.மகேந்திரன் நடித்துள்ளார்.
சிவாஜிகணேசனும், மகேந்திரனின் தந்தை ஒய்.ஜி.பார்த்தசாரதியும் நெருங்கிய நண்பர்கள். ஒய்.ஜி.பார்த்தசாரதி நடத்தி வந்த "பெற்றால்தான் பிள்ளையா'' நாடகம், 1961-ல் "பார் மகளே பார்'' என்ற பெயரில் படமாக்கப்பட்டபோது, அதில் சிவாஜியுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று மகேந்திரன் எதிர்பார்த்தார். ஆனால், அப்போது நிறைவேறாமல் போன ஆசை 1971-ல் நிறைவேறியது. "கண்ணன் வந்தான்'' என்ற நாடகம், "கவுரவம்'' என்ற பெயரில் படமாகியது. சிவாஜி அற்புதமாக நடித்த படங்களில் ஒன்று "கவுரவம்.'' அதில் நடிக்கும் வாய்ப்பு, மகேந்திரனுக்கு கிடைத்தது.
"கவுரவம்'' மகத்தான வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து, சிவாஜியுடன் தொடர்ந்து படங்களில் நடித்தார்.
ஒய்.ஜி.பார்த்தசாரதியின் நாடகங்கள் படமாகும்போது, ஒய்.ஜி.பி. நடித்த வேடத்தில் சிவாஜி நடிப்பது வழக்கம். அநேகமாக மகேந்திரனும் இடம் பெறுவார்.
மகேந்திரனின் நூறாவது படம் "உருவங்கள் மாறலாம். இதில் சிவாஜியும், ஒய்.ஜி.மகேந்திரனும் நடித்தனர். இது வெற்றிப்படம்.
"பரீட்சைக்கு நேரமாச்சு'' என்ற மகேந்திரனின் நாடகத்தைப் பார்த்த பட அதிபரும், டைரக்டருமான முக்தா சீனிவாசன், "இதை சினிமாவாக எடுக்கலாம். சிவாஜியும் நடிக்க வேண்டும். அவரிடம் கதையை சொல்லி ஒப்புதல் வாங்கி விடுங்கள்'' என்றார்.
மகேந்திரனும், சிவாஜியை சந்தித்து கதையைச் சொன்னார். கதை, அதில் தான் நடிக்க வேண்டிய வேடம் அனைத்தையும் கேட்டுக்கொண்ட சிவாஜி, "நல்ல கதை. நடிக்கிறேன்'' என்று ஒப்புக்கொண்டார்.
இந்தக் கதையில் "வரதுக்குட்டி'' (வரதன்) என்ற இளைஞனின் கதாபாத்திரம் முக்கியமானது. நாடகத்தில், அப்பாத்திரத்தில் நடித்தவர் மகேந்திரன். சினிமாவிலும் அந்த வேடம் தனக்குத்தான் வரும் என்பது மகேந்திரனுக்குத் தெரியும் என்றாலும், அது சிவாஜி வாயிலிருந்து வரவேண்டும் என்று கருதினார்.
நடிப்பதாக சிவாஜி ஒப்புதல் கொடுத்த பிறகும், அங்கேயே நகராமல் நின்றார். "ஏன் இன்னும் நிற்கிறே! நீதான் வரதுக்குட்டி!'' என்று சிரித்துக்கொண்டே சொன்னார், சிவாஜி.
மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்தார், மகேந்திரன்.
இந்தப் படத்தில், மகேந்திரனின் நடிப்பு வெறும் நகைச்சுவையுடன் நில்லாமல், மனதைத் தொடுவதாக அமைந்தது.
சிவாஜியுடன் 30 படங்களில் நடித்த அனுபவம் பற்றி மகேந்திரன் கூறியதாவது:-
"ஆரம்பத்தில் நான் எம்.ஜி.ஆர். ரசிகன். "பாசமலர்'' படத்தைப்பார்த்தபின், சிவாஜியின் பக்தன் ஆனேன்.
என் தந்தைக்கும், சிவாஜிக்கும் நெருங்கிய நட்புறவு உண்டு. எனவே, சிவாஜியை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவர் என்னை தன்னுடைய மூத்த மகனாகவே கருதி, பாசத்தைப் பொழிந்தார்.
மலேசியாவில் நடைபெற்ற விழா ஒன்றில், சிவாஜி பேசுகையில், "நல்ல காமெடி என்றால், என் பையன் மகேந்திரனின் நடிப்பைக் கூறலாம்'' என்று குறிப்பிட்டதை, என் வாழ்நாளில் எனக்குக் கிடைத்த பெரிய விருதாகக் கருதுகிறேன்.
சிவாஜியின் நேரந்தவறாமைக்கும், கடமை உணர்வுக்கும் பல உதாரணங்கள் கூறலாம்.
5 மணிக்கு நானும், டைப்பிஸ்ட் கோபுவும் சிவாஜி வீட்டுக்குச் சென்றோம். சிவாஜி எங்களை வரவேற்று, காபி கொடுக்கும்படி கமலா அம்மாவிடம் கூறினார்.
பேச்சுவாக்கில், "இன்று மாலை 6-30 மணிக்கு நாடகம் இருக்கிறது'' என்று நான் கூறிவிட்டேன். சிவாஜிக்கு வந்ததே கோபம்! எங்கள் இருவருடைய சட்டையைப் பிடித்து தரதர என்று இழுத்து வந்து, வாசலில் தள்ளினார்.
"கமலா! டிராமாவை வைத்துக்கொண்டு, என்னைப் பார்க்க வந்திருக்கானுக! காபி கொடுக்காதே!'' என்று சத்தம் போட்டார்.
என்னைப் பார்த்து, "உங்கப்பா போனப்பறம் நாடகத்தின் மீது அக்கறை போயிடுச்சா! மேலே இருந்து அவருடைய ஆவி சபிக்கும். போங்கடா!'' என்று, கழுத்தைப் பிடித்து தள்ளாத குறையாக எங்களை விரட்டி அடித்தார்.
நாடகம் என்றால், அவருக்கு அப்படி ஒரு பக்தி.
சிவாஜி அதிகம் நடிக்காமல் இருந்த அவருடைய இறுதிக் காலத்தில், மாதம் ஒரு முறை அவரை சந்தித்துப் பேசுவதை வழக்கமாக கொண்டிருந்தேன். ஒருமுறை அவரைப் பார்க்கப் போகவில்லை. எனக்கு சிவாஜியின் வீட்டிலிருந்து போன் வந்தது. "ஏன் வரவில்லை?'' என்று சிவாஜி கேட்பதாகச் சொன்னார்கள்.
அந்த அளவுக்கு சிவாஜி என்னிடம் அன்பு காட்டினார்.
என்னுடைய நாடக வாழ்க்கையின் பொன் விழா (50-ம் ஆண்டு நிறைவு) 2002-ம் ஆண்டில் நடந்தது. அப்போது பிரபு வந்து, சிவாஜியின் உருவம் பொறித்த தங்கப் பதக்கத்துடன் கூடிய தங்கச் சங்கிலியை எனக்கு அணிவித்தார். "கமலா அம்மாள் தன் மூத்த மகனுக்கு அளித்த பரிசு'' என்று அப்போது அவர் குறிப்பிட்டார். அப்படியே நெகிழ்ந்து போய்விட்டேன்.
சிவாஜி மறைந்து விட்டார் என்பதை நம்பவே முடியவில்லை. என்றென்றும் அவர் நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்ற உணர்வை அவர் படங்கள் ஏற்படுத்துகின்றன.''
இவ்வாறு மகேந்திரன் கூறினார்.
.malaimalar
ராகுல்ராம்..வணங்காமுடியும் புகையாகத் தான் என் நினைவில்..மறுபடி பார்க்கவேண்டும்..நைஸ் .. அண்ட் தாங்க்ஸ்..
தம்பி ராகுல்ராம், வித்தியாசமான தளங்களை கொண்ட படங்களை தேர்வு செய்து ஆய்வு அறிக்கை எழுதுவது நன்றாக இருக்கிறது. பல சமயங்களில் படித்துவிட்டு பாராட்டி எழுதவேண்டும் என நினைத்துக்கொண்டே எழுதமுடியாமல் போய்விடுகிறது. மன்னிக்க. கோபால் போன்றவர்களின் மனம் கவராத சிரஞ்சீவீ படத்தைப்பற்றி எழுதி அது ஏன் ரசிக்கப்படவேண்டும் என்று பாசிட்டிவ்-ஆக கூறியது சிறப்பாக இருந்தது. முதல்தேதி படம் நடிகர் திலகத்தின் மிக வித்தியாசமான பல படங்களில் ஒன்று. அற்புதமாக அலசியிருந்தாய். நடிகர் திலகம் ஆவியாக/பேயாக கூட நடித்திருக்கிறார் என்று பெருமையாக சொல்லிக்கொள்ள வேண்டிய படம்.
இப்போது வணங்காமுடி. ராஜாராணி கதை. பல சீனியர்கள் போல நீயும் பங்கெடுத்து நீயும் இப்போது சீனியராகிவிட்டாய். வாழ்த்துகள். பிறகு நிறைய சொல்கிறேன்