-
“குரங்குவரும் தோட்டமடி பழத்தோட்டம்
வண்டுவரும் தோட்டமடி மலர்த்தோட்டம்
மனிதனுக்குத் தோட்டமடி மனத்தோட்டம் – அந்த
மனிதன் விளையாடுமிடம் பணத்தோட்டம்!”
பாடலின் தொடக்கமாம் தொகையறாவிலேயே தத்துவங்கள், முத்திரைகள் பதித்து முழங்கி வருவதைக் கேட்டோமா?
மனத்தோட்ட மனிதன் விளையாடும் இடமோ பணத்தோட்டம்! பணத்தோட்டம்!! பணத்தோட்டம்!!!
இதனாலன்றோ வான்மறை ஈந்த வள்ளுவரும், ‘பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை!’ என்று உறுதிபடக் கூறினார்.
இன்னும் இந்தப் பணத்தோட்டத்தைத் தேடி மனிதன் போடும் ஆட்டங்கள்தான் எவ்வளவு?
அவற்றை, கவிஞர் கவிதைமொழியில், எம்.ஜி.ஆர் எடுத்துச் சொல்ல… நம் உள்ளங்கள் உணரட்டுமே!
“மனத்தோட்டம் போடுமென்று
மாயவனார் கொடுத்த உடல்
பணத்தோட்டம் போட்டதேயடி – முத்தம்மா
பணத்தோட்டம் போட்டதேயடி!
சங்கத்தால் பிறந்த இனம்
சிங்கம்போல வளர்ந்த குணம்
தங்கத்தால் அழிந்ததேயடி – முத்தம்மா
தங்கத்தால் அழிந்ததேயடி!”
சித்தர்களின் சீதனம்போல், சிறுகூடற்பட்டிக் கவிஞர், கலியுகப் பாரிவள்ளல் வழங்கிடத் தந்த வரலாற்றுப் பாடல் வரிகளை நாம் மறக்க முடியுமா?
மனமது செம்மையாக, மாயவனாம் இறைவன் ஈந்த உடல் பணத்தோட்டம் போட்டதாம்! அதனால்…….
சங்கமத்தில் பிறந்த இனம்: மூன்று தமிழ்ச்சங்கங்கள் இருந்த பூமியில் பிறந்த இனம் தங்கத்தால் அழிந்ததாம்.
ஆமாம்! ஆசைகளில் பொன்னாசையும் ஒன்றல்லவா!
இது இருந்தால்தானே மற்ற மண்ணாசை, பெண்ணாசையை இந்த பெரும்பூமியில் மனிதன் பெற்று நிறைவுகாண முயற்சிக்க முடியும்!
இந்த ஆசைகள் போகுமா? மாறுமா? இவற்றுக்கான விடைகள்?!
பாடலில் மீதியைப் பார்த்தபின் காண்போமே!
“ஊசிமுனைக் காதுக்குள்ளே
ஒட்டகங்கள் போனாலும்
காசாசை போகாதடி – என் முத்தம்மா
கட்டையிலும் வேகாதடி!
எண்ணெயுடன் தண்ணீரை
எப்படித்தான் கலந்தாலும்
இரண்டும் ஒன்று சேராதடி – முத்தம்மா
இயற்கை குணம் மாறாதடி!”
மீதியைப் பார்த்தோம்!
ஊசிமுனையோ மிகவும் சிறியது… அதற்குள்ளே முதுகு நீண்ட ஒட்டகங்களே நுழைந்து போனாலும் போகலாமாம்! ஆனால்….!
மனிதனுக்குள்ள காசாசை மட்டும் போகாதாம்! அவன் உடல் கட்டையில் வெந்தாலும், அவனது காசாசை மட்டும் வேகாதாம்!… என்னே கொடுமை!
எண்ணெயுடன் தண்ணீரை எப்படித்தான் கலந்து வைத்தாலும், இரண்டும் எப்போதும் ஒன்று சேராதாம். அதுபோல் பணத்தோட்டம் போடும் மனிதனின் மனத்தோட்டத்தின் இயற்கை குணமும் எப்படி மாற்றினாலும் மாறாதாம்.
நம் உள்ளங்கள் உணர்ந்து கொண்ட விடைகளையும், பாடல் உணர்ந்தும் உயர்ந்த தத்துவங்களையும் மறக்க முயன்றாலும் முடியுமா?
-
-
-
மக்கள் திலகத்தின் பறக்கும் பாவை தற்போது சன் லைப் - தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது .
மக்கள் திலகத்துடன் சரோஜாதேவி - காஞ்சனா - மாதவி - மனோரமா -ஜி , சகுந்தாலா - ராஜ சுலோச்சனா
சந்திரபாபு - தங்கவேலு - நம்பியார் - அசோகன் - மனோகர் - ஒ.ஏ.கே. தேவர் - ராமதாஸ் - நாகையாஎன்று ஏராளமான நட்சத்திரங்களுடன் இனிமையான பாடல்கள் - அருமையான சண்டை காட்சிகள் - மக்கள் திலகத்தின் வீர சாகசங்கள் நிறைந்த படத்தை பார்க்கும்போது புத்தம் புதிய படம் பார்ப்பது போல் உணர்வு உண்டாகியது .
மெல்லிசை மன்னரின் புதுமையான ரீ ரெகார்டிங் மற்றும் சிறப்பான ஒளிப்பதிவு . மக்கள் திலகம் படம் ஆரம்பம்முதல் இளமையான தோற்றத்தில் , பல வண்ண உடைகளில் தோன்றி சிறப்பாக நடித்திருப்பது ரசிகர்களுக்கு விருந்து .
-
-
-
-
-
-
-
-
-
-
http://www.youtube.com/watch?v=xjxd9x3AObk
http://www.youtube.com/watch?v=zoJh6Yz1_lE
தமிழர் ஆட்டு மந்தைகள் அல்ல என்பதை நிருபித்த நண்பருக்கு நன்றி. தமிழர்கள் கேரளா, கர்நாடகா, மலேசியா, ஜப்பான் என்று எங்கு போனாலும் உண்மைக்கு மட்டுமே ஆதரவு தருவார்கள் [எங்கே நன்மை இருந்த போதும் ஏற்றுக் கொள்ளும் உலகம்].
-
-
-
-
-
-
10/06/2014 முதல் சென்னை பாட்சாவில் (மினர்வா) மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் "நேற்று இன்று நாளை " தினசரி 3 காட்சிகள்
3 நாட்களுக்கு மட்டும் திரையிடப்பட்டது.
http://i59.tinypic.com/walx1y.jpg
-
-
சன்லைப் தொலைகாட்சியில் நேற்றைய எனக்கு பிடித்த பாடல் நிகழ்ச்சியில் நடனக்கலை நிபுணர் கலா மாஸ்டர் அவர்கள், மக்கள் திலகம்
எம்.ஜி.ஆர். "ஆயிரத்தில் ஒருவன் " திரைபடத்தின் , "அதோ அந்த பறவை "
பாடலை ஒளிபரப்பும்போது பின்வருமாறு கூறினார்.
தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாத அந்த காலத்தில் எடுக்கப்பட்ட என்னால்
மறக்க முடியாத பாடல். அருமையான ஒளிப்பதிவு/ஒலிப்பதிவு/இசைஅமைப்பு . அந்த பாடலின் கோரியா கிராபாரை நிச்சயம் பாராட்டியே
தீர வேண்டும். பொது உடைமை கருத்துக்கள், சமுதாய சீர்திருத்த
கருத்துக்கள் நிறைந்த வைர வரிகள் .மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களும் , இன்றைய முதல்வர் ஜெ. ஜெயலலிதா அவர்களும் பாடலில்
ஒன்றி போனார்கள்.
நன்றி.:கலா மாஸ்டர் அவர்கள்./சன்லைப் தொலைக்காட்சி.
ஆர். லோகநாதன்.
-
-
-
-
-
Quote:
Originally Posted by
Yukesh Babu
தமிழர்கள் நன்றி கெட்டவர்கள் அல்ல என்பதற்கு மேலும் ஒரு சாட்சி.
-
-
-
-
-
10.08.2012 evp screened in madurai central
29.01.2012 in madurai palani murugan
-
Fans can continue the celebrations as there is news of MGR’s Enga Veetu Pillai coming up digitally enhanced. The film is considered a classic in it’s era, with MGR playing a double role. Released in 1965 it collected $719,000. The film is a remake of Telugu movie Ramudu Bheemudu that had N. T. Rama Rao in lead. It proved to be a blockbuster commercial hit and MGR’s fan base increased by leaps and bounds after the release. He plays Ramu a cowardly man and another character named Ilango - a jobless youth, for the double act. Enga Veetu Pillai will be retouched with Dolby Digital Sound for the audio and new digital imaging technology will be employed for the video. Special effort is being put in to make the print look original and maintain it’s appealing quality.
COURTESY KOLLY TALK
-
THANKS SAILESH SIR FOR SHARING AAYIRATHIL ORUVAN RE-RELEASED IN DUBAI
http://www.youtube.com/watch?v=oKNtZIUd3zE
THANKS LOT SAILESH SIR
-
மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் மக்கள் திலகத்தின் கடைசி படமாகும் (136வது படம்)..இந்த படம் திரைக்கு வரும் முன்பே மக்கள் திலகம் தமிழ்க முதலவராக தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார்..எனினும் இப்படத்தில் சில காட்சிகள் எடுக்கப்படாமல் மீதம் இருந்தன, முதலமைச்சராக பதவி ஏற்ற பின் தான் நடிக்கப்போவதில்லை என்பதனால், அப்போதைய ஆளுனர் திரு.பிரபு தாஸ் பட்வாரி அவர்களிடம் அனுமதி பெற்று, இரவு பகலாக இப்படத்தின் மீதமுள்ள பகுதிகளை முடித்துக்கொடுத்தார் மக்கள் திலகம்..அப்படி நடித்துக்கொடுத்ததில் இப்பாடல் காட்சியும் ஒன்று, எனவே மக்கள் திலகம் முதல்வராக தேர்வு செய்யப்ப்ட்டபின் நடித்த பாடல் என்ற பெருமை மிக்கது இப்பாடல்..
தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை..தன் மானம் ஒன்றே தான் எங்கள் செல்வம்..
-
அண்ணா நீ என் தெய்வம்..
மக்கள் திலகத்தால் ஆரம்பிக்கப்பட்டு, ஒரு சில காட்சிகள் மட்டும் எடுக்கப்பட்டது, அவர் முதலமைச்சர் ஆனதால் படம் கைவிடப்பட்டது..எடுக்கப்பட்ட காட்சிகள் பாக்ய ராஜ் அவர்களின் 'அவசர போலீஸ் 100' படத்தில் பயன்படுத்திக்கொள்ளப்பட்டது...
மக்கள் திலகம், லதா, நம்பியார், பண்டரி பாய், மற்றும் பலர் நடித்த( நடிக்க இருந்த) இப்படம், வெளிவந்திருந்தால் மீனவ நண்பன் படத்துக்கு அடுத்து வெளியாகி இருந்திருக்கும்..
இன்றும் இப்படத்தின் பாடல்கள் பிரபலமாக உள்ளது..
1,பறக்கும் பைங்கிளி ..சிரிக்கும் பூங்கொடி..
2. நீ நெனச்சதும் மழையடிக்கணும்..
3.என் மாப்பிளைக்கு இந்த மணிப்பிள்ளையை தொட்டு முத்தாட ஆசை வரும்..!!!
-
-
-
-
ஆயிரத்தில் ஒருவன் - வீடியோ காட்சிகள் மிகவும்அருமை . மக்கள் திலகத்தின் பலதரப்பட்ட ரசிகர்கள் , மொழி , இனம் நாடு கடந்து அவர் மீது வைத்துள்ள அபிமானத்தை , எம்ஜிஆரின் நடிப்பை ,ரசித்த காட்சிகள் மற்றும் அவர்கள் அளித்த பேட்டியில் மக்கள் திலகத்தை பற்றி கூறிய கருத்துக்கள் கேட்கும் போது மக்கள் திலகத்தின் சக்தி , புகழ் உணர முடிகிறது .நன்றி இதயக்கனி - சைலேஷ் சார் - யுகேஷ் சார் .