http://i1170.photobucket.com/albums/...psf3d30721.jpg
Printable View
MUTHAIYAN AMMU SIR
http://i1170.photobucket.com/albums/...psbc1242dc.jpg
http://i1170.photobucket.com/albums/...ps919262d0.jpg
நினைத்ததை முடிப்பவன் ----
"நினைத்ததை முடிப்பவன் " படத்தில் நடித்த எம் ஜி ஆர் உண்மையில் நினைத்ததை முடிப்பவர் தான் .
டெல்லியில் நடந்த தேசிய ஒருமைப்பாட்டுக் கூட்டத்தில் கலந்துக் கொள்வதற்காக முதல்வரான எம் . ஜி . ஆர் தனது துணைவியார் ஜானகி அம்மாளுடன் டெல்லி சென்றார் . அவருடன் அரசு உயர் அதிகாரிகளும் சென்றனர் .
தமிழ்நாடு ஹோட்டலில் தங்கியிருந்த எம் ஜி ஆர் , கூட்டம் தொடங்குவதற்கு முன் பாவலர் முத்துச்சாமியை அழைத்து எல்லா பள்ளிக் குழந்தைகளுக்கும் சீருடை வழங்க பிரதமர் ராஜீவ் காந்தி இடம் மானியம் கேட்கலாம் என நினைக்கிறேன் , அதற்கு பணம் எவ்வளவு தேவை என கொட்டேஷன் கொடுங்கள் என்றார் .
பாவலரும் கணக்கிட்டு எம் ஜி ஆரிடம் கொடுத்தார் . ஏற்கனவே சத்துணவுத் திட்டத்திற்கு 125 கோடிகள் செலவிட்டு இருக்கிறோம் , மீண்டும் 120 கோடிகள் தேவைப் படும் என்றார் .
கூட்டம் முடிந்து மக்கள் திலகத்தின் எல்லா கோரிக்கைகளையும் கேட்ட பிரதமர் ராஜீவ் , சீருடை வழங்கும் கோரிக்கையை மட்டும் ஏற்கவில்லை , நிராகரித்து விட்டார் , அடுத்த பட்ஜெட்டில் ஆவன செய்கிறேன் என்றார் .
அதற்கு எம் ஜி ஆர் சம்மதிக்கவில்லை , தமிழ் நாட்டிற்கு எந்த மானியமும் வேண்டாம் என சொல்லி கூட்டத்திலிருந்து எழுந்து வந்து விட்டார் .
தமிழ் நாடு இல்லத்தில் தங்கியிருந்த எம் ஜி ஆருக்கு பிரதமர் அலுவலகத்திலிருந்து ஆர் . கே திவான் போன் செய்தார் . மாலையில் வேண்டுமானால் உங்களுடன் பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்கிறேன் என்றார் . அதற்கு எம் ஜி ஆர் சம்மதித்தார் . பிரதமர் சம்மதித்தால் பாப்போம் , இல்லாவிட்டால் வீட்டிற்கு ஒரு ரூபாய் என்று பிரித்து நமது திட்டத்தை நாமே அமல் படுத்துவோம் என்றார் எம் ஜி ஆர் .
அடுத்து பிரதமர் ராஜீவ் காந்தியை சந்தித்தார் , தான் நினைத்ததை முடித்துவிட்டுத் தான் திரும்பினார் . ஒரு பிடி சோற்றுக்கும் , ஒரு ஜோடி துணிக்கும் என்ன கஷ்டப் பட்டேன்னு எனக்குத் தான் தெரியும் . அதனால் தான் என்னால் முடிந்த அளவுக்கு மதிய உணவோடு இலவச உடையும் கொடுக்கிறேன் என்றார் எம் . ஜி . ஆர் ... அவரை எப்போதும் நினைக்க முடியும் , மறக்க முடியாது ....
இதைச் சொன்னது எஸ் எஸ் ராஜேந்திரன்.
http://i1170.photobucket.com/albums/...ps1251343c.jpg
1985 ம் ஆண்டு , நாமக்கல்லுக்கு எம் எல் ஏ ஒருவரின் திருமணத்திற்காக தன்னுடைய துணைவியார் ஜானகி அம்மையாருடன் போனார் எம் ஜி ஆர் . அவர் வந்த நேரம் , திருமண வீட்டு முன்பு கட்சித் தொண்டர் ஒருவர் தனக்கும் எம் ஜி ஆர் தான் திருமணம் செய்து வைக்க வேண்டும் என கையில் தாலியுடன் தகராறு செய்தார் ...
காரில் வந்திறங்கிய எம் ஜி ஆரிடம் பிரச்சனையை சொன்னார் அமைச்சர் முத்துச்சாமி , உடனே எம் ஜி ஆர் அந்தத் தொண்டரை வரச் சொல்லி இது போன்ற தவறான செயலில் ஈடுபடக் கூடாது என எச்சரித்து , எம் எல் ஏ திருமணத்துடன் அந்தத் தொண்டனின் திருமணத்தையும் நடத்தி வைத்தார் .
அதோடு எம் எல் ஏ வுக்கு பரிசாகக் கொண்டு வந்திருந்த இரண்டு பரிசுகளில் ஒன்றை தொண்டருக்குப் பரிசாகக் கொடுத்தார் . நீங்கள் தாலி எடுத்துக் கொண்டுத்ததே போதும் பரிசு வேண்டாம் என வாங்க மறுத்த தொண்டரிடம் , எனக்கு நீயும் ஒன்று தான் , எம் எல் ஏ வும் ஒன்று தான் என்று சொன்னவர் எம் ஜி ஆர் ....
http://i59.tinypic.com/15e8f21.jpghttp://i58.tinypic.com/2zqwkzn.jpghttp://i57.tinypic.com/2ufvfag.jpg
THREE DYNAMIC FILM PRODUCER'S DARLING M.G.R AND BOX OFFICE HIT EVER GREEN MOVIES.
http://i57.tinypic.com/n312dg.jpg
MAKKAL THILAGAM MGR'S SUPER HIT MOVIES AND BOX OFFICE HITS CREATED HISTORY IN THE INDIAN CINEMA .http://i62.tinypic.com/ic4whj.png
https://www.youtube.com/watch?v=MjVqC4O55Qo
thanks sailesh sir
super duet song
https://www.youtube.com/watch?v=cOptgcYcDds
இவரும் அவரும்
பிப்ரவரி 17 1980 , மக்கள் திலகத்தின் ஆட்சி கலைக்கப் பட்ட நாள் . கருணாநிதியுடன் கூட்டணி அமைத்திருந்தார் இந்திரா காந்தி . மே 1980 இல் தேர்தல் , காங்கிரசும் தி மு க வும் கூட்டணி அமைத்தன , ஆனால் அ தி மு க மீண்டும் வெற்றி பெற்றது 9 ஜூன் 1980 மக்கள் திலகம் மீண்டும் முதல்வராக பொறுபேற்றுக் கொண்டார் ... ஜூன் 23 1980 சஞ்சய் காந்தி விமான விபத்தில் இறந்தார் . தகவல் மக்கள் திலகத்திற்கு தெரிவிக்கப் பட்டது .
உடனே கிளம்பிமார் மக்கள் திலகம் ஆறுதல் சொல்வதற்கு ... வேண்டாம் என்று கட்சியினர் சிலர் தடுத்தனர் , அவர் நமது ஆட்சியைக் கலைத்தவர் , இப்பொழுது நடந்த தேர்தலிலும் கூட நம்மை தோற்கடிக்க தி மு க வுடன் கூட்டணி வைத்தவர்கள் . இவ்வளவு அவமானங்களை சுமத்தியவங்களுக்கு ஆறுதல் கூற வேண்டுமா என்று கேட்டனர் .
அரசியல் வேறு மனிதப் பண்பு வேறு . அவங்க தேசத் தாய் அவங்க கலங்கினா நாம சிரிக்க முடியுமா ? என்று போனார் . இந்திரா காந்தி அம்மையாரைக் கண்டதும் , கண் கலங்கினார் , ஆறுதல் கூறினார் , இறுதிச் சடங்கு முடியும் வரை இருந்து விட்டுத் தான் திரும்பினார் .
கருணாநிதி கூட்டணியில் இருந்தும் கண்டுக் கொள்ளவே இல்லை .
அதே மக்கள் திலகம் , அக்டோபர் 5 1984 இல் நோய்வாய்பட்டு சென்னை அப்போல்லோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப் பட்டார் , இரண்டே நாட்களில் பக்கவாதமும் தாக்கியது . நரம்பியல் , சிறுநீரகம் , இருதயம் என்று மூன்று உறுப்புகளும் பாதிக்கப் பட்டிருந்தது .
அக்டோபர் 13 1984 , சென்னை வந்தார் பிரதமர் இந்திரா காந்தி . நேராக மக்கள் திலகம் இருந்த மருத்துவமனைக்குச் சென்றார் . சிறு கண்ணாடி வழியே மட்டுமே பார்க்க முடிந்தது மக்கள் திலகத்தை . " இவரா எம் ஜி ஆர் ?" என்று அதிர்ச்சியானார் . அருகில் இருந்த ஜானகி அம்மையாருக்கு ஆறுதல் கூறினார் .
" அமேரிக்கா போகலாம் , அந்நிய செலாவணிக்கு , எந்த பயமும் வேண்டாம் , ரிசர்வ் பாங்கின் சட்டம் உங்கள் கணவருக்காகத் தளர்த்தப் படும் , எவ்வளவு செலவானாலும் அந்த உன்னத உயிர் பிழைக்கட்டும் , அவரது தர்மமே அவரைக் காக்கும் , உங்கள் பிராத்தனை , என் பிரார்த்தனை , வெளியே நிற்கும் லட்சோப லட்சம் மக்களின் பிரார்த்தனைகளில் ஒன்றாவது பலிக்காமலா போகப் போகிறது ? என்று ஜானகி அம்மையாரைக் கட்டிப் பிடித்து ஆறுதல் கூறினார் .
மக்கள் திலகத்திற்காக ஏர் இந்திய பொறியியல் நிபுணர்கள் சிறப்பு விமானத்தில் ஒரு மருத்துவமனையே இருக்கும் படி அமைத்தார்கள் . முதன் முதலில் இந்தியாவில் மக்கள் திலகத்திற்காக பறக்கும் மருத்துவமனையே தயாரானது . 23 மணி நேர பயணத்தில் அமெரிக்காவுக்கு செம்மல் பத்திரமாக அழைத்துச் செல்லப் பட்டார் .
31 அக்டோபர் 1984 இந்திரா காந்தி அம்மையார் கொல்லப் பட்டார் , இதை மக்கள் திலகத்திடம் சொல்வது உகந்ததாக இருக்காது என்று மருத்துவர்கள் தெரிவித்து விட்டனர் , அவருக்கு செய்தி சொல்லப் படாமலேயே அவர் அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப் பட்டார் .
இவ்வளவும் நடந்தது , இந்திரா காந்தி அம்மையாரின் இறுதி ஆசையாக கருதி மக்கள் திலகம் அமெரிக்காவுக்குச் செல்வதை , இந்த கொலை சம்பவத்தால் தாமதப் படுத்த வேண்டாம் என்று ராஜீவ் கூறிவிட . மக்கள் திலகம் அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப் பட்டார் .
இந்திராவின் மரணத்திற்கு பின்னர்
மரியாதை செலுத்தக் கூட கருணாநிதி செல்லவில்லை , அவரது அஸ்திக் கலசம் சென்னைக்கு கொண்டு வரப் பட்ட பொழுதும் அனைத்து தலைவர்களும் கட்சி மாச்சரியமின்ரி சென்று மரியாதை செலுத்திய பொழுதும் , செல்லாத ஒரே நபர் கருணாநிதி .
அரசியல் நாகரீகம் குறித்தும் பண்பு குறித்தும் சமீபத்தில் அவரது இல்லத் திருமண விழாவில் மருத்துவர் ஐயா அவர்கள் கருணாநிதியை மேற்கோள் காண்பித்து பெருமையாகச் சொன்ன பொழுது , இந்தச் சம்பவங்கள் எல்லாம் மனதில் வந்து போகிறது
இன்று இந்திராவின் நினைவு தினம்
courtesy facebook
http://i60.tinypic.com/9t3mlc.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i58.tinypic.com/2uswn7t.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i57.tinypic.com/9qjoe9.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i60.tinypic.com/hum138.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
புதுச்சேரி நகராட்சி ஊழியர் ஒருவரின் வாகனத்தில் புரட்சித்தலைவர்
http://i61.tinypic.com/4sjmlz.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
புதுச்சேரியில் புரட்சித்தலைவரின் ஏழைப்பங்காளர் ஒருவரின் வாகனத்தில் பொன்மனச்செம்மல்
http://i59.tinypic.com/znoha0.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
மக்கள் திலகத்தின் " விவசாயி " காவியத்தின் ஒரிஜினல் தியேட்டர் பாட்டு புத்தக முன் அட்டை தோற்றம் :
http://i62.tinypic.com/2ef3l01.jpg
மக்கள் திலகத்தின் " விவசாயி " காவியத்தின் ஒரிஜினல் தியேட்டர் பாட்டு புத்தக பின் அட்டை தோற்றம் :
http://i58.tinypic.com/2e3vqfr.jpg
தமிழ் சினிமா உலகில், வழக்கமாக கதாநாயகி கனவு காணும் காதல் காட்சிகள் இடம் பெற்று அதனை கேலியும் கிண்டலும் செய்த கால கட்டத்தில், வித்தியாசமாக, இந்த “விவசாயி” காவியத்தில், கதாநாயகனாக தோன்றும் மக்கள் திலகம் கனவு காணும் காதல் பாடல் “என்னம்மா சிங்கார கண்ணம்மா” என்ற இனிய பாடலாகும்
http://i62.tinypic.com/2wnwwe8.jpg
இதே போன்று நம் பொன்மனச்செம்மல் அவர்கள் கனவு காணும் காதல் காட்சி இடம் பெற்ற மற்றொரு திரைக்காவியம் “பணம் படைத்தவன்”. காதல் பாடல் காட்சி : பவளக்கொடியிலே முத்துக்கள் பூத்தால்”
பேரறிஞர்
அண்ணா கதை வசனம்
எழுதி புரட்சி நடிகர் m.g.r.நடித்து
அந்நாளில் வெளிவந்த
வரலாற்று
சிறப்பு மிக்க படம்தான்
"நல்லவன்
வாழ்வான் " எனும்
அதியற்புதமான
திரைக்காவியம். அந்தப்
படத்தில்தான்
வாலிக்கு முதன்
முதலாக பாடல் எழுதுகின்ற
வாய்ப்பு கிடைத்தது. படத்தின்
இயக்குனர்
காலஞ்சென்ற
ப.நீலகண்டன் வாலியைப்
பார்த்து,
என்னப்பா,
உம்..,நல்லா பாட்டு
எழுதுவியா? உன்னையை
நம்பித்தான் இந்த
வாய்ப்பை
உனக்கு தருகிறோம்.
என்ன..சரியா...
என்று சொல்லிவிட்டு
பாடலுக்கு
உரிய காட்சியைப் பற்றியும்
எந்த
சூழ்நிலையில் அந்த பாடல்
வருகிறது என்பது பற்றியும்
எந்த
கருத்துக்களை அந்த பாடலில்
பதியம் செய்திடல்
வேண்டும்
என்பது பற்றியும் வாலிக்கு
விளக்கம் தரப்பட்டது.
அத்தனையையும் மிகப்
பொறுமை
நிறைந்த அவருக்கே உரிய
இயல்பான குணத்தோடு
கேட்டுக்கொண்ட
வாலி ஒரு பத்து
நிமிடத்தில் பாடல்
தருகிறேன்என்று
சொல்லி தனது
ஜோல்னா பையில்
வைத்திருந்த வெள்ளைப்
பேப்பரை
எடுத்து மளமள என பாட்டினை
எழுதி சமர்பித்தார்.அந்த
வரலாற்று
சிறப்புமிக்க பாடல்
இதோ உங்கள்
அனைவரின் கவனத்திற்கு:-
(mgr.வாயசைக்க
tms.பாடுகிறார்):-
சிரிக்கின்றாள்இன்றுசிரிக்கின்
றாள்!!
சிந்திய கண்ணீர்
மாறியதாலே !!
சிரிக்கின்றாள்இன்றுசிரிக்கின்
றாள்!!
(ராஜசுலோச்சனாவாயசைக்
கஇசை--
-க்குயில்
p.சுசீலா பாடுகிறார்):-
அன்புத் திருமுகம்
காணாமல்
நான்துன்பக்கடலில்
நீந்திவந்தேன்!!
Tms.:-காலப் புயலில்
அணையாமல்
நெஞ்சில் காதல்
விளக்கை
ஏந்தி வந்தேன் !!
சுசீலா:- உதயசூரியன் எதிரில்
இருக்கையில்உள்ளத்தாமரை
மலராதோ ?
Tms.:- எதையும் தாங்கும்
இதயம்
இருக்கையில் இருண்ட
பொழுதும்புலராதோ!
இருண்ட
பொழுதும்
புலராதோ !!
(சிரிக்கின்றாள்)
சுசீலா:-
தென்மலராடும் மீன்
விளை--
- யாடும் அருவியின்
அழகைக் காணீரோ !!
Tms. :- நான் வரவில்லை
என்பதனால் உன்
மீன்விழி
சிந்திய கண்ணீரோ ?
சுசீலா :- மலர்மழைபோலே
மேனியின் மேலே குளிர்நீர்
அலைகள்
கொஞ்சிடுதோ ?
Tms.&சுசீலா இருவரும்
சேர்ந்து:-
சிரிக்கின்றோம் !! இன்று
சிரிக்கின்றோம் !!சிந்திய
கண்ணீர்
மாறியதாலே
சிரிக்கின்றோம் இன்று
சிரிக்கின்றோம் !!
(இத்துடன் பாடல் நிறைவு
பெறுகிறது)
மறைந்த வாலிபக் கவிஞர்
வாலி
பாடலை ஒரு 1௦ நிமிடத்திற்குள்
எழுதி முடித்து இயக்குனர் வசம்
ஒப்படைக்கிறார். அவர் இந்தப்
பாடலை பேரறிஞர்
அண்ணா வசம்
ஒப்புதலுக்கு அனுப்புகிறார்.
வாலி
நெஞ்சில் பயம். முதல்
முதலாக
எழுதிய பாட்டு. அண்ணா
ஒருவேளை ஏற்க மறுப்பாரோ ?
என
அண்ணா பார்வை இட்ட
பிறகு
மீண்டும்
அந்தக்கவிதை காகிதம்
இயக்குனர் கைக்கு வருகிறது,பல
இடங்களில்
சிவப்பு மையினால்
அண்ணா வட்டமிட்டும்
கீழே கோடு
இட்டும்
குறியீடு செய்து இருப்பதை
வாலி கண்டு மன வேதனை
அடைகிறார்.
பாட்டு மறுக்கப்பட்டு
விட்டதோ என அவரே ஒரு
முடிவெடுத்து முகத்தை
சோகமாக
வைத்திருக்க இயக்குனர் வாலி
அருகினில் வந்து அவரை முதுகில்
ஒரு சபாஷ்போட்டு
தட்டிக்கொடுத்து
முதல் பாடலை அண்ணா
மனதாரப்
பாராட்டி இருக்கிறார்.
சிவப்பு
மையினால் வட்டமிட்டதும் கோடு
இட்டதும் பாட்டுக்கு மிக
முக்கியமான வார்த்தைகள்.
எனவே
எக்காரணமும்
கொண்டு இந்த
வார்த்தைகள் விடுபடக்கூடாது
என்பதற்காகவே அண்ணா
குறியீடு
செய்துள்ளார் என
இயக்குனர்
சொல்லியதற்குப்
பிறகுதான் வாலி
நிம்மதிப் பெருமூச்சு
வெளியிட்டார்.
அந்த வார்த்தைகள்
இவைதான் :-
1)உதயசூரியன் எதிரில்
இருக்கையில்
2)எதையும் தாங்கும் இதயம்
இருக்கையில
ஒரே படத்தில் மூன்று விதமான சமூக சிந்தனை பாடல்கள்
விவசாயி - 1.11.1967
கடவுள் என்னும் முதலாளி
நல்ல நல்ல நிலம் பார்த்து
இப்படிதான் இருக்க வேண்டும் .
விவசாயி படத்தில் இடம் பெற்ற இந்த மூன்று பாடல்களும் மூன்று விதமான சிந்தனை தூண்டும் பாடலாக
அமைந்து இருந்தது
.
வயலில் உழைக்கும் விவசாயி சமதர்மம் பற்றி பாடும் பாடல் வரியில் ''எங்கும் பறக்கவேண்டும் ஒரே கொடி
அது பஞ்சம் இல்லை எனும் அன்னக்கொடி ''- எத்தனை சத்தியமான வார்த்தைகள் .
''நல்ல நல்ல நிலம் பார்த்து '''..பாடல் வாழ்க்கை முறையில் எல்லா நிலைகளிலும் எப்படி தனி மனிதன் வாழ வேண்டும் என்பதை விளக்கும் பாடல் .
''இப்படிதான் இருக்க வேண்டும்'' .காதல் பாட்டாக இருந்தாலும் பெண்களின் உயர்வையும் முன்னேற்றத்தை பற்றியும் அருமையாக கூறும் பாடல் .
திருமண வீட்டிற்கு சென்று மேடையில் பாசப் பொழிவு என்று நடிப்பதும் , இழவு வீட்டிற்குச் சென்று முதலில் மாலை போடுவதும் மட்டிமே பண்பையும் நாகரீகத்தையும் குறிக்கும் விஷயமாகாது .
12 ஜனவரி 1967 மாலை நேரம் , மக்கள் திலகம் எம் ராதாவால் சுடப் பட்டார் ... வாசலுக்கு ரத்தம் சொத்தைச் சொட்ட ஓடி வந்தார் , கார் டிரைவர் மாணிக்கத்தை அழைத்தார் , எடு வண்டியை
என்றார் , உதவியாளர் வாசுவை பார்த்து , வாசு நீங்கள் போய் அண்ணனைக் கவனியுங்கள் என்றார் கார் புறப்பட்டு மருத்துவ மனைக்கு விரைந்தது . தன்னை சுட்டவரைக் பற்றிக் கூட அக்கரைப் படும் அந்த பண்பு தான் மேன்மையானது ...
தற்போது சென்னை மகாலட்சுமியில் வெற்றி நடை போடுகிறது
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வழங்கும் "தேடி வந்த மாப்பிள்ளை "
தினசரி 2 காட்சிகள். - அதன் சுவரொட்டிகள் நமது நண்பர்களின் பார்வைக்கு .
http://i57.tinypic.com/xckuar.jpg