http://i58.tinypic.com/kbd54i.jpg
Printable View
Very true Vinod Sir:
http://www.youtube.com/watch?v=NPaQS0qFyGY
மாட்டுக்கார வேலனின் மகத்தான வெற்றி .
1970 பொங்கல் அன்று வெளிவந்த மக்கள் திலகத்தின் ''மாட்டுக்கார வேலன் '' முதல் நாள் முதல் காட்சி கிருஷ்ணவேணி அரங்கில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது . திரை அரங்கு எங்கும் தோரணங்கள் - ஸ்டார் - மற்றும் எம்ஜிஆர் ரசிகர்களின் ஆராவாரங்கள் கண்ணுக்கு விருந்தாக இருந்தது . படம் துவங்கிய முதல் காட்சி முதல் இறுதி காட்சி வரை ரசிகர்களின் விசில் - கைதட்டல்கள் அமர்க்களமாக இருந்தது . படத்தின் வெற்றி முதல் காட்சியிலே தெரிந்து விட்டது .
கிருஷ்ணவேணி அரங்கில் முதல் முறையாக 111 காட்சிகள் தொடர்ந்து அரங்கு நிறைந்து 100 நாட்கள்ஓடிய முதல் படம் .
தொடர்வது ..என் அண்ணன் - 1970
HIGH LIGHT OF THE MOVIE- MATTUKKARA VELAN -1970
http://youtu.be/reXmZ1WhFao
http://www.youtube.com/watch?v=K9LB-...ature=youtu.be
அந்த ஒரு பைத்தியம் யார் என்று நான் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டுமா?
அப்புறம் தலைவரே!
‘கொடூரமான விலை’ பதிவுக்கு பாராட்டு தெரிவித்த திரு.எஸ்.வி.சாருக்கும், சிரித்து வாழ வேண்டும் பட காட்சிகளை தரவேற்றிய திரு.சைலேஷ் சாருக்கும் மிக்க நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
திரு.எஸ்.வி.சார்,
திருவண்ணாமலையில் கிருஷ்ணா திரையரங்கில் தலைவரின் நாடோடி மன்னன் படம் மறுவெளியீட்டில் 105 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. 1960ம் ஆண்டு வெற்றி விழாவும் நடந்தது. நமக்கு ஏற்கனவே தெரிந்த இந்த தகவலை மறுவெளியீட்டில் எம்.ஜி.ஆர். சாதனை திரியில் இன்று நீங்கள் பதிவிட்டிருந்ததைப் பார்த்தேன். முதன் முதலில் மறுவெளியீட்டில் 100 நாள் கொண்டாடிய படம் என்ற சாதனையை படைத்தது தலைவரின் நாடோடி மன்னன்தான்.
இதையொட்டி, கிருஷ்ணா திரையரங்கில் அப்போது வெற்றி விழா கொண்டாடப்பட்டது. கலைஞர்களுக்கு ஷீல்டுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. இங்கே கவனிக்கப்பட வேண்டியது தலைவரின் உயர்ந்த பண்பு. கலைஞர்களை எல்லாரும் கொண்டாடினார்கள். திரையரங்க உரிமையாளரையும் விநியோகஸ்தரையும் யாரும் கண்டு கொள்ளவில்லை. ஆனால், படம் வெற்றிகரமாக 100 நாட்கள் ஓடியதற்காக, படத்தின் விநியோகஸ்தருக்கும், கிருஷ்ணா திரையரங்கு உரிமையாளர் திரு. கிருஷ்ணா ரெட்டிக்கும் யாரும் எதிர்பாராத வகையில் தலைவர் தனது காரில் இருந்து ஷீல்டுகளை கொண்டு வரச் செய்து இருவருக்கும் அவற்றை வழங்கி கவுரவித்தார். இது உங்களுக்கும் தெரிந்திருக்கும் என்று கருதுகிறேன். நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்