படம் : அந்தமான் காதலி
பாடல் காட்சி: அந்தமானை பாருங்கள்
http://i58.tinypic.com/261kveq.jpg
Printable View
படம் : அந்தமான் காதலி
பாடல் காட்சி: அந்தமானை பாருங்கள்
http://i58.tinypic.com/261kveq.jpg
senthilvel,
Wishing you all success in your venture Arima Opticals.
Tamil The Hindu article.
http://tamil.thehindu.com/multimedia...l_2414225g.jpg
ஒரு திரைப்படம் வெளியாகி 50 ஆண்டுகளுக்குப் பிறகும்கூட ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம்பெற்றிருக்கிறது என்பது அந்தத் திரைப்படத்தின் மீதான மதிப்பீட்டைக் கூட்டும்தானே! அப்படி என்றைக்கும் தமிழர்கள் நினைத்துப்பார்க்கிற படம்தான் ‘திருவிளையாடல்’.
1965-ம் ஆண்டில் வெளியான புராணப் படமென்றாலும், அதன் திரைமொழி எல்லா மக்களுக்குமானது. ஏ.பி.நாகராஜனின் நாடக பாணியிலான பல படங்களுக்கு மத்தியில் ‘திருவிளையாடல்’ கடவுள்களை இயல்பான மனிதர்களுக்குண்டான குணாதிசயங்களுடன் திரையில் பதிவுசெய்திருந்தது. கோபம், போட்டி, பொறாமை, வாய்ச் சண்டை இவற்றுக்கெல்லாம் கடவுளர்கள் தூரத்துப் பார்வையாளர்கள் மட்டுமே.
அவர்களின் உலகில் இவற்றுக்கெல்லாம் துளியும் இடமில்லை என்ற மக்களின் நினைப்புக்குத், துணைபோகாமல் கடவுளர்களுக்கு இடையிலும் மனிதர்களுக்கு உண்டான சகலவிதமான குணநலன்களும், குணக்கேடுகளும் உண்டு என்று சொல்லும்விதமாகக் காட்சி நகர்வுகளை ஏ.பி.என். பதிவுசெய்திருந்தார் இந்தப் படத்தில். இந்தப் படம் பெரு வெற்றிபெற்றதற்கு ஏ.பி.நாகராஜனின் நீள அகலமான பார்வைதான் அஸ்திவாரம்!
வெற்றி ரகசியம்
பரமசிவன் எப்படியிருப்பார்? அவரது நடை, உடை, பாவனைகள் எப்படியிருக்கும் என்றறியாத, அல்லது கற்பனையில் ஒவ்வொருவரும் வடிமைத்து வைத்திருந்த பரமசிவனை சிவாஜி கணேசன் வடிவில் திருவிளையாடலில் பார்த்தவர்களுக்கு அது புது திரை அனுபவமாக அமைந்திருக்கும். மூக்கில் முத்துப் புல்லாக்கு மினுமினுங்க, இடுப்பில் பட்டுக் குஞ்சலம் வைத்த நீண்ட ஜடை தாளம்போட, கிரீடம் ஜொலிக்க வந்த திருவிளையாடல் சாவித்திரியை உயிர்பெற்று வந்த உமையாளாகவே அன்றைய தமிழ் ரசிகன் பார்த்திருப்பான்.
திருவிளையாடல் புராணம் என்கிற சைவ இலக்கியத்தை அடிப்படையாகக் கொண்டு முடையப்பட்டது இந்தத் திரைக் கீற்று. ஒவ்வொரு சாமியும் ஒவ்வொரு வகையான நீதியைத் தனக்கானதாகக் கொண்டிருக்கிறது என்று நம்பும் ஆன்மிக மனங்களின் சைவ மரபின் மீது கட்டப்பட்ட சித்திரக் கூடாகவே திருவிளையாடல் படம் இருந்தது. வெற்றிப்படமாக இது அமைய இது ஒரு முக்கியக் காரணம்.
நெருக்கமான உரையாடல்
அதுவரையில் வெளிவந்த புராணப் படங்களில் கையாளப்பட்ட தமிழ் எல்லோருக்குமானதாக இல்லை. “ஓ... கடவுள் என்றால் அப்படித்தான் இருப்பார்கள்’’ என்று ரசிகனை மெய் (உண்மை) மறக்க வைத்திருந்தார்கள். ஆனால், ‘திருவிளையாடல்’ படத்தில் குழைத்துத் தரப்பட்ட உரையாடல் தமிழின் சந்தனச் சாந்து எல்லோரையும் எடுத்துப் பூசிக்கொள்ள வைத்தது. அந்தக் கலையில் கைதேர்ந்த வித்தகராக அப்போது ஏ.பி.என் கருதப்பட்டார்.
சமயம் வழியே சமூகம்
நமது நாடகங்கள், புராணங்கள், இலக்கியங்கள் வழியாகக் கடவுளுக்கு என்று தனி மொழி உண்டென்று நம்பிய ரசிகனை, ஏ.பி.என். நாட்டு நடப்புகளை, மனிதர்களிடையே புழங்கும் அரசியலை, பெண்களின் நிலையை எல்லாம் இந்தப் படத்துக்குள் இலகுவாகப் புகுத்தி, புராணப் படத்துக்குச் சமூக வாசனையை உண்டாக்கியிருப்பார். இதற்கு ஒரே ஒரு உதாரணம்: பரமசிவன் சிவாஜி கணேசனின் மனைவியாக வரும் உமையாள் சாவித்திரி பேசும் ‘’கடைசிக் குடிமகனில் இருந்து உலகைக் காக்கின்ற ஈசன் குடும்பம்வரை பெண்ணாகப் பிறப்பது பெரும் தவறு என்பது நன்றாகப் புரிந்துவிட்டது” என்ற வசனமே சாட்சி.
ஒரு திரைப்படத்தில் கதாநாயகனை நோக்கிக் குவிகிற ரசிகனின் பார்வைப் புள்ளி, படம் முடியும் வரையில் சிதறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்கிற இலக்கணம் திருவிளையாடலில் துளியும் இல்லை. அன்றைய நாளில் புகழ்பெற்ற கதாநாயகனாக வலம்வந்த சிவாஜி கணேசன் நடித்திருந்தாலும், உமையாளாக வந்த சாவித்திரி, தருமியாக வந்த நாகேஷ், நக்கீரராக வந்து ‘நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே’ என்று முழங்கி நேர்மையின் அடையாளமாகத் திகழ்ந்த ஏ.பி.நாகராஜன், கே.வி.மகாதேவனின் தேனிசை, கவியரசரின் பாடல்கள், அவ்வையாராக வந்த கே.பி. சுந்தராம்பாள், செண்பகப் பாண்டியனாக வந்த முத்துராமன், ஹேமநாத பாகவதராக வந்த டி.எஸ். பாலையா, பாண பத்தராக வந்த டி. ஆர். மகாலிங்கம் இவற்றுடன் ஏ.பி.நாகராஜனின் அருந்தமிழ். கலை இயக்குநர்களின் உழைப்பு எல்லாமும்தான் அப்படத்தின் கதாநாயக அந்தஸ்தைப் பெற்றன. இவை அத்தனையும் 50 ஆண்டுகளுக்கும் பிறகு திருவிளையாடல் திரைப்படத்தை நினைத்துப் பெருமைப்பட வைக்கின்றன.
ஒலி வடிவிலும் சார்ந்த படம்
தொலைக்காட்சிகள் இல்லாத அந்த நாட்களில் ரேடியோதான் மக்களை மகிழ்வித்த ஊடக சாதனம். ஒவ்வொரு தமிழனும் அந்த நாட்களில் குறைந்தது பத்து முறையாவது திருவிளையாடலை ஒலிச்சித்திரமாகக் கேட்டு ரசித்திருப்பான். மார்கழி மாதக் காலை வேளைகளைத் திருவிளையாடல் இசைத்தட்டுகள்தான் இனிப்பாக்கியிருக்கின்றன. அந்தத் திரைப்படத்தில் இடம்பெற்ற பத்துப் பாடல்களும் தமிழ் திரையிசைக்கு அஸ்திவாரமிட்டவை.
பி. பி. ஸ்ரீ னிவாஸுடன் எஸ். ஜானகி இணைந்து குழையும் ‘பொதிகை மலை உச்சியிலே’; டி.எம்.எஸ் செங்குரலில் பாடியிருக்கும் ‘பாட்டும் நானே’, ‘பார்த்தால் பசுமரம்’; பாலமுரளிகிருஷ்ணா பாடியிருக்கும் ‘ஒருநாள் போதுமா’; டி.ஆர். மகாலிங்கம் பாடியிருக்கும் ‘இசைத் தமிழ் நீ செய்த அருஞ்சாதனை’ ஆகிய பாடல்களுடன்... கே.பி.எஸ். பாடியிருக்கும் ‘பழம் நீயப்பா... ஞானப் பழம் நீயப்பா’ என்ற பாடல் எல்லாம் ‘திருவிளையாடல்’ திரைப்படத்தை இன்றைய மொழியில் ‘அட்ராக்டிவ் பேக்கேஜ்’ என்று சொல்ல வைக்கின்றன.
நாகேஷ் என்னும் நகைச்சுவைக் கலைஞனைத் தமிழ் வீடுகளில் கொண்டுபோய் ஜம்மென்று உட்காரவைத்தது திருவிளையாடல். அந்த ஒற்றை நாடி சரீரத்தை வைத்துக்கொண்டு தனது வியத்தகு உடல்மொழியால் எம்பெருமானை எள்ளி நகையாடி, மல்லுக்கு இழுக்கும் நடிப்பில் சிவாஜி கணேசனின் ஆளுமையை அந்தக் காட்சிகளில் இல்லாது ஆக்கியிருப்பார் நாகேஷ்.
கல்யாணம், காதுகுத்து, திருவிழா, பூப்பு நீராட்டு விழா எல்லா நிகழ்வுகளின்போதும் இசைத்தட்டு வழியாகத் தமிழர்களைத் தருமி சிரிப்பு மகிழ்வித்திருக்கிறது. 50 ஆண்டுகள் மட்டுமில்லை இந்தப் படம் தந்து 100-வது ஆண்டுகளிலும் நினைக்கப்படும். போற்றப்படும்.
திருவிளையாடல்- 1965.
சிவாஜியின் புராண படங்களின் வரிசையில் நான்காவது படமான திருவிளையாடல் அவர் அறிமுகமாகி 13 ஆண்டுகள் கழிந்தது. இதற்கு முன் சம்பூர்ண ராமாயணம்(1958) படத்தில் சிறிய பங்கு பரதனாக. ஆனால் ராமனை மீறி பரதன் புகழடைந்தது நடிகர்திலகத்தின் பிரத்யேக சரித்திரம்.அதுதான் சிவாஜி.இன்னொரு அரசியல் ஜி ராஜாஜியின் பாராட்டே சான்று. 200 நாள் கண்ட வெற்றி சித்திரம்.பரதனும்,பாடல்களும் சாதித்தது. அடுத்த ஸ்ரீ வள்ளி(1961) ,ராமண்ணா இயக்கிய ,நடிகர்திலகத்தின் இரண்டாவது வண்ண படம்.இரண்டாவது புராண படம். ஏனோ சோபிக்கவில்லை. நடிகர்திலகமே கிண்டலடித்தார் தன்னுடைய சிவாஜி ரசிகன் பட தொகுப்பு ஆல்பத்தில். 1964 இல் வெளியான கர்ணனின் புராண சரித்திர இதிகாசம் நான் சொல்லி ரசிகர்களுக்கு தெரிய வேண்டியது இல்லை.உலகுக்கே தெரிந்த உன்னதம்.
1965 -திருப்பு முனை வருடம். 1964 அவருடைய வெற்றி சரித்திரத்தின் பாக்ஸ் ஆபீஸ் உச்சம். 1965இல் புதியவர்களின் வருகை, மற்றும் re- emergence of entertainment movies அவருடைய பழனி,அன்பு கரங்கள் படங்களுக்கு போதிய வரவேற்பில்லாமல் செய்தது.போர், திராவிட அரசியல்,கடவுள் எதிர்ப்பு எல்லாம் உச்சத்தில் இருந்த வேளையில் திருவிளையாடல் வருகை. திருவிளையாடல் அளவுக்கு,எதிர்ப்பிலும் ,சாதகமற்ற சூழ்நிலையிலும் சாதித்து காட்டிய படங்கள் உலகளவில் பார்த்தாலும் வெகு சொற்பமே. இதன் இமாலய வெற்றி உலகறிந்தது.
திருவிளையாடலின் பிரத்யேக சிறப்புகளை பார்ப்போம்.அதுவரை வந்த புராண படங்கள் யாவும் ,இதிகாச கதையமைப்பை அடிப்படையாக கொண்டவை. அதில் ஒரு நாயகனை வரித்து ,சார்பு கொண்டாலும் ,பெரும்பாலும் கதையமைப்பு சார்ந்தவை.பக்தி படங்களிலும் உருக்கம்.miracle அடிப்படை . இந்த நிலையில் சிவனின் திருவிளையாடல் புராணத்தை அடித்தளமாக்கி episode பாணியில் கதை கோர்ப்பு முயற்சிகளுக்கு முன்னோடி திருவிளையாடல்.வெகு வெகு சுவாரஸ்யமான கோர்ப்பு. முதலில் ஒரு புராண படம் நாயகனை முன்னிறுத்தி உருக்கம்,பக்தி,miracle,glorification இவற்றை செய்யாமல் ,சராசரி மனிதர்களின் பிரச்சினைகளே விஸ்வரூப தரிசனமாய் 5 எபிசோடில் விரிந்தது.(connectivity with common mans' problems and his heart)
முதல் பிரச்சினை- sibling ego conflict . குடும்ப பிளவில் முடியும் முருகனின் தனி வீடு பிரச்சினை. ஒவ்வொரு வீட்டிலும் நடப்பது போல மக்களால் connect பண்ணி உணர முடிந்த ஒன்று.ஆனால் அசாதரணமான ஞான பழத்தை முன்னிறுத்தி. ஏற்கெனெவே பிரபலமான ஒவ்வையார் பாத்திரம்,கே.பீ.சுந்தரம்பாள் இவற்றின் வெகு புத்திசாலிதனமான நுழைப்பு. படத்திற்கு புது களையை அளித்து விடும்.(பழம் நீயப்பா).
இரண்டாவது பிரச்சினை- நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று சொன்ன அறிஞர்களின் தார்மீக நெறி சார்ந்த ethic based ego conflict .இதில் இலக்கியம் ,மொழிவளம்,நகைச்சுவை,உன்னத நடிப்பின் உச்சம்,சுவாரஸ்யமான விவாத போக்கு இவற்றினால் ஒரே பாடல் கொண்டு 50 நிமிட படம் போகும் வேகம். (ஏ.பீ.என் ஏற்கெனெவே இதற்காக practice match ஆடியிருந்தார் நான் பெற்ற செல்வம் படத்தில்)
இங்கு உள்ள படித்த ,வேலை பார்க்கும் அனைவருக்கும் Transaction Analysis பரிச்சயம் ஆகியிருக்கலாம். இதில் ego stage என்பதை parent -Exterro Psyche(dos and donts )-adult-Neo Psyche(reality and practical ) -child-Archaeo Psyche (wishes&needs , Tandrum,illogical )என்ற நிலைகளிலேயே நம் அத்தனை நடைமுறை செயல்பாடுகள்,உரையாடல்கள் மற்றோருடன் நடை பெறுகின்றன.
உதாரணம்- கணவன் அலுவலகம் கிளம்புகிறான். மனைவி வழியனுப்புகிறாள். தொடருங்கள்.
"இதோ பாரு ,நான் வீட்டை விட்டு கிளம்பறேன். நல்லா பூட்டிக்கோ.பத்திரம்".(parent ).
ஆமா பெரிசா வாங்கி போட்டிருக்கீங்க யாராவது திருடிட்டு போக. திருடன் வந்தாலும் அவன்தான் எதையாவது விட்டுட்டு போகணும்.(child ).
இப்போ நான் என்ன சொல்லிட்டேன்.நீ பத்திரமா இருக்கணும்னுதானே சொன்னேன் செல்லம்.(adult ).
ஆமா.பத்திரமா இருக்கேன். என் கிட்டே என்னை தவிர வேறென்ன இருக்கு.பாதுகாக்க. ஒரு நகையா நட்டா(child ).
சரி.office கிளம்பும் போது மூட் அவுட் பண்ணாதே. வாயை மூடறியா (Parent )
சரி.சரி.என்னை அதட்டுங்கள். உங்க promotion பிரச்சினை என்னாச்சு?(adult ).
அது இன்னும் முடியாத கதை.வேணு எனக்கு supervisor ஆக இருக்கும் வரை எனக்கு கிடைச்ச மாரிதான்.(child ).
ஆமா .உங்க வீரம் வீட்டிலேதான்.(child ).
ஆமா உன் கிட்ட காட்டாம யாரிட்ட காட்டுரதான்.இது போன தீபாவளிக்கு வாங்கினதுதானே.(adult ).
ஆமா.நல்லி போயிருந்தமே?அப்படியே சீதா வளைகாப்புக்கும் போனோமே?(adult ).
ஞாபகம் இருக்கு. இந்த கலர் உனக்கு பொருத்தம்.(Adult ).
சரி.தலை கொஞ்சம் சரியா வாரலை போலருக்கே. சீப்பு கொண்டு வரேன்.(adult ).
இதில் சில அனுசரணையானது(Adult -Adult ). சில முரணானது.(crossed Transaction.adult -child ,adult -parent )சில ஒப்பு கொள்ள கூடியது.(parent -child )
நம் வாழ்வில் தற்காலிக-நிரந்தர வெற்றிகள் ,இதனை நாம் பயன் படுத்தும் விதமே.ஆனால் இவைதான் வாழ்வையும் ,கலையையும் சுவாரஸ்யமாக்குகின்றன.இனி திருவிளையாடலுக்கு மீண்டு வருவோம்.
கொஞ்சம் புரிய தொடங்கியிருக்கும் என நினைக்கிறேன்.
இந்த episode சிவன்தான் parent ரோல். தன் ஸ்தானத்தில் இருந்து கண்டிப்பு, பராமரிப்பு (தருமிக்கு), சோதிப்பு (நக்கீரன் புலமை மற்றும் பணி நேர்மை) கொண்டது. நக்கீரன் adult ரோல். உள்ளதை உள்ளபடிக்கு தன் தொழில் தர்மத்தில்,நிலையில் உறுதியாக.தருமி child ரோல்.தனக்கு தகுதியில்லைஎன்றாலும் ஆசை படும் நிலை.எடுப்பார் கைபிள்ளையாய்.இப்போது நான் சொன்னதை வைத்து ஒவ்வொரு வசனமாய் எடுத்து ஆராய்ந்தால், இந்த முழு பகுதியில் வரும் நகைச்சுவை, விவாத சுவை,லாஜிக் மீறாத crossed transactions .இதில் சில சமயம் சிவன் parent ,adult ,child நிலைகளில் மாறும் அழகு. நான் யார் தெரிகிறதா ,என் பாட்டிலா குற்றம் (child ). சங்கறுக்கும் நக்கீரனோ என் பாட்டில் குற்றம் சொல்ல தக்கவன் (child ),நக்கீரன் பதிலுக்கு சங்கரனார்க்கு ஏது குலம் (child ). தருமி எல்லா நிலையிலும் child state interraction .இதில் வசன வாரியாக விளக்க அவசியமில்லாமல் ,அனைவருக்கும் தெரிந்த episode .இதில் முழுக்க முழுக்கவே Transaction Analysis வகுப்புக்கு பாடமாக்கலாம்.
இதிலும் எல்லா தரப்பு மக்களும் தங்களை பிணைத்து கொள்ளும் தகுதி மீறிய ஆசை,கைகெட்டும் தூர அதிர்ஷ்டம்,அது அடையும் நிலையால் denial சார்ந்த சிரமங்கள், அற்புதமான situational dialogue காமெடி, ஒரு பட்டி மன்ற சுவையுடன் இலக்கியம் சார்ந்த தமிழ் விளையாட்டு என்று ethic value based conflict ஒன்று பொது மக்களுக்கு முழு சாப்பாடு திருப்தியாய் பரிமாற பட்டு விடும்.
முதல் காட்சியில் தருமி யின் புலம்பலுக்கு காட்சி தரும் போது parent நிலையில் ஒரு கண்டிப்பான provider ஆகவே தருமியை child ஆகவே கருதுவார். தருமி தனக்கும் சற்றே புலமையுண்டு என ஸ்தாபிக்க எண்ணும் போது ,adult -adult transaction ஆக மாறும்.ஓலை கொண்டு போக தயங்கும் தருமிக்கு கொடுக்கும் உற்சாகம் parent -adult ஆக மாறும்.
அடுத்த episode எல்லா வீட்டிலும் கிடந்தது லோல் படும் பிறந்து வீடா,புகுந்த வீடா பிரச்சினை.male ego -female ego clash ஆகும் பிரச்சினை. அழிவின் விளிம்பு வரை செல்லும்.
அடுத்த episode love teasing பிரச்சினை.
அடுத்த episode .... எனக்கு அலுவலகத்தில் நேர்ந்தது. ஷா(ஹேமநாதர்) என்ற ஒரு பெரும் அகந்தை கொண்ட vice president (production ).அவருக்கு சம நிலையில் இல்லாத பன்ஸல்(பாண்டிய மன்னன்) என்ற vice president(விற்பனை) .இவர்களுக்குள் மீட்டிங் தோறும் சவால்கள் இருக்கும். ஒருவருக்கொருவர் ஆகாது.அப்போது ஒரு விவகாரமான டாஸ்க் force ரிப்போர்ட். அது சரியான பாணம் ஷாவை மட்டம் தட்ட. அந்த பணியை ஜூனியர்(பாணபட்டர்) ஆன என்னிடம் கொடுத்து ஷாவிடம் அனுப்பினார் பன்ஸல் . எனக்கோ உள்ளுக்குள் உதைப்பு.(இருவரையும் பகைக்க முடியாது) பாணபட்டர் போல முறையிட கடவுள் நம்பிக்கையும் கிடையாது.நான் என்ன பண்ணினேன்,ஒரு தைரியமாக (பன்ஸல் இடம் அனுமதி வாங்கி)என் staff(விறகு வெட்டி) ஒருவரை நன்றாக சொல்லி கொடுத்து ,இந்த மூன்று கேள்வி கேளுங்கள், டூரில் இருந்து வந்தவுடன் கோபால் உங்களிடம் வருவார் என்று செய்தியுடன்.அந்த கேள்விகளின் ஆழம் தாங்காத ஷா ,சிஷ்யனே இப்படி என்றால் என பயந்து task force report பாதகமாக இருந்தும் ,அப்படியே ஒப்பு கொண்டார்.பன்ஸல் வெற்றி களிப்புடன் எனக்கு ஒரு promotion கொடுத்து கொண்டாடினார்.
இது கிட்டத்தட்ட சிவபெருமான் இல்லாத திருவிளையாடல். கடைசி ஒன்று challenge to the establishment ,அது சார்ந்த personality conflict ,superiority complex மற்றும் அது சார்ந்த வாழ்கை சறுக்கல்கள்.ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்வில் ஒரு நிலையிலாவது உணர கூடியது.
இப்போது புரிகிறதா இந்த புராண படத்தின் அசுர வெற்றியின் ரகசியம்? ஒவ்வொரு எபிசோடும் நம் வாழ்க்கைக்கு அருகே வந்து ஒவ்வொரு தனிமனிதனையும் தொட்டு பார்க்க கூடியது. எந்த அமானுஷ்யமும் கிடையாது.(சிவாஜி என்ற நடிப்பதிசய அமானுஷ்யம் ஒன்றை தவிர )
முதல் அரை மணி நான்கு பாடல்கள் கடக்கும்(சம்போ மகாதேவா,அவ்வையின் இரண்டு,பொதிகை மலை). அடுத்த ஒன்றரை மணி ஒரு பாடலும் இருக்காது. (ஒன்றே ஒன்று நீல சேலை)ஒரு ஆடல் சிவதாண்டவம். அடுத்து ஒரு மணி நேரம் ஐந்து பாடல்கள்.(ஒரு நாள் போதுமா,இல்லாததொன்றில்லை,இசை தமிழ் நீ செய்த,பார்த்தா பசுமரம்,பாட்டும் நானே),கடைசி முடிவில் ஒன்று ,இரண்டு,வா சிவாசி என்று .கிட்டத்தட்ட முக்கிய இரண்டு பகுதிகள் இயல் தமிழுக்கு,இசை தமிழுக்கு என பிரிக்க பட்டு சிவனின் நாடகம் அரங்கேறும்.
என்ன அழகான சுவாரஸ்ய பகுப்பு? ஒரு வித்யாசமான அமைப்பு மற்றும் அணுகுமுறை சுவாரஸ்யம் கூட்டும்.
சிவாஜியின் மேதைமை ,இந்த படத்துக்கான நடிப்பு முறையையே புரட்டி போட்டு பல விற்பன்னர்களையே தலை சுற்ற வைத்தது. அப்படி ஒரு சிந்தித்து செயல் பட்ட ஒரு plasticity கொண்ட அதிசய நடிப்பு முறை. திருவிளையாடற் புராணம் மதுரை மண்ணில் சிவ பெருமான் சாதாரண மக்களுடன் மக்களாய் நின்று தோள் கொடுத்து செய்த மகத்துவங்களை குறிக்கும்.
சிவாஜி கையாண்ட நடிப்பு முறை இன்னதுதான் என்று வரையறுக்க கூடாது. ஒரு அரசன் என்றால் அவன் பொறுப்பு,நிலை சார்ந்து எப்போதுமே ஒரு தலைமை கம்பீரத்தை காட்டியாக வேண்டும். ஆனால் இந்த பட கடவுளோ, சராசரி மனிதன் போல தாயாய்,தந்தையாய் ,காப்பனாய்,பாமரனாய் ,சோதிக்கும் தந்தையாய் ,முரட்டு புலவனாய்,அகந்தை கணவனாய் ,பாமர காதலனாய் ,விறகு வெட்டியாய் ,சில நேரம் கடவுளாக என பல வகை நிலைகள்.ஒரே படத்தில். கடவுளின் அமானுஷ்யத்தையும் இழக்காமல்,கொண்ட பாத்திரத்தையும் துறக்காமல் நடிக்கும் இவரது நயம்.(எனக்கு கடவுள் என்றால் சிவ பெருமான்தான்,ஆனால் இதில் வரும் சிவாஜி போலவே என்று மனதில் ரோல் மாடல் உண்டு)
குறிப்பிட்டு சொன்னால் சிவ தாண்டவம். ஒரு purist dancer ஆக முழுமை இருப்பதாக சொல்ல முடியாவிட்டாலும் ஒரு ஆண்மை நிறை ரௌத்ரம் பீறிடும். ஒரு விகசிப்பு நிலையை தரும்.(ராணி லலிதாங்கி,நிறைகுடம்,பொன்னூஞ்சல் எல்லா படத்திலும் அவர் சிவதாண்டவம் அருமைதான்).
மீனவ பாத்திரத்தில் இவர் சுவாரஸ்யம் கூட்டும் அந்த வினோத நடை.(அழகான இரவல்).இந்த பகுதி சற்றே சுவாரஸ்யம் குறைந்ததை சிவாஜியின் காதல் குறும்பு,நடை ஈடு செய்து விடும்.
அடுத்து பாட்டும் நானே பாட்டில் அத களம். ஒரு குறும்பு பார்வை.பாடும் உன்னை நான் என்று ,நான் அசைந்தால் அசையும் இடத்தில் ஒரு குலுங்கல் ஏளன சிரிப்பு,வாத்திய கருவிகள் கையாளும் timing ,preparatory gesture ,perfection நம்மை பிரமிப்பின் உச்சிக்கே பறக்க வைக்கும். அப்பப்பா இந்த பாத்திரத்தில் அவரை பார்த்து கன்னத்தில் போட்டு கொள்ளாதவர் யார்?என்ன கம்பீரம் ,தெய்வ தன்மை ...வா சிவாசிதான்....குத்துபாட்டு அலம்பல் வேறு. பார்த்தா பசுமரம்.
கே.வீ.மகாதேவன் இசையில் அத்தனை பாடல்களும் classy என்றாலும் குறிப்பாக ஒருநாள் போதுமா (மாண்டுவில் துவங்கி ராகமாலிகை),பாட்டும் நானே (கௌரி மனோகரி),இசை தமிழ், பழம் நீயப்பா,பொதிகை மலை உச்சியிலே,பார்த்தா பசுமரம்.இது ஒரு இசை திருவிழா.
நாகேஷ் -இதை சொல்லாத பத்திரிகை இல்லை. நான் என்ன சொல்ல ?இவர் performance ,சிவாஜியின் பெருந்தன்மை எத்தனை முறை எத்தனை பேர்களால் அலச பட்ட சமாசாரம்.?
ஆனால் நடிகைக்கு கற்பவதிகள்தான் அகப்படுவார்களா கடவுளின் நாயகிகள் பாத்திரத்திற்கு?ஏ.பீ.என் இரு முறை தவறினார்.இந்த பட பார்வதி சாவித்திரி,திருமால் பெருமை ஆண்டாள் கே.ஆர்.விஜயா.
இறுதியாக உறுதியாக இந்த பட கதை,வசனம் ,இயக்கம் ,தயாரிப்பு அனைத்தையும் இழுத்து செய்த அருட்செல்வர் நாகராஜர். அப்பப்பா ..என்ன ஒரு செம்மை,இலக்கிய நயம்,விறுவிறுப்பு ஜனரஞ்சக ஈர்ப்பு.. தலை வணங்குகிறோம் அருட்செல்வரே.
அவன்தான் மனிதன் திரையிடல் மற்றும் புத்தக வெளியீட்டு விழா
அவன்தான் மனிதன் திரையிடல் மற்றும் புத்தக வெளியீட்டு விழாவைப் பற்றி ராகவேந்தர் சார் அழகாக எழுதி விட்டார். அதனால் அந்த விழாவின் சில அம்சங்களைப் பார்ப்போம். சார் குறிப்பிட்டது போல வட சென்னையை சேர்ந்த கவிஞர் ஏசுபாதம் நடிகர் திலகம் அளித்த தான தர்மங்களைப் தொகுத்து அச்சிட்டு ஒரு புத்தகமாக வெளிக்கொண்டு வந்திருக்கிறார். அதை max media என்ற பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. இந்த புத்தகத்தை வெளியிட வேண்டும் என்று திரு ராம்குமார் அவர்களை அணுகியபோது இந்த புத்தக வெளியீட்டு விழாவை தனியாக நடத்தாமல் நமது NT FAnS மாதந்தோறும் நடத்தும் திரையிடலுடன் சேர்ந்து செய்யலாம். என்று யோசனை கூறி அனுப்பியிருக்கிறார். இந்த புத்தகத்திற்கு பொருத்தமான படம் வரும்போது செய்யலாம் என்றும் சொல்லியிருக்கிறார். நம்மை சந்தித்த ஏசுபாதம் இதை குறிப்பிட பொருத்தமான படம் இந்த மாதமே இருக்கிறது என்று சொல்லி இந்த புத்தக வெளியீட்டு விழாவையும் இந்த மாதத்தில் வைத்துக் கொண்டோம்.
இந்த மாத நிகழ்ச்சி 24-ந் தேதி ஞாயிறு என்று முடிவு செய்யப்பட்டிருந்தது. மாலை சரியாக 6 மணிக்கு விழா தொடங்கியது. அமைப்பின் பொருளாளர் வரவேற்புரை ஆற்ற சிறப்பு விருந்தினர்களுக்கும் புத்தக ஆசிரியர், வெளியிட்ட திரு ஜெய்சங்கர் மற்றும் பொருத்தமான ஸ்டில்ஸ் கொடுத்துதவிய திரு ஞானம் ஆகியோருக்கும் சால்வைகள் அணிவிக்கப்பட்டன.
முதலில் புத்தகம் வெளியீட்டு விழா நடைபெற்றது. புத்தகத்தின் முதல் பிரதியை திரு ராம்குமார் அவர்கள் வெளியிட நமது அமைப்பின் தலைவர் திரு. Y Gee. மகேந்திரா பெற்றுக் கொண்டார்
அதன் பிறகு உரையாற்ற வந்தார் ராம்குமார். இந்த புத்தகத்தை தொகுத்திருக்கும் திரு இயேசுபாதம் ஒரு சராசரி பின்னணியிலிருந்து வந்தவர். பெரிய பொருளாதார பின்புலம் ஒன்றும் இல்லாதவர். ஆனால் நடிகர் திலகம் மேல் மாறப் பற்றுக் கொண்டவர். நடிகர் திலாக்தைப் பற்றி பல்வேறு தலைப்புகளில் புத்தகங்கள் வந்திருக்கின்றன. இனியும் வர இருக்கின்றன. நடிகர் திலகத்தைப் பற்றிய ஒரு தீசிஸ் [thesis] எழுதப்பட்டுக் கொண்டிருக்கிறது. அது பல்கலைகழகத்தில் சமர்பிக்கப்பட்டு அதை எழுதிய ஆசிரியர் [திரு. மருது மோகன்) முனைவர் பட்டம் பெற்றவுடன் அந்த ஆராய்ச்சியே ஒரு புத்தக வடிவில் வெளியிட சிவாஜி பிரபு அறக்கட்டளை முடிவு செய்திருக்கிறது. அது நடிகர் திலகத்தை வேறொரு தளத்தில் அடையாளம் காட்டும் என்று குறிப்பிட்ட ராம்குமார் இப்போது வெளியிடப்படும் இந்த புத்தகம் இதுவரை யாரும் சொல்லாத ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டிருக்கிறது என்றார். இதற்கு முன்பு இது ஏன் எழுதப்படவில்லை என்றால் நடிகர் திலகம் எப்போதும் தான் பிறருக்கு செய்யக்கூடிய உதவிகளை வெளியே சொல்வதை விரும்ப மாட்டார். அவரிடமிருந்து உதவி பெறுபவர்களிடமும் அதை வெளியில் சொல்லக் கூடாது என்று சொல்லி விடுவார். சத்தமில்லாமல் தர்மங்கள் செய்ய வேண்டும் என்பதுதான் அவரின் நடைமுறை. பிரபுவிடமும் இதே முறையை கடைப்பிடிக்குமாறு கூறியிருக்கிறார். ஆகவே பிரபுவும் தன் செய்யக் கூடிய உதவிகள் எதையும் வெளியில் சொல்வதில்லை என்றார் ராம்குமார். அப்பாவின் இந்த பாலிசி பற்றி ஏன் அப்படி என்பதை எங்களுக்கு விளக்கி சொல்லி எங்களையும் அந்த வழிக்கு திருப்பியவர் சித்தப்பா சண்முகம்தான் என்று நெகிழ்ச்சியோடு நினைவு கூர்ந்தார் ராம்குமார்.
நடிகர் திலகம் பற்றி பல்வேறு தலைப்புகளில் எழுதிய 100 கட்டுரைகளை தொகுத்து சிவாஜி 100 என்ற தலைப்பில் ஒரு புத்தகமாக வெளியிட அகில இந்திய சிகர மன்றம் ஏற்பாடு செய்து வருகிறது என்றும் வரும் அக்டோபர் முதல் தேதியன்று வெளிவரும் என்ற தகவலையும் பகிர்ந்துக் கொண்டார்.
இது போன்ற முயற்சிகளுக்கு தானும் தன் குடும்பமும் எப்போதும் உறுதுணையாக இருப்போம் என்று கூறி நூலை எழுதியவர், வெளியிட்டவர் அனைவருக்கும் வாழ்த்துகள் கூறி விடை பெற்றார் திரு. ராம்குமார்.
அடுத்து பேசியவர் திரு YGee மகேந்திரா அவர்கள். “என்றுமே நடிகர் திலகத்தையே நினைத்து வாழ்ந்து வருபவர்களில் நானும் ஒருவன். அவரின் நீண்ட நெடிய கலைப்பயணத்தில் அவரோடு 37 படங்கள் இணைந்து பணியாற்றியிருக்கிறேன். ஆகவே அவரைப் பற்றி சொல்வதற்கு பல்வேறு விஷயங்கள் தகவல்கள் இருக்கின்றன. ஒரு சக நடிகனாக ஒரு ரசிகனாக பல விஷயங்கள் சொலப்பட வேண்டியவை இருக்கின்றன. அதனாலேயே நான் சுவாசிக்கும் சிவாஜி பாகம் 2-ஐ இப்போது எழுதிக் கொண்டிருக்கின்றேன். அது போல் பலருக்கும் பல்வேறு விஷயங்கள் சொல்வதற்கு இருக்கும். ஆனால் இந்த புத்தகம் ஒரு புதிய முயற்சி. அது மட்டுமல்ல இந்த புத்தகம் ஒரு காலத்தின் கட்டாயம். அன்றைய நாட்களில் நடிகர் திலகத்தை குறை சொல்ல வேண்டும் என்பதற்காகவும் அரசியல் காரணங்களுக்காகவும் அவரைப் பற்றிய பல தவறான தகவல்களை பரப்பி துரதிர்ஷ்டவசமாக அன்றைய தினம் பத்திரிக்கையாளர்களும் அதில் உண்மை இருக்கிறதா என்று பார்க்காமல் சிலவற்றை எழுதி வைக்க அது ஒரு தவறான செய்தியாக வலம் வந்துக் கொண்டிருக்கிறது. அதை எதிர்கொண்டு அவர் என்னவெல்லாம் செய்தார் என்பதை ஆணித்தரமாக நிரூபிக்கும் வண்ணம் இந்த புத்தகம் எழுதப்பட்டிருக்கிறது
குறிப்பாக சீன மற்றும் பாகிஸ்தான் யுத்தங்களின்போது அவர் கொடுத்த நன்கொடைகள் மிக பெரியவை. அதுவும் பாகிஸ்தான் யுத்தத்தின்போது அன்றைய பிரதமர் சாஸ்திரியிடம் கமலா அம்மாள் அணிந்திருந்த நகைகளையெல்லாம் அப்படியே கழட்டிக் கொடுத்த அந்த gesture வேறு எவராலும் நினைத்துக் கூட பார்க்க முடியாத ஒன்று.
இங்கே என் தாயார் வந்திருக்கிறார். அவர் 50-களில் பத்மா சேஷாத்திரி பள்ளியை துவக்கும்போது அது makeshift கட்டிடத்தில் இயங்கிக் கொண்டிருந்தது. ஒரு விழாவிற்கு வருகை தந்த நடிகர் திலகத்திடம் பள்ளிக்கூடத்திற்கு கூரை வேய வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட அதற்கு பதிலளித்த நடிகர் திலகம் அந்த கூரை வேய்வதற்கான செலவில் ஒரு பாதியை தான் ஏற்றுக் கொள்வதாக ஒப்புக் கொண்டார். உங்களுக்கு தோன்றும் ஏன் அவர் முழு செலவையும் ஏற்றுக் கொள்ளவில்லை என்று? அதற்கு காரணம் அவர் தன்னால் என்ன முடியுமோ அதை மட்டுமே சொல்வார். மறுநாள் பேப்பரில் தன் படம் வர வேண்டும் என்பதற்காக அள்ளி விடுபவர் அல்ல. பேப்பரில் பேர் வந்தால் மட்டும் போதாது. வாக்களித்தபடி பணம் தர வேண்டும். ஆகவே தன்னால் முடிந்ததை அங்கே அறிவித்ததோடு மட்டுமல்லாமல் அதை உடனே கொடுத்தும் விட்டார்.
(இந்த நேரத்தில் மேடைக்கு கிழே உட்கார்ந்திருந்த திருமதி ராஷ்மி பார்த்தசாரதி அவர்கள் பள்ளிக்கூடத்திற்கு முதன் முதலாக கட்டிடம் கட்டிக் கொடுத்தவரும் சிவாஜிதான் என்ற தகவலை சொல்கிறார்) பார்த்தீர்களா! அதனால்தான் சரஸ்வதி தேவியின் தவப்புதல்வனான அவரின் ராசியால் பத்மா சேஷாத்திரி பள்ளி மாணவ மாணவியர் அனைவரும் அருமையாக படிக்கின்றனர். நடிகர் திலகம் பற்றி என்பதனால்தான் இங்கே பேசிக் கொண்டிருக்கின்றேன். வேறு எவரைப் பற்றியும் என்றால் பேசவே மாட்டேன்.
எளிமையாக அதே நேரத்தில் to the point என்ற பாணியில் எழுதியிருப்பதை பாராட்டுகின்றேன் புத்தகம் படிக்கும்போது ஒரு பெரிய distraction என்னவென்றால் ஒவ்வொரு பக்கத்தையும் அலங்கரிக்கும் அற்புதமான புகைப்படங்கள். புகைப்படத்தை பார்த்துவிட்டால் பக்கத்தை திருப்ப மனமே வரவில்லை. நடிகர் திலகத்தின் கண்களுக்கு எவரையும் கவர்ந்து இழுக்கக் கூடிய ஒரு வசீகர சக்தி உண்டு. அது அப்படியே நம்மை ஆகர்ஷித்து விடும்
அவரின் நடிப்பை மிஞ்சவோ அவருடன் போட்டியிடவோ எவரும் இல்லை. ஏதேனும் ஒரு சின்ன காட்சியிலாவது எந்த நடிகராவது அவரை மிஞ்சி விட்டால் அன்றைக்கு நடிப்புக்கு முழுக்கு போட்டு விடுவேன். ஆனால் அப்படி ஒரு நாள் என் பேரன் காலகட்டத்தில் கூட வராது என்று தோன்றுகிறது. இரண்டு நாளைக்கு முன்பு என் தம்பி பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் ஓர் scene -ல் இதுவரை நான் கவனிக்காத ஒரு நுணுக்கம் தென்பட்டது. இது காலாகாலங்களுக்கும் தொடரும் அதன் ஒரு வெளிப்பாடுதான் கர்ணன் அடைந்த இமாலய வெற்றி. அதை பார்த்த இளைஞர்கள் பிரமித்துப் போய் என்னிடம் வந்து பேசினார்கள். இருபது வருடங்களாக நடிப்பென்றால் என்னவென்றே தெரியாமல் சினிமா பார்க்க பழகி விட்டோம். நல்லவேளையாக கர்ணன் வந்து அதை உடைத்தது. இப்போது கட்டபொம்மனும் வந்துவிட்டால் அது மேலும் வலுப்பெறும்.. புதிய பறவை படத்தையும் டிஜிட்டலில் மாற்றி யாரவது ரிலீஸ் செய்தால் புண்ணியமாகப் போகும். அவன்தான் மனிதன் படத்தை பார்பதற்காக ஆவலாக இருக்கின்றேன். அனைவருக்கும் நன்றி”. . . . .
காற்றாற்று வெள்ளம் போல் மகேந்திரா பேசி முடித்ததும் அமைப்பின் பொருளாளர் அவன்தான் மனிதன் படத்தின் சிறப்புகளைப் பற்றி எடுத்துச் சொன்னார். நடிகர் திலகத்தின் 175-வது படமான அவன்தான் மனிதன் படம் வெளிநாடுகளில் படமாக்கப்பட்ட இரண்டாவது படம் என்பதையும் படம் வெளியான 1975-ம் ஆண்டில் வர்த்தகரீதியாக பெரிய வெற்றி பெற்ற படங்களில் இதுவும் அடங்கும் என்பதையும் இடைநிலை நகரமான பொள்ளாச்சி போன்ற ஊர்களில் கூட 100 காட்சிகளுக்கு மேல் தொடர்ந்து அரங்கு நிறைந்தது போன்ற தகவ்ல்களை எல்லாம் சொல்லி 6 திரையரங்குகளில் இந்தப் படம் 100 நாட்களை கடந்ததையும் எடுத்துச் சொன்னார்.
நடிகர் திலகத்தின் 175-வது படவிழா மதுரையில் நடைபெற இருந்ததையும் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டதால் அந்த விழா ரத்து செய்யப்பட்டதையும் அதன் காரணமாகவே அவன்தான் மனிதன் படத்தின் 100-வது நாள் விழா கொண்டாடப்படாமலே போனது என்பதையும் குறிப்பிட்ட அவர் அதை ஈடு செய்யும் வண்ணம் அந்தப் படம் இப்போது 40 வருடங்களை நிறைவு செய்வதை முன்னிட்டு ஒரு மெமெண்டோ [Memento] தயார் செய்யப்பட்டு அதை நடிகர் திலகத்திற்கு வழங்குவது போல் அவரின் அருந்தவப் புதல்வர் ராம்குமார் அவர்களுக்கு வழங்குகிறோம் என்று அறிவிக்க அமைப்பின் தலைவர் மகேந்திரா அதை ராம்குமார் அவர்களுக்கு வழங்கினார்.
அதே போல் மற்றொரு மெமெண்டோவும் தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம் அவர்களுக்கு வழங்கப்பட இருந்தது. உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அவரால் வர முடியவில்லை என்பதினால் அந்த மெமெண்டோவை அவர் வீட்டிற்கு சென்று கொடுப்பதாக முடிவு செய்யப்பட்டது.
விழா முடிந்து படம் திரையிடப்படும் என்று சொன்னவுடன் ராம்குமார் மீண்டும் மேடைக்கு வந்து இந்தப் படம் சிங்கப்பூரில் ஷூட்டிங் நடைபெற்றபோது நடிகர் திலகம் படப்பிடிப்பு குழுவில் இருந்தவர்களை பயன்படுத்தியே மூன்று நாட்கள நாடகம் நடத்தி அதில் வந்த வசூலை சிங்கப்பூர் அரசிற்கே கொடுத்து விட்டார் என்ற தகவலை பகிர்ந்துக் கொண்டார். அந்த நாடங்களுக்கு பிரமாதமான வரவேற்பு இருந்ததால் வெள்ளி சனி மாலைக் காட்சி மட்டுமல்லாமல் ஞாயிறு அன்று மாட்னி மற்றும் மாலைக்காட்சி என இரண்டு காட்சிகள் நடைபெற்றனவாம். நடத்தப்பட்ட நாடகங்கள் சாம்ராட் அசோகன் மற்றும் ஓடிப்போன கணவன் எனும் நகைச்சுவை நாடகம். இரண்டாவதாக குறிப்பிட்ட நாடகம் பலரும் முதன் முறையாக கேள்விப்படுகிறோம்.
அது முடிந்தவுடன் படம் ஆரம்பம். படம் மட்டுமா ரசிகர்களின் அலப்பரையும்தான். அது பின்னர்.
அன்புடன் .
செந்தில்வேல் சார்,
http://i.ytimg.com/vi/IGu4NndwSn8/hqdefault.jpghttp://i1087.photobucket.com/albums/..._002344275.jpg
தங்கள் புதிய ஆப்டிகல் ஷோரூம் திறப்பு விழாவிற்கு என் மனம் நிறை வாழ்த்துக்கள். கடைக்கு அரிமா என்று பெயர் வைத்துள்ளீர்கள். எதை மனதில் வைத்து இப்பெயரை கடைக்கு சூட்டி உள்ளீர்கள் என உணர முடிகிறது. நம் சிங்கத்தை மனதில் வைத்துதானே?
ஆல்போல் தழைத்து அருகு போல் வேரூன்ற, என் இறைவனாம் நடிகர் திலகம் தங்களுக்கு ஆசி தந்து வழி நடத்துவாராக.
NT wearing different cool glasses from Arima Opticals ?!
NT the brand Ambassador for Arima Opticals!
https://www.youtube.com/watch?v=Ogv_5o3Ejw8
https://www.youtube.com/watch?v=Ryyh63el8VY
https://www.youtube.com/watch?v=CMfbEd5aggI
Siththoor Vasu's logo! NT wearing cool glasses from Arima!
https://www.youtube.com/watch?v=6I-ECNaot8o
Hollywood patrons too wear sunglasses / under water glasses too...... from Arima!!
https://www.youtube.com/watch?v=cuMM72G5k48
நமது நடிகர் திலகம் இணைய தளம் ஒரு லட்சம் பார்வையாளர்களைக் கடந்த மகிழ்ச்சியினைப் பகிர்ந்து கொண்ட போது, உடனடியாக தொலைபேசியில் வாழ்த்துக் கூறி முநதிவிட்ட பம்மலார்
உடனியாக மய்யத்தில் வாழ்த்துப் பதிவிட்ட முரளி சார், மதுரை சந்திரசேகர்,
தன் ஆழ் (அவர் மட்டுமா நம் அனைவரின்) மனதில் உள்ள நியாயமான ஆதங்கத்துடன் வாழ்த்துக் கூறிய கோபால்,
ஹைதராபாத் ரவி,
சித்தூர் வாசுதேவன்,
நயமான நிழற்படத்தில் நச்சென்று வாழ்த்திய கோவை செந்தில்வேல்,
மற்றும் லைக்ஸ் அளித்தும் நன்றியைக் க்ளிக் செய்தும் வாழ்த்துக்களை அளித்த கிருஷ்ணாஜி, சிவாஜி செந்தில், பெரியவர் ராமஜெயம், கோபு, கல்நாயக், சுந்தரபாண்டியன் உள்பட வாழ்த்திய வாழ்த்துக் கூற உள்ள அனைத்து நல்லிதயங்களுக்கும் என் உளமார்ந்த நன்றி.
http://tamilgun.com/wp-content/uploa...pol-oruvan.jpg
திருச்சி கெயிட்டியில் இரு வேடங்களில் ஸ்டைல் மன்னன் கலக்கும்
என்னைப் போல் ஒருவன்
29.05.2015 முதல் தினசரி 4 காட்சிகளாக திரையிடப் படுகிறது.
தொடர இருக்கும் நாட்களில் பச்சை விளக்கு, ராஜ ராஜ சோழன் திரைக்காவியங்களும் அணி வகுப்பில் உள்ளன.
திருச்சி மக்களுக்கு ஜாலி தான்..
தகவலை அளித்த திரு அண்ணாதுரை அவர்களுக்கு நன்றி
திரு செந்தில்வேல்,
தங்களுடைய அரிமா ஆப்டிகல்ஸ் வெற்றிகரமாக இயங்கி சிறப்புடன் திகழ உளமார்ந்த நல்வாழ்த்துக்கள்.
சுந்தரபாண்டியன் சார்
முகநூலில் நண்பர் முக்தா ரவி அவர்களின் பதிவினை மீள்பதிவு செய்து புதிய தகவலைப் பகிர்ந்து கொண்டமைக்கு பாராட்டுக்கள்.
முத்தையன் அம்மு சார்
நடிகர் திலகத்தின் அந்தமான் காதலி திரைக்காவிய அழகுத் தோற்றங்களின் அணிவகுப்பில் தெரிவது அவரது வசீகரம் மட்டுமல்ல, அந்த நிழற்படத்திற்குப் பின் உள்ள தங்களுடைய உழைப்பும் தான்.
தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள்.
திரு சிவாஜி செந்தில்
நாளுக்கு நாள் நடிகர் திலகம் தங்களுடைய வித்தியாசமான அணுகுமுறைகளிலும் கோணங்களிலும் பல புதிய தகவல்களை எங்களுக்கு அள்ளித் தருகிறார்.
தங்கள் பணி மென்மேலும் தொடரட்டும்.
https://fbcdn-sphotos-f-a.akamaihd.n...218455ad1a501a
மேற்காணும் அபூர்வ நிழற்படத்திற்கு நன்றி, திரு ராஜபாளையம் திருப்பதி ராஜா. நமது மய்யத்தின் அன்றாட பார்வையாளர்களில் ஒருவர். இவரைப் போல் இன்னும் பலர் நம் மய்யத்தில் இணைந்து கொள்ள ஆர்வமாயுள்ளனர். சிலர் விண்ணப்பித்து விட்டுக காத்திருக்கின்றனர். அவர்களில் நமது தூத்துக்குடி ரசிகர் பெரியவர் திரு நடராஜனும் ஒருவர். விரைவில் இவர்கள் நம் மய்யத்தில் இணைவர் என ஆவலுடன் காத்திருக்கிறேன்.
இன்று பிறந்த நாள் கொண்டாடும் திரு திருப்பதி ராஜா அவர்களுக்கு நமது உளமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
அவன்தான் மனிதன்
அவன்தான் மனிதன் நடிகர் திலகம் ரசிகர்களுக்கு மனதளவில் மிக நெருக்கமான படம். பெரும்பாலான ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை எப்போதும் பெறும் படம். ஆகவே இந்த மாதம் அவன்தான் மனிதன் என்றவுடன் பல ரசிகர்களும் உற்சாகமாகி விட்டார்கள். நாம் தேதியை முடிவு செய்து அரங்கத்தையும் செய்த பிறகுதான் அன்றைய தினம் IPL Final என்று தெரிய வந்தது. அன்றைக்கு போய் வைத்திருக்கிறீர்களே போன்ற கேள்வியெல்லாம் வந்தது. நான் சொன்னேன் நாங்கள் World Cup Final -யே பார்த்தவர்கள். ஆகவே இது எங்களுக்கு சஞ்சலம் தரும் விஷயமில்லை என்று. இல்லை CSK இறுதி ஆட்டத்திற்கு வந்தால் என்ற கேள்வி அடுத்து! அவர்கள் கேட்டது போல நடந்தது. ஆனால் என்னதான் CSK என்றாலும் தான் தான் CSK என்பதை நிரூபித்தார் நடிகர் திலகம். ஆம் என்றைக்கும் Cinemavin Super King நடிகர் திலகம்தானே. அரங்கம் நிறைந்து வழிய ஆட்கள் குழுமினர்.
இந்தப் படத்தில் நடிகர் திலகம் பல நாகசு வேலை காட்டியிருப்பார். அன்றைய நாட்களில் அவர் நடித்துக் கொண்டிருந்த பாணியிலிருந்து மாறுபட்டு அடக்கி வாசித்திருப்பார் தன் மனைவி பிரசவத்தில் இறந்து போய் விட்டாள் என்று தெரிந்ததும் ஒன்றுமே பேசாமல் அப்படியே மெதுவாக நடந்து மடங்கி சரிவாரே அதெல்லாம் கிளாஸ். நேற்றைய முன்தினம் ரசிகர்கள் ஆரம்பக் காட்சி முதலே தயாராகி விட்டனர். காட்சிக்கு காட்சி கைதட்டல். சிங்கப்பூர் காட்சிகள் ஆரம்பித்தவுடன் குதுகலம் இறக்கை கட்டி பறக்க ஆரம்பித்தது. ஊஞ்சலுக்கு பூச்சூட்டி பாடல் ஆரம்பித்ததிலிருந்து அலப்பரை உச்சக்கட்டத்திற்கு போக ஆரம்பித்தது. மூன்றாவது சரணம் ஆரம்பிக்கும்போது அனைவரும் ரெடி.
சுமார் நான்கு வருடங்களுக்கு முன் நடிகர் திலகம் திரியில் நண்பர் சாரதி அவர்கள் எழுதிய ஒரு பதிவை தருகிறேன்.
சென்ற வாரம், என்னுடைய கசின்கள் அனைவரும் ஒரு நிகழ்வுக்காக ஒன்று கூடினோம். எல்லோரும் ஒன்று கூடினால், பேச்சு எங்கெங்கோ சென்று கடைசியில், சினிமாவில் வந்து நிற்கும். சினிமாவில் வந்து கடைசியில், நடிகர் திலகத்தில் வந்து மையம் கொள்ளும். என்னுடைய அண்ணன் மகன், "போன வாரம் ஏதோ ஒரு சிவாஜி படத்தின் பாடலைப் பார்த்துக் கொண்டிருந்தோம்; உடனே, உன் நினைவு வந்து விட்டது" என்று சொன்னான். அப்படி பேசிக் கொண்டிருக்கும்போதே, கலைஞர் டிவியின் தேனும் பாலும் நிகழ்ச்சியில், "அவன் தான் மனிதன்" படத்தில் வரும் "ஊஞ்சலுக்குப் பூச்சூட்டி" பாடல் ஆரம்பித்தது. இது அத்தனை நடிகர் திலகத்தின் ரசிகர்களுக்கும் பிடித்த பாடலாயிற்றே! நான் அவனிடம் சொன்னேன் "இந்தப் பாடலின் கடைசி சரணத்தில், அவர் மெரூன் கலரில் சட்டை அணிந்து கொண்டு வருவார். "இலக்கிய ரசத்தோடு என்று ஆரம்பிப்பதற்கு முன்னர், ஒரு மாதிரியான போஸில் ஆரம்பிப்பார். பாடிக் கொண்டே, கடைசியில், "ஓவிய சீமாட்டி .." எனும்போது, ஒரு ஸ்டைல் பண்ணுவார். பார்" என்று கூறி, வீட்டில் இருந்த அனைவரும், நினைவுகளில் மூழ்கி, சரியாக அந்தச் சரணம் துவங்கி முடிந்தவுடன், அந்த ஸ்டைல் வரவும், எல்லோரும் தங்களை மறந்து வீட்டிலேயே கைத்தட்ட, வீட்டிலிருந்த மற்றவர்கள் ஓடி வந்து பார்க்க, சுவையாக அந்தப் பகல் கழிந்தது.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
(17.08.2011)
இப்படி 10 பேர் கூடும் வீட்டிலேயே இந்தளவிற்கு response என்றால் நூற்றுக்கணக்கான சிவாஜி ரசிகர்கள் ஒன்று சேர்ந்து பார்க்கும்போது எப்படி இருந்திருக்கும்? இதுவரை நாம் திரையிட்டதிலேயே உச்சபட்ச அலப்பரை இந்தக் காட்சிக்குத்தான் என்று அடித்துச் சொல்லலாம். அதன்பிறகு அன்பு நடமாடும் கலைக்கூடமேவிற்கும் எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது பாடல்கள் அனைத்திற்கும் அலப்பரை. படத்தின் உயிர்நாடி பாடலான ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா பாடலில் வரும் வரிகளான நண்பனிடம் தோற்று விட்டேன் பாசத்தாலே மற்றும் இன்னும் நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்பேன் மற்றும் கடலளவு கிடைத்தாலும் மயங்க மாட்டேன் என்ற வரிகளின்போதும் செம அப்ளாஸ். மனிதன் நினைப்பதுண்டு பாடலுக்கும் நல்ல வரவேற்பு.
வசனங்களைப் பொறுத்தவரை முதல் காட்சியில் மேயராக பதவியேற்கும்போது ஆரம்பித்து இறுதிக்காட்சி வரை நடிகர் திலகத்தின் ஸ்பெஷல் வசனங்களுக்கு சரியான response. குறிப்பாக மேஜரின் எல்லாம் பேசி முடிச்சுடீங்களா எஜமான் என்பதற்கு நடிகர் திலகம் சொல்லும் ஆஹா, ராசி என்பது மோதிரத்திலியா இருக்கு. இங்கே என்று நெற்றியை வரைந்து காட்டுவது, இந்த கைக்கு மேலே இருந்து கொடுத்துதான் பழக்கம், கீழே கையை நீட்டி பழக்கமில்லை என்பது.
செஸ் விளையாட்டு விளையாட வரும் குட்டி பெண் ராஜா பொம்மை உடைந்திருக்கிறது என்று சொல்ல அதை பார்த்துக்கொண்டே எவ்வளவு உடைஞ்சாலும் ராஜா ராஜாதான் என்ற நடிகர் திலகத்தின் வசனத்திற்கு தியேட்டரே அதிர்ந்தது.
சுருக்கமாக சொன்னால் start to finish ஆட்டம் அலப்பறை.
மொத்தத்தில் ஒரு மிக நல்ல மாலைப் பொழுது! நன்றி அனைவருக்கும்!
அன்புடன்
செந்தில்வேல் அவர்களே,
உங்களின் அரிமா ஆப்டிகல்ஸ் அரிமா பாய்ச்சல் காணட்டும்!
உங்களுக்கு வெற்றி மேல் வெற்றி கிடைக்கட்டும்!
அன்புடன்
முரளி சார்,Quote:
Cinemavin Super King
தங்கள் ஸ்டைலே தனி...
நடிகர் திலகம் CSK என்றால் நீங்கள் ESK...
Ezuthil Super King...
முரளி -படத்தின் அருமையை விட உங்கள் பதிவு இன்னும் அருமையாக உள்ளது . இடைவேளைக்குப் பிறகு ஒரே சோகத்தை பிழியும் கதை - மகிழ்ச்சியையும் சோகத்தையும் இன்னும் சரியான அளவில் சேர்த்து இருக்கலாமோ என்று நினைக்கத்தோன்றும் - "ஆட்டுவித்தால் யாரொருவர் " இன்னும் எல்லோரையும் ஆட்டி வைத்துக்கொண்டிருக்கும் பாடல் . ராஜா என்றுமே ராஜா தான் என்று ஒரு வசனம் இந்த படத்தில் வரும் - சாந்தி தியேட்டரின் கூரை மவுண்ட் ரோடு முழுவதும் சிதறியது நினைவிற்கு வருகின்றது .. இப்படி இவர் நடித்த மன்னிக்கவும் வாழ்ந்த படங்களில் சில :
1. பச்சை விளக்கு - சாரதி
2. கர்ணன்
3. நெஞ்சிருக்கும் வரை -ரகு
அன்புடன்
திரு முரளி அவர்களுக்கு
அனைத்து ரசிகருக்கும் பிடித்த காட்சிகளை பதிவு செய்ததற்கு மிக்க நன்றி.
செலுலாய்ட் சோழன் – 75
(From Mr.Sudhangan's Facebook)
அது என்ன `ஆண்டவன் கட்டளை’ ?
1964ம் வருடம் வந்த சிவாஜியின் படம் தான் `ஆண்டவன் கட்டளை’!
அதே சமயம் இந்த வருட சிவாஜிக்கு பல்வேறு கதாபாத்திரங்கள்!
இந்த வருடம் வந்த முதல் படம் கர்ணன் பற்றி பார்த்தோம்!
இந்த வருடம் வந்த இரண்டாவது படம் ` பச்சை விளக்கு ‘
இந்தப் படம் வேல் பிக்சர்ஸ் சார்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராம.அரங்கண்ணல் தயாரித்த படம்!
இந்த படத்தின் மூலக்கதையை ஜி.கே. சூர்யம் என்பவர் எழுதியிருந்தார்.
வசனத்தை ராம. அரங்கண்ணலும், இறைமுடிமணி என்பவரும் சேர்ந்து எழுதியிருந்தார்கள்.!
திரைக்கதை – இயக்கம் பீம்சிங்!
வழக்கம் போல விஸ்வநாதன் – ராமமூர்த்தி! கண்ணதாசன் காம்பினேஷன் தான்!
இந்தத் தொடரை எழுதும்போது எனக்கு இன்னொரு விஷயமும் சிவாஜி படங்களின் மூலமாக கிடைக்கிறது!
படத்தின் தரம் எப்படி ? அது கலைப்படமா ? அது நாடகப் பாணியாக இருக்கிறதா என்பதெல்லாம் விமர்சகர்களின் வேலை! ஆனால் ஒரு பாமரனாக சினிமா ரசிகனாக படங்களைப் பார்த்தால், மனித குணங்களின் மேன்மையையும், கீழ்மையையும், காட்டி, அவர்களுக்குள்ள படைப்பாற்றல்களையும், கலையான ரசனைகளையும் கொண்டுவந்தது அன்றைய படங்கள்!
பாசமலர் படம் என்பது பாசத்திற்கு வலு உள்ளது என்தை தமிழகத்திற்கே உணர்த்திய படம் !
அண்ணன் – தங்கை என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று தமிழக மக்களுக்கு உணர்த்திய படம்!
பாசத்திற்கு முன்னால் பணத்தின் பகட்டு நிற்காது என்பதை உணர்த்திய படம் பார் மகளே பார்!
அடுத்த கட்டத்திற்கு போன படம் தான் `பச்சை விளக்கு’
பாசம் என்பது உடன்பிறந்தவர்கள் மீது மட்டுமே காட்டப்படுவதல்ல!
நன்றியை தெரிவிக்கும் இன்னொரு பாணி பாசம் என்பதை உணர்த்திய படம் தான் ` பச்சை விளக்கு’
படம் முழுவதுமே இந்த நன்றியுணர்ச்சியும், படிப்பில்லாதவரிடம் இருக்கும் மேன்மையையும் காட்டிய படம்!
சிவாஜிக்கு இந்தப் படத்தில் ரயில் என்ஜின் ஒட்டுனர் கதாபாத்திரம்! அந்த மாதிரி கரியினால் ஒடும் ரயிலை இந்த தலைமுறையினர் பார்த்திருக்க மாட்டார்கள்! அவருக்கு ரயிலில் உதவியாளர் நாகேஷ்! அதாவது சிவாஜி ரயிலை ஒட்டும்போது, அவர் கரி அள்ளிப் போடுவார்! அந்த நாளில் சென்னை, எழும்பூர், வேப்பேரி, ஜாம்பஜார் பகுதிகளிலிருக்கும் ஆங்கிலோ- இந்தியர் ஆண்கள் பெரும்பாலும் நாகேஷ் இந்த படத்தில் செய்யும் பணியில் தான் இருப்பார்கள்! அந்த ஆங்கிலோ இந்தியர்கள் இங்கேயே தங்கிவிட்டதால் அறைகுறை தமிழில்தான் பேசுவார்கள்!
அந்த பாத்திரத்தை ஏற்றிருந்தார் நாகேஷ்! அன்றைய நாட்களில் ஆங்கிலோ இந்திய கணவர்களுக்கு ரயிலில் வேலையென்றால், அவர்களின் மனைவிமார்கள் நர்ஸரி பள்ளி ஆசிரியைகளாக இருப்பார்கள்!
அப்போதெல்லாம் குழந்தைகளுக்கு பாலர் ஆங்கிலப் பள்ளிகளில் ஆங்கில அரிச்சுவடியைக் கற்றுக்கொடுத்ததே இந்த ஆசிரியைகள் தான்!
பச்சை விளக்கு படத்தின் ஆரம்பமே நன்றியுணர்ச்சியின் உச்சகட்டத்தில் தான் துவங்கும்!
சிவாஜியின் தந்தை நாகையா! அவருக்கு இரண்டு பிள்ளைகள்! மூத்தவர் சிவாஜி! இளையவர் ஏவி.எம்.ராஜன்!
இருவரும் சிறுவர்களாக இருக்கும்போதே அவர்களின் தாயார் இறந்து போவார்! குழந்தைகளை எப்படி வளர்ப்பது என்று தெரியாமல், நாகையா தவிக்கும்போது அந்த வீட்டில் வேலை செய்யும் பெண், `அய்யா என்னுடைய இந்த சின்னப் பெண்ணை வளர்ப்பது மாதிரி, இந்த பிள்ளைகளையும் நான் வளர்க்கிறேன்’ என்பார்!
அந்த வீட்டு வேலை செய்யும் பெண்ணின் மகளான சிறுமியும், சிவாஜி சகோதரர்களும் அண்ணன் தங்கைகளாக வளர்வார்கள்! இப்போது அந்த தங்கைக்காக உயிரையே விடுவார் சிவாஜி! சிவாஜி திருமண நாளன்று அந்த வேலை செய்த பெண் இறந்து போவார்! அந்த பெண்மணி யார் என்று மனைவி செளகார் கேட்பார்! தாயில்லாத எங்களுக்கு அந்த ` அன்னம்மா’ தான் தாய்! அந்த அன்னம்மாவின் தங்கை என் சகோதரி’ என்பார் சிவாஜி!
அதனால்.....! அந்தப் பெண்ணை நன்கு படிக்க வைக்க சிவாஜி தம்பதிகள் குழந்தையே பெற்றுக்கொள்வதில்லை என்று முடிவு செய்வார்கள்! அந்த பெண் தான் வளர்ந்த பின் விஜயகுமாரி! அவரை டாக்டராக்க சிவாஜி படாத பாடு படுவார்!
தன்னை வளர்த்த தாயின் பிள்ளையிடம் சிவாஜி காட்டும் பாசத்தை வைத்தே சுழுலும் கதை!
முதியோர் இல்லங்களை தோற்றி வித்தவர்கள் பார்க்க வேண்டிய ஒரு படம்! `
நன்றி உணர்ச்சிதான் நல்லொழுக்கங்களின் ராணி’ என்பார் ரோமானிய தத்துவ ஞானி சிசெய்ரோ! பின்னர் இந்த நன்றியுணர்ச்சியைப் பற்றி தன் புத்தகத்தில் அப்துல் கலாம் எழுதியிருக்கிறார்!
ஒரு சமூகம் செழிக்க நன்றியுணர்ச்சி தான் ஒழக்க முதலீட்டின் அஸ்திவார கூறு. என்பார் அப்துல் கலாம்!
உலகத்தின் மிகப்பெரிய தேவை நன்றியுணர்ச்சி!
மனித குல மேம்பாட்டின் உச்சநிலை நன்றியுணர்ச்சி!
இதை இந்த நாட்டின் குடியரசுத் தலைவராக இருந்து பல நாடுகளைப் பார்த்து, இன்றைக்கு பல லட்சம் இளைஞர்களுக்கு ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக இருந்து அப்துல் கலாம் பறைசாற்றுவதை 1964 களில் சிவாஜி எம்.ஜி.ஆர் படங்கள் மூலமாக நம் திரைப்படக் கலைஞர்கள் சொல்லிக்கொண்டிருந்ததை என்ன சொல்ல ?
கூடவே கலைப் படிப்பை பற்றியும் கலாம் சொல்கிறார்! கலை ரசனை வளராத தேசம் வளராது என்கிறார்!
காரணம் அப்துல் கலாம் ஒரு வீணை இசைக் கலைஞர்! அவருக்கு ராகங்களின் மேன்மை தெரியும்!
தமிழ் கவிதைகளின் புனிதத்துவம் புரியும்! இவையெல்லாமே பச்சை விளக்கு படத்தின் விரவிக் கிடக்கும்!
இந்தப் படத்தின் பாடல்களில் தான் எத்தனை வேறு பாடுகள்!
இன்றும் முதல் வரியை பாட ஆரம்பித்தால் கடைசி வரி வரையில் பாடக் கூடிய வார்த்தைகள்! இசை!
சிவாஜி தன் இன்ஜின் டிரைவர் வேலையை முடித்துவிட்டு தன் மேல் கோட்டை தோளில் போட்டபடியும், தன் தலைத் தொப்பியை கையில் பிடித்தபடி, விசில் அடித்தபடி ஒரு ஒய்யார நடை நடந்து பாடலை ஆரம்பிப்பார்!
இந்த பாட்டில் பல்லவி முதலில் விசிலிலேயே வந்துவிடும்! அவர் வரிகளை ஆரம்பிக்கும்போது நாகேஷ் ரயில்வே நிலைய படிக்கட்டுகளிலிருந்து இறங்கி சிவாஜியுடன் சேருவார்!
`கேள்வி பிறந்தது அன்று – நல்ல
பதில் கிடைத்தது இன்று! ஆசை
பிறந்தது அன்று - யாவும்
நடந்தது இன்று!
இந்த பாட்டை சிவாஜி பாடிக்கொண்டே வரும்போது, கூட நடந்து வரும் நாகேஷின் அங்க அசைவுகளை `நடிப்பு’ சொல்லிக்கொடுக்கும் பள்ளிகளில் போட்டுக் காட்ட வேண்டும்!
நடிப்பின் அடிப்படை இலக்கணமே ஆக்சன் அல்ல! ரியாக்சன் என்பார்கள்!
அதற்கு உதாரணம் இந்தப் பாடல் காட்சியில் வரும் நாகேஷ் தான்!
http://i1234.photobucket.com/albums/...psghwmkxgt.jpg
(தொடரும்)
முரளி சார்,
மற்ற படங்களை miss பண்ணியதைப் பற்றிக்கூட கவலைப்படவில்லை. ஆனால், "அவன்தான் மனிதன்" திரை வெளியீட்டிற்கு வரமுடிய(வ)தில்லை என்ற கவலையை தங்களின் பதிவு போக்கிவிட்டது. நேரடியாக நிகழ்ச்சியைக் கண்ட திருப்தி ஏற்பட்டது. ஆட்டுவித்தால் யாரொருவர் பாடலை என்று, எங்கு கேட்டாலும், என் மனது சிறிது நேரம் சஞ்சலப்படும். பாடலைக் கேட்கும்போதே, பாத்திரப் படைப்புக்கேற்ற கண்ணதாசனின் வைர வரிகள், நடிகர்திலகத்தின் பாத்திரத்தோடு ஒன்றிய நடிப்பில் மிளிர்ந்து, காட்சிகள் நம் கண்ணுக்குள் நிழலாடும்..
நன்றி.
படம் : அவன்தான் மனிதன்
பாடல் காட்சி: ஆட்டுவித்தால் யாரொருவர்
http://i59.tinypic.com/34ex1qr.jpg