http://i66.tinypic.com/2igzp4z.jpg
Printable View
http://i66.tinypic.com/2di4n41.jpg
புகைப்படங்கள்-திரை உலகம் /திரைச்செய்தி.
உதவி:பெங்களூர் திரு. சி.எஸ். குமார்.
"நான் ஏன் பிறந்தேன்"....? என்று சுய ஆய்வு செய்து....
"அடிமைப்பெண்"களை
"பறக்கும் பாவை"களாக்கிய...,
"குடியிருந்த கோயிலே".....!
"இன்று போல் என்றும் வாழ்க" எம்மானே...!
"பல்லாண்டு வாழ்க" நின் புகழ்....!
இந்த காட்சியை பார்க்கும் யாருக்கும் ஆளவந்தான் படத்தின் கமலஹாசன் ஸ்டில் ஞாபகம் வராமல் இருக்காது. கிராபிக்ஸ் இல்லாத அந்த காலத்திலேயே மக்கள் திலகம் இந்த காட்சியை எப்படி எடுத்திருக்கிறார். நாடோடி மன்னனிலேயே இருவரும் கை குலுக்கும் சீனை எடுத்தவராச்சே. அவர் வெறும் நடிகர் மட்டுமே இல்லை. சினிமாவின் எல்லாவற்றையும் அறிந்தவர் .
இந்த வார பாக்யா இதழில், புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். தென்னக ஜேம்ஸ் பாண்டாக
நடித்த "ரகசிய போலிஸ் 115" திரைப்பட கதையை தொகுத்து பிரசுரம் செய்துள்ளனர்.
http://i65.tinypic.com/14biwzd.jpg
http://i63.tinypic.com/vx0mq9.jpg
http://i64.tinypic.com/16bf31s.jpg
http://i63.tinypic.com/ncbam9.jpg
http://i65.tinypic.com/5f3ioz.jpg
மக்களதிலகம் மக்களதிலகம் மக்களதிலகம்
Raththam
"நான் ஏன் பிறந்தேன்"....? என்று சுய ஆய்வு செய்து....
"அடிமைப்பெண்"களை
"பறக்கும் பாவை"களாக்கிய...,
"குடியிருந்த கோயிலே".....!
"இன்று போல் என்றும் வாழ்க" எம்மானே...!
"பல்லாண்டு வாழ்க" நின் புகழ்....!
மக்கள்திலகம் mgr அபிமானிகள் அனைவரின் பதிவுகளும் அருமையாக உள்ளன... திரு அமராmgr, திரு குருநாதன் - ஆகியோர் புரட்சிநடிகரின் காவியங்கள் - சாதனை ஆவணங்கள், புகைப்படங்கள் ஆகியனவற்றை பதிவிடுமாறு பாசத்துடன் கேட்டுக்கொள்கிறேன்...
தினத்தந்தி -முத்துச்சரம் -31/10/2015
http://i67.tinypic.com/205upp0.jpg
ஆக்ஸ்போர்ட் நிறுவனம் வெளியிட்ட உலக சினிமாவின் சரித்திரம் என்கிற புத்தகத்தில் சினிமாவின் மேம்பாட்டுக்காக உழைத்த 140 பேரை வெளியிட்டுள்ளது .
அதில் இந்தியாவை பொறுத்த மட்டில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். , இந்தி நடிகை
நர்கீஸ், இயக்குனர் சத்யஜித்ரே ஆகிய மூவரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. .
இனிய நண்பர்கள் திரு லோகநாதன் அவர்களின் 9000 பதிவுகளுக்கும் . திரு முத்தையன் அவர்களின் 8000 பதிவுகளுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள் .
இனிய நண்பர் திரு ராகவேந்திரன் அவர்களின் 8000 பதிவுகளுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் .
நவம்பர் மாதத்தில் வெளி வந்த மக்கள் திலகத்தின் படங்கள்
1. விவசாயி - 01.11-1967
2. படகோட்டி - 03.11.1964
3. தாய் சொல்லை தட்டாதே - 07.11.1961
4. நம்நாடு - 07.11. 1969
5. உரிமைக்குரல் . 07.11.1974
6. பறக்கும் பாவை - 11.11.1966
7. ஊருக்கு உழைப்பவன் 12.11.1976
8. பரிசு . 15.11-1963
9. மகாதேவி - 22.11.1957
10. சிரித்து வாழ வேண்டும் - 30.11 .1974
சாதித்த தலைவர்
‘பல்லாண்டு வாழ்க’ இந்த வார்த்தைகளைக் கேட்டாலே எவ்வளவு மகிழ்ச்சி. மங்கல நிகழ்ச்சிகளில் ஒலிக்கும் இந்த வார்த்தைகள் வாழ்த்து பெறுவோருக்கு மகிழ்ச்சியையும் வாழ்த்துவோருக்கு மனநிறைவையும் தருபவை. நமக்கோ இது தலைவரின் படம் என்பதால் இரட்டிப்பு மகிழ்ச்சி + மனநிறைவு. தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் பிடித்த, சொந்த வாழ்க்கையில் இருந்ததைப் போலவே லட்சியவாதியாக தலைவர் வாழ்ந்து காட்டிய திரைப்படம். (மேலே உள்ள படத்தை பதிவிட்ட திரு.கலியபெருமாள் அவர்களுக்கு நன்றி.)
இயக்குநர் சாந்தாராம் அவர்களின் ‘தோ ஆங்கேன் பாரா ஹாத்’ படத்தின் தமிழாக்கம். தலைவரின் ரசிகர்களான நமது விருப்பப்படி அமைய வேண்டும் என்பதற்காக தமிழாக்கத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன.
பத்திரிகையாளர் மணியன், தனது உதயம் புரொடக்க்ஷன்ஸ் சார்பில் தலைவருக்கு நெருக்கமாகவும் ஜோதிடராகவும் இருந்த வித்வான் லட்சுமணன் அவர்களுடன் சேர்ந்து இதயவீணை, சிரித்து வாழவேண்டும் (இந்தப் படத்தில் ஜெமினி அதிபர் வாசனின் மகனும் ஆனந்த விகடன் ஆசிரியராக இருந்தவருமான எஸ்.பாலசுப்பிரமணியன் ஒரு பங்குதாரராக இருந்தார். எஸ்.எஸ்.பாலன் என்ற பெயரில் இயக்கமும் அவரே) படங்களை தொடர்ந்து மூன்றாவதாக தயாரித்து வெளியிட்ட படம் பல்லாண்டு வாழ்க. படத்துக்கு இயக்கம் தலைவரின் சம்பந்தி கே.சங்கர். சென்னை (2 தியேட்டர்கள்), மதுரை, சேலம், திருச்சி, நெல்லை ஆகிய ஊர்களிலும் இலங்கையிலும் 100 நாட்களை தாண்டிய வெற்றிக் காவியம். இதயக்கனி முழுமையாக ஓடி முடிந்த பிறகு, பல்லாண்டு வாழ்க வெளியாகியிருந்தால் வெற்றி வீச்சு இன்னும் அதிகமாக இருந்திருக்கும்.
‘எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே.. அவர் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே..’ என்று தலைவர் பாடிய வரிகளின்படி மனிதர்கள் எவருமே குற்றவாளிகளாக பிறப்பதில்லை. சந்தர்ப்ப, சூழ்நிலைகளால் குற்றம் செய்யும் அவர்களை தங்கள் தவறை உணருமாறு செய்து,கொஞ்சம் கொஞ்சமாக திருத்தி, அந்தப் பணியில் தானும் அவர்களோடு சேர்ந்து வாழ்ந்து சத்திய வேள்வி நடத்தி, அவர்களை நல்ல மனிதர்களாக சமூக வாழ்க்கைக்கு மீண்டும் திரும்ப வைக்கும் லட்சியவாதியின் கதை. இந்தப் பாத்திரத்துக்கு தலைவரைத் தவிர வேறு யாரும் பொருத்தமாக இருக்க முடியாது.
* கத்தியால் குத்த வரும் திரு. மனோகரை கையை பிடித்து சுழற்றி வீசும் தலைவரின் அட்டகாச அறிமுகக் காட்சியிலேயே உற்சாக ஆரவாரத்தால் தியேட்டர் அதகளப்படும். பின்னர், (கையில் பேப்பர் வெயிட்டை ஸ்டைலாக உருட்டியபடியே)மனோகரின் குடும்பத்தாரை சந்திக்க ஏற்பாடு செய்ய அனுமதி கோரும் கடிதத்தை ஏற்கனவே எழுதி இருப்பதாக கூறிவிட்டு, அருகில் உள்ள காவலரிடம் ‘இங்கு நடந்தது (மனோகரின் செயல்) யாருக்கும் தெரிய வேண்டாம்’ என்று தலைவர் கூறுவதே அவரது உயர்ந்த பண்பையும், லட்சிய நோக்கத்தையும், மனோகருக்கு அதனால் துன்பம் நேர்ந்து விடக் கூடாது என்ற கருணை உள்ளத்தையும் விளக்கிவிடும்.
* அடுத்து, அவர் தன் பொறுப்பில் அழைத்துச் சென்று திருத்த நினைக்கும் கைதிகளை பார்க்க சிறைக்கு செல்லும் காட்சி. சிறை வாயில் கதவில் பிரம்மாண்ட பூட்டு தொங்கும். ‘தனியொரு மனிதன் திருந்தி விட்டால் சிறைச்சாலைகள் தேவையில்லை...’ என்று நான் ஆணையிட்டால் படத்தில் தலைவர் பாடுவார். ‘சூழ்நிலையின் காரணமாக கருத்துக் குருடர்களாகி குற்றம் இழைத்து விட்ட மனிதர்களை அடைத்து வைக்க உதவுகிறாயா? உன்னை கவனித்துக் கொள்கிறேன்’ என்பதை சொல்லாமல் சொல்வது போல சிறைக்குள் நுழையும் போது அந்த கதவில் தொங்கிக் கொண்டிருக்கும் பிரம்மாண்ட பூட்டை பார்த்து ஒரு தட்டு தட்டி விட்டு செல்வார் பாருங்கள்... வார்த்தையே இல்லாமல் அந்த ஒற்றைத் தட்டலிலேயே ஓராயிரம் அர்த்தங்களை சொல்லும் தலைவரின் நடிப்பு நுட்பத்தை என்னவென்று சொல்ல? சமீபத்தில் திரு.சைலேஷ் பாசு அவர்கள் நான் ஆணையிட்டால் பட டைட்டில் கார்டை பதிவிட்டிருந்தார். அதில் தலைவரை ‘நடிகப் பேரரசர்’ என்று காட்டுவதில் என்ன மிகை இருக்க முடியும்?
*இந்திய வரைபடத்தின் பின்னால் ஒரு மனித உருவத்தை வரைந்து அந்த படத்தை கிழித்து, அரையும் குறையுமாக வரும் பெண்களை விட்டு படத்தை சேர்க்கச் சொல்வார். வரைபடத்தை சேர்க்கத் தெரியாத பெண்கள், மனித உருவத்தை சரியாக சேர்த்து விடுவார்கள். ‘ஒரு மனிதனின் படத்தை சரியாக பொருத்தி வைத்தால் அதன் பின்னே உள்ள இந்தியாவின் வரைபடம் சரியாக இருக்கும்போது, தனி ஒரு மனிதன் திருந்தினால் இந்த நாடே ஏன் சரியாக இருக்காது?’ என்று அவர்களை தலைவர் மடக்கி புத்தி சொல்லி அனுப்பும் காட்சி....
*கைதிகள் தப்பியோடிதை அறிந்ததும் அவர்களைத் தேடி ஓடி வருவார். அப்போது அந்த பாழடைந்த பங்களாவின் வாயிலில் இருக்கும் படிக்கட்டுகளில் கால் பதிக்காமல் தாண்டி குதித்து வருவதன் மூலம் அவசரத்தையும் பரபரப்பையும் தலைவர் வெளிப்படுத்தும் காட்சி.......
* தப்பியோடிய கைதிகள் பங்களாவுக்கே திரும்பி விட்டார்கள் என்பதை அறிந்தவுடன் மேலதிகாரியான கோபாலகிருஷ்ணனிடன், ‘என் பரிசோதனை தோல்வி அடைந்து விட்டது’ என்று எழுதிக் கொடுத்த கடிதத்தை டேபிளில் இருந்து திரும்ப எடுத்து ‘என் லட்சியம் என்றுமே தோற்காது’ என்று கூறி கடிதத்தை அவரது கண் எதிரிலேயே கிழித்துப் போடும்போது தலைவர் முகத்தில் காட்டும் வெற்றிப் பெருமிதம்.....
*கிளைமாக்சில் லதாவையும் இரண்டு குழந்தைகளையும் வில்லன் கோஷ்டி ஜீப்பில் கடத்திப் போகும்போது ஜீப்பை துரத்திக் கொண்டு அதன் வேகத்துக்கு ஈடு கொடுத்து தலைவர் ஓடும் வேகம்..... (படம் வெளியான தேதி 31-10-1975. அதற்கு மறுநாளில் இருந்து சரியாக 78வது நாளில் அவர் 60 வயதை எட்டிப் பிடிக்க இருந்தார் என்பதை நினைவில் கொண்டு இந்தக் காட்சியைப் பார்த்தால், பிரமிப்பில் இருந்து விடுபட சில நிமிடங்கள் ஆகும் நண்பர்களே. மற்றவர்களை விடுங்கள். நமக்கே உடல் நிலை காலையில் இருப்பது போல மாலையில் இருக்க மாட்டேன் என்கிறது. அந்த வயதில்.... அது சரி... சாதாரண மனிதர்களான நம்மோடு தலைவரை ஒப்பிட்டு பேசுவதே தீது. மனித வடிவில் வந்த அந்த தெய்வ அவதாரத்தால் முடியாதது ஏது?)
* அந்த ஜீப் கட்டுப்பாட்டை இழந்து ஓடும்போது ஸ்டீரிங்கை என்ன திருப்பியும் பயன் இல்லாததால் தலையைத் திருப்பி பதற்றத்தையும் ஏமாற்றத்தையும் சலிப்பையும் காட்டும் முகபாவம்....
*மனோகரின் இரண்டு குழந்தைகளுடன் அவரது தாயார் அவரைப் பார்க்க வருகையில், அந்த தாய் அன்போடு தரும் லட்டை வாங்கிச் சுவைக்கும் போது கலங்கும் கண்களுடன் தலைவர் காட்டும் நெகிழ்ச்சி....
* இரண்டு குழந்தைகளையும் தனக்கு பின் யார் பார்த்துக் கொள்வார்கள்? என்று மனோகரிடம் அவரது தாய் வேதனைப்படும்போது, அந்தக் குழந்தைகள் இங்கேயே இருக்கட்டும் என்று சொல்லும் தலைவரைப் பார்த்து அந்தத் தாய், ‘‘ஏழைகளின் கஷ்டத்தை புரிஞ்சவங்க இந்த உலகத்துலே உன்னைப் போல யாரும் இல்லப்பா. எனக்கு மிச்சம் மீதி ஆயுசு இருந்தா அது உன்னையே சேரட்டும்’ என்று கூறும்போது, உணர்ச்சிப் பெருக்குடன் பெருமிதத்தால் விம்மும் நெஞ்சுடன், தோழர்களின் கைதட்டலால் திரையரங்கமே அதிரும் அந்தக் காட்சி......
.................என்று நான் ரசித்த காட்சிகள் (இதெல்லாம் சாம்பிள்கள்தான்) ஏராளம். ஒவ்வொன்றையும் பற்றி விரிவாக பின்னர், நேரம் கிடைக்கும்போது (அய்யோ... தலைவரே... ஒரு நாளைக்கு 25 மணி நேரம் என்று இருக்கக் கூடாதா?) தனியே விருந்தாக பரிமாறி அனைவரும் சுவைக்கலாம். இப்போது நான் கூற விரும்புவது படத்தின் காட்சிகளோடு இணைந்த இரண்டு முக்கிய கருத்துக்களை.
ஒன்று...
கைதிகளை அன்பால் வசப்படுத்தி பணிய வைக்கும் தலைவரின் அன்பும், சாந்தமும் தவழும் குளோசப்பில் காட்டப்படும் அந்த கண்கள். ஏசுநாதர் வேடம் மிகச் சிறப்பாக அவருக்கு பொருந்தியதற்கு கருணை ஒளியை உமிழும் அந்த காந்தக் கண்களுக்கு முக்கிய பங்கு உண்டு. கல்கண்டு பத்திரிகையின் ஆசிரியராக இருந்த திரு. தமிழ்வாணனின் மகன் திரு.லேனா தமிழ்வாணன் அவர்களின் பேட்டியை திரு.ஜெய்சங்கர் அவர்கள் சமீபத்தில் பதிவிட்டிருந்தார். திரு.தமிழ்வாணன் அவர்களுக்கு தலைவரைப் பிடிக்காது. அவரை கடுமையாக தாக்கி எழுதியுள்ளார். இருந்தாலும் பழைய கசப்புகளை மனதில் வைத்துக் கொள்ளாமல் தனது இல்ல திருமணத்துக்கு வரவேண்டும் என்று திரு.லேனா தமிழ்வாணன் தலைவரை சந்தித்து அழைப்பு விடுத்ததை ஏற்று பகைவனுக்கு அருளும் நன்நெஞ்சுக்கு சொந்தக்காரரான தலைவர், அந்த திருமண விழாவுக்கு சென்று சிறப்பித்துள்ளதை திரு.லேனா அந்தப் பேட்டியில் கூறியுள்ளார்.
இதை எதற்கு கூறுகிறேன் என்றால், அந்த கருணை தெய்வத்தை கடுமையாக விமர்சித்த திரு. தமிழ்வாணன் அவர்களே ஒருமுறை கூறினார்...... ‘எம்.ஜி.ஆரை பிடிக்காதவர்கள் அவர் அருகிலே செல்லாதீர்கள். பத்து அடி தொலைவிலேயே இருந்து பார்த்துவிட்டு திரும்பி விடுங்கள். அப்படி அவர் அருகில் சென்றால் உங்களையும் அவர் தனது காந்த சக்தியால் இழுத்து தன் வசமாக்கி விடுவார்’’ என்றார். அப்படிப்பட்ட வசீகர சிரிப்புக்கும் காந்த கண்களையும் கொண்டவர் நம் தலைவர். அந்தக் கண்களை எதிரிகள் சந்தித்தால் தன் காலில் விழுந்து விடுவார்கள், பின்னர், அதனால் அவர்கள் வெட்கப்படுவதோடு, மனமும் புண்படும்என்பதற்காகவே தன் கண்களை மறைத்துக் கொள்ள கறுப்புக் கண்ணாடி அணிந்தாரோ என்னவோ அந்த கருணாமூர்த்தி? இருந்தாலும் ‘மக்கள் திலகத்தை’ நினைக்கும்போது திரு.தமிழ்வாணன் அவர்களை நினைக்காமல் இருக்க முடியாது. ஏனென்றால், தனது பத்திரிகையில் ஒரு வாசகர் கேள்விக்கு பதில் அளிக்கையில் அந்தப் பட்டத்தை தலைவருக்கு வழங்கியதே அவர்தானே!
இரண்டு.....
பல்லாண்டு வாழ்க படத்தில் கைதிகளின் பெயர்களை கவனித்தால் ஒரு நுட்பமான உண்மையை உணரலாம். திரு.நம்பியாரின் பெயர் பைரவன், திரு.வீரப்பாவின் பெயர் டேவிட். திரு.குண்டுமணியின் பெயர் காதர். அதாவது குற்றவாளிகள் சந்தர்ப்ப வசத்தால் குற்றம் செய்கிறார்களே தவிர அவர்கள் எந்த ஒரு குறிப்பிட்ட மதத்தையோ, சாதியையோ சேர்ந்தவர்கள் அல்ல என்பதை விளக்குவதுபோல எல்லா மதங்களைச் சேர்ந்தவர்களின் பெயர்களும் பயன்படுத்தப்பட்டிருக்கும். எந்த ஒரு மதத்தை சேர்ந்தவர்களும் புண்படக் கூடாது என்ற தொலைநோக்கு சிந்தனையுடன் கூடிய அந்த மதிநுட்பத்தின் மறுபெயர்.. மக்கள் திலகம்.
பொதுவாகவே தலைவர் எந்த மதம், இனம், சாதியையும் புண்படுத்தாதவர் என்பதோடு, அதுபோன்ற காட்சிகளையும் தன் படங்களில் அனுமதிக்க மாட்டார். ‘நீதிக்கு தலைவணங்கு’ படத்தில் கோயில் பூசாரியாக வரும் திரு.தேங்காய் சீனிவாசன் அவர்கள் தவறான செயல்களில் ஈடுபடுவார். வெறும் துண்டை மட்டும் அணிந்தபடி திறந்த மார்போடுதான் இருப்பார். ஆனாலும் அவரது சாதியை குறிக்கும் எந்த அடையாளங்களும் அவரிடம் காணப்படாது. அவர் எந்த சாதி என்று காட்டமாட்டார்கள். அதுதான் சர்வ சமுதாயக் காவலரான நம் தலைவரின் தனிப் பண்பு.
அது மட்டுமல்ல, எந்த சாதியையும் புண்படுத்தாததோடு தன் கதாபாத்திரங்கள் மூலம், தான் குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவன் என்று அவர் காண்பித்துக் கொண்டதும் இல்லை. ‘நான் அந்த சாதியை சேர்ந்தவன்.... இந்த சாதியை சேர்ந்தவன்’ என்றெல்லாம் சாதிப்பற்றை வெளிப்படுத்தும் பாத்திரங்களை ஏற்க மாட்டார் என்பதோடு, அதுபோன்ற வசனங்களை பேசவும் மாட்டார். திரைப்படத்தில் மட்டுமல்ல, சொந்த வாழ்க்கையிலும் என்னதான் நெருங்கிய நண்பர்கள், வேண்டியவர்கள் என்றாலும் கூட அவர்களை, ‘‘வாய்யா.. நாயுடு’, ‘‘என்னடா.... முதலியாரே’’ என்றெல்லாம் அழைக்கும் பழக்கம் தலைவருக்கு இல்லை.
‘எல்லைகள் இல்லா உலகம்... என் இதயமும் அதுபோல் நிலவும்...’ என்று பாடிய நம் தலைவரின் இதய விசாலத்துக்கு சாதி, மதம்,...... தமிழன், தெலுங்கன், கன்னடியன், பஞ்சாபி என்ற பிராந்திய வாதம்,....... திராவிடன், ஆரியன், மங்கோலியன் என்ற இன பேதம்,........ மொழி, தேசம் போன்றவை தடைகளாக இருந்ததில்லை. இந்த குறுகிய வேலிகளை எல்லாம் தாண்டிய ஒட்டுமொத்த மனிதத்தின் அடையாளம் நம் தலைவர்.
சுயலாபங்களுக்காகவோ, அரசியல் ஏற்றங்களுக்காவோ தன்னை ஒரு சாதியின் பிரதிநிதியாகவோ, ஒரு சாதியின் தலைவராகவோ பொன்மனச் செம்மல் காட்டிக் கொண்டதில்லை. அவர் குறுகிய கண்ணோட்டமும் சுருங்கிய மனப்பான்மையும் கொண்ட சாதித் தலைவரல்ல; ‘சாதித்த தலைவர்’.
courtesy கலைவேந்தன் sir.
விவசாயி - 1.11.1967
ஒரே படத்தில் மூன்று விதமான சமூக சிந்தனை பாடல்கள்
கடவுள் என்னும் முதலாள
நல்ல நல்ல நிலம் பார்த்து
இப்படிதான் இருக்க வேண்டும் .
விவசாயி படத்தில் இடம் பெற்ற இந்த மூன்று பாடல்களும் மூன்று விதமான சிந்தனை தூண்டும் பாடலாக
அமைந்து இருந்தது
.
வயலில் உழைக்கும் விவசாயி சமதர்மம் பற்றி பாடும் பாடல் வரியில் ''எங்கும் பறக்கவேண்டும் ஒரே கொடி
அது பஞ்சம் இல்லை எனும் அன்னக்கொடி ''- எத்தனை சத்தியமான வார்த்தைகள் .
''நல்ல நல்ல நிலம் பார்த்து '''..பாடல் வாழ்க்கை முறையில் எல்லா நிலைகளிலும் எப்படி தனி மனிதன் வாழ வேண்டும் என்பதை விளக்கும் பாடல் .
''இப்படிதான் இருக்க வேண்டும்'' .காதல் பாட்டாக இருந்தாலும் பெண்களின் உயர்வையும் முன்னேற்றத்தை பற்றியும் அருமையாக கூறும் பாடல் .
என் தலைவன் பார்க்கணும் உன் பதிவுகளை..அவருக்கு கொடுத்து வைக்கவில்லை..நாங்கள் பார்க்கிறோம்..நாங்கள் கொடுத்து வைத்தவர்கள்..சத்யா இந்த பதிவை நீங்கள் செய்வதற்கு எவ்வளவு சிரமப்பட்டு இருப்பீர்கள் என்று எனக்கு தெரியும்..என்னுடைய 8000பதிவுகளுக்கு உங்களுடைய இந்த ஒரு பதிவு ஈடு செய்து விட்டது..வாழ்க சத்யா..வளர்க..மனபூர்வமாக வாழ்த்துகிறேன்..எனது மிச்ச மீதி காலங்களில் யாருக்காவுது உதவி புரிந்தால்..அந்த பலன் உங்களுக்கு சேரட்டும்..நன்றி..
NOW RUNNING SUNLIFE TV PLE. WATCH MY FR..
http://i64.tinypic.com/2eqgjf4.jpg
திரு முத்தையன் அம்மு சார், உங்கள் பாராட்டுக்கு நன்றி. உண்மையில் நான் உங்கள் கருத்துக்களை படித்த பிறகு நான் அழ தொடங்கிவிட்டேன். இது எனக்கு கிடைத்த பெருமை அல்ல, எல்லாம் வல்ல நம் இறைவனுக்கு, நம் தலைவனுக்கு கிடைத்த பெருமை. அவரை நேரில் பார்க்கும் பாக்கியம் மட்டும் எனக்கு கிடைத்து இருந்தால், நான் பிறந்ததுக்கு உண்டான பலன் கிடைத்திருக்கும். காலம் நம்மை அவரிடம் இருந்து பிரித்தாலும், நமது உள்ளலத்தில் இருந்தும், நினைவில் இருந்தும் பிரிக்க முடியவில்லை. உங்களின் அயராத உழைப்புக்கு தலை வணங்குகிறேன்.
என்றும் அன்புடன்,
சத்யா
அன்பு நண்பர் கே பி ஆர் கோவிந்தராஜ் அவர்களுக்கு
தாங்கள் பதிவிட்ட மக்கள் திலகத்தின் மன்ற உறுப்பினர் அட்டை மற்றும் செய்தி மிக அருமை. இன்னும் நிறைய செய்திகளை தங்களிடம் எதிர்பார்க்கின்றோம்.
அன்புடன்
எஸ் ரவிச்சந்திரன்.
மக்கள்திலகம். சம்பந்தமான எழுத்தோவியங்கள் இனிமை. அருமை...திரு கலைவேந்தன் அவர்களின் அழகிய சொலாடல்களின் மீள்பதிவை இங்கு பதிவிடிருக்கும் திரு வினோத் அவர்கள் பாராட்டுக்கு உரியவர் ...
மக்கள்திலகம் mgr அபிமானிகள் அனைவரின் பதிவுகளும் அருமையாக உள்ளன... திரு அமராmgr, திரு குருநாதன் - ஆகியோர் புரட்சிநடிகரின் காவியங்கள் - சாதனை ஆவணங்கள், புகைப்படங்கள் ஆகியனவற்றை பதிவிடுமாறு பாசத்துடன் கேட்டுக்கொள்கிறேன்...
courtesy - MGR REMEMBERED - NET
Directors in creating the MGR ‘Persona’ since 1950
Among the 133 Tamil movies MGR acted, he had to act in minor and subsidiary roles in his first 20 (from 1936 to 1949, excluding his 1947 debut as a hero in Rajakumari) movies. Thus, only from 1950, his status was raised to the hero status. Of the remaining 113 movies, MGR acted as a hero, seven directors (including Krishnan – Panju duo) listed below played a prominent role in creating and sustaining the MGR ‘persona’ for the Tamil screen. 60 (53%) out of 113 movies were directed by these directors.
Neelakantan (17)
Chakravarthy Thirumagal (1957), Nallavan Vazhvan (1961), Thirudathe (1961),
Koduthu Vaithaval (1963), Kavalkaran (1967), Kannan En Kathalan (1968), Kanavan (1968), Mattukara Velan (1970), En Annan (1970), Kumarikottam (1971), Neerum Neruppum (1971), Oru Thai Makkal (1971), Sange Muzhangu (1972), Raman Thedia Seethai (1972), Netru Indru Naalai (1974), Ninaithathai Mudipavan (1975), Neethikku Thalaivanangu (1976).
M.A. Thirumugam (16)
Thaiku pin Tharam (1956), Thai Sollai Thattathe (1961), Kudumpa Thalaivan (1962), Thayai Kaatha Thanayan (1962), Dharmam Thalai Kaakum (1963), Neethikku pin Pasam (1963), Thozhilali (1964), Vettaikaran (1964), Kanni Thai (1965), Mugarasi (1966), Thani Piravi (1966), Thaiku Thalaimagan (1967), Vivasayee (1967), Ther Thiruvizha (1968), Kathal Vaganam (1968), Nalla Neram (1972)
T.R. Ramanna (8)
KoondukkiLi (1954), Gul-e-bakaavali (1955), Pudumaipithan (1957), Paasam (1962), Periya Idathu Penn (1963), Panakkara Kudumbam (1964), Panam Padaithavan (1965), Parakkum Pavai (1966)
Sankar (8)
Panathottam (1963), Kalankarai Vilakkam (1965), Chandrodayam (1966), Kudiyiruntha Kovil (1968), Adimai Penn (1969), Pallandu Vazhga (1975), Uzhaikkum Karangal (1976), Indru Pol Endrum Vazhga (1977)
Tapi Chanakya (4)
Enga Veetu Pillai (1965), Naan Anaiyittal (1966), Puthiya Boomi (1968), Oli ViLakku (1968),
B.R. Panthulu (4)
Ayirathil Oruvan (1965), Nadodi (1966), Rahasiya Police 115 (1968), Thedi Vantha Mappillai (1970)
Krishnan – Panju duo (3)
Petral Than Pillaiya (1966), Engal Thangam (1970), Idaya Veenai (1972)
Superstition on Lucky Number 7
Lyricist Vaali also had recorded one of MGR’s superstition in believing the success of being associated with number 7. He records that, whenever feasible, MGR wanted his movie titles to be in 7 Tamil alphabets cumulatively. I did check on this fact. Among the 113 movies MGR had acted as hero between 1950 and 1978, 21 movies had 7 alphabet titles (18.6%!). Two conditions did apply. One, unlike recent times, Tamil grammar was not made flexible to create 7 alphabet titles in MGR movies. Second, for political correctness, titles should have positive, up-beat meanings. Here is the list:
Manthiri Kumari (1950), Anthaman Kaithi (1952), Malai Kallan (1954), Nadodi Mannan (1958), Sabash Maapille (1961), Rani Samyuktha (1962), Pana Thottam (1963), Vettaikaran (1964), Thayin Madiyil (1964), Chandrothayam (1965), Thali Bhagyam (1965), Parakum Paavai (1965), Arasa Kattalai (1967), Ther Thiruvizah (1968), Kathal Vahanam (1969), Rickshawkaran (1971), Sange Muzhangu (1972), Annamitta Kai (1972), Urimai Kural (1974), Navarathinam (1977) and Meenava Nanban (1977).
Comparatively, only two MGR movies, between 1936 and 1949, when MGR was minor player in the naming of Tamil movies, had 7 alphabet titles. These being, Dakshayagnam (1938) and Harishchandra (1944).
‘Lucky number 7’ is a universal belief. Questions may arise, why MGR came to believe in lucky number 7 concept, and whether it did work in his real life? The financial success of Manthiri Kumari movie in 1950, after a long wait for recognition as a hero might have tempted MGR to trust this superstition. Nevertheless, not all of his 21 movies which carried 7 alphabet titles were successful in box office. Some were duds, by MGR’s movie yardstick in Tamil Nadu. These include, Thali Bhagyam, Arasa Kattalai and Navarathinam. The last two deserves mention. Arasa Kattalai (released in May 1967) was promoted as the first movie after MGR’s shooting incident in Jan. 1967, after the Feb. 1967 General Election, when DMK party was elected to rule the Tamil Nadu for the first time. This movie was directed by MGR’s elder sibling, M.G. Chakrapani. Like some MGR’s successful movies in the past, it did have two heroines, B. Saroja Devi and Jayalalitha.
மக்கள் திலகத்தின் படகோட்டி இன்று 51 ஆண்டுகள் நிறைவு தினம் .