https://scontent-yyz1-1.xx.fbcdn.net...60&oe=589232CC
Printable View
நண்பர்களே
மிக மிக அபூர்வமான, நடிகர் திலகம் 1962ல் அரசாங்க ரீதியான அழைப்பில் அமெரிக்கா சென்ற போது எடுக்கப்பட்ட நிழற்படங்கள் பகிர்ந்து கொள்ளப் பட்டுள்ளன. அவை தொடரக்கூடிய பதிவுகளால் கடந்து விடக்கூடும் என்பதனால் அவற்றிற்கான இணைப்பு கீழே தரப்படுகிறது.
http://anonymouse.org/cgi-bin/anon-w...22#post1310483
வாசு,
தலைக்கு மேல் இரு கை நீட்டி இரு கரம் கூப்பி சிரந்தாழ்த்தி நன்றி என்ற ஒரு வார்த்தை சொல்லுவதை விட நான் வேறு என்ன செய்து விட முடியும்? எப்போதும் நவம்பர் 21 அன்றுதான் பரிசு கொடுப்பீர்கள். இந்த வருடம் என்ன அக்டோபர் 31 அன்றே பரிசளித்து விட்டீர்கள்! எப்படி பார்த்தாலும் மகிழ்ச்சியே!
நமது நடிகர் திலகத்தின் பழைய படங்களை மீண்டும் திரைக்கு கொண்டு வரும் முயற்சியில் (டிஜிட்டல் முறையிலும் சரி அல்லது பழைய பிரிண்ட் முறையிலும் சரி) ஈடுபட்டிருக்கும் நண்பர்கள் சந்திரசேகர் மற்றும் சுப்பு போன்றவர்களுக்கு சிறு சிறு உதவிகள் அல்லது யோசனைகள் ராமருக்கு அணில் போல செய்வதுண்டு. மீண்டும் திரையிடப்பட வேண்டும் என்ற விருப்ப பட்டியலில் நிறைய படங்கள் இருக்கின்றன. ஆனால் யார் பார்த்தாலும் பார்க்காவிட்டாலும் ஒரே ஒரு நண்பருக்காக தியேட்டரில் இந்தப் படத்தை திரையிட வேண்டும் என்று நினைப்பது ஒரே ஒரு படத்தை மட்டும்தான்.
பார்ப்போம்! அந்த தேவன் அருள் இருந்தால் அனைத்தும் நல்லபடி நடக்கும்.
அன்புடன்
http://i1028.photobucket.com/albums/...psklszrbra.jpg
நினைத்துக் கொள்கிறேன்.
அவனை நினைத்துக் கொள்கிறேன்.
இதயம் வாழும் இனியவனை
நினைத்துக் கொள்கிறேன்.
பாசாங்கற்ற பண்பாளனை நினைத்துக் கொள்கிறேன்.
நாற்பத்தொன்பது ஆண்டு காலமாக நெஞ்சத் திரையில்
மங்காமல் ஒளிர்கிறவனை நினைத்துக் கொள்கிறேன்.
"எனக்குப் பிடித்தவன், எல்லோருக்கும் பிடித்தமானவனாய் இருக்கிறான்" என்று என் மனம் கர்வ சந்தோஷம் காண
வைத்தவனை நினைத்துக் கொள்கிறேன்.
கதை மாந்தர்களுக்கு உயிர் கிடையாது..பொம்மையென்பதைப் பொய்யாக்கியவனை நினைத்துக் கொள்கிறேன்.
என்னிலும் ஐந்து மாதங்கள்
மூத்தவனென்றாலும், எல்லாத்
தலைமுறைகளிலும் இளமையாகவே இருப்பவனை
வியப்போடு நினைத்துக் கொள்கிறேன்.
காலம் கொணரும் வழமையான அழிவுகளெல்லாம் எனக்கில்லை என்று கலை உதடுகள் திறந்து சிரிக்கிறவனை நினைத்துக் கொள்கிறேன்.
உமாவின் காதலனை நினைத்துக் கொள்கிறேன்.
சாந்தியின் கணவனை நினைத்துக் கொள்கிறேன்.
அழகுக் குழந்தை கீதாவின்
பேரழகான அப்பனை நினைத்துக் கொள்கிறேன்.
இரு மலர்களோடு இப்போதும்
மணக்கும் என் சுந்தரை நினைத்துக் கொள்கிறேன்..
எப்போதும் வற்றாத ரசிக நன்றிகளோடு..!
( புகைப்படத்திற்கு நன்றி:
ஆவணத் திலகம் பம்மலார்.)
Sent from my P01Y using Tapatalk
http://i1028.photobucket.com/albums/...psrpklt5mk.jpg
Sent from my P01Y using Tapatalk
http://i1028.photobucket.com/albums/...psrsnaepgg.jpg
Sent from my P01Y using Tapatalk
60 வது வருடங்கள்
http://i872.photobucket.com/albums/a...nRadhaAdfw.jpg
நவராத்திரி- 03/11/1964.(எனது பெருமைக்குரிய 4000)
அதிசயம், ஆனாலும் உண்மை. ஒரு நடிகர் ஒரே படத்தில் ஒன்பது ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத வேடத்தில் நடித்து அசத்தியுள்ளார் என்ற செய்தி எனக்கு ஆறு வயதாய் இருக்கும் போது பெரியவர்கள் உரையாடலில், சீனா போரை விட மிகவும் சிலாகிக்க பட்டது.
எல்லோரும் மாய்ந்து மாய்ந்து அவர் அற்புதம்,பயம்,கருணை ,கோபம்,சாந்தம்,அருவருப்பு,,சிங்காரம்,வீரம்,ஆனந ்தம் ஆகிய குணங்களையே பாத்திரங்களாக்கி உள்ளார் என்று எழுதினர்.சில பாத்திரங்கள் தாங்கள் அந்த குணங்களை பிரதிபலிப்பதை விட மற்றோர்க்கு அந்த உணர்வை (குடிகாரன்,தொழுநோயாளி)தருவதாக விமர்சித்தனர். ஆனால் அந்த குடிகாரனின் ,கடைசி நேர பய உணர்வை,மனசாட்சி உந்துதலை ,தொழுநோயாளியின் தன் வெறுப்பை ,சுய அருவருப்பை கணக்கில் கொள்ள தவறினர்.
ஆனால் நான் பார்ப்பது என்னவென்றால், சிவாஜியின் அத்தனை படங்களையும் பார்த்து ரசித்த ரசிகர்களுக்கு மட்டும் தெரிந்து உணர்ந்த ,sampling முறையில் அளக்க இயலா நடிப்பின் வேறுபாடுகளை,ஒரே படத்தில் showcasing the talent என்ற முறையில் நவராத்திரியின் வீச்சை மதிப்பிடுகிறேன். அவர் அற்புத ராஜாக பாசமலரில் துவங்கி பார் மகளே பார் வரை அற்புதம் நிகழ்த்தினார்.குடிமகனாக புனர் ஜென்மம்,கருணை நிறைந்த majesty என்று பாலும் பழமும்,கோபம் நிறைந்த வன்மத்துடன் வாழ்விலே ஒருநாள் முதல் ஆலய மணி வரை,சாந்தம் நிறை வெகுளி மனிதராக மக்களை பெற்ற மகராசி ,படிக்காத மேதை என்று ,அருவருப்பான தோற்றத்தில் குழந்தைகள் கண்ட குடியரசு,பாவ மன்னிப்பு,நான் வணங்கும் தெய்வம் படங்களிலும் ,சிங்காரமாக பல கூத்து கலை படங்களிலும்(தூக்கு தூக்கி) ,வீரமாக கணக்கற்ற படங்களில் (உத்தம புத்திரன் விக்ரம்),ஆனந்தனாக ராஜாராணி ,இருவர் உள்ளம்,குலமகள் ராதை ,கல்யாணியின் கணவன் என்று பல படங்களிலும் நடித்த அனைத்து பாத்திரங்களையும் ஒன்றாக தொகுத்து, ஒரே படமானதால் வித்தியாசம் தெளிவாக, சில நடை உடை ஒப்பனை மாற்றங்கள்,mannerism என்று மெருகேற்றி ஒளி ஊற்றிய படமே நவராத்ரி.இதே போல அவர் நடிகராக பாத்திரமேற்ற ராமன் எத்தனை ராமனடியில் ,ஒரே காட்சியில் அவர் ஏற்ற பல வேறு பட்ட பாத்திரங்களை காட்டி அவரின் பல்முனை நடிப்பு அழகாக ஒரே படத்தில் காட்ட படும்.
என்னிடம் ஒரு நண்பர் ,தசாவதாரம் என்னை கவரவில்லை ,என்று சொன்ன போது நவராத்திரியை நாடகம் என்றும் தசாவதாரம் சினிமா என்றும் சொன்னதும் நான் சிரித்தேன். சினிமாவின் இலக்கணம் தெரியுமா என்று கேட்டேன். பிறகு , அவரிடம் என்ன genre என்ற தெளிவு ,சீரான திரைக்கதை,படத்துடன் இணையும் பாத்திரங்கள்,தெளிவான முகபாவங்கள் கொண்ட close up காட்சிகள், இவை எந்த படத்தில் உள்ளதோ அதுவே திரை படம் என்று சொன்னேன். நண்பர் முகம் போன போக்கு. ஓட்ட வைத்த குடுகுடுப்பாண்டி சட்டை போல மோசமான திரைக்கதை, பத்து வர வேண்டும் என்று அனாவசிய திணிப்பில் கதாபாத்திரங்கள், பெயிண்ட் பூசி ,முகமூடி அணிந்து(அந்த கால கூத்து நாடகங்கள் போல) வரும் கேவலமான தோற்றம் கொண்ட மாறுவேடம் இவை கொண்ட தசாவதாரம் நாடகம் என்றாலும் கூட நாடக கலைக்கே கேவலம். அற்புதமான ஒரு வரி knot ,அதனுடன் பயணிக்கும் திரைக்கதை, அதனூடாக பயணிக்கும் நகைச்சுவை, பாத்திரங்களின் நடை உடை பாவனை தெளிவாக காட்டும் படமாக்கும் இவற்றில் நவராத்திரியை உயரிய திரைப்பட உத்தியின் உச்சமாகவே கருத வேண்டும்.
(தொடரும்)
4000 பதிவுகளை தொட்ட
கோபால் அவர்களுக்கு
எனது வாழ்த்துக்கள்.
தங்களின் பதிவுகள் திரிக்கு பெருமை சேர்த்தவை. தொடரட்டும் தங்களின் எழுத்துச் சேவைகள்.
4000 வது பதிவு.
சிம்மக்குரல்...
________________
எவ்வித ஜொலிப்புகளும் இல்லாமல் பொட்டல்வெளியாய் வெட்டவெளி தமிழ் திரைவானம் காட்சி தந்து கொண்டிருந்த காலம் அது.
1952
ஒலித்ததே ஓர் குரல்.
"தமிழ்நாட்டின் முதல் குரலே நன்றாயிருக்கிறதே"
இக்குரலுக்கு இதுதான்
முதல்குரல்.
அக்குரல் ஒலித்தது
அதுமுதல்
திரைகள் நடுங்கின
அன்றுமுதல்.
மொத்த தமிழினத்தையும் நெற்றியை மேல் தூக்கி வியக்கவைத்தது இக்குரலன்றோ!
ஏற்றிய நெற்றியை
கடைசி வரை
ஏற்றிக்கொண்டே
இருக்க வைத்ததும்
இக்குரலன்றோ!
***
"மக்களுக்கா பஞ்சம் இந்நாட்டில்.நாற்பது கோடி இருக்கிறார்களே....
"நூற்றுக்கணக்கான பிரபுக்களை கொன்று பாரீஸ் நகரம் முழுவதும் ரத்த ஆறு ஓட விட்டு ஐரோப்பா முழுவதும் புயலையும் பீதியையும் கிளப்பிய பிரெஞ்சுப் புரட்சி தான் ஜனநாயக தத்துவத்தை உலகெங்கும் பரப்பியது.அதன் வயிற்றிலிருந்து ஜனித்த புதிய அரசியல் ஐரோப்பிய கருத்துக்கள் இன்றுவரை நிலைத்து விட்டது..."
மரணத்தின் மடியிலே ஐனனத்தை காண்பதுதான் சரித்திரம் எடுத்துக் காட்டும் உண்மை.யார் கண்டார்கள்! ஜப்பானின் உதவியோடு நாடு சுதந்திரம் கண்டு உலகிற்கே புதியவழியைக் காட்டலாம்...
குரலுக்கும் நடிப்புண்டு
அந்நடிப்புக்கும் இலக்கணமுண்டு
அதை
இதற்கு முன் காட்டியவர் எவருண்டு
என்பதை புத்தியில் வைத்த குரல்.
****
"பரசுராமன் அவதாரம்.
மனோகரன் மனிதன்.
"என் வாள் களத்திலேதான் விளையாடும்
கனிகளை காயப்படுத்தாது."
பக்கம் பக்கமாய்ச் பேசினாலும் சரி
பத்து எழுத்துக்களை பேசினாலும் சரி.
இந்தக் குரல் பேசினால் தான் தமிழ்.
மற்றதெல்லாம் உமிழ்.
திரும்பிப் பார்க்காதவர்களையும்
திரும்பிப் பார்க்க வைத்த குரல்.
ஏளனம் செய்தோரை
ஏளனத்திற்கு ஆளாக்கிய குரல்.
***
"பாடுவது என் தொழிலும் அல்ல
சங்கீதத்தை நான் முறையாக பயின்றவனும் அல்ல...
இங்கே என் நண்பனுக்கு விழுந்த அடியின் எதிரொலியைத்தான் நீங்கள் இசையாகக் கேட்டீர்கள்."
பேரிரைச்சல் பெரும் அலைகளுக்கு மட்டும்தானா?
பெரும் சீற்றம் பெருத்த சூறாவளிக்கு மட்டும்தானா?
அது குரலுக்கும் உண்டு.
அப்பெருமை இவரைத் தவிர
வேறு எவருக்குண்டு?,
***
"அண்ணனை காட்டிற்கு அனுப்பிய பழிகாரி.தந்தை தசரதனின் இறப்புக்கு ஆளான பாதகி...
உன்னை அங்க அங்கமாக வெட்டி அணுஅணுவாக சிதைத்து கண்டதுண்டமாக வெட்டி கழுகுகளுக்கு இரையாக போட்டாலும்என் ஆவி வேகாது.ஆனால் அன்னையைக் கொன்ற அக்கிரமக்காரா என் முகத்தில் விழிக்காதே என்று என்னைஅண்ணன் ராமன் சொல்வானே என்று பார்க்கிறேன்"...
"நன்மை செய்து விட்டேன் என்று நஞ்சைக் கலந்து விட்டாயே பாதகி..."
இது-
மூதறிஞரை பேச வைத்த குரல்.
ஏசியவர்களை தூசியாக்கிய குரல்.
கண்டேன் சீதையை-
இது காவியச் சொல்
பரதனைக் கண்டேன்-
இது அழியாச் சொல்
***
"ஹ"
இந்த ஒற்றை எழுத்தை உச்சரித்து என்ன மாயம் செய்ய முடியும்?
செய்ததே!
இந்த விந்தையான வேந்தன் குரல்.
இந்த ஒற்றை எழுத்திலும் மின்சாரம் பாய்ச்சியதே .
மொழிகளைத் தாண்டி
சுண்டி இழுத்ததே
"நீ என்னைப் போலவே இருப்பதுதான் குற்றம்."
"இது உன்னையும் என்னையும் படைத்தவனின் குற்றம்."
இரண்டும் ஒரு குரலாயினும்,
ஒன்று காந்தம்
ஒன்று சாந்தம்.
அண்டை தேசத்தவர்களையும்
ஆட்டிப் படைத்த குரல்.
மண்டையை வியக்க வைத்த
ஜாலக் குரல்.
இதையா பிரதியெடுப்பது என்று
ஓட வைத்த குரல்.
***
"ஓலை தாங்கியே என்ன இரும்பு இதயமடா உனக்கு.கட்டபொம்மன் அரசவையிலே அவன் கண் முன்னே அவன் மந்திரியை கைது செய்ய எவனுக்குடா துணிவு இருந்தது இதுவரை.மாற்றோருக்கு எம்மோரை காட்டிக் கொடுப்பதை விட போரில் மாண்டு விடுவதே சிறப்பு"
தமிழ் எல்லை தாண்டி,
பாரத பூமி தாண்டி,
அயல் தேசத்தையும் மிரட்டிய குரல்.
தட்டினார்களே கைகளை
கொட்டினார்களே விருதுகளை
"போரடித்து நெற் குவிக்கும் பொன்னாட்டு உழவர் கூட்டம் பரங்கியர்களின் தலைகளையும் நெற்கதிர்களாய் குவித்து விடுவார்கள்.ஜாக்கிரதை"
பொழியும் வானத்தையும்,
விளையும் பூமியையும்
சாட்சிக்கு அழைத்த குரல் .
தன்மானத்தை பறைசாற்றிய குரல்
தமிழனை உலகிற்கு அடையாளம் காட்டிய குரல்.
ஒலித்ததோ ஓர் குரல்
உள் வாங்கி ஒலித்த குரல்களோ
கோடி கோடி
தமிழ்ப்பூமியின் புல் பூண்டுகளை கூட கேட்க வைத்த குரல் அல்லவோ இது
இக்குரல் ஒலிக்காத இடமுண்டோ இத் தமிழ் மண்ணில் ?
***
"ஆனந்தா!
உன்னிடமிருக்கும் ஆட்களை எல்லாம் வைத்துக்கொண்டு இந்த தொழிற்சாலையில் உள்ள எல்லா மின்சார விளக்குககளை எல்லாம் அணைத்து விட்டாலும் எனக்கு கவலையில்லை.ஆனால் இந்த இடத்தில் ஒரு சிறு அகல்விளக்கு சுடர் விட்டு எப்போதும் எரிந்து கொண்டிருக்கும். அதன் சொற்ப வெளிச்சத்திலே அற்பர்களின் துணையின்றி ஒர் உருவம் ஓடியாடி வேலை செய்து கொண்டு இருக்கும்.அதுதான் நீ குறிப்பிட்ட அந்த தொழிலாளி ராஜு.இதை மனதில் வைத்துக் கொண்டு உன் போராட்டத்தை துவக்கு!முழங்கு!முரசு கொட்டு!கெட்அவுட்.
இது-
ஊரையே ஆட்டுவிக்கும் குரல்
யாருக்கும் மசியாத குரல்
ஏரெடுத்து போர் தொடுக்கும் குரல்
பாருக்குள்ளே ஒப்புமையில்லா குரல்.
***
"துரியோதனா!
என் மானம் காத்த தெய்வமே.
என் உயிர் இருக்கும் வரை உன் உயிர் போகாது.என் உடலில் இருந்து உயிர் பிரிந்த பின் தான் உன் உயிர் போகும்.இது சத்தியம்."
அறுபதையும் சிலிர்க்க வைத்த குரல்.
ஆறையும் பேசவைத்த குரல்.
யாரையும் வியக்க வைக்கும் குரல்.
ஆண்டுகள் ஐம்பது கழிந்தாலும் எல்லோரையும் மிரட்டிய குரல்.
***
அங்கம் புழுதிபட அரிவாளை நெய்பூசி
பங்கம் படவிரண்டு கால்பரப்பி
சங்கதனை கீர்கீர் என அறுக்கும் நக்கீரனோ
என்பாட்டை ஆராய்ந்து சொல்லத் தக்கவன்?
யாரால் அறிய முடியும் சொக்கனை
சொக்கனேவியப்பானேஇக்குரலினை
மனிதருக்கு மரியாதை "ஜி"
சிவனுக்கு மரியாதை சிவா"ஜி"
***
"எவனோ வந்தவன் சொன்ன வாய்பறை கேட்டு நொந்து போக நான் நோயாளி அல்ல.என்னை விட்டொருவன் தரணியாளும் தகுதி அடைந்து விட்டானா?...
கரையான் புற்றென்ன கருநாகங்களுக்குச் சொந்தமா?அழியட்டும் கோட்டைகள்.இடியட்டும் மதிற்சுவர்கள்.ஜெய் அன்னை பவானி."
இது
வீரசிவாஜியாய்
விழுப்புரத்து கணேசன் பேசியது.
இந்தக்குரல்தானே
வெண்தாடியை வியக்க வைத்தது
மறுகணமே
பட்டம் கொடுத்து கிரீடம் சூட்ட வைத்தது.
அதுதானே
"சிவாஜி"
***
நிற்க!
கண்ணதாசன் சொன்னது போல், அவரைப்பற்றி
எதை எழுதுவது?
எதை விடுவது?
சுருங்கக் கூறின்,
"சிங்கத்திற்கு ஒரு குரல்
சிவாஜிக்கு நூறு குரல்"
வணக்கம்
*********************************************
ராகவேந்திரன் சார்,
தலைவரின் அபூர்வ புகைப்படங்களுக்கு என் லட்சோப லட்ச நன்றிகள். கண்டு உள்ளம் மகிழ்ந்ததை வார்த்தைகளில் வடிக்க இயலாது. வைத்த பார்வையை இன்னும் எடுத்தபாடில்லை. அந்த ஆங்கிலப் பெண்மணி தலைவரை வைத்த கண் வாங்காமல் பார்க்கும் போட்டோ தூள்.
முரளி சார்,
மிக்க நன்றி. தங்கள் முயற்சியில் பேரின்பம் அடைய காத்திருக்கிறேன். நிச்சயம் 'ஒளி'யில் ஆண்டனி, அருண் இவர்களுடன் அரங்கத்தில் இணையலாம். அதைவிட பெரும் பாக்கியம் வேறெதுவும் இல்லை.
கோபால்,
4000 மாவது பதிவு நச். மனப்பூர்வமான வாழ்த்துக்கள். நவராத்திரி பதிவுகளில் ஒத்துப் போகிறேன். முரண்பாட்டு மனிதர் என்றாலும் 'திலகம்' பற்றிய பற்றிய முழுமையான பதிவுகளில் தொடர்ந்து முத்திரை பதித்து வருவதற்கு பாராட்டுக்கள். நீண்ட நாட்கள் சென்று இன்று கைபேசியில் கலந்து உரையாடியது மிகுந்த மகிழ்ச்சி. சினிமா, நாடக விளக்கம் செமை.
http://i1087.photobucket.com/albums/..._007903422.jpg
எத்தனையோ நடிகர்கள் நம் தெய்வத்தைப் பின்பற்றி தந்தை பாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். அவர்கள் அந்தப் பாத்திரத்தை எவ்வளவு சிறப்பாகச் செய்தாலும் அது மகன் அல்லது மகளுடனான உண்மையான பாசத்தில் ஒட்டாமல் தனித்தேதான் தெரிந்திருக்கிறது. தன்னை முன்னிலைப்படுத்த மட்டுமே அவர்கள் முயலுவது கண்கூடாக நமக்குத் தெரியும். ஆனால் 'திலகம்' அப்படியா? அவர் நடிக்கவே வேண்டாம். விதிவசத்தால் வீட்டை விட்டு ஓடிப்போன மகளின் புகைப்படத்தை மார்போடு அணைத்து கையில் சுமந்திருக்கும் ஒரே ஒரு போஸே மகள் மேல் அவர் காட்டும் பாசத்தையும், பிரியத்தையும் நூறு தலைமுறைகளுக்கு உணர்ச்சி பொங்க உணர்த்திக் கொண்டிருக்கும். இதில் மற்றவர் எங்கே அவரை நெருங்குவது? சூரியனை வெறும் மெழுகுகள் நெருங்க முடியுமா? வடிவேலுவின் 'நானும் ரவுடிதான்' இதற்கும் பொருந்தும்.
செந்தில்வேல் சார்,
4000 கடின உழைப்புக்கும் 'நன்றியோ நன்றி' என்று ஓங்கிக் குரல் தருகிறேன். இதயம் நிறைந்த பாராட்டுக்கள்.
ஆதவனாரே!
சுந்தரத் தமிழில் சுந்தரைப் பற்றி பாடி சுகம் தந்ததற்கு மனமுவந்த நன்றி! அற்புதமான (சிவாஜி பாட்டு) கவிதைகளுக்கும் நன்றி! ரசித்துப் பருகி மகிழ்கிறேன். நேரமின்மையால் அதிகம் வர இயலவில்லை. மன்னிக்கவும்.
பரணி சார்,
'செலுலாய்ட் சோழன்' தொடரை தொடர்ந்து தந்து மகிழ வைப்பதற்கு நன்றிகள். ஒரே மூச்சில் படிக்க வைக்கும் அதியற்புத கட்டுரைகள்.
சிவா சார்,
உங்கள் பாணியே தனி! உங்கள் கடின உழைப்பு வியக்க வைக்கிறது. 'தங்கச் சுரங்க' ஸ்டைல்களுக்கு நன்றிகள். தொடர்ந்து மகிழ்வியுங்கள்.
அன்பு கோபால் சார்,
அற்புதமான நாலாயிரம் பதிவுகளுக்கு அகமகிழ்ந்த பாராட்டுக்கள்.
அவை இன்னும் பல்லாயிரமாக வளர்ந்து நடிகத்திலகத்தின் புகழ் பரப்பிட வாழ்த்துக்கள்.
அன்புள்ள வாசுதேவன் சார்,
அதெப்படி ஞான ஒளியை ஆய்வு செய்யும்போதெல்லாம் புதிய புதிய விஷயங்கள், புதிய புதிய கோணங்கள், உங்களுக்கு தோன்றிக் கொண்டேஇருக்கின்றன என்று அதிசயிக்க வைக்கிறது உங்களது ஒவ்வொரு ஆய்வும்.
இனிமேல் யாரும் உங்களை 'நெய்வேலி வாசுதேவன்' என்று அழைக்கக் கூடாது. இன்றுமுதல் நீங்கள் 'ஞான ஒளி வாசுதேவன்' (சுருக்கமாக ஞான ஒளியார்)
அன்பு செந்தில்வேல் சார்,
அருமையான ஆவணப் பதிவுகள், காணக்கிடைக்காத அபூர்வ விளம்பரங்கள், சிறப்பான தொகுப்புகள் அனைத்துக்கும் இதயம் நிறைந்த நன்றிகள்.
அன்பு ராகவேந்தர் சார்,
நடிகர்திலகத்தின் 1962 இந்திய அமெரிக்க கலாசார நல்லுறவு பயணத்தின்போது எடுக்கப்பட்ட, காணக்கிடைக்காத அற்புத நிழற்படங்கள் அனைத்தும் அருமை. பதிவிட்டமைக்கு அநேக நன்றிகள்.
குறிப்பாக நயாகரா நீரவீழ்சசியை "நயாகரா நகர அன்றைய மேயர்" பார்வையிடும் புகைப்படம் சூப்பரோ சூப்பர்.
நல்லவரை நோக்கிப் பயணித்த
நான்காயிரம்.
நடிகர் திலகத்தை
எழுதிச் சிறந்த
மூத்த பேனாவின்
நான்காயிரம்.
கோபத்தையும், நகைச்சுவையையும்
தம்மோடு அழகாய்
கோர்த்துக் கொண்ட
நான்காயிரம்.
கோபால் அய்யாவின்
வணங்குதலுக்குரிய
நான்காயிரம்.
வணங்குகிறேன்.
Sent from my P01Y using Tapatalk
ஆர்வம் மிளிரும்
நான்காயிரம்.
ஆற்றல் மிக்க
நான்காயிரம்.
இளமை ததும்பும்
நான்காயிரம்.
இளைய தலைமுறைக்கு
இனிக்கச் சேரும்
நான்காயிரம்.
நண்பர் செந்தில்வேலின்
நல்வாழ்த்துக்குரிய
நான்காயிரம்.
வாழ்த்துகிறேன்.
Sent from my P01Y using Tapatalk
4000 பதிவுகளுக்கு பாராட்டி வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் என் மனமார்ந்தநன்றிகள்.
http://i1065.photobucket.com/albums/...pslvyrd0mp.gif
நினைப்போம். மகிழ்வோம் -129
"தங்கை". -கேட்டவரெல்லாம் பாடல்.
"...போனாள்...தோழியின் வயது அறுபதுக்கு மேலே.." என்று வேடிக்கையாய் பாடியதற்கே
அவர் பாடும் இடம் சிரிப்பால் அதிர்ந்து கொண்டிருக்கும்.
மேலும், "Sweet sixty" என்று புன்னகையும், குறும்பும் தவழ தன் வேடிக்கைக்கு அழகாய் முத்திரை வைக்கிற இடம்.
'தான் சொன்ன நகைச்சுவைக்கு நிறையப் பேர்
சிரிக்கிறார்கள்' என்கிற பெருமிதத்தையும்
அய்யனின் சந்தோஷ முகத்தில் தரிசிக்கலாம்.
Sent from my P01Y using Tapatalk
நினைப்போம். மகிழ்வோம் - 130
"பச்சை விளக்கு".
" ஒளிமயமான எதிர்காலம்" பாடல்.
அழகாகத் தலை கவ்வியிருக்கிற தொப்பியை
ஒரு சின்ன நகர்த்தலோடு இன்னும் அழகாக்கிக்
கொள்ளுதல்.
Sent from my P01Y using Tapatalk
நினைப்போம். மகிழ்வோம் -131
"கௌரவம்."
தகுதியுள்ள தனக்கு நீதிபதி பதவி கிடைக்காத
கோபத்தில் மோகன்தாஸ் எனும் கொலைக் குற்றவாளிக்கு விடுதலை வாங்கித் தரப் போவதாக தலைவர் சூளுரைப்பார்.
சின்னத் தலைவர் வியப்புடன் கேட்பார்.. "அது யாரால முடியும் பெரியப்பா?"
"என்னால முடியும்டா!" என்பார் தலைவர்.
தனது தொழில் திறமையின் மீது கர்வம் மிகுந்த
அபார நம்பிக்கை கொண்ட பாரிஸ்டர் ரஜினிகாந்த்
என்கிற கதாபாத்திரத்தை ஒரு சின்னஞ்சிறு வார்த்தைக்குள் புகுத்திக் காட்டுகிற மகா வித்தை
அது.
Sent from my P01Y using Tapatalk
செலுலாய்ட் சோழன் சிவாஜி தொடர் 150 – சுதாங்கன்.
http://www.dinamalarnellai.com/site/...mohanambal.jpg
ஒப்பனை செய்த பிறகுதான் சிவாஜி அந்த குறிப்பிட்ட வேடத்துக்கான உடைகளை அணிந்து கொள்வார்.
மாலையோ, இரவோ படப்பிடிப்பு முடிந்ததும் ஒப்பனை அறைக்குள் வந்து, உடைகளை கழற்றிவிட்டு,முகத்தில் தேங்காய் எண்ணெய் தடவி, பவுடரை நன்றாக துடைத்துவிட்டு அதன் பின்னர் காலையில் வீட்டிலிருந்து அணிந்து வந்த வேட்டி – சட்டையைப் போட்டுக்கொள்வார். அவருடைய உடைகள் ஒரு நாளாவது கசங்கியோ, கலைந்தோ இருந்ததை யாருமே கண்டதில்லை.
அழுக்கு என்பது சிவாஜி அறியாத ஒன்று. கண்ட இடத்தில் நினைத்த நேரத்தில் காறி எச்சில் உமிழ்வது, சாப்பிட்டு முடிந்ததும் வாஷ்பேசினில் கை கழுவும்போது வாய் கொப்பளித்து இஷ்டத்துக்கு துப்புவது, சாப்பாட்டு மேஜையில் மற்றவர்கள் எதிரில் நீண்ட ஏப்பம் விடுவது, இருமுவது, தும்முவது முதல் போன்ற அநாகரீக பழக்க வழக்கங்களை அவரும் செய்ய மாட்டார். மற்றவர்கள் என்ன வீட்டில் உள்ள குழந்தைகள் வரை பெரியவர்கள் வரை யாரும் செய்ய அனுமதிக்கவும் மாட்டார். தன்னை அறியாமல் யாராவது அப்படிச் செய்துவிட்டால் அவர்களை ஒரு பார்வை பார்ப்பார். அந்த பார்வையிலேயே அவர்களின் உயிர் போய்விடும்.
`அன்றாட வாழ்க்கையில் சுத்தமாக வாழ்வது எப்படி?’ என்பதை சிவாஜியிடம் கற்றுக்கொள்ளவேண்டுமென்பார் கதாசிரியர் ஆரூர்தாஸ்.
ஆங்கிலக் கல்வியறிவு பெறக்கூடிய வாய்ப்பு வாழ்க்கையில் தனக்குக் கிடைக்காமல் போனாலும் கூட, ஆண்டவன் சிவாஜிக்கென்று அளித்த அரிய வரப்பிரசாதமான நினைவாற்றல், கேள்வி ஞானம் ஆகியவற்றின் மூலம் ஒரு பட்டப்படிப்பு படித்தவருக்கான அறிவையும் நாகரீகத்தையும் தனக்குத்தானே வளர்த்துப் பெருக்கிக் கொண்டவர்.
சரளமாக ஆங்கில மொழி பேசும் பயிற்சியை பெறாவிட்டாலும் கூட பிறர் பேசுவதை தெளிவாகப் புரிந்து கொள்ளும் அறிவாற்றல் பெற்றவர் சிவாஜி. ஆங்கில கலாசாரத்தை அதிகம் விரும்பக்கூடியவர்.
தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் போன்ற பிறமொழிகளை ஓரளவுக்குப் பேசவும், மற்றவர்கள் பேசும்போது அவற்றை நன்கு புரிந்து கொண்டு தானும் அவர்களுடன் கலந்து கொஞ்சம் கொஞ்சம் பேசி சமாளித்து விடுவார். இளமையில் இல்லாமையும் கல்லாமையும் சேர்ந்து இருந்தும் கூட இயற்கை அறிவு பெற்றிருந்த காரணத்தால், அதை ஒன்றுக்குப் பத்தாக்கி பெருக்கிக் கொண்டு வாழ்க்கையில் உயர்ந்து காட்டியவர்.
அவர் வாழ்ந்த `அன்னை இல்லம்’ வீடு 1959 வருடவாக்கில் இரண்டு லட்சம் ரூபாய்க்கு வாங்கி புதுப்பித்தும் தனது தாயார் ராஜாமணி அம்மாளின் நினைவாக `அன்னை இல்லம்’ என்று பெயரிட்டார் சிவாஜி. அந்த நாட்களில் இரண்டு லட்சம் ரூபாய் என்பது மிகப்பெரிய தொகை. மேற்கு திசை பார்த்த அந்த இல்லத்தின் மொட்டை மாடி முகப்பில் ஒரு சிறுவன் கையில் புத்தகம் வைத்து படித்துக்கொண்டிருக்கும் பொம்மை உண்டு. அதைப் பற்றி சிவாஜி சொல்லும்போது, `அந்த பொம்மையை ஏன் அங்கே வெச்சிருக்கேன் தெரியுமா? அதை அண்ணாந்து நான் பார்க்கும்போதெல்லாம் நான் படிக்காதவன் என்பதை ஞாபகப்படுத்துவதற்காக.’
வாழ்க்கையில் தேைவக்கு அதிகமாக வசதிகள் வந்து வாய்த்த போது, அதற்கு ஏற்றவாறு போதிய கல்வி அறிவு பெறாமல் போய்விட்டோம் என்ற ஏக்கம் சிவாஜி – எம்.ஜி.ஆர் இருவருக்குமே உள்ளுக்குள் இருந்ததை பலரும் பக்கத்தில் இருந்து உணர்ந்திருக்கிறார்கள். அதை நண்பர்களுடன் வெளிப் படுத்தியும் இருந்திருக்கிறார்கள். சிவாஜி – எம்.ஜி.ஆர் இருவருடைய கலை உலக வளர்ச்சிக்கு, வாழ்க்கை முன்னேற்றத்திற்கும் `கல்வி இன்மை’ என்பது ஒரு தடையாக இருந்ததேயில்லை. சிவாஜி `நடை’ ஆயிற்று. இப்போது `பாவ’ த்தை பார்ப்போம்.
ஒருவருடைய உள்ளத்தில் உண்டாகும் உணர்ச்சி அவரது முகத்தில் பிரதிபலிப்பதை `முகபாவம்,’ `முகபாவனை’ என்கிறோம்.
இதை வைத்துத்தான் ‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்பார்கள்.
நவரசங்கள் எனப்படும் ஒன்பது வகை பாவங்களையும் கதை வசனகர்த்தா, இயக்குநர், தயாரிப்பாளர் ஏ.பி. நாகராஜனின் `நவராத்திரி’ படத்தில் சிவாஜி ஒருவரே, அந்த ஒன்பது விதமான வேடங்களையும் ஏற்று நடித்தார். அதற்கு முன்பு இந்தியாவில் எவருமே புரிந்து காட்டாத ஒரு சாதனை அது.
`தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் அதன் கதாநாயகன் அசல் சண்முகசுந்தரமாகவே மாறி, நாகஸ்வரத்தின் `சீவாளி’யை ஒழுங்காக உதடுகளில் பொருத்தி அதை அளவோடு அசைத்துக் கன்னங்கள் புடைக்க காற்றை உள்ளே செலுத்தி ஊதி, எடுத்த எடுப்பிலேயே `நகுமோ’என்னும் தெலுங்கு கீர்த்தனையின் ராகத்தை வெளிக்கொணர்ந்த அந்த நேர்த்தி.. அந்த இயற்கை பாவனை.. உண்மையில் நாகஸ்வரத்தை வாசித்தது சிவாஜி கணேசன்தான் என்ற பிரமையை மக்கள் மனதில் உருவாக்கி அவர்களை மயக்கி கிறுகிறுக்கச் செய்ய அவர் ஒருவரால் மட்டுமே முடியும் என்பதை நிலைநாட்டினார்.
அதே போல ` மிருதங்க சக்ரவர்த்தி’ மிருதங்க வித்வான் வேடத்தில் தோன்றி, சைடு பாக்கெட்டுடன் கூடிய கை வைத்த அந்தக்கால `வி’ கழுத்துப் பனியனை போட்டுக்கொண்டு, மிருதங்கத்தை இலக்கணப் பிரகாரம் சரியாக கால்களுக்கு இடையில் வைத்துக்கொண்டு வாசித்த அழகு!
ஏற்கனவே, பிரபல மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமன் வாசித்து ஒலிப்பதிவு செய்யப்பட்ட அந்த `ஒரிஜினல்’வாசிப்புக்குத் தகுந்தவாறு ஒரு நூல் இழை கூட பிசகாமல், விரல்களால் மிருதங்கத்தை தட்டி, அதன் வித்வான்களுக்கே உரித்தான தாளபாவத்தையும், உதடுகளில் கோணல்களையும், நெளிவுகளையும் காட்டி, ‘‘உண்மையில் சிவாஜிதான் மிருதங்கம் வாசிக்கக் கற்றுக்கொண்டு வாசித்துக் காட்டுகிறார். இல்லாவிட்டால் அவ்வளவு சுத்தமாக வாசிக்க முடியாது’’ என்று சில வித்வான்களையே சொல்ல வைத்தார்.
இந்த தத்ரூபத்தையும் `தாளகதி’ தவறாமையையும் சரியாகத் தெரிந்து கொள்ளும் பொருட்டு, மிருதங்க மேதை உமையாள்புரம் சிவராமனை வரவழைத்து, வாசிக்கச் சொல்லி, அவர் எதிரில் அமர்ந்து உன்னிப்பாக
கவனித்து தன் உள்ளத்தில் நன்றாகப் பதிய வைத்துக்கொண்டு அதை அப்படியே படத்தில் பிரதிபலித்துக் காட்டினார். சிலர் சிவாஜி நடிப்பை ‘ஓவர் ஆக்டிங்’ என்று கூட சொல்லுவார்கள்.
`நடிப்பு’ என்பதே மிகைதானே? தான் செய்யமுடியாத ஒன்றை மற்றவர்கள் செய்வதை பார்த்து செய்து காட்டுவதுதானே நடிப்பு?
கிராமப்புறங்களில் பார்த்தால் மரணம் நிகழ்ந்த வீட்டில் பெண்கள் `ஒப்பாரி’ வைத்து அழுது புலம்புவார்கள். அது துக்கத்தின் தாள முடியாத வெளிப்பாடு. சிலருக்கு அழுகையே வராது. அழவும் தெரியாது. முகத்தைக் கைகளால் மூடிக்கொள்வார்கள், அல்லது சம்பந்தப்பட்டவர்களை கட்டிப் பிடித்துக்கொண்டு தங்களுடைய நடிப்பு இயலாமை தெரியாமல் இருப்பதற்காக முகத்தை அவர்களுடைய மார்பில் புதைத்து கொண்டுவிடுவார்கள்.
ஒரு சிறு கலைஞன் ஒரு பெருங்கலைஞனைப் பற்றி குறை கூறுகிறான் என்றால், அவன் போல தன்னால் செய்ய முடியவில்லையே, புகழ்பெற முடியவில்லையே என சிறு கலைஞன் பொறாமைப்படுகிறான் என்றுதான் பொருள்.
(தொடரும்)
ஆழ்ந்த படிப்பறிவில் விளைந்த
ஆற்றல் மிக்க எழுத்துகள்..
அவற்றில் மின்னும் நிஜங்கள்..
நெஞ்சமெல்லாம் நிறைந்த
நாயகனுக்காக
நிதமும் வளர்க்கும்
ஆய்வு யாகங்கள்..
அத்தனையும்
நாங்கள் பெற்ற யோகங்கள் !
கோபால் சார்...
தங்களின் பிறந்த நாளில்
நெஞ்சார்ந்த வாழ்த்துகளும்..
வந்தனங்களும்.
Sent from my P01Y using Tapatalk
இன்று பிறந்த நாள் கொண்டாடும் நம் அருமை நண்பர் கோபால் அவர்களுக்கு உளமார்ந்த நல்வாழ்த்துக்கள்.
செந்தில்வேல் சார்,
தங்களின் 4000 பதிவுகள் என்ற மைல்கல்லை எட்டியதற்கு வாழ்த்துக்கள். தங்களின் பதிவுகள், ஆவணங்களாகப் போற்றிப் பாதுகாக்கப்படவேண்டியவை. தங்களின் பணி தொடர மீண்டும் வாழ்த்துக்கள்.
திரு.கோபால் சார்,
தங்களுக்கு இதயங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். தாங்கள் உடல் ஆரோக்கியத்தோடு, நீண்ட நாள் வாழ்ந்து, நம் கலைவேந்தனைப் போற்றிடும் பணியினைத் தொடர மீண்டும் எனது நல்வாழ்த்துக்கள்.
Sivaji Ganesan - Definition of Style 33
சிவந்த மண் - சுற்றுலா காட்சி
நடிகர் திலகத்தின் நடிப்பின் இலக்கணத்தைப் பற்றிய இத்தொடரில் பல்வேறு பாத்திரங்களில் எப்படி கையாண்டு நடித்திருக்கிறார் என்பது விளக்கப்பட்டுள்ளது.
இந்த 33வது தொடரில், அவர் நடிப்பிற்கு தன்னை எவ்வாறு தயார் படுத்திக் கொள்கிறார், அவருடைய நடிப்பிற்கு உத்வேகம் - ஆங்கிலத்தில் Inspiration -எப்படி கிடைக்கிறது என்பதைப் பார்க்கலாம்.
வியட்நாம் வீடு பிரஸ்டிஜ் பத்மநாபன் டி.வி.எஸ். அதிபரும், கௌரவம் பாரிஸ்டர் பாத்திரத்திற்கு அந்நாளைய பிரபல வழக்கறிஞர் கோவிந்த் ஸ்வாமிநாதன் அவர்களும், திருவருட்செல்வர் அப்பர் பாத்திரத்திற்கு காஞ்சி மகா பெரியவரும் உருவகமளித்ததாக கேள்விப்பட்டதுண்டு. ஆனால் யாரும் அதிகம் அறிந்திராத மக்களும் நடிகர் திலகத்திற்கு உத்வேகமளித்துள்ளனர் என்பதும் அதிகம் மக்கள் அறிந்திராத செய்தி.
தமிழர்களின் வீர விளையாட்டு எனப்படும் ஜல்லிக்கட்டு, அதே போல் ஸ்பெயினில் காலம்காலமாக BULL FIGHT என்ற பெயரில் அந்நாட்டு சுற்றுலாவின் முக்கிய அம்சமாக பல தலைமுறைகளாக நடைபெற்று வருகிறது. சற்றே கொடூரமான விளையாட்டாக இருக்கும் இதில் பங்கேற்கும் காளைகளை அடக்க வீர்ர்கள் கூர்மையான கத்தியைப் போன்ற ஆயுத்த்தினால் குத்தி அதை அடக்குவார்கள்.
சிவந்த மண் படத்தில் நாயகி தான் நாயகனோடு பல நாடுகளுக்கு சுற்றுலா போவதாக கனவு காணுகிறாள். இந்த கனவுக் காட்சியின் மூலம் வெவ்வேறு நாடுகள் படத்தில் இடம் பெறுகின்றன. நாயகனும் நாயகியும் ரோம், மாட்ரிட், பாரீஸ் என ஐரோப்பிய முக்கிய நகரங்களுக்கு சுற்றுலா போகிறார்கள். ஸ்பெயினில் இந்த காளை அடக்கும் விளையாட்டையும் பார்க்கிறார்கள். இதைத் தொடர்ந்து மற்ற இடங்களுக்கும் போகிறார்கள் என்பதாக படத்தில் காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
சிவந்த மண் ஒரே சமயத்தில் தர்த்தி என்ற பெயரில் ஹிந்தியிலும் தயாரிக்கப்பட்டதால், அதில் நடித்த ராஜேந்திர குமார் மற்றும் வகீதா ரஹ்மான் இருவரும் தமிழில் நடிகர் திலகம், காஞ்சனா இருவரும் என ஒப்பந்தம் செய்யப்பட்டு அடுத்தடுத்து இரு மொழிக் காட்சிகளும் எடுக்கப்பட்டன. அதில் மேற்கூறிய கனவுக் காட்சியும் ஒன்று.
அந்த கனவுக் காட்சியில் மேற்கூறிய ஸ்பெயின் காளை அடக்கும் காட்சியும் இதே போல் ஒரே சமயத்தில் ஹிந்தி மற்றும் தமிழ் இரண்டும் படமாக்கப்பட்டது.
இந்தக் காட்சியில் பார்வையாளர் காலரியில் நடிகர் திலகம் காஞ்சனா இருவரும் அமர்ந்திருப்பதை காமிரா அடிக்கடி காண்பிக்கும். அவர்களுக்க்குக் கீழேயே ராஜேந்திர குமார் மற்றும் வஹீதா ரஹ்மான் இருவரும் அமர்ந்திருப்பார்கள்.
https://scontent.fmaa1-1.fna.fbcdn.n...d4&oe=58973593
இந்தக் காட்சியில் காளையை அடக்கும் வீர்ர்கள் - Matadors என அழைக்கப்படுபவர்கள் - அந்தக் கூர்மையான கொம்பினால் குத்தும் போது அவர்களின் உடல் மொழி மிகவும் வித்தியாசமாக இருக்கும். குறிப்பாக அந்தக் காளையை அடக்கி முடித்தவுடன் அவர்கள் தரும் போஸ் கம்பீரமாக இருக்கும் உடலை சற்றே வளைத்து தலையை நிமிர்த்தி அவர்கள் பார்க்கும் பார்வையில் வெற்றிக் களிப்புத் தென்படும்.
பொதுவாக இது போன்ற காட்சியில் மற்ற நடிகர்கள் சாதாரணமாக பார்வையாளனாக நடித்து விட்டு அடுத்த காட்சிக்குப் போய் விடுவார்கள். ஆனால் நடிகர் திலகத்தின் நடிப்புப் பசியில் இந்த போஸ் மிகப் பெரிய தீனியாய் அமைந்து விட்டது.
அந்த போர்வீரனின் வெற்றித் தோற்றம் அவரை வெகுவாக்க் கவர்ந்திருந்தது.
https://scontent.fmaa1-1.fna.fbcdn.n...d4&oe=58886838
அது மட்டுமின்றி இந்தக் காட்சியில் மெல்லிசை மன்னரின் பின்னணி இசை மிகச் சிறப்பாய் இருக்கும். ஐரோப்பிய நாடுகளில் மிகப் பெரிய சாகசங்கள் நடைபெறும் போது அந்நாட்டு இசை கூடவே எப்படி வாசிக்கப்படும் என்பதை கவனித்திருப்பவரைப் போல இங்கிருந்தே அவ்வளவு அருமையான இசையை பின்னணியில் அமைத்திருப்பார். தனக்கே உரிய தனித்தன்மையில் சற்றும் ஒற்றுமை தென்படாத வகையில் தன் கற்பனையால் அபாரமான இசைக்கோர்வையை அமைத்து அதற்குத் தேவையான ஐரோப்பிய இசைக்கருவிகளின் ஒலியைக் கொண்டு வந்திருப்பார். இந்தக் காட்சியில் ஒலிக்கும் பின்னணி இசையை நடிகர் திலகமும் கூட இருந்து கேட்டிருப்பார் போலத் தெரிகிறது.
இந்தப் பின்னணி இசையில் ட்ராம்போன் ட்ரம்பெட் இசைக்கருவிகள் மிகச்சிறப்பா இசைக்கப்பட்டிருக்கும். அந்த மெட்டை மிகவும் நடிகர் திலகம் ரசித்திருக்கிறாரோ என்னவோ, அதை அப்படியே சொர்க்கம் படத்தில் பொன்மகள் வந்தாள் பாட்டில் சரணத்தில் மெல்லிசை மன்னர் பயன்படுத்தியிருப்பார். வெல்வெட்டின் சிரிப்பை ரசிப்பேன் என்ற பல்லவியின் மெட்டு அப்படியே சிவந்த மண் காளை மாட்டை அடக்கும் காட்சியில் பின்னணியில் ஒலிக்கும்.
விளையாட்டின் போது மற்றவர் பார்வை விளையாட்டில் லயித்திருக்க, நடிகர் திலகமோ அந்த வீர்ர்களின் உடல் மொழியை மிகவும் உன்னிப்பாக உள்வாங்கியிருக்கிறார்.
அதற்கேற்ப அந்த இசையும் அவரை ஈர்த்திருக்க, பொன்மகள் வந்தாள் பாடல் காட்சியில் அந்த பின்னணி இசை பல்லவியின் மெட்டாக அமைந்த வுடன் தலைவர் அந்த ஸ்பெயின் மட்டார் வீரனின் உடல் மொழியை அங்கே மிக அற்புதமாக வெளிப்படுத்தியிருப்பார்.
https://scontent.fmaa1-1.fna.fbcdn.n...88&oe=58C50406
https://scontent.fmaa1-1.fna.fbcdn.n...d0&oe=588F0A68
பொன் மகள் வந்தாள் பாடலில் பெரும்பாலும் அவர் இந்த ஸ்பெயின் விளையாட்டு வீர்ரின் உடல் மொழியைப் பயன் படுத்தியதற்குக் காரணமும் உள்ளது. ஒரு சாதனையை நிகழ்த்திய பெருமிதமாக அந்த வீர்ர்கள் தங்கள் உடல் மொழியை வெளிப்படுத்துவது போல், இந்தப் பாடல் காட்சியில் தான் செல்வந்தனானதை ஒரு சாதனையாக மனதில் வரித்துக் கொண்டு நாயகனை உருவகப்படுத்தி அதே உடல் மொழியைக் கொண்டு வந்திருக்கிறார் நடிகர் திலகம்.
தன் கண்ணில் படும் எந்த அம்சமானாலும் அதை உள் வாங்கி அதை எங்கே எப்போது எப்படி பிரயோகிப்பது என்கிற உத்தியை நன்கு தெரிந்து வைத்திருப்பதோடு மட்டுமின்றி, அதைத் தன் ரசிகர்கள் எப்படி ரசிப்பார்கள் என்பதையும் கிரகிக்கும் சக்தியும் அவருக்கு உண்டு.
சும்மாவா சொன்னார்கள் அவரை நடிகர் திலகம் என்று.
சும்மாவா சொல்கிறோம் நாங்களெல்லாம் சிவாஜி வெறியர்களென்று..
http://i1087.photobucket.com/albums/..._000783220.jpg
சும்மாவா சொல்கிறோம் ராகவேந்திரன் சாரை எங்கள் ரசிக வேந்தர் என்று. அமர்க்களம் சார். சொர்க்க சிவந்தமண் ஒப்பீடு அருமை. காளையை அந்த வீரன் அடக்கிச் சாய்க்கையில் நம் மாவீரன் அதில் லயித்து ரசிப்பதை, ஒவ்வொரு அடக்கலுக்கும் அந்த முகத்தில் தோன்றித் தோன்றி மறையும் வியப்பு ஆச்சர்யக் குறிகள், ஆபத்தை உணர்த்தும் பாவங்கள், வெற்றிப்பெருமிதங்கள், அதிர்ச்சி கலந்த ஆனந்தம், தன் நிலை மறந்த ஈடுபாடு, கண்களின் ஆழத்தீவிர பார்வை ஊடுருவல், எல்லாவற்றுக்கும் மேலாக அந்த கள்ளமில்லாத அழகு முகம், ஹேர் ஸ்டைல், டிரஸ் சென்ஸ் என்று நம் தெய்வம் பின்னி எடுப்பாரே! ஊன், உறக்கமின்றி அந்த முகத்தை நாள் முச்சூட பார்த்து பார்த்து ரசித்துக் கொண்டே இருக்கலாமே! தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.
இதோ இன்னும் சில ஸ்டில்கள்.
http://i1087.photobucket.com/albums/..._000177001.jpg
http://i1087.photobucket.com/albums/..._000185777.jpg
http://i1087.photobucket.com/albums/..._000204062.jpg
http://i1087.photobucket.com/albums/..._000230121.jpg
http://i1087.photobucket.com/albums/..._000273731.jpg