http://oi66.tinypic.com/23wmq0h.jpg
Printable View
Digital Raja Emperor Raja
டிஜிட்டல் ராஜா எம்பரர் ராஜா
ஒரே வார்த்தையில் சொல்வதானால் அமர்க்களம்.
ஹீரோ 1972 மட்டுமல்லாமல் எப்பவுமே ஹீரோவான நடிகர் திலகத்தின் வெற்றிகரமான பல்வேறு திரைப்பரிமாணங்களில் என்டர்டெயின்மெண்டும் விதிவிலக்கல்ல. அதுவும் த்ரில்லர் வகையறாக்களில் அவருடைய பாணி எவரும் கனவில் கூட நினைத்துப்பார்க்க முடியாத உச்சகட்ட ஸ்டைலைக் கொண்டு சிகரமாய் கொலுவீற்றிருப்பார். அப்படிப்பட்ட பரிமாணங்களில் ரசிகர்களின் வெறித்தனமான ஆதரவைப் பெற்ற படம் ராஜா. வசூலில் பிரளயத்தை ஏற்படுத்தியது, அதுவும் குறிப்பாக தேவி பாரடைஸில் இப்படத்தைப் பார்க்கும் போது அந்த புதிய. பரவசமான அனுபவத்தில் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டியது ராஜா.
நீண்ட இடைவேளைக்குப் பிறகு நவீனமயமாக்கலில் துல்லியமான காணொளியிலும் ஒலியமைப்பிலும் வெளிவர உள்ளது என்ற தகவல் தெரிந்த நாளிலிருந்தே ஏகத்திற்கும் எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே ஏற்படுத்திய ராஜா, பல்வேறு கட்டங்களைத் தாண்டி 25ம் தேதி வெளியாகியுள்ளது. தேவி பேரடைஸிலேயே அந்தக் காலத்திலேயே கலக்கிய நுட்பங்கள் இன்றைய நவீன வசதிகளில் மெருகூட்டப்பட்டு வெளியாகியுள்ளது எப்படி இருக்கிறது என்ற ஆவலுடன் திரையரங்குகளின் பட்டியலைப் பார்வையிட்ட போது வித்தியாசமான ஒரு பெயருடன் ஒரு திரையரங்கு குறிப்பிடப்பட்டிருந்தது. பலாஸோ ... இப்படி ஒரு பெயரா .. பிளாஸா அந்த காலத்தில் பார்த்திருக்கிறோம். இது என்ன பலாஸோ என்று பார்த்தபோது அது ஒரு இத்தாலிய வார்த்தை என்பதும் ஆங்கிலத்தில் Palace என்று குறிப்பிடப்படுகிறது எனவும் அகராதி கூறியது. மாளிகை என்ற பொருளுடன் திரையரங்கின் பெயரா என எண்ணியவாறே அங்கே ராஜாவைப் பார்க்கலாம் என தீர்மானம் தோன்றியது. மாளிகை என்றால் ராஜா தானே.. ராஜா என்றால் மாளிகை தானே...
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10.00 மணி காட்சி என்பதால் ஞாயிறு காலை 10 மணிக்கு அங்கே சென்றபோது சரியாக காட்சி துவங்கியது. நடிகர் திலகம் என்றாலே அங்கே பங்சுவாலிட்டி இருக்கும் என்பதற்கு இது ஒரு உதாரணமாயிற்று.
ராஜா தணிக்கைச் சான்றிதழ் தோன்றும்போதே திரை பளிச். நவீன டிசைன்களில் சில நன்றி அறிவிப்புகள் சிறப்பு ஒலிகளுடன். குறிப்பாக நவீன ஒளி ஒலியமைப்பில் நடிகர் திலகத்தின் பெயரும் ராஜா என்ற டைட்டிலும் தோன்றியபோது அட்டகாசமாக இருந்தது. இது சரி. படம் எப்படி இருக்குமோ என்று ஒரு நொடி கூட நினைக்க முடியவில்லை. துல்லியமான ஒலி ஒளியமைப்புடன் ராஜா படத்தின் ஒரிஜினல் டைட்டில் துவங்க... பிறகென்ன .. மனமும் கண்ணும் திரும்பவா போகிறது...
காத்திருந்தோம்.... அந்த நேரமும் வந்தது. எப்போதும் ஹீரோ தோன்றுவாரா என காத்திருக்கும் கண்கள் இம்முறை வில்லன் வருவாரா எனக் காத்திருந்தது. ஆம்.. வில்லனில் துவங்கி தலைவரிடம் வந்து அல்லவா காமிரா நிற்கும். ஆரம்பமே ஸ்டைலாச்சே...
சும்மா சொல்லக்கூடாது.. எண்ணியல் முறையில் துல்லியமான வடிவமைப்பில் நடிகர் திலகத்தின் ஸ்டைலை அந்த அகன்ற திரையில் பார்க்கும் போது... தேவி பேரடைஸில் 26.01.1972 அன்று ஏற்பட்ட அதே பரவசம் மீண்டும்... டைட்டில் துவங்கி வணக்கம் முடிய நடிகர் திலகமும் மெல்லிசை மன்னரும் ராஜா என்ற ரயில் வண்டியை சூப்பர் ஃபாஸ்ட் வேகத்தில் கொண்டு சென்று பயணத்தில் அலுப்பே இல்லாமல் பார்த்துக் கொண்டனர்.
ஒவ்வொரு உடையும் அதன் வண்ணமும் மிகவும் அருமையாக பளிச்சென்று கண்ணைக் கவர்ந்ததைச் சொல்வதா, மெல்லிசை மன்னரின் இசையில் ஒவ்வொரு கருவியும் துல்லியமாக ஒலித்ததைச் சொல்வதா, ஒளிப்பதிவும் ஒலிப்பதிவும் இக்காலத்திய படங்களுக்கு சற்றும் குறைந்ததல்ல என நிரூபித்த நேர்த்தியை சொல்வதா...
படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரங்கள் தொடங்கி ஒவ்வொருவரும் தங்கள் பங்கை குறையாமல் இப்படத்திற்கு அளித்திருந்ததும் அவர்களை சரியான முறையில் இயக்குநர் சிவிஆர் பயன்படுத்தியிருந்ததும் இன்றும் அப்படம் மக்களுடன் இணைந்து நிற்பதற்கு சாட்சி.
பலாஸோ திரையரங்கம் சொன்னாற்போல் ஒரு மாளிகையாகவே காட்சியளிக்கிறது. கிட்டத்தட்ட ஏழு அல்லது எட்டு திரையரங்குகள். உணவகங்கள். குழந்தைகளுக்கான கேளிக்கையம்சங்கள் என நிறுத்தி விடாமல், கழிப்பறைகளுமே மாளிகையின் அறைகளாக விளங்கியது மிகவும் சிறப்பு. அவற்றில் கண்ணாடிகளுக்கான மாடங்கள், அழகிய மர வேலைப்பாடுகளுடனான ஃப்ரேம்கள் என ஜொலித்தன. இப்படிப்பட்ட திரையரங்குகளில் தலைவரின் மேலும் பல படங்களைப் பார்ப்பது நமக்கு மிகவும் ஆனந்தமே என்ற எண்ணமும் ஏக்கமும் தோன்றியது.
ரந்தவாவுடனான சண்டைக்காட்சியில் சின்னப் பையனைப் போல் தலைவர் துள்ளி குதித்து சண்டை போடும் போதும் சரி, அதிலும் சோஃபா மேலிருந்து கீழே குதித்து அதை பேலன்ஸ் செய்வதற்காக வலது காலை சற்றே நகர்த்தி மீண்டும் நெருக்கமாய் கொண்டு வந்து எகிறி நிற்கும் லாவகம், பெரிய திரையில் இன்னும் துல்லியமாய் தெரிகிறது. அப்போது கவனிக்க முடியாத அல்லது கவனிக்கத் தவறியிருக்கக் கூடிய பல நுணுக்கங்களை இப்போது பெரிய திரையில் காணும் போது,, நம்முடைய ரசனை மேலும் மேலும் உயர்வதையும் அந்த அளவிற்கு நம்மை அவர் வளதர்த்திருக்கிறார் என்பதையும் நினைத்து மனம் குதூகலித்தது. ரந்தாவாவுடன் சண்டை துவங்கும் போது பத்மா கன்னா விடம் எக்ஸ்கியூஸ் மீ மேம்.. என்று அப்போதே அவர் மேம் என்ற வார்த்தை சொல்லியிருப்பது, எந்த அளவிற்கு அவர் அட்வான்ஸாக இருந்திருக்கிறார் என்பது புலனாகிறது.
கல்யாணப் பொண்ணு பாடலில் துள்ளித் துள்ளி நடனமாடி ஒயிலாக இடுப்பையாட்டி கண்களால் கவர்ந்து களிநடம் புரியும் போது.. அதுவும் ஒரு கட்டத்தில் மதில் மேல் நடந்து வரும் போது அந்த குறுகிய பாதையிலும் ஸ்டைலாக நடநது வருவது .. தெய்வமே என கூவத் தோன்றும்...
காவல் அதிகாரியின் தயவு தேவை என்பதற்காகவும் பொருள் படவேண்டும் அதே சமயத்தில் காதலியாகவும் அவள் பாடுவதாய் பொருள் பட வேண்டும் என்று சூழ்நிலை அமைய இலக்கிய நடையில் இரு பொருள் தொனிக்கும் பாடலை எழுதுவதில் சக்கரவர்த்தி என நிரூபித்தார் கண்ணதாசன். அவள் வரைக்கடத்தலில் ஈடு படுகிறாள். அதை கொண்டு போவதற்கு அவன் துணை தேவை. அதற்கு வைரமென்றே எனை நீ பாடு என பாடுகிறாள். வாங்கிக் கொள்வேன் அதை கையோடு என அவன் சொல்கிறான். இந்த சம்பாஷணையில் காதலும் அடங்குகிறது. கடத்தலும் அடங்குகிறது.
இது போல் ஒவ்வொரு காட்சியைப் பற்றியும் எழுதிக் கொண்டே இருக்கலாம். அத்தனை காட்சிகளையும் கண்கவர் வண்ணத்தில் காதிற்கினிய துல்லிய ஒலியமைப்பில் அன்று கிடைக்காத வடிவமைப்பில் இன்று புதிதாய்ப் பார்த்து பரவசமடைய இன்றே விரையுங்கள் திரையரங்கிற்கு. வரவேற்பளியுங்கள் வெற்றிச் சக்கரவர்த்திக்கு..
மற்ற கலைஞர்களைப் பற்றியும் குறிப்பிட்டே ஆகவேண்டும். கலைச்செல்வி ஜெயலலிதாவின் வாழ்க்கையில் முக்கியமான படங்கள் பெரும்பாலும் அவர் நடிகர் திலகத்துடன் நடித்த படங்களே என்பதற்கு ராஜா இன்னோர் உதாரணம். நடராஜன், மேஜர் சுந்தர்ராஜன், ரங்கா ராவ், சந்திரபாபு, வி.எஸ்.ராகவன், கே.கண்ணன், மனோகர், ஐ.எஸ்.ஆர்., காந்திமதி, பத்மா கன்னா என அனைவருமே சிறப்பான பங்களிப்பை அளித்திருந்தனர்.
நவீன வடிவைமப்பில் நவீன திரையரங்கில் மக்கள் தலைவர் நடிகர் திலகம் சிவாஜியின் ஸ்டைல் களியாட்டங்களைக் கண்டு களிக்க சிறந்த வாய்ப்பு. அந்த அனுபவத்தை சொல்லி மாளாது.
ஒரே வார்த்தையில் சொல்வதானால் அமர்க்களம்.
ஆனால் இத்தனையும் இருந்தும் ஒரே ஒரு குறை. அதை யாராலும் தீர்க்க முடியாது.
இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த இந்த நேரத்தில் நம்மோடு இதை அனுபவிக்க அந்த படைப்பாளி இல்லையே என்பதே.
Darling C.V.R. Sir, we are missing you very much.
Photo courtesy: Vasudevan Srirangarajan.
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...15&oe=5BC1FC96
vee yaar
Vaannil
ஒரு ரசிகனின் டைரி குறிப்பு ( 1986)
நான் வசித்துவந்த வடபழநியைச் சுற்றி, இரண்டு அல்லது மூன்று கிலோ மீட்டர் சுற்றளவில் அமைந்திருந்த கமலா, ராம், லிபர்டி, உதயம் வளாகம், விஜயா, விருகம்பாக்கம் நேசனல், சாலிகிராமம் ராஜேந்திரா ஆகிய பகுதிகளில் அன்றைய நாட்களில் நடிகர்திலகத்தின் படங்கள் அடிக்கடி திரையிடப்படுவது வழக்கம்.
1986 ஆம் வருடத்தில் மட்டும் எங்கள் பகுதியில், 12 மாதங்களும் தொடர்ச்சியாக நடிகர்திலகத்தின் படங்கள் புதியதும் பழையதுமாக ஓடிக்கொண்டே இருந்தன என்பதற்காக சாட்சியே இந்த டைரிகுறிப்பு.
இதில், நான் பார்க்காமல் விட்டுவிட்ட அய்யனின் படங்கள்கூட ஏதேனும் வேறுசில திரையிடப்பட்டிருக்கலாம்.
வியாழன்று ஆற்காடு சாலையில் ஒட்டப்படும் அய்யனின் பட சுவரொட்டிகளுக்கு வார இறுதிநாட்களில் பார்ப்பதற்கான நேரம் குறிக்கப்படும்.
வருடத்தின் 52 வாரங்களில், 42 வாரங்கள் தொடர்ந்து,
அய்யனின் படங்களை மேனிலைக் கல்வி பயின்று கொண்டிருந்த அந்த பள்ளிப் பருவத்திலேயே தரிசித்திருக்கிறேன்.
அப்போது பெரிதாகத் தோன்றவில்லை. இப்பொழுது புரட்டுகையில் மலைப்பாகத் தோன்றுகிறது.
உங்களுக்கும் அந்த அனுபவம் தோன்றும் என்றே எண்ணுகிறேன்.
04:01:1986 கமலா / பாபு / மாலை / ரூ 2.25
11:01:1986 ராம் / வசந்தமாளிகை / காலை / ரூ 4.20
14:01:1986 காசி / சாதனை/ காலை / ரூ 6.00
21:01:1986 நேசனல் / நான் வாழ வைப்பேன் / மாலை / ரூ 2.80
25:01:1986 லிபர்டி / திருடன் / மதியம்/ ரூ 2
02:02:1986 ராம் / நீலவானம் / காலை /ரூ2.30
10:02:1986 சூரியன் / படிக்காதவன் / மாலை / ரூ 2:90
15:02:1986 ராம் / நீதி / மதியம் / ரூ 2
19:02:1986 கமலா / நிச்சய தாம்பூலம் / மதியம் / ரூ 2.25
23:02:1986 தொலைக்காட்சி / குங்குமம்
26:02:1986 சந்திரன் / மருமகள் / மாலை /ரூ4
08:03:1986 ராஜேந்திரா / சாதனை / காலை
09:03:1986 உதயம் / ஆனந்தக்கண்ணீர் / மதியம் / ரூ 2
16:03:1986 விஜயா / என்மகன் / காலை /
ரூ 3.50
19:03:1986 ராஜேந்திரா / மருமகள் / மதியம் /ரூ 2.75
12:04:1986 உதயம் / விடுதலை / ஸ்பெஷல் ஷோ / ரூ 5.50
19:04:1986 நேசனல் / புதியபறவை / மாலை / ரூ 2
22:04:1986 ராஜேந்திரா / கல்யாணியின் கணவன் / காலை / ரூ 2
07:05:1986 ராம் / கலாட்டா கல்யாணம் / காலை / ரூ 2.30
18:05:1986 தொலைக்காட்சி / நவராத்திரி
22:05:1986 நேசனல் / அன்பைத்தேடி / காலை / ரூ 1.85
24:05:1986 லிபர்டி / ஆலயமணி / மதியம்/ரூ2
07:06:1986 ராம் / சாதனை / காலை / ரூ 1.50
10:06:1986 நேசனல் / இருவர் உள்ளம் / காலை / ரூ 1.10
15:06:1986 தொலைக்காட்சி / அஞ்சல்பெட்டி 520
18:06:1986 லிபர்டி / பார்த்தால் பசிதீரும் / காலை / ரூ 1.50
20:06:1986 ராஜேந்திரா / பச்சைவிளக்கு / மதியம் / ரூ 2
21:06:1986 ராம் / அன்புக்கரங்கள் / காலை / ரூ 1.50
08:07:1986 ராஜேந்திரா / எங்கமாமா / மாலை / ரூ 2
14:07:1986 ராஜேந்திரா / தங்கசுரங்கம் / மதியம் / ரூ 2
17:07:1986 உதயம் / தாய்க்கு ஒரு தாலாட்டு /
மாலை / ரூ 6
22:07:1986 விஜயா / பட்டிக்காடா பட்டணமா / காலை / ரூ 2.20
05:08:1986 ராம் / நிச்சய தாம்பூலம் / காலை
ரூ 1.50
10:08:1986 ராம் / சபாஷ்மீனா / காலை / 2.30
10:08:1986 தொலைக்காட்சி / தாயே உனக்காக
18:08:1986 விஜயா / தங்கை / காலை / ரூ1.55
20:08:1986 ராம் / படித்தால் மட்டும் போதுமா/
மாலை / ரூ 1.50
24:08:1986 ராஜேந்திரா / சொர்க்கம் / காலை ரூ 2
25:08:1986 ராம் / சாந்தி / காலை / ரூ 2.30
08:09:1986 ராம் / பட்டிக்காடா பட்டணமா / மாலை / ரூ 2.90
12:09:1986 ராஜேந்திரா / தாய்க்கு ஒரு தாலாட்டு / மாலை / ரூ 2
05:10:1986 ராம் / பாலாடை / காலை / ரூ2.30
19:10:1986 தொலைக்காட்சி / மரகதம்
05:11:1986 உதயம் / லட்சுமி வந்தாச்சு / மாலை / ரூ 5.50
23:11:1986 தொலைக்காட்சி / பராசக்தி
25:11:1986 ராஜேந்திரா / பலே பாண்டியா /
காலை / ரூ 2
14:12:1986 உதயம் / மண்ணுக்குள் வைரம் / மாலை / ரூ 5.50
19:12:1986 லிபர்டி / அன்னையின் ஆணை / மாலை / ரூ 3.50
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...b3&oe=5B8580FE
இன்றைய தமிழ் சினிமாக்களின் மத்தியில் என்றும் ராஜாவாக
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...ac&oe=5B7BBEE4
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...1d&oe=5B800A2E
sekar
Watched Raja in Escape Mall. Thanks to Sorgham Nagaraj for taking me to Real Sorgham for 3 hours.Relived my Teens with Trans Psychedelic trip. What a quality of print,clarity and sound??? Kudos Mr.Nagaraj. we are all indebted to you.
Giving my Recap.
ராஜா-26/01/1972.(Wishing for a great success for re-release on 25 th May 2018)
சிவாஜியே இப்படத்தில் சொல்வது போல ராஜான்னா ராஜாதான். நம் ரசிகர்கள் மற்றுமல்ல, பொதுமக்கள்,மாற்று அணியினர் எல்லோரும் ஈர்த்து லயித்து ,ரசித்த படம். இது ஒரு jamesbond action movie genre என்றாலும் ,நேரடியாக ரெயின் கோட் போட்டு கொண்டு, கருப்பு கண்ணாடி மாட்டி கொண்டு (குல்லா), துப்பாக்கி தூக்கி ,வில்லன்களுடன் நேரடியாய் மோதி,ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை சல்லாபிக்கும் வழக்கமான jamesbond அல்ல. The departed என்ற ஆஸ்கார் பரிசு பெற்ற படத்தில் , வில்லன்களின் பாசறையில் போலிஸ் ஆள் ஒருவரும், போலிஸ் பாசறையில் வில்லன் ஆள் ஒருவரும் ஊடுருவி ஒருவர் யார் என்று மற்றவருக்கு தெரியாமல் , திரைக்கதை ஜாலம் புரிந்து எனது favourite இயக்குனர் Scorcese அதகளம் புரிவார் எனது அபிமான நடிகர்கள் matts Damon ,Decaprio போன்றோரை வைத்து.
வில்லன் பாசறையில் ஊடுருவி(Mole), அங்கு எல்லோர் அபிமானத்தையும் பெற்று முன்னேறி ,கடைசியில் போலிஸ் கஸ்டடி யில் இருந்து வெளியேறும் வில்லன் ஆள் ஒருவன் இந்த உண்மை தெரிந்து ,பிறகு உச்ச காட்சியில் ஒருவரை ஒருவர் போட்டு கொடுத்து விஞ்ச பார்க்கும் ,மிக சிறந்த ,சுவாரஸ்யமான ,ட்விஸ்ட் நிறைந்த,roller coaster ride போன்ற உச்ச கட்ட காட்சியுடன் முடியும் மிக மிக சுவாரஸ்யமான இளமை ஸ்டைல் திருவிழா இந்த படம். ஹிந்தி மூலம் நாராயணன் என்ற கதாசிரியர் எழுதியது.தமிழ் வசனம் வேறோர் நாராயணன்.
சி.வீ.ராஜேந்திரன் படம் என்றாலே இளசுகளுக்கு கொண்டாட்டம்.(இந்த படம் வந்த போது பதிமூன்று வயசு இளசுதானே) அப்போது படித்த இளைஞர்களின் கனவு நாயகன் ,திராவிட மன்மதன் நடிகர்திலகம் ,கலை செல்வியுடன், பாலாஜி தயாரிப்பில், சின்னி சம்பத் நடனம்,மாதவன் சண்டை,ராமகிருஷ்ணன் உடை,மஸ்தான் கேமரா ,மெல்லிசை மன்னர் இசை என்று பக்கா வின்னிங் டீம். எதிர்பார்ப்புக்கு கேட்கவா வேண்டும்? எதிர்பார்ப்பை மீறியே, எல்லா தரப்பினருக்கும் கல்யாண விருந்து போல தீனி கொடுத்த அற்புதம் ராஜா....
இந்த படத்தை பொறுத்த அளவில் நான் உள்ளே நுழைந்து உளவியல்,நடிப்பின் நுணுக்கம் என்றெல்லாம் உங்களை சோதிக்க மாட்டேன். ஏனெனில்,படம் முழுக்க இளமை,சுவாரஸ்யம்,ஸ்டைல்,energy மட்டுமே.
பாச மலர் ராஜசேகரன் ,தில்லானா சண்முகம்,திருவருட்செல்வர் அப்பர்,தெய்வ மகன் கண்ணன், வியட்நாம் வீடு பத்மநாபன்,பாபு என்று திராவிட மன்மதன், தான் சுந்தர புருஷனாக மட்டுமே தோன்றி ரசிகர்களை வசீகரிக்க எண்ணியதில்லை.எல்லா பாத்திரங்களிலும் சிறப்பாக நடித்து ,தன் இளமை,அழகு இவற்றை மறைத்து பாத்திரத்திற்கேற்ப தோன்றிய நடிகர்திலகம் தன் முழு இளமை, ஆண்மை, அழகு, வசீகரம் எல்லாவற்றையும் குறையாமல் நமக்கு வழங்கிய படங்கள் கலாட்டா கல்யாணம்,தங்கச்சுரங்கம்,நிறை குடம்,தெய்வ மகன்(விஜய்),சிவந்த மண்,எங்க மாமா, சுமதி என் சுந்தரி, ராஜா,வசந்த மாளிகை போன்றவை.இதிலும் ராஜா ஒரு குறிஞ்சி மலர்.
என்னத்தை சொல்ல!!! அழகென்றால் அப்படி ஒரு அழகு, இளமைஎன்றால் அப்படி ஒரு இளமை, ஸ்டைல் என்றால் அப்படி ஒரு ஸ்டைல்,துறுதுறுப்பென்றால் அப்படி ஒரு துறுதுறுப்பு, சுறுசுறுப்பென்றால் அப்படி ஒரு ஒரு சுறுசுறுப்பு அதுவரை திரையுலகம் பார்வைக்கு பார்வை,நடைக்கு நடை,காட்சிக்கு காட்சி அப்படி ஒரு வசீகரம் நிறைந்த இளமை துள்ளும் (என்ன ஒரு energy level )ஸ்டைல் ஆன ஒரு நாயகனை கண்டதில்லை.
இந்த படம் மிக பெரிய வெற்றி பெற்றும் நடிகர்திலகம் திரும்பி திரும்பி இதே மாதிரி படங்களில் சிக்கி கொள்ளவும் இல்லை என்பதே நடிகர்திலகத்தை வித்யாசம் காட்டியது.
உடைகளை பற்றி சொல்ல வேண்டுமென்றால்....
பொதுவாக அவர் trend setter .well dressed man of indian screen என்ற விருதை ஒரு வடக்கிந்திய பத்திரிகை 1958 இல் அவருக்கு அளித்து மகிழ்ந்தது.
அந்த சுந்தரனுக்கு எல்லா வித வேடங்களும் பொருந்தியது போல எல்லா வகை உடைகளும் பொருந்திய அழகை என் சொல்ல?வேட்டி சட்டை,ஜிப்பா,சுரிதார்,சட்டை,பேன்ட் ,கோட் சூட்,அரச உடைகள், இதிகாச புராண உடைகள்,படு படு ultra modern உடைகள் எல்லாமே கன கச்சிதமாக பொருந்தியது அந்த திராவிட ஆண்மை நிறை அழகனுக்கு.
இந்த படத்தில் ஜெர்கின் எனப்படும் ஜாக்கெட், கோட், tie ,மற்றும் scarf போன்ற உடைகள்.
முதல் காட்சியில் ஆரம்பிக்கும் ராஜாவின் ராஜாங்கம்.விஸ்வத்தின் அடுத்த அறையில் அடை பட்ட அழகான ஜெர்கின் அணிந்த ராஜா.சிகெரெட் lighter உடன் விஸ்வம் போலிசோடு அதிக சண்டையும் வச்சிக்காதே ,அதிக தொடர்பும் வச்சிக்காதே ,பொறுமையாய் இரு என்று லேசான தலையாட்டலுடன் ,எவ்வளவு நாளா நடக்குது என்று கேட்கும் விஸ்வத்திடம் நாலு நாளா என்று கூல் தொனியில் சொல்வது, நம்பிக்கையான ஆள் கேட்கும் விஸ்வத்திடம் ஆழமான குறுகுறு பார்வையுடன் ,தன் மேல் நம்பிக்கை வைக்க சொல்வது என்று முதல் காட்சியிலேயே தன்னுடைய வித்தியாச வேடத்துக்குள் அனைவரையும் ஈர்த்து கட்டி போட்டு விடுவார்.
ராதாவை ,ஹோட்டல் அறையில் சந்திக்கும் முதல் காட்சி டீசிங் கலந்த காதல் அறிமுக ஆரம்ப காட்சியில் நடிக்க விரும்புவோருக்கு இளமை பாடமே நடத்த பட்டு விடும்.ராதாவின் அழகை வியப்பு விழிகளால் பருகி ,பொய் ஆச்சர்யம் காட்டி அழகை விமர்சிக்கும் ஆரம்பம், indifference காட்டும் ராதாவிடம் ஜாலியாக credibility நிரூபிக்கும் cuteness ,பார்க்க மாட்டேங்களா வைரங்களை எனும் ஸ்டைல்,தன் பெயரை வித விதமாக சொல்லி கடி ஜோக் அடித்து தானே ரசிப்பது, முடிவில் கிளம்பும் போது ஆப்பிளை ஒரு அவசரம் கலந்த விழைவுடன் கடித்து விடை பெறுவது-இளமை குறும்பின் உச்சம் தொடும்.
நீ வர வேண்டும் பாடல் ராஜா சொல்லும் ஸ்டைல் களை கட்டி விடும்.அதிலும் முகம் தடவும் கையை ராதா தட்டி விட ,போலிசை காட்டியதும் அவர் கையை எடுத்து முகத்தில் வலுகட்டாயமாய் தேய்த்து கொள்ளும் இளமை டீசிங் குறும்பு.
பாபுவிடம் கூட்டி சென்றதும் அவரை கட்டி வைத்து விசாரிக்கும் காட்சி . ஈர்ப்பு நிறைந்த கிண்டலின் உச்சம். குமாரிடம் ஒவ்வொரு முறை அடிபடும் போதும் வித விதமான ஜாலி கமெண்ட் .முகத்தை கெடுத்துடாதே என்று சொன்னாரில்லை மடையா... ஏண்டா அடிக்கரத்துக்குன்னே சம்பளமா... அதே மாதிரி ராதாவுடன் சந்திப்பை இதயம் அடித்த அழகை கண்ணை அடித்து குதூகலிக்க வைப்பார்.(தடக் தடக்).முடிந்து தன் கயிற்றை அறுத்து வில்லன்களை அட்டாக் பண்ணி, surprise கொடுத்து lighter இல் போட்டோ எடுக்கும் லாவகம்... வேறு ஒரு நடிகன் கனவு கூட காண முடியாத நடிப்பு.
குமாரின் துரோகம் பற்றி பாபுவிடம் சொல்லி ,அவர் தூக்கி எரியும் சாவியை expert என்று இடது கையால் பிடிக்கும் ஸ்டைல்.பாபுவை தாக்கி விட்டு தப்பியோட பார்க்கும் குமாரை ,ஸ்டைல் ஆக சிகெரெட் தனது ஆள்காட்டி கட்டை விரலில் குவித்து கீழ் விட்டு தேய்க்கும் அழகு. பிறகான அற்புத சண்டை காட்சி.
ஒரு நேருக்கு நேர் சண்டை காட்சியில் நீங்கள் என்ன எதிர்பார்ப்பீர்கள்? ஒரு சமமான அல்லது மிகை பலம் கொண்ட வில்லன். சம யுத்தம். சம வாய்ப்பு. சிறிதே திட்டமிடல். சவால் விடும் gestures . சுறுசுறுப்பு நிறைந்த rhythmic manly Grace ,நல்ல கட்டமைப்பு இவைதானே? இவை அத்தனையும் கொண்ட சண்டை காட்சிதான் குமாருடன் ராஜா மோதும் சுவாரஸ்ய குதூகல சண்டை காட்சி.முதல் பாய்ந்து இரு முறை அட்டாக் பண்ண சுலப வாய்ப்பு எதிரிக்கு கொடுக்கும் போது முகத்தில் ஒரு scheming look தெரியும்.பிறகு லாவகமாய் நகர்ந்து அட்டாக் ஆரம்பிக்கும் போது ஒரு aggression தெரியும். எதிரெதிரில் குறி பார்க்கும் போது ஒரு cautious anticipation தெரியும்.எதிரி குறி வைக்கும் போது அந்த அடி பட்டால் எப்படி இருக்கும் என்ற உணர்வை react செய்து உணர்த்துவார்.(அடி படும் போது வலி வேதனை ) ஒரு பம்பரம் போல் சுழன்று சுழன்று திரும்பி graceful stylish சுறுசுறுப்பு காட்டும் நேர்த்தி.கண்ணை அடித்து ,ஒரு கூல் பார்வையுடன் எதிரியை challenge பண்ணுவார். ஒரு சண்டை காட்சியில் கூட தன்னை மீற யாருமில்லை என ஓங்கி சொன்ன அற்புத காட்சி.
அதே போல ராதா தன் அம்மாவிடம் பேசுவதை ஒட்டு கேட்கும் போது ராதாவிடம் துப்பாக்கி முனையில் உள்ளே வரும் போது அம்மாவிடம் விசாரிப்பு, பிறகு ஒரு பொய்யை சொல்லும் போது நேர்பார்வை தவிர்த்த ,கையை தனது வாயை மறைக்கும் தோரணையில் வைத்து பேசும் இடம் உளவியல் அறிஞர்கள் ,பொய் சொல்வர் செய்யும் சில செயல்களை படித்தால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும் உளவியல் நடிப்பதிசயம்.
பாபு நம்மை தொடர்கிறார் என்று அறிவிக்கும் ராதாவிடம் ,அதை கவனித்து பின் romance பண்ணுவது போல் நடிக்கும் நுணுக்கம்.(பாபு சந்தேகம் தவிர்க்க). ஜம்பு வந்ததும் ஹூம் ஹூம் என்று ஸ்டைல் ஆக கை காட்டும் ஆமோதிப்பு,தங்கத்தை தொட்டதும் கையை தட்டி விடும் அவசர அலட்சிய எச்சரிக்கை , தொடரும் விறுவிறுப்பான சண்டை காட்சி ,ஜம்புவிடம் கத்தியை காட்டி ஓடுடா என்ற மிரட்டல் தொனியில் காட்டுவது.
தொடரும் ramantic marvel கல்யாண பொண்ணு lead scene (அப்புறம்தான்....).நீ வெக்கத்தோடு என்னை ஒர கண்ணால் பார்க்க (ராதா முறைக்க)சரி நான் பாக்கிறேன்னு வெச்சிக்க.
சிவாஜியின் நடன காட்சிகளில் ஒரு அபாரமான டான்சர் grace , கடின movements , ஸ்டைல்,சுறுசுறுப்பு,professionalism மிளிரிய கால கட்டம். கல்யாண பொண்ணு அதற்கு அற்புத உதாரணம்.ஒரு back and sideways ஸ்டெப்ஸ் போட்டு துவங்குவாறே அதை சொல்வதா ,கைகளை விரித்து hop step பாணியில் ஒன்றை செய்வாரே அதை சொல்வதா, தெய்வத்தால் எதுதான் முடியாது?
இன்ஸ்பெக்டர் உடை அற்புதமாக இருக்கும். அந்த காட்சியில் stiffness காட்டி எல்லோரையும் குழப்பி பிறகு போலிசை விரட்டும் நயம்.
தொடர்ந்த நாகலிங்கத்தை சந்திக்கும் காட்சியில் தாராவை கண்டதும் காட்டும் கண நேர சங்கடம் கலந்த முகபாவம்..(தாராவின் நிலைக்கு ராஜாவும் காரணமே)
இரண்டில் ஒன்று காட்சி ஊடல் கலந்து காதல் விருந்து. திராட்சை நிற உடையில் (திராட்சை ஆணின் காம விழைவையும்(libido&virility), பச்சை நிறம் பெண்ணின் அழைப்பை ஏற்று பிள்ளை பெறும் விழைவையும் (Fertility)குறிக்கும். சி.வீ.ஆர் கலர் psychology )அழகு கொண்ட இளமை குறும்புடன் ,கண்ணில் தெறிக்கும் கிண்டலுடன் அவர் ஒவ்வொரு ஜன்னலாக எட்டி பார்க்கும் அழகு. ஒரு bull fight gesture கொண்டு அறைக்குள் நுழைந்து, அணைக்கும் போது செல்ல நிமிண்டல், என்று இரண்டில் ஒன்றல்ல ஒன்றே ஒன்று என நாம் குதூகலிக்கும் ஒரே காட்சி.
இறுதி காட்சி நடிகர்திலகம் நினைத்தாலும் அவருடைய திறனை கட்டு படுத்த முடியாது என்று அவர் காட்டும் சுவாரஸ்ய வெளியீடு.
இந்த காட்சி முழுதுமே வில்லனை பிடிக்க திட்டமிட்டு ,அது விஸ்வம் தலையீடு மற்றும் அம்மாவின் கடத்தல் என்பதினால் மாற்று திட்டமிடல் என்பதை முன்னிறுத்தி ,விஸ்வத்தின் எதிர்பாராத நடவடிக்கை அதனை கெடுக்கும் போதும் ,சுதாரிக்க வேண்டிய அவசரம். சிவாஜியின் முகபாவங்களில், ஒரு ஆசுவாசம் (திட்ட படி),அவசரம், குழப்பம் (நிலைமை எல்லை மீறும் போது),குறிப்புகள் (எல்லாம் கட்டுக்குள் என்று நண்பர்களுக்கு உணர்த்துவது),சமாளிக்கும் அவசரம், மற்றோரை குறிப்புணர்த்தி தன்னோடு தொடர சொல்லும் அவசரம் நிறைந்த எச்சரிக்கை தொனிக்கும் timing கொண்ட சமாளிப்புகள் .இந்த கட்டத்தில் அவர் முக பாவங்களை தொடருங்கள். பல ஆச்சரியங்கள் காத்திருக்கும்..
அவர் அன்னை சித்திரவதை படுத்த படும் போது , அதை தாங்கி கொள்ளவும் முடியாமல்,தடுக்கவும் முடியாமல்,வேதனையை வெளிக்காட்டவும் முடியாமல்,ஆத்திரத்தை கட்டு படுத்தவும் முடியாமல் துடித்து ,எதிரிகளுக்காக சிரித்து சமாளிப்பது போல அவர் காட்டும் நடிப்பு. (ஆம்.நடிப்பது போன்ற நடிப்பு).
courtesy g.sundararaman -nadigarthilagam fans
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...ba&oe=5BC06F2E
courtesy kanniah sivaraman f book
ஞாயிறு வணக்கம் நண்பர்களே!
பாசமலரைத் தொடர்ந்து வெளியான நடிகர்திலகத்தின் ஸ்ரீவள்ளி திரைப்படம்
சேலம் மற்றும் இலங்கையில் நூறுநாட்கள் ஓடியதைத் தொடர்ந்து, பாலும் பழமும் வெளியாகி மகத்தான வெற்றியை அடைந்தது.
பாவமன்னிப்பு ரஹீம்
பாசமலர் ராஜசேகர்...
பாலும் பழமும் ரவி மூவரும் ஒரே ஆண்டில் தமிழ் ரசிக நெஞ்சங்களில் சிம்மாசனமிட்டு அமர்ந்தது வரலாற்று நிகழ்வு.
'பிராயசித்தம்' என்னும் பெயரில் தெலுங்கினில் மொழிமாற்றம் செய்யப்பட்டது.
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...26&oe=5B8B91C1
vaannila
sekar.p
நடிகர் திலகம் திரைப்படம் தியேட்டரில் ஓடுகிறது என்ற செய்தி கிடைத்து விட்டால் போதும் வந்து குவித்து அந்த உத்தம புத்திரனை தரிசித்த பிறகு தான் அடுத்த வேலை
நேற்று சென்னை ஆல்பட் திரையரங்கு வளாகத்தில் குவிந்த நடிகர் திலகத்தின் பக்தர்கள், ரசிகர்கள் ராஜாவைக் கொண்டாடிய விதமே தனி தான்
இந்த மீடியா பாய்ஸ் யாரேனும் வந்தார்களா என்று தெரிந்து கொள்ள முடியவில்லை
எனக்கு தெரிந்து பத்திரிகை, மீடியா நண்பர்கள் வந்திருக்க வாய்ப்பில்லை ஏனெனில் உண்மை சாதனைகளை மக்களுக்கு தெரியபடுத்த அவர்கள்... விரும்புவதில்லை,
ராஜான்னா ராஜாதான்
நடிகர் திலகத்தின் கட் அவுட்களுக்கு சூடம் ஏற்றுதல் தேங்காய் உடைத்தல் போன்ற நிகழ்வுகளை செய்த நடிகர் திலகம் பக்தர்கள் தவறாமல் சொல்லும் உச்சரிப்பு
எங்கள் தங்க ராஜா "சிவாஜி" வாழ்க!
தெய்வ மகன் " சிவாஜி" வாழ்க!!
நேர்மையின் அடையாளம் " சிவாஜி" வாழ்க!!
மக்கள் பணத்தை கொள்ளையடிக்காத ஒரே தலைவன் " சிவாஜி" வாழ்க!!!
வேறு யாருக்கு இருக்கிறது இந்தத் தகுதி?
சிவாஜியை மட்டுமே இப்படி போற்றி கொண்டாடத் தகுதி இருக்கிறது,
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...6c&oe=5BC19040
sekar.p
ஹிந்து நாளிதழில் வந்த ஒரு செய்தி,
அதாவது இயக்குநர் ஸ்ரீதர் அவர்கள் எழுதிய திரும்பிப் பார்க்கிறேன் என்ற தொடரில் இந்த செய்தி இருக்கிறதாம்,
அதாவது ஸ்ரீதரும் நடிகர்... திலகமும் பரணி ஸ்டுடியோவில் சூட்டிங் இடைவேளை தருணத்தில் அமர்ந்து இருந்த போது எம்ஜிஆர் அவர்கள் 50 இளைஞர்களோடு வேகமாக நடிகர்திலகத்திடம் வந்து இவர்கள் எல்லாம் உன்னுடைய ரசிகர்களாம் காலையிலிருந்தே ஸ்டுடியோவிற்கு வெளியிலேயே காத்து இருந்தார்கள் அதனால் உன்னிடம் நேராக அழைத்து வந்தேன் என்று அறிமுகம் செய்து விட்டு வேகமாக சென்று விட்டாராம்,
ஹிந்து நாளிதழ் வெளியிட்ட செய்தி உண்மையா? அல்லது ஸ்ரீதரின் எழுதிய நூலில் உண்மை இருக்கிறதா? என்பது நமக்குத் தெரியாது,
சமீபத்தில் மாற்று கூடார முகநூல் தளத்தில் இந்தச் செய்தி இடம்பிடித்ததனால் அதில் கமெண்ட்ஸ் செய்தவர்கள் எல்லாம் நடிகர்திலகம் அவருடைய ரசிகர்களை எளிதில். சந்திப்பது கிடையாது என்ற கருத்துக்களை கொட்டித் தீர்த்தனர், மாற்று கருத்து கொண்டவர்கள் செய்திகளை நாம் கணக்கில் கொள்ள கூடாது என்பதை நானும் ஏற்றுக் கொள்ளக் கூடியவனே இருப்பினும் வரலாற்றை புரட்டி பார்ப்பார்களானால் நடிகர் திலகம் போல தனது ரசிகர்களை காத்திருக்க வைக்காமல் எளிமையாக சந்தித்த தலைவர்கள் எவரும் கிடையாது, குறித்த நேரத்தில் படப்பிடிப்பில் கலந்து கொள்வதாகட்டும் மேடை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதாகட்டும் நேரந்தவறாமையை கடைப்பிடித்து வாழ்ந்த தலைவர் நடிகர் திலகம் மட்டுமே என்பதை எதிர்கால வரலாறு கூறும்.
இனைப்பில் நடிகர் திலகத்தை எளிதாக சந்தித்த அவரை உயிர் மூச்சாய் சுவாசிக்கும் ரசிகர்களின் ஒரு பகுதி ( 30 போட்டோக்களை மட்டுமே இணைக்க முடிந்தது, யாரும் தவறாக புரிந்து கொள்ள வேண்டாம், கமெண்ட்ஸ் பகுதியில் இனைத்துக் கொண்டால் நன்றாக இருக்கும்)
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...12&oe=5B91DB2D
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...a8&oe=5B8A91DE
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...17&oe=5B792E6E
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...96&oe=5B7A3064
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...a4&oe=5B8C39F2