-
பொன்மனச்செம்மல் நடித்த 34வது திரைப்படமாகிய "குலேபகாவலி" படத்தின் கதை சுருக்கம் :
----------------------------------------------------------------------------------------------------------------------
குலேபகாவலி , இல்லை இல்லை அவள் பலே பகாவலி. அதனால்தான், நகாவலி ராஜ்யத்தின் ராணி பகாவலியாக அவளால் இருக்க முடிந்தது.
அப்பப்பா ! அவளிடம் ஆண்கள் அகப்பட்டுக் கொண்டு பட்ட பாடு ............ கொஞ்சமா , நஞ்சமா ?
அந்தப் பெண் சிங்கத்தைப் பார்க்கும் பேதைகள் எல்லாம் தாங்களும் அவளைப் போல நகாவலி ராஜ்ஜியத்தின் ராணியாக இருக்கக் கூடாதா என
ஏங்குவார்கள் !
அவள்தான் அப்படியென்றால் பகடையாடி மன்னாதி மன்னர்களையெல்லாம் பைத்தியங்களாக்கிய லக்கு ----- எப்படி தெரியமா ? அந்த அழகியை பார்க்கும் ஆண்கள் எல்லாம் "சொக்கு, சொக்கு" என்று சொக்கிப் போனார்கள். அவளிடம், சொக்கட்டான் --- ஆடித் தோற்று அவள் சொன்னபடி நெல் குத்தி, மாவு இடித்து, தண்ணீர் இறைத்துத் தாசானுதாசர்களாகக் காலத்தை கழித்தார்கள்.
இந்தப் பெண் சிங்கங்களை வெல்ல இவ்வளவு பரந்த உலகத்தில் ஒரு ஆண் சிங்கம் கூட இல்லையா ? என்ற கேள்வி எட்டு திசைகளிலும் எதிரொலி செய்தது. "இதோ இருக்கிறேன்" என்று பாய்ந்து வந்தது ஆண் சிங்கம்...... அவன்தான் தாசன்முல்க் !
அவன் தந்தை ஜைனன் முல்க் எதிர்பாராத விபத்தால், தன் கண்களை இழந்திருந்தான். இழந்த கண்களை மீண்டும் பெற வேண்டுமானால், குலேப் பூ வேண்டும்......அந்தப் பூவோ, நகாவலி ஆட்சியின் கீழ் இருந்தது. எட்டிப் பறித்து விட முடியுமா ? ஊ ஹூம் !
அந்த அபூர்வ பூவை அடைய வேண்டுமானால் எத்தனயோ ஆபத்துக்களைக் கடக்க வேண்டும். என்ன செய்வான் தாசன் முல்க் ? அல்லாவின் அருளால், அவற்றில் பலவற்றை அவன் ....... கடந்து விட்டான். கடைசியில் ......
சிங்கம் அல்ல ........பசி தீர்ந்ததும் சும்மா இருந்து விட ! புலி எத்தனை பேரை அடித்து தின்றாலும் எப்போதும் பசியோடிருக்கும் பயங்கரப் புலி !
அதை வெல்ல வேண்டி இருந்தது தாசன்முல்க்.
இவன் ஐந்தடி உயரம். அந்தப் புலியோ பதினாறு அடி நீளம் ! இவன் கையில் ஒரே ஒரு கத்தி. அதன் கையிலோ இருபது கூர்மையான கத்திகள். ஆம், அடித்துக் கிழிக்கும் அதன் நகங்களைத் தான் சொல்கிறோம். இவன் தலை அதன் வாய்க்குள் நுழைந்து விடும். அதன் தலையோ இவன் வாய்க்குள்
நுழையவே நுழையாது. அப்புறம் ....... ?
இவன் கதி என்ன ? அதை வென்றானா ? அந்த அபூர்வப் பூவை அடைந்தானா ? அவன் தந்தை ஜைனன் முல்க் இழந்த பார்வையை மீண்டும்
பெற்றாரா ? எத்தனயோ ஆண்களை தங்கள் அழகால் அடிமை கொண்ட ..... பகாவலியும், லக்பெஷ்வாவும் தாசன் முல்கின் வீரத்துக்கு முன்
தலை வணங்கினார்களா ?
இவற்றுக்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டிருந்தால் நீங்கள் எப்பொழுதுதான் படத்தைப் பார்ப்பது.
அதோ இரண்டாவது பெல் கூட அடித்து விட்டது. ..... படத்தைப் பாருங்கள்.
================================================== ================================================== ==========
இவற்றுக்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டிருந்தால் நீங்கள் எப்பொழுதுதான் படத்தைப் பார்ப்பது ?
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !அனபன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
பொன்மனச்செம்மல் நடித்த 34வது திரைப்படமாகிய "குலேபகாவலி" படத்தி ல் இடம் பெற்ற பாடல்கள் :
================================================== =====================
1. இறை வணக்க பாடல் : ஜெயமே பெறவே ஜெகமே புகழவே (தொகையறா)
நாயகமே நபி நாயகமே நலமே அருள் நபி நாயகமே
2. நகைச்சுவை ஜோடிப்பாடல் பாராண்ட மன்னரெல்லாம் ... பதுங்கிருந்த பூமியில்
இந்த பச்சோந்திக் கூட்டமெல்லாம் பகல் வேஷம் போடுதய்யா
3. ஜோடிப்பாடல் வில்லேந்தும் வீரனெல்லாம் வீழ்ச்சி பெற்றார் பகடையிலே
என்னை வெற்றி பெற முடியாது .... நீர் கற்ற வித்தையும் செல்லாது
4. ஜோடிப்பாடல் வில்லேந்தும் வீரனெல்லாம் வீழ்ச்சி பெற்றார் பகடையிலே......
என்ன வேணும் துரையே .... இஷ்டம் போல் கேள் இனியே !
5. தனித்த ஆண் குரல் பாடல் மாயா வலையில் வீழ்ந்து, மதியே இழந்து தன்னை மறந்தான்
பெரும் பாவி மனமே ! காயாபுரிக் கோட்டையை கற்கோட்டையாய்
6. தனித்த குரலில் ஆண் பாடல் கையைத் தொட்டதும் மெய்யை சிலிர்க்குதே
காதலின் வேகந்தானா...(தொகையறா)
தெய்வீக காதல் கனிந்திடும் தேகத்திலே ஒரு சக்தியுண்டு
7. தனித்த பெண் குரல் பாடல் சொக்கா போட்ட நவாபு செல்லாது உங்கள் ஜவாப்பு
நிக்காப் புருஷன் போல வந்து ஏமாந்தும் என்ன வீராப்பு ?
8. குழுப்பாடல் அம்பாலா ..... பீம்பாலா .......... லீபாலா ... பீபா ..... ஹீ பாலா
ஸோலாஜி... பாலாஜி....... ஜாலாஜி ....ஜல் ஜல் ஜல் ஜல்.. லாஜி
9. தனித்த ஆண் குரல் பாடல் நகாவலி நாட்டிலே ... பகாவலி ஆட்சியிலே நியாயமாய்
வாழவும் வழியில்லே.
அநியாயம் இது அநியாயம் இந்த ஆட்சியிலே .... இது அநியாயம்
இங்கே ஆண்களை பெண்கள் அடிமையாக்குவது அநியாயம்
10. பெண்கள் குழுப் பாடல் கண்ணாலே பேசும் பெண்ணாலே .... ஆண்கள் தன்னாலே மயங்கும்
காலமே !
எந்நாளும் வீணில் காதல் வாழ்விலே ... ஓ ... ஓ ...ஓ . தன்னாலே
11. காதல் ஜோடிப்பாடல் மயக்கும் மாலை பொழுதே நீ போ, போ இனிக்கும் இன்ப இரவே
நீ வா வா .... ...... இன்னலை தீர்க்க வா
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அனபன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
-
-
-
-
-
-
குலேபகாவலி படத்தின் கதைச்சுருக்கம், பாடல்கள் பற்றிய அருமையான ஆவணங்களைப் பதிவிட்ட பேராசிரியர் செல்வகுமார் அவர்களுக்கு நன்றிகள் பல.
-
Thanks Professor Selvakumar Sir. Sometimes it is difficult to find this thread any idea apart from accessing this thread without bookmarking?