இப்போது புரிந்ததா? அதே! அதே! போட்டது பொருத்தம்தானே! (cycle gap):) கருப்பு வெள்ளை தனியா தெரிஞ்சுது. அதான் கலர்ல...ஹி ..ஹி ..ஹி
Printable View
நன்றி வினோத் சார்.
உங்கள் ஆசை நிச்சயம் நிறைவேறும்.
மழைன்னாலே எப்போதும் குஷி தான்..அதுவும் ஒரு வாலிபன் கூட கன்னி இருந்தா அவ்வளவு தான்..பின் என்ன குஷியா மழையில நன்ஞ்சு ஆடிப் பாட்த்தான் செய்வான்..
ஆர் சுந்தர்ராஜனின் கவித்துவமான டைட்டில் கொண்ட படம் இது..படம் அந்தக்கால வழக்கம்போல வேலையில்லா வாலிபன் காதல் கடைசியில் சோகம் எனத் தான் முடிந்தாலும் பாடல்கள் கே.வி.மகாதேவன் இசையில் வெகு அழகு.. அதுவும் குறிப்பாய் இந்தப் பாட்டு.. கே.ஜே.ஜேசுதாஸ்.. எஸ்.ஜானகி கோரஸ்...
மழை விழும் கொடியென நதிவிழும் கடலென
மரகத மணி உடல் சிலிர்க்குது
கருவிழி அழைக்குது கரங்களும் துடிக்குது
இளமனம் சிறகினை விரிக்குது
வசந்தமும் இங்கு வந்த்து இங்கு
மங்கல வாழ்க்கை மலரட்டும் என்று
தகதக தகதக தக தகதக்ஜம்
மங்கையின் குங்கும்ம் மன்னவன் உன்னுடன்
சங்கம்ம் ஆவது எப்பொழுது
உன் சந்தன இதழால் கவியெழுது
செங்கயல் விழிகளில் அஞ்சனம் கரைந்திட
தினம் தினம் மன்மதக் கதை படிப்போம்..
செவ்விதழ் ஓரத்தில் தேனெடுப்போம்..
ராகமும் தாளமும் சேர்ந்த்து போல் இரு
மேகமும் மேகமும் சேர்ந்த்தம்மா
தேகமும் தேகமும் மயங்குதம்மா..
பொன்னிற மின்னலின் புது ஒளி கண்ட்தும்
பூமியில் மலர்ந்த்து தாழை மடல்
பொங்குது பொங்குது காதல் கடல்..
வசந்தமும் இன்று வந்த்து இங்கு...
**
பட்த்தோட டைட்டில் விட்டுட்டேனே..தூங்காத கண்ணின்று ஒன்று
http://www.youtube.com/watch?v=oXlAlSyJuk4
பாடல் வரிகளை மறுபடி டைப்படித்தேன்..
மோகன் அம்பிகா பொருத்தம் தான் என்றாலும் அனியாயத்திற்கு அம்பிகா மானபங்கப் பட்டு இறப்பது போல தேவையில்லாத சோகம் ஆக்கியிருப்பார்கள் இறுதியில்..
ஒரு மேட்னி ஷோ பார்த்து விட்டு மாலை முழுதும் தலை வலித்து இரவு அமிர்ந்தாஞ்சன் தடவிக்கொண்டு மெட்டாசினோ கால்பாலோ உண்டது நினைவில் இருக்கிறது..
யார் பாடல் வரிகள் தெரியவில்லை..ஆனால் நல்ல பாட்டு..
இங்குள்ள பெரும்பாலோர் போல் எனக்கும் இசையரசி பி.சுசீலா தான் மிகவும் பிடித்த பாடகி.
இவர் ஒருவர்தான், இது வரையிலும், எந்த ஸ்தாயியிலும் பிசிறடிக்காமல் பாடியவர். பொய் குரலிலும் பாடாதவர்.
எவ்வளவு சிரமமான பாடலையும், முகத்தை அஷ்ட கோணலாக்காமல் பாடியவர்.
இந்தத் திரியின் மூன்றாவது பாகத்தில், அடியேனின் இந்தப் பாடல் பதிவோடு எனது பங்கைத் தருகிறேன்.
பாடல்: மாலை சூடும் மண நாள்; படம்: நிச்சய தாம்பூலம்; வருடம்: 1962; பாடியவர்: இசையரசி பி. சுசீலா; இயற்றியவர்: கவியரசு (ஒருவன் தான்!); நடிப்பு: நடிகர் திலகம் மற்றும் ஜமுனா.
பணக்கார வீட்டுப் பிள்ளை நடிகர் திலகம் ஏழை வீட்டுப் பெண் ஜமுனாவைக் காதலித்து அவருடைய தகப்பனாரின் (எஸ். வி. ரங்கா ராவ்) எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்டு, வீட்டை விட்டு வெளியேறுகிறார்.
வீம்புடன் வெளியேறினாலும், வாழ்க்கையை நடத்துவது சிரமமாகிறது வேலை கிடைக்காததனால்.
விடிந்தால் தீபாவளி. அதுவும் தலை தீபாவளி. வீதியில், எல்லோரும் குடும்பத்தோடு தீபாவளியை புதுத் துணி உடுத்தி, பட்டாசு வெடித்துக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், தான்? ஒரு கைக்குட்டையைக் கூடத் தன்னை நம்பி வந்தவளுக்கு வாங்கிக் கொடுக்க முடியாத நிலை. அப்படியே, இறுகி, கூனிக் குறுகி, சப்த நாடியும் ஒடுங்கி, வீட்டினுள் நுழைகிறான் நாயகன். உடன், நாயகி நாயகனிடம், என்ன ஆயிற்று, ஏன் இப்படி இருக்கிறீர்கள் என கவலையோடு வினவ, நாயகனும் நிலையைத் தெரிவிக்க, உடனே, நாயகனின் கவலையையும் விசனத்தையும் போக்கும் வண்ணம், அவனை உற்சாகப் படுத்த பாடத் துவங்குகிறாள்.
இந்தப் பாடலில் இரண்டு கருப்பொருள்கள் உள்ளன. ஒன்று, நாளின் முக்கியத்துவம் மற்றொன்று ஒரு பொருளின் முக்கியத்துவம். எத்தனையோ தீபாவளி வரும் தலை தீபாவளி? ஒரு முறை தானே வரும். அந்த முக்கியமான நாளில், ஒரு பொருளையும் மனைவிக்கு வாங்கித் தர முடியவில்லையே என்ற நாயகனின் கவலையைப் போக்க, இந்த இரண்டு கருப் பொருள்களை வைத்து, கவி புனைகிறார் கவியரசு.
மாலை சூடும் மண நாள்
இள மங்கையின் வாழ்வில் திருநாள்
சுகம் மேவிடும் காதலின் எல்லை
வேறொரு திருநாள் இனி இல்லை
நாள் என்னைய்யா நாள்? நானும் நீயும் மனம் ஒற்று சந்தோஷமாக இருக்கும் ஒவ்வொரு நாளுமே திருநாள் தானே?
பல்லவியிலேயே, நாயகனுக்கு கொஞ்சம் உற்சாகம் வரணுமே!
இப்போது, சரணம். இதில் முதல் முக்கியக் கருப்பொருள் அதாவது நாள்.
காதல் கார்த்திகை திருநாள் (இருவரின் அன்பு ஒன்றே போதும், கார்த்திகை தீபத்தைக் கொண்டாட என்கிறாரா?)
மனம் கலந்தால் மார்கழித் திருநாள் (உங்கள் ஊகத்துக்கே விட்டு விடுகிறேன்!)
சேர்வது பங்குனித் திருநாள் (பங்குனியில் தானே முக்கிய விசேஷங்களுக்கு அச்சாரம் போடுவார்கள்)
நாம் சிரிக்கும் நாளே திருநாள் (விளக்கமே தேவையில்லை!!)
இரண்டாவது சரணம். இதன் கருப்பொருள் "ஒரு பொருள்". அதாவது புதுத் துணி வாங்கித் தர முடியவில்லையே என்ற ஏக்கம்.
மங்கலக் குங்குமம் போதும் (வீட்டிலேயே உள்ளது)
சிறு மலரும் மணமும் போதும் (அந்த காலத்தில் ஒரு எட்டணாவில் வாங்கி விடலாம்!)
பொங்கிடும் புன்னகை போதும் (விலையே இல்லை!!)
மனம் புது மணத் திருநாள் காணும் (இந்த வரியில், பொருளையும் நாளையும் சேர்த்து விடுகிறார் பாருங்கள் - அதாவது, பூ வாங்கி, என் நெற்றியில் திலகமிட்டு நீங்கள் புன்னகைக்கும் தருணம் ஒவ்வொன்றும் ஒரு திருநாள் என்று, இந்தப் பாடலின் முக்கியக் கருப்பொருள்கள் நாள் மற்றும் பொருளின் முக்கியத்துவத்தை அந்தக் கடைசி வரியில் சொல்லி, முத்தாய்ப்பாக பாடலின் நோக்கத்தையும் கடைசியில் மறக்காமல் இணைக்கும் விந்தை!
எப்பேர்பட்ட தத்துவ ஜாலத்தை, எளிய வார்த்தைகளால் புரிய வைத்த அந்த ஜீவக் கவிஞனை என்னவென்று போற்றுவது?
இந்தப் பாடலின் எளிமையை (மெல்லிசை மன்னர்கள்) பேசுவதா?
தேனினும் இனிய குரலில் பாடிய இசையரசியைப் புகழ்வதா? (பிரம்மன் இவரைப் படைக்கும் போது, கூடவே தேனையும் அவர் தொண்டையில் கொட்டி விட்டானோ?!)
அற்புதமாக, ஜீவனுடன் நடித்துக் காட்டிய நடிகர் திலகத்தையும், ஜமுனாவையும் சிலாகிப்பதா?
அது சரி. நடிகர் திலகம் இடம் பெற்ற பாடலை சொல்லி விட்டு, அவரைப் பற்றி சொல்லாமல் விடுவதா? பாடல் துவங்கியதும் அந்தப் படியோரம் இலேசாக காலை விரித்துக் கொண்டு மய்யமாக அதே நேரம் சோகமாக நிற்பதைச் சொல்வதா; மேலே இரண்டு பேரும் சென்று அங்கே படியோரம் நிற்கும் போது, மெல்ல மெல்ல அவர் முகம் இயல்பு நிலைக்கு மாறி, அந்த முழங்கையை அவரது பிரத்யேக ஸ்டைலில் கைப் பிடி மேல் ஊன்றிக்கொண்டு ஜமுனாவைப் பார்ப்பதை சொல்வதா? பாடலின் முடிவில் இருவரும் சேர்ந்து பாடலை முடிக்கும் போது காட்டும் தன்னை மறந்த நிலையை சொல்வதா! (சும்மா சொல்லக் கூடாது, ஜமுனாவும் அற்புதமாக செய்திருப்பார். அவருடைய காதோர முடிக்கற்றை காற்றில் இலேசாகக் கலைந்து கன்னத்தின் மேலே இருக்கும் அழகே அழகு, அந்தக் கடைசி போஸில்! இந்தப் போஸே தானே பட விளம்பரங்களிலும் இருந்தது.)
மனத்தைக் கவரும் மதுர கானங்களில் எனது முதல் பெரிய பதிவு. என் மனத்தைக் கொள்ளை கொண்ட இருவரின் (நடிகர் திலகம் மற்றும் கவியரசு) பாடலுடன் துவங்குவது தற்செயலாக இருந்தாலும், மனதுக்கு மகிழ்ச்சியே.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
பார்த்த சாரதி சார்..வாங்கோ வாங்கோ.. அழகுப்பாட்டுக்கு அழகான விளக்கங்கள்.. நன்றி..இன்னும் இன்னும் எழுதுங்கோ..
ஆப் கேலியே வீடியோ நீச்சே ஹை..! :)
http://www.youtube.com/watch?v=7zRfhAMqOKA
பெயர்தானா பார்த்தசாரதி. பார்க்காத சாரதி ஆகவே மாறி விட்டார்.
வந்தாலும் மாலை சூடி வந்தீர்கள். எங்களுக்கெல்லாம் திருநாள்.
பார்த்த சாரதி ஜி, பார்த்த மாத்திரத்திலேயே உங்கள் பதிவுகளின் தாசனாக்கிவிட்டீர்.. இசையரசியின் புகழ் பாடிய உமது நாவிற்கும் கைகளுக்கும் தேனாபிஷேகம் செய்கிறேன்.
வருக வருக ... பங்களிப்பு பெருக பெருக ... அதை நாம் அனைவரும் ஆசை தீர பருக பருக .... அள்ளி தருக தருக
வாசு ஜி, இரண்டு நாட்களாக உங்கள் இன்றைய ஸ்பெஷல் தூள். அதுவும் தேடி வந்த மாப்பிள்ளை பாடல் டாப் கிளாஸ்....
வணக்கம் ராஜேஷ்ஜி! நன்றி!
வணக்கம் வாசு ஜி,
நலம் தானே .... மழை ஓய்ந்ததா?