http://i61.tinypic.com/ekgnq9.jpg
Printable View
பெங்களுர் தமிழ் சங்கத்தில் நடந்த மக்கள் திலகத்தின் 98வது பிறந்த நாள் விழாவில் எம்ஜிஆர் ரசிகர்கள் பலரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது .1960-1970 கால கட்டங்களில் மக்கள் திலகத்தின் படங்களை முதல் நாளே பார்த்து மகிழ்ந்த ரசிகர்கள் இன்று 60.70 வயது கடந்த நிலையில் எல்லோரும் ஒன்று கூடி அன்று எவ்வாறு எம்ஜிஆரை ரசித்தார்களோ அதைவிட மேலாக இன்றும் ரசித்து மகிழ்ச்சிவெள்ளத்தில் இருந்ததை காண முடிந்தது .
மக்கள் திலகம் எம்ஜிஆர் வீடியோ 40 பாடல்கள் ஒளிபரப்பட்டது .அத்தனை பாடல்களுக்கும் எம்ஜிஆர் ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்த காட்சிகள் திரை அரங்கில் மக்கள் வெள்ளத்தில் படம் பார்த்தது போல் உணர்வு உண்டானது . மறக்க முடியாத விழாவாக அமைந்து விட்டது .
" என்றும் வாழ்கிறார் எம். ஜி. ஆர். " என்ற தலைப்பில், தொடர்ந்து கட்டுரைகளை பிரசுரித்து வரும் 'தின இதழ்' நாளேட்டினை பாராட்டி நன்றி தெரிவித்து, இறைவன் எம். ஜி. ஆர். பக்தர்கள் குழு, அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நல சங்கம் மற்றும் மக்கள் திலகம் எம். ஜி. ஆர். மன்றம் இணைந்து சென்னை நகரெங்கும் ஓட்டிய சுவரொட்டி :
http://i57.tinypic.com/2drgd1y.jpg
பெங்களுர் தமிழ் சங்கத்தில் நடந்த மக்கள் திலகத்தின் 98வது பிறந்த நாள் விழா பற்றிய செய்திகளையும், தகவல்களையும் பதிவிட்ட திரு. வினோத், திரு. வரதகுமார் சுந்தராமன் ஆகியோருக்கும், இத்திரியினில் பதிவிட, புகைப்படங்கள் எடுத்து, அளித்து உதவிய திரு. லோகநாதன் அவர்களுக்கும் நன்றி !
மக்கள் திலகம் திரியின் பாகம் 14 துவக்கப்பட்டமைக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த இனிய சகோதரர் திரு. ராகவேந்திரா அவர்களுக்கு சிறப்பு நன்றி !
RARE STILL
http://i60.tinypic.com/sqnhpj.jpg