http://i58.tinypic.com/16gzion.jpg
Printable View
அது ஒரு நிலாக் காலம் கனவுகளின் உலாக் கோலம் :குறுந்தொடர் :
நிலவிலும் கொடி நாட்டிய மூவேந்தர்கள்!!
பகுதி 1 : வா வெண்ணிலா.....மூவேந்தர்கள் காதல் நினைவில் நிலை கொள்ளாமல் திளைக்கும்போது!!
குட்டீஸ்களுக்கு சீராட்டி சோறூட்டுவதிலிருந்து குமரீசுக்கு பாராட்டில் குளிப்பாட்டுவது வரை நமது திரைக்கவிஞர்களின் உயிரூட்டலுக்கு நிலவுதான் ஊறுகாய்!!
மூவேந்தராயினும் மங்கையர் மனதில் காதல் கொடி நாட்டிட எப்படியெல்லாம் திண்டாட்டம் காட்ட வேண்டியிருக்கிறது ?!
-------------
அன்பார்ந்த நண்பர் திரு.சிவாஜி செந்தில் அவர்களுக்கு,
தங்களின் நிலாக்காலம் குறுந்தொடரும் தேர்ந்தெடுக்கும் பாடல்களும் அட்டகாசம். ‘ராமு’ திரைப்படத்தில் காதல் மன்னரின் சோகமும் விரக்தியும் இழைத்தெடுத்த நடிப்பில், திரு.பி.பி.எஸ்.சின் தேன்குரலில் ‘நிலவே என்னிடம் நெருங்காதே’ பாடல் எனக்கு மிகவும் பிடித்தமானது. நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
மலேசியாவில் தலைவர் பெயரில் காய்கறிக் கடை. படத்தை பதிவிட்ட திரு.யுகேஷ் பாபு அவர்களுக்கு நன்றி.
திரு.யுகேஷ் ,
வர்ஷாவுக்கு எனது வாழ்த்துக்கள். உங்களுக்கு பொறுப்புகள் அதிகரித்திருக்கிறது. செல்வமகள் சேமிப்புத்திட்டம் என்ற பெயரில் அஞ்சல் அலுவலகங்களில் பெண் குழந்தைகளுக்கென சேமிப்புத் திட்டம் அறிமுகப்படுத்தியுள்ளனர். வர்ஷாவின் பெயரில் கணக்கு தொடங்குங்கள். தங்களின் ‘செல்வமகளுக்கு’ மீண்டும் என் வாழ்த்துக்கள்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்