காத்திருந்தேன் காத்திருந்தேன் காலமெல்லாம் பார்த்திருந்தேன்
பார்த்திருந்த காலமெல்லாம் பழம்போல் கனிந்ததம்மா
Printable View
காத்திருந்தேன் காத்திருந்தேன் காலமெல்லாம் பார்த்திருந்தேன்
பார்த்திருந்த காலமெல்லாம் பழம்போல் கனிந்ததம்மா
கனிந்த அல்லியோடு நிலவின் ஒளி நீ
காதல் யுவராஜன் அனார்கலி நீ
அல்லி விழி அசைய அழகு மலர் கை அசைய
முல்லை வரிசை தெரிய மோகன இதழ் திறந்தே
மோகன புன்னகை
செய்திடும் நிலவே
மேகத்திலே நீ மறையாதே
பாகுடன் தேனுமே
கலந்திடும் நேரம்
சாஹசமே
நீ புரியாதே
மேகத்தைத் தூது விட்டா திசை மாறிப் போகுமோன்னு
தாகமுள்ள மச்சானே தண்ணிய நான் தூது விட்டேன்
தூது செல்ல ஒரு தோழி இல்லையெனத் துயர் கொண்டாயோ தலைவி? துள்ளும் காற்று வந்து மெல்ல
மெல்ல வரும் காற்று சொல்லித் தரும் பாட்டு
கண்ணென்ற மொழி பார்த்து
பெண்ணென்ற சுதி சேர்த்து
பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன் நானதைப் பாடவில்லை பாவையின் முகத்தைப் பார்த்தார்
பார்த்தால் பசிதீரும் பருவத்தில் மெருகேறும்
தொட்டாலும் கை மணக்கும் தொட்ட இடம் பூ மணக்கும்
மணக்கும் சந்தனமே குங்குமமே நில்லடியோ இனிக்கும் செந்தமிழில் சந்தம் ஒன்னு சொல்லடியோ