மாலைப்பொழுதின் மயக்கத்திலே நாயகி சுபா திடீர் மரணம்!
http://tamil.oneindia.in/movies/news...es-163570.html
சென்னை: மாலைப்பொழுதின் மயக்கத்திலே என்ற படத்தில் நடித்து வந்த நடிகை சுபா புத்தெலா திடீரென மரணமடைந்துள்ளார். சிறுநீரக கோளாறு இதற்குக் காரணமாக கூறப்பட்டுள்ளது.
Ads by Google
சமீபத்தில் செம்பட்டை என்ற படத்தின் ஹீரோ திலீபன் அகால மரணமடைந்தார். இந்த நிலையில் இன்னொரு முக்கியப் படத்தின் நாயகி மரணமடைந்திருப்பது கோலிவுட்டை அதிர வைத்துள்ளது.
மாலைப்பொழுதின் மயக்கத்திலே
என்று ஒரு படம் தயாராகி வந்தது. இதில் நாயகியாக நடித்திருந்தவர் சுபா புத்தெல்லா. இன்று காலை அவர் திடீரென மரணமடைந்தார்.
அவருக்கு சிறுநீரக கோளாறு இருந்ததாகவும், அதனால் அவதிப்பட்டு வந்த அவர் சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.