Originally Posted by
sakaLAKALAKAlaa Vallavar
கமலுக்கு ரஹ்மானின் வேகம் ஒரு பிரச்சனையாயிருந்தால் மர்மயோகிக்கு போயிருக்க மாட்டார். சொல்லப்போனால் தசாவதாரம் செய்ய இயலாதென ரஹ்மான் சொன்னதும், அதர்கேற்றாற்போல், மர்மயோகிக்கு, வெகு முன்னரே கமல் ரஹ்மானிடம் சென்றுவிட்டார். 2 பாடல்கள் கம்போசிங், பதிவு(?) கூட முடிந்துவிட்டதாக செய்தி வந்தது.
ஆனால், பின்னாளில் கமல் சொன்னதைவைத்து பார்க்கும்போது, கமல், ஒரு இசையமைப்பாளரை சந்திக்கும்போது, சுந்தந்திரமாக நிறைய பேசுவார் என தெரிகிறது. அவரேகூட சொல்லி இருக்கிறார். இத்தனைக்கும் ராஜா பிசியாக இருந்த காலகட்டங்களிலும் கூட இதுதான் நிலைமை! கிரேசி மோஹனுடன் வசனம் எழுத சந்திக்கும்போதும் கூட, படம் பற்றி சற்றே தொடர்பில்லாத விஷயங்களை விரிவாக பேசுவார். இது அந்தப்படத்திற்கு அல்லது எதிர்காலத்தில் வேறு படத்திற்கோ கூட உதவக்கூடும் என கமல் எண்ணுகிறார். ரஹ்மான், கமல் சற்று நீளமாக சிச்சுவேஷன் சொன்னதையே வசதிப்படாதது போல் இருந்துள்ளார். அவர் வொர்க்கிங் ஸ்டைல் அப்படியாயிருக்கலாம். மிக முக்கியமான இன்புட்ஸ் மட்டும் வாங்கிக்கொண்டு அத்தோடு நிறுத்திக்கொண்டு கம்போசிங் குக்கு சென்று விடுவது...
ஆக, இந்த ஒரு விஷயத்தில் கமல் ஒத்துப்போகாமையை இருவரிடமுமே கண்டிருக்கக்கூடும். இவர்கள் சேராமலிருக்க இது ஒரு காரணமாகக்கூடும்.
இன்னொன்று, ஒரு இசையமைப்பாளர், ஒரு குறிப்பிட்ட பெரிய நடிகரின் படத்திற்கு வேலை செய்ய விரும்பினால், அந்த ஆசையை கொண்டுசேர்க்க பல தூதுவர்கள் கிடைப்பர். ஆனால், ரஹ்மானிடமும் கூட, ஒருவித அசௌகரியம் தெரிந்துகொண்டே இருக்கிறது.