http://i44.tinypic.com/nw0ubs.jpg
Printable View
நாடோடிமன்னன் படம் நாளை முதல் நாகர்கோயில் -தங்கம்
அரங்கில் வெளிவரும் செய்தியினை பதிவிட்ட திரு ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி
தமிழகத்தின் தென்கோடி மாவட்டமான கன்யாகுமரி மாவட்டம்
நாகேர்கோயில் நகரில் மக்கள் திலகத்தின் மூன்று சொந்த படங்களும் 100 நாட்கள் ஓடியுள்ளது .
மக்கள் திலகத்தின் பெரும்பாலான படங்கள் இங்கு 50 நாட்கள் மேல் ஓடியுள்ளது .
1977-1980 - சட்டசபை தேர்தல்களில்
இம் மாவட்டத்தில் நாகர்கோயில் தொகுதியில் அண்ணா திமுக வெற்றி பெற்று வந்தது குறிப்பிடத்தக்கதாகும் .1984 சட்டசபை தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் வெற்றி
பாடலாசிரியர் வாலியின் மறைவு திரை உலகத்திற்கு ஒரு
மாபெரும் பேரிழப்பாகும் .சரித்திரம் படைத்த பல பாடல்கள்
தந்து மக்கள் மனதில் நிலைத்து இருப்பவர் வாலி .
மரணம் அவரது உடலுக்குத்தான் .....
அவரது வைர வரிகள் அழியா புகழுடன் என்றென்றும் நிலைத்திருக்கும் .
One of the best song of Vaali.
http://www.youtube.com/watch?v=jHzgpI91uKc
RIP
EVERGREEN ''VALI'' SONG
http://youtu.be/8ED4hCXSE-o
எம்.ஜி.ஆரை ஆட்சிக் கட்டிலில் அமர்த்த உதவிய வரிகளுக்குச் சொந்தமான வாலியின் மறைவுக்கு நமது ஆழ்ந்த இரங்கல். அவரது மறைவு தமிழ்த் திரையுலகிற்கு மிகப் பெரிய இழப்பாகும். ஒரு சில நாட்களுக்கு முன் தான் பாடலாசிரியர் ஆத்மநாதன் அவர்கள் காலமானார். அந்த செய்தி மக்களிடம் சென்று சேர்வதற்குள்ளாகவே வாலியின் மறைவு. தொடர்ச்சியாக தமிழ்த்திரையிசையுலகம் சந்தித்து வரும் பேரிழப்புகள் இந்த ஆண்டை மிகவும் துயரமான ஆண்டாக மாற்றி வருகின்றன.
அவரது ஆன்மா சாந்தியடையவும் அவர் குடும்பத்தார் இந்த துயரைத் தாங்கும் வலிவினைப் பெறவும் இறைவனை வேண்டுவோம்.
கலை மன்னன்
எல்லாம் அறிந்த எங்கள் தங்கம்...
தன்னைப்போல அனைவரையும் பாவித்த ஆண்டவன்
மக்கள் திலகம் திரைப்படத் துறையில் வளர்ந்து வரும் காலத்திலேயே, நடிப்பில் உள்ள நுணுக்கங்கள் மட்டுமன்றி திரைப்படத்துறையின் அனைத்து நுணுக்கங்களையும் கற்றறிந்தார்..ஒரு திரைப்படம் வெற்றி பெற்றால் அதற்கு காரணங்கள் என்னவென்று ஆராய்ந்தார்..நடிக்க வந்தோமா, சம்பளம் வாங்கினோமா, வீட்டில் வைத்தோமா என்று நடிகர்கள் நடித்து வந்த காலத்தில் திரைப்படங்களின் வெற்றிக்கு துணை நின்ற லைட் பாய், இயக்குனர், பாடலாசிரியர், வசனகர்த்தா, பாடகர், இசையமைப்பாளர், ஆர்ட் மற்றும் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களின் திறமைகளைக் கண்டறிந்து அவர்களை .போற்றினார். தான் நடிக்கும் படங்களில் அனைத்து கலைஞர்களும் சாப்பிட்டார்களா, அவர்களுக்கு சரியாக சம்பளம் வழங்கப்படுகிறதா என்பதை கவனித்து அதனைத் தீர்த்தும் வந்தார். அதே போல் தனக்கு வழங்கப்படும் சாப்பாடு அனைவருக்கும் கிடைக்கிறதா என்பதையும் பார்த்து வந்தார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும்..தன்னுடன் பணிபுரியும் கலைஞர்கள் மனக்குறைவுடன் வேலை செய்ய அவர் அனுமதித்ததே இல்லை..கலைஞர்கள் கஷ்டத்தில் இருந்தால் ஈடுபாடுடன் பணிபுரிய முடியாது என உணர்ந்து அவர்கள் குறைகளைக்களைவதில் தனி அக்கறை எடுத்துகொண்டார்..இது போன்ற அக்கறை அன்று முதல் இன்று வரை எத்தனை நடிகர்களுக்கு இருந்தது..ஆம். இருந்தது..ஆணித்தரமாக சொல்லலாம்..இருவருக்கு...ஒருவர் .கலைவாணர்..மற்றொருவர்..மக்கள் திலகம்..அப்படிப்பட்டவருக்கு ஈடேது..இணையேது...
சகல கலா வல்லவர் - நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், இசை வல்லுநர், பாடல், திரைப்பட தொழில் நுணுக்கம் அறிந்த ஞானி..
http://i42.tinypic.com/2quupon.jpg
ஒரு கலைஞன் எப்போது ஒரு முழுமை பெற்ற கலைஞனாகவும், மக்களைக்கவரும் நடிகனாகவும், திரைப்படங்களில் வெற்றிமேல் வெற்றியை குவிக்கும் வசூல் சக்ரவர்த்தியாகவும் மிளிர முடியும்..அதற்கு ஒரே உதாரணம் புரட்சி நடிகர்தான்......தான் நடிப்பை மட்டும் கற்றுக்கொள்ளாது, திரைப்படத்துறையின் அனைத்து பகுதிகளிலும் சென்று ஆராய்ந்து, கற்று, அவற்றை தனது படங்களில் கையாண்டு வெற்றியும் கண்ட ஒரே நடிகர் மக்கள் திலகம்தான் என்றால் மிகையாகாது...சிறந்த இயற்கை நடிப்பால் தமிழக மக்களையே தன்பால் ஈர்த்தார்..படங்களை இயக்கும் வல்லமை படைத்து, தமிழ் நடிகர்களிலே நாடோடி மன்னன் மூலம் திறமைமிக்க இயக்குநராகி, மாபெரும் வெற்றிப்படத்தை தயாரித்து, இயக்கி, சிறந்த இயக்குனர் என பெயரும் பெற்றார்...
http://i43.tinypic.com/25s1xr6.jpg
http://i39.tinypic.com/2hnx893.jpg
வெளிநாட்டில் படமாக்கப்பட்ட படங்களிலே மிக சிறந்த படமென்றும், வெள்ளி விழா படங்களில் பெரும் சாதனை படைத்து இன்னும் சாதனை படைத்து கொண்டிருக்கும் உலகம் சுற்றும் வாலிபன் படத்தை இயக்கி, இதற்கு மேல் என்ன இருக்கிறது என்று எல்லோரையும் ஆச்சர்யத்தில் மூழ்கடித்தார்...ஆண்டுகள் பல ஆனாலும் அடிமைப்பெண்ணின் வெற்றி நிற்காது ! என்ற பெருமை பெற்ற, நடிப்பில் ஒரு புரட்சியை ஏற்படுத்திய மாபெரும் திரைப்படத்தை தயாரித்து வெளியிட்டார்.... நடிப்பு, இயக்கம் மட்டுமா..இசையையும் அவர் விட்டு வைக்கவில்லை..இசையைக் கற்று எந்த பாட்டிற்கு என்ன இசை இருந்தால் நன்றாய் இருக்கும் என ஒவ்வோர் மெட்டாக போட்டு, தனக்கு திருப்தி ஏற்படும் வரை விடாமல், பாடல்களில் இசையை கலந்தவர்..தனக்கு திருப்தி என்பது தனது ரசிகர்களின் திருப்தியாக உணர்ந்து செயல்பட்டவர்..அதனால்தான் இன்றும் அவருடைய கொள்கை பாடல்கள் மற்றும் தத்துவ பாடல்கள் அவருடைய ரசிகர்கள் மட்டுமல்லாது, அனைத்து தரப்பினரையும் கவரும் விதமாகவும், மனதில் உள்ள துன்பங்களை தீர்க்கும் அருமருந்தாகவும் இருக்கிறது...வாழ்க்கையின் விரக்திக்கே சென்ற ஒரு மனிதனையும் மீட்டு வரும் இன்ப கீதமாக இன்னும் ஒலித்துகொண்டே இருக்கிறது..எனவே திரைப்படத்துறையின் அனைத்து பகுதிகளையும் அலசி ஆராய்ந்து, திறம்படக்கற்று..அதில் வெற்றியும் கண்ட புரட்சித்தலைவருக்கு இணை எவருமில்லை...திரையுலகை அன்றும், இன்றும்..என்றும்..ஆளும் ஒரே மன்னன், ஒரே சக்கரவர்த்தி..எங்கள் எம்ஜிஆர்தான்...
...தொடரும்...
காவியக்கவிஞர் வரகவி வாலி அவர்களின் மறைவுக்கு நமது கண்ணீர் அஞ்சலி
http://i1110.photobucket.com/albums/...aar/Vaali2.jpg
மக்கள் திலகத்தின் அசத்தல் ஆவணங்கள் : 23
பொன்மனச்செம்மல் பற்றி பொற்காலக்கவி
வரலாற்று ஆவணம் : குமுதம் ஜங்ஷன் : 27.5.2003
http://i1110.photobucket.com/albums/...GEDC5736-3.jpg
http://i1110.photobucket.com/albums/...GEDC5737-1.jpg
http://i1110.photobucket.com/albums/...DC5738-2-1.jpg
http://i1110.photobucket.com/albums/...GEDC5739-3.jpg
http://i1110.photobucket.com/albums/...GEDC5739-4.jpg
http://i1110.photobucket.com/albums/...DC5743-1-1.jpg
பம்மல் ஆர். சுவாமிநாதன்.
வரகவியின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுவோம்
What a song from Vaali for AASAIMUGAM MGR !
"நாளொரு மேடை பொழுதொரு நடிப்பு அவன் பேர் மனிதனல்ல
நாவில் ஒன்று நினைவில் ஒன்று அதன்பேர் உள்ளமல்ல"
http://www.youtube.com/watch?v=SJt-7on9t-Q
வாலியின் வைர வரிகள் மக்கள் திலகத்தின் வாய்மொழியில் மலரும்போது அவை பொதுமக்கள் அனைவரும் பின்பற்றி நடக்க வேண்டிய பொன்மொழிகளாகிவிடுகின்றன. பொற்காலப் படைப்புகள் என்றென்றும் நிலைத்து நிற்கும் !!
பம்மல் ஆர். சுவாமிநாதன்.
மக்கள் திலகம் எம.ஜி.ஆர். இந்திய மொழிகள் பலவற்றில் திரைப்படமாக எடுக்கப்பட்ட "தேவதாஸ்" படத்தை தமிழில் எம்.ஜி.ஆர் நடிக்க வேண்டும் என்றாராம் வாலி. அதற்கு எம்.ஜி.ஆர்,
"ஆண்டவனே!(எம்.ஜி.ஆர் வாலியை இப்படி அழைப்பாராம்) எனக்குன்னு ஒரு இமேஜ் இருக்கு..அது - நானா முயன்று முன்னின்று உருவாகிக் கொண்டதல்ல..படத்துக்குப் படம் அது இயற்கையா எற்பட்டுடுச்சு...கண்ணதாசன், பட்டுக்கோட்டை, நீங்க - இப்படி கவிஞர்களும், நான் கருத்தாழம் மிக்க பாடல்களைப் பாடற மாதிரியே எழுதிடீங்க..எந்த பாட்டுலயும் சமூகத்துக்கு ஒரு சேதி இருக்கற மாதிரி பாடிட்டு ஒரு குடிகாரனா கதைக்கே தேவைப்பட்டாலும் நான் வந்தா எப்படி? இயல்பாவே எனக்கு அந்த பழக்கம் கிடையாது! குடிகாரனா நடிக்கிறது வேற;குடிச்ச மாதிரி நடிக்கிறது வேற..நான் இந்த ரெண்டாவது வேஷத்தை பல படத்துல பண்ணியிருக்கேன் - அதுவும் வில்லனின் வில்லங்கங்களை கண்டுபிடிக்க...நீங்க பார்த்து இருக்கலாம்..அவன் மதுக் கிண்ணத்தை என் கிட்ட கொடுத்தா கூட, அதை பக்கத்துல இருக்கற பூந்தொட்டில கொட்டிட்டு - சாப்ட மாதிரி சமாளிப்பேன்.."
எம்.ஜி.யார் அவ்வளவு தூரம் தன்னிலை விளக்கம் தந்தும் வாலி விடவில்லையாம். "அண்ணே!நீங்களும் சிவாஜியும் சேர்ந்து நடிச்ச படம் 'கூண்டுக்கிளி';விந்தனோட கதை வசனத்துல, ராமண்ணா டைரக்க்ஷன்ல வந்த படம்..அதுல - நீங்க சிகரெட் பிடிக்கறீங்களே - ஒரு காட்சில? அது எப்படி?
எம்.ஜி.யார் சொன்னாராம், "அப்பல்லாம் - நான் பொது வாழ்க்கைல அவ்வளோ தீவிரமா ஈடுபடல...ஒரு நல்ல நடிகன்..ஒரு நல்ல மனிதன் - என்கிற அளவிலதான் என்னைப் பற்றி அபிப்பிராயம் இருந்தது..வளர வளர "வாத்யா"ராயிட்டேன் - உழைக்கும் வர்க்கத்துக்கு ! அந்த சிகரெட் பிடிக்கிற சீன் கூட - பின்னாளில் அந்த படத்திலிருந்து நீக்கப்பட்டு விட்டது!"
எம்.ஜி.ஆரின் விளக்கத்தை ஏற்றுக்கொண்டாராம் கவிஞர் வாலி
Thanks to Mr. Chandran Veerasamy
இந்திய அளவில் பிற மொழி நடிகர்களுடன் மிக நட்பாக இருந்தவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். குறிப்பாக ஹிந்தி நடிகர் சசி கபூருடன் அவருக்கு நெருங்கிய நட்பு இருந்ததாகவும் கூறப்படுகிறது. சென்னை வரும் நேரங்களில் எம்.ஜி.ஆரின் வீட்டுக்கு தவறாமல் செல்லும்
வழக்கமும் சசி கபூருக்கு இருந்ததாகவும் தெரிகிறது. எம்.ஜி.ஆர் மற்றும் சஷி கபூர் இடையிலான அந்த நட்பின் அடையாளமாக இருக்கிரது இந்த புகைப்படம்.
சிங்கப்பூரில் நடந்த கலை நிகழ்ச்சி ஒன்றில் மக்கள் திலகத்தின் கைகளை உரிமையுடன் பிடித்து அழைத்து செல்லும் சஷி கபூரும், சிறிது வெட்கம், மகிழ்ச்சி என்று உற்சாகத்துடன் செல்லும் எம்.ஜி.ஆர் அவர்களும் இருக்கும் இந்த அரிதான புகைப்படம்
http://i43.tinypic.com/3169gm8.jpg
AN ARTICLE FROM SIVATHAMBI- NET
எம்.ஜி.ஆரின் படங்களில் சமூகத்தளைகளை மீறி தனிமனிதன் மேல்நிலைப்பாட்டை எய்தமுடியும் என்ற கருத்து மிகச் செப்பமாகப் பதிய வைக்கப்பெற்றது. அவர் சித்தரித்த பாத்திரங்களின் குணாம்சங்களைக் கொண்ட ஒருவராகவே அவர் போற்றப்பட்டார்.
இதனால், தமிழ்நாட்டின் நடுமட்டத்திற்குக் கீழ்வந்த சமூகப்படிநிலையினரிடையே அவர் ஒரு உதாரணபுருஷராகவே போற்றப்பட்டார். தம் நிலையிலுள்ள ஒருவர் மேல்நிலை அடைந்ததாகவே அவர் உயர்ச்சியையும் புகழையும் அச்சமூகமட்டங்களைச் சேர்ந்தோர் நம்பினார்கள்.
இதனால் தன்னம்பிக்கையும் சுயவளர்ச்சி பற்றிய பிரக்ஞையுமுள்ள ஓர் இளைஞர் குழாம் தமிழ்நாட்டில் வளரத்தொடங்கியது. எம்.ஜி.ஆர். தனது கவர்ச்சியின் தளமாக, தமிழ் பற்றிய நிiலாட்டினைக் கொள்ளவில்லை. இன்றும்கூட கலைஞர் கருணாநிதியோடு தொடர்புபுபுறுத்தப்படும் தமிழ்த்தன்மை எம்.ஜி.ஆரோடு பொறுத்திப் பார்க்கப்படுவதில்லை. அவருடைய அறைகூவல் நல்ல நேர்மையான மனிதன் பற்றியதாவே இருந்தது. இன்று அவர் இல்லாத நிலையிற் பார்க்கும்பொழுது அவரின் தொடர்பாற்றல் திறனால் அவர் தன்னைப் பற்றிய மதிப்பீட்டினை உயர்த்துவதற்கு ஏற்றவகையில் நடந்துகொண்ட ஒருவர் என்ற எண்ணமே மேலோங்கி நிற்கிறது.
எம்.ஜி.ஆரை உண்மையில் திராவிட இயக்கச் சினிமாத்துறைச் செயற்பாட்டுச் சாதனைகளிலிருந்து நோக்காது, அதனைத் தளமாகக் கொண்டு வளர்ந்து தனக்கென ஓரிடத்தினை வகுத்துக்கொண்டார் என்றே கூறல் வேண்டும். மேலும்,அண்ணா கலைஞர் ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து வேறுபட்ட ஒரு சமூகத்தாக்கத்தையே இவர் ஏற்படுத்தினார் என்று கொள்ளல் வேண்டும் (தமிழ்ப் பண்பாட்டில் சினிமா : க.சிவத்தம்பி : பக்கம் 13) என 2004 ஆம் ஆண்டு வெளியான தமது நூலின் முதல் பதிப்பில், தமது எம்.ஜி.ஆர. குறித்த ஆதாரமான கட்டுரை எழுதப்பட்டு 24 ஆண்டுகளின் பின் அவரது பார்வையை மீளுறுதி செய்கிறார் சிவத்தம்பி.
எம்.ஜி.ஆரின் வறிய மற்றும் விளிம்பு நிலை மக்கள் மீதான பாசம் மற்றும் பரிவு என்பது வறுமையும் பட்டிணியும் குறித்துப் பட்டறிந்து பெற்ற அவர் அனுபவத்தில் இருந்துதான் உருவாகியது. அது அவரது வெள்ளந்தியான அரசியலிலும் திரைப்படங்களிலும் அவரது ஆட்சியின் கீழான சடூகத் திட்டங்களிலும் பிரதிபலித்தது. அவர் தயாரித்து இயக்கிய நாடோடி மன்னன் திரைப்படம் முன்வைத்த சமூகத் திட்டங்கள் கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையையொத்ததாக இருப்பதை எவுரும் இன்று அவதானிக்க முடியும். இதனை அவர் தேர்ந்த கருத்தியல் அடிப்படையிலிருந்தல்ல, தனது இயல்பான தேர்வுகளில் இருந்துதான் செய்கிறார். திரும்பத் திரும்ப பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமும் அவரும் இணைந்தது தற்செயலானது இல்லை. அது திட்டமிட்ட நடவடிக்கை.
தனிமனித வாழ்வில் தன்னலமறுப்பையும் தியாகத்தையும் போற்றிய தமிழக கம்யூனிஸ்ட், காங்கிரஸ், திராவிடத் தலைவர்கள் மீது பேரன்புகொண்டவர் அவர். அண்ணாதுரை, காமராஜ், ஜீவா மற்றும் கல்யாணசுந்தரம் போன்ற தலைவர்கள் மீதான அவரது பேரன்பு அவரது நடத்தைகளில் வெளிப்பட்டது.
அவரது ஈகைக் குணம் என்பது வெறுமனே ஐதீகம் இல்லை. இன்று அனைத்தும் வெளிப்படையாகவும் ஸ்தூலமாகவும் இருக்கிறது.
வறிய மக்களிடம் அவர் அன்பு காட்டினார். தாம் நம்பியவற்றுக்கென அவர் அள்ளிக் கொடுத்தார். மரபான பழமையான பெண்மையைப் போற்றினார். அவரது திரைப்படம் - வாழ்வு - நடத்தை என்பதற்கு இடையிலான இடைவெளி, அவர் காலத்திய பிற அரசியல் தலைவர்களோடும் நடிகர்களோடும், ஏன் இன்றைய அரசியல் தலைவர்களோடும் நடிகர்களோடும் ஒப்பிட முன்னுதாரணம் இல்லாதது. அவரது திரைப்படங்கள் வெற்றிபெற்றதிலும், அவர் மக்கள் மனங்களில் கோலோட்சியதிலும் இவையணைத்தும் மிகப்பேரும் பங்காற்றின.
ஈழவிடுதலைப் போராட்டத்திலும் ஈழவிடுதலையிலும் எம்.ஜி.ஆர். கொண்டிருந்த ஈடுபாடு எவரும் அறியாதது. அவரது கடப்பாடும் ஈகைக் குணமும் வெளிப்பட்ட தருணம் குறித்து தனது நூலில் (விடுதலை : எம்.ஜி.ஆரும் புலிகளும்: விடுதலைக்குவித்திட்ட மாமனிதர் : அன்டன் பாலசிங்கம் : 2003) அன்டன் பாலசிங்கம் விரிவாக எழுதுகிறார். விடுதலைப் புலிகளுக்குத் தமிழக அரசின் சார்பாக நிதி கொடுப்பது தொடர்பான செய்தி வெளியானபோது ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவும் அவரது தூண்டுதலின் பேரில் ராஜீவ்காந்தியும் அதனைத் தடுக்கிறார்கள். ராஜீவ்காந்தியையும் மீறி ஆறு கோடி ரூபாய் வரையிலான உதவியை எம்.ஜி.ஆர்.தனது சொந்தப்பணத்திலிருந்து விடுதலைப் புலிகளுக்குத் தருகிறார்.
அன்றிருந்த இந்திய அரசியல் சூழலில் இந்தச் செயலின் பின் விளவுகளின் பாரதூரத்தன்மையை எவரும் அறிய முடியும்.
An article from sivathambi- net
மக்கள் திலகத்தின் இந்த வார திரைப் படங்கள் .
19.7.2013
மதுரை - அரவிந்த் - தேடி வந்த மாப்பிள்ளை
கோவை - ராயல் - இதய வீணை
கோவை - சிவகிரி - தெய்வத்தாய்.
நாகர்கோயில்- தங்கம் - நாடோடி மன்னன் .
எங்கள் தங்கம் நடித்த 'எங்கவீட்டு பிள்ளை' படம் எல்லா நடிகர்களையும் ஏங்க வைத்த படம் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. எப்படி ஒரு நடிகரால் மாறி மாறி இதில் இயற்கை நடிப்பை காட்டமுடிந்தது என்ற பிரமிப்பு அனைவருக்கும் இருந்தது..இன்னுமொரு செய்தி..'நான் ஆணையிட்டால்..அது நடந்து விட்டால் பாடலில் வரும்..ஒரு காட்சியில் புரட்சித்தலைவர் எலெக்ட்ரிக் சுறுசுறுப்பில் பிரமாதமாக நடித்திருப்பார்..
http://i43.tinypic.com/2j4rb6c.png
அதில் முத்தாய்ப்பாக, ஒரு சுற்று சுற்றி இரண்டு கால்களையும், ஒரு கையையும் தரையில் ஊன்றி, ஒரு கையை உயர்த்தும் காட்சியில், திரு. திலீப்குமார் மற்றும் திரு. என்.டி.ஆர். அவர்களால் நடிக்க முடியாமல் அந்த ஸ்டெப் தவிர்க்கப்பட்டது..
http://i41.tinypic.com/2d017wy.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
திரு. ராகவேந்திரா அவர்கள் அறிவது ,
கவிஞர் வாலி அவர்களுக்கு புகழ் அஞ்சலி செலுத்த வேண்டும் என்கின்ற அதீத ஆவலால், சற்று உணர்ச்சிவசப்பட்டு, "மக்கள் திலகத்தை ஆட்சிக்கட்டிலில் அமர்த்த உதவிய வரிகளுக்கு
சொந்தக் காரர் கவிஞர் வாலி " என்ற உடன்பாடில்லாத வார்த்தைகளை உபயோகபடுத்தி
உள்ளீர்கள்.
அன்றைய கால கட்டத்தில் மக்கள் திலகம் உட்பட இதர பல நடிகர்கள் நடித்த படங்களுக்கும், இன்றைய தலைமுறை நடிகர் தனுஷ் படங்கள் வரை, வாலிபக் கவிஞர் வாலி அவர்கள் பாடல் எழுதியிருக்கிறார். அப்படிப் பார்த்தால், பொன்மனசெம்மலை விடுத்து, எவராவது ஒருவர் (தனித்து நின்று, எந்த அரசியல் கட்சியையும் சாராமல்) மக்களால் தேர்ந்தேடுக்கப்படும் குறைந்தபட்ச "மாநகர அல்லது நகர மன்ற உறுப்பினாராகவது" ஆகியிருக்க வேண்டும்.
இதில் புரட்சித் தலைவரை தவிர வேறு எந்த நடிகரும், அரசியலில் அங்கீகரிக்கப்படவில்லை.
அவரை ஆட்சிக் கட்டிலில் அமர வைத்தது, தமிழக மக்கள் அவர் மேல் கொண்டிருந்த அதிக அன்பு மற்றும் நம்பிக்கையின் வெளிப்பாடு. அவர் மேல், மக்களால் திணிக்கப்பட்ட அந்த உயர் நிலையினை அடைய மனிதப்புனிதர் எம். ஜி. ஆர். அவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சியும், கடின உழைப்பும் அளப்பரியது, என்பதை நாடறியும்.
கவிஞர் வாலியின் பாடல்களில், பல தருணங்களில் , மக்கள் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில், சில திருத்தங்கள் செய்து, அப்பாடல்கள் பிரபலமடைவதற்கு வழி வகுத்தவர் நமது இதய தெய்வம் கலைச்சுடர் எம். ஜி. ஆர். அவர்களே ! இது பற்றி, கவிஞர் வாலி தமது வரலாற்றினை சில ஏடுகளில் எழுதும்போது குறிப்பிட்டுள்ளார்.
காலஞ்சென்ற , பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், கவிஞர் கா. மு. ஷெரிப், பாபநாசம் சிவன்,
கு. மா. பாலசுப்ரமணியன், தஞ்சை ராமையா தாஸ், உடுமலை நாராயண கவி, ஆலங்குடி சோமு, அ. மருதகாசி, பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், கவியரசு கண்ணதாசன், மாயவநாதன் கவிஞர் முத்துக்கூத்தன், ஆத்மநாதன் முதற்கொண்டு கலைஞர் மு. கருணாநிதி, புலவர் புலமைபித்தன், கவிஞர் முத்துலிங்கம், பூவை செங்குட்டுவன், அவிநாசிமணி உட்பட பல கவிஞர்கள் எழுதிய பாடல்கள் மக்கள் திலகத்தின் திரைப்படங்களில் இடம் பெற்று நேயர்களால்இன்று வரை வானொலி மூலம், விரும்பி கேட்கப்படுவது மட்டுமல்லாமல், ரசிகர்களின் ஏகோபித்த வேண்டுகோளிக்கிணங்க மீண்டும் மீண்டும் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பி வருவது நிதர்சனமான உண்மை. அந்த வரிசையில் கவிஞர் வாலியின் கருத்துள்ள பாடல்களும் இடம் பெற்றுள்ளது என்பதில் எந்த வித மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை.
மக்கள் திலகத்தின் கலையுலக வளர்ச்சிக்கும் அரசியல் வளர்ச்சிக்கும் பல்வேறு கால கட்டங்களில் பல கலைஞர்கள் துணை புரிந்திருந்தாலும், அவரது வெற்றிக்கு காரணமே மக்களின் அமோக ஆதரவுதான். இந்த அமோக ஆதரவினை மென்மேலும் பெருக்கிக்கொண்டு அமரராகி 25 ஆண்டுகளுக்கு பின்பும், இனியென்றும் தொடர்ந்து தக்க வைத்திருப்பதில் தனிப்பெரும் சாதனை புரிந்து வருபவர்தான் எங்கள் பாரத ரத்னா டாக்டர் எம். ஜி. ஆர். அவர்கள்.
http://i43.tinypic.com/33dbjt1.jpg
எனவே, இந்த திரியில், மக்கள் திலகத்தைப் பற்றி செய்திகளை பதிவிடும்போது எங்களைப் போன்றவர்களின் உணர்வுகளை மனதில் கொண்டு, சற்று கவனமாக பதிவிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
ஏனெனில் நாங்கள் ரசிகர்கள் மட்டுமல்ல அவரை என்றும் வணங்கும் பக்தர்கள்.
உங்களன்பு சகோதரன் :
சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன் .
என் போன்ற எம்ஜிஆர் பக்தர்களின் உணர்வுகளை பிரதிபலித்த பேராசிரியர் செல்வகுமார் அவர்களுக்கு நன்றி...அன்றைக்கு எம்ஜிஆர் இல்லை என்றால் வாலி இல்லை என்ற நிலைதான் இருந்தது..இதையேதான் திரு..வாலி அவர்களும்..எனக்கு முகவரி தந்த முதல்வர் என்று உறுதிபடுத்தினார்..மேலும் வாலிபக்கவிஞர் வாலியின் திறைமையை அறிந்ததால் தனது படங்களில் அவரது பாடல்கள் இடம்பெற செய்திருந்தார்..இருந்தாலும் அவரது பாடல்கள் தலைவரை ஆட்சிக்கட்டிலில் அமர்த்த உதவியது என்பதை ஏற்க முடியாது..அரசியலில் தலைவரின் உழைப்பு அனைவரும் அறிந்தது..அறிஞர் அண்ணா மறைந்தபோது மக்கள் திலகம் நினைத்திருந்தால் அன்றே முதல்வராக அமர்ந்திருப்பார்..ஆனால் அந்த பதவியை விரும்பிய தன் நண்பருக்கு கொடுத்து அழகு பார்த்தார்..எனவே எந்த கவிஞர் எழுதியிருந்தாலும், எழுதாவிட்டாலும் கால தேவதை, மக்கள் காவலனை ஆட்சிக்கட்டிலில் அமர்த்த வேண்டிய ஒன்று நிகழ்ந்திருக்கும் என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
கொங்கு மண்டலத்தை குத்தகை எடுத்திருக்கும் மக்கள் திலகத்தின் காவியங்கள் தெய்வத்தாய் மற்றும் இதயவீணை திரைப்படங்கள் வெளியீட்டை பதிவு செய்த திரு. ரவிச்சந்திரன் பணி சிறக்க வாழ்த்துக்கள்..கோவையில் குறுகிய காலங்களில் ஒரு நடிகரின் திரைப்படங்கள் இத்தனை முறை திரையிடப்பட்டிருப்பது கின்னஸ் சாதனை ஆகும்..
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
இன்றைய (19.07.2013) மாலைமலரில் மக்கள் திலகம்-வாலிபக்கவிஞர் பற்றிய தகவல்கள்
http://i41.tinypic.com/333ecyg.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
இனிய நண்பர் திரு பம்மல் சார்
மக்கள் திலகத்தை பற்றி குமுதம் ஜங்ஷன் இதழில் திரு வாலி அவர்கள் எழதிய கவிதை அருமை .
வரிக்கு வரி உயிர் பெறும் சத்திய வார்த்தைகள் .
பதிவிட்டமைக்கு நன்றி .