Originally Posted by
esvee
14.6.1962
மக்கள் திலகம் - திருமதி ஜானகி எம்ஜிஆர் திருமண நாள்
மக்கள் திலகம் எம்ஜிஆர் - ஜானகி பதிவு திருமணம் 14.6.1962ல் முக்கியமான குடும்ப நண்பர்கள் முன்னிலையில் நடந்தது . பிரபல பாரத நாட்டிய புகழ் பத்மா சுப்பிரமணியம் அவர்களின் தந்தையும் பிரபல இயக்குனருமான திரு சுப்பிரமணியம் அவர்கள் திருமண பதிவில் சாட்சி கையொப்பம் இட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது
.
பிரபல தயாரிப்பாளரும் , மக்கள் திலகத்தின் நெருங்கிய நண்பருமான திரு சின்னப்பா தேவர் ஒவ்வொரு வருடமும் தவறாமல் மக்கள் திலகத்தின் திருமண நாளில் நேரில் வந்து வாழ்த்துக்கள் தெரிவிப்பார் .
மக்கள் திலகம் அவர்கள் எல்லா திருமணம் , மற்றும் குடும்ப நண்பர்கள் இல்ல விழாக்களுக்கும் ,இசை கச்சேரிகளுக்கும் தன்னுடைய துணைவியார் திருமதி ஜானகி அவர்களை அழைத்து சென்று சிறப்பு செய்தார் .
மக்கள் திலகத்தின் அரசியல் - திரை உலகம் - சம்பந்தபட்ட எல்லா துறையிலும் திருமதி ஜானகி அவர்கள் முழு ஒத்துழைப்பை தந்து மக்கள் திலகத்தின் புகழுக்கு புகழ் சேர்த்தார்.
மக்கள் திலகம் மறைவிற்கு பின்னர் பிளவு பட்ட அதிமுகவின் இயக்கத்தை மீண்டும் இணைத்து இந்திய தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக இழந்த சின்னத்தை மீட்டு மீண்டும் புரட்சித்தலைவரின் இரட்டை இலை சின்னம் அதிமுக என்ற இயக்கத்தை இயங்கிட வாய்த்த பெருமை திருமதி ஜானகி அம்மையாரே சேரும்.
இந்திய அரசாங்கத்தின் மிக உயரிய விருதான ''பாரத ரத்னா '' பட்டம் மக்கள் திலகத்திற்குகிடைத்த போது அவரது சார்பாக திருமதி ஜானகி அம்மையார் அவர்கள் பெற்று கொண்டு சிறப்பித்தார் .
சிறந்த திருமண தம்பதிகள் பட்டியலில் மக்கள் திலகம் - திருமதி ஜானகி வரலாற்றில் இடம் பிடித்துள்ளார்கள் .