http://i58.tinypic.com/2vuzfd4.jpg
Printable View
SAME CAR - MAKKAL THILAGAM -1964
http://i59.tinypic.com/slji37.jpg
COURTESY - THIRU BABU - BANGALORE
MAKKAL THILAGAM AT BANGALORE- 1964
http://i57.tinypic.com/6ok751.jpg
COURTESY - THIRU BABU - BANGALORE
http://i59.tinypic.com/2m692mg.jpg
COURTESY - THIRU BABU - BANGALORE
MAKKAL THILAGAM AT BANGALORE - 1971
http://i62.tinypic.com/vqpttt.jpg
COURTESY - THIRU BABU - BANGALORE
Superb makkal thilagam mgr posters- coming posters. Thanks ravi chandran sir
வெற்றி-திருப்புகழ் வேந்தன்- பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
https://www.youtube.com/watch?v=9UEK...ature=youtu.be
எம்.ஜி.ஆர், அகிலனின் மற்றொரு சரித்திரக் கதையான 'கயல்விழி'யை படமாகத் தயாரிக்க எண்ணினார். அப்போது சென்னை ராயப்பேட்டையில் எம்.ஜி.ஆரும், அகிலனும் அருகருகே வசித்தனர். திடீரென்று ஒருநாள், அகிலன் வீட்டுக்கு எம்.ஜி.ஆர். சென்றார்.
'கயல்விழி கதையை படமாக்க விரும்புகிறேன். நீங்களே வசனத்தையும் எழுதவேண்டும்' என்று அகிலனிடம் கூறினார்.
எம்.ஜி.ஆரின் அன்பில் நெகிழ்ந்து போன அகிலன், கயல்விழியை படமாகத் தயாரிக்கும் உரிமையை எம்.ஜி.ஆருக்குத் தர சம்மதித்தார். ஆனால், 'வசனத்தை நான் எழுதவில்லை. நீங்கள் விரும்பும் ஒருவரை வசனம் எழுத ஏற்பாடு செய்யலாம்' என்று தெரிவித்தார்.
'கயல்விழி' என்ற பெயர், சினிமாவுக்காக 'மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்' என்று மாற்றப்பட்டது.
படத்தை, பி.ஆர்.பந்துலு டைரக்ஷனில் பிரமாண்டமாகத் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது.
படப்பிடிப்புக்கான இடத்தை தேர்வு செய்ய, பி.ஆர்.பந்துலு கர்நாடக மாநிலத்திற்கு சென்றார். எதிர்பாராத வகையில், அங்கு திடீரென்று காலமானார்.
பி.ஆர்.பந்துலுவின் மரணத்தால் பெரிதும் துயரம் அடைந்த எம்.ஜி.ஆர், எப்படியும் படத்தை எடுத்து முடிக்க தீர்மானித்தார்.
'சோளீஸ்வரா கம்பைன்ஸ்' என்ற பேனரில் படம் தயாராகியது. திரைக்கதை - வசனத்தை ப.நீலகண்டன் எழுத, எம்.ஜி.ஆரே டைரக்ஷன் பொறுப்பை ஏற்றார்.
எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக லதா, பத்மபிரியா ஆகியோர் நடித்தனர். மற்றும் எம்.என்.நம்பியார், பி.எஸ்.வீரப்பா, எஸ்.வி.சகஸ்ரநாமம் ஆகியோரும் நடித்தனர்.
தி.மு.க.வை விட்டு விலகி, அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். தொடங்கிய காலகட்டம் அது. அரசியல் பணிகளுக்கு இடையே, படப்பிடிப்பையும் தொடர்ந்து நடத்தினார், எம்.ஜி.ஆர். ஜெய்ப்பூர், டெல்லி, மைசூர் என்று பல இடங்களில் படப்பிடிப்பு நடந்தது.
படம் கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில், 1977 தேர்தல் வந்தது. ஆட்சியை அ.தி.மு.க. பிடித்தது. எம.ஜி.ஆர். முதல்-அமைச்சராகத் தேர்ந்து எடுக்கப்பட்டார்.
'மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்' பூர்த்தியாக, ஒரு சில காட்சிகள் பாக்கி இருந்தன. அவற்றை இரவு - பகலாக எடுத்து முடித்து விட்டு, முதல்-அமைச்சராக பதவி ஏற்றார், எம்.ஜி.ஆர்.
அவர் பதவி ஏற்ற பிறகு, 'மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்' வெளிவந்தது.
முதல்-அமைச்சர் ஆன பிறகு எம்.ஜி.ஆர். படத்தில் நடிக்கவில்லை. எனவே, அவர் நடித்த கடைசி படம் என்ற சிறப்புக்குரியது 'மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்.'
http://i58.tinypic.com/15pq3x0.jpg
சென்னை மகாலட்சுமியில் தற்போது வெற்றிநடை போடுகிறது.
சுதந்திர தினத்தன்று புரட்சி தலைவர் எம்.ஜி. ஆர்.ஆலயத்தில்
இருந்து இரவில் தேரோட்டம் நடைபெற்றது. பக்தர்கள்
தேரை இழுத்து வந்த காட்சிகள் நமது நண்பர்களின் பார்வைக்கு.
http://i60.tinypic.com/x2j7li.jpg
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். உருவம் பொறித்த பேனர்
தேரில் வைக்கப்பட்டுள்ள காட்சி.http://i57.tinypic.com/egeg6a.jpg
http://i57.tinypic.com/105vcch.jpg
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் அன்னை சத்யாவின்
சிலை அஷ்ட பந்தன பிரதிஷ்டை செய்த பின் அளிக்கும் காட்சி.