http://i57.tinypic.com/ips4s1.jpg
Printable View
பாலும் பழமும்
நடிகர் திலகத்தின் ரசிகர்களுக்கு ஏன் தமிழ் சினிமா ரசிகர்களுக்கே 1961-ம் ஆண்டைப் பொறுத்தவரை இரண்டு phrases மிகப் பொருத்தமாக அமையும். ஒன்று Embarrassment of Riches மற்றொன்று Spoilt for Choices. காரணம் அந்தளவிற்கு எதை எடுப்பது எதை விடுவது என்று குழம்பி போவோம்.
பெரும்பாலானோரிடம் பாவ மன்னிப்பு, பாச மலர் மற்றும் பாலும் பழமும் என்ற மூன்று பா வரிசை காவியங்களும் ஒரே காலண்டர் ஆண்டில்தான் [1961-ல்] வெளியானது என்று சொன்னால் பிரமிப்பாக பார்ப்பதை கவனித்திருக்கிறேன். அவர்களிடம் அது மட்டுமல்ல செக்கிழுத்த செம்மல் வ.உ.சியாகவும் அவர் வாழ்ந்த வருடமும் 1961 என்பதை சுட்டிக் காட்டுவேன். அது மட்டுமல்ல லட்சியவாதியான அரசியல்வாதியாக தியாகத்தின் உருவமாக அவர் இயல்பாக வாழ்ந்த எல்லாம் உனக்காகவும் அதே வருடம்தான் என்பேன், தாய் மகன் பாசம், குடிபோதையில் மகன் வாழ்வு சீரழிவதை கண்டு தாய் தவிப்பதை கண் முன் நிறுத்திய புனர் ஜென்மம் இதே 1961-ல்தான்..நடிகர் திலகம் ஏற்று நடிக்காத புராண கதாபாத்திரங்களே இல்லை என்பதற்கு மற்றொரு ஆதாரமான முருக பெருமான் வேடத்தை அவர் அணிந்த ஸ்ரீவள்ளி வெளிவந்ததும் இதே 1961-ல்தான். இவையெல்லாம் போதாது என்பது போல் 14 கெட் அப்களில் [14 வித்தியாச தோற்றங்களில்] அவர் நம்மை மயக்கிய மருத நாட்டு வீரன் திரைக்கு வந்ததும் இதே 1961-ல்தான் என்று சொல்லும்போது பலரும் பிரமிப்பின் எல்லைக்கு போய் விடுவார்கள். அதனால்தான் இந்த 1961-ஐ பொறுத்தவரை அந்த ஆங்கில phrases அந்தளவிற்கு பொருத்தம் என்று சொன்னேன்.
இனி பாலும் பழமும் படத்திற்கு வருவோம். அந்த மூன்று பா வரிசை படங்களை எடுத்துக் கொண்டோமோனால் பலருக்கு முதல் சாய்ஸாக ரஹீமை பிடிக்கும். பலருக்கு முதல் சாய்ஸாக ராஜு என்ற ராஜசேகரனை பிடிக்கும். மற்ற பலருக்கு முதல் சாய்ஸ் Dr ரவி. எனக்கு மூன்று பேரையுமே ரொம்ப பிடிக்கும் என்ற போதினும் நேரிய நூலிழையில் ரவி வெற்றி பெறுவார். அதற்கு மனதளவில் நான் பிரமிக்கும் காரணம் அவர் ஏற்றிருந்த ரோலும் அதை திரையில் வடிவமைத்த விதமும். உயர்நிலை பள்ளிப்படிப்பிற்கு கூட போகாத ஒருவர் ஒரு சிறப்பு மருத்துவரை தோற்றத்தில், நடையில் பேச்சில் ஏன் மொத்த உடல் மொழியில் கொண்டு வந்தாரே அதற்காக!
பாலும் பழமும் படத்திற்கு மனதில் ஒரு தனி இடம் உண்டு. அவரது நடிப்பை பற்றி சொல்ல ஆரம்பித்தால் முதலில் மருத்துவமனையில் நடந்து வரும் ஸ்டைல், நர்ஸ் சாந்தியின் அறிவு, அவரது தொழில் பக்தியை கவனிப்பது, அவர் மேல் உண்டாகும் பரிவு, ஒரு நாள் கிளம்புவதற்கு நேரமாகிவிட, shall I drop you, if you dont mind? என்று கேள்வி கேட்கும் நேர்த்தி, நான் பேச நினைப்பதெல்லாம் பாடலில் வெறும் ஹம்மிங்கிலேயே அசத்துவது, அதிலும் குறிப்பாக இரண்டாவது சரணத்தில் ஒன்றோடு ஒன்றாக உயிர் சேர்ந்த பின்னே! உயிர் சேர்ந்த பின்னே என்ற வரியை சரோஜாதேவி பாடியவுடன் ஊஹுகும் என்ற ஹம்மிங்க்கு வாயசைத்தவாறே புருவத்தை மட்டும் ஏற்றி இறக்குவாரே, ஆஹா!, அது மட்டுமா?
அது போல மாலையில் சீக்கிரம் வருகிறேன் என்று மனைவியிடம் சொல்லும்போது மனைவியை டா போட்டு பேசுவார். இன்றைக்கு பெண்களை பார்த்து ஆண்கள் மிகவும் common ஆக உபயோகிக்கும் இந்த வார்த்தையை 50 வருடங்களுக்கு முன்பு ஆரம்பித்து வைத்தவர் நடிகர் திலகம். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. 1980-ம் வருடம் பிப்ரவரி மாதம். மதுரை ஸ்ரீதேவியில் பாலும் பழமும் எண்ணற்ற மறு வெளியீடுகளில் ஒன்றாக வெளியாகியிருக்கிறது. நாங்கள் நண்பர்கள் சென்றிருந்தோம். எங்களுக்கு முன் வரிசையில் கல்லூரி மாணவிகள் ஒரு குழுவாக வந்திருந்தனர். நான் மேலே குறிப்பிட்ட அந்த டா போட்டு பேசும் காட்சியில் அந்த வசனம் வந்ததும் அவர்கள் அடைந்த சந்தோசம் பக்கத்தில் திரும்பி ஒருவருக்கு ஒருவர் அதை பற்றி சிலாகித்து பேசியது அனைத்தும் பசுமையாக மனதில் இருக்கிறது. பாலும் பழமும் வெளிவந்த பிறகு நடிகர் திலகத்திற்கு ஏற்கனவே இருந்ததை விட பெண் ரசிகைகள் ஏராளமாக பெருகினார்கள் என்று சொல்லுவார்கள். அது எந்தளவிற்கு உண்மை என்பது கிட்டத்தட்ட படம் வெளியான 20 வருடங்களுக்கு பிறகும் அதுவும் அன்றைய நான் குறிப்பிடும் காலகட்டத்தில் [1980] 19,20 வயது பெண்கள் மத்தியிலும் கூட தொடர்ந்தது என்பதற்கு நானே. நேரடி சாட்சி.
<Dig
அந்த காலகட்டத்தில்தான் ஸ்ரீதேவியில் பாலும் பழமும் படத்தை தொடர்ந்து கட்டபொம்மன் வெளியாகி சாதனை படைத்தது நினைவிற்கு வருகிறது. வேறொரு சம்பவமும் நினைவிற்கு வருகிறது. இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்திலிருந்து சினிமா எக்ஸ்பிரஸ் மாதமிருமுறையாக ஆரம்பிக்கப்பட்டது. அந்த பத்திரிக்கையின் முதல் இதழ் 1980 பிப்ரவரி 1-ந் தேதியிட்ட இதழாக வெளியானது. வெளியீட்டு விழா முதல் நாள் ஜனவரி 31 அன்று நடைபெற்றது. அந்த பத்திரிக்கையின் நான்காவது இதழ் மார்ச் 15-ந் தேதியிட்ட இதழில் நடுப்பக்கத்தில் நடிகர் திலகம் ராணுவ வீரராக [Army Officer] கம்பீரமாக அமர்ந்திருக்கும் பிரமாண்ட ப்ஃளோ அப் [Blow up] வந்திருந்தது. அந்த நேரத்தில்தான் கட்டபொம்மன் ஸ்ரீதேவியில் வெளியாகியிருந்தது. அந்த சினிமா எக்ஸ்பிரஸ் இதழை வாங்கிக் கொண்டு தியேட்டருக்கு போனது, அங்கே தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் அனைவரும் வாங்கிப் பார்த்து குறிப்பாக நடிகர் திலகத்தின் ப்ஃளோ அப் பார்த்துவிட்டு மகிழ்ச்சியில் சிலாகித்தது இன்றைக்கும் நெஞ்சில் பசுமரத்தாணி.
end dig>
அவர் எம்.ஆர். ராதாவை டீல் செய்யும் அழகே தனி. அது போல் சுப்பையா மற்றும் பாலையா ஆகியோரிடம் காட்டும் பணிவு, திருமண விஷயத்தில் தன் தரப்பு நியாயத்தை எடுத்து சொல்லும் விதம், Chief டாக்டர் நாகையாவிடம் காட்டும் அந்த professional மரியாதை, சௌகாரிடம் மனம் விரும்பி அன்பு செலுத்த முடியாமல் அதே நேரம் வெறுத்தும் ஒதுக்காமல் தவிக்கும் தவிப்பு, நீலா சாந்தியாகி விட மாட்டாளா என்ற உள்மன ஆசை, இப்படி எத்தனை எத்தனை பாவங்கள்!
சோகத்தின் கனம் முகத்தில் தெரிய மனைவியை சக்கர நாற்காலியில் வைத்து தள்ளிக் கொண்டே பாலும் பழமும் கைகளில் ஏந்தி என்று பாடும் அந்த பாவம் [13 வருடங்களுக்கு பின்னால் அதே போல் ஒரு காட்சியமைப்பு என்றாலும் கூட சுமைதாங்கி சாய்ந்தால் பாடலில் சோகத்திலும் ஒரு கம்பீரத்தை காட்டி அந்த மாறுபாட்டை வெளிப்படுத்துவார். என்ன இருந்தாலும் அது எஸ்.பி. சௌத்ரி அல்லவா!]. படத்தின் உயிர்நாடியான பாடலைப் பற்றி சொல்லவே வேண்டாம். அந்த மலை பாதையில் அந்த நடை! அந்த முகம்!
கண் பாதிக்கப்பட்டு முடிந்து கட்டோடு படுத்திருக்க அப்போது நர்சாக சேரும் சரோஜாதேவியின் குரல் கேட்டு சாந்தி என்று எழுந்திருப்பாரே! எப்படி அதை வர்ணிப்பது? அந்த நேரத்தில் விரித்து வைக்கப்பட்டிருக்கும் அவரது இரண்டு கால்களுக்கு நடுவில் காமிரா கோணம் வைக்கப்பட்டு படமாக்கப்பட்டிருக்கும் அழகை என்னவென்று சொல்வது?என்னை யாரென்று பாடல் மட்டும் குறைந்ததா என்ன? சரோஜாதேவி கையைப் பிடித்துக் கொள்ள வேகமாக நடக்கும் அந்த நடை! இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். அபிநய சரஸ்வதி அருமையாக செய்த படங்களில் இதுவும் ஒன்று
கவியரசரும் மெல்லிசை மன்னர்களும் பாடகர் திலகமும் இசையரசியும் கொடி கட்டி பறந்த படம் இது. ஆலய மணியின் ஓசையை நான் கேட்டேன் பாடலில் கணவன் மனைவியின் அன்னியோனியத்தை கவியரசர் எப்படி வர்ணித்திருக்கிறார் பாருங்கள்.
காதல் கோவில் நடுவினிலே
கருணை தேவன் மடியினிலே
ஆரும் அறியாப் பொழுதினிலே
அடைக்கலமானேன் முடிவினிலே
நான் பேச நினைப்பதெல்லாம் பாடலில் இரண்டாவது சரணத்தில் இசையரசி பாடும் வரிகளில்
சொல்லென்றும் மொழியென்றும் பொருளென்றும் இல்லை
பொருளென்றும் இல்லை .
சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை
விலையேதும் இல்லை
சொல்லாத சொல்லுக்கு என்ற வார்த்தையை அவர் உச்சரிக்கும் விதம் ஒவ்வொரு முறை கேட்கும்போதும் என்னை மெய்மறக்க செய்யும் பாவம், உச்சரிப்பு.
படத்தில் போனால் போகட்டும் போடா பாடலின் அதே உயரத்திற்கு வரும் ஒரு பாடல் இருக்கிறது. காதல் சிறகை காற்றினில் விரித்து பாடல். மன்னர்கள், கவியரசர், இசையரசி மூவர் கூட்டணி அந்த பாடலை எங்கேயோ கொண்டு போய் விடுவார்கள்.
முதல் நாள் காணும் திருமணப் பெண் போல்
முகத்தை மறைத்தல் வேண்டுமா
முறையுடன் மணந்த கணவன் முன்னால்
பரம்பரை நாணம் தோன்றுமா
என்ற வரிகளும் சரி அதற்கு பிறகு வரும்
பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும் போது
அழுதால் கொஞ்சம் நிம்மதி
பேச மறந்து சிலையாய் இருந்தால்
பேச மறந்து சிலையாய் இருந்தால்
அதுதான் தெய்வத்தின் சன்னதி
அதுதான் காதல் சன்னதி
என்று சுசிலா பாடும் போது அதிலும் குறிப்பாக காதல் சன்னதி என்ற வார்த்தையை அவர் உச்சரிக்கும் விதம் இருக்கிறதே காதலிக்காதவர்களை கூட காதலின் பால் ஈர்த்துவிடும்! அந்த வரி முடிந்தவுடன் ஒரு ஹம்மிங் வரும் அதை சுசிலா பாடியிருப்பதை கேட்கும் போது இதை விட இனிமை வேறு உண்டா என்று தோன்றும். இந்த இடத்தை குறிப்பிட்டு வைரமுத்து சொல்வார். அந்த ஹம்மிங்கை கேட்கும் போதெல்லாம் என் உயிர் கூட்டை விட்டு பறந்து போய் விட்டு ஹம்மிங் முடிந்தவுடன் மீண்டும் உடலில் வந்து உட்கார்ந்து கொள்ளும் என்பார்.
பாலும் பழமும் படத்தை பற்றி இன்னமும் எழுதிக் கொண்டே போகலாம். நேரமின்மை காரணமாக பிறிதொரு நேரத்தில் எழுதுகிறேன்..
நான் முன்பொரு முறை பாலும் பழமும் பற்றி எழுதும்போது இப்படி எழுதி முடித்திருந்தேன்.அதையே மீண்டும் இந்த பதிவிற்கு முடிவுரையாக எழுதுகிறேன்
தினசரி அருந்தினாலும் உட்கொண்டாலும் எப்படி பாலும் பழமும் நமக்கு அலுப்பதில்லையோ அது போலதான் பாலும் பழமும் படத்தை எத்தனை முறை பார்த்தாலும் அதை பற்றி பேசினாலும் நமக்கு அலுப்பதில்லை.
அன்புடன்
ராகவேந்திரன் சார்,
என் உள்ளம் மகிழ்ந்த வாழ்த்துக்கள். ஒரு லட்சம் பார்வையாளர்கள் ஒரு கோடியாகட்டும். நடிகர் திலகம் இணையதளம் இணையில்லாப் புகழ் பெறட்டும்.
முரளி சார்,
அவன்தான் மனிதனை கண் முன்னே நிறுத்தி விட்டீர்கள். ஒவ்வொரு வரியும் அற்புதம். அதுவும் தலையெழுத்தை, தலைவிதியை தலைவர் செய்து காட்டும் அற்புதத்தை அது போலவே சுட்டிக்காட்டி எழுதி இதயத்துள் நுழைந்தமைக்கு நன்றி! அருமையான நேரடி ஒளிபரப்பைத்தான் உங்கள் பதிவில் நான் பார்த்தேன்.
முத்தையன் அம்மு,
தலைவரின் ஸ்டில்கள் ஒவ்வொன்றும் அருமை! நன்றி!
கோபால்,
வழக்கத்தை விடவும் உங்கள் 'திருவிளையாடல்':-D மேலும் சுவை. அனைத்தையும் வெகு அழகாக நான்கு பாராவுக்குள் கவர் செய்து விட்டீர்கள். பாடல் காட்சிகளின் இடைவெளி வரை வெளிப்படுத்தியிருப்பது முத்தாய்ப்பு. தலைவர் மீனவனாக சுறா சூறையாடச் செல்வாரே! புறப்படுமுன் வெகு அழகாக வழியனுப்ப வந்தோரைப் பார்த்து கையசைத்து விட்டு செல்வாரே!(ஆசி கூறுவது போல)
அதே போலத்தான் உங்கள் பதிவுகளையும் அவர் படித்திருந்தால் உங்களை வாழ்த்தியிருப்பார்.
http://i1087.photobucket.com/albums/...153003.266.jpg
சாவித்திரி பொருந்தா ஜோடி வடிவம் பற்றி தாங்கள் எழுதியதைக் கண்டதும் உண்மையாய் இருந்தாலும் 'களுக்'கென்று சிரித்து விட்டேன். ரசமான பதிவு.
அத்தனை காட்சிகளும் அறுசுவை. அதில் எனக்கு பிடித்த ஒன்று.
நிறுத்தி நிதானமாக மனையாள் மன்றாடி கோபப்படவேண்டாம் என்று பீடிகையெல்லாம் போட்டு வேண்டுகோள் விடுக்குமுன்,
அந்த கம்பீர அமர் போஸில் மிக அழுத்தம் திருத்தமாக, அதே சமயம் நிதானம் தவறாமல், கால் முட்டியை கைவிரல்கள் தேய்த்து கொடுத்தபடி புலித்தோல் ஆடை அணிந்த சிவ சிங்கம் கேட்கும்....
"என்ன கேட்கப் போகிறாய்?" (இந்த 'சிங்கத் திருவிளையாடல்' ஒன்று போதும்)
http://i1087.photobucket.com/albums/...151348.368.jpg
அவன்தான் மனிதன் பதிவை பாராட்டிய
ராகவேந்தர் சார்,
சந்திரசேகர்
எஸ். வாசுதேவன்
ரவி
வாசு
அனைவருக்கும் நன்றி.
வாசு,
அவன்தான் மனிதன் ஸ்டில்ஸ்ற்கு மனங்கனிந்த நன்றி. இன்னும் சொல்லப் போனால் [நீங்கள் நம்புவீர்களோ தெரியாது] அன்று படம் பார்க்கும்போது தலைவரின் close up ஷாட் வரும். அதாவது ஜெயலலிதாவை குழந்தைக்காக முத்துராமன் வீட்டிற்கு அனுப்பி வைத்தவுடன் அவர் வருகிறார் என்று பார்த்துக் கொண்டே இருப்பார். அப்போது வரும் close up ஷாட். எனக்கு எப்போதும் அவரின் நீண்ட அழகாக வடிவைக்கமப்பட்ட கிருதாவின் மேல் ஒரு தனி மோகம். சிறு வயதில் அதே போன்று வைக்க முயற்சி செய்து சரி வரவில்லை. அந்த காலகட்டத்தில் [1971- 1977 ] அவரின் profile pose ஸ்க்ரீனில் வரும்போது பார்த்துக் கொண்டே இருப்பேன். பத்திரிக்கையில் வருவதையும்தான். அன்றைக்கு அந்த ஷாட் வந்தபோது பழைய நினைவுகள் வந்துவிட்டன. மற்றொன்றையும் கவனித்தேன். எவ்வளவு நேர்த்தியான செவி மடல் அவருக்கு. எந்த மாசும் மருவில்லாமல்! அதை மீண்டும் புகைப்படமாக காட்டியதற்கு நன்றி!
அன்புடன்
28.5.2015 அன்று பிறந்த நாள் காணும் இனிய நண்பர் திரு ராகவேந்திரன் அவர்கள் எல்லா வளமும் பெற்று ஆரோக்கியத்துடன் பல்லாண்டு வாழ்க என்று அன்புடன் வாழ்த்துகிறேன் .
வினோத்
https://www.youtube.com/watch?v=dmVJafjGTjUQuote:
Happy Birthday wishes to Raghavendhar Sir.
For many more happy returns of the day....!
with respectful regards, senthil
https://www.youtube.com/watch?v=4xeW8ITF2y8Quote:
NT sings for you too...Raghav sir! You are a candle of this esteemed thread that candidly lights up thousand candles like me to expand the cosmic regime of NT in an ever geometric progression irrespective of generation gaps!!
Quote:
வாழ்க்கையில் நாம் ஏதோ ஒரு கோணத்தில் யாராலோ எப்போதோ துரத்தலுக்கு ஆளாகிக்கொண்டே இருப்போம். மனோதைரியம் துணிச்சல் தீர்க்க முடிவுகள் நம்மை நிலைநிறுத்தும் இறுதியில் புத்திசாலித்தனமான நகர்வுகள் மூலம் நமக்கு வெற்றியே கிட்டும்!!
இதுவே மானிட வாழ்வியல் வழிகாட்டி ஷான் கானரியின் ஜேம்ஸ் பாண்டிசம் !! இக்காணொளி உங்களை சோர்வு துறந்து சுறுசுறுப்புக்கு தூக்கி விடும் பிறந்த நாள் ஏணியாகட்டும்!!
https://www.youtube.com/watch?v=gnmau8_iypw
Gap Filler : தரை டிக்கட்டுகளுடன் அரை டிக்கட்டாக நடிப்பின் படிக்கட்டு ! ராமன் எத்தனை ராமனடி நினைவுகள்!
https://www.youtube.com/watch?v=cLqkI1ijrjYQuote:
என்னதான் நாம் வளர்ந்து பேண்ட் போட்டாலும் பள்ளிப் பருவ அரை டிக்கட் ஹால்ப் பேண்ட் நிஜாரே நமக்கு அணிவதில் ஆனந்தம் !! எடுப்பான நிஜாரில்
நடிகர்திலகம் !
ஆனாலும் அந்த அரை நிஜார் காக்கியானால் ...எங்கிருந்து வந்தது இந்த கம்பீரம்?
https://www.youtube.com/watch?v=qDA_jZYLN1Q
திரு .ராகவேந்திரா அவர்களுக்கு
http://i1065.photobucket.com/albums/...pspjbvx84x.jpg
மன்னிக்க வேண்டும் யுவர் ஆனர்.:-D அதில் எனக்கு மிகப் பெரிய பங்கிருக்கிறது. இன்னும் பலரும் உரிமை கேட்டு போராட்டம் நடத்தலாம்.:-D
முரளி சார்,
நன்றி!
http://i1087.photobucket.com/albums/...194626.974.jpg
உலகத்தில் எந்த ஒருவருக்கும் இந்த நீள்கிருதா இவருக்கு அமைவது போல யாருக்கும் அமையாது. கோபாலும், நானும் போனில் உரையாடும் போது இதைப் பற்றிப் பேசாமல் இருந்தது இல்லை. அதுவும் என் பிரிய ராஜா, சவாலே சமாளி படங்களின் சைட் கிருதா போஸ்கள் கில்லி அடித்து கிறங்கடிக்க வைத்தவை. அவருடைய உடம்பின் ஒவ்வொரு அணுவும் ஒவ்வொருவிதமான, அபரிமிதமான அழகைக் கொண்டவை. உலக ஸ்டைல்களை மொத்தக் குத்தகைக்கு எடுத்துக் கொண்ட முதலாளி அவர். குறிப்பாக 72-இல் அவர் முகம் அத்தனை கண்டங்களையும் கவர்ந்த காந்த சக்தியை தன்னகத்தே கொண்டிருந்தது. ஆரியம் திராவிடம் என்று எப்படி எடுத்துக் கொண்டாலும் அகிலம் வியந்த ஆணழகர் அவர் ஒருவரே! அந்த வசீகர வலையில் சிக்காதவர் என்று எவரும் இல்லை.
அன்புள்ள மக்கள்தலைவரின் அன்பு கண்மணி ( நமது தலைவர் அன்பு மிகுதியானால் ரசிகர்களை அழைப்பது இப்படித் தானே) திரு.ராகவேந்திரா அவர்களே தாங்கள் நடத்தி வரும் நடிகர்திலகம்.காம் 100000 பார்வையாளர்களை கடந்து மாபெரும் இமாலய வெற்றியை எட்டியிருப்பது மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது.
நமது தலைவர் உயிரோடு இருந்த போதே அவரது புகழை மறைக்க பலர் முயற்சித்த போது, அவர் இல்லாத போது எப்படி அவர் புகழை காக்க போகிறோம் என்ற நினைத்த போது, எட்டு ஆண்டுகளுக்கு முன்பே இணையதளத்தை பற்றி யாரும் அவ்வளவாக அறியாத போது தலைவர் பெயரில் இணையதளத்தை துவக்கி அவரின் புகழ் உலகெங்கும் பரவச் செய்த பெருமை தங்களையே சாரும்.
பிறந்த நாள் காணும் தாங்கள் மக்கள் தலைவரின் ஆசியுடன் தாங்களும், தங்கள் குடும்பத்தினரும் நீண்ட ஆயுளைப் பெற்று நீடூழி வாழ நான் வணங்கும் தெய்வம் சிவாஜி அவர்களை வேண்டுகிறேன்.
தங்களுக்காக என்னுடைய சிறிய காணிக்கை.
https://www.youtube.com/watch?v=VWdU...ature=youtu.be
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
திரு ராகவேந்திரா சார் - உங்கள் பிறந்த நாளில் நீங்கள் ஆரோக்கியமாகவும் , எங்கள் எல்லோருக்கும் சிறந்த வழிக்காட்டியாகவும் பல யுகங்கள் வாழ வேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொள்கிறேன் . எங்களுக்கு உங்கள் பிறந்த நாளைத் தெரிவித்த திரு வினோத் அவர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி
எழுத்துலகத்தால்
வர்ணிக்க
இயலுமா
உந்தன்
இந்த
கண் அசைவை
அல்லது
உந்தன்
இந்த
தோரணையை?
http://i1065.photobucket.com/albums/...psrdazlqf6.jpg
திரு.ராகவேந்திரன் சார் அவர்களே பிறந்தநாள் காணும் தாங்கள் மலரும் மணமும் போல நிலவும் வானும் போல இதயதெய்வம் சிவாஜியும் நடிப்பும் போல எல்லா வளமும் பெற்று நோயற்ற வாழ்வுடன் நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.
திரு. செந்தில்வேல் சார் தங்களின் அரிமா ஆப்டிகல்ஸ் சிவாஜியின் புகழ் போல் சிறந்து விளங்க வாழ்த்துகிறேன்
திரு.ராகவேந்திரன் சார் , திரு.முரளி சார் அவன்தான் மனிதன் மற்றும் புத்தக வெளியீடு நிகழ்ச்சி தொகுப்பு அருமை. விழாவிற்கு நான் வருவதாக நினைத்திருந்தேன் அலுவல் காரணமாக டெல்லி சென்றதால் வரமுடியவில்லை.
திரு. முத்தையால் அம்மு சார் எங்கள் இதயம் கவர்ந்த காவியம் அவன்தான் மனிதன் படங்களை போட்டு அசத்தி விட்டீர்கள்
Wish you Happy Birthday wishes to Mr. Ragavendra sir.
பிறந்த நாள் வாழ்த்துக்களை அளித்த அன்பு நெஞ்சங்கள்
வினோத்,
தொலைபேசியில் வாழ்த்துச் சொன்ன பம்மலார், மற்றும் முரளி சார்,
சிவாஜி செந்தில், [ தங்களுடைய உவமான வாழ்த்து அருமை]
செந்தில்வேல் - வசந்த மாளிகை ஸ்டில் சூப்பர்,
ஹைதராபாத் ரவி,
திருச்சி ராமச்சந்திரன்,
பரணி,
மற்றும் வாழ்த்தளிக்க உள்ள அன்பு நெஞ்சங்கள்..
அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றிகள்.
மக்கள் தலைவரின் ஆசியுடன் அவர் தொண்டாற்றும் பேறு எனக்கு மேலும் கிட்ட வேண்டும் என இறைவனைப் பிரார்த்திக்கிறேன்
நன்றி
அன்புடன்
ராகவேந்திரன்
சுந்தரராஜன்
தங்களுடைய வாழ்த்துக்களுக்கு என் உளமார்ந்த நன்றி.
மக்கள் தலைவர் நடிகர் திலகத்தின் புகழ் தமிழ் உள்ளவரைக்கும், அதற்கு மேல் சினிமா உள்ள வரைக்கும், அதற்கும் மேல் கலை உள்ள வரைக்கும், அதற்கும் மேல் கடைசி கலையார்வலர் உள்ள வரைக்கும் வாழும். நமக்கெல்லாம் அந்த உன்னதமானவருக்கென உழைக்கவும் அவர் காலத்தில் வாழவும் வரம் கொடுத்த இறைவனுக்கு உளமார்ந்த நன்றி. இப்பணி மேலும் தொடர வேண்டுவதே என் விருப்பம். தங்களைப் போன்ற அன்புள்ளங்கள் இருக்கும் போது அதற்கான உத்வேகம் சற்றும் குறையாது. வயது மட்டுமே மாறலாம், மனது மாறாது.. நடிகர் திலகத்தை நினைக்கும் ஒவ்வொரு நொடியும் நமக்கு ஆயுள் கூடும்.
எனவே தங்களைப் போன்ற அன்புள்ளங்கள் இருக்கும் போது நூறு வயது என்ன ஆயிரம் வயது கூட வாழலாம்.
தங்களுடைய சிறப்பான காணொளிக்கு என் உளமார்ந்த நன்றி.
குறிப்பாக என் தமிழ் என் மக்கள், என மக்களைக் கொண்டாடிய மக்கள் தலைவரின் சிறப்பைப் பாடும் ஆரம்பிச்சு வெச்சவரு அண்ணன் தான், ஆயிரம் தான் சொல்லு அவர் மன்னன் தான் பாடலையெல்லாம் மறக்கவே முடியாது. என் மனதில் ஆழமாகக் குடி கொண்ட இப்பாடலை அளித்தமைக்கு ஸ்பெஷல் நன்றிகள்.
தங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
அன்புடன்
ராகவேந்திரன்
முரளி சார்
பாலும் பழமும் அருந்திய ஆனந்தம்..
நடிகர் திலகம் திரைப்படத்தினால் மட்டுமல்ல..
தங்கள் எழுத்தினாலும் தான்..
முத்தையன் அம்மு
நாளுக்கு நாள் இங்குள்ள ஒவ்வொரு சிவாஜி ரசிகர் நெஞ்சிலும் தங்களுக்கென தனியிடத்தைப் பெற்று வருகிறீர்கள். அவன் தான் மனிதன் நிழற்படங்கள் ஒவ்வொன்றும் உள்ளத்தைக் கொள்ளை கொள்கின்றது. தங்களுக்கு என் உளமார்ந்த நன்றி.
Happy Birth day Raghavendran sir.
http://thumbnails103.imagebam.com/26...e266041328.jpg
http://www.jucoolimages.com/images/b...y_cakes_01.gif
Happy birthday raghavendra sir, many many happy returns of the day
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் வீயார் சார்...எல்லா நலமும் வல்லமையும் நடிகர் திலகம் உங்களுக்கு வழங்கட்டும்...
http://www.dhool.com/gifs/9682.jpg
Wish you many more happy returns of the day Mr Raghavendra.
திரு. ராகவேந்திரன் சார்,
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். தாங்கள், பூரண உடல் ஆரோக்கியத்துடன்,, இதுபோல் மேலும் பல பிறந்தநாட்கள் கண்டு, நடிகர்திலகத்தின் புகழ் பரப்பும் பணியில் சிறந்து விளங்க இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
முரளி சார்!
அருமையான தகவல்களை அளித்து அசர வைத்து விட்டீர்கள். நீங்கள் 'பாலும் பழமும்' மட்டும் தரவில்லை. பழரசத்தையும் சேர்த்து பருக வைத்து விட்டீர்கள்.
//அவர் எம்.ஆர். ராதாவை டீல் செய்யும் அழகே தனி.//
உண்மை முரளி சார்,
யாராக இருந்தாலும் விழுங்கி ஏப்பம் விடும் ராதாவையே தன் சொக்காய் பைக்குள் செருகி வைத்துக் கொள்வார். ("மாமா அவர்களே! ஒன்றே சாட்சி)
'பாலும் பழமும்' படத்தில் மிக அழகாக நீங்கள் சொல்வது போல் ராதாவை தலைவர் டீல் செய்யும் ஒரு காட்சி.
ராதா செய்யும் அட்டகாசமும் நம் வயிற்றை பதம் பார்க்கும்.
"டாக்டரா இருக்குறவங்க நர்ஸைதான் கட்டிக்கணும்...:)
இஞ்சினியர் வேலை பாக்குறவங்க சித்தாள் வேலை செய்யுற பொம்பளையதான் கட்டிக்கணும்...:)
ஆபிஸ்ல வேலை செய்ற மேனேஜர் அங்க டைப் அடிக்கிற பொம்பளையதான் கட்டிக்கணும்...:)
அப்பத்தான் தொழில் வளரும்":)
தியேட்டரே குலுங்கும்.
அப்படிப்பட்டவரை மிக அழகாக சமாளித்து ஜெயிப்பார் திலகம்.
"ஆமாம் உன் கல்யாணத்துக்கு அவுங்கல்லாம் ஒருத்தரும் வரலியே" என்று ராதா நைஸாக எகத்தாளம் விடும் போது நடிகர் திலகம் சற்றே குனிந்து மிக அடக்கத்துடன் அமர்ந்திருப்பார். ராதா சொல்வதிலும் நியாயம் இருப்பது போல அவருடைய உடல் மொழி அந்த சமயத்தில் இருக்கும். அதே சமயம் கல்யாணத்திற்கு அவர்கள் வரவில்லையே என்ற ஞாபகப்படுத்தலில் லேசான சோகம் கலந்த வருத்தம் மிளிர்வதையும் அந்த அமர்விலேயே காணலாம்.
தேவாங்கு ராக்கெட் லேகியத்திற்கு ராதா இவரிடம் சர்டிபிகேட் கேட்கும் போது
"லேகியத்தை எங்கிட்ட கொடுங்க.. நான் லேபுக்கு கொண்டு போய் டெஸ்ட் பண்றேன்"
http://i1087.photobucket.com/albums/...104001.915.jpghttp://i1087.photobucket.com/albums/...103949.429.jpg
என்று கொஞ்சமும் அலட்டாமல் தலைவர் கழுத்தை ஒரு பக்கமாகச் சாய்த்து சிரித்தபடியே (சிரிப்பை விட மாட்டார். இந்த மாதிரி சிரிப்பை வேறு எந்தப் படத்திலும் பார்க்க முடியாது) சொல்வார்.
ராதா பேசப் பேச சிறு தலையாட்டல்களில் அதை கேட்டுக் கொண்டு ராதாவுக்கு கொஞ்சமும் பிடி கொடுக்காமல் "அப்புறம் வேற என்ன விஷயம்?" என்பாரே ராதா சொன்னதை காதில் வாங்காத மாதிரி. கிரேட்.
ராதாவைப் பாருங்கள்.
"வேற என்ன விஷயன்னா இதுல கையெழுத்து போட மாட்டேன்னு அர்த்தமா?":)
என்று 'டபக்'கென்று கற்பூரமாய் பாய்ன்ட்டை பிடிப்பார் மனுஷர்.
'மாட்டேன்' என்று அழகாக, அதே சமயம் ஆணித்தரமாக தலைவர் கூறுவது டாப். மறுபடியும் ராதா 'மாட்டியா?' என்றவுடன் 'ஆங்' என்று மறுப்பது டாப்போ டாப்.
எவ்வளவு அழகாக கொஞ்சமும் அலட்டாமல் ராதாவின் அலட்டலை எதிர் கொள்வார்! அதுவும் அதிகம் பேசாமலேயே. அமைதியும், அழுத்தமும், பின் கோபமும், கண்டிப்பும் வெகு அழகாக அவரிடமிருந்து வெளிப்படும்.
அப்படியே இதே இருவரும் 'பலே பாண்டியா'வில் பண்ணும் கூத்துக்களை கண் முன்னே கொண்டு வந்து இப்போது நிறுத்திப் பாருங்கள். அது வேறு விதம். அது சரவெடி. இது ஒற்றை சரஸ்வதி வெடி.
எப்படிப்பட்ட மாமேதை! இந்த மாமேதையுடன் கை கோரத்த பிற மேதை நடிகர்கள் பூமாலையில் சேர்ந்த பூக்களாக இவருடன் சேர்ந்து மணம் வீசினார்கள்.
தானும் புகழ் பெற்று மற்றவர்களையும் புகழ் அடையச் செய்து பார்த்த தன்னிகரில்லா தானைத் தலைவர் அல்லவோ அவர்.
பாலும் பழமும் - நன்றி டாக்டர் சாந்தாராம் அவர்கள் கொடுத்த சில துளிகள்... உங்கள் பார்வைக்கு...
‘பாகப் பிரிவினை, பாவ மன்னிப்பு, பாச மலர் அடுத்து...... " பாலும் பழமும் " !
https://www.filepicker.io/api/file/B...Z+DSC06930.JPG
இந்த படத்திற்கும் தமிழ் பேசும் மக்களிடம் இருந்து பலத்த எதிர்ப்பார்ப்பு ! " சரவணா பிலிம்ஸ் " ஜி வேலுமணி யின்
இரண்டாவது தயாரிப்பு ! இந்த படம் தயாரிப்பில் இருந்த போதுபடத்திற்கு பெயரையே வைக்கப்பட வில்லை !
கடைசி நேரத்தில் : " பாலும் பழமும் " என்கிற பெயர் வைக்கப்பட்டது .
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு முற்றிலும் நூதனமான வேடம் ! " டாக்டர் ரவி " !
புற்று நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி செய்யும் டாக்டராக : மாறுபட்ட " விக்" மற்றும் உடையுடன் தோன்றினார் , நடிகர் திலகம்
https://www.filepicker.io/api/file/8...WVQQ+sg010.jpg
அவரது, சிறு அங்க அசைவுகளைக் கூட கவனித்து கைதட்டும் ரசிகர் குழாம் கால கட்டத்தில் உயர் மட்டத்து விஞ்ஞானி தோற்றத்தில்
சிவாஜியின் அளவான நடிப்பைக்கண்டு பலர் மெய் மறந்து ரசித்தனர் !
அதே சமயத்தில்...
உயிருக்குயிராய் காதலிக்கும் தன் இலட்சிய மனைவியின் மேல் அவர் அன்பை வெளிப்படுத்தும் அன்பு கணவனாகவும் நடிகர் திலகம் ' வெளுத்துக்" கட்டினார் !
சரோஜாதேவி : அழகுக்கு அழகு, நடிப்புக்கு நடிப்பு ! இரண்டிலும் சரோஜாதேவி , தன் திறமையைக் காட்டின படம் " பாலும் பழமும் " !
அதிலும் 60 களில் கொடுமையான நோயாக விளங்கிய ' காச நோய் " பாதிக்கப்பட்ட நோயாளியாக சரோஜாதே அற்புதமாக நடித்தார் !
இதற்காக அவர் பல நாட்கள் பட்டினி கிடந்து தன் முகப் பொலிவை இழந்தவராக , ' டி பி ' யில் வாடும் பெண்ணாக தன் முகத்தை மாற்றிக் கொண்டு அற்புதமாக சரோஜாதேவி நடித்தார்.
எம் ஆர் ராதா.
" டாக்டர் ஆக இருப்பவன் ஒரு நர்ஸ் ஐத் தான் கல்யாணம் கட்டிக்கணும் !
ஒரு என் ஜினீயர், சித்தாளைத்தான் கட்டிக்கணும் !
ஒரு ஆபிஸர் ஆக இருப்பவன் , ஒரு 'டைப்பிஸ்ட்' த்தான் கட்டிக்கணும் !
அப்போத்தான் தொழில் வளரும் ! "
என்கிற எம் ஆர் ராதாவின் 'ஜோக்' புகழ் பெற்றது !
இன்னொரு கட்டத்தில் , படத்தில் ஒருவர் - நாகய்யாவோ அல்லது பாலய்யாவோ , எம் ஆர் ராதாவுக்கு :
" ஆசிர்வாதம் " என்று சொல்லும்போது, எம் ஆர் ராதா ' டக் ' என்று " ஆசி " எனக்கு, " வாதம் " உனக்கு ! "
என்று சொல்வது தமாஷ் !
இப்படி ஒரு சில காட்சிகளே எம் ஆர் ராதா இந்த படத்தில் வந்தாலும் இவர் வரும் போது கலகலப்புக்கு பஞ்சம் இல்லை என்று சொல்லலாம் !
இயக்குனர் ஏ பீம்சிங் :
மனித உணர்ச்சிகளை அடிப்படையாக வைத்து படங்களை இயக்குவது / எடுப்பது இவருக்கு வழக்கம் !
இவரது படங்களில் " மசாலா" இருக்காது ! சண்டைக் காட்சிகள் இருக்காது !
" Muscle Dance " அல்லது " ஐட்டம் " நடனங்கள் இருக்காது !
இவர் படம் எடுப்பதை இப்போது ' பீல்ட்' இல் உள்ள மக்களைக் கேட்டால்....." Sentimental Feelings " என்று அலட்சியமாக பேசுவர் !
இந்த " Sentimental Touch " உடன் இவர் படங்களை இயக்கியதால்..... 53 வருடங்களுக்குப் பிறகும் இந்த படத்தைப் பற்றி இப்படி இன்னும் பேசிக்கொண்டிருக்கிறோம் !
" பாலும் பழமும் " ஏன் வெற்றி பெற்றது - கணவன் - மனைவி உறவு :
'அண்ணன் -தங்கை உறவை " பாச மலர்' நல்ல முறையில் எடுத்துச் சொன்னதைப் போலவே....
கணவன் - மனைவியின் உறவை - அன்பின் வெளிப்பாடு - பாசப்பிணைப்பு - மனைவியைப் பிரிந்தால் கணவன் படும் பாடு....
கணவனைப் பிரிந்த மனைவி படும் வேதனை.......
இதனை : சிவாஜி கணேசன், சரோஜா தேவி, மெல்லிசை மன்னர்கள்,டி எம் எஸ் - பி சுசீலா மற்றும் கவிஞர் கண்ணதாசன் இவர்களைக் கொண்டு இயக்குனர் பீம்சிங்.....
மிகச் சிறந்த முறையில் படமாக்கியிருந்தார் !
" வாழ்ந்தால் இலட்சிய தம்பதிகள் : டாக்டர் ரவி - நர்ஸ் சாந்தி போல் வாழவேண்டும் ! " என்று அந்த கால இளம் தம்பதியர்கள் உறுதி பூண்டனர் என்றே சொல்லலாம் !
பொதுவாக நடிகர் - நடிகையர்களின் பெயர்களை தாங்கள் பெற்ற செல்வங்களுக்கு வைக்கும் இந்த நேரத்தில்...." பாலும் பழமும் " படம் வந்த போது நிறைய குழந்தைகளுக்கு " ரவி" , " சாந்தி " என்றே பெயர்களை வைத்து மகிழ்ந்தனர் !
பாச மலர் " " சிவாஜி - சாவித்திரி " நிஜமான அண்ணன் -தங்கை !
" பாலும் பழமும் " சிவாஜி - சரோஜாதேவி நிஜமான கணவன் மனைவி!
இவர்கள் இப்படித்தான் நடித்தனர் !
" கதையின் போக்கு அப்படித்தான் இருக்கிறது.....எனவே இவர்கள் இப்படி நடித்தது ஒன்றும் புதுமையா ? " என்று சிலர் கேட்கலாம் !
கதை அப்படித்தான் இருக்கிறது....ஆனால் கதைக்கு ' உயிரோட்டம் " கொடுத்தது யார் ?
இவர்களின் நடிப்பு / அர்ப்பணிப்பு!!!
" பாலும் பழமும் " படமும் , அந்த படத்தின் வெற்றியும் அதன் விளைவுகளும் !
" பாலும் பழமும் " படம் சென்னையிலும் மற்றும் பல இடங்களிலும் 100 நாட்களும் அதற்கு மேலும் ஓடியது !
ஆனால் , அந்த படம் நம் தமிழ் நாட்டு மக்களை எவ்வாறு பாதித்தது ?
'பாலும் பழமும் ' சேலைகள்! அதென்னப்பா, " பாலும் பழமும் சேலைகள் ?
" பாலும் பழமும் " படத்தில் சரோஜாதேவி அணிந்து வந்த சேலையா ? ................இல்லையா !
அந்த காலத்தில் மக்களைக் கவர்ந்த பெயர்களில் " புடவை டிசைன்" களை புதிதாக அறிமுகப் படுத்தியதுண்டு !
" பாலும் பழமும் " என்கிற பெயர் மக்களிடையே மிகப் பிரபலம் அடைந்ததால்...ஒரு புடவையின் டிசைன் ஐ " பாலும் பழமும் ' என்று வைத்தனர் !
" பாலும் பழமும் " சேலைகள் எப்படி இருக்கும் ?
https://www.filepicker.io/api/file/3...z+DSC_2266.jpg
" பாலும் பழமும் " படத்தில் சிவாஜி கணேசனுக்கு மேக் அப் போட்ட ஒப்பனையாளர், தன் கற்பனைத்திறனால் சிவாஜிக்கு மிக அழகான " கெட் அப் " இல் மேக் அப் போட்டார் ! இந்த கால கட்டத்தில் அவரின் துணையாருக்கு ஓர் ஆண்குழந்தை பிறந்தது ! அந்த குழந்தையின் பெயர் : ரவி ! அவர் இப்போது ஒரு புகழ் பெற்ற டாக்டர்...