நான் கண்ட தலைவன் 1985
என் சிறு வயதில் எங்க வீட்டில் தலைவரின் புகைப்படம் நிறைந்து இருக்கும் அதில் இருந்து எப்படியும் தலைவரை பார் க்க வேண்டும் என்ற ஆவல் ஆசை எனக்கு இருந்தது
எனக்கு இதய தெய்வத்தை கான வேண்டும் அதற்க்காக என் தந்தையுடன் நானும் எனது அண்ணன் எனது அத்தான் முவரும் சென்னை சென்றோம்
என் தந்தை சுற்றி பார்த்து விட்டு வாங்கள் என்றார் நான் தலைவரை தான் பாக்க வேண்டும் என்றேன்
என் தந்தையின் உடன் இருப்பவர் சட்டமன்றத்திற்க்கு கூட்டி சென்றார் காலரில் அமர்ந்து காத்து கொன்டு இருந்தேன் முதலில் மாண்புமிகு ப உ சன் முகம் வந்தார் அடுத்து நாவலர் வரும் போது அவை உறுப்பினர் எழுந்து நின்றனர் நானும் தலைவர் வந்து விட்டார் என்று கை தட்டினேன் அருகில் இருந்த என் அண்ணன் இல்லை என்றார்
சரி தலைவர் வரும் வரை காத்து இருந்தேன் அவை நடந்தது மக்கள் திலகம் வரவில்லை எனக்கு ஏமாற்றம் தான் பார்வை நேரம் முடிந்து விட்டது
மிகுந்த வருத்தம்
மாலை 5மணி இருக்கும் என் தந்தை கிளம்புங்கள் என்றார் தலைவரை பார்க்க கார் வந்தது ராமனின் அவதாரம் தலைவர் என்றால் தலைவனின தோட்டம் ராமா வர தோட்டம் சென்றோம் என் தேடல் தலைவர் பற்றியே இருந்தது
7மணி அளவில் பெரியவர் ஆர் எம் வி வந்தார் அடுத்து நான் தேடிய தலைவன் வந்தார் தெய்வத்தை கண்டது போல் இருந்தது உணவு உண்ட பிறகு புகைப்படம் எடுக்கபட்டது என்னை எனது தந்தை தங்க தலைவரிடத்தில் அறிமுகம் செய்தார் தலைவர் நான் பெயர் சூட்டிவன் தானே என்றார் இல்லை இரண்டாவது மகன் என்றார் 9ஆண்டுகளுக்கு முன் எனது அண்ணனுக்கு பெயர் சூட்டிய தை நிைவைு படுத்தினார்எனது அண்ணன் நான் எனது அத்தான் முவரும் புகைப்படம் எடுததோம் அது காண வில்லை தலைவரை பார்த்த நாபகம் மட்டும் மறையவில்லை
இந்த புகைப்படம் மட்டும் என் இல்லதை இன்றும் அலங்கரித்து கொண்டுள்ளது