Malaimalar - 01-10-2015
http://i1234.photobucket.com/albums/...psc7oizxrc.jpg
http://i1234.photobucket.com/albums/...pst0oocb4r.jpg
Printable View
நடிகர் திலகம் 87-ஆவது பிறந்த நாள் சிறப்புப் பதிவு
'இல்லற ஜோதி'
http://i.ytimg.com/vi/SzXvWdOuYbk/hqdefault.jpg
வெளியான நாள் - 09.04.1954
கதை வசனம் பாடல்கள் – கண்ணதாசன்
'அனார்கலி' நாடக வசனம் – மு.கருணாநிதி
இசையமைப்பு – ஜி.ராமநாதன்
தயாரிப்பு – மாடர்ன் தியேட்டர்ஸ்
இயக்கம் – ஜி.ஆர். ராவ்
மேற்பார்வை – டி.ஆர்.சுந்தரம்
நடிகர் திலகத்தின் பதினோராவது காவியம்.
கதை:
நெட்டிலிங்கம் (கே.ஏ.தங்கவேலு) ஒரு ஏழை குமாஸ்தா. அவர் மனைவி அனந்தா (சி.கே.சரஸ்வதி). இருவருக்கும் மனோகர் (நடிகர் திலகம்) என்ற மகன். வாலிபன். எந்த வேலையும் பார்க்காமல் சதா சர்வ காலமும் நாடகம், கதை, கவிதை என்று கலைக்காகவே வாழும் கலாரசிகன். மற்றவர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்டவன். ஆனால் படிப்பறிவில்லாத தாய் தந்தையர் தன்னைப் புரிந்து கொள்ளவில்லையே என்ற ஆதங்கம் அவனுக்கு. அவன் பெற்றோர் அவன் நிலைமை கண்டு கவலை கொள்கின்றனர்.
கல்யாணமானால் சரியாகி விடுவான் என்று சொந்தத்தில் காவேரி (ஸ்ரீரஞ்சனி) என்ற பெண்ணைப் பார்த்து அவனுக்கு திருமணமும் செய்து வைக்கின்றனர். ஆனாலும் மனோகரனின் குணம் மாறவில்லை. மனைவியைக் கூட கண்டு கொள்ளாமல் காகிதமும், பேனாவுமாக நாடகம், கவிதை என்று கிடக்கிறான். மனைவி காவேரி கண்ணீர் வடிக்கிறாள்.
மருமகள் நிலைமை கண்டு மனோகரனின் பெற்றோர் கவலை கொள்கின்றனர். மனோகரனுக்கு பைத்தியம் என்றே முடிவு கட்டி தேவையே இல்லாமல் அவனுக்கு வைத்தியமும் பார்க்கின்றனர். நெட்டிலிங்கமும் தன் குமாஸ்தா வேலையை விட்டு விடுகிறார். அதனால் மனோகரன் ஒரு கம்பெனியில் கணக்காளனாக விருப்பமில்லாமல் பணிபுரிகிறான்.
காவேரி ஒருநாள் தன் கணவன் சேமித்து வைத்துள்ள கதை, நாடகம், கவிதைகளை அவனறியாமல் பழைய பேப்பர்காரனிடம் போட, அதில் ஒரு பேப்பர் பெருமாள் (பெருமாள்) என்ற புரபொசரிடம் கிடைக்கிறது. அவர் மகள் சித்ரலேகா (பத்மினி) மிகுந்த கலாரசிகை. அந்த பேப்பரில் சிறப்பான கவிதை எழுதப்பட்டிருப்பதைக் கண்டு சித்ரா மிகுந்த ஆச்சரியமும் சந்தோஷமும் அடைகிறாள். புரபொசர் மனோகரனைக் கண்டு பிடித்து வரச் செய்து அவனைப் பாராட்டி அவனை ஒரு நாடகமும் எழுதப் பணிக்கிறார், அவனுக்கு பலவகையிலும் உதவி செய்கிறாள் சித்ரா.
சித்ராவும், மனோகரும் சேர்ந்து 'அனார்கலி' என்ற நாடகத்தில் நடிக்கின்றனர். மனோகரின் 'சுகம் எங்கே' என்ற நாடகத்தை புத்தகமாக வெளியிட வேண்டிய உதவிகள் செய்கிறாள் சித்ரா. புத்தகம் அமோகமாக விற்பனை ஆகிறது. புத்தகத்திற்கான ராயல்டி தொகையாக நிறைய பணம் பதிப்பகத்தார் மூலம் மனோகருக்குக் கிடைக்கிறது. மனோகரை வேலையை விடச் சொல்லி அழைத்து வருகிறாள் சித்ரா. அவனுக்கு ஒரு வசதியான பங்களா ஒன்றைத் தந்து அதில் தங்கி நிறைய எழுதச் சொல்கிறாள். மனோகரும் நிறைய புத்தகங்கள் எழுதிப் புகழ் பெறுகிறான். பணம் சம்பாதிக்கிறான்.
இப்போது மனோகர் பெரும் செல்வந்தன். கார், வீடு, வசதி என்று அருமையான வாழ்க்கை. மனோகருக்கும், காவேரிக்கும் அழகான ஆண் குழந்தை ஒன்றும் பிறக்கிறது.
http://3.bp.blogspot.com/-B_I0HEgXBz...lara+Jothi.JPGhttp://ttsnapshot.net/out.php/i3503_illara-jothi12.jpghttp://ttsnapshot.net/out.php/i3504_illara-jothi123.jpg
கலைப்பித்து கொண்ட மனோகரும், சித்ராவும் ஒன்றுபட்ட கலா ரசனையால் தங்களை அறியாமல் ஒருவரையொருவர் காதலிக்கத் தொடங்குகிறார்கள். செய்வது தவறென்று தெரிந்தும் இருவரும் ஒருவரை ஒருவர் ஆத்மார்த்தமாக விரும்புகிறார்கள். சித்ரா மேல் கொண்ட காதலால் மனைவி காவேரியை வெறுக்கிறான் மனோகர்.
சித்ராவின் முறைமாப்பிள்ளை மோகன் (எஸ்.ஏ.அசோகன்) சித்ராவை விரும்புகிறான். ஆனால் சித்ரா அவனை வெறுக்கிறாள். மனோகர் சித்ரா காதல் காவேரிக்குத் தெரிய வந்து துடிதுடித்துப் போகிறாள் அவள். அதே போல் சித்ரா மனோகரை விரும்புவதை அறிந்து கொண்ட மோகன் சித்ராவைக் கண்டிக்கிறான். அது தவறென்று எடுத்துக் கூறுகிறான். அவனை எடுத்தெறிந்து பேசுகிறாள் சித்ரா.
சித்ரா, மனோகர் காதலை காவேரியிடம் வந்து எடுத்துச் சொல்கிறான் மோகன். தன் நிலைமையும், காவேரி நிலைமையும் மோசமான சூழ்நிலையில் இருப்பதை எடுத்துரைக்கிறான். இரு குடும்பங்களும் இதனால் சந்திக்கப் போகும் பிரச்சனைகளைப் பற்றியும் விரிவாக எடுத்துக் கூறுகிறான். ஆனால் எல்லாம் தெரிந்தும் கணவனை விட்டுக் கொடுக்காமல் பேசி அவனை அனுப்பி விடுகிறாள் காவேரி.
மனோகருடன் இதுபற்றி பேசுகிறாள் காவேரி. ஆனால் சித்ரா மேல் கொண்ட கண் மூடித்தனமான காதலால் அவளைத் துச்சமாக மதித்து பேசுகிறான் மனோகர்.
இரு குடும்பங்களிலும் புயல் வீசுகிறது. சித்ராவும் மனோகரும் வீட்டை விட்டு கிளம்பி ஓடிப் போக முடிவு செய்கின்றனர். இதைத் தெரிந்து கொண்ட காவேரி சித்ராவிடம் ஓடி வருகிறாள். தன் கணவனைத் தனக்கே தந்து விடும்படி அவள் காலில் விழுந்து மடிப்பிச்சை கேட்கிறாள். ஆனால் மனோகர் மீது கொண்ட தீவிரக் காதலால் சித்ரா முதலில் மறுக்கிறாள். தங்கள் காதல் 'இனக் கவர்ச்சியானால் உண்டாக வில்லை... அழகைக் கண்டு ஏற்படவில்லை....கலை ரசனையால் உதித்த காதல் அது' என்று கூறுகிறாள். இதனால் வேதனையுறும் காவேரி 'தன் கணவனே இனி தனக்கில்லை... இனி அவன் கட்டிய தாலி எதற்கு?' என்று தன் தாலியை கழற்ற எத்தனிக்கிறாள். அதைக் கண்டு பதைபதைக்கும் சித்ரா காவேரியிடம் நடந்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்பதோடல்லாமல் இனி தான் மனோகரைச் சந்திப்பதில்லை என்று சத்தியமும் செய்து தருகிறாள். தன் தந்தையின் இஷ்டப்படி வேறு வழி இல்லாமல் மோகனை திருமணம் செய்யவும் மனமே இல்லாமல் சம்மதமளிக்கிறாள் சித்ரா.
சித்ரா சொன்னபடி தன்னுடன் கிளம்பி வராமல் போனதால் அவளைத் தேடி அவள் வீட்டிற்கு வருகிறான் மனோகர். ஆனால் சித்ரா தான் காவேரியிடம் செய்து கொடுத்த சத்தியத்திற்காக அவனை சந்திக்காமல் தவிர்த்து விடுகிறாள். தன் காதல் வாழ்வு சிதைந்து போனதற்காக அனலிடைப் புழுவாகத் துடிக்கிறாள் அவள். சித்ராவைச் சந்திக்க முடியாமல் குழப்பத்துடன் திரும்பும் மனோகர் எதிர்பாராவிதமாக மோகனின் காரில் பலமாக அடிபடுகிறான். மரணப் படுக்கையிலும் சித்ரா பெயர் சொல்லிப் புலம்புகிறான். டாக்டர் சித்ரா வந்தால்தான் மனோகர் பிழைப்பான் என்று கூறுகிறார்.
தன் கணவன் உயிர் காக்க திரும்ப சித்ராவிடம் ஓடோடி வருகிறாள் காவேரி. தன் கணவனுக்கு அவள்தான் மருந்து என்று சித்ராவை கணவனைச் சந்திக்கும்படி அழைக்கிறாள் காவேரி. ஆனால் சித்ரா தான் செய்து கொடுத்த சத்தியத்தின்படி வர மறுக்கிறாள். தன் வாழ்வு சீர்குலைந்ததற்கு காரணம் காவேரிதான் என்று அவளை வாய்க்கு வந்தபடி பேசி ஆத்திரத்தில் அடித்தும் விடுகிறாள். மனோகரை மறக்கவும் முடியாமல், அவனை பார்க்கவும் முடியாமல் இருதலைக் கொள்ளி எறும்பாய் தவிக்கிறாள் சித்ரா. நடைபிணமாய் நடக்கிறாள்.
மோகன்தான் வேண்டுமென்றே காரை ஏற்றி மனோகரைக் கொலை செய்ய முயன்றான் என்றெண்ணி அவன் மீது கோபம் கொண்டு தனக்கு ஏற்பாடு செய்த திருமணத்தைத் தன் தந்தையிடம் சொல்லி நிறுத்தச் சொல்கிறாள் சித்ரா. விவரம் புரியால் விழிக்கும் புரபொசரிடம் சித்ராவுக்கு மனோகர் மேல் உள்ள காதலை கூறி அவரைக் கோபப் படுத்துகிறான் மோகன். புரொபசர் மிகுந்த கோபத்துடன் மனோகர் வீடு சென்று காவேரியிடம் மனோகர் செய்த காரியத்தை சொல்லி சீறுகிறார்.
காவேரி அவரிடம் நடந்த தவறுகளுக்கு தானும் புரபொசருமே காரணம் என்று கூறுகிறாள். 'ஆரம்பத்திலேயே சித்ராவையும், மனோகரையும் இரு குடும்பத்தாரும் கண்டித்திருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்காது' என்று கண்ணீர் சிந்துகிறாள். இப்போது எல்லை மீறி விட்டதாகவும், சித்ராவும், மனோகரும் தங்கள் காதலுக்காக தங்கள் இருவரின் உயிரையே அர்ப்பணிக்கும் நிலைக்கு ஆளாகி விட்டதால் அவர்கள் இருவரையும் சேர்த்து வைத்து மணமுடிக்கவும் புரபொசரிடம் மன்றாடுகிறாள் அந்த உத்தம மனைவி.
மனைவி என்ற தன் ஸ்தானத்தையே இழக்கத் துணிந்து தன் கணவனின் காதலை நிறைவேற்ற, அவன் உயிரைக் காபபாற்ற, அவனுடைய காதலியின் தந்தையிடம் மன்றாடும் அந்த மாசில்லா மாணிக்கத்தின் உணர்ச்சிகரமான உரையாடல்களை மரணப் படுக்கையில் இருந்து கேட்கும் மனோகர் மனம் திருந்துகிறான். தான் செய்த தவறுகளை எண்ணி வருந்துகிறான். தன் மாதரசியிடம் மன்னிப்புக் கேட்கிறான். இதுநாள்வரை தன் மனைவியைப் பற்றிப் புரிந்து கொள்ளாமல் போய் விட்டோமே என்று புலம்புகிறான். இனி சித்ராவை தன் தங்கையாக நினைப்பேன் என்றும் புரொபசரிடம் உறுதி கூறுகிறான்.
இதற்கும் மனோகரனின் நிலைமை கேட்டு துயருறும் சித்ரா இனி வாழ வேண்டாம் என்று முடிவெடுக்கிறாள். தன் காரை எடுத்துக் கொண்டு உயிரை மாய்த்துக் கொள்ள வேகமாக செல்கிறாள். அவளைத் தேடி வரும் மனோகர் தன் காரில் அவளைப் பின் தொடர்கிறான். ஆனால் சித்ரா காரை மலைப் பாதையில் மோதி அடிபடுகிறாள்.
மனோகர் அவளைக் காப்பாற்றி மோகனுக்கும், அவளுக்கும் இடையே வந்து குழப்பம் விளைவித்ததற்காக மன்னிப்புக் கோருகிறான். மேலும் சித்ராவை மோகனை மணந்து கொள்ளும்படியும் வேண்டுகிறான். சித்ராவும் முழுமனதுடன் சம்மதிக்கிறாள். குழப்பங்கள் முடிவுக்கு வந்தன. சித்ராவைத் தங்கையாக ஏற்றுக் கொள்கிறான் மனோகர்.
பஞ்சும் நெருப்புமாக பற்றிக்கொண்ட கணவன் மனோகர், சித்ரா காதலை தக்க தருணத்தில் காவேரி நீராய் வந்து அணைத்து, இருவரையும் நல்வழிப்படுத்தி, இரு குடும்பங்களும் இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு வர இல்லற ஜோதியாய்த் திகழ்கிறாள் காவேரி.
கலையின் மீது தீவிர காதல் கொண்ட, ஒரே ரசனையில் ஊறிய இரு உள்ளங்கள் தங்கள் சொந்தங்களை மீறி முறையற்ற காதலை அறியாமல் புரிவதால் அதனால் இரு குடும்பங்களிலும் ஏற்படும் குழப்பங்களை அற்புதமாகப் பறை சாற்றுகிறது இந்தப் படம். கலை மட்டும் வாழ்க்கையல்ல...கலை ரசனை மட்டுமல்ல... எல்லாவற்றையும் மீறி 'மாசற்ற அன்பு என்ற ஒன்று இருக்கிறது.... அது அனைத்தையும் வெற்றி கொள்ளும்' என்பதை அருமையாக உணர்த்துகிறது இப்படம்.
முள்ளின் மேல் போட்ட சேலையை எடுப்பது போன்ற துணிச்சலான கதை. அதை அற்புதமாக அதைக் கையாண்டிருக்கிறார் இயக்குனர் ஜி.ஆர்.ராவ். அதுவும் அந்தக் காலத்திலேயே. இயக்கம் மேற்பார்வை மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரம். பின்னாட்களில் பாலச்சந்தர் அவர்கள் இயக்கி பெருவெற்றி பெற்ற சிந்து பைரவி' படத்திற்கு இப்படம் முன்னோடி எனலாம்.
மனோகராக நடிகர் திலகம்.
http://i1.ytimg.com/vi/w3Bl1TQn2JA/hqdefault.jpghttps://i.ytimg.com/vi/ZTOhmCxyqIM/hqdefault.jpghttp://i.ytimg.com/vi/cOnSA3fwuWA/hqdefault.jpg
மனைவிக்கும் காதலிக்கும் இடையே திண்டாடும் பரிதாப பாத்திரம் நடிகர் திலகத்திற்கு. தன் கலைரசனை பெற்றவர்களுக்கும், ஏன் மனைவிக்கும் கூட தெரியவில்லை என்று வேதனைப்படுவதாகட்டும்...
தன் ரசனைக்கேற்ற ரசிகை கிடைத்தவுடன் கொஞ்சம் கொஞ்சமாக அவளிடம் தன் வசம் இழக்கும் பாங்கைக் காட்டுவதில் ஆகட்டும்....
காதலியுடன் சேர்ந்து நடிக்கும் 'அனார்கலி' நாடகத்தில் சலீமாக தூள் பரத்துவதாகட்டும்...
காதலி தன்னை மன்னர் அக்பர் பாதுஷாவின் மகன் என்று அறிந்த போது அவளை சமாதானப் படுத்துவதாகட்டும்...
அனார்கலி உயிருடன் சமாதியில் வைக்கப்பட்ட பிறகு நெஞ்சு துடிக்க காதல் மகத்துவத்தைப் பேசி அவள் மேல் தான் கொண்டிருந்த அன்பை உணர்ச்சிகளின் பிழம்பாய் வெளிப்படுத்துவதாகட்டும்....(அனார்கலி உயிருடன் சமாதி வைக்கப்பட்ட பிறகு அந்த சமாதியின் அருகே குரல் வெடித்து அவர் கதறும் வசனங்கள் அருமையிலும் அருமை. குரல் ஏற்ற இறக்கங்கள் அற்புதம். 'மொகல்-ஏ -ஆசம்' இந்திப்படத்தில் படம் முழுக்க பொம்மை போல் சலீமாக நடித்த திலீப்குமார் எங்கே? பத்தே நிமிடங்களில் 'அனார்கலி' ஓரங்க நாடகத்தில் நம்மைக் கட்டிப் போட்ட நடிகர் திலகம் எங்கே?)
'கேட்பதெல்லாம் காதல் கீதங்களே' கனவுப் பாட்டில் திருவிளையாடல் 'பாட்டும் நானே... பாவமும் நானே' சிவாஜிகள் போல இரு சிவாஜிகள் வயலின் மற்றும் வீணை வாசிக்கும் அழகாகட்டும்...
'களங்கமில்லாக் காதலிலே' பாடலில் அழகு சலீமாக பத்மினியுடன் சேர்ந்து நம் உள்ளங்களைக் கிறங்கடிப்பதாகட்டும்...
காதலி மீது உள்ள வெறியால் மனைவியை வெறுத்து ஒதுக்கும் வெறுப்பை சம்பாதிப்பதாகட்டும்....
இறுதியில் மனைவியின் தூய்மையான அன்பைப் புரிந்து கொண்டு அவளிடம் கதறி தன் குற்றங்களுக்கு மன்னிப்புக் கேட்பதாகட்டும்...
'சிவாஜி சிவாஜிதான் என்று தன் திரைப்பட வரலாற்றில் பதினோராவது முறையாக நிரூபிக்கிறார் இந்த அற்புத திறமைகள் கொண்ட மாமனிதர்.
கலைவெறி கொண்டவர்கள் குடும்பம், அது, இது என்று எதிலும் பிடிப்பு இல்லாமல் இருப்பார்கள் என்பதை அச்சு அசலாக பிரதிபலிக்கிறார் இந்த நடிப்பின் இமயம். தன் கவிதையை முதன் முதலாக பத்மினி ரசித்துப் பாராட்டும் போது அந்த முகத்தில் பரவும் சந்தோஷ ரேகைகளைப் பார்க்க வேண்டுமே! தங்கவேலுவுடன் சேர்ந்து நகைச்சுவைக் காட்சிகளிலும் தான் திலகம்தான் என்று நிரூபிக்கிறார்.
நடிகர் திலகத்திற்குப் பிறகு நம் மனதில் இடம் பிடிப்பவர்கள் சித்ரலேகாவாக வரும் பத்மினியும், காவேரியாக வரும் ஸ்ரீரஞ்சனியும்.
பத்மினி
http://i1.ytimg.com/vi/L-zuhcyBblY/hqdefault.jpg
நல்ல கலாரசிகையாக நடிகர் திலகத்திடம் கொஞ்சம் கொஞ்சமாகக் காதல் வயப்படுவதும், அதைத் தட்டிக் கேட்கும் மோகனான அசோகனை அலட்சியப்படுத்துவதும், ஸ்ரீரஞ்சனி நடிகர் திலகத்தை விட்டுத் தரும்படி கெஞ்சும் போது விட்டுக் கொடுத்தால் காதல் போய்விடுமே என்றும், விட்டுக் கொடுக்காவிட்டால் பழிபாவத்திற்கு ஆளாக வேண்டுமே என்றும் இரண்டு மன நிலைகளில் குழம்புவதும், கணவனின் உயிருக்காக ஸ்ரீரஞ்சனி மன்றாடும் போது தன் நிலைமையை எண்ணி எரிமலை போல் வெடித்து குமுறுவதும் 'பலே பத்மினி' என்று சொல்ல வைக்கிறது.
எல்லாவற்றிக்கும் சிகரம் வைத்தாற் போன்று நடிகர் திலகத்துடன் அழகு சுந்தரி அனார்கலியாக வெகு பொருத்தமாக ஜோடி சேர்ந்து நம்மை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி, உறங்க விடாமல் செய்கிறார் பத்மினி. ராஜா மான்சிங்கிடம் தன் காதலை விட்டுத் தர முடியாது என்று ஆத்திரம் பொங்கக் கூறும் போதும், ஒரு சிப்பாயாக தன்னை ஏமாற்றிய சலீமின் மீது பாயும் பாய்ச்சலிலும் தான் நாட்டியத்தில் மட்டுமல்ல நடிப்பிலும் பேரொளி என்று நிரூபிக்கிறார் பத்மினி. நடிகர் திலகத்திற்கு சரியான இணை. பாத்திரத்தைப் புரிந்து கொண்டு பட்டை கிளப்புகிறார் பத்மினி.
ஸ்ரீரஞ்சனி
http://i.ytimg.com/vi/Mg396GrxYQk/hqdefault.jpg
'பராசக்தி'யில் குணசேகரனின் தங்கை கல்யாணியாய் நம் நெஞ்சில் நிலைத்தவர் 'இல்லற ஜோதி' யில் இல்லற ஜோதியாக வெளுத்து வாங்குகிறார்.. இவருக்கு இத்தகைய வேடம் அல்வா சாப்பிடுவது போல, குடும்பப் பாங்கான முகம் வேறு இவர் பாத்திரத்திற்கு வலு சேர்க்கிறது. தன் கணவனை விட்டு விடும்படி பத்மினியிடம் மன்றாடும் போது கல்லையும் கரைய வைக்கிறார். கணவன் காலடியில் குழந்தையை போட்டு இதை விட சிறந்த கலை கிடையாது என்று வாதாடும் கட்டம் அற்புதம். இவர் சிரித்துப் பாடும் அபூர்வ பாடல் காட்சியும் இப்படத்தில் உண்டு. (எல்லாப் படத்திலேயும் அழுகாச்சி ரோல்களே பண்ணியவர்)
மோகனாக அசோகன் இளமையாக வருகிறார். வில்லனா அல்லது நல்லவனா என்று சற்றே குழப்பமான பாத்திரம். நடிகர் திலகத்தின் தந்தையாக 'டணால்' தங்கவேலு 'மிஷ்டேக்' என்று அடிக்கடி கூறி நம்மை விலா நோக சிரிக்க வைக்கிறார். நடிகர் திலகத்திற்கு தந்தையாக அவர் அந்த இளம் வயதில் 'பணம்' படத்திற்குப் பிறகு நடித்தார். அவர் மனைவியாக சி.கே.சரஸ்வதி வழக்கத்திற்கு மாறாக நல்ல பெண்மணியாக, தங்கவேலுவின் மனைவியாக வருகிறார்.
'அன்பு' படத்திற்குப் பிறகு 'அனார்கலி' ஓரங்க நாடகம் இப்படத்தில் இடம் பெற்று இன்றுவரை அனைவரது நெஞ்சங்களிலும் நீங்கா இடம் பெற்று திகழ்கிறது. கே.கே. சௌந்தர் என்ற குணச்சித்திர நடிகர் இப்படத்தில் இடம் பெறும் 'அனார்கலி' நாடகத்தில் ராஜா மான்சிங்காக நடித்து மிகவும் புகழ் பெற்றார்.
மற்றும் கே.கே.பெருமாள், திருப்பதிசாமி, கொட்டாப்புளி, ராமாராவ் ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.
'கல்யாண வைபோக நாளே'
'பார் பார் பார்... இந்த பறவையைப் பார்' (பத்மினியின் அற்புத நடனத்தில்)
'சிட்டுப் போலே வானகம் எட்டிப் பறந்தே'
'பெண்ணில்லாத ஊரிலே'
'களங்கமில்லா காதலிலே' ('அனார்கலி' நாடகத்தில் சலீம், அனார்கலி காதல் பாட்டு)
'கேட்பதெல்லாம் காதல் கீதங்களே' (நடிகர் திலகம் இருவராக வீணை, மற்றும் வயலின் வாத்தியங்களை வைத்து இசைக்கும் அற்புதம்)
'சிறுவிழி குறுநகை சுவைதரும் மழலையின்' (அருமையான தாலாட்டுப் பாடல்)
'கண்கள் இரண்டில் ஒன்று போனால்'
'கலைத் தேனூறும் கன்னித் தமிழ் பேசுவேன்'
'உனக்கும் எனக்கும் உறவு காட்டி' (1956 இல் எம்ஜியார் நடித்து வெளிவந்த 'மதுரை வீரன்' படத்தில் பி.பானுமதி குரலில் ஒலிக்கும் 'அவர்க்கும் எனக்கும் உறவு காட்டி' பாடல் இந்தப் பாடலை அப்படியே ஒத்துப் போகும்).
என்ற காலத்தை வென்ற கலக்கல் பாடல்கள். ஜி.ராமனாதனின் தேனூறும் இசை இப்படத்தின் மிகப் பெரிய பலம் என்றும் கூறலாம். பி.லீலா, ஜிக்கி, ஸ்வர்ணலதா, காந்தா, கஜலக்ஷ்மி, ஆண்டாள், ஏ.எம்.ராஜா இவர்கள் குரல் தேனமிர்தமாய் இப்படத்தின் பாடல்களில் ஒலித்தது.
கதை, வசனம், பாடல்கள் கவிஞர் கண்ணதாசன். வசனங்கள் புரட்சிகரமாக மிகவும் கூர்மையாக எழுதப்பட்டிருந்தன.
மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த இப்படத்தை ஜி.ஆர்.ராவ் இயக்கியிருந்தார். டி ஆர்.சுந்தரம் அவர்கள் இயக்க மேற்பார்வை பணியினைச் செய்திருந்தார்.
http://ttsnapshot.net/out.php/i3502_illara-jothi1.jpg
இப்படத்தைவிட இப்படத்தில் இடம் பெற்ற 'அனார்கலி' ஓரங்க நாடகம் மிகப் புகழ் பெற்று விட்டது. இசைத்தட்டு வடிவிலும் வெளிவந்து விற்பனையில் சக்கை போடு போட்டது. இலங்கை வானொலியில் இந்நாடகத்தை அடிக்கடி ஒலிபரப்பி நாம் கேட்டு மகிழ்ந்ததுண்டு.
நல்ல வெற்றியைப் பெற்ற படமும் கூட.
'இல்லறஜோதி' யில் இடம் பெற்ற புகழ் பெற்ற 'அனார்கலி' ஓரங்க நாடகக் காட்சி
https://www.youtube.com/watch?featur...&v=SzXvWdOuYbk
களங்கமில்லாக் காதலிலே'..... காலத்தால் அழியாத கானம்
https://www.youtube.com/watch?feature=player_embedded&v=w3Bl1TQn2JA
திரு.கோபால்,
நம்நாடு - சிவந்தமண் விஷயம் குறித்து நான் விளக்கம் கேட்டிருந்தது திரு.பம்மல் சுவாமிநாதன் அவர்களை. உங்களை அல்ல. பதில் சொல்ல வேண்டியது அவர்தான். நீங்கள் அல்ல. பிறந்த நாள் வாழ்த்துக்களுக்கு நன்றி தெரிவிக்க வந்த அவர், அதுபற்றி எதுவும் சொல்லாத நிலையில், நானும் மேற்கொண்டு அதை கிளற விரும்பாமல் விட்டுவிட்டேன்.
திரு.எஸ்.வி. மூலம் எனக்கு கிடைத்த தகவலைத்தான் நான் பகிர்ந்து கொண்டேன். எனவே, நான் பொய் சொன்னேன் என்ற பேச்சே எழவில்லை. ‘அப்படியானால், எஸ்.வி.பொய் சொல்லியிருக்கிறார்தானே?’ என்று கேட்காதீ்ர்கள். அவர் மீது எனக்கு நம்பிக்கை உண்டு. உடனே, ‘அப்படியென்றால் நான் பொய் சொல்கிறேனா?’ என்று கேட்காதீர்கள். யாரையும் மனம் நோகுமாறு குற்றம் சாட்டி எனக்கு பழக்கமில்லை. மேற்கொண்டு இந்த விவகாரத்தை தோண்டவும் விரும்பவில்லை.
தேவையற்ற விவாதங்களால் எனக்கு கவனம் சிதறுகிறது. உருப்படியாக பதிவிட முடியவில்லை. திரு.ராகவேந்திரா சாரின் நேற்றைய உறுதிமொழியை பார்த்திருப்பீர்களே? இணக்கமாக ஒற்றுமையுடன் செயல்பட்டு, தரமான பதிவுகளை இடுவோம். தேவையற்ற ஒப்பீடுகளையும் விவாதங்களையும் தவிர்ப்போம்.
நல்ல நல்ல பிள்ளைகளை... பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும்.
‘ஒண்ணாயிருக்க கத்துக்கணும், இந்த உண்மையை சொன்னா ஒத்துக்கணும்...’ பாடலும்தான். நீங்கள் கேட்டதில்லை?
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
நண்பர்களே!
நடிகர் திலகத்தின் பிறந்தநாளை முன்னீட்டு இன்று எங்கள் ஆபீஸில் நண்பர்களுக்கு ஒரு சின்ன பார்ட்டி (அதாவது ஸ்வீட், காரம், காபி, பழம் என்று) ஒன்று வைத்தேன். இருபது நண்பர்களுக்கு மேல் கலந்து கொண்டனர். ஒரு சில அதிகாரிகளும் கலந்து கொண்டனர். அனைவரும் தலைவரின் ரசிகர்களே.
அனைவரும் திலகத்தின் புகழ் பாடி பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். அனைத்து நண்பர்களும் ஒன்றாக சேர்ந்து மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ்ந்தோம்.
அனைவரும் கர்ணன் டிஜிட்டல் மெருகேற்றம் மீண்டும் எப்போது என்று துளைத்து எடுத்து விட்டனர். அது மட்டுமல்லாமல் நமது திரிக்கும் வாழ்த்துக்களை சொல்லி வாழ்த்தினர்.
நிகழ்ச்சியில் இருந்து சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு.
http://i1087.photobucket.com/albums/...002_111229.jpg
http://i1087.photobucket.com/albums/...002_111124.jpg
http://i1087.photobucket.com/albums/...002_111140.jpg
http://i1087.photobucket.com/albums/...002_111103.jpg
http://i1087.photobucket.com/albums/...002_111050.jpg
http://i1087.photobucket.com/albums/...002_111038.jpg
http://i1087.photobucket.com/albums/...002_111229.jpg
http://i1087.photobucket.com/albums/...002_111254.jpg
"திரியின் ஜோதி"
வாசு சாரின்
"இல்லறஜோதி"
அருமை.
செந்தில்வேல்,
நடிகர் திலகம் பிறந்த நாளில் கிடைத்தற்கரிய அபூர்வ ஆவணங்களை அளித்து திக்குமுக்காடச் செய்து விட்டீர்கள். நன்றி! திரிக்குக் கிடைத்த சின்ன பம்மலார் நீங்கள். உங்கள் உழைப்பு பாராட்டுக்குரியது.
http://www.happylounge.net/index.php...ar6-jpg.11048/
எங்கள் மக்கள் தலைவரை நீங்கள் அடையாளம் காட்டி தமிழகத்திற்கும் கிங்மேக்கராக விளங்கியிருக்க வேண்டும் என்கிற ஓர் ஆதங்கத்தைத் தவிர வேறெந்த குறையும் சொல்ல முடியாத பத்தரை மாற்றுத் தங்கம் நீங்கள். அந்தக் குறை கூட ஒரு கட்சிக்காரனின் குறையே தவிர ஒரு தமிழ்நாட்டின் குடிமகனைப் பொறுத்த வரையில் உங்கள் ஆட்சியே தமிழகத்தின் பொற்காலம். தொடர்ச்சியாக ஒன்பது ஆண்டு காலம் ஆண்ட ஒரே தலைவனும் நீயே. தமிழகத்தின் தனிப்பெரும் சிறப்பே வேளாண்மை. அந்த வேளாண்மைத் துறையில் தமிழகம் தலைசிறந்து விளங்கிய பொற்காலம் உனது ஆட்சிக்காலத்தில் தான். அதே போல தொழில் துறையில் தமிழ்நாடு தலைசிறந்து விளங்கியதும் உன் பொற்கால ஆட்சியில் தான். இன்றும் தலைநகர் சென்னையின் கிண்டி, அம்பத்தூர் தொழிற்பேட்டைகள் தான் தொழில்துறைக்கு வாழ்வளித்துக்கொண்டுள்ளன.
இனி ஒரு காமராஜரைத் தமிழகம் காணாது, இனி ஒரு பொற்காலம் தமிழகத்தில் வாராது..
உன் நினைவு ஒன்றே எங்களுக்கு என்றும் துணை.
எங்கள் மக்கள் தலைவர் வணங்கிய தெய்வம் நீ, அதனால் எங்களுக்கும் தெய்வம் நீ
EXCELLENT VASUDEVA SIR Your way of celebration of NT birthday party. not only you have honoured NT but also millions of fans like us.
THREE CHEERS
http://i1146.photobucket.com/albums/...psczeeqxdz.jpg
வாசு சார்
திரியின் ஜோதி என செந்தில் வேல் சொன்னது மிகவும் பொருத்தம். தாங்கள் காட்டும் ஜோதியின் வெளிச்சத்தில் தான் இத்திரியின் பயணம் தொடர்ந்து செல்கிறது. திரியில் இருள் சூழாமல் காக்கும் இணைய ஜோதி..
டால்மியாபுரம் பெயர் மாற்றப் போராட்டத்தில் கலந்து கொண்டு வழக்குச் செலவுக்காக அல்லாடிக்கொண்டிருந்த நேரத்தில் இல்லற ஜோதி வாய்ப்பு வந்த்தாக கவியரசர் தன்னுடைய சுயசரிதம் நூலில் குறிப்பிட்டுள்ளதாக மேலே காணப்படும் நூலில் திரு இராம. கண்ணப்பன் கூறியுள்ளார். கவியரசர் எழுதிய அனார்கலி நாடகம் உள்பட இல்லற ஜோதி திரைப்படத்தின் கதை வசனம் இந்நூலில் இடம் பெற்றுள்ளது.
ஒரே ஒரு பத்தி மட்டும் ஒரு உதாரணத்திற்காக கீழே தரப்படுகிறது.
மலர்க்காடு .. காட்சி 1
சலீம்...(கைமலரில் முகமலர் தாங்கி) - மலர் சிரிக்கிறது; மணம் பறக்கிறது; தும்பி இசைக்கிறது; சுவைக்கனி துடிக்கிறது; கருநாக வரவு கண்டு பிறை அஞ்சி நிற்கிறது - உன் முகத்திலே!
மேற்காணும் புத்தகத்தில் பக்.47.
வாசு சார்
நெய்வேலியின் நெய் மணம் கமழும் இனிப்பு சுவைப்போர்களுக்கு மட்டுமல்ல, படிப்போருக்கும் உவகையூட்டுகிறது. மக்கள் தலைவரின் பிறந்த நாளை அருமையான குழாமுடன் கொண்டாடியுள்ளது பேருவகையூட்டுகிறது.
தங்களுக்கு என் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
வாசு சார்
நடிகர்திலகத்தின் பிறந்த நாளை வித்தியாசமாக சிறப்பு சேர்த்து பெருமைப்படுத்தியமைக்கு நன்றிகள்!
செந்தில்
http://i1146.photobucket.com/albums/...pscsfmjigb.jpg
http://i1146.photobucket.com/albums/...psybzajdse.jpg
கோவை அர்ச்சனா குழு நண்பர்கள் நடிகர் திலகத்தின் பிறந்த நாளையொட்டி வெளியிட்ட போஸ்டரின் நிழற்படம். நன்றி திரு பிரபு, கோவை.
எனது இனிய சகோதரர் திரு. குமுதம் மேஜர் தாசன் அவர்களை தலைவராக கொண்டு செயல் பட்டு வரும் "சினிமா பத்திரிகையாளர் சங்கம்" அதன் 60வது ஆண்டு விழாவை, நேற்று (02-10-2015 வெள்ளிக்கிழமை) மாலை சென்னை சர் பி. டி. தியாகராயர் அரங்கில், வெகு விமர்சையாக, சீரும் சிறப்புமாக கொண்டாடியது. விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக நடிகர்கள் திரு. கமலஹாசன், சிவகுமார் மற்றும், நடிகை மனோராமா ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவிற்கு வருகை தந்து சிறப்பித்த இதர கலைஞர்கள் - இயக்குனர் - நடிகர் ராகவா லாரன்ஸ், இயக்குனர் - ஏ. ஆர். முருகதாஸ், நடிகை நமீதா, நடிகை எஸ். என். பார்வதி, நடிகை ஜெயசித்ரா மற்றும் நடிகைகள் ஜோதிலட்சுமி - ஜெயமாலினி சகோதரிகள் . விழாவில் மூத்த பத்திரிகையாளர்கள் ஐவர் திருவாளர்கள் நாகை தருமன், பேசும்படம் சம்பத்குமார், பொம்மை சாரதி, பிலிம் நியூஸ் ஆனந்தன், ராண்டார் கை கவுரவிக்கப்பட்டனர். இயக்குனர் திரு. ராகவா லாரன்ஸ் அவர்கள் இந்த ஐந்து பத்திரிகையாளர்களுக்கும் தலா ரூபாய் 50,000/- வழங்குவதாக மேடையில் அறிவித்தார். உலக நாயகன் திரு. கமலஹாசன் அவர்களும் தன் சார்பாக தலா ரூபாய் ஒரு லட்சம் வழங்குவதாக பலத்த கரவொலிக்கிடையே அறிவித்தார்.
இந்த விழாவினையொட்டி வெளியிடப்பட்ட சிறப்பு மலரிலிருந்து , சில பகுதிகள் - திரி அன்பர்கள் மற்றும் பார்வையாளர்கள் கவனத்துக்கு :
http://i60.tinypic.com/2epk4mb.jpg
http://i57.tinypic.com/ea4eq9.jpg
காண்போர் வியக்கும் வண்ணம், சிறப்பு மலரை அற்புதமாக வடிவமைத்த திரு. மேஜர் தாசன் அவர்களுக்கும், அவருக்கு தோளோடு தோளாக நின்று கடுமையாக உழைத்த செயலாளர் திரு. கிருஷ்ணன் குட்டி அவர்களுக்கும் பொருளாளர் திரு. பாலேஷ்வர் மற்றும் இதர அன்பர்களுக்கும், இத்தருணத்தில் பாராட்டுக்கள் கலந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்..
பல அரிய தகவல்கள் இடம் பெற்றிருக்கும் இந்த சிறப்பு மலர், சினிமா ரசிகர்கள் போற்றி பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம். இந்த மலருக்கு நன்கொடை ரூபாய் 200 மட்டும்.
மலர் வேண்டுவோர் நாட வேண்டிய தொலைபேசி எண் : 044-23720943.
,
சினிமா பத்திரிகையாளர் சங்க ஆண்டு விழா மற்றும் மலர் பற்றிய தகவலுக்கு நன்றி திரு செல்வகுமார் அவர்களே.
https://scontent.fdel1-2.fna.fbcdn.n...58&oe=568CD835
Courtesy: Our dear FB friend R.S.Sivaji - from his FB page.
தூத்துக்குடி மாவட்டத்தில், நடிகர் சிவாஜி கணேசன் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
http://img.dailythanthi.com/Images/A...day_SECVPF.gif
Read at:
http://www.dailythanthi.com/News/Dis...n-Birthday.vpf
Vasu- Amazing.Wish I participated.
Murali- Awaiting further on 1st Oct.
Chandra- What about your planned one with Congress?Awaiting details.
Dear Ragavendhar,
Congrats for the recognition and accolades you received from the Family.I am proud of it though I don't see eye to eye with you on many matters. If the family recognizes sivaji peravai and Mr.Chandrasekar , It will be a good stepping stone towards the unity of our worshipper fans to have our flags flying high. But your untainted devotion and love for sivaji is never questioned. Congrats again.
கோபால்
பாராட்டுக்களுக்காகவோ அல்லது வேறேனும் ஆதாயம் எதிர்நோக்கியோ நான் எந்தக்காலத்திலும் நடிகர் திலகத்தின் புகழ்பாடும் பணியில் ஈடுபடவில்லை. இதை நான் ஆத்மார்த்தமாக செய்கிறேன். நீங்களெல்லாம் ஒரு மூன்று நான்கு வருடங்களாகத் தான் என்னைப் பார்க்கிறீர்கள். கிட்டத்தட்ட நாற்பது வருடங்களாக நடிகர் திலகத்தின் புகழ் பாடும் பணியில் ஈடுபட்டுள்ளேன். நீங்கள் யாரைப் பாராட்ட வேண்டுமென நினைத்தாலும் பாராட்டுங்கள். அதை யாரும் கேட்க முடியாது. மன்றங்களைக் குறை சொல்ல வேண்டாம். முதன் முதலில் மன்றம் ஆரம்பித்த காலத்தில் பிறந்தே இருக்காதவர்களெல்லாம் நடிகர் திலகத்தின் புகழ் பாடுவதை அறிய மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால் அதற்காக சிவாஜி மன்றங்களைக் குற்றம் சாட்டுவதை நிறுத்துங்கள். அதைக் குறை சொல்லும் தகுதி உங்களுக்கு உள்ளதாக நான் நினைக்கவில்லை. குறை சொல்லி விட்டாலே நீங்கள் சொல்வதெல்லாம் சரியாகி விடாது. இதனை கவனம் வைத்துக்கொண்டு பாராட்டும் பதிவுகளை மட்டும் போட்டு விட்டுப் போங்கள். மீண்டும் மீண்டும் இங்கு சர்ச்சைகளை உருவாக்குவதே வேலையாக வைத்திருக்க வேண்டாம். உங்களுக்கு எத்தனையோ அலுவல்கள் இருக்கலாம், டென்ஷன் இருக்கலாம். அதைப் போக்கும் மருந்து நடிகர் திலகம் மட்டுமே. அவர் புகழைப் பாடுங்கள், அவருக்கு தொண்டாற்றுவோரைப் பாராட்டுங்கள், குறை சொல்லும் வேலை மட்டும் வேண்டாம். இன்றைக்கு சிவாஜி ரசிகர்கள் லட்சக்கணக்கில் இன்னும் அப்படியே உள்ளனரென்றால் அது நடிகர் திலகமே அங்கீகரித்து வழிகாட்டி நடத்திய சிவாஜி மன்றங்களினால் என்பது மறுக்க முடியாத உண்மை. நேரம் வரும் போது மன்றங்களின் முக்கியத்துவம் தெரிய வரும்.
இதற்கு மேல் விவாதங்களை வளர்க்க வேண்டாம்.
நடிகர் திலகத்தின் புகழ் பாடவும் அவருக்குத் தொண்டாற்றுவோரைப் பாராட்டவும் மட்டுமே இத்திரியை நாம் பயன்படுத்துவோம். எதிர்மறையான விமர்சனங்கள் வேண்டாம் என மீண்டும் மீண்டும் தாங்கள் உட்பட எல்லோரையும் கேட்டுக் கொள்கிறேன்.
மீண்டும் தனி நபர் தாக்குதல் ?
முதுகெலும்பு
வாய் மூடு
முரளி சார்
என்ன செய்ய போகிறீர்கள் ? கோபாலின் தாக்குதல் உங்களுக்கு உடன்பாடா ?
முடிவு செய்யுங்கள் .
Gopal,
Any attack on any indivudal in any format or offensive remarks is totally no no in this forum, which you are well aware of. It is unfortunate that you have chosen to do things that are not within the accepatable parameters. The language used by you is also highly condemnable. It is high time that these type of postings are avoided by you.
The members here would always like to see Gopal as the author of unique thread School of Acting and hope you respect other people's feelings atleast from now.
Regards
http://moviegalleri.net/wp-content/g...rs_9d0cc9c.jpg
திருச்சி ஊர்வசி குளிர்சாதன திரையரங்கில் 02.10.2015 முதல் வெற்றி நடை போடுகிறது, டிஜிட்டல் வடிவில் நடிகர் திலகத்தின் மாபெரும் வெற்றித் திரைக்காவியம்
வீரபாண்டிய கட்டபொம்மன்.
தினசரி 4 காட்சிகள்.
தகவல் திரு அண்ணாதுரை, சிறப்பு அழைப்பாளர், அகில இந்திய சிவாஜி மன்றம்.
நன்றி முரளி சார்
ஒரு விளக்கம்
திரு.கோபால் சார் / திரு.R .K .S சார்,
தங்களுடைய APPRECIATION க்கு நன்றி.
நான் எப்போதுமே சர்ச்சைப் பதிவுகளை பதிவிடுவதில்லை, என்னைத் தொடர்புப் படுத்தி பதிவுகள் வராதவரை.. நான் பாராட்டை எதிர்ப்பார்த்தோ, அல்லது சிலருடைய அங்கீகாரத்தை எதிர்பார்த்தோ இந்தப் பணியை செய்யவில்லை. காலத்தின் கட்டாயத்தால், இப்போதுகூட சிவாஜி மன்றத்தில் தொடரும் சில நண்பர்களின் விருப்பத்தின், வேண்டுகோளின் அடிப்படையில் தொடங்கப்பட்ட சிவாஜி சமூகநலப்பேரவை என்ற அமைப்பை, பல்வேறு எதிர்ப்பு, ஏச்சுக்களுக்கிடையேயும் நடிகர்திலகம் புகழ் பாடுவது ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு நடத்திவருகிறேன். இதனை, சிலர் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் அதற்காக வருத்தப்பட மாட்டேன்.
நண்பர் ராகவேந்திரன் அவர்கள், தன்னுடைய சிவாஜி மன்ற இணையதளம் nadigarthilagam.com மூலம், (சிவாஜி பேரவையின் பணிகளைத் தவிர) எல்லா அமைப்புகளின் பணிகளை எல்லாம் பதிவிட்டு, சிவாஜி மன்றத்தின் / நடிகர்திலகத்தின் புகழ் பாடுவதை யாரும் குறைத்து மதிப்பிடமுடியாது. அது அவரது தனிப்பட்ட உரிமை. மன்றம் ஆரம்பிக்கப்பட்டபோது, பிறந்தேயிருக்காத நான் நடிகர்திலகத்தின் புகழ் பாடுவதைக் கண்டு அவர் மகிழ்ச்சியடைவதே எனக்குப் பெருமையாக உள்ளது.
ஒரு பொது அமைப்பு என்று வந்துவிட்டால், பாராட்டையும் அதேசமயத்தில் விமர்சனத்தையும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். அந்த வகையில், என்னை விமர்சனம் செய்வதையும், பாராட்டுவதையும் சரிசமமாக வைத்துப் பார்த்து அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி.
டியர் சந்திரசேகர்
கோபால் ஒப்பீடு செய்ததால் அவருக்கு நான் விளக்கமளிக்கவேண்டியுள்ளது. மன்றம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் பிறந்தே யிருக்காதவர்கள் என்பது பல புதிய இளைய தலைமுறை ரசிகர்களைப் பாராட்டுவதற்கான உள்ளன்போடு கூடிய வார்த்தைகளாகும். அதில் தாங்களும் உண்டு. அதே போல் நானும் கூட மன்றம் ஆரம்பித்த காலத்தில் விவரம் அறியாத சிறு குழந்தையாகத் தான் இருந்திருப்பேன். இது எனக்கும் பொருந்தும்.
அமைப்பு ரீதியாக கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் கூட, நடிகர் திலகத்தின் புகழ் பரப்பும் பணியில் தங்களுடைய தனிப்பட்ட பங்களிப்பினை நான் பாராட்டத் தயங்கியதேயில்லை. தங்களுடன் கருத்து வேறுபாடுகளை நேருக்கு நேர் சொல்லியிருக்கிறேன், அதே போல நடிகர் திலகத்தின் பால் தங்களுக்குள்ள ஈடுபாட்டை தாங்கள் இல்லாத போதும் கூட நண்பர்களிடம் நான் பாராட்டத் தயங்கியதில்லை. இதை நம் நண்பர்கள் அறிவர்.
நம்முடைய பாதைகள் வேறேயன்றி பயணத்தின் திசை ஒன்று தான். இதை நான் அறியாதவனல்ல.
என் இனிய அண்ணன் வாசு சார் ,
நடிகர்திலகத்தின் பிறந்தநாளை நீங்கள் கொண்டாடிய விதம் அருமை .அடுத்த முறை எங்களையும் அழையுங்களேன் .மூன்று வருடங்களுக்கு முன்பு பெங்களூரில் பார்த்ததை விட போட்டோவில் சற்று மெருகு கூடியிருக்கிறீர்களே எப்படி சார் ?
1 ஆம் தேதி நடைபெற்ற நடைபெற்ற நடிகர்திலகம் பிறந்தநாள் விழாவிற்காக, காமராஜர் அரங்கத்தின் முகப்பில் வைக்கப்பட்டிருந்த, நிகழ்ச்சிக்கு வந்திருந்தோர் மற்றும் சாலையில் சென்றோர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த நடிகர்திலகத்தின் கட்-அவுட்கள்
http://i1234.photobucket.com/albums/...psoiolkezr.jpg
சிவந்தமண் சூட்டிங் ஸ்பாட்
பேசும்படம் http://i1065.photobucket.com/albums/...psnu1utdgv.jpg
Dear Gopal sir,
Good Morning.
Mandram it might look as if it lacks direction. But, if you notice carefully, the activities carried out by Mandrams during our Thalaivar's existence has been restarted now and Mandram has started rejuvenating itself these days.
Moreover Mandram does not have any political ambitions. Therefore, Mandram need not always focus on getting the attention of media and headlines of newspapers. Mandram need not join or allign with any political party to get any direction as we have been taken for solid ride in the name of direction.
Political Outfits are always better planners than Rasigar Mandrams. They do it 365 days to establish and remind about their existence as their agenda and intentions are politically entwined with political interests. Mandram does not have any such vested interest for politics.
Most importantly. Each outfit has their own style of operation. Mr. Chandrasekar is doing a wonderful service and no second thoughts on it. He does what is best for his organization. He is seeing great success for his dedication, true love and affection for our Thalaivar. By aligning with congress guys, he is confident that he will be able to make it to next level in showcasing his organization vision and mission. Let his belief save him is what we can wish.
But The same model need not and will not taste success when Mandram follows that direction because the objectives are different. And aligning with political outfits will only brand us as sympathizer and empathized of those parties. That's a DANGER for our existence itself.
Responsible fans have always reacted to wrong allegations or biased information's published by the same medias. So, I do not agree that we lack spine. Fans recently has reacted to notes of Puthia Thalaimurai book and the same was published.
It is a good point that you had brought about unity BUT I would say, Unity will be at its best, if we do not entertain Political Outfits as they are Show Spoilers. I always treat and see political outfits as Parasite be it is congress, DMK, or ADMK or BJP or whoever it is.
Pls wait and watch on Mandram activities sir, after all ROME WAS NOT BUILT IN A DAY & RECONSTRUCTION WILL CERTAINLY TAKE LITTLE TIME. !!!!
RKS