https://scontent.fykz1-2.fna.fbcdn.n...dd&oe=5EABC9A6
Printable View
இன்று 03/04/2020 வசந்த் டிவி யில் மதியம் 1.30 மணிக்கு நடிகர் திலகம் நடித்த மெகா ஹிட் படம். ¶
" வாழ்க்கை " படத்தை கண்டு களியுங்கள். ¶
இந்த படத்தில் நடிகர் திலகம், அம்பிகா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...fb&oe=5EAC64D0
இன்று 03/04/2020 சன் டி.வி. இல் காலை 9.00 a.m. மணிக்கு நடிகர் திலகம் நடித்த படம். " படிக்காதவன் ". !
படத்தை கண்டு களியுங்கள். !!
இந்த படத்தில் நடிகர் திலகம், ரஜினி, அம்பிகா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
https://scontent.fykz1-2.fna.fbcdn.n...02&oe=5EABC0F3
#பச்சைவிளக்கு 03 ஏப்ரல் 1964
#ஐம்பத்தைந்துஆண்டுகள்நிறைவு
#வேல்பிக்சர்ஸ் இராம. அரங்கண்ணல், AR. கசன்கான்,டி.எஸ்.ஆதிநாராயணன் தயாரிப்பு
#திரைக்கதை_இயக்கம்_ஏ_பீம்சிங்
#நடிகர்திலகம்_பீம்சிங் காம்பினேஷனில் உருவான ' ப ' வரிசைப் படங்களில் இது ஒன்பதாவது நூறுநாள் படம்
# பகர வரிசையில் பெயர்சூட்டி, 1958 பதிபக்தி முதல் 1964 பச்சைவிளக்கு வரை ஆறாண்டுகளில், மூன்று வெள்ளிவிழா + ஆறு நூறு நாளென 9 வெற்றிப்படங்களைத் தந்தது இதுவரை தமிழ்த் திரையுலகில் முதலும் முடிவுமான சாதனை.
#மாஅண்ணய்யா என்னும் பெயரில் தெலுங்கிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டது.
#நடிகர்திலகத்துடன், SSR., MR.ராதா, AVM.ராஜன், சௌகார் ஜானகி, விஜயகுமாரி, நாகேஷ் புஷ்பலதா, நாகய்யா, SV. ரங்காராவ் நடித்திருந்தனர்.
#கதை ஜி.கே.சூரியம்
#வசனம் இராம. அரங்கண்ணல், கோ. இறைமுடிமணி
#ஒளிப்பதிவு ஜி விட்டல்ராவ்
#இசை_மெல்லிசைமன்னர்கள்
#ஸ்டூடியோ AV
தொகுப்பு : "வான்நிலா"
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...6f&oe=5EADBFDD
Thanks வான்நிலா"
மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே,
இந்த 10 நாளில், நடிகர்திலகம் சம்பந்தப்பட்ட,
பல எழுத்தாளர்கள் எழுதிய பல புத்தகங்களை
படித்து வருகிறேன்.
அதில் நமது ரசிகர்கள் எழுதிய நுால்கள் தவிர மற்றவர்கள் எழுதிய நுால்கள் அனைத்திலும், நடிகர்திலகம் அவர்கள் கொடுத்த நன்கொடைகள், மற்றும் மற்றவர்களுக்கு உதவி செய்தவைகள், நாட்டில் ஏற்படும் பேரிடம் சமயங்களில் செய்த உதவிகள்... என பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
இவை அனைத்தும் ஒரு கலைஞனாக, மனிதநேயத்துடன் செய்த உதவிகள்.மற்றவர்கள் சிவாஜி அளவிற்கு உதவி செய்தார்களா? என்றால் இல்லை என்ற பதிலே மிஞ்சுகிறது.
அரசு பதவிகளில் இருந்து செய்யும் உதவிகள் என்பது, நமது வரிபணத்தில், நமக்கு செய்வது... ஆனால், சொந்த பணத்தில் அதிக அளவில் உதவி செய்தவர் சிவாஜி அவர்கள் தான்.
இன்று ஒரு நடிகரோ அல்லது தொழில் அதிபரோ ஒரு சின்ன உதவி செய்தால் கூட ஊடகங்களில், புகழ்ந்து தள்ளுகிறார்கள். ஆனால், அன்று சிவாஜி அவர்கள் செய்த உதவிகளை எந்த ஊடகங்களும் மக்களிடத்தில் கொண்டு செல்லவில்லை ஏன்? என்று தெரியவில்லை....
ஆனால், காலம் இன்று காட்டிக் கொடுத்துவிட்டது. இன்று பல முக்கியபிரமுகர்கள் சிவாஜி அவர்களின் வள்ளல் தன்மையை புகழ்ந்து தள்ளுகிறார்கள். மணிமாறன் போன்றவர்கள் சிவாஜி அளவுக்கு எம்.ஜி.ஆர் அவர்கள் கூட உதவி செய்யவில்லை என்பதை பகிரங்கமாக தொலைக்காட்சியில் பேசுகிறார்......
தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும்...
மறுபடியும் தர்மம் வெல்லும்....
ஆம், இன்று சிவாஜி செய்த தர்மம் வென்று கொண்டிருக்கிறது....
https://scontent.fykz1-2.fna.fbcdn.n...fd&oe=5EAFFF93
Thanks Sundar Rajan
அந்த நாளில், அதாவது அந்த நாட்களில் (1950) படம் துவங்கும்போது கர்நாடக இசையுடன் அல்லது கர்நாடக இசைப்பாடலுடன் படத்தின் டைட்டில்கள் ஓடும். முடிந்ததும் ஒரு அரசவையில் அரசவை நர்த்தகியின் நடனம் நடைபெறும். அதைத் தொடர்ந்து பாத்திரங்கள் பேசத்துவங்க படம் நகர ஆரம்பிக்கும். இதுதான் அன்றைய நடைமுறை.
ஆனால் “அந்த நாள்” படத்தின் துவக்கத்தைப்பாருங்கள். படம் துவங்கும்போது ஜாவர் சீதாராமனின் குரலில் “இரண்டாம் உலகப்போர் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது போர் விமானங்கள் குண்டு வீசித் தாக்கிக்கொண்டிருந்தன. எந்த நேரம் என்ன நடைபெறுமோவென்று எல்லோர் மனதிலும் ஒரு அச்சம் குடிகொண்டிருந்தது. அப்போது ஒருநாள் சென்னை திருவல்லிக்கேணியில் ஒரு வீட்டில்…”
இதைப்பேசி முடிக்கும் முன்பாகவே, திடீரென்று துப்பாக்கி வெடிக்கும் சப்தம், அதைதொடர்ந்து சிவாஜி நெஞ்சைப் பிடித்துக்கொண்டே கேமராவிலிருந்து பின்னோக்கிச்சென்று கீழே விழுவார். கால்களை உதைத்தவாறே உயிரை விடுவார். (ஆம். முதல் காட்சியிலேயே கதாநாயகன் அவுட். அந்த நாளில் நினைத்துப்பார்க்க முடியாத புதுமை). சிவாஜி இறந்ததும், மாடியிலிருந்து கதவொன்று திறக்கும். ஒரு வழுக்கைத்தலை பெரியவர் தட தட வென மாடிப்படிகளில் ஓடி வந்து கேமரா அருகில் வந்ததும் கீழுதட்டை கைகளல் பிடித்தவாரே அங்குமிங்கும் பார்ப்பார். பின்னர் ஓடத்துவங்குவார். டைட்டில்கள் ஓடத்துவங்கும். (ஆம் ‘அந்த நாள்’.. அந்த நாளேதான்).
கொலை எப்படி நடந்தது என்று விசாரிக்க வரும் சி.ஐ.டி.ஜாவர் சீதாராமனிடம், கதாபாத்திரங்கள் ஒவ்வொருவரும், கொலை எப்படி நடந்திருக்கக் கூடும் என்று அவரவருக்கு தெரிந்த விஷயங்களைக்கொண்டு விவரிக்க, ஒவ்வொன்றும் ஒரு ஃப்ளாஷ்பேக்காக விரியும். ஒவ்வொருவர் சொல்லி முடிக்கும்போதும் சிவாஜி சுடப்பட்டு விழுவார். (படம் முழுவதையும் ஃப்ளாஷ் பேக்கிலேயே சொல்லும் பாணியில் பின்னாளில் வந்த பல புதுமைப்படங்களுக்கு வித்திட்டு வழிகாட்டிய படம் ‘அந்த நாள்’).
பெரியவர் பி.டி.சம்பந்தம், சிவாஜியின் தம்பி டி.கே.பாலச்சந்திரன், பாலச்சந்திரனின் மனைவி, நாடோடிப்பாடலை சுவாரஸ்யமாகப்பாடும் சோடாக்கடைக்காரன், குதிரை வண்டிக்காரன்… ஒவ்வொருவரும் எவ்வளவு ஜீவனுள்ள பாத்திரங்கள்..!!. நாட்டுப்பற்று மிகுந்த பண்டரிபாய், கல்லூரி விழாவில் புரட்சிக்கருத்துக்களை சொல்லும் சிவாஜியைக் கண்டு காதல் வசப்படுவது ஒரு அருமையான கவிதை நயம். தன்னுடைய திறமையை தன்னுடைய சொந்த நாட்டு அரசாங்கம் அங்கீகரிக்கவில்லை என்று விரக்தியின் எல்லைக்குப் போய் ஜப்பான் நாட்டு அரசுடன் உறவு வைத்து தன் சொந்த நாட்டுக்கே விரோதியாக மாறும் துடிப்புள்ள எஞ்சினீயர் கதாபாத்திரத்தில் சிவாஜி தூள் கிளப்பியிருப்பார்.
கேமரா வழியாக கதை சொல்லும் பாணி முதலில் இந்தப்படத்தில்தான் பரீட்சித்துப் பார்க்கப்பட்டிருக்கும் என்பது பலரின் எண்ணம். நான் முன்பு சொன்னது போல அறையைப்பூட்டிக்கொண்டு சிவாஜி போகும்போது அவரோடேயே கேமராவும் போகும். கையிலிருக்கும் சாவிக்கொத்தை மேலும் கீழும் தூக்கிப்போட்டுப் பிடித்தபடி அவர் செல்லும்போது, கேமராவும் சாவியோடு மேலும் கீழும் போகும்.
அதே போல இறுதிக்காட்சியில், தான் சுடப்படுவதற்கு முன்பாக, சுழல் நாற்காலியில் அமர்ந்த படி மனைவி பணடரிபாயுடன் பேசும்போது கேமரா இவரிடத்தில் அமர்ந்து கொண்டு இவர் பார்வை போகும் திசையெல்லாம் போகும். அறை முழுக்க சுற்றி சுற்றி அலையும்.
எஸ். பாலச்சந்தர், தானே ஒரு நடிகராக இருந்தும் கூட, சில காட்சிகளில் தானே நடித்துப் போட்டுப் பார்த்தபின், சரிவரவில்லையென்றதும் தூக்கிப்போட்டுவிட்டு ஏ.வி.எம். செட்டியாரின் ஆலோசனையின்படி நடிகர்திலகத்தை கதாநாயகனாகப் போட்டு படத்தை எடுத்தார்.,,,, வளரந்துவரும் காலகட்டத்தில் இதுபோன்ற ஒரு படத்தில் நடிக்க அசாத்திய துணிச்சல் வேண்டும்,, அந்த தில் அவரிடம் இருந்ததினால் இன்றுவரை "அந்த நாள்" படம் அவர் மணி மகுடத்தில் வைரக்கல்லாக ஜொலிக்கிறது,,,,, அந்த நாள் நினைவுகள்
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...86&oe=5EAFA79F
Thanks Jahir Hussain
இன்று 05/04/2020 வசந்த் டிவி யில் மதியம் 1.30 மணிக்கு நடிகர் திலகம், ரஜினி நடித்த ஹிட் படம். ¶
" விடுதலை " படத்தை கண்டு களியுங்கள். ¶
இந்த படத்தில் நடிகர் திலகம், ரஜினி, மாதவி மற்றும் பலரும் நடித்துள்ளனர். ¶
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...90&oe=5EAF58E5
நான் சரிவர படிக்காதவன்.
உயர்நிலைப்பள்ளி வாசலை மிதித்ததில்லை.
படிப்பின் அருமையை பலமுறை உணர்ந்திருக்கிறேன்.
இருந்தும் என்ன பயன்?
வெளி இடங்களில் சக மனிதர்களோடு சகஜமாக பழக விருப்பப்படுவேன். ஆனால், முடியாது.
எங்களுக்குள் மொழி உடைக்க முடியாதபடி சுவர் எழுப்பியிருக்கும்.
இதை நான் அதிகம் அனுபவித்தது. வெளிநாடுகளுக்கு சென்றபோது தான்.
ஸ்கிரீன் ஆங்கில ஏடு எடுத்த விழாவில்
நடிகர்திலகம் பேசியது...
நான் படிப்பில்லாமல் தவித்தது போல்,
மற்றவர்களும், திரையுலகை நம்பி ஜீவனம் நடத்தும் நலிந்த கலைஞர்களின் பிள்ளைகளும் தவிக்க கூடாது,
என்பதற்காக செவாலியே சிவாஜிகணேசன் கல்வி அறக்கட்டளை தொடங்கப்பட்டது.
செவாலியே விருது கிடைத்ததை ஒட்டி எடுத்த விழாவில் வசூலான தொகையில் மீதமிருந்த பத்து இலட்சத்தை வைத்து இந்த அறக்கட்டளை தொடங்கப்பட்டு உதவி செய்யப்படுகிறது.
சபீதா ஜோசப் அவர்களின் சிவாஜி 100 நுாலில் இருந்து....
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...91&oe=5EAFB278
Thanks Sundar Rajan
திரு.கே.சந்திரசேகரன் அவர்கள் எழுதிய நடிகர் திலகம் சிவாஜி ஒரு வரலாற்றின் வரலாறு என்ற நூலிருந்து எடுக்கப்பட்டது.........நன்றி.....
எனக்கு தமிழைக் கற்றுக் கொடுத்த ஆசிரியர்கள் பல உண்டு .ஆனால் ஒரு பாமரன் கூட தமிழை எப்படி உச்சரிக்க வேண்டும் என்று கற்றுக் கொடுத்த ஆசிரியர் எனது மானசீக குருவான #நடிகர்திலகம்............
பள்ளி நாடகங்களில் நடித்த காலம் தொட்டு வானொலி நாடகங்களில் நடித்தது வரை வசன உச்சரிப்பிலும் பாவங்களை வெளிப்படுத்துவதன் அவரது பாதிப்பே என்னிடம் அதிகமாக இருந்தது. .........
பைலட் பிரேம்நாத் திரைப் படத்தில் நடிப்பதற்காக அவர் இலங்கை வந்திருந்தபோது இலங்கை வானொலிக்காக அவரைப் பேட்டி காணும் பாக்கியம் எனக்கு கிடைத்தது...
அன்றுதான் நான் அவரை முதன்முதலாக சந்தித்தேன். அன்று தொடங்கிய எங்கள் நட்பு அவரும் அவர் குடும்பத்தினரும் என்னையும் என் குடும்பத்தையும் நேசிக்கும் அளவுக்கு வளர்ந்தது........
உலகில் எத்தனையோ தலைமுறைகளை கண்டவர் தன் குடும்பத்து தலைமுறைகள் ஒன்றாக வாழவேண்டும் என்பதிலும் மிகுந்த அக்கறை உள்ளவராக இருந்தார் .நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்று அவர் பாடியதைப் போலவே தன் வாழ்க்கையையும் அமைத்துக் கொண்டார்.........
நடிப்புலகில் பலருக்கு நடிப்பு கல்லூரியாக இருக்கும் #கலைக்குரிசில் சிவாஜி கணேசனிடம் நான் காணும் சிறப்பு உலக புகழ்பெற்ற நடிக
மேதைகளில் ஓவர் ஆக்டிங் அண்ட்ர் ஆக்டிங் மற்றும் 2 க்கும் இடைப்பட்ட நடிப்பு என தனித்தனி பாணியில் பிரகாசித்தவர்கள் உண்டு. ஆனால் இந்த மூன்று பாணிகளிலும் நடிப்பை வெளிப்படுத்துவதில் வல்லவராக விளங்கிய நடிகர் உலகிலேயே #சிவாஜி ஒருவர்தான்........
தாதா சாகேப் பால்கே விருது பெற்றதை ஒட்டி இலங்கையிலும் சிங்கப்பூரிலும் அவருக்கு நடைபெற்ற பாராட்டு விழாக்களை தொகுத்து வழங்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது.......
நடிகர் திலகத்தின் இறுதி ஊர்வலத்தில் நேர்முக வர்ணனை செய்யுமாறு இலங்கை வானொலி லண்டன் ஆஸ்திரேலியா மற்றும் கனடா நாடுகளில் உள்ள 24 மணிநேர தமிழ் வானொலி நிலையங்கள் என்னைக் கேட்டுக் கொண்டனர் சிவாஜி கணேசனின் அன்னை இல்லத்திலிருந்து பெசன்ட் நகர் மயானத்தில் இறுதிச் சடங்கு முடியும் வரை அந்த நேர்முக வர்ணனையை கண்ணீரையும் சோகத்தையும் கட்டுப்படுத்த முடியாத ஒரு சூழ்நிலையில் ஒரு கைத் தொலைபேசியை வைத்துக்கொண்டு நான் வழங்க வேண்டியதாயிற்று..,...
இந்த சிறியேனுக்கும் தனது இதயத்தில் #நண்பன் என்ற பெரிய அந்தஸ்தை கொடுத்து அழகு பார்த்த என் #மானசீக #குருவுக்கு என்னால் கடைசியாக செய்ய முடிந்த ஒரு சிறு காணிக்கையாக இந்த நேர்முக வர்ணனை வாய்ப்பை இறைவன் எனக்கு வழங்கினாலும் என்னவோ.....................
இலங்கை வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளர்
#பி.#ஹெச்.#அப்துல்ஹமீது அவர்கள்
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...d3&oe=5EAF7DDE
தினமலரில்...04.04.2020ல் ...
நடிகர்திலகத்தின் வெற்றிப்படங்கள் வரிசையில்...
https://scontent.fykz1-2.fna.fbcdn.n...ea&oe=5EAE9EB5https://scontent.fykz1-1.fna.fbcdn.n...97&oe=5EAF275D
சிவாஜியின் திரிசூலம் 200வது பட விழா மதுரையில் நடைபெற்றபோது பைலட் பிரேம்நாத் பட தயாரிப்பாளர் சலீம் சிவாஜியின் மார்பளவு உருவ தங்க சிலையை சிவாஜிக்கு பரிசளி த்தார்.இந்தியாவில் வேறு எந்த நடிகருக்கும் இவ்வளவு விலை உயர்ந்த பரிசுப் பொருள் யாரும் இதற்க்கு முன் வழங்கியதில்லை
சிங்கப்பூர் அரசு சுதந்திரம் பெற்று 150ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு தங்க சுரங்கம் படத்தை அதிகார ப் பூர்வமாக தேர்ந்தெடுத்துசிங்கப்பூர் வெளி விவகார மந்திரி முன்னிலையில் சிறப்பு காட்சி காட்டப்பட்ட பெருமை சிவாஜியின் நடிப்புக்கு கிடைத்த பெருமையாகும்
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...f5&oe=5EAE541A
Thanks Vijaya Raj Kumar
'வெற்றி வேல் வீர வேல்...சுற்றி வந்த பகைவர் தம்மை...தோள் நடுங்க வைத்த எங்கள் சக்தி வேல்..ஞான சக்தி வேல்..'
இன்று 06/04/2020 பாலிமர் டி.வி. யில் மதியம் 02.00 மணிக்கு நடிகர் திலகம் நடித்த பக்தி படம்.¶
" கந்தன் கருணை" கண்டு களியுங்கள். ¶
இதில் நடிகர்திலகம், ஜெமினிகணேசன், சிவகுமார், சாவித்திரி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...8a&oe=5EB0B479