https://www.youtube.com/watch?v=D03mIo_enTo
Printable View
இன்று பிறந்த நாள் காணும் ராமமூர்த்தி சாருக்கு உளமார்ந்த நல்வாழ்த்துக்கள். எம்.ஜி.ஆருக்காக தாங்கள் ஆற்றும் பணி, தருகின்ற உழைப்பு மிகவும் பாராட்டிற்குரியது. தங்களை எம்.ஜி.ஆர். அவர்கள் இப்படித் தான் வாழ்த்துவார்
இன்று போல் என்றும் வாழ்க
தாங்கள் நீண்ட ஆயுளும் நலனும் பெற்று சிறப்புடன் வாழ வாழ்த்துகிறேன்.
இன்று பிறந்த நாள் கொண்டாடும் இனிய நண்பர் திரு ராமமூர்த்தி அவர்களுக்கு மக்கள் திலகம் திரியின் சார்பிலும் என்னுடைய சார்பிலும் இதயங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் .
இன்று பிறந்த நாள் காணும் ராமமூர்த்தி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
தினத்தந்தி தொலைக்காட்சி வழங்கிய ''சினிமா நூற்றாண்டு விழா ''
மலேசியாவில் நடைப்பெற்ற விழாவில் இளைய திலகம் பிரபு அவர்கள் மக்கள் திலகம் எம்ஜியார் அவர்களை பற்றி கூறிய சுவையான தகவல்கள் அருமை . புதுமை .
மக்கள் திலகத்தை பற்றி பெருமையாக பேசியும் மக்கள் திலகம் எம்ஜியார் திரையுலகின் வசூல் சக்ரவர்த்தி என்றும் விழாவில் மக்கள் மன்றத்தில் பேசிய இளைய திலகத்திற்கு நன்றி .
மதுரை மீனாக்ஷி பாரடைஸ் 5.5.2013
முதல் மக்கள் திலகத்தின்
''தேடிவந்த மாப்பிள்ளை '' படம் நடைபெறுகிறது .
கோவையில் மதுரை வீரனும் - எங்க வீட்டு பிள்ளையும் நடைபெறுகிறது .
புதுவையில்
தர்மம் தலைக்காக்கும் படம் நடை பெறுகிறது .
அன்புள்ள எஸ்வி சார்,
இது எதை நினைவுபடுத்துகிறது தெரியுமா?
அன்று அறிஞர் அண்ணா அவர்கள் ஒரு பொதுகூட்டத்தில் நடிகர் திலகத்தை பற்றி குறிப்பிடுகையில்..."மாற்றான் தோட்டது மல்லிகைக்கு மணம் உண்டு " என்று அவர்களை சார்ந்தவர்கள் மத்தியிலேயே தைரியமாக ஒத்துகொண்டார்.
பிரபு அறிஞர் அண்ணா அளவிற்கு பக்குவப்பட்டவரா அறிஞரா என்று கேட்டால் நிச்சயமாக இல்லை என்று கூறுவேன்...காரணம் அண்ணாவுடன் யாரையுமே ஒப்பிடமுடியாது !
இருப்பினும், அதற்க்கு ஈடு செய்யும் வகையில், நடிகர் திலகத்தின் புதல்வர் திரு பிரபு அவர்கள் ஒரு பொது சபையில் அதுவும் வெளிநாடில் கூறியிருக்கிறார். அவர் அதை எதற்கு உதாரனபடுத்தி கூறினார் என்று தெரியவில்லை காரணம் நான் அந்த நிகழ்ச்சியை பார்க்க தவறிவிட்டேன்..இருப்பினும் அவர் கூறியது வரவேற்க்கதக்கது பாராட்டத்தக்கது.
அவர் தந்தைக்கு மகன் ஆற்றும் கடமையை செய்தாரோ இல்லையோ அதுபற்றி எனக்கு தெரியாது.
ஆனால் விருந்தோம்பல், எல்லோர்க்கும் நல்லவன், பெரியவர்களை மதித்தல், புகழ்தல், வலது கை செய்வது இடது கைக்கு தெரியாமல் அதாவது விளம்பரம் செய்யாமல் மற்றவர்க்கு உதவும் குணம் இவை அனைத்தையும் சிறப்பாக செய்துவருகிறார் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.
VATHTHIYAR IS ALWAYS GREAT .
SEE THE COACHING FIGHT AND STYLE OF OUR VATHTHIYAAR
LEARNER ALSO ......QUICK ADOPTION
http://youtu.be/I7W9IR6iHM0