sexual சம்பந்தப்பட்டது என்றாலே குஜாலாக ஒருத்தர் ஓடியாந்துடுவார். அப்படியே ஆர்வம் கொப்பளிக்கும்.
Printable View
sexual சம்பந்தப்பட்டது என்றாலே குஜாலாக ஒருத்தர் ஓடியாந்துடுவார். அப்படியே ஆர்வம் கொப்பளிக்கும்.
கிருஷ்ணாஜி,
உங்களுக்கு நூறு வயசு. மோகனம், பிருந்தாவன சாரங்கா இரண்டும் எனது அடுத்தடுத்த தேர்வாக நேற்று உட்கார்ந்தால் மோகனத்தின் கம்பன் மட்டுமல்ல நானும் ஏமாந்தேன்.பிருந்தாவன சாரங்காவின் இலக்கணத்தை (சுத்த சாரங்கா?)சொல்லலாம் என்று வந்தால்....சரி என்று பட்டியலில் அமர்ந்தேன்.
இதுவும் ஒரு 'மன்மத லீலை'தான்.
http://3.bp.blogspot.com/-eZlDwdIuvh...graphy+(4).jpg
மன்மத லீலை (1)
தமிழில் எந்தக்காலத்துக்கும் பொருந்தக் கூடிய சில அபூர்வ படங்கள் வருவதுண்டு. அவற்றில் ஒன்று இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் வழங்கிய மன்மத லீலை. இது நகைச்சுவை விரும்பிகளுக்கு நகைச்சுவைப் படமாகவும், செக்ஸ் விரும்பிகளுக்கு செக்ஸ் படமாகவும், இசை விரும்பிகளுக்கு இசைப்படமாகவும் காட்சி தரும். அந்த அளவுக்கு மூன்றையும் சரிவிகிதத்தில் கலந்து தந்திருந்தார். இதை அவர் நகைச்சுவைப் படமென்று சொல்லிக்கொண்டாலும் படத்தில் தூக்கலாக நின்றது செக்ஸ்தான். அதாவது கதாநாயகனின் செக்ஸ் வீக்னஸ். அது காட்சியமைப்புகளிலும் நன்றாகப் பிரதிபலித்தது. அதை அப்படியே தந்தால் விரசத்தின் எல்லையைத் தொட்டுவிடும் என்பதால், துணைக்கு நகைச்சுவையையும் இசையையும் இணைத்துக்கொண்டார். அதனால் விரசம் சற்று மட்டுப்படுத்தப்பட்டது என்பது உண்மை.
'இவ்வளவு மோசமான காட்சிகள் தேவையா?' என்று பட்டிமன்றம் நடத்த விடாமல், 'தேவைதான்' என்று மற்றவர்களே அவருக்காக வக்காலத்து வாங்கும் வண்ணம், வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல திணித்து விடுவாரே, அங்குதான் கே.பி.யின் வெற்றி அடங்கியிருக்கிறது. இப்படம் வந்தபோது கல்லூரி மாணவ மாணவியர் கூட்டம் தியேட்டரில் சொல்லி மாளாது. பத்துமுறைக்கு குறைவாகப் பார்த்த மாணவர்கள் குறைவு.
கதாநாயகன் மது (கமல்ஹாசன்) திருமணமானவன். ஆனால் பெண்பித்தன். மதுவைப்போல ரசனை கெட்டவன் இருக்க முடியாது. பின்னே?. மனைவி கோபுரங்கள் சாய்வதில்லை அருக்காணி போல இருந்தால் மற்ற அழகான பெண்களின்மீது மோகம் வருவதில் தப்பில்லை என்று சொல்லலாம் (அதுவும் தப்புதான், சும்மா ஒரு வாசகத்துக்கு). ஆனால் அழகான ரேகா (ஆலம்) மனைவியாக இருக்கும்போது கிளியோபாட்ராவே வந்தாலும் திரும்பிப் பார்க்கலாமா?. பார்க்கிறானே. ஆனால் இவனோ வத்தல் தொத்தலையெல்லாம் கூட பார்க்கிறானே. இவன் தன் வலையில் விழவைக்கும் பெண்களில் ஒருத்திகூட இவன் மனைவி அளவுக்கு அழகில்லை. அதற்கு அவன் வைத்துக்கொள்ளும் நொண்டிசாக்கு 'வீக்னஸ்'.
இந்த வீக்னஸுக்கு தீர்வு காண தியானம் செய்வது, சைக்கியாற்றிஸ்டை பார்ப்பது எல்லாம் வேஸ்ட். ஒரே மருந்து "உன் மனைவிக்கும் இந்த வீக்னஸ் இருந்தால் என்ன செய்வாய்?" என்று கேட்பதுதான்.
படத்தில் நாயகன் வலையில் வீழ்பவர்களாக ஜெயப்ரதா, ஜெயவிஜயா, ஒய்.விஜயா, வினோதினி, ரீனா என்று ஏகப்பட்ட புதுமுகங்கள் அறிமுகம். அத்தனையும் (அப்போதைக்கு) இளசுகள். ஆனால் ஒவ்வொருவருடனும் நாயகனுக்கு தொடர்பு ஏற்பட ஒவ்வொரு லாஜிக் வைத்திருக்கிறாரே இயக்குனர். அதுதான் கே.பி.யின் திறமை.
சரி, இது பாடல் திரி ரொம்ப வளர்க்க வேண்டாம் என்று நினைக்கிறேன். படத்துக்கு பக்க பலமாக பாடல்களும் இசையும் அமைய வேண்டும் என்று கண்ணதாசனிடமும், விஸ்வனாதனிடமும் இயக்குனர் சொல்லப்போக, இதுதான் சாக்கு என்று இருவரும் விஸ்வரூபம் எடுத்துவிட்டனர். பலன்?. பாடல்கள் அத்தனையும் தேன்குடங்கள்.
டைட்டில் பாடலில் கதாநாயகனின் குணாதிசயத்தை விளக்க வேண்டுமென்று நினைத்ததால், டைட்டில் பாடல் துண்டு துண்டாக கிட்டத்தட்ட இருபது நிமிடங்கள் வரை நீடிக்கிறது.
'மன்மத லீலை... மயக்குது ஆளை....' பாடல் ஒலிக்கும்போதெல்லாம் கதாநாயகனின் குதிரை பின்னோக்கி ஓடுகிறது. (ரிவர்ஸ் ஷாட் இல்லாத கே.பி.படம் ஏது?. சொல்லத்தான் நினைக்கிறேனில் பொங்கிய வழிந்த பால் மீண்டும் ரிவர்ஸில் பானைக்குள் போய் அடங்குவது, நினைத்தாலே இனிக்கும் படத்தில் சிகரெட்டிலிருந்து வெளியே விட்ட புகையை மீண்டும் ரஜினி சிகரெட் வழியே உள்ளிழுப்பது, அச்சமில்லை அச்சமில்லையில் கீழ்நோக்கி கொட்டும் அருவி, திடீரென்று மேல்நோக்கிப்போவது... இப்படி எல்லாப்படத்திலும் ஒன்று வைத்திருப்பார்).
எத்தனை கிண்ணத்தில் இட்டாலும் அவை
அத்தனையும் சுவை ஒன்றாகும்
எத்தனை பெண்களை தொட்டாலும் அவை
அத்தனையும் சுவை பேதமடா
நாயகன் தன் முடிவுகளுக்கு சொல்லிக்கொள்ளும் சப்பைக்கட்டு. (படம் பார்த்து பல ஆண்டுகளாகிவிட்டது, பாடல் வரிகளில் பிழையிருந்தால் திருத்துங்கள்)
ஆண்டவன் வாரிசு வேல்முருகன் அந்த
ஆதவன் வாரிசு வெண்ணிலவு
இன்னொரு வாரிசு வேண்டுமென்றே இந்த
மன்மதன் வாரிசு வந்து விட்டான்
டைட்டில் பாடலில் கதாநாயகன், நேயர் விருப்பம் கேட்கும் மாதவி என்ற பெண்ணை மடக்குவது, மோட்டார் சைக்கிள் விபத்தில் துணியை இழந்து நிற்கும் கண்ணகிக்கு (ஜெயப்ரதா) தன் உடைகளைக் கழற்றித்தந்து விட்டு, ஓப்பன் காரில் அண்டர்வேருடன் மௌண்ட் ரோட்டில் போவது என்று மது (கமல்) அதகளம் பண்ணியிருப்பார்.
(தொடரும்)
90களின் சிறந்த படங்கள்(கோபால் தேர்வு)
1991- சந்தியா ராகம்,அழகன்,இதயம்,கேப்டன் பிரபாகரன்,தளபதி,கோபுர வாசலிலே,மகாநதி,குணா,சின்ன தம்பி,சிகரம்.
1992-சின்ன கவுண்டர்,தேவர் மகன், நாங்கள்,மன்னன்,ரோஜா,சூரியன்.
1993-உழவன்,கேப்டன் மகள்,சின்ன மாப்பிள்ளை,தசரதன்,திருடா திருடா,கிழக்கு சீமையிலே,ஜென்டில் மேன் ,மறுபடியும்,புதிய முகம்.
1994-பம்பாய்,கருத்தம்மா,காதலன்,ஆனஸ்ட் ராஜ்,டூயட்,
நம்மவர் ,நாட்டாமை,மகாநதி, வியட்நாம் காலனி ,மகளிர் மட்டும்.
1995-ஆசை,இந்திரா,குருதி புனல்,சதி லீலாவதி,பாட்ஷா,மோக முள்,அவதாரம்.
1996-அவ்வை ஷண்முகி,இந்தியன்,உள்ளத்தை அள்ளி தா,காதல் கோட்டை,கோகுலத்தில் சீதை,பூவே உனக்காக,சிறை சாலை.
1997-இருவர்,மின்சார கனவு,காதலுக்கு மரியாதை,பாரதி கண்ணம்மா,சூரிய வம்சம்.
1998-உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்,காதல் மன்னன்,பூவேலி,ஜீன்ஸ்.
1999-அமர்க்களம்,சேது,படையப்பா,முதல்வன்,வாலி.
2000-அலை பாயுதே,கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்,கண்ணுக்குள் நிலவு,குஷி,தெனாலி,மல்லி,ரிதம்,வெற்றி கொடி கட்டு,வானத்தை போல.ஹே ராம்.
90 களின் சிறந்த பத்து
1)தேவர் மகன்.
2)மகாநதி.
3)மகளிர் மட்டும்.
4)அவதாரம்.
5)மோக முள்.
6)சேது.
7)மின்சார கனவு.
8)வாலி.
9)ஜென்டில் மேன்
10)ஆசை.
Sorry.karthik sir. I didnt see your post.I shouldnt have overlapped. Terribly sorry.
மன்மத லீலை (2)
'ஹலோ மைடியர் ராங் நம்பர்'
சேட்டனும் ராட்சசியும் (சங்கேத வார்த்தைகள் வேண்டாம் என்று சொன்ன நானே இப்படி ஆரம்பிக்கலாமா?.ஸாரி) ஜெசுதாஸும் எல்.ஆர்.ஈஸ்வரியும் இணைந்து பாடிய வெகு அபூர்வ பாடல்களில் ஒன்று. கேட்கும்போதே நம்மை எங்கோ வேறு உலகத்துக்கு அழைத்துச்செல்லும் மோகனராகம். (நிஜமாகவே ராகம் மோகனமா என்று தெரியாது. நமது ராக ஸ்பெஷலிஸ்ட் தெளிவு படுத்துவார்)
மது : ஹலோ
பார்கவி: ஹலோ
மது: ஹலோ மைடியர் ராங் நம்பர்
கேட்கவே உந்தன் குரல் சொர்க்கம்
நேரிலே பார்த்தால் என்ன வெட்கம்
கற்பனை ஓராயிரம்..ம்...ம்..ம்..ம்.
கற்பனை ஓராயிரம்
ஒரு முறை பார்த்தால் என்ன?
(அந்த 'என்ன'வில் என்னவொரு அழகான நடுக்கம். தாடிக்கார சேட்டா.. சூப்பர்)
பார்கவி: ஹலோ (ராட்சசியின் என்னவொரு ஹஸ்கி வாய்ஸ்)
மது: ஹலோ மைடியர் ராங் நம்பர்
பார்கவி:
கேட்பதில் தீரும் உங்கள் தாகம்
நேரிலே பார்த்தால் என்ன லாபம்
அற்புதம் ஏதும் இல்லை
அதிசயப் பெண்மை இல்லை.
(சொல்ல வந்ததை இலைமறைவு காயாக சொல்லும் கண்ணதாசன் இம்முறை ஓப்பனாகவே)
ஹலோ...
மெல்லிசை மன்னரின் அதி அற்புதமான இடையிசை. ஆஹா இதுபோல மனதை வருடும் இசை தர இன்னொருத்தன் பொறக்கணும்யா... மனசே ஜிவ்வுன்னு பறக்குது...
மது : காவிரியின் மீனோ
பார்கவி : நோ
மது : பூவிரியும் தேனோ
பார்கவி: நோ... நோ...
மது: தேவமகள்தானோ.. தேடிவரலாமோ
பார்கவி: பூவையெனைப்பார்த்தால் காதல் வரக்கூடும்
மது : ரியலி...?
பார்கவி: பூஜையறை பார்வை ஆசை தரக்கூடும்
மது; ஐ டோன்ட் மைண்ட்
கற்பனை ஓராயிரம்
ஒரு முறை பார்த்தால் என்ன?
பார்கவி : ஹலோ
மீண்டும் மெல்லிசை மன்னரின் வித்தியாசமான இடையிசை. ஆஹா இதுபோன்ற இசையை நான் கேட்டதேயில்லை (தாரை, தப்பட்டை எல்லாம் டெல்லி செவிடர்களுக்கு கேட்டுவிட்டது. உன் இனிய இசை இன்னும் அவர்களுக்கு கேட்கவில்லையே)
பார்கவி : உன்னிடத்தில் காதல்,.. உள்ளவர்கள் யாரோ
மது : என்னவென்று சொல்வேன்,.... உன்னையன்றி யாரோ
பார்கவி : வேலியுள்ள முல்லை.
மது : வேலிஎனக்கில்லை...
பார்கவி : பொறுமையுடன் இருங்கள்
மது: முதுமை வரும் வரையோ
ஹலோ மைடியர் ராங் நம்பர்..
என்ன அருமையான மனதை வருடும் இனிய கீதம். எனக்குப்பிடித்த இருபது பாடல்களில் இப்பாடலுக்கு சிறப்பிடம் உண்டு. ஜேசுதாஸும், ஈஸ்வரியும் நம்மை வேறு உலகத்துக்கு இட்டுச்செல்வார்கள். கூடவே கவியரசரும் மெல்லிசை மன்னரும்.
படம் வந்த காலகட்டத்தில் இப்பாடலை மேடையில் பாடாத இசைக்குழுக்களே கிடையாது. அந்த அளவுக்கு பாப்புலர். சமீபத்தில் கூட பொதிகையின் 'துள்ளாத மனமும் துள்ளும்' நிகழ்ச்சியில் ஜேசுதாசின் நிழல்போல பாடக்கூடிய கோவை ஜலீல் என்ற பாடகரும், தீபஷிகா என்ற பாடகியும் மிக அருமையாக இப்பாடலை பாடியிருந்தனர்.
என்னைப்பொருத்தவரை இப்பாடல் 'ஹலோ மைடியர் ரைட் நம்பர்'.
(தொடரும்)..
ஹாஹஹஹாஹா ஹாஹஹஹாஹா ஹாஹஹஹாஹா
கார்த்திக் சார்
ஐயோ ஐயோ ஐயோ
பின்னி பெடல் எடுத்து விட்டீர்கள்
உங்களின் லீலைக்கு எல்லையை இல்லை
ஹலோ மைடியர் வ்ரோங் நம்பர் மதுவந்தி-தர்மவதி
கோபால் சார் confirm செய்வார்
இந்த இரண்டு பாட்டும் கொஞ்சம் பாடல் வரிகளை கவனிங்க சார்
பல வித அர்த்தங்களை கொடுக்கும்
எடுத்துகாட்டு
எத்தனை கிண்ணத்தில் இட்டாலும் மது
அத்தனையும் சுவை ஓன்றாகும்
சித்திர கிண்ணத்தில் பேதம் இல்லை
உன் சிந்தனையில் தான் பேதம் அட