-
http://i57.tinypic.com/mwd4x4.jpg
நேற்று மாலை 6.30 மணியளவில் சென்னை ரஷ்யன் கல்சுரல் அகாடெமியில் (சோழா ஓட்டல் அருகில் ) மோகனா ரிதம்ஸ் வழங்கும்
இன்னிசை விருந்து நிகழ்ச்சியில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பாடல்கள்
மற்றும் இதர நடிகர்களின் பாடல்களும் இசைக்கப்பட்டன.
-
http://i61.tinypic.com/zojrbc.jpg
இன்று பிற்பகல் 2.30 மணியளவில் சென்னை ராமராவ் கலா மண்டபம், தி.நகரில் மக்கள் திலகம்/நடிகர் திலகம் பாடல்கள் இன்னிசை நிகழ்ச்சி
நடைபெற்றது. அதன் சுவரொட்டி நமது திரி நண்பர்களின் பார்வைக்கு
-
http://i62.tinypic.com/1z527ud.jpg
.சென்னை பூக்கடை பேருந்து நிலையம் அருகில் திரு. குமார் என்கிற
ரிக்ஷாக்காரர் வண்டியில் புரட்சி தலைவரின் படங்கள்
-
எம். ஜி. ஆர். – சிவாஜி இருவர் மனங்களிலும் ஒரே எண்ணம்
ஒரே நேரத்தில் எம். ஜி. ஆர். படங்களுக்கும் சிவாஜி படங்களுக்கும் வசனம் எழுதிய ஒரே வசனகர்த்தா நானாகத்தான் இருக்க வேண்டும். 1962 ஆம் ஆண்டு ஒரே நாளில் நான் வசனம் எழுதிய எம். ஜி. ஆரின் ‘தாயைக் காத்த தனயன்’ படமும் சிவாஜியின் ‘படித்தால் மட்டும் போதுமா’ படமும் ரிலீஸானது. ஒன்று தேவர் படமும் இன்னொன்று ரெங்கநாதன் பிக்சர்ஸ் படமுமாக இருந்த போதிலும், முறையே ஒன்றை எம். ஜி. ஆர். பிக்சர்ஸ¤ம், இன்னொன்றை சிவாஜி ஃபிலிம்ஸ¤ம் சென்னை நகரில் வெளியிட்டிருந்தார்கள். இரண்டுமே சூப்பர் வெற்றியடைந்து 100 நாட்களைத் தாண்டி ஓடிக் கொண்டிருந்தது. மவுண்ட்ரோடு ஏரியாவில் பிளாசாவில் தாயைக்காத்த தனயனும், மிட்லண்டில் படித்தால் மட்டும் போதுமாவும் ரசிகர்கள் கூட்டத்துடன் ஓடிக்கொண்டிருந்தன.
அன்று காலை எம். ஜி. ஆரின் அடுத்த படத்துக்காக வசனம் எழுதச் சென்றிருந்தபோது எம். ஜி. ஆர். என்னை அழைத்து, ‘போன படம் வெற்றியடைஞ்சதுக்கு உனக்கு எந்த பரிசும் நான் கொடுக்கலை. இப்போ தாயைக்காத்த தனயன் பெரிய வெற்றியடைஞ்சிருக்கு, உனக்கு என்ன பரிசு வேணும்?’ என்று கேட்க, ‘அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்னே, உங்க அன்பு இருந்தா போதும்’ என்றேன். ‘அப்படியா அப்போ நானே ஏதாவது பண்றேன்’ என்று சொல்லிவிட்டார்.
அன்று பிற்பகல் சிவாஜி பட ஷ¥ட்டிங் போனபோது அவர் என்னை தனியே அழைத்து, ‘ஆரூரான், இதற்கு முந்தி நீ எழுதின பாசமலர் பெரிய வெற்றியாச்சு. அதுக்கு நான் பரிசு எதுவும் தரலை. இப்போது நீ எழுதின படித்தால் மட்டும் போதுமாவும் நல்லா ஓடிக்கிட்டிருக்கு. உனக்கு என்ன பரிசு வேணும் சொல்லு. அண்ணன் கிட்டே இருந்தா தர்ரேன். இல்லேன்னா வாங்கித் தர்ரேன்’ என்று கேட்டதும் நான் ஆடிப் போனேன். அதெப்படி அவர்கள் இருவரது மனதிலும் ஒரே மாதிரி எண்ணம் ஓடுதுன்னு ஆச்சரியப்பட்டேன். எம். ஜி. ஆருக்கு சொன்ன அதே பதிலையே இவருக்கும் சொன்னேன். ‘அன்புதான் நிறைய இருக்கே, வேறென்ன வேணும்?’ என்றார் நான் ஒண்ணும் சொல்லவில்லை. இரண்டு நாள் கழித்து எம். ஜி. ஆர். பிக்சர்ஸ் அலுவலகத்தில் இருந்து போன் பண்ணி வரச்சொன்னாங்க. போனபோது எம். ஜி. ஆர். இருந்தார். ஒரு பெரிய வெள்ளித் தட்டில் நான்கு மூலைகளிலும் சிறிய தங்கத் தகடுகள் பொருத்தியிருக்க, தட்டின் நடுவில் ‘எம்ஜியார் பிக்சர்ஸ் தாயைக் காத்த தனயன் வெற்றிக்கு ஆரூர்தாஸ¤க்கு அன்பளிப்பு’ என்று பொறிக்கப்பட்டிருந்த அந்த தட்டை எம். ஜி. ஆர். வழங்கினார்.
மறுநாள் பிற்பகல் சிவாஜி பிலிம்ஸிலிருந்து அழைப்பு வந்தது. போனால் அங்கே சிவாஜி மூன்றரை சவரன் எடையுள்ள, உள்ளங்கையை விட அகலமான தங்கப் பதக்கம் ஒன்றை எனக்கு அணிவித்தார். அதில் ‘சிவாஜி பிலிம்ஸ் படித்தால் மட்டும் போதுமா 100 வது நாள் வெற்றி விழா’ என்று சிவாஜி பிலிம்ஸ் எம்ப்ளத்துடன் பொறிக்கப்பட்டிருந்தது. அவ்விரண்டு பரிசுகளையும் என் வீட்டு வரவேற்பறை ஷோகேஸில் பக்கம் பக்கமாக வைத்திருக்கிறேன். அவற்றைப் பார்க்கும் போது அந்தப் பரிசுகளைவிட அவ்விரண்டு மேதைகளின் முகம் தான் என் கண்களில் காட்சியளிக்கும்.
Courtesy - Net
-
பொன்விழா கொண்டாடும் பொன்னான படங்கள்...!
வேகமாக சென்று கொண்டிருக்கும் வாழ்க்கையில் பெற்ற பிள்ளைகளின் பிறந்த நாளைக்கூட மனதில் வைத்துக் கொண்டாட முடியாமல் இருக்கிறோம். அப்படி இருக்கும்போது இந்த ஆண்டு 50 வயதை தொட்டு பொன்விழா கொண்டாடும் படங்களை பற்றி மட்டும் எப்படி நினைத்துக் கொண்டிருப்போம். இதோ தினமலர் இணையதளம் நினைவூட்டுகிறது.
இந்த ஆண்டிலிருந்து 50 ஆண்டுகளுக்கு முந்தைய 1962ம் ஆண்டு சினிமாவில் பொற்காலமாக இருந்தது. எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி என்ற மூவருக்கும் இடையில் ஒரு ஆரோக்கியமான போட்டி இருந்தது. இது ரசிகனுக்கு தரமான படங்களை கொடுத்தது. பா வரிசை படங்கள் அதிகம் வெளிவந்தது இந்த ஆண்டில்தான்.
மொத்தம் 51 படங்கள் வெளிவந்திருந்தாலும் மக்கள் கவனத்தை ஈர்த்தது சுமார் 20 படங்கள். அவை இப்போதும் காலத்தை கடந்து நிற்கிறது. இந்த ஆண்டில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அதிக பட்டசமாக 7 படங்களிலும், எம்.ஜி.ஆர் 6 படங்களிலும், ஜெமினி கணேசன் 5 படங்களிலும் நடித்திருந்தார்கள்.
எம்.ஜி.ஆர் நடித்த படங்கள்:
குடும்ப தலைவன்: தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில், எம்.ஏ திருமுகம் இயக்கி இருந்தார். கே.வி.மகாதேவன் இசை அமைப்பு. சரோஜாதேவி ஹீரோயின்
மாடப்புறா: பி.வி.என் பிக்சர்ஸ் தயாரித்து, எஸ்.ஏ.சுப்பாராமன் இயக்கிய படம். கே.வி.மகாதேவன் இசை அமைத்திருந்தார். சரோஜாதேவி ஜோடி.
பாசம்: டி.ஆர்.ராமண்ணா இயக்கிய படம் விசுவநாதன்&ராமமூர்த்தி இசை, ஆர்.ஆர்.பிக்சர்ஸ் தயாரிப்பு. சரோஜாதேவி ஹீரோயின்
தாயை காத்த தனயன்: தேவர் பிலிம்ஸ் தயாரித்து எம்.ஏ.திருமுகம் இயக்கிய படம். கே.வி.மகாதேவன் இசை. சரோஜாதேவி ஹீரோயின்.
விக்ரமாதித்தன்: பாரதி புரொடக்ஷன் தயாரித்து, டி.ஆர்.ரகுநாத் இயக்கிய படம். எஸ்.ராஜேஷ்வரராவ் இசை. பத்மினி ஜோடி.
(சிறப்பு குறிப்பு 4 படங்களில் சரோஜாதேவிதான் ஹீரோயின், ஒரு படத்தில் மட்டும் பத்மினி)
சிவாஜி நடித்த படங்கள்
ஆலயமணி: கே.சங்கர் இயக்கத்தில் பி.எஸ்.வி பிக்சர்ஸ் தயாரித்த படம். விசு&ராம் இசை. ஜோடி சரோஜாதேவி. இவர்கள் தவிர எஸ்.எஸ்.ராஜேந்திரன்-&விஜயகுமாரி ஜோடியும் நடித்திருந்தனர்.
பலே பாண்டியா: பத்மினி பிக்சர்ஸ் தயாரிப்பு, பி.ஆர்.பந்துலு இயக்கம், விசு&ராம் இசை. தேவிகா ஹீரோயின்
பந்த பாசம்: பீம்சிங் இயக்கம், சாந்தி பிலிம்ஸ் தயாரிப்பு, தேவிகா, சாவித்தி என இரு ஜோடிகள்.
நிச்சயதாம்பூலம்: ஜமுனா ஹீரோயின், விசு&ராம் இசை, வி.எஸ்.ரங்கா இயக்கம்.
பார்த்தால் பசி தீரும்: ஏவிஎம் தயாரித்த படம். இயக்கம் ஏ.பீம்சிங், ஜோடி சரோஜாதேவி. ஜெமினிக்கு ஜோடி சாவித்ரி, சவுகார் ஜானகி. கமல் குழந்தை நட்சத்திரமாக நடித்த படம்.
படித்தால் மட்டும் போதுமா: இதுவும் பீம்சிங் இயக்கிய படம், ரங்கநாதன் பிக்சர்ஸ் தயாரிப்பு, ஜோடி சாவித்ரி, விசு&ராம் இசை.
வடிவுக்கு வழைகாப்பு: புராண படங்களை இயக்கும் ஏ.பி.நாகராஜன் இயக்கிய சமூக படம். கே.வி.மகாதேவன் இசை. ஸ்ரீலட்சுமி பிக்சர்ஸ் தயாரிப்பு. ஹீரோயின் சாவித்ரி.
(சிறப்பு குறிப்பு வடிவுக்கு வளைகாப்பு தவிர மற்ற படங்கள் அனைத்திற்கும் எம்.எஸ்.விசுநாதன் இசை அமைத்துள்ளார்)
ஜெமினி கணேசன் நடித்த படங்கள்
காத்திருந்த கண்கள்: வசுமதி பிக்சர்ஸ் தயாரிப்பு, டி.பிரகாஷ்ராவ் இயக்கம், சாவித்ரி ஜோடி. விசு&ராம் இசை.
கொஞ்சும் சலங்கை: ராமன் புரொடக்ஷன் தயாரிப்பு, எம்.வி.ராமன் இயக்கம், சுப்பையா நாயுடு இசை. சாவித்ரி ஜோடி
பாத காணிக்கை: கே.சங்கர் இயக்க சரவணா பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. விசு&ராம் இசை. ஜோடி சாவித்ரி
சுமைதாங்கி: ஸ்ரீதர் இயக்க விசாலாட்சி பிலிம்ஸ் தயாரித்துள்ள படம். விசு&ராம் இசை. தேவிகா ஹீரோயின்
ஆடிப்பெருக்கு: கே.சங்கர் இயக்கம். ஹீரோயின் சரோஜாதேவி.
(சிறப்பு குறிப்பு 3 படங்களில் சாவித்ரி ஜோடி)
இதுதவிர டி.எம்.சவுந்தராஜன் நடிப்பில் உருவான பட்டினத்தார், முத்துராமன் நடித்த போலீஸ்காரன் மகள், எஸ்.எஸ்.ராஜேந்திரன் நடித்த சாரதா ஆகிய படங்களும் பொன்விழா கண்டுள்ளன.
காலத்தை வென்று நிற்கும் இந்தப் படங்களுக்கு நம்மால் பொன்விழா கொண்டாட முடியாவிட்டாலும் மனதளவில் நினைத்துக் கொள்வோமே...
-
-
-
-
-