-
மக்கள் திலகம் திரியில் புதிய வரவாய், தனது அருமையான பங்களி ப்பினை அளிக்கவிருக்கும், எனது அன்பு தம்பியும், எங்கள் அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நல சங்கத்தின் நாகை மாவட்ட பொறுப்பாளருமாகிய, 27வயது இளைஞர் - எம். ஜி. ஆர். குமார் என்றழைக்கப்படும் வேதாரண்யம் செல்வகுமார் அவர்களை அன்புடன் வரவேற்கிறேன்.
http://i58.tinypic.com/2d9a8w4.jpg
-
1970ஆம் ஆண்டு, உலகின் எட்டாவது அதிசயம், எங்கள் தங்கம், ஏழைப்பங்காளன் எம். ஜி. ஆர். அவர்கள் " உலகம் சுற்றும் வாலிபன் " படபிடிப்பை ஜப்பானில் வெற்றிகரமாக முடித்து, ஹாங்காங் வந்த பொழுது, தமிழ் பண்பாட்டுக் கழகத்தால் அவரை கௌரவிக்க நடத்தப்பட்ட விருந்து அழைப்பிதழ் (அபூர்வ பொக்கிஷம்) திருவாளர்கள் விக்ரம் சதீஷ் அசோகன், அவர்கள் மூலமாக பதிவிட்ட சகோதரர் திரு. சைலேஷ் பாசு அவர்களுக்கு நன்றி.
http://i59.tinypic.com/9tip39.jpg
-
புரட்சித்தலைவரின் 27வது நினைவு நாளினையொட்டி, சென்னை மற்றும் வேலூர் மாவட்டங்களில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் மற்றும் சுவரொட்டிகளை , அருமையான கோணத்தில், படம் பிடித்து திரியில் அழகாய் பதிவிட்ட திருவாளர்கள் லோகநாதன் மற்றும் வேலூர் ராமமூர்த்திக்கு எனது அன்பு கலந்த நன்றி !
http://i58.tinypic.com/axzmte.jpg
-
தமிழ் திரையுலகில் விளம்பரமின்றி, முன்பதிவில் மகத்தான சாதனை புரிந்து, புதிய சகாப்தம் படைத்த, நம் மன்னவனின் "உலகம் சுற்றும் வாலிபன் " காவியத்தை பற்றி விரிவாக அலசி, அற்புதமாய் பதிவினை மேற்கொண்ட அன்பு சகோதரர் திரு. கலைவேந்தன் அவர்களுக்கும் எனது பணிவான நன்றி !.
http://i60.tinypic.com/12479qg.jpg
தங்கள் அருமையான பதிவுகள் தொடரட்டும், இந்த திரி சிறக்கட்டும். மக்கள் திலகத்தின் அன்பர்கள் வாழ்த்தட்டும்.
-
தினசரி பதிவுகள் மேற்கொண்டு இத்திரியினை வழி நடத்தி செல்லும் திரு. வினோத் அவர்களுக்கும், அரிய செய்திகளை பலரும் அறிய, பதிவிட்டு வரும் மக்கள் திலகத்தின் மூத்த ரசிகரும், அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நலச் சங்க ஆலோசகருமாகிய திரு. வரதகுமார் சுந்தராமன் என்கின்ற சி. எஸ். குமார் அவர்களுக்கும் நன்றி !
http://i62.tinypic.com/2ludv68.jpg
அபிநயசரஸ்வதி சரோஜாதேவி அவர்களின் பிறந்த நாளை (ஜனவரி 7ம் தேதி) முன்னிட்டு,, மக்கள் திலகத்துடன் அவர் இணைந்து நடித்த காவியங்களை அடக்கி கவிதை புனைந்தமைக்கு திரு. வரதகுமார் சுந்தராமன் என்கின்ற சி. எஸ். குமார் அவர்களுக்கு சிறப்பு பாராட்டுக்கள். .
-
இத்திரியினில் தொடர்ந்து பதிவுகளை மேற்கொண்டு வரும் திரு. யூகேஷ் பாபு, திரு. வி.பி. சத்யா, உள்ளிட்ட ஏனைய அன்பர்களுக்கும், அவ்வப்போது தங்கள் பங்களிப்புகளை அளித்து வரும், திரு. பிரதீப் பாலு, திரு. சேலம் ஜெய்சங்கர், திரு. சுகாராம், திரு. கோவிந்தராஜ் ,ஆகியோருக்கும் நன்றி !
http://i58.tinypic.com/mht5at.jpg
-
இதய தெய்வம் பேரறிஞர் அண்ணா அவர்களுடன், அவரின் இதயக்கனி தோன்றும் அற்புத புகைப்படத்தை செய்தியுடன் வெளியிட்ட "பாக்யா" இதழுக்கும், அதனை பதிவிட்ட திரு. திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்களுக்கும் எனது நன்றி !
http://i60.tinypic.com/5oe3p.jpg
-
-
-