Originally Posted by Jilaba
நீங்கள் சொவதை நானும் நம்பத் தயாராயில்லை. உங்கள் கணவரின் அடி உதைகளுக்கு பயந்து பொய் சொலிகிறீர்களோ என்று சந்தேகப்படுகிறேன்.
காரணம், திருமணமான எந்த ஒரு பெண்ணும் ஆணாதிக்க கொடுமையில்லாமல் வாழ்வதேயில்லை. பலர் உங்களைபோல வெளியில் சொல்லப் பயந்து மூடி மறைக்கிறார்களேயன்றி, அவர்கள் சந்தோஷமாக வாழ்கிறார்கள் என்று அர்த்தமல்ல. உங்கள் கணவரை திருப்திப்படுத்த இப்படியெல்லாம் ஒரேயடியாக பொய்களை அரங்கேற்றாதீகள். நமக்கு தெரிந்த வகையில் திருமண்மான பெண்களெல்லாம் தங்கள் கணவர்கள் என்ற குடிகாரப் பேய்களிடம் இருந்து அடைந்தது எல்லாம் கொடுமைகளைத்தவிர வேறு ஒன்றுமில்லை.
ஒருவேளை... (சந்தேகம்தான்)... உங்க கணவர் அப்படியிருப்பது உண்மையென்றால். அது கோடியில் ஒன்று. இப்படி அபூர்வ கேஸ்களை வைத்து மொத்த சமுதாயத்திலும் ஆண்கள் நல்லவர்கள் என்று சொல்ல முடியாது.
பெண்களை அடிமைகளாக்கும், 'திருமணம்' என்னும் கொடிய வழக்கம் ஒழிக்கப் படவேண்டிய ஒன்று.