Originally Posted by Avadi to America
http://onlysuperstar.com/?p=6399
கடந்த சில வருடங்களாக கோடைக்காலங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினி பொதுமக்கள் பயன் பெறும் பொருட்டு தனது ராகவேந்தரா மண்டபத்தில் இலவச மோர் போந்தல் அமைத்து வருகிறார் என்பது நமக்கு தெரிந்ததே. நமது தளமும் ஒவ்வொரு ஆண்டும் அதை கவர் செய்து வந்திருக்கிறது.
இந்த ஆண்டும், ராகவேந்திர மண்டபத்துக்கு வெளியே மோர் பந்தல் அமைக்கப்பட்டுவிட்டது. ஜில்லென்ற ஐஸ் மோர் அனைவருக்கும் வழங்கப்படுகின்றது. சுத்தமான பாலை வாங்கி, உரையூற்றி, தயிராக்கி, கறிவேப்பில்லை உள்ளிட்ட பொருட்களை அரைத்து அதை சேர்த்து, ஐஸ் போட்டு சுவையான ஜில்லென்ற மோர் வழங்கப்படுகின்றது.
இதற்காக சுமார் 200 லிட்டருக்கும் மேல் தயிர் தினசரி உறையூட்டப்பெற்று மோர் தயாரிக்கப்படுவதாக ஊழியர்கள் தெரிவித்தனர். சுட்டெரிக்கும் வெயிலுக்கு இதமாக வழங்கப்படும் இந்த மோரை வாங்கி குடிக்க அந்த பகுதி மக்கள் மிகவும் ஆர்வம் காட்டுகின்றனர். காலை 9.30 முதல் மதியம் 2.30 வரை இது கிடைக்கும். அங்கேயே எவ்வளவு வேண்டுமானாலும் குடிக்கலாம். எடுத்து செல்ல அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தலைவரைப் பின்பற்றி ரசிகர்களும் அவர்கள் சக்திக்கேற்ப ஆங்காங்கு தண்ணீர் பந்தல் அமைத்துவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.