வசூல் புலிகளின் பொங்கல் பாய்ச்சல்
http://tamil.thehindu.com/cinema/cin...?homepage=true
'ஆரம்பம்' படத்தின் வசூல் மழையால், விநியோகஸ்தர்கள் தற்போது உரிமைக்கு மோதிக் கொண்டிருப்பது அஜித்தின் 'வீரம்' படத்திற்குத் தான். அதற்குப் பிறகு விஜய்யின் 'ஜில்லா'. 'கோச்சடையான்' படத்திற்கு இதுவரை எந்த ஒரு விநியோகஸ்தரும் வாய்திறக்கவில்லை. இன்னும் படத்தினை விளம்பரப்படுத்தும் பணிகள் துரிதப்படுத்தப்படுத்தவில்லை என்பது முக்கியான காரணமாகும்.
பொங்கல் ரேஸில் 'ஜில்லா' படத்தின் விநியோக உரிமையை ஆர்.பி.செளத்ரி கொடுத்து முடித்துவிட்டார். 'வீரம்' படத்தினைப் பொறுத்தவரை யாருக்கு உரிமை என்று கடுமையான போட்டி நிலவி வருகிறது. 'கோச்சடையான்' பொறுத்தவரை ரஜினி பிறந்த நாளான 12-12-2013 அன்று நடைபெற இருக்கும் இசை வெளியீடு, டிரெய்லர் ஆகியவற்றைப் பொருத்தே படத்தின் விநியோக உரிமை போட்டி இருக்கும் என்று பேச்சுகள் நிலவுகின்றன.