எங்கள் இதய தெய்வம் மதம் கடந்து மாநிலம் கடந்து கடல் கடந்து எல்லோர் இதயங்களிலும் வாழ்பவர் என்பதற்கு சங்கே முழங்கு என அவர் புகழ் பரவி ஒலிக்கும் பெங்களூருவில்
http://i49.tinypic.com/2v19g6x.jpg
Printable View
எங்கள் இதய தெய்வம் மதம் கடந்து மாநிலம் கடந்து கடல் கடந்து எல்லோர் இதயங்களிலும் வாழ்பவர் என்பதற்கு சங்கே முழங்கு என அவர் புகழ் பரவி ஒலிக்கும் பெங்களூருவில்
http://i49.tinypic.com/2v19g6x.jpg
குழந்தை உள்ளம்
http://i45.tinypic.com/10fufe8.jpg
மக்கள் திலகத்தின் செல்வாக்கு .
நானும் எனது சக அலுவலக நண்பர்களும் டெல்லியில் உள்ள எங்களது தலைமை அலுவலகத்தில் நடந்த கருத்தரங்கத்தில் சுமார் 200 மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனர் .
பல்வேறு தலைப்புகளில் நிகழ்சிகள் நடைபெற்றசமயம்
முன்னேற்றம் பற்றி குறிப்பிடுகையில்
மக்கள்திலகம் அவர்கள் நடித்த படங்களில் இடம் பெற்ற
1. நான் ஏன் பிறேந்தேன் .... நாட்டுக்கு நலமென்ன ...
2. ஏன் என்ற கேள்வி .. இங்கு கேட்காமல் ,
3. உழைக்கும் கைகளே ... உருவாக்கும் கைகளே
4. ஒன்றே குலமென்று பாடுவோம்
பாடல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து நிகழ்ச்சி நடத்திய பேராசிரியர் மக்கள் திலகத்தின் பெயரை சொல்லிய பொது அரங்கமே கை தட்டலால் அதிர்ந்தது .
பிறகு பாடல் வீடியோ போட்டு காண்பிக்க பட்டபோது
மக்கள் திலகம் தோன்றியபோதும் , அவரது பாடல் காட்சியின் நடிப்பை பார்த்தும் மொழி தெரியாத பலபேர் ரசித்து கைதட்டிய காட்சி மறக்க முடியாது .
மக்கள் திலகம் மறைந்து 25 ஆண்டுகள் கடந்த பின்னரும் அவரது புகழும் , பாடலும் இன்றும் பசுமையாக வாழ்ந்து கொண்டு வருவது நமது மக்கள் திலகம் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தியாகும் .
வட மாநில இந்தி பேசும் நண்பர்கள் பலர் இன்று மக்கள் திலகத்தின் படங்களை பற்றி அறிந்து கொள்ள ஆர்வமாக உள்ளது வியப்பை தருகிறது .
நானும் மக்கள் திலகத்தின் பாடல்கள் அடங்கிய வீடியோ காசெட்டை அன்பளிப்பாக கொடுத்து உள்ளேன் . அதை பார்த்து அவர்கள் மக்கள் திலகத்தின் சுறுசுறுப்பையும் , நடிப்பையும் பாராட்டினர் .
மேலும் அவர்களுக்கு மக்கள் திலகம் mgr part -4
இனைய தளத்தை பற்றியும் கூறினேன் . மறைந்த ஒரு நடிகருக்கு இந்த அளவிற்கு ஒரு செல்வாக்கா என்று வியந்து போனார்கள் .
இந்த செய்தி 13-2-2013 அன்று எனக்கு ஏற்பட்ட அனுபவம் .உங்களுடன் பகிர்ந்து கொண்டேன் .
அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா என்ற பாடலுக்கேற்ப வாழ்ந்த புரட்சிதலைவர் குண்டடி பட்டபோதும் புன்னகை மாறாமல்
http://i47.tinypic.com/10y4ej8.jpg
அழகு...அன்பு...அமைதி..அடக்கம்..அனைத்தும் அமையப்பெற்ற அருந்தவபுதல்வர்
http://i47.tinypic.com/2ll205g.jpg
வீரத்தையும் கோபத்தையும் ஒன்றாய் காட்டும் முகபாவம்
http://i49.tinypic.com/2mityw.jpg
கிராமம் தோறும் கழக கொடியேற்றி அறிஞர் அண்ணாவை ஆட்சிகட்டிலில் அமர்த்திய தலைவர்
http://i47.tinypic.com/30dazvl.jpg
அமெரிக்காவில் தலைவர்..17.10.1987
http://i49.tinypic.com/35mgwmh.jpg
பொன்மனத்தலைவன் பற்றி ஓவிய நடிகர் சிவக்குமாரின் ஒப்பற்ற கட்டுரை
http://i48.tinypic.com/2gsn4ie.jpg
ராமன்தேடிய சீதை-1972
மக்கள் திலகம் நடித்த படங்களிலே அதிக உடைகள் [45 வகையான உடைகள் ]
அணிந்து ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்த படம் .
அன்பேவா படத்திற்கு பிறகு பணக்கார நாயகனாக நடித்த படம் .
மெல்லிசை மன்னரின் இசை அமைப்பில் அத்தனை பாடல்களும் சூப்பர் ஹிட் ,
காஷ்மீர் படபிடிப்பு கண்ணுக்கு குளிர்ச்சி .
மக்கள் திலகம் - அசோகன் மோதும் சண்டை காட்சி மிகவும் அற்புதம் .
1972 - மார்ச் மாதம் வந்த நல்ல நேரம் படம் மிக பிரமாண்டமான வெற்றியுடன் ஓடியதாலும் , 8 வார இடைவெளியில் நான் ஏன் பிறந்தேன் வெளியானதாலும்
எதிர் பார்த்த வெற்றி கிடைக்கவில்லை .
இலங்கையில் 100 நாட்கள் ஓடியது .
ரசிகர்கள் விரும்பி பார்த்த காட்சிகள்
மக்கள் திலகம் அறிமுக காட்சி
குடிசையில் வயதான தம்பதியரிடம் குறிப்பெடுக்கும் காட்சி
திரு வளர் செல்வியோ பாடலுக்கு மக்கள் திலகத்தின் பல வண்ண உடைகளில் தோன்றி நடனமாடும் காட்சி
மக்கள் திலகம் - நம்பியார் மோதும் சண்டை காட்சி
காஷ்மீரில் படகில் பாடும் என் உள்ளம் உந்தன் ஆராதனை - காவிய பாடல்
படார் - படார் - என்ற கலவை பாடல்
நல்லது கண்ணே .... மறக்க முடியாத காதல் பாடல்
ஒகெனெக்கல் -கிளைமாக்ஸ் காட்சி .
மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு இன்றும் மெகா ஹிட் காதல் காவியம் .
விகடன் பொக்கிஷம் சினிமா விமர்சனம் – 30-4-1972-இல் வந்தது. நன்றி, விகடன்!
ராமன் தேடிய சீதையில் தயாரிப்பாளர்கள் தேடி எடுத்திருக்கிற கதையம்சம் சுவையானது.
ஒரு லட்சிய மனைவியின் ஆறு குணங்கள் என்னென்ன என்று நிறைந்த வாழ்வு வாழும் ஒரு முதிய தம்பதியர் மூலம் அறிந்து, அந்தப் பெண்ணைத் தேடி மணந்துகொள்கிறான் கதாநாயகன். அந்த முயற்சியில் அவனுக்கு ஏற்படும் அனுபவங்கள்தாம் இப்படத்தின் கதை.
பாம்பாட்டி நடனம் முதல் காபரே வரை விதவிதமான நடனங்களை ஆடிக்கொண்டே இருக்கிறார் ஜெயலலிதா. ஆடை களையும் நடனத்தைக்கூட அவர் விட்டுவைக்கவில்லை. ஒரு நடனக் காட்சியில் அவருடைய ஆடை, கதாநாயகரான எம்.ஜி.ஆரே முகத்தைச் சுழித்துக்கொள்ளும் அளவு விரசத்தின் எல்லையைத் தொட்டுவிட்டாலும், அவர் நடனங்கள் கண்களுக்கு ரசமாகவே இருக்கின்றன.
எம்.ஜி.ஆருக்கு இந்தப் படத்தில் சற்று மாறுதலான பாத்திரம். ஏதாவது ஒரு பிரச்னையிலோ, போராட்டத்திலோ ஈடுபட்டு படம் முழுவதும் சீரியஸாக இல்லாமல் இருப்பதே அந்த மாறுதல்! லட்சிய மனைவி வேட்டையில் ஈடுபட்டிருக்கிறார் அல்லவா? அதனால்தானோ என்னவோ, ஆரம்பம் முதல் இறுதி வரை உற்சாகமாகவும் உல்லாசமாகவும் மாப்பிள்ளை மாதிரி தோன்றி, சிறப்பாக நடிக்கிறார். அசோகனுடன் அவர் போடும் சண்டை மயிர்க்கூச்செறிய வைக்கிறது.
எம்.ஜி.ஆரின் கன்னம் அதிர்ஷ்டம் செய்தது. அவர் கன்னத்தில் பாம்பு கொத்திய விஷத்தை ஜெயலலிதா தன் வாயினால் உறிஞ்சி எடுக்கிறார்! (சென்ஸார் விஷயத்தில் எல்லாரும் இப்படிச் சாமர்த்தியமாக இருக்கத் தெரிந்து கொண்டிருந்தால், கோஸ்லா கமிட்டிக்கு வேலையே இருந்திருக்காதே!)
ஆரம்பத்திலேயே, ஒரு சில நிமிட சந்திப்பின்போதே சீதை யைத் தன் லட்சியப் பெண்ணாகத் தேர்ந்தெடுத்துவிட்ட பின் கதையில் சுவாரசியம் ஏற்படுமா? அதேபோல் சீதை இறந்துவிட்டாள் என்று கேள்விப்பட்டதும் கதாநாயகன் வேறு பெண்ணைத் தேடிப் புறப்படுவதும் உயர்வாக இல்லை.
இந்தக் குறைகளெல்லாம் ஆழமாகச் சிந்திக்க ஆரம்பித்தால்தான் தோன்றும். ஆனால், படம் பார்க்கும்போது அப்படியெல்லாம் நம்மைச் சிந்திக்கவிடாமல் கலகலவென்று பொழுதுபோக்குச் சம்பவங்களால் நம் கவனத்தைத் திருப்பிவிடுகிறார்கள்!
About these ads
நான் ஏன் பிறந்தேன் - 1972.
1972 பொறுத்த வரை மக்கள் திலகத்திற்கு பெயரும் புகழும் கிடைத்த வரலாற்று ஆண்டாகும் .
சென்னை நகரில் மாட்டுக்காரவேலன் படத்திற்கு பின் 4 திரையரங்கில் 100 நாட்கள் ஓடிய படம் நல்ல நேரம் - 1972 . முதல் பாதி ஆண்டில் வசூலில் சாதனை செய்த படம் . 8 அரங்கில் 100 நாட்கள் ஓடியது .
சங்கே முழங்கு - ராமன் தேடிய சீதை - தொடர்ந்து மக்கள் திலகம் நடித்த நான் ஏன் பிறந்தேன் -
குடும்ப சித்திரம் வெளியான நேரத்தில் மக்கள் திலகத்திற்கு இந்தியாவிலே சிறந்த நடிகருக்கான ''பாரத் '' பட்டம் கிடைத்தது .உலகமெங்கும் உள்ள மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி .
நான் ஏன் பிறந்தேன் - மக்கள் திலகத்தின் சிறந்த நடிப்புடன் - இனிய பல பாடல்களுடன் வந்த காவியம் . சங்கர்- கணேஷ் இசைஅமைப்பில் முதல் படம் .
அத்தனை பாடல்களும் கற்கண்டு .
மக்கள் திலகத்தின் இயற்கையான நடிப்பு பிரமாதம் .
இந்த படம் நன்கு ஓடி கொண்டிருக்கும்போது தமிழக அரசியலில் புரட்சி நடிகரின் திரைப்பட செய்திகள் இருட்டடிப்பு - அரசியல் துரோகங்கள் - மறைமுக மிரட்டல்கள் - நிர்பந்தங்கள்
என்ற சூழ் நிலையில் படமும் பாதிக்க பட்டது .
அத்தனை தாக்குதல்களையும் தனி மனிதனாக நின்று சந்தித்த புரட்சி நடிகர் - அக்டோபர் -1972
புரட்சி தலைவரானார் .
நான் ஏன் பிறந்தேன் நாயகன் - 1972 - நாடு போற்றும் நாயகனாய் மாறிய ஆண்டு .
மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு 1972 அரசியல் - சினிமாவில் ஒரு உலக அளவில் கிடைத்த
வெற்றி ஆண்டு .
பாரத் பட்டம் - இந்தியாவின் சிறந்த நடிகர்
புரட்சி தலைவர் - உலக வரலாற்றில் ஒரு நடிகர் தனி இயக்கம் கண்டு வெற்றி பெற்ற ஆண்டு .
http://www.youtube.com/watch?v=m90_JEPC2RM
Ek Tha Raja 1951
நம் தலைவரின் ஸ்டைலை பாருங்கள்..பேசுவதை வேடிக்கை பார்க்கும் நம் தலைவரும்..இவர்கிட்ட ரோதனையா போச்சுன்னு அறிஞர் அண்ணாவும் நினைக்கிறார் போலும்
http://i50.tinypic.com/k130r5.jpg
நம் குலதெய்வத்திற்கு நெய் தீபமும் வணங்கும் பக்தர்களும்
http://i50.tinypic.com/30ll344.jpg
http://i47.tinypic.com/95ucu8.jpg
[SIZE=7][/SIZE
தொடரும் ......
தேவர் பிலிம்ஸ் தர்மம் தலைகாக்கும் - பொன்விழா நிறைவு ஆண்டு
22-1-2013,
http://i47.tinypic.com/119uicz.jpg
http://i46.tinypic.com/1087jp4.jpg
பணக்காரி திரைப்படத்தில் மக்கள் திலகம்