Originally Posted by
Rama Doss
அனைத்து நடிகர் திலக ரசிகர்களுக்கும் எனது வந்தனம். என் பெயர் ராமதாஸ். ஒய்வு பெற்ற தமிழ் ஆசிரியர். எனது சொந்த ஊர் தஞ்சாவூர். தற்சமயம் கல்கத்தாவில் உறவினர்களுடன் வசித்து வருகிறேன். நான் பல ஆண்டுகளாக நடிகர் திலகம் திரியை வாசித்து மகிழ்வுற்று வருகிறேன். என்னுடைய தமிழறிவிற்கு உரம் போட்டு வித்திட்டவர் நமது அய்யா நடிகர் திலகம் அவர்கள். நான் சிவாஜி அவர்களின் நிரந்தர ரசிகன். நடிகர் திலகம் திரியின் அனைத்து உறுப்பினர்களின் பங்களிப்பையும் பல ஆண்டு காலங்கள் தொடர்ந்து கவனித்து வருகிறேன். குறிப்பாக ஜோ, முரளி, ராகவேந்திரன், பம்மல் சுவாமி, கார்த்திக், சாரதா, கோபால், பார்த்தசாரதி, வாசுதேவன், ராகுல்ராம் இவர்களின் எழுத்துக்கள் என்னை இங்கே ஈர்த்து இழுத்து வந்து விட்டது. இங்கிருப்பவர்கள் போல எனக்கு நிறைய விவரங்கள் தெரியாது. ஆனால் பெரும்பான்மையான நடிகர் திலகத்தின் படங்களை இன்றுவரை பார்த்து பார்த்து மகிழ்கிறேன். ஒய்வு கிடைக்கையில் நிச்சயம் நடிகர் திலகத்தின் அருமையான திறமைகளை உங்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்வேன்.
அனைவருக்கும் என் வாழ்த்துக்களுடன் கூடிய நன்றிகள்.