Congratulations Mr Gopal.
If anyone have the facility please upload the article in Ananda Vikatan for the benefit of millions of
NT's Fans.
Regards
Printable View
Congratulations Mr Gopal.
If anyone have the facility please upload the article in Ananda Vikatan for the benefit of millions of
NT's Fans.
Regards
மெட்டி’ படம் இரு சகோதரிகளின் கதையைப் பேசிய படம். அந்தப் படம் ஸ்வீடன் இயக்குநர் இங்மெர் பெர்க்மென்னின் படங்களைப் போல இருப்பதாக சிலர் பாராட்டினார்கள். அதை அபத்தமான பாராட்டாகவே நான் நினைத்தேன். திரைப்பட ரசனை பற்றிய அறியாமையில் பேசுகிறார்கள் என நினைத்தேன். எனது வியட்நாம் ரசிகர் ஒருவரும் தொலைபேசியில் 'மெட்டி’ படம் இங்மெர் பெர்க்மென்னின் 'க்ரைஸ் அண்டு விஸ்பர்ஸ்’ படத்தின் தரத்தில் இருப்பதாகச் சொன்னார். 'இவர் என்ன இப்படிச் சொல்கிறாரே?’ என அந்தப் படத்தைப் பார்த்தேன். அதுவும் 'மெட்டி’யும் இரு சகோதரிகளின் கதைகளைப் பேசியது என்பதைத் தவிர, ஏணி வைத்தாலும் எட்டாத உயரத்தில் இருந்தது இங்மெர் பெர்க்மென்னின் படம். 'இரண்டு படங்களையும் எப்படி ஒப்பிடலாம்? மோசமான ரசனை கொண்டவர் நீங்கள்...’ என்று நான் வியட்நாம் நண்பரைத் திட்டினேன். ஆனால், பிறகு யோசித்தால், 'க்ரைஸ் அண்டு விஸ்பர்ஸ்’, 'மெட்டி’... இரண்டு படங்களின் ஒளிப்பதிவுத் தரமும் ஒன்றுபோலவே இருந்ததை உணர்ந்தேன். 'க்ரைஸ் அண்டு விஸ்பர்ஸ்’ படத்தின் ஒளிப்பதிவாளர் ஸ்வென் நீக்விஸ்ட் உருவாக்கிய அதே தரத்தை, அபாரமான தொழில்நுட்ப வசதிகள் இல்லாத இந்தியாவில் கொண்டுவந்திருந்தார் அசோக்குமார். அதுதான் அவரது பலம்!''
நன்றி : விகடன்.காம்
விகடன் சினிமா ஸ்பெஷலில் இயக்குநர் மகேந்திரனின் பேட்டி இடம் பெற்ற பக்கங்களின் நிழற்படங்கள்
page 1
http://i1146.photobucket.com/albums/...psef37651c.jpg
page 2
http://i1146.photobucket.com/albums/...ps2fb16ed5.jpg
page 3
http://i1146.photobucket.com/albums/...psb0fdf4e4.jpg
மேற்காணும் கட்டுரையில் கோபால் அவர்களைப் பற்றி பெயர் குறிப்பிடாமல் வியட்நாம் நண்பர் என மகேந்திரன் குறிப்பிட்ட பகுதி..
http://i1146.photobucket.com/albums/...ps2c6efa5c.jpg
கோபால் சுட்டிக்காட்டிய Cries and Whispers என்ற இங்மர் பெர்கமனின் திரைப்படத்தின் நிழற்படம்
http://graphics8.nytimes.com/images/...ticleLarge.jpg
Cries and Whispers படத்தின் இயக்குநர் Ingmar Bergman
http://www.tasteofcinema.com/wp-cont...rgman-film.jpg
மெட்டி திரைப்படத்தின் நிழற்படம்
http://4.bp.blogspot.com/--oRbLHHhTl.../snapshot2.jpg
http://3.bp.blogspot.com/_flfvbxESWP...%2BGanesan.gif
தான் நேசித்த தலைவருனும் தன்னை நேசித்த தலைவியுடனும் நடிகர் திலகம்...
இன்றைக்கு இந்திரா காந்தி நினைவு நாள்.. நடிகர் திலகத்தின் சிறப்பினை உணர்ந்து உரிய மரியாதையும் கௌரவமும் தந்த இந்திரா காந்தியின் நினைவு நாளில் அவர் நினைவைப் போற்றுவோம்.
நன்றி நண்பர்களே. மகேந்திரன் அவர்களும் ,நானும் உலக படங்களை அலசுவோம்.அவருடைய படங்களை விமரிசிப்பதிலேயே கூட சில சமயங்கள் முரண்கள் இருக்கும்.அப்படி ஒன்றுதான் இந்த உரையாடல்.
ஆஸ்கார் விருது பெற்ற படங்களை விட கான்ஸ் பிலிம் பெஸ்டிவல் பரிசு பெற்றவை தரத்தில் ஓங்கி நிற்கும். அமெரிக்கர் படங்கள் (ஹாலிவுட் )நம்மை போல formula கொண்டு வெகுஜன ஈர்ப்புக்காக சமரசம் செய்து கொள்பவை. ஆனால் ஐரோப்பிய படங்கள் ஒரு இயக்குனரின் private internalization வகை. தனது பிரத்யேக ரசனை துய்ப்புக்காக ஒரு இயக்குனர் ,எந்த சமரசமும் இன்றி படமெடுப்பார். Fellini ,Godart ,Bergmen போன்றவர்கள் இந்த ரகம்.
அந்த வகையில் மெட்டி படம் அமைந்தது. இதில் பாத்திர வார்ப்பு (கொஞ்சம் இளையராஜா பாடல் அபத்தங்கள் கலந்தாலும்),படமாக்கம் ,internalization என்ற வகையில் ஐரோப்பிய ,குறிப்பாக Bergmen படங்களின் பாதிப்பு இருந்ததாக குறிப்பிட்டு ,அவரை அந்த படம் பார்க்க தூண்டினேன்.
மகேந்திரன் இயக்கத்தில் எனது பிடித்தம் பூட்டாத பூட்டுக்கள்.
Well said Gopal..
சரியாகச் சொன்னீர்கள்... ஒரு முறை சென்னை தேவி திரையரங்கில் ஃபிரெஞ்சு திரைப்பட விழாவின் போது பிரபல ஃப்ரெஞ்சு இயக்குநர் Claude Lelach அவர்களை சந்திக்க வாய்ப்புக் கிடைத்து உரையாடிய போது அவர் சொன்ன அதே விஷயத்தைத் தான் தாங்கள் சொல்லியுள்ளீர்கள்.
ஃபிரெஞ்சு திரைப்படங்களைப் பொறுத்த மட்டில் எவ்வித குறுக்கீடுமின்றி படைப்புகளை அவர்களால் தரமுடிகிறதாகவும் அதனால் எந்த விதத்திலும் சமரசத்திற்கு இடம் கொடாமல் அவர்களால் படங்களைத் தர முடிகிறதாகவும் அப்போது என்னிடம் அவர் கூறினார். அவருடைய ஆங்கில உச்சரிப்பு சற்று சிரமமாக இருந்தது, சரளமாக இல்லாமல் சற்றே தடுமாறினார் என்றாலும் புரிந்து கொள்ளும் அளவிற்கு இருந்தது.
The greatness of NT - from the old post of Saradha Madam
எம்.ஜி.ஆர், தனிக்கட்சி ஆரம்பித்தபின். முதல் படமாக வந்தது 'உலகம் சுற்றும் வாலிபன்'. அப்படத்தை வெளிவராமல் தடுக்க அப்போதிருந்த கலைஞர் அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. அவற்றில் ஒன்று, சுவரொட்டிகளுக்கான வரியை சென்னை மநகராட்சி மூன்று பங்காக உயர்த்தியது. அதனால் அப்படத்துக்கு சென்னையில் ஒரு போஸ்ட்டர் கூட ஒட்டப்படவில்லை. செய்தித்தாள் விளம்பரங்களும், ஸ்டிக்கர் விளம்பரங்களும்தான். (பாவம், அந்த வரி உயர்வினால் மற்ற படங்கள்தான் வெகுவாக பாதிக்கப்பட்டன).
அடுத்த தடங்கலாக, 'உ.சு.வாலிபன் படத்துக்கு யாரும் தியேட்டர் தரக்கூடாது' என தியேட்டர் உரிமையாளர்கள் அரசினால் மிரட்டப்பட்டனர். அரசைப் பகைத்துக்கொள்ள விரும்பாத தியேட்டர் உரிமையாளர்கள் உ.சு.வாலிபன் படத்தைத் திரையிடத்தயங்கினர். அப்போது ஒரு கலைஞனுக்கு ஏற்பட்ட பிரச்சினை தனக்கும்தான் என்பதை உணர்ந்த நடிகர் திலகம், 'அப்படி யாரும் தியேட்டர் தரவில்லையென்றால், சிவாஜி புரொடக்ஷன்ஸ் ஒப்பந்தத்தில் இருக்கும் சாந்தி, கிரௌன், புவனேஸ்வரி தியேட்டர்களில் அண்ணனின் படம் வெளியாகட்டும். நாங்கள் தியேட்டர் தருகிறோம்' என்றார். அப்போது நடந்த 'மேக்கப்-மென் சங்கக்'கூட்டத்தில் மக்கள் திலகம், நடிகர்திலகம் இருவரும் கலந்துகொண்டனர். அப்போது அந்த மேடையில் மைக்கில் பகிரங்கமாகவே நடிகர்திலகம் இதை அறிவித்தார்.
மாநில அரசு இடைஞ்சல் செய்தபோதும், மத்தியில் இருந்த இந்திரா அரசுடன் எம்.ஜி.ஆருக்கு சுமுகமான உறவு இருந்ததால், அவர்கள் தலையீட்டில் தியேட்டர் பிரச்சினை தீர்க்கப்பட்டு, சென்னையில் தேவி பாரடைஸ், அகஸ்தியா, உமா, சீனிவாசா ஆகிய தியேட்டர்கள் புக் ஆகின. பின்னர் சீனிவாசா தியேட்டர் கைவிடப்பட்டது. மற்ற மூன்றிலும் உலகம் சுற்றும் வாலிபன் வெளியானது.
from Mr Murali Srinivas old post
சினிமா எக்ஸ்பிரஸ் இணையதளத்தில் வெளியாகியிருக்கும் ஒரு கட்டுரை.
இதை எழுதியிருப்பவர் சித்ரா லட்சுமணன்
உள்ளதைச் சொல்கிறேன்: ஆற்றல் மிக்க விழிகள்!
""சிவாஜியின் மிகப்பெரிய சொத்து அவருடைய ஒளிமிக்க, உயிர்ப்புள்ள கண்கள்தான். அந்த கண்களை வைத்துத்தான் பரிவை, பாசத்தை, பயத்தை, கோபத்தை, அழுகையை, ஆச்சர்யத்தை, அப்பாவித்தனத்தை, ஏக்கத்தை, ஏமாற்றத்தை, வீரத்தை, விவேகத்தை அவர் அதிகமாக வெளிப்படுத்தினார். "பாசமலர்' படத்தில் "மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்...' பாடல் வரிகள் துவங்குவதற்கு முன் பால் தம்ளர் கையில் ஏந்தி வந்தவர், கண்ணுறங்கும் தங்கையைப் பார்த்து, வட்டக் கருவிழியின் அடியில் இலேசாக நீர் தேக்கி, பாசத்தை வெளிப்படுத்துவார்.
"பாவமன்னிப்பு' படத்தில் எம்.வி.ராதம்மாதான் தன்னைப் பெற்ற அன்னை என்று அரியாத சிவாஜி, ஒரு காட்சியில் நன்றிப் பெருக்கால் "அம்மா, அம்மா, அம்மா' என்று பாசத்தை, நன்றியை கண்களில் தேக்கி அழுது கொண்டே சிரிப்பார். புத்தரின் சாந்தத்தையும் அந்தக் கண்கள் வெளிப்படுத்தும். போதையுடன் தள்ளாடும் குடிகாரனையும் அந்தக் கண்கள் வெளிப்படுத்தும். அப்படி ஒரு ஆற்றல் மிக்க விழிகள் அவை. அழகான சிறிய உதடுகள் அவருக்கு. சிரித்தால் கன்னங்களில் எலுமிச்சம் பழம் போல கன்னச் கதுப்புகள், சிரிப்புக்கு அழகூட்டும். இடது பக்கமுள்ள சிங்கப்பல், கவர்ச்சியைக் கூட்டும்.
தமிழை அவர்போல் உச்சரித்த நடிகர்கள் இதுவரை பிறக்கவில்லை. தமிழ் மொழியில் அவரளவுக்கு அதிகப்படியான எண்ணிக்கையில் தமிழ் வார்த்தைகளைப் பேசி நடித்த நடிகர் வேறு யாருமே இருக்க முடியாது. ஒரு நடிகன் வேஷம் கட்டுவதிலேயே 50 சதவிகித மார்க் வாங்கிவிட வேண்டும் என்று சொல்வார். விதவிதமான வேடம் அணிந்து பார்ப்பதில் அவருக்கு அடங்காத வெறி உண்டு. சரித்திர நாயகர்களாக இருந்தாலும் சரி, புராண வேடங்களாக இருந்தாலும் சரி, சமூகத்தில் காணும் வித்தியாசமான மனிதரின் வேடமாக இருந்தாலும் சரி அவற்றை ஆதாரபூர்வமாகச் செய்து பார்க்க பெரிதும் முயற்சி எடுத்துக் கொள்வார் சிவாஜி.
"கட்டபொம்மன்', "கர்ணன்', "ராஜ ராஜ சோழன்', "அரிச்சந்திரன்', "ஜஹாங்கீர்' என ராஜா வேடம் போடும்போது உடைகள், கீரிடம், முகத்தின் தோற்றம், தாடி, மீசை, புருவம் இவற்றிலும், தலை முடியிலும் மாற்றங்களைத் தெளிவாகக் செய்வார். அதேபோல் ராமன், இராவணன், கிருஷ்ணன், நாரதர் என்று புராண வேடங்களை ஏற்கும்போதும் தேர்ந்த நாடகத்துறை உடையலங்கார நிபுணர்களை வைத்துக்கொண்டு காதில் அணியும் தோடு, ராமர், பரசுராமர், அர்ஜுனன் கையில் உள்ள ஆயுதங்களை எல்லாம சரி பார்ப்பார்.
"பாடி லாங்குவேஜ்' என்று சொல்கிற உடல்மொழி அவருக்கு முதல் படத்திலேயே வந்து விட்டதை "கல்லைத்தான், மண்ணைத்தான், காய்ச்சித்தான், குடிக்கத்தான், கற்பித்தானா' என்று நடிக்கும் ஒரே காட்சியை "பராசக்தி' படத்தில் பார்த்தாலே புரிந்துவிடும்.
சிவாஜி வேடத்தில் அவர் நடித்ததை நாம் பார்த்திருக்கிறோம். அந்த தலைப்பாகை, தாடையிலிருந்து நீண்ட தாடி, சிக்கென்ற ராஜ உடை, நீண்ட வாள் இவற்றுடன் நீண்ட வசனத்தை, அங்க அசைவுகளுடன் பேசி, சிங்க நடையோடு அவர் நடித்ததை இன்னொருவர் முயன்று பார்க்கட்டும். சங்கிலியால் கட்டிச் சபையில் இழுத்துவர புலி போல் ஒரு நடை நடந்து வருவார் "மனோகரா' படத்தில்! மரமேறும் சாமுண்டி கிராமணியாய் "காவல் தெய்வத்தில்' கைத்தட்டல் பெறவே ஒரு நடை நடப்பார். "போனால் போகட்டும் போடா' பாடலில் இசைக்கேற்ப, தாளத்துக்கேற்ப ஒரு நடை நடப்பார். "சட்டி சுட்டதடா, கை விட்டதடா' பாடலுக்கு ஒரு வித்தியாசமான "வாக்கிங் ஸ்டிக்' ஊன்றிய நடை. அப்பர் சுவாமிகளாக "திருவருட் செல்வரில்' முதிர்ந்த பெரியவர் நடை.
"வெற்றிவேல், வீரவேல், சுற்றி வந்த பகைவர் தம்மை தோள் நடுங்க வைத்த எங்கள் சக்திவேல்' என்ற "கந்தன் கருணை' பாடலில் முழங்கும் போர் முரசுக்கு இசைவாக ஒரு கம்பீர நடை. அவருடைய நினைவாற்றல், கிரஹிக்கும் சக்தி அபாரமானது. காட்சிக்கான வசனங்களை மற்றவர்களைப் படிக்கச் சொல்லி கேட்டு மனப்பாடம் செய்து கொண்டு நடிப்பதில் அவரைவிட வேறு யார் செய்ய முடியும்? நடிக்கின்ற எந்தக் காட்சியிலும் உணர்ச்சியின் உச்சத்தைத் தொடும் சிவாஜி அடிக்கிற காட்சிகளில் பாசாங்கு செய்ய மாட்டார், பட்டையைக் கழற்றி விடுவார்.
"உயர்ந்த மனிதன்' உச்சகட்ட காட்சியில் திருட்டுப் பழி சுமத்தப்பட்ட தன்னை பிரம்பால் அடிக்கும் காட்சியில் பிரம்பு நாலாய் தெரிக்கும் அளவிற்கு விளாசித் தள்ளி விட்டார். அவரைக் கட்டுப்படுத்த செüகார் ஜானகியும், பாரதியும் எவ்வளவோ முயன்று சட்டையை எல்லாம் கிழித்துக் கூச்சல் போட்டனர். இன்றும் அந்தக் காட்சியைப் பார்த்து கலங்காதவர் இருக்க முடியாது. ஜெமினியின் "விளையாட்டுப் பிள்ளை' படத்தில் ஒரு காட்சியில் பத்மினியின் கன்னத்தில் ஒரு அறை விட்டார். காது தோடு கழன்று ஓடி அடுத்த படப்பிடிப்புத் தளத்தில் விழுந்து விட்டது. ஷாட் முடிந்ததும் பத்மினி ஐந்து நிமிடம் அனுமதி பெற்று வெளியே போனார். போனவர் சிறிது நேரம் உள்ளே வரவில்லை. என்ன நடந்தது என்று பார்க்க உதவி இயக்குனர் சென்றார். நாற்காலியில் உட்கார்ந்து, முகம் சிவக்க, உதடுகள் துடிக்க, கண்களில் நீர் பெருக்கியவாறு இருந்தவரைப் பார்த்து பதறிப்போய், ""என்னம்மா'' என்று கேட்க, ""ஒன்றுமில்லை வலி தாங்க முடியவில்லை, முழுசா அழுதிட்டு வந்திடறேன், ஐந்து நிமிடம் பொறுத்துக்கங்க'' என்றாராம் பத்மினி.
உலகின் எந்த ஒரு நடிகனும் ஒரே நாளில் மூன்று வித வேடங்கள் ஏற்று நடித்ததில்லை. "டென் கமாண்ட்மெண்ட்ஸ்', "பென்ஹர்', "லாரன்ஸ் ஆஃப் அரேபியா', "ஓமர் முக்தார்', "சாந்தி' போன்ற எந்தப் படத்து ஹீரோவும் மூன்று ஆண்டுகள், ஐந்து ஆண்டுகள் என்று ஒப்பந்த அடிப்படையில் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு அந்தப் படம் முடிந்த பின்னரே அடுத்த படம், வேடம் பற்றி சிந்திப்பார்கள். ஆனால் சிவாஜி காலையில் ரிக்ஷாக்காரன் வேடம் போட்டு நரைத்த தாடியும், பரட்டைத் தலையும் கிழிந்த கோட்டுமாய் கைரிக்ஷா இழுத்து நடிப்பார். பிற்பகல் மகாவிஷ்ணு வேடம் போட்டு, பாடல் காட்சியில் நடிப்பார். இரவு அந்த வேடத்தைக் கலைத்துவிட்டு பள பளப்பாக மின்னும் கோட்டும் சூட்டுமாக "சொர்க்கம்' படத்தில் நடிப்பார். ஹாலிவுட்டில் எந்த நடிகரும் இப்படி செய்திருக்க வாய்ப்பில்லை.
""அடுத்த தலைமுறைகளுக்குக் குறிப்பிட்டுச் சொல்ல எந்த வேடத்தையும் அவர் விட்டு வைக்கவில்லை. நாங்கள் எந்த வேடம் போட்டு நடித்தாலும், அவர் நடித்த, அந்த வேடங்களைத் தாங்கிய படங்களை முன்மாதிரியாக ஒரு முறை பார்த்துக் கொள்கிறோம். அந்த யுகக் கலைஞன் ஹாலிவுட்டில் பிறக்காதது அவரது துரதிருஷ்டம். தமிழ் நாட்டில் பிறந்தது நம் அதிர்ஷடம்'' என்று "இது ராஜபாட்டை அல்ல' என்ற தனது நூலில் சிவாஜிக்கு புகழாராம் சூட்டியுள்ள சிவகுமார். சிவாஜியோடு இணைந்து நடித்த "ராஜராஜ சோழன்' 1973-ல் வெளியானது.
தமிழில் தயாரிக்கப்பட்ட முதல் சினிமாஸ்கோப் சித்திரமான "ராஜ ராஜ சோழன்' படத்தில் நடித்த அனுபவத்தை கீழ்க்கண்டவாறு விவரிக்கிறார் சிவாஜி.
""நான் ஒரு சோழன். தஞ்சாவூர்க்காரன். ஆகையால் நான் ராஜ ராஜ சோழனாக நடித்தது எனக்கு மிகப்பெருமை. ஏனென்றால் என்னுடைய தாத்தா பாட்டன் ரோலை நானே நடித்தேன். அந்தப் படத்தை ஆனந்த் தியேட்டர் உரிமையாளர் திரு. உமாபதி எடுத்தார். அந்தப் படத்தை ஏ.பி. நாகராஜன் இயக்கினார். சரித்திர நாடகம், சரித்திரக் கதைகள் எடுக்கும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதிகம் செலவு செய்து எடுக்க வேண்டும். பிரம்மாண்டமான யுத்தக் காட்சிகளெல்லாம் காண்பிக்க வேண்டும். இப்படியெல்லாம் காண்பித்தால்தான் "ராஜ ராஜ சோழன்' நன்றாக இருக்கும்.
ஒரு சின்ன பாளையரக்காரனான கட்டபொம்மனையே பெரிய சக்ரவர்த்திபோல் காண்பித்தோம் அல்லவா? அப்படியிருக்க சக்ரவர்த்தி ராஜ ராஜ சோழனை எவ்வளவு சிறப்பாக காண்பிக்க வேண்டும்? அதையெல்லாம் அந்தப் படத்தில் சரியாகக் காண்பிக்கவில்லை. "ராஜ ராஜ சோழன்' படத்தை ஒரு குடும்ப நாடகம் போலதான் எடுத்திருந்தார்கள். நாடகம் போடும்போது அது சரியாக இருந்திருக்கலாம். ஆனால் திரைப்படத்திற்கு இந்த பாணி ஒத்து வருமா? இந்தப் பக்கம் மகன், அந்தப் பக்கம் அக்கா, இன்னொரு பக்கம் மனைவி, மற்றொரு பக்கம் மருமகள் என்று குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டியதால் படம் அவ்வளவு சிறப்பாக ஓடவில்லை'' என்று "ராஜ ராஜ சோழன்' படம் குறித்து விமர்சித்துள்ளார் சிவாஜி.
இதுதான் அவரது தனி குணம். தான் நடித்து விட்டோம் என்பதற்காக தனது படங்களைப் பற்றி உயர்வாகப் பேசுகின்ற போக்கை சிவாஜி என்றுமே கடைப் பிடித்ததில்லை.
மற்றவர்கள் விமர்சிப்பதற்கு முன்னால் தனது படங்கள் பற்றி அவரே விமர்சித்து விடுவார். தனது பலம் என்ன பலவீனம் என்ன என்பதை பரிபூரணமாக உணர்ந்திருந்ததால்தான் தனது திரையுலகப் பயணத்தில் எந்தத் தடுமாற்றமும் இன்றி அவரால் வெற்றி நடை போட முடிந்தது.
அன்புடன்
PS: இதை "சுட்டிக்" காட்டிய மணிசேகரன் சார் அவர்களுக்கு மனங்கனிந்த நன்றி.
The involvement of NT - from old post of Saradha Madam
பிரபல நாடக / திரைப்பட நடிகர் ஏ.ஆர்.எஸ். இந்தவாரம் ஜெயா தொலைக்காட்சியின் 'திரும்பிப்பார்க்கிறேன்' நிகழ்ச்சியில் பங்கேற்று தன் அனுபவங்களை நேயர்களுடன் பகிர்ந்து வருகிறார். அப்போது நடிகர் திலகத்தைப்பற்றி பல விஷயங்களைச்சொன்னார். அதில் ஒன்று.....
"ஒருமுறை ஒரு படப்பிடிப்பின் சாப்பாட்டு நேரம். சிவாஜியுடன் நானும் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். பரிமாறியவர் வெங்காயம் போட வந்தபோது வேண்டாம் என்று மறுத்துவிட்டார். 'ஏன் வெங்காயம் சாப்பிட மாட்டீங்களா'ன்னு கேட்டேன். 'சாப்பிடுவேன், ஆனா இப்போ வேண்டாம். காரணம் அப்புறம் சொல்றேன்' என்றார்.
சாப்பாட்டுக்குப்பின் படமாக்கப்பட்ட காட்சியில், சவுகார் இறந்ததுபோய்க்கிடக்க அவரருகில் நடிகர்திலகம் அமர்ந்து குளோசப்பில் வசனம் பேசும் காட்சி. நடித்து முடித்துவிட்டு வந்து அமர்ந்தவர் 'ஏன் வெங்காயம் வேண்டாம்னு சொன்னீங்க'ன்னு கேட்டீல்ல. இப்போ ஷூட் பண்ணின சீன் பார்த்தியா. சௌகார் மூச்சைப்பிடித்துக்கொண்டு படுத்திருக்க, அவங்க முகத்தருகே நான் வசனம் பேசும் காட்சி. நான் வெங்காயம் சாப்பிட்டு அந்த வாடையோடு பேசினால், அவங்களாலே மூச்சடக்கிக்கொண்டு படுத்திருக்க முடியுமா?' என்று கேட்டார். நான் ஆச்சரியப்பட்டேன்.
ஏதோ வருவதும் வசனம் பேசுவதும் போவதும்தான் நடிப்புன்னு நினைச்சிக்கிட்டிருந்த எனக்கு, அவர் சிரத்தையோடு அடுத்து வரப்போகும் காட்சி, அதில் தன்னுடன் நடிப்பவருக்கான சிரமம் என்று அவர் ஒவ்வொரு விஷயத்துலயும் எவ்வளவு கவனம் செலுத்துகிறார் என்று ஆச்சரியப்பட்ட நான், இவரிடம் கற்றுக்கொள்ள இன்னும் எவ்வளவு நுணுக்கங்கள் இருக்கோ என்று அதிசயித்தேன்".
a recap of Mr Murali Srinivas old post
ங்கை - Part I
தயாரிப்பு: சுஜாதா சினி ஆர்ட்ஸ்
இயக்கம்: A.C. திருலோகச்சந்தர்
வெளியான நாள்: 19.05.1967
மதன் என்ற பள்ளி சிறுவன் தன் வயதையொத்த நண்பர்கள் சூதாட்டம் விளையாடிக் கொண்டிருக்கும் ஒரு மண்டபத்தின் முன் அமர்ந்து தன் பள்ளிப் பாடங்களை படித்துக் கொண்டிருக்கிறான். நண்பர்கள் வற்புறுத்தியும் படிப்பிலே கவனமாக இருக்கும் அவனின் புத்தக பையை பறித்துக் கொண்டு ஓடும் அந்த சூதாட்ட கும்பல் ஒரு திருட்டில் ஈடுபடுகிறது, போலீஸ் வரும் போது அனைவரும் தப்பித்து ஓடி விட மதன் மாட்டிக் கொள்கிறான். அவனை சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி விடுகிறார்கள். அவனின் விதவை தாயும் தங்கையும் செய்வதறியாது கலங்கி நிற்கிறார்கள்.
காலம் ஓடுகிறது. வாலிபனாக திரும்பி வரும் மதன் தன் தாயையும் தங்கையும் தேடுகிறான். தாய் இறந்த செய்தியும் தங்கை வடிவு ஒரு பிச்சைக்காரியைப் போல் சாப்பாட்டுக்கு அலையும் அவலத்தையும் தெரிந்து கொள்கிறான். தன் தங்கையை தன்னுடன் அழைத்து சென்று தங்க வைக்கிறான்.ஆனால் ஜெயிலுக்கு போய் வந்தவன் என்பதால் அவனுக்கு எந்த வேலையும் கிடைக்காமல் போகவே பிழைக்க வழி இல்லாமல் சூதாட தொடங்குகிறான். ஆனால் அதிலும் தன் தேவைக்கு பணம் கிடைக்கும் வரை மட்டுமே விளையாடுவது என்ற கொள்கையில்(!) உறுதியாக இருக்கிறான். இவனின் சூதாடும் திறமை அறிந்து ஒரு பெரிய சூதாட்ட கிளப்பின் ஏஜென்ட் ஒருவன் மதனை அங்கே அழைத்து செல்கிறான். அங்கே அந்த கிளப்-ன் தலைவனே [அறுபதுகளுக்கே உரிய முகம் மட்டும் இருளில் இருக்க குரல் மட்டும் கேட்கும் பாஸ்] எவ்வளவோ முயற்சித்தும் பணத்தாசைக்கு மயங்காமல் மதன் வர மறுக்கிறான்.
மதனின் தங்கைக்கு அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்படுகிறது. அந்த சேரி பிரதேசத்தில் சேவை மனப்பான்மையோடு ஒரு மருத்துவமனை நடத்தும் லீலா என்ற டாக்டர் அவளை பரிசோதித்து அவளுக்கு காச நோய் அறிகுறி இருப்பதாக சொல்கிறாள். அவளை அதற்கென இருக்கும் மருத்துவமனையில் சேர்க்க ஏற்பாடு செய்கிறாள். ஆனால் அதற்கு பணம் தேவைப்படுகிறது. வேறு வழியில்லாமல் மதன் அந்த சூதாட்ட கிளப்-ல் இணைகிறான். இதற்கு முன் லீலாவின் பிறந்த நாள் விழாவிற்கு செல்லும் மதனை போலீஸ் இன்ஸ்பெக்டரான தன் அத்தை பையன் ஸ்ரீதருக்கு அறிமுகம் செய்து வைக்கிறாள் லீலா. அவளின் தந்தையார் உலகநாதன் என்ற பெரும் தொழிலதிபர் என்பதை தெரிந்து கொள்ளும் மதனால் அவரை அப்போது சந்திக்க முடியாமல் போகிறது.
கிளப்-ல் சேரும் மதன் தன் திறமையினால் எல்லா சூதாட்டங்களிலும் வெற்றி பெறுகிறான். சட்ட விரோதமாக நடைபெறும் இந்த சூதாட்டங்களை தடை செய்து குற்றவாளிகளை பிடிக்கும் பொறுப்பு ஸ்ரீதர் கையில் கொடுக்கப்படுகிறது. பல விதங்களிலும் முயற்சி செய்யும் ஸ்ரீதருக்கு தோல்வியே கிடைக்கிறது.
கிளப்-ல் நடனமாடும் லலிதா மதனை ஒரு தலையாக காதலிக்கிறாள். அவள் மேல் மதனுக்கு அன்பிருந்தாலும் காதல் இல்லை.
மதனை காதலிக்கும் லீலாவை அவரது தந்தை கண்டிக்கிறார். ஸ்ரீதரை கல்யாணம் செய்துக் கொள்ள சொல்கிறார். ஆனால் லீலா கேட்பதாக இல்லை. லீலாவின் தந்தை தொழிலதிபர் மட்டுமல்லாமல் பல நல்ல காரியங்களுக்கு குறிப்பாக மருத்துவமனைகளுக்கு உதவி செய்யும் வள்ளலாகவும் விளங்குகிறார். அவரின் நிதி உதவியில் நடைபெறும் மருத்துவமனையில் தான் தங்கைக்கு சிகிச்சை
அளிக்கப்படுகிறது. அங்கே லீலாவுடன் வரும் அவர் மதனிடம் தன் பெண்ணை விட்டு விலகும்படி எச்சரிக்கிறார். அவரது குரல் மதனுக்கு பரிச்சயமுள்ளது போல் தோன்றுகிறது.
சிகிச்சை பெறும் தங்கை வடிவுக்கோ தன் அண்ணன் தன்னை விட்டு விட்டு எப்போதும் வெளியே போவது மிகுந்த வருத்தத்தை கொடுக்கிறது. அது போல் லீலாவிற்கும் மதனின் திடீர் மாற்றமும் பணமும் சந்தேகத்தையும் கோபத்தையும் கொடுக்கிறது.
இதற்கிடையே கிளப்பிற்கு மாறு வேடத்தில் வரும் ஸ்ரீதரை அடையாளம் கண்டு கொண்டு மதன் திருப்பி அனுப்பி விடுகிறான். போலீஸ் ஸ்டேஷன்-ல் சென்று சந்திக்கும் மதனை, ஸ்ரீதர் சூதாட்ட கும்பலை பிடிக்க உதவி செய்யுமாறு வேண்ட, மதன் மறுத்து விடுகிறான். இதற்கிடையே கிளப்-ல் தன்னுடன் சூதாடிய ஒரு வங்கி அதிகாரி,மகளின் திருமணத்திற்கு அதிக பணம் வேண்டுமே என்பதற்காக அலுவலக பணத்தை வைத்து சூதாடியதையும் தோற்றவுடன் தற்கொலை செய்து கொள்வதையும் பார்க்கும் மதன் அன்று முதல் சூதாடுவதில்லை என்ற முடிவெடுக்கிறான். அது மட்டுமல்லாமல் மதன் பாஸ்-ன் அறைக்கு சென்று அவர் வேறு யாருமல்ல லீலாவின் தகப்பனார் உலகநாதன்தான் என்பதை தான் தெரிந்து கொண்டு விட்டதை வெளிப்படுத்துகிறான். ஆனால் அவரை காட்டிக் கொடுக்க மாட்டேன் என்று சொல்லி விட்டு வெளியேறும் மதனை தீர்த்துக் கட்ட முடிவெடுக்கிறார் உலகநாதன். அவன் தங்கையையும் கடத்தி அவனையும் கொல்வது என்பது திட்டம். கிளப்-ல் நடனமாடும் லலிதாவை மிரட்டி மதனை போன்-ல் பேசி வரவழைக்கும்படி செய்கிறார்கள். கிளப்பிற்கு வரும் மதனை துப்பாக்கியால் சுட நடக்கும் முயற்சியில் லலிதா தன்னை பலியிட்டுக் கொள்கிறாள். கொலைப் பழியை மதன் மேல் போட, தப்பித்து செல்லும் மதனை போலீஸ் துரத்துகிறது. ஸ்ரீதர் மதனை துப்பாக்கியில் சுடுகிறான்.
வீட்டிற்கு வரும் ஸ்ரீதர் தன் தாய் மாமனான உலகநாதனிடம் மதனை சுட்டுக் கொன்று விட்டதாக சொல்லி பல உண்மைகளை வாக்கு மூலமாக வாங்க, மற்றொரு வாசல் வழியாக போலீஸ் பாதுகாப்புடன் நுழையும் மதனைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறார் உலகநாதன். தன்னைப் பிடிக்க போடப்பட்ட திட்டங்கள் இவை என்று அறிந்தவுடன் தன் முடிவை தானே தேடிக் கொள்ள, மருத்துவமனையிலிருந்து தங்கை வடிவு குணமாகி வெளி வர, மதனும் லீலாவும் இணைய அனைத்தும் நலம்.
a recap of Mr Murali Srinivas old post
ங்கை - Part I
தயாரிப்பு: சுஜாதா சினி ஆர்ட்ஸ்
இயக்கம்: A.C. திருலோகச்சந்தர்
வெளியான நாள்: 19.05.1967
மதன் என்ற பள்ளி சிறுவன் தன் வயதையொத்த நண்பர்கள் சூதாட்டம் விளையாடிக் கொண்டிருக்கும் ஒரு மண்டபத்தின் முன் அமர்ந்து தன் பள்ளிப் பாடங்களை படித்துக் கொண்டிருக்கிறான். நண்பர்கள் வற்புறுத்தியும் படிப்பிலே கவனமாக இருக்கும் அவனின் புத்தக பையை பறித்துக் கொண்டு ஓடும் அந்த சூதாட்ட கும்பல் ஒரு திருட்டில் ஈடுபடுகிறது, போலீஸ் வரும் போது அனைவரும் தப்பித்து ஓடி விட மதன் மாட்டிக் கொள்கிறான். அவனை சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி விடுகிறார்கள். அவனின் விதவை தாயும் தங்கையும் செய்வதறியாது கலங்கி நிற்கிறார்கள்.
காலம் ஓடுகிறது. வாலிபனாக திரும்பி வரும் மதன் தன் தாயையும் தங்கையும் தேடுகிறான். தாய் இறந்த செய்தியும் தங்கை வடிவு ஒரு பிச்சைக்காரியைப் போல் சாப்பாட்டுக்கு அலையும் அவலத்தையும் தெரிந்து கொள்கிறான். தன் தங்கையை தன்னுடன் அழைத்து சென்று தங்க வைக்கிறான்.ஆனால் ஜெயிலுக்கு போய் வந்தவன் என்பதால் அவனுக்கு எந்த வேலையும் கிடைக்காமல் போகவே பிழைக்க வழி இல்லாமல் சூதாட தொடங்குகிறான். ஆனால் அதிலும் தன் தேவைக்கு பணம் கிடைக்கும் வரை மட்டுமே விளையாடுவது என்ற கொள்கையில்(!) உறுதியாக இருக்கிறான். இவனின் சூதாடும் திறமை அறிந்து ஒரு பெரிய சூதாட்ட கிளப்பின் ஏஜென்ட் ஒருவன் மதனை அங்கே அழைத்து செல்கிறான். அங்கே அந்த கிளப்-ன் தலைவனே [அறுபதுகளுக்கே உரிய முகம் மட்டும் இருளில் இருக்க குரல் மட்டும் கேட்கும் பாஸ்] எவ்வளவோ முயற்சித்தும் பணத்தாசைக்கு மயங்காமல் மதன் வர மறுக்கிறான்.
மதனின் தங்கைக்கு அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்படுகிறது. அந்த சேரி பிரதேசத்தில் சேவை மனப்பான்மையோடு ஒரு மருத்துவமனை நடத்தும் லீலா என்ற டாக்டர் அவளை பரிசோதித்து அவளுக்கு காச நோய் அறிகுறி இருப்பதாக சொல்கிறாள். அவளை அதற்கென இருக்கும் மருத்துவமனையில் சேர்க்க ஏற்பாடு செய்கிறாள். ஆனால் அதற்கு பணம் தேவைப்படுகிறது. வேறு வழியில்லாமல் மதன் அந்த சூதாட்ட கிளப்-ல் இணைகிறான். இதற்கு முன் லீலாவின் பிறந்த நாள் விழாவிற்கு செல்லும் மதனை போலீஸ் இன்ஸ்பெக்டரான தன் அத்தை பையன் ஸ்ரீதருக்கு அறிமுகம் செய்து வைக்கிறாள் லீலா. அவளின் தந்தையார் உலகநாதன் என்ற பெரும் தொழிலதிபர் என்பதை தெரிந்து கொள்ளும் மதனால் அவரை அப்போது சந்திக்க முடியாமல் போகிறது.
கிளப்-ல் சேரும் மதன் தன் திறமையினால் எல்லா சூதாட்டங்களிலும் வெற்றி பெறுகிறான். சட்ட விரோதமாக நடைபெறும் இந்த சூதாட்டங்களை தடை செய்து குற்றவாளிகளை பிடிக்கும் பொறுப்பு ஸ்ரீதர் கையில் கொடுக்கப்படுகிறது. பல விதங்களிலும் முயற்சி செய்யும் ஸ்ரீதருக்கு தோல்வியே கிடைக்கிறது.
கிளப்-ல் நடனமாடும் லலிதா மதனை ஒரு தலையாக காதலிக்கிறாள். அவள் மேல் மதனுக்கு அன்பிருந்தாலும் காதல் இல்லை.
மதனை காதலிக்கும் லீலாவை அவரது தந்தை கண்டிக்கிறார். ஸ்ரீதரை கல்யாணம் செய்துக் கொள்ள சொல்கிறார். ஆனால் லீலா கேட்பதாக இல்லை. லீலாவின் தந்தை தொழிலதிபர் மட்டுமல்லாமல் பல நல்ல காரியங்களுக்கு குறிப்பாக மருத்துவமனைகளுக்கு உதவி செய்யும் வள்ளலாகவும் விளங்குகிறார். அவரின் நிதி உதவியில் நடைபெறும் மருத்துவமனையில் தான் தங்கைக்கு சிகிச்சை
அளிக்கப்படுகிறது. அங்கே லீலாவுடன் வரும் அவர் மதனிடம் தன் பெண்ணை விட்டு விலகும்படி எச்சரிக்கிறார். அவரது குரல் மதனுக்கு பரிச்சயமுள்ளது போல் தோன்றுகிறது.
சிகிச்சை பெறும் தங்கை வடிவுக்கோ தன் அண்ணன் தன்னை விட்டு விட்டு எப்போதும் வெளியே போவது மிகுந்த வருத்தத்தை கொடுக்கிறது. அது போல் லீலாவிற்கும் மதனின் திடீர் மாற்றமும் பணமும் சந்தேகத்தையும் கோபத்தையும் கொடுக்கிறது.
இதற்கிடையே கிளப்பிற்கு மாறு வேடத்தில் வரும் ஸ்ரீதரை அடையாளம் கண்டு கொண்டு மதன் திருப்பி அனுப்பி விடுகிறான். போலீஸ் ஸ்டேஷன்-ல் சென்று சந்திக்கும் மதனை, ஸ்ரீதர் சூதாட்ட கும்பலை பிடிக்க உதவி செய்யுமாறு வேண்ட, மதன் மறுத்து விடுகிறான். இதற்கிடையே கிளப்-ல் தன்னுடன் சூதாடிய ஒரு வங்கி அதிகாரி,மகளின் திருமணத்திற்கு அதிக பணம் வேண்டுமே என்பதற்காக அலுவலக பணத்தை வைத்து சூதாடியதையும் தோற்றவுடன் தற்கொலை செய்து கொள்வதையும் பார்க்கும் மதன் அன்று முதல் சூதாடுவதில்லை என்ற முடிவெடுக்கிறான். அது மட்டுமல்லாமல் மதன் பாஸ்-ன் அறைக்கு சென்று அவர் வேறு யாருமல்ல லீலாவின் தகப்பனார் உலகநாதன்தான் என்பதை தான் தெரிந்து கொண்டு விட்டதை வெளிப்படுத்துகிறான். ஆனால் அவரை காட்டிக் கொடுக்க மாட்டேன் என்று சொல்லி விட்டு வெளியேறும் மதனை தீர்த்துக் கட்ட முடிவெடுக்கிறார் உலகநாதன். அவன் தங்கையையும் கடத்தி அவனையும் கொல்வது என்பது திட்டம். கிளப்-ல் நடனமாடும் லலிதாவை மிரட்டி மதனை போன்-ல் பேசி வரவழைக்கும்படி செய்கிறார்கள். கிளப்பிற்கு வரும் மதனை துப்பாக்கியால் சுட நடக்கும் முயற்சியில் லலிதா தன்னை பலியிட்டுக் கொள்கிறாள். கொலைப் பழியை மதன் மேல் போட, தப்பித்து செல்லும் மதனை போலீஸ் துரத்துகிறது. ஸ்ரீதர் மதனை துப்பாக்கியில் சுடுகிறான்.
வீட்டிற்கு வரும் ஸ்ரீதர் தன் தாய் மாமனான உலகநாதனிடம் மதனை சுட்டுக் கொன்று விட்டதாக சொல்லி பல உண்மைகளை வாக்கு மூலமாக வாங்க, மற்றொரு வாசல் வழியாக போலீஸ் பாதுகாப்புடன் நுழையும் மதனைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறார் உலகநாதன். தன்னைப் பிடிக்க போடப்பட்ட திட்டங்கள் இவை என்று அறிந்தவுடன் தன் முடிவை தானே தேடிக் கொள்ள, மருத்துவமனையிலிருந்து தங்கை வடிவு குணமாகி வெளி வர, மதனும் லீலாவும் இணைய அனைத்தும் நலம்.
ங்கை - Part II
தங்கை - இந்த படத்தைப் பொறுத்தவரை நடிகர் திலகத்தின் மிக சிறப்பான நடிப்பில் வெளியான படம் என்றோ மிக பெரிய வெற்றிப் படம் என்றோ அதிகம் விமர்சிக்கப்படாத படம் என்றோ சொல்ல முடியாது. ஆனாலும் இந்த படத்தை நாம் அலசலுக்கு எடுத்துக் கொண்டதற்கு ஒரு முக்கிய காரணம் நடிகர் திலகத்தின் திரைப்பட வாழ்க்கையில் ஒரு மாறுதலை கொண்டு வந்த படம் என்ற முறையில் இதை எடுத்துக் கொள்வோம்.
அதுவரை [1967] கிட்டத்தட்ட பதினைந்து வருடங்கள் வரை நடிகர் திலகம் பலதரப்பட்ட வேடங்கள் செய்திருந்தாலும் action வேடங்கள் என்று சொல்லப்படும் சண்டைக்காட்சிகள் இடம் பெறும் படங்களை அவர் செய்யவில்லை. அது தேவை என்று அவர் நினைக்கவுமில்லை. எம்.ஜி.ஆர். படங்களில் அதுவே முக்கிய கவர்ச்சியாக இருந்த போதும் அது இங்கே இடம் பெறவில்லை. 1964- 65 காலக்கட்டத்தில் ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் அறிமுகமான பிறகு அவர்களது படங்களிலும் சண்டைக் காட்சிகள் இடம் பெற துவங்கின. அது மட்டுமல்ல சின்ன சின்ன நடன அசைவுகளும் [குறிப்பாக ட்விஸ்ட் டான்ஸ்] பாடல் காட்சிகளில் இடம் பெற ஆரம்பித்தன. இள வயது நடிகர் திலகத்தின் ரசிகர்களுக்கு மனதளவில் இந்த விஷயம் ஒரு சின்ன ஏக்கமாக வளர ஆரம்பித்தது.
இந்த நேரத்தில் தான் பாலாஜி நடிகரிலிருந்து தயாரிப்பாளர் என்ற நிலைக்கு உயர்ந்தார். ஆனால் அவரது முதல் படமான அண்ணாவின் ஆசை தோல்வியை தழுவியது. உடனே அவர் சென்ற இடம் அன்னை இல்லம். நடிகர் திலகமும் உடனே ஒத்துக் கொண்டார். முதன் முதலாக நடிகர் திலகத்தின் படத்திற்கு திருலோகச்சந்தர் இயக்குனர் பொறுப்பை ஏற்றார். ஒரு தெலுங்கு படத்தின் ரீமேக் தான் தங்கை. கதையை கேட்டதும் நடிகர் திலகம் சிறிது தயங்கினார். வேறு கதை பார்க்கலாமா என்று கூட கேட்டிருக்கிறார். ஏ.சி.டி. ஒரு முறை சொன்னார் "சிவாஜி நாடகத்தில் நடிக்கும் காலத்திலேயே நாட்டியம் ஆட பழகியவர். தூக்கு தூக்கி படத்தில், காவேரி படத்தில் எல்லாம் சிறப்பாகவே நடனம் ஆடியிருக்கிறார். அதன் பிறகு அவர் அதை முயற்சி செய்யவில்லை. அவ்வளவுதான். அது போல் சண்டைக் காட்சிகள் என்பது ஒன்றும் பெரிய விஷயமில்லை. உங்களால் செய்ய முடியும் என்று சொன்னேன். அதன் பிறகுதான் ஒத்துக் கொண்டார்."
இப்படி சொல்லும் போது படத்தில் முழுக்க முழுக்க சண்டைக் காட்சிகள் என்றோ நடனக் காட்சிகள் என்றோ நினைத்தால் ஏமாந்து போவோம். முதல் அரை மணி நேரத்தில் ஒரு சண்டைக் காட்சி. அதன் பிறகு கிளைமாக்ஸ்-ல் தான் சண்டை. அது போல ஒரு பாடல் காட்சியில் மட்டுமே ட்விஸ்ட் ஆடுவார். ஆனால் இந்த சின்ன மாற்றம் பிற்காலத்தில் அவர் action படங்களை தயக்கமில்லாமல் செய்ய உதவியது. பொதுமக்களும் தங்கையை ஏற்றுக் கொண்டார்கள் என்பதும் அவர் பிற்காலத்தில் செய்த படங்களுக்கு ஒரு தூண்டுதலாக அமைந்தது என்றும் சொல்லலாம்.
அது மட்டுமல்ல பாலாஜி என்ற Top notch தயாரிப்பாளர் உருவாவதற்கும், நடிகர் திலகத்தை வைத்து மிக அதிகமான படங்களை தயாரித்தவர் என்ற பெருமையை அடைவதற்கும், சிவாஜி ரசிகர்களின் மனத்துடிப்பை மிக சரியாக உணர்ந்தவர் என்ற பெயர் எடுப்பதற்கும் பாலாஜிக்கு இந்த தங்கை பெரிதும் உதவி புரிந்தாள். அது போல் சிவாஜியை வைத்து மிக அதிகமான படங்கள் [20] வரை இயக்குவதற்கும், நடிகர் திலகத்தோடு ஒரு நல்ல புரிதல் உண்டாவதற்கும் ஏ.சி.டி. அவர்களுக்கு இந்த தங்கை பயன்பட்டாள்.
பெற்றால்தான் பிள்ளையா பட விஷயத்தில் வசனகர்த்தா ஆரூர்தாஸ் மீது கோபம் இருந்தும் கூட பாலாஜியும் ஏ.சி.டி.யும் ஆரூர்தாஸ் வேண்டும் என்று சொன்னபோது எந்த வித மறுப்பும் சொல்லாமல் நடிகர் திலகம் ஏற்றுக் கொண்டதின் விளைவு ஆரூர்தாஸ் என்ற திறமையான வசனகர்த்தா தொடர்ந்து நடிகர் திலகத்தின் படங்களுக்கு பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. இதற்கும் தங்கை திரைப்படம் ஒரு காரணமாக இருந்தது என்று சொன்னால் மிகையில்லை.
விமர்சனத்திற்கு செல்வோம்.
தங்கை - Part III
நடிகர் திலகம் ப்பூ என்று ஊதி தள்ளிய வேடங்களில் ஒன்று இந்த மதனகோபால் என்ற மதன். அவரது Light Hearted கேரக்டர்களில் ஒன்று இந்த படம். Style quotient என்று சொல்வார்களே அது தூக்கலாக வெளிப்பட்ட படம். தங்கையின் மேல் உயிரையே வைத்திருக்கும் அண்ணனாக அவர் பல படங்களில் நடித்துள்ளார், ஆனாலும் இந்த படத்தில் எந்தளவிற்கு இருக்க வேண்டுமோ அதை மட்டுமே செய்திருப்பார். ஐந்து ரூபாய்க்கு மேல் விளையாட மாட்டேன் என்று எழுந்து போகும் இவரை ஒரு ரவுடி முகத்தில் குத்து விட கீழே விழுந்து மீண்டும் எழுந்து ஒரு சின்ன சிரிப்போடு வருவார்.[இந்த விஷயத்திலும் இன்றைய ஹீரோ-கள் புதுமை என்று பிற்காலத்தில் பண்ணியதை அன்றே செய்திருப்பார்]. பக்கத்தில் வந்து இரண்டு கைகளையும் ரவுடியின் முகத்திற்கு நேரே நீட்டி, கை தட்டி விட்டு ஒரு நாலு பஞ்ச் கொடுப்பார். ஓபனிங் ஷோ-வில் முதன் முதலாக அதை பார்த்த போது ரசிகர்கள் தியேட்டரில் செய்த ஆரவாரம், விசில் பற்றி பலர் சொல்ல கேட்டிருக்கிறேன். அது போல் கிளப்பிற்கு முதன் முதலில் வரும் போது டான்ஸ் பார்த்து விட்டு, தன்னை மறந்து எழுந்து ஒரு சின்ன ஸ்டெப் போட்டு விட்டு எல்லோரும் பார்ப்பதை பார்த்தவுடன் வெட்கப்பட்டு நெளிவது ரசிக்கும்படி செய்திருப்பார். காஞ்சனாவை சிகரெட்டால் சுடும் ராமதாசை எதிர்பாராத நேரத்தில் குத்துவது, ஆஸ்பத்திரி வாசலில் கூடியிருக்கும் கூட்டத்தை விரட்டுகிறேன் என்று கே.ஆர்.விஜயாவையும் டாக்டர் என்று தெரியாமல் மிரட்டுவது, அவருடன் காரில் போகும் போது தன் நிலை பற்றி காஷுவலாக பேசுவது, பிறந்த நாள் விழாவில் இன்ஸ்பெக்டர் சொந்தக்காரன் என்று விஜயா சொன்னவுடன் எனக்கும் அவங்களுக்கும் சரிப்பட்டு வராது என்று கமன்ட் அடிப்பது, பாட வேண்டும் என்று சொன்னவுடன் சின்ன ட்விஸ்ட் ஸ்டெப்ஸ் வைத்து ஆடும் அழகு, கிளப்-லும் போலீஸ் ஸ்டேஷன்-லும் பாலாஜியோடு பேசும் கிண்டல் கலந்த ஸ்டைல், பாலாஜி ஒரு கையால் மறு கையில் தட்டுவதை அவருக்கே செய்து காண்பிப்பது, காரில் வைத்து தன் மகளை காதலிக்க கூடாது என்று சொல்லும் மேஜரிடம் பதில் சொல்லாமல் சிரிப்பது, அவர்தான் தன் பாஸ் என்று தெரிந்துக் கொண்டேன் என்று அவரிடமே போய் சொல்வது, தங்கை தான் வாங்கி கொண்டு வந்த சாப்பாட்டை அவசரமாக பிடுங்கி சாப்பிடுவதை பார்த்து விட்டு வருத்தப்படுவது, தன்னால் ஒருவன் தற்கொலை செய்துக் கொண்டான் என்று தெரிந்ததும் வந்து கையை பொசுக்கி கொள்வது, தன்னை சந்தேகப்படும் விஜயாவை அடித்து விட்டு கொஞ்சம் கொஞ்சமாக அவர் முகம் மாறுவது - அவருக்கென்ன எந்த ரோலாக இருந்தாலும் எனக்கு ஒன்று தான் என்பதை உணர்த்தியிருப்பார்.
மற்ற கதாபாத்திரங்களை பொறுத்த வரை, இன்ஸ்பெக்டராக வரும் பாலாஜி நீட்டாக செய்திருப்பார். வெளியில் தொழிலதிபர் உள்ளே சூதாட்ட கிளப்-ன் பாஸ் என்ற வழக்கமான ரோல் மேஜருக்கு. அவரும் வழக்கம் போல். நாயகி விஜயா. டாக்டர் ரோல்.ஆனால் அவரை விட கிளப் டான்சராக வரும் காஞ்சனாவிற்கு நல்ல ஸ்கோப். அவரும் அதை குறையில்லாமல் [அந்த காலக்கட்டத்தில் நாயகியின் பாத்திரப்படைப்பில் இயல்பாகவே அமையும் அபத்தங்களை தவிர்த்து பார்த்தால்] செய்திருப்பார். நாகேஷ் தான் ஏஜன்ட். ஆனால் நகைச்சுவை பஞ்சம். தங்கை வடிவாக வரும் பேபி கௌசல்யா முதல் இரண்டு மூன்று காட்சிகளுக்கு பிறகு முழுக்க பெட் Ridden.
ஆரூர்தாஸின் வசனங்கள் முதல் பதினைந்து நிமிடங்களை தவிர்த்து விட்டு பார்த்தால் இயல்பாக எழுதியிருப்பார். எந்த திரைப்படமும் அது வெளியாகும் காலக்கட்டத்தை தெரிந்தோ தெரியாமலோ பிரதிபலிப்பது உண்டு. இதிலும் காரில் செல்லும் போது மேஜர் சிவாஜியை கேள்வி கேட்க அதை தடுக்க நினைக்கும் விஜயா ரேடியோவை வைக்க அதில் மளிகை சாமான்கள் விலை சொல்லுவார்கள். [அப்படி கூட ஒரு நிகழ்ச்சி வானொலியில் இருந்ததா என்ன?] அதில் துவரம் பருப்பின் விலை ஒரு கிலோ ஒரு ரூபாய் எழுபத்திரண்டு பைசா என்று வரும். [இன்றைக்கு கிலோ ருபாய் எண்பதெட்டு என்று நினைக்கும் போது -ம்ம்].
திருலோகச்சந்தரை பொறுத்த வரை ஏற்கனவே எடுக்கப்பட்ட கதை, நடிகர் திலகம் மாதிரி ஒரு ஹீரோ. எனவே அவர் வேலை ஈசியாக முடிந்தது.
இனி பாடல்களுக்கு வருவோம். கண்ணதாசன் - எம்.எஸ்.வி. கூட்டணி.
1. தத்தி தத்தி தள்ளாட- எல்.ஆர். ஈஸ்வரி - கிளப் டான்ஸ் - காஞ்சனாவின் அறிமுக பாடல். நாகேஷின் சில நல்ல ஸ்டெப்ஸ்-ஐ பார்க்கலாம்.
2. கேட்டவரெல்லாம் பாடலாம் - படத்தில் அதிக பாப்புலர் ஆன பாடல். இந்த பாடலின் ட்யுன் போடும்போது தான் நான்கு ட்யுன்களில் எதை செலக்ட் செய்வது என தெரியாமல் இறுதியில் சுஜாதா சினி ஆர்ட்ஸ் ஆபிசிற்கு வந்த போஸ்ட்மானை தேர்ந்தெடுக்க சொன்னதாக சொல்வார்கள். சாரதா இதைப் பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறார். நடிகர் திலகத்தின் ட்விஸ்ட் மற்றும் ஸ்டையிலான கைதட்டல் ஆகியவை இடம் பெறும். இதையே சிறிது நீட்டி ஊட்டி வரை உறவு படத்தில் ஹாப்பி இன்று முதல் ஹாப்பி பாட்டில் செய்வார். இந்த பாட்டின் ஆரம்பத்தில் நடிகர் திலகத்தின் சில க்ளோஸ் அப் ஷாட்-களை பாஸ்ட் மெர்ஜிங் என்ற முறையில் சட்டென்று என்று மாறி மாறிக் காட்டுவார்கள். கவனித்து பார்த்தால் தெரியும். அது மட்டுமல்ல 1967-யிலேயே இதை முயற்சித்திருப்பது ஆச்சர்யம்.
3. தண்ணீரிலே தாமரை பூ - படத்தின் இன்னொரு அருமையான பாடல். நடிகர் திலகத்தின் குணசித்திர நடிப்பை காண வந்த ரசிகர்களுக்கு விருந்து. பெண்களுக்கு மிகவும் பிடித்த பாடல். குறிப்பாக கடைசி சரணத்தில்
எனக்கென இருப்பது ஒரு விளக்கு
இதனுடன் தானா உன் வழக்கு
என்ற வரிகளின் போது ரசிகர்கள் கைதட்ட பெண்கள் கண்ணீரை துடைத்துக் கொள்வார்கள். படத்தில் மீண்டும் ஒரு முறை பின்னணி இசை இல்லாமலும் இந்த பாடல் ஒலிக்கும்.
4. சுகம் சுகம் அது துன்பமான இன்பமானது - விஜயாவிற்கு ஒரே பாடல். கோபத்தில் இருக்கும் சிவாஜி மெது மெதுவாக இயல்பு நிலைக்கு வருவதை இதில் காணலாம்.
5. இனியது இனியது உலகம் - காரிலிருந்து இறக்கி விடப்படும் நடிகர் திலகம் ரோட்டில் பாடிக் கொண்டே வரும் காட்சி. இன்றைய OMR ரோடு என்று சொல்லுவார்கள். இதிலும் ஸ்டைல்தான் பிரதானம். பாடலின் முடிவில் அந்த வழியாக வரும் லாரியை கை காட்டி நிறுத்த முயற்சிக்க, காமிராவிற்கும் சிவாஜிக்கும் நடுவில் வரும் லாரி நிற்காமல் போக அடுத்த ஷாட்-ல் நடிகர் திலகம் தொங்கிக் கொண்டே போவது போல் வரும். தியேட்டரில் விசில் பறக்கும்.
6. நினைத்தேன் என்னை அழைத்தேன் உன்னை - கிளைமாக்ஸ் லீட் சீன், காஞ்சனா ஆடிப் படும் காட்சி. சரணத்தில் ஈஸ்வரி பிரமாதப்படுத்தியிருப்பார்.
இந்த படம் வெளி வருவதற்கு முன் வழக்கம் போல் கிண்டல் கேலி எல்லாம் இருந்தது. கணேசன் சண்டை காட்சியில் நடித்தால் யார் பார்ப்பது போன்ற கமன்ட்கள் அடிக்கப்பட்டன. இந்த படம் வெளியான போது இதற்கு போட்டியாக ஒரு படமும் வந்தது. எல்லா கிண்டல்களையும் புறந்தள்ளி மக்கள் தங்கையை வரவேற்றார்கள். சென்னையில் திரையிடப்பட்ட நான்கு அரங்குகளிலும் 50 நாட்களை கடந்தது படம். அவை
சித்ரா - 70 நாட்கள்
கிரவுன் - 70 நாட்கள்
உமா - 50 நாட்கள்
ஜெயராஜ் - 50 நாட்கள்.
மதுரையிலும் திருச்சியிலும் சேலத்திலும் 8 வாரங்களை கடந்த இந்த படம் கோவை - இருதயாவில் அதிகபட்சமாக 77 நாட்கள் ஓடியது. திருவருட்செல்வர் வெளியானதால் சென்னை- கிரவுன் போன்ற இடங்களில் 100 நாட்கள் ஓடும் வாய்ப்பை இழந்தது.
கொசுறு தகவல்- போட்டியாக வெளியான படத்தைப் பொறுத்தவரை ஆட்சி மாற்றத்திற்கு பிறகு வந்த முதல் படம், தமிழக ஆட்சி மாற்றத்திற்கு ஒரு முக்கிய காரணமாக இருந்த ஜனவரி 12- ல் நடந்த சம்பவத்திற்கு பிறகு வெளியான முதல் படம், சொந்த சகோதரரே இயக்கிய படம். இவை அனைத்தும் இருந்தும் எந்த அரங்கிலும் 50 நாட்களை கூட எட்டிப் பிடிக்க முடியவில்லை. எப்போதும் போல் பாக்ஸ் ஆபிஸ் கிங் தான் மட்டும்தான் என்பதை நடிகர் திலகம் மீண்டும் நிரூபித்தார்.
மொத்தத்தில் நடிகர் திலகத்தின் entertainer படங்களின் ஆரம்பம். ரசிக்கும்படியாகவே இருந்தது.
அன்புடன்
PS: 1.எங்கேயும் [மலேஷியா, சிங்கப்பூர் போன்ற இடங்களில் கூட] இப்போது கிடைக்காத இந்த தங்கை திரைப்படத்தின் சிடியை ஒரு பிரதி எடுத்து எனக்கு கொடுத்ததற்கும்
2. சென்னை கோவை நகரங்களில் இந்த படம் ஓடிய சரியான நாட்களை உறுதிப்படுத்தியதற்கும் நண்பர் சுவாமிக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.
பார்த்ததில் பிடித்தது -45
ராஜரிஷி :
முதல் மரியாதை என்ற மாபெரும் வெற்றிக்கு பிறகு வந்த படம் தான் இந்த ராஜரிஷி .இந்த படத்தின் கதை பல நபர்களுக்கு தெரிந்து இருக்கும் ,குறிப்பாக புராண கதைகளில் ஆர்வம் இருக்கும் அனைவருக்கும் , இந்த படத்தில் கூறப்பட்டு உள்ள சம்பவங்களை தாண்டி அதிகமாக தெரிந்து இருக்கும் , படத்தின் கதை -கௌசிகன் என்ற அரசன் மிக கடுமையாக தவம் செய்து பிரமரிஷி பட்டதை அடைய முயற்சிக்கிறார் , அவர் சந்திக்கும் இன்னல்கள் தான் கதை , முடிவில் அவர் பிரமரிஷி என்ற மிக உயர்ந்த பட்டதை அடைந்தாரா என்பதே கதை
படம் frame to frame சிவாஜி சாரின் படம் தான் , Complete one man show . முதல் காட்சியில் யுத்தத்தில் வெற்றி பெற்ற மன்னனாக வரும் பொது கம்பீரமாக வந்து அமருவதும் அதை தொடர்ந்து வரும் நடன காட்சியை காணும் போதும் அதே கம்பீரத்துடன் இருப்பதும் , ஆனால் தன் நாட்டு மக்கள் பசி பட்டினியால் வாடுவதை கண்டு மனம் வேம்புவதும் அதை வெறும் கண்ணீர் மூலம் வெளிபடுதாமல் , தொண்டை கட்டியதை போல் ஒரு வித வருத்ததுடன் அவர் பேசும் வசனம் MAKES HIM STAND APART
வசிஷ்டர் உணவை கொடுத்து அனுப்பிய உடன் , அவரை சந்தித்து அவரிடம் உதவி கேட்கும் இடத்தில ராஜா என்ற தோரணையில் பேசுவதும் , வசிஷ்டர் மறுத்த உடன் தன் படைகளை விட்டு காமதேனுவை கை பற்ற அனுப்புவதும் , அது தோல்வியில் முடிந்த உடன் வசிஷ்டரின் தவ வலிமையை அறிந்து , தானும் , அதை போன்ற நிலையை அடைய நினைத்து தவம் செய்ய புறப்படும் பொது
வசிஷ்டர் தடுக்கும் பொது மூஞ்சியில் வெறுப்பை காடும் விதம் , கூடவே தன்னால் சாதிக்க முடியும் என்று சவால் விடுவதும் ஒரே நேரத்தில் இரு வித உணர்சிகளை பிரதிபலிக்க நம்மவரால் மட்டும் முடியும்
தன் தவத்தை கலைக்க தேவர்கள் முயற்சிக்கும் பொது , அதை சாதூர்யமாக கையாளுவதும் உதரணத்துக்கு ராதிகாவை குழந்தையாக மாற்றி முத்தம் கொடுக்கும் பொது அவர் முகத்தில் தெரியும் மகிழ்ச்சி, தடைகளை வென்று விட்ட பிரதிபலிப்பு , ஏகாம்பரேஸ்வர் கோவிலில் இவர் பாடும் பாடலும் , அதற்க்கு கொடுக்கும் reaction அந்த பாட்டை வேறு ஒரு தளத்துக்கு அழைத்து செல்லுகிறது , அதுவும் ராஜரிஷி பட்டம் கிடைத்த உடன் இவர் முகத்தில் தெரியும் திருப்தி கலந்த பெருமிதம் நம்மளையும் தொற்றி கொள்ளுகிறது
உணர்ச்சிவசப்பட்டு தன் தவவலிமையை இழந்து விடுவதும் , மீண்டும் முயற்சி செய்வதும் , ராமர் வில்லை முறிக்கும் பொது இவர் தன் மாணவர் தான் அவர் என்று பூரிப்பு அடையும் காட்சி , ராமர் தன் தந்தை சொல்ல்மிக்க மந்திரம் இல்லை என்று இவர் கெஞ்சி கேட்டும் கூட மறுத்து உடன் இவர் வெடித்து அழுவதும் , தொண்டர்ந்து தன் நிலையை நினைத்து கடவுளை நினைத்து பாடும் காட்சி, தன் மகள் தான் சகுந்தலை என்று தெரிந்து தன் மகளுக்கு அநீதி நடந்து இருப்பதை போருக்க முடியாமல் துஷ்யந்தன் சபையில் வந்து போராடுவதும் , தன் விரோதி என்று நினைத்து கொண்டு இருந்த வசிஷ்டர் வசமே கெஞ்சுவதும் நெஞ்சை பிழியும் காட்சி . கடைசியில் அந்த வசிஷ்டர் வசமே பிரம்மரிஷி என்ற பட்டம் கிடைத்த உடன் அவர் நெஞ்சில் கை வைத்து பெருமிதத்துடன் அனந்த கண்ணீர் வடிக்கிறார் , அவர் மட்டுமா நாமும் தான் இந்த நடிப்பை பார்த்து
படத்தில் நடித்த சிவாஜி என்ற சிகரத்தின் நடிப்பை பற்றி எழுதி விட்டேன் இனி படத்தை பற்றி சில வரிகள்
ராஜரிஷி என்ற பட்டம் சுலபமாக வந்து விடாது , ஈசன் அதை தந்தாலும் , அதை கையாளும் பக்குவம் விஸ்வமித்ரருக்கு வரவில்லை என்பது திரிசங்குக்கு உணர்ச்சிவசப்பட்டு உதவும் காட்சியும் , ஒரு நிமிட சபலம் நம் வாழ்கையை புரட்டி போட்டு விடும் என்பது மேனகா பாத்திரத்திலும் , பாசம் , பந்தம் இருந்தால் முக்தி அடைய முடியாது , ரிஷியாக முடியாது என்பது சகுந்தலை பாத்திரம் மூலம் மிக எளிமையாக எடுத்து காட்டிய இயக்குனர் அவர்களை பாராட்டலாம்
இந்த படத்தை தயாரித்தவர் கலைஞானம் இவரை பற்றி நான் சொல்லி தெரியவேண்டியது இல்லை , தேவர் films கதை இலாகாவில் நிரந்திர இடம் இவருக்கு உண்டு , பைரவி படத்தின் தயாரிப்பாளர் , அதனால் தான் இந்த பட கம்பெனி பெயர் கூட பைரவி films என்ற பெயரிட பட்டு உள்ளது , இயக்குனர் ஷங்கர் MGR , சிவாஜி இருவரையும் வைத்து பல படங்களை எடுத்து உள்ளார் , கதை வசனம் prof AS பிரகாசம் , இமயம் , சாதனை என்று நடிகர் திலகத்துடன் வெற்றி பவனி வந்தவர்
பெரிய ஜாம்பவான்கள் சேர்ந்தால் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம், படம் தொடர்பாக பத்தரிகையில் வந்த செய்தி எதிர்பார்ப்பை அதிக படுத்தியது , இயக்குனர் சங்கர் வேறு பல பக்தி படங்களை எடுத்து இறையருள் சங்கர் என்று பெயர் எடுத்தவர்
ஆனால் படத்தில் ஒரு வித நாடகத்தன்மை அதிகம் காணபடுவதை மறுக்க முடியவில்லை , VKR , மூர்த்தி , வனிதாவின் உப்பு சப்பு இல்லாத நகைச்சுவை வேறு படத்துக்கு வேக தடை , அந்த காட்சிகளை நீக்கி விட்டு , படத்தில் இன்னும் சில சம்பவங்களை சேர்த்து இருக்கலாம் .
இந்த படத்தில் தந்திர காட்சிகளை படம் பிடித்தவர் ரவிகாந்த் , திரிசங்கு சொர்க்கம் காட்சி , கறவை மாடு நந்தினி இடம் பெரும் காட்சிகள் இவர் கைவண்ணம் , பட்டணத்தில் பூதம் , ஒளிவிலகில் ஒரே காட்சியில் பல MGR தோன்றுவது இவர் கைவண்ணம் தான் ,
இதே படத்தை NTR பிரமரிஷி விஸ்வமித்ரா என்ற பெயரில் ரீமேக் செய்தார்
வசிஷ்டர்களான ரசிகர்களின் வாயால் திரையுலக ராஜரிஷி பட்டம்!
திரையுலகம் என்ற அண்டவெளியில் கோடானுகோடி தாரகைகள் மின்னலாம். ஆனால் ஒரேஒரு தாரகைதான் தனது இடத்தில் மாறாது நிலைத்து நின்று ஒரு துருவநக்ஷத்திரமாக நடிகர்திலகம் போல ஒரு ஒப்பற்ற வழிகாட்டியாக மின்னிக்கொண்டே இருக்க முடியும். அதுபோலவே எத்தனையோ பேர் தம்மை திரையுலக ராஜாக்கள் என்று நிலைநிறுத்த சுயதம்பட்டங்கள் அடித்துக்கொண்டாலும் வசிஷ்டர்களான ரசிகர்களின் வாயால் திரையுலக ராஜரிஷி பட்டம் பெற்றவர் நடிகர்திலகமே!
In appreciation to our young Turk Ragulram's contribution on NT's version of Rajarishi...my way of a humble thanksgiving! Continue your good work on NT's neglected gems of movies!
https://www.youtube.com/watch?v=TFh19g98wPQ
https://www.youtube.com/watch?v=KfKYqIS3qI8
thrisangu sorkkam!
https://www.youtube.com/watch?v=z6qwNsmRaB0
https://www.youtube.com/watch?v=VVnyE-j6PpA
http://i1373.photobucket.com/albums/...ps9d9aa2e6.jpg
நெல்லை மாநகரில் சென்ட்ரல் திரையரங்கில் தீபாவளியன்று வெளியான நடிகர் திலகத்தின் நீதி திரைப்படம் ஒரு வாரத்தையும் தாண்டி 9 நாட்கள் ஓடியிருக்கிறது. வெகு நாட்களுக்கு பின் அந்த திரையரங்கில் ஒரு படம் ஒரு வாரத்தை தாண்டி ஓடியிருப்பதாக அந்த ஊர் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திருநெல்வேலி கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு நீதி திரைப்படத்தின் விநியோக உரிமையை அண்மையில்தான் அந்த விநியோகஸ்தர் வாங்கினார். வாங்கிய உடனே படம் வெளியிட வாய்ப்பு கிடைத்ததோடு மட்டுமல்லாமல் அது நல்ல முறையில் ஓடியிருப்பது தியேட்டர் மற்றும் விநியோகஸ்தர் இருவருக்கும் மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. மேலும் அந்த அரங்கில் விரைவில் வெள்ளை ரோஜா, சந்திப்பு வைர நெஞ்சம் ஊட்டி வரை உறவு மற்றும் அண்ணன் ஒரு கோவில் ஆகியவை வெளியாக இருக்கிறது. அங்கு மட்டுமல்ல நெல்லை மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் மேற்சொன்ன படங்களெல்லாம் வலம் வர இருக்கின்றன என்ற இனிப்பான செய்தியையும் நெல்லை வாழ் ரசிகர்களுக்கு சமர்ப்பிக்கிறோம்.
அதே போன்று சென்னை வாழ் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. சென்னை மினர்வா திரையரங்கில் நடிகர் திலகத்தின் சொர்க்கம் திரைப்படம் இன்று முதல் 3 காட்சிகளாக திரையிடப்பட்டிருக்கிறது. ரசிகர்கள் கண்டு களிக்க ஒரு அருமையான சந்தர்ப்பம்.
அன்புடன்
நடிகர் திலகத்தின் புதிய பறவை திரைக்காவியமும் விரைவில் நெல்லையில்
திரையிடப்பட உள்ளது.
Style King in Uthama Puthiran now showing in Murasu. Enjoy
வியட்நாம் வீடு -விகடன் விமரிசனம்
புகழ்பெற்ற நாடகம் ஒன்று திரைப்படமாகும்போதெல்லாம், ஒரு கேள்வி எழுந்துதான் தீரும்: 'நாடகம் மாதிரி படம் இருக்கிறதா?'
'வியட்நாம் வீடு' திரைப்படம், நாடகம் மாதிரி இல்லை. நாடகத்தில் புலனாகாத சில விஷயங்கள் படத்தில் ஜொலிக்கின்றன. ஒன்றிரண்டு அம்சங்கள் சோபிக்கத் தவறியுமிருக்கின்றன.
நெருக்கக் காட்சிகளில் காணக் கிடைத்த 'பிரெஸ்டீஜ்' கணேசனின் முக பாவங்கள், திரையில் கிடைத்த அபூர்வ விருந்து. ஆடி ஓய்ந்து முதுமை எய்திவிட்ட தம்பதியரின் பிணைப் பையும் இழைவையும் பத்மனாபன் தம்பதியர் (சிவாஜி-பத்மினி) சித் திரித்திருக்கும் நேர்த்தி, திரையுல கிலேயே ஒரு புதிய சாதனை.
''சாமி பேரை ஏம்பா வச்சுக்கிறீங்க! வையக் கூட முடியலை!'' என்று வேலைக்காரனிடம் அலுத்துக் கொள்ளும் இடத்திலும் சரி, 'வெற்று மிஷினில் டைப் அடிக்கக் கூடாது!' என்று டைப்பிஸ்டை நாசூக்காகக் குத்திக் காட்டும் காட்சியிலும் சரி, 'நீ முந்தினால் உனக்கு, நான் முந்தினால் எனக்கு' என்று அத்தையிடம் விடைபெறும் காட்சியிலும் சரி... சிவாஜியின் நடிப்பில் நயம், முதிர்ச்சி, முழுமை அத்தனையும் பொலிகின்றன.
முழுக்க முழுக்க ஒரு வயோதிகரைக் கதாநாயகனாகக் கொண்டே, துளியும் சுவை குன்றாமல் குடும்ப மணம் கமழ ஒரு திரைப்படத்தைத் தயாரித்த சாமர்த்தியத்தை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.
பிரெஸ்டீஜ் தம்பதியருக்கு இரண்டு டூயட்! முதலிரவு காட்சியில் (பிளாஷ்பேக்) பாடலைவிட சிவாஜி-பத்மினி அபிநயம் பிரமாதம்.
'உன் கண்ணில் நீர் வழிந் தால்...' பாடல் இசையமைப்பாலும், படமாக்கியிருக்கும் விதத்தாலும் நன்கு சோபிக்கிறது.
பத்மினியின் தோற்றத்துக்கு முதுமையின் கம்பீரமும், அமைதியும் அவ்வளவாகப் பொருந்தவில்லை. இருந்தாலும் தாம்பத்திய இனிமை இழையோடும் பகுதிகளில் அவர் மின்னுகிறார்.
ஹிப்பியாக அறிமுகமாகும் நாகேஷ், நிறைய எதிர்பார்க்க வைத்து ஏமாற்றிவிடுகிறார். காந்த் அழகாக மனைவிக்குப் பயப்படுகிறார்.
ரமாபிரபாவுக்கு இப்படி மிரட்டி உருட்டவும் தெரியுமா என்று வியக்கிறோம். 'வில்லி' பாத்திரத்தைச் சாமர்த்தியமாகச் செய்கிறார்.
ரிட்டயராகக் கூடிய காலத்தை ஒரு ஜெனரல் மானேஜர் தெரிந்து கொள்ளாமல் இருப்பது ஆச்சர்யம் தான். அதைப் போலவே, வசதியான ஒரு பதவியிலிருந்து ரிட்டயராகும் அதிகாரி, அளவுக்கு அதிகமாக அலட்டிக்கொள்வது அந்தப் பாத்திரத்தின் 'பிரெஸ்டீஜு'க்குப் பொருத்தமாக இல்லை. மூலக் கதையிலுள்ள இந்த பலவீனமான அம்சம் திரையில் பெரிதாகத் தெரிகிறது.
படத்துக்கு 'பிரெஸ் டீஜ்' (கௌரவம்) சிவாஜி யின் நடிப்பு; அவருடைய நடிப்பின் பிரெஸ்டீஜ்... அப்பப்பா!
Courtesy: Mr Joe
முதல் மரியாதை - விகடன் விமரிசனம்
எஸ்.ராமானுஜம், கோவை-2
'சிவாஜியின் சகாப்தம் முடிந்துவிட்டது' என்று சிலர் நினைத்துக்கொண்டிருக்க, சிவாஜிக்கேற்ற அழுத்தமான கதாபாத்திரத்தைக் கொடுத்து அவருடைய சகாப்தம் முடிய வில்லை என்று நிரூபித்திருக் கிறார் அல்லவா பாரதிராஜா?
நடிப்பில் சிவாஜி இமயம் என்பது உலகறிந்த விஷயம். அவர் ஏற்காத பாத்தி ரங்கள் இல்லை. வெளிப்படுத்தாத உணர்ச்சி கள் இல்லை. இதுவரையில் அவருடைய அற்புதமான நடிப்பாற்றலைப் பாராட்டி எழுதப்பட்ட வர்ணனைகளுக்கும், புகழ்ந்து எழுதப்பட்ட வார்த்தைகளுக்கும் மீறிய திறமை அவரிடம் இருப்பதால், இனி அவர் நடிப்பைப் பற்றிப் பாராட்டுவதில் அர்த்த மில்லை.
கற்பனையில் டைரக்டர் காண்பதை காமிராவுக்கு முன் வெளிப்படுத்துவதுதான் நடிப்பு. அந்த இலக்கணம் சிவாஜியிடம் பிசகியதே இல்லை. ராஜா சாண்டோ காலத்தில் நடித்திருந்தால், அவர் கேட்டதையும் கொடுத்திருப்பார். இன்று பாரதிராஜா கேட் பதையும் கொடுக்கிறார். அந்த அளவுக்கு தேவைக்கேற்பவும் காலத்துக்கேற்பவும் தன்னை மாற்றிக் கொள்ளக்கூடியவரைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டு வெற்றி காண்பது டைரக்டர்களின் கையில்தான் உள்ளது!
இந்தக் கதையில், பஞ்சத்தால் அடி பட்டு அடைக்கலம் தேடி வரும் ராதா விடம் தூய்மையான உள்ளத்தோடு பழகுவ தாகட்டும், தாய்மாமனுக்குக் கொடுக்கப் பட்ட வாக்கு காப்பாற்றப்பட வேண்டும் என்கிற நிர்பந்தத்தின் காரணமாய், மனைவி வடிவுக்கரசியின் ஏச்சுக்கும் பேச்சுக் கும் கட்டுப்பட்டுப் பெட்டிப்பாம்பாக அடங்கிப்போவதாகட்டும், மனைவி யைச் சார்ந்தவர்கள் ராதாவோடு தன்னைச் சம்பந்தப்படுத்தி எள்ளி நகையாடும்போது சீறி எழுவதாகட் டும்... எந்த இடத்திலும் அளவுக்கதிக மாக உணர்ச்சிவசப்படாமல் சிவாஜி அடக்கமாக நடித்ததிலும், அவரை பாரதிராஜா அப்படி நடிக்க வைத்ததி லும் இருவருமே சம அளவில் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
கே.எம்.இளங்கோ, கு.பாளையம்.
பாரதிராஜா எந்தெந்தக் காட்சிகளின்போது நமக்குத் தெரிகிறார்?
எந்தக் காட்சியின்போது தெரிய வில்லை என்று கேட்பதே பொருத்தம்.கலப்படம் செய்யாமல் கிராமத்து மண் வாசனையைப் படம் நெடுக நறுமணக் கச் செய்திருக்கிறார் பாரதிராஜா.
கதாநாயகிக்கு வெள்ளை ஆடை உடுத்தி ஸ்லோமோஷனில் காற்றில் நீச்சலடிக்க வைப்பது, திருவிழாக் காட்சியை வலுக்கட்டாயமாகப் புகுத்தி வண்ண வண்ணத் துணிக ளைச் சலசலக்க வைப்பது, கையில் தீப்பந்தத்தோடு கிராமத்து மொத்த ஜனங்களும் ஒருவித ஆக்ரோஷமான வெறியில் ஓடிவருவது போன்ற தன் பலவீனங்களைத் தவிர்த்து, கொஞ்ச மும் குழப்பமில்லாமல் திரைக்கதை அமைக்கும் தன் பலத்தை மட்டுமே இம்முறை பயன்படுத்தியிருக்கிறார்!
படத்தில் டைரக்டருக்கு வலக்கரம் ஒளிப்பதிவாளர் கண்ணன். 'நான் படப்பிடிப்புக்குச் செல்லும்போது காமிராவை எடுத்துச் செல்வதில்லை.என் கண்ணனின் இரண்டு கண்களைக் கொண்டு செல்கிறேன். அந்தக் கண்க ளுக்கு மட்டும்தான் ஆகாயத்தின் மறு பக்கத்தையும் பார்க்கத் தெரியும்' என்ற பாரதிராஜாவின் பாராட்டுக்குத் தன்னை உரியவராக் கிக்கொண்டுவிட்டார் கண்ணன்.
ஜி.ஜோதிமணி, கோவை-1.
நீண்ட நாட்களுக்குப் பிறகு ராதாவின் அபார நடிப்பு அசத்திவிட்டதே?
'வெறும் ஷோ கேஸ் பொம் மையாக வந்து போகிறார்' என்று ராதா மீது எல்லோராலும் (எங்களையும் சேர்த்து) ஏகமனதாகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு இந்தப் படத்தில் தவிடுபொடியாகிவிட்டது. மலையோடு மோதியிருந்தாலும், நடிப்பில் மலைக்க வைத்துவிட்டார்!
ஜி.ராஜகோபாலன், சென்னை -24
அறிமுகமாகியுள்ள இளஞ்ஜோடி தீபன் - ரஞ்சனியைப் பற்றி...
பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டுச் சோடை போன முதல் ஜோடி என்ற பெருமை(?) இவர்களைச் சாரும்!
- விகடன் விமர்சனக் குழு
பெரும்பான்மையான வாசகர்களுக்குப் பிடித்த அம்சம்:
சிவாஜி, ராதா நடிப்பு; பாரதிராஜாவின் இயக்கம்.
பிடிக்காத அம்சம்:
ஜனகராஜின் பாத்திரம்.
Today Mudal Mariyadhai shown in Jaya TV.
Courtesy: Mr Murali Srinivas old post
இந்த வார ஆனந்த விகடன் இதழில் (22.07.2009) பொக்கிஷம் பகுதியில் [பழைய ஆ.வி. இதழ்களிலிருந்து மறு பிரசுரம் செய்யும் பகுதி] கீழ்க்கண்ட செய்திகள் வந்திருக்கின்றன.
நான் சிவாஜி ரசிகன் -பிரித்வி ராஜ்கபூர்
நானும் நண்பர்களும் பம்பாய் சென்றிருந்தபோது, பிருதிவி ராஜ் கபூரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரோடு உரையாடும்போது 'நடிப்புத் திறமை' பற்றிப் பேச்சு வந்தது. அப்போது அவர் கூறினார்...
''சினிமாவைப் பொறுத்தவரை சிறந்த நடிகனாவது சுலபம். நடை, உடை, பாவனைகளை மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஏற்ற பாத்திரத்தின் உணர்ச்சிகளை முகபாவத்தில் காட்டி, அலட்டிக் கொள்ளாமல் அநாயாசமாக நடித்துப் பெயர் வாங்கிவிடலாம். மேலை நாட்டு நடிகர்களும் இப்படித்தான் செய்கிறார்கள். நடை, உடை, பேச்சு முதலியன நிஜ வாழ்வில் எப்படியோ அப்படியேதான் இருக்கும். முகபாவம் மட்டும் பாத்திரத்தின் தன்மையைக் காட்டும். ஆனால், நமது சிவாஜி இருக்கிறாரே, அவர் தனது ஒவ்வொரு அங்க அசைவிலும் பாத்திரத்தின் தன்மையைக் காட்டிவிட வேண்டும் என்று பாடுபட்டு நடிக்கிறார். அந்த முயற்சியில் வெற்றியும் பெறுகிறார். அவரைப் பெற்ற நாம் பாக்கியசாலிகள்! மற்ற நடிகர்கள் அவரிடமிருந்து கற்க வேண்டிய நுணுக்கங்கள் பல உள்ளன. எந்த நாட்டில் பிறந்திருந்தாலும், 'சிறந்த நடிகர்' என்ற பாராட்டைப் பெறக்கூடிய திறமை அவரிடம் உள்ளது. பம்பாயில் இவரது நாடகங்கள் நடந்தால், உடல்நலத்தைக் கூடப் பொருட்படுத்தாமல் போய்ப் பார்த்துவிடுவேன். நான் ஒரு சிவாஜி ரசிகன்.''
வட இந்திய திரையுலகத் தந்தை எனப் போற்றப்படும் பிருத்விராஜ் கபூரைப் பற்றி சிவாஜி முன்பொருதரம் கூறியதென்ன தெரியுமா?
''அவரா? அவர் எங்களுக்கெல்லாம் வழிகாட்டியாயிற்றே! இந்தியாவில் சிறந்த நடிகர்கள் மட்டுமல்ல, மேல் நாட்டு நடிகர்களுக்கும் ஈடு கொடுக்கும் நடிகர்கள்கூட இங்கு இருக்கிறார்கள் என்பதை நிரூபித்தவராயிற்றே!அவரிடமிருந்து கற்க வேண்டியது எவ்வளவோ! அதற்கு நீண்ட ஆயுள் வேண்டும். அவர் ஒரு நடிப்புக் கடல். அவர் காலில் விழுந்து கும்பிட்டதன் பலன்தான் இன்று நான் உயர்ந்த நிலையில் இருக்கிறேன்! இந்திய நடிகர்களின் தந்தை அவர்!''
- பி.ஆர்.விசுவநாதன்.
மேற்சொன்ன செய்தி 31.10.1965 ஆ.வி. இதழில் வெளியானது.
பண்டைத் தமிழ்நாட்டிலே அரசர்களும், பிரபுக்களும் கலைஞர்களுக்கு வாரி வழங்கு வதுதான் வழக்கமாக இருந்தது. இப்போது காலம் மாறிவிட்டது. மக்கள் மன்னர்களாக மாறிவிட்டனர்! அதனால், கலைஞர்கள் வள்ளல்களாக மாற முடிந்திருக்கிறது.
சென்ற வாரம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நகரத்தில் ஏழைப் பள்ளி மாணவர்களுக்கு இலவச உணவளிக்கும் திட்டத் துக்கு இதுவரை யாருமே கொடுத்தறியாத பெருந் தொகையாக ஒரு லட்சம் ரூபாய் கொடுக்க முன் வந்துள்ளார். கட்டபொம்மன் நாடகத்தின் நூறாவது தின விழாக் கொண் டாட்டத்தை ஒட்டி, இந்த நூறாயிரம் ரூபாய் இப் பெரும் பணிக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த அரிய செயலைக் கண்டு வீரபாண்டிய கட்டபொம்மனின் ஆன்மா ஆனந்தமடைகிறது.
தமிழ்நாட்டில் இத்தகைய ஈகையுள்ளம் படைத்த கலைஞர்கள் இருக்கிறார்கள் என்பது நமது பாரதப் பிரதமருக்குத் தெரிய வேண்டும் என்ற நோக்கத்தோடு, நமது முதன்மந்திரி, சமீபத்தில் சென்னைக்கு விஜயம் செய்யவிருக்கும் பிரதம மந்திரி நேருஜி கையாலேயே அதை நகரசபைக்கு அளிக்கவேண்டும் என்று யோசனை கூறினார்.
நல்ல காரியங்களுக்கு உதவி புரிவதில் எப்போதுமே முன்னணியில் நின்று வருகிறார்கள் நம் தமிழ்நாட்டு நட்சத்திரங்கள். புயலடித்தாலும், வெள்ளம் வந்தாலும் அவர்கள் நெஞ்சம் நெகிழ்ந்துவிடும். ஏழை மாணவர்களுக்கு இலவச உணவு அளிக்கும் அரிய லட்சியத்துக்கு லட்சம் ரூபாய் கொடுத்த சிவாஜி கணேசன் அவர்களைக் குழந்தைகள் கொண்டாடும்; தெய்வம் வாழ்த்தும்; தமிழ்த் தாய் பெருமைப் படுவாள்!
மேற்சொன்ன செய்தி 12.04.1959 ஆ.வி. இதழில் வெளியானது.
இது தவிர 27.02.1966 தேதியிட்ட இதழில் வெளியான நடிகர் திலகம் சம்பந்தப்பட்ட ஒரு செய்தியையும் மறு பிரசுரம் செய்திருக்கிறார்கள். 1966 வருடம் ஜனவரி மாதம் குடியரசு தினத்தன்று நடிகர் திலகம் பத்மஸ்ரீ பட்டம் பெற்ற போது பானுமதி அவர்களுக்கும் பத்மஸ்ரீ கிடைத்தது. இதற்காக பிலிம் வர்த்தக சபை நடத்திய பாராட்டு விழாவில் நன்றி தெரிவித்து இருவரும் ஒரே நேரத்தில் மேடையில் பேசியிருக்கிறார்கள். நடிகர் திலகம் தமிழில் என்ன சொன்னாரோ அதையே அப்படியே தெலுங்கில் பானுமதி பேசியிருக்கிறார். தமிழிலும் தெலுங்கிலும் மாறி மாறி வந்த நன்றியை கேட்டு கூட்டத்தினர் அனைவரும் சிரித்து மகிழ்ந்தனர் என்று குறிப்பிட்டுளார்கள்.
இதோடு சேர்ந்து நடிகர் திலகம் வொயிட் & வொயிட்டில் பாடம் செய்த புலியின் மீது கை வைத்து நிற்கும் அமர்க்களமான போஃஸ் முழுப்பக்கத்தில் வந்திருக்கிறது.
அன்புடன்
Courtesy: Saradha Madam old post
வசந்த் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் 'சிங்கத்தமிழன் சிவாஜி' தொடரில், நேற்றைய எபிசோட்டில் திரு. ராம்குமார் சொன்ன தகவல்கள் ரொம்ப 'டச்சிங்'காகவும், மனதை நெகிழச்செய்வதாகவும் இருந்தன. முதலில், உலகநாயகன், கலைஞானி டாக்டர் கமல், தனது திரையுலக பாதையில் ஐம்பது வருடங்களைத் தொட்டதற்கு வாழ்த்துச்சொன்னவர், கமலுக்கும் சிவாஜிக்கும் இடையேயான பரஸ்பர உறவு பற்றியும் விவரித்துச்சொன்னார். களத்தூர் கண்ணம்மாவைத்தொடர்ந்து, பார்த்தால் பசிதீரும் படத்தில் சிவாஜியுடன் நடித்த அனுபவத்தைச் சொல்லும்போது, அதில் சிவாஜியின் பெர்ஃபாமென்ஸ் பற்றியும் சொன்னார். முன்னாள் ராணுவ வீரரான இவர் ஒருகால் ஊனமுற்ற நிலையில் 'காலை நொண்டிக்கொண்டே டூயட் பாடியவர் இவர் ஒருவராகத்தான் இருக்கும்' என்றுபெருமையுடன் குறிப்பிட்டார். (அதே மாதிரி கமல் நடந்து காட்டுவாராம்). கூடவே தேவர் மகன் கதை டிஸ்கஷன் பற்றிக்குறிப்பிட்ட ராம்குமார், பாதிக்கதையை மட்டும் எழுதிய நிலையில், நடிகர்திலகத்திடம் கதை சொன்ன கமல், நீங்கள் நடிப்பதாக இருந்தால் மீதிக்கதையையும் எழுதுகிறேன் என்று சொன்னாராம். முதலில் மறுத்த நடிகர்திலகம், பின்னர் சிறிதுநேரம் கழித்து கன்வின்ஸ் ஆகி, 'சரி நடிக்கிறேன், போய் மீதிக்கதையை ரெடி பண்ணு' என்றாராம்.
தேவர் மகனுக்காக 'சிறந்த நடிகர்' என்ற தேசிய விருது வழங்கப்பட்டபோது, நடிகர்திலகம் அதைப்பெற்றுக்கொள்ள டெல்லிக்கு செல்ல மறுத்துவிட்டார் என்றும், நடிகர்திலகம் மறுத்ததால், சிறந்த படத்துக்காக தேவர்மகனுக்கு வழங்கப்பட்ட விருதைப்பெற கமலும் டெல்லி செல்லவில்லை என்றும் சொன்னார். (மத்தியில் இருப்பவர்களுக்கு இது உறைத்ததால்தான், 'தாதாசாகேப் பால்கே' விருது நடிகர்திலகத்தைத் தேடி வந்தது போலும்).
பின்னர், எகிப்து அதிபர் கமால் அப்துல் நாஸர், இந்தியா வந்திருந்தபோது நடிகர்திலகம் அளித்த விருந்தில் கலந்துகொண்டு பெருமைப்படுத்தியதையும், அப்போது நடிகர்திலகம் நினைவுப்பரிசாக வழங்கிய பெரிய தஞ்சாவூர் தட்டை மகிழ்ச்சியுடன் நாஸர் ஏற்றுக்கொண்டதையும் நினைவுகூர்ந்தார். (தமிழனுக்கும் தமிழ்நாட்டுக்கும் நடிகர்திலகம் பெருமை சேர்த்த தருணங்கள்).
இந்தியாவின் இசைக்குயில் லதா மங்கேஷ்கரும் அவரது குடும்பத்தினரும், தங்கள் குடும்ப நண்பர்களாக ஆன நிகழ்ச்சியையும் ராம்குமார் சொன்னார். பம்பாயில் 'பாவமன்னிப்பு' படம் பார்த்த லதாவும் அவரது குடும்பத்தாரும், நடிகர்திலகத்தைப் பார்த்தபோது, தங்களின் தந்தை நினைவு வந்ததாகவும், உடனே விமானத்தைப்பிடித்து சென்னை வந்து நேராக நடிகர்திலகத்தின் வீட்டுக்கு வந்தவர்கள் அவர் காலில் விழுந்து ஆசிபெற்று, அவர் கையில் ராக்கியைக் கட்டி தங்களின் அண்ணனாக ஏற்றுக்கொண்டார்களாம். முன் அறிமுகம் இல்லாத இசைக்குயில் லதா மங்கேஷ்கரின் இந்த அன்பில் நடிகர்திலகம் திகைத்துப்போனாராம். அன்றிலிருந்து இன்று வரை தங்கள் குடும்ப நிகழ்ச்சிகள் எதுவும் லதா மங்கேஷ்கர் இல்லாமல் நடந்ததில்லையென்றும், அதுபோலவே லதாவின் குடும்ப நிகழ்வுகளும் நடிகர்திலகம் மறையும் வரை அவரில்லாமல் நடந்ததில்லை என்று நெகிழ்வுடன் குறிப்பிட்டார். (லதா மங்கேஷ்கர் ராக்கி கட்டிய அந்தக்கைகளில் நானும் ராக்கி கட்டியிருக்கிறேன் (இதை முன்பே நான் குறிப்பிட்டுள்ளேன்) என்பதை நினைத்தபோது என் கண்கள் பனித்தன
'வசந்தகாலக்கோலங்கள், வானில் விழுந்த கோடுகள்
கலைந்திடும் கனவுகள், கண்ணீர் சிந்தும் நினைவுகள்').
ஒவ்வொரு ஆண்டும், நடிகர்திலகம் பிறந்த நாளான அக்டோபர் 1-ம்தேதி, நடிகர்திலகத்துடன் பணியாற்றிய கலைஞர்களில் நான்கு அல்லது ஐந்து பேருக்கு ஆண்டுதோறும் தலா ஐம்பதாயிரம் செக்கும், சிவாஜி விருதும் வழங்கும் திட்டம், லதா மங்கேஷ்கர் சொன்ன யோசனைதான் என்றும், அதன்படி கடந்த ஏழு ஆண்டுகளாக தானும் பிரபுவும் அதைத் தொடர்ந்து செய்து வருவதாகவும் இவ்வருடமும் வரும் அக்டோபர் 1 அன்று செய்ய இருப்பதாகவும் குறிப்பிட்டார்,
ஆரம்பத்தில் குடும்பத்திற்காக நேரம் செலவிடாமல், படப்பிடிப்புகளிலேயே இருந்த நடிகர்திலகம், 1970-க்குப்பின்னர், குடும்பத்துக்காக ஞாயிற்றுக்கிழமைகளில் கட்டாய ஓய்வெடுத்துக்கொள்வாராம். 'அதன்பின்னர்தான் நாங்களெல்லாம் அப்பாவுடன் அதிக நேரம் இருக்க முடிந்தது' என்ற ராம்குமார் ஒரு மகனாக தன் ஆதங்கத்தை வெளியிட்டபோது நம் கண்களில் நீர் கட்டியது. 'அப்பா தன் வாழ்நாளில் ஒருமுறைகூட தன்னையோ பிரபுவையோ கட்டியணைத்துக் கொண்டதில்லை, சித்தப்பா பசங்களையெல்லாம் அணைத்துக்கொள்வார். கேட்டால் அவங்க முன்னால் உங்களை அணைத்துக்கொண்டால் பெரியப்பா தன் பிள்ளைகளை மட்டும் அணைத்துக்கொள்கிறார் என்று நினைப்பார்கள் என்ற எண்ணத்தினால் விலகியே இருப்பாராம். (அதனால்தான் கூட்டுக்குடும்ப வாழ்க்கைக்கு தமிழ்நாட்டிலேயே ஒரு எடுத்துக்காட்டாக விளங்கும் குடும்பமாக திகழ்கிறது). அவர் மறைந்த பிறகு, அவர் உடலைக்கட்டிக்கொண்டு அழும் பாக்கியம்தான் தனக்கு கிடைத்தது என்று அவர் சொன்னபோது, பாசத்துக்கு ஏங்கிய அந்த முகத்தைப்பார்த்து நம் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஆனால் அவர் மனம் உடைந்துவிடாமல் பேசினார். ராம்குமார் கூலிங்கிளாஸ் அணிந்திருந்ததால், அவர் கண்கலங்கியதை நாம் பார்க்க முடியவில்லை.
Courtesy: Mr joe
சினிமா விமர்சனம்: தங்கப் பதக்கம் -விகடன்
'தங்கம் என்றால் இதுதான் மாற்றுக் குறையாத தங்கம்' என்று கையில் எடுத்துக்காட்டுவது போல, போலீஸ் அதிகாரி என்றால் தன்னைப் போல்தான் இருக்கவேண்டும் என்று சொல்லாமல் சொல்லும் சிவாஜி கணேசனின் நடிப்பும் தோற்றமும் தங்கமா, வைரமா என்று வியக்கிறோம்!
காட்சிக்குக் காட்சி சிவாஜியின் கம்பீரத்தையும், கண்டிப்பையும், கடமை உணர்ச்சியையும், கனிவையும் பார்க்கும்போது எந்த இடத்தில் உயர்ந்து நிற்கிறார் என்று இனம் கண்டு கொள்ளப்பார்க்கிறோம். முடியவில்லை.
கடமையே உருவமான போலீஸ் அதிகாரிக்கு 'என் னைப் போல் கண்ணியமான ஒரு பெண்தான் மனைவியாக இருக்கமுடியும்' என்று சொல் வதுபோல் லட்சிய மனைவியாக நடித்திருக்கும் கே.ஆர்.விஜயா வின் நிறைவை எப்படிச் சொல் வது? தங்கப் பதக்கத்தைத் தட்டிக் கொள்கிறார்!
ஸ்ரீகாந்திடம் நல்ல முன்னேற்றம். அப்பாவின் கண்டிப்பைத் தவறாகப் புரிந்துகொண்டு அவரை அவமானப்படுத்தும் சந்தர்ப்பங்களைச் சாமர்த்திய மாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.
சோவுக்குக் கான்ஸ்டபிள் பாத்திரம் ஒன்று போதாதா? கவுன்சிலர் களேபரம் கதைக் குத் தேவையில்லாத கூத்து!
மைனர் மனோகரை அங்கவஸ்திரத்தால் கட்டி இழுத்துப்போகும் போலீஸ் அதிகாரி, வழியில் மடக்குகிற அத்தனை பேரையும் கைத்தடியாலேயே அடித்து நொறுக்குவது இயற்கையாக இல்லை.
மகன் மீது போலீஸ் அதிகாரி காட்டும் கண்டிப்புக்குக் கதையில் கொடுக்கப்பட்டுள்ள அழுத் தம், அவன் தந்தையைப் பழி வாங்கத் துடிக்கும் அளவுக்கு எதிரியாக மாறுவதற்கும், தேசத் துரோகியாகக்கூடிய அளவுக்கு மாறுவதற்கும் கனம் சேர்ப்ப தாக இல்லை.
ஜீப் வேகத்தில் ஓடிக்கொண்டிருந்த கதை, யுத்தம்-ராணுவ ரகசியம் என்று வரும்போது தடுமாறுகிறது.
இத்தனை இருந்தும், எதையும் கண்டுகொள்ளவிடாதபடி திசை திருப்பிவிடுகிறார் சிவாஜி.
தங்கப்பதக்கம்... சிவாஜி கணேசனின் நடிப்புக்கு ஒரு தங்கப்பதக்கம்.
Thanks : Vikatan.com
Courtesy: Mr Joe
'பராசக்தி' முதல் 'உயர்ந்த மனிதன்' வரை..! - பஞ்சு
பதினாறு ஆண்டுகளுக்கு முன், முதன்முதலாக 'பராசக்தி' படத்தில் நடித்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 125-வது படமாக 'உயர்ந்த மனிதன்' வெளிவருகிறது. 'பராசக்தி' பட மாக்கப்பட்ட ஏவி.எம். ஸ்டுடி யோவில்தான் 'உயர்ந்த மனித னும்' உருவாகி இருக்கிறது. பராசக்தியை டைரக்ட் செய்த இரட்டையர்கள் கிருஷ்ணன் - பஞ்சுதான் இந்தப் படத்தையும் டைரக்ட் செய்திருக்கிறார்கள். திரு.பஞ்சு, சிவாஜி கணேசனைப் பற்றி இங்கே சொல்கிறார்:
''முதன்முதலாக நாங்கள் சிவாஜி கணேசனைப் பார்த்தது 1948-ம் வருஷத்தில். அதற்கு முன்பே 'சிவாஜி'யாக நடித்து விட்டபோதிலும், அப்போது அவர் வெறும் வி.சி. கணேசன் தான். என்.எஸ்.கே. நாடக சபா வில் மனோகரா நாடகத்தில் 'விஜயாள்' வேஷம் போடுவார். அந்த நாடகத்தில்தான் அவரைப் பார்த்தோம். அவரது நடிப்பில் அப்போதே ஓர் அலாதித் தன்மை பளிச்சிட்டது. பிற்கா லத்தில் அவர் திரை உலகில் ஒரு சிறந்த நடிகராக வருவார் என்ற எண்ணம் ஏற்பட்டது. அதற்கான அறிகுறிகள் அவரது நடிப்பில் இருந்தன. அப்போதே அவரைச் சினிமா உலகுக்குக் கொண்டுவர விரும்பினோம். ஆனால், அதற்குச் சந்தர்ப்பம் சரியாக இல்லை. 1950-ல்தான் எங்களுக்கு அந்தச் சந்தர்ப்பம் கிடைத்தது - பராசக்தி படம் மூலமாக.
'பாவலர்' பாலசுந்தரம் எழுதி, நாடகமாக நடிக்கப்பட்டு வந்த பராசக்தியைத் திரைப் படமாக்க நினைத்தபோது, யாரைக் கதா நாயகனாகப் போடுவது என்ற பிரச்னை எழுந்தது. எங்களுக்கு கணேசனைப் போட வேண்டும் என்ற எண்ணம். தயாரிப்பாளர் களுக்கும் அப்படித்தான். ஆனால், ஒரு சிலர் வேறு நடிகர்களைப் பற்றிச் சொன்னார்கள். கே.ஆர்.ராமசாமியின் பெயரும் அடிபட்டது. கடைசியில் 'அண்ணா'விடம் போய், அவரு டைய யோசனையைக் கேட்டோம். 'உங்கள் எண்ணம்தான் சரி! கணேசனையே போடுங் கள். அவர் நன்றாக நடிப்பார். தமிழ் சினிமா உலகுக்கு ஒரு புதிய நடிகர் கிடைத்த மாதிரியும் இருக்கும்' என்றார் அண்ணா.
அப்போது கணேசன் பெரிய குளத்தில் 'சக்தி நாடக சபா' நாடகங்களில் நடித்துக்கொண்டு இருந்தார். தினசரி நாடகம். 'டெஸ்ட்'டுக்கு ரயிலில் வந்து போவதென்றால் நாடகங்கள் பாதிக்கப்படும். எனவே, பெரிய குளத்திலிருந்து திருச்சி வரை காரிலும், அங்கிருந்து சென் னைக்கு விமானத்திலும் அழைத்து வந்து, மறுபடியும் விமானத்திலேயே அனுப்பி வைத்தோம். உயரப் பறந்து வந்து, சினிமா உலகுக்குள் நுழைந்து, உயர்ந்த இடத்தைப் பிடித்துவிட்ட நடிகர் அவர்'' என்றார் பஞ்சு.
சிவாஜியின் நடிப்பு, கிருஷ் ணன்-பஞ்சுவின் டைரக்ஷன், கலைஞர் கருணாநிதியின் அரு மையான வசனங்கள் எல்லாம் சேர்ந்ததால், பராசக்தி படம் 'ஓஹோ'வென்று ஓடியது. சினிமாவில் வரும் பண்டரிபாய் வேஷம் நாடகத்தில் இல்லை. கருணாநிதியின் புதிய படைப்பு அது. நாடகத்தின் கதைப் போக்கில் இருந்த குறைகளைச் சரி செய்வதற்காக, மற்றவர்க ளின் சந்தேகங்களுக்கு விளக்கம் சொல்வதற்காக, கருணாநிதி அந்தப் பாத்திரத்தைச் சிருஷ் டித்தாராம்.
''இப்போது சிவாஜி நடிப்பில் அலாதியான மெருகு ஏற்பட் டிருக்கிறது. ஒன்றைக் கவனிக்க வேண்டும். பராசக்தியைப் போல் 'டயலாக்' படங்களுக்கு அப்பொழுதும் சரி, இப்பொழு தும் சரி, அப்படித்தான் நடிக்க வேண்டும். இப்போது 'டயலாக்' பாணிதான் மாறிவிட்டதே! ஆனால், இந்தப் பாணியில் கூட சிவாஜிக்குத்தான் வெற்றி. ஏனெனில் எந்தெந்த வசனத்தை எப்படியெப்படி பேசவேண்டும் என்று அவருக்கு நன்றாகத் தெரியும். உலகில் எந்த நடிகரை எடுத்துக்கொண்டாலும், சிவா ஜியைப் போல் யாரும் இவ்வ ளவு 'வெரைட்டி'கள் செய்த தில்லை. 'வெரைட்டி' மட்டு மல்ல, ஒரே வேஷத்தைப் பல கோணங்களில், பலவிதமாகச் செய்யக்கூடியவர் சிவாஜி. உயர்ந்த மனிதன் படத்தில் இளைஞராகவும், அப்பாவாக வும் வருகிறார் கணேசன். அப்பா வேஷம் அவருக்குப் புதிதல்ல. மோட்டார் சுந்தரம் பிள்ளை, எங்க ஊர் ராஜா ஆகிய படங்களிலும் அப்பா வேஷம் போட்டிருக்கிறார். ஆனால், இந்த மூன்று அப்பா வேஷங்களிலும் மூன்று வித மான 'அப்பா'க்களைக் காட்டி யிருக்கிறார். சிவாஜியைத் தவிர வேறு யாராலும் அதைச் செய் திருக்கமுடியாது.
உயர்ந்த மனிதனில் தீப் பிடித்து எரிகிற ஒரு வீட்டுக்குள் போக வேண்டும். தயங்காமல் போயே விட்டார். கை கால்களி லிருந்த ரோமங்கள் எல்லாம் அனலில் கருகிவிட்டன. 'இந்த இடத்தில் உங்கள் முகத்தில் கொஞ்சம் கரி இருக்கவேண் டும்' என்றால், 'அவ்வளவு தானே!' என்று, அணைந்தும் அணையாமலும் இருக்கும் ஒரு கொள்ளியிலிருந்து கரியை எடுத்துப் பூசிக் கொள்வார். வேஷத்தில் அவருக்கு அவ்வ ளவு ஈடுபாடு!'' என்றார் பஞ்சு.
நன்றி : விகடன்
a recap of Mr Murali Srinivas old post
கோடீஸ்வரன் - Part I
தயாரிப்பு: கணேஷ் மூவி டோன்
இயக்கம்: சுந்தர்ராவ் நட்கர்னி
வெளியான நாள்: 13.11.1955
ஊரில் பெரிய மனிதர் ராவ் பகதூர் ராமசாமி. அவருக்கு ஒரு மகன் கண்ணன். ஒரு மகள் நீலா. கண்ணன் சென்னையில் எம்.ஏ. படித்துவிட்டு ஊருக்கு வருகிறான். மகள் நீலா வீட்டில் இருக்கிறாள். பணத்தாசை பிடித்த ராமசாமி தன் மகனுக்கு பெரிய அளவிலான வரதட்சணை எதிர்பார்க்கிறார்.
பக்கத்து வீட்டில் வசிப்பவர் சிதம்பரம். வசதிக் குறைவானவர். அவர் மகள் கமலா கல்யாணத்திற்காக காத்திருக்கிறாள். ஆனால் வரும் மாப்பிள்ளைகள் எல்லோரும் வரதட்சணை அதிகமாக கேட்க அவளின் கல்யாணம் தள்ளிப் போகிறது. ஒரு டாக்டர் அவளை பெண் பார்க்க வந்து விட்டு ஏராளமான கேள்விகள் கேட்டு ஏராளமான வரதட்சணையும் கேட்க அந்த வரனும் தட்டிப் போகிறது. கமலாவும் கண்ணனும் ஒருவரை ஒருவர் விரும்புகின்றனர்.
சிதம்பரத்தின் அண்ணன் மகன் சந்தர். சென்னையில் மருத்துவப் படிப்பு படித்து கொண்டிருக்கும் சந்தர் கண்ணனோடு ஊருக்கு வருகிறான். அது மட்டுமல்ல, ஆனந்தன் என்ற புனைப் பெயரில் கவிதை எழுதுபவன். ஊருக்கு வரும் சந்தர் பரமசிவத்தின் பண மோகத்தையும் கண்ணனும் கமலாவும் ஒருவரை ஒருவர்
விரும்புவதையும் தெரிந்துக் கொள்கிறான். கல்யாணமே வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருக்கும் கண்ணனின் தங்கை நீலாவிற்கு சந்தர் மேல் ஒரு ஈர்ப்பு உருவாகுகிறது.
ஏற்கனவே பெண் பார்க்க வந்து வரதட்சனை கேட்டு தங்களை அவமானப்படுத்திய டாக்டர் பசுபதியை பழி வாங்க அவரை மீண்டும் வரவழைக்கிறார்கள் சந்தரும் நீலாவும். இப்போது கல்யாண பெண் இடத்தில் நீலா இருந்து டாக்டரை பாட தெரியுமா, ஆடத் தெரியுமா என்றெல்லாம் கேள்வி கேட்டு அவமானப்படுத்த, டாக்டர் அவர்கள் மேல் வன்மம் கொள்கிறார்.
கண்ணன் கல்யாணம் நடைபெற சந்தர் ஒரு யுக்தி செய்கிறான். முதலில் தயங்கினாலும் கண்ணன் ஒத்துக் கொள்கிறான். இதற்கு நீலாவின் ஆதரவும் இருக்கிறது. அதன்படி கண்ணன் வீட்டிற்கு பெண் கேட்க செல்லும் சிதம்பரத்துடன் உடன் செல்லும் சந்தர் தன் பணக்கார மாமா ஒருவர் இறந்து விட்டதாகவும் வாரிசில்லாத அவரது உயில்படி சொத்தெல்லாம் தன் பெயருக்கு வருவதாகவும் அதனால் தான் ஒரு கோடீஸ்வரன் என்றும் சொல்கிறான். அண்ணன் என்ற முறையில் தங்கை கல்யாணத்தை நடத்தி வைப்பதாக கூறும் சந்தர் வரதட்சனை பணத்தையும் சேர்த்து முப்பதாயிரம் ரூபாய் தருவதாக சொல்கிறான்.
இந்த பணத்தை கொடுப்பதற்காக ஒரு தந்திரம் செய்யும் சந்தர் கண்ணனிடம் அவனது தந்தையின் இரும்புப் பெட்டியில் இருக்கும் பணத்தை அவருக்கு தெரியாமல் எடுத்து வந்து கொடுக்கும்படி சொல்கிறான். நீலாவிடமும் இந்த திட்டத்தை சந்தர் ரகசியமாக சொல்வதை தங்கையான சிறுமியும் கேட்டு விடுகிறாள்.
தந்தையின் படுக்கைக்கு அடியில் இருக்கும் இரும்பு பெட்டி சாவியை எடுத்து பணத்தை எடுக்க சிரமப்படும் கண்ணனுக்கு நீலாவும் உதவுகிறாள். கல்யாணம் நல்லப்படியாக நடந்து முடிகிறது. தன் மகள் நீலாவை சந்தர் கல்யாணம் செய்துக் கொள்ள வேண்டும் என்று ராவ் பகதூர் கேட்க நீலா இப்போது வேண்டாம் என்று மறுத்து விடுகிறாள்.
இந்த நிலையில் சந்தருக்கு பணம் எப்படி கிடைத்தது என்பது பற்றி சிதம்பரம் தன் மனைவியுடன் பேசிக் கொண்டிருக்க சந்தரின் தங்கை தன் வயதையொத்த தன் கஸினிடம் கோவிலில் வைத்து [அவள் ஏற்கனவே சந்தர் நீலாவிடம் ரகசியமாக சொன்னதை கேட்டிருந்ததால்] உண்மையை சொல்கிறாள். இதை கோவிலுக்கு வந்திருக்கும் டாக்டர் பசுபதி தற்செயலாய் கேட்டு விட, அப்போதே ராவ் பகதூர் வீட்டிற்கு சென்று அவரிடம் சொல்லி விடுகிறார்.
தன்னிடம் வரும் நோட்டுக் கட்டுகளின் எங்களை எழுதி வைக்கும் வழக்கமுடைய ராவ் பகதூர் தன்னிடமிருந்த நோட்டுகளின் எண்களையும் சந்தர் கொடுத்த நோட்டுகளின் எண்களையும் ஒப்பிட்டு பார்க்க, குட்டு வெளிப்படுகிறது. கோவமுறும் ராவ் பகதூர் கண்ணனையும் கமலாவையும் வீட்டை விட்டு வெளியேற்றுகிறார். சந்தரையும் சிதம்பரத்தையும் கேவலமாகவும் பேசி விடுகிறார். தன் சொத்தையெல்லாம் விற்று பணமாக்கி ஒரு வங்கியில் வைப்பு நிதியாக வைத்து விடுகிறார்.
நடந்த தவறுகளுகெல்லாம் பொறுப்பேற்று கொள்ளும் சந்தர் மீண்டும் கண்ணனையும் அவனது தந்தையுடன் சேர்த்து வைக்க சபதம் எடுக்கிறான். ஆனால் இப்போதும் சந்தரை ராவ் பகதூர் ஒரு கோடிஸ்வரனாக நினைத்துக் கொண்டிருக்கிறார். தன் மகளுக்கு மாப்பிள்ளை பார்க்க முயற்சி எடுக்க, அவர் மகள் நீலாவோ தன் தந்தை வற்புறுத்தியதால் தன் மனம் சந்தரை நாட தொடங்கி விட்டது என கூறுகிறாள்.
இந்நிலையில் டாக்டர் பசுபதி நீலாவை மணந்து கொள்வதாக மீண்டும் வருகிறார். ராவ் பகதூர் வீட்டிற்கு வரும் சந்தர் தான் நீலாவை திருமணம் செய்துக் கொள்ள தயார் என்றும் ஆனால் அதற்கு ஒரு லட்சத்து ஐம்பதினாயிரம் ருபாய் செலவு செய்ய வேண்டுமென்று நிபந்தனை விதிக்கிறான். அதை கேட்டு விக்கித்துப் போகும் ராவ் பகதூருக்கு அடுத்த அடியாக ஒரு தந்தி வருகிறது. அவர் பணம் முதலீடு செய்திருந்த வங்கி திவாலாகி விட்டது என்பதே அந்த செய்தி. இதை கேட்டவுடன் டாக்டர் பசுபதி கல்யாணம் வேண்டாம் என்று ஓடி விட ராவ் பகதூர் கதறி அழுகிறார்.
தன் சம்பந்தி, மகன், மருமகளை எல்லாம் அழைத்து மன்னிப்பு கேட்கும் அவரிடம் வங்கி திவாலாகவில்லை என்றும் அவரது குணத்தை திருத்தவே இப்படி ஒரு நாடகமாடியதாக சந்தர் உண்மையை வெளிப்படுத்துகிறான். தான் கோடீஸ்வரன் அல்ல என்ற உண்மையையும் வெளிப்படுத்துகிறான்.
ராமசாமி மனம் மாறி அனைவரையும் ஏற்றுக் கொள்ள சந்தர் நீலா இணைகிறார்கள்.
கோடீஸ்வரன் - Part II
ஒரு மராத்தி நாடகத்தை தழுவி எடுக்கப்பட்ட படமே கோடிஸ்வரன். வரதட்சனைக்கு எதிரான ஒரு கதை களத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு எடுக்கப்பட்ட படம் என்றே தோன்றுகிறது. நம்முடைய விமர்சனங்களில் 50- களில் அதிலும் குறிப்பாக நடிகர் திலகத்தின் முதல் 25 படங்களில் இங்கே எழுதப்பட்டவை ஒரு சில மட்டுமே. என் சிறு வயதில் நான் நடிகர் திலகத்தின் ரசிகனாக மாற ஆரம்பித்த நேரத்தில் இந்த படம்தான் அவரின் 25-வது படமாக எனக்கு சொல்லப்பட்டது. பின்னாளில் கள்வனின் காதலி 25-வது படம் என்று சொன்னார்கள். குழப்பத்திற்கு காரணம் இவை இரண்டுமே ஒரே நாளில் 13.11.1955 தீபாவளியன்று வெளியானது.
50- களில் வெளியான படம் என்றாலே இரண்டு விஷயங்கள் நம்மை சிறிது தயங்க வைக்கும். ஒன்று தூய தமிழ். ஆனால் படத்தின் முதல் காட்சியிலே பேச்சு தமிழ் இடம் பெற மனதில் ஒரு மகிழ்ச்சி. ஒரு சில இடங்களை தவிர படம் முழுக்க பேச்சு தமிழே இடம் பெறுவது குறிப்பிட வேண்டிய விஷயம்.
இரண்டாவது அந்த காலப்படங்களில் நொடிக்கொரு முறை இடம் பெறும் பாடல்கள். இந்த விஷயத்திலும் கோடிஸ்வரன் நமது பொறுமையை சோதிக்காமல் குறைந்த பாடல்களுடன் இருப்பது இன்னொரு சந்தோஷம்.
நடிப்பை பற்றி சொல்வதென்றால் நடிகர் திலகம் எவ்வளவு இயல்பாக பண்ணக் கூடியவர் என்பதற்கு இந்த படம் மேலும் ஒரு உதாரணம். அந்த டாக்டர் சந்தர் ரோல் அவருக்கு அல்வா சாப்பிடுவது போல். ஊதி தள்ளி விடுகிறார். ராவ் பகதூரின் காரியதரசியிடம் நக்கலாக பதில் கொடுப்பது முதல் பெண் பார்க்க வந்து பந்தா காட்டும் டாக்டர் பசுபதியை வஞ்ச புகழ்ச்சி செய்வது, கல்யாணத்திற்கு அதை செய்ய வேண்டும் இதை செய்ய வேண்டும் என்று பட்டியலிட்டு விட்டு ஒவ்வொன்றும் இறந்து போன தன் மனைவியின் ஆசை என்று அள்ளி விடும் ராவ் பகதூரை கிண்டல் செய்வது, பத்மினியுடனான கவிதை பற்றிய காதல் பேச்சு, கல்யாணத்தை நடத்த திட்டம் போடும் போது ஒரே வாசகத்தை [அப்படின்னு நான் நினைக்கிறேன்] மாறி மாறி பேசுவது, கோடிஸ்வரனாக வந்து ராவ் பகதூர் முன்பு பேசியது போல அவர் மகளை மணக்க ஒவ்வொரு செலவாக சொல்லி விட்டு இதெல்லாம் என் மாமாவின் ஆசை என்று திருப்புவது இப்படி சர்வ அலட்சியமாக செய்திருப்பார்.
நடிகர் திலகத்தின் தோற்றத்தைப் பொறுத்த வரை மிக இளமையாக இருப்பார். அவர் அணிந்து வரும் சில தொப்பிகள் அழகாக இருக்கும். ஆரம்பத்தில் பீக் cap வைத்து வரும் அவர் வேறு சில காட்சிகளில் ஷெர்வானி குர்தா அணிந்து இஸ்லாமியர் அணியும் தொப்பியை போன்று [பாவ மன்னிப்பு ரஹீம் போன்று] அணிந்து வருவார். கிளைமாக்ஸ்-ல் ஆந்திர பாணி வேட்டி உடுத்தி நெற்றியில் திலகம் இட்டு வருவார். கழுத்தில் தொங்கும் கயிற்றில் கண்ணாடி, அதுவும் சைடு பிரேம் இல்லாமல் மூக்கில் மட்டும் பிடிமானம் உள்ள லென்ஸ் வைத்திருப்பார். ராவ் பகதூர் கண்ணனை வீட்டை விட்டு வெளியேற்றும் போது மட்டுமே அவருக்கு உணர்ச்சி வசப்படும் காட்சி. அதை அமைதியாக செய்திருப்பார்.
பாடல் காட்சிகளில் அவர் ஸ்டைல் ஆரம்பித்தது உத்தம புத்திரனுக்கு பிறகுதான் என்று நினைத்தால் இந்த படத்திலேயே அசத்தியிருப்பார். டூயட் பாடலில் பிரமாதப்படுத்தியிருப்பார். அவர் எழுதிய வசந்த கானம் என்ற கவிதை தொகுப்பை தானே தன் அண்ணனிடம் கொடுப்பதாக வாங்கிக் கொள்ளும் பத்மினி வீட்டு வாசலுக்கு சென்று நின்று சற்றே திரும்பி ஒரு காதல் பார்வை வீசி விட்டு போக இடது கையில் பிடித்திருக்கும் வாக்கிங் ஸ்டிக்கை தூக்கி போட்டு வலது கையில் பிடித்து ஒரு நடை நடப்பார் - சூப்பர் [இந்த ஸ்டைலை கூட அப்போதே செய்து விட்டார்]. அது போல் கல்யாணத்திற்கு பிறகு தங்கையின் வீட்டிற்கு வருபவர் தங்கையும் அவள் கணவனும் பாடி மகிழ்வதைப் பார்த்துவிட்டு கேட் அருகே நின்று ஒரு போஸ், பின் சிறிது வெட்கத்துடன் பக்கவாட்டில் திரும்பி அந்த முகத்தை மட்டும் சிறிது உயர்த்தி ஒரு புன்னகை புரிவார். பிரமாதமாக இருக்கும். இந்த படத்தில் கிட்டத்தட்ட செயின் ஸ்மோக்கர் மாதிரி. பார்க்கில் நண்பனோடு பேசும் போது பத்மினி வந்து விட அப்போது அந்த சிகரட்டோடு காட்டும் ஸ்டைல், பத்மினியை பெண் பார்க்க வந்து எஸ்.பாலச்சந்தர் டான்ஸ் ஆடுவதை வாயில் புகையும் சிகரெட்டோடு சேரில் கம்பீரமாக அமர்ந்து பார்ப்பது - பெரிய கோடிஸ்வரன் என்று சொன்னதற்கேற்ப ஒயிட் கோட் சூட் போட்டு கூலிங் கிளாசோடு வாக்கிங் ஸ்டிக்கோடு சிகரட்டோடு தங்கவேலு வீட்டிற்கு வந்து நிற்பது -எப்பவுமே தான் ஸ்டைல் சக்கரவர்த்தி என்பதை நிரூபிப்பார்.
டாக்டர் பசுபதியாக வரும் வீணை எஸ்.பாலச்சந்தர் கலக்கியிருப்பார். ஒரு செமி லூஸ் செமி வில்லன் ரோலை நேர்த்தியாக பண்ணியிருப்பார். கட்டிக்கோ தாலி கட்டிக்கோ பாடலில் இங்கிலீஷ்,இந்தி, தமிழ்,தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் வரும் வரிகளுக்கேற்ப அவர் நடனம் ஆடுவார். பாராட்டப்படவேண்டிய முயற்சி.
ராவ் பகதூர் ராமசாமியாக தங்கவேலு. சரளமாக வசனம் பேசும் முறை அவரது பிளஸ் பாய்ன்ட். இந்த படத்தின் வசனங்கள் பேச்சு தமிழில் அமைந்திருப்பது அதற்கு பெரிதும் உதவி செய்கிறது. எதுக்கும் இது வேணும் என்று அடிக்கடி மூளையை தொட்டுக் காட்டி பேசுவது அவரது ட்ரேட் மார்க் என்றால் பண விஷயத்தில் அவர் ஏமாந்ததை அதே வசனத்தின் மூலமாக அவரது உதவியாளார் சட்டாம்பிள்ளை வெங்கட்ராமன் சுட்டிக்காட்டுவது ரசிக்கும்படியாக இருக்கும்.
கண்ணனாக வரும் ஸ்ரீராமுக்கு நடிப்பில் பெரிய வேலை ஒன்றுமில்லை. இரண்டு டான்சை தவிர்த்து விட்டு பார்த்தால் பத்மினி ராகினியும் அதே ரகத்தில் சேர்த்து விடலாம். நடிகர் திலகத்தின் தங்கையாக வரும் பேபி சச்சு துரு துறுவென்று இருப்பார்.
தஞ்சை ராமையாதாஸ், காங்கேயன் வசனங்கள் வெகு இயல்பு. இன்றைக்கும் பயன்படுத்தப்படும் சில வசனங்கள் [சம்மன் இல்லாமலே ஏன் ஆஜர் ஆகுறீங்க] அன்றைக்கே படத்தில் இருப்பது ஆச்சரியம். ராகினி கொடுக்கும் டீயை குடித்துவிட்டு அடிக்கும் கமென்ட் [குட்டி - சாரி good டி] இவை எல்லாம் ரசிக்கும்படி இருக்கும் [1955 என்று நினைக்கும் போது].
இசை - S V வெங்கட்ராமன்.
எனது உடலும் உள்ள காதலும்- கர்னாடிக் ராக பின்னணியில் எம்.எல்.வி பாடியிருப்பார். எஸ்.பாலச்சந்தர் பெண் பார்க்க வரும் போது ராகினி ஆடும் பாடல்.
கானத்தாலே காதலாகி போனேன் - பத்மினியை எஸ்.பாலச்சந்தர் பெண் பார்க்க வரும்போது பத்மினி பாடும் பாடல். ஜிக்கி என்று தோன்றுகிறது.
கட்டிக்கோ தாலி கட்டிக்கோ - அன்றைய காலக்கட்டத்தின் வழக்கத்திலிருந்து மாறி பேச்சு தமிழில் மட்டுமல்ல ஏற்கனவே சொன்னது மாதிரி அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் ஆங்கிலத்திலும் இந்தியிலும் வரும் இந்த பாடலை இசையமைப்பாளார் S V வெங்கட்ராமனே பாடியிருப்பார். நன்றாக பண்ணியிருப்பார்.
உலாவும் தென்றல் நிலாவைக் கண்டு - நடிகர் திலகத்திற்கு படத்தில் இந்த ஒரே பாடல்தான். அது மட்டுமல்ல ஏ எம் ராஜா பாடியிருப்பார். பத்மினிக்கு சுசீலா. நடிகர் திலகம் நாட்டியப் பேரொளி கெமிஸ்ட்ரி பிரமாதமாக இருக்கும். கொஞ்சம், கனவின் மாயலோகத்திலே பாடல் காட்சியை நினைவுப்படுத்தினாலும் [ஆனால் அன்னையின் ஆணை இந்த படத்திற்கு பின்தான் வெளியானது] அந்த ஸ்டைல் போஸ் அண்ட் நடைக்கே பார்க்கலாம்.
யாழும் குழலும் உன்னுடன் தானோ - ஸ்ரீராம் ராகினி டூயட் - ராஜா சுசீலா பாடியிருப்பார்கள்.
பகவானே கேளய்யா பச்சோந்தி உலகிலே - தன் தந்தை தங்கவேலுவின் பணத்தாசையை கிண்டல் செய்து பத்மினி பாடும் பாடல்.
சுந்தர்ராவ் நட்கர்னி இயக்கம். கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி படமும் அதன் வெற்றியும் இயக்குனரை நடிகர் திலகத்தை வைத்து இந்த படத்தை எடுக்க தூண்டியிருக்கக் கூடும். குறை சொல்ல முடியாதபடி போரடிக்காமல் படத்தை கொண்டு போன முறைக்கு இயக்குனர் பாராட்டப்பட வேண்டியவரே.
நடிகர் திலகத்தின் சீரியஸ் படங்களுக்கு கிடைத்த மாபெரும் வரவேற்பு இந்த படத்திற்கு கிடைக்கவில்லை. ஒரு ஆவரேஜ் வெற்றியை மட்டுமே இந்த படம் பெற முடிந்தது. சரியான முறையில் மறு வெளியீடு செய்யப்பட்டிருந்தால் படம் நிச்சயமாக ரசிக்கப்பட்டிருக்கும். ஆனால் நடிகர் திலகத்தின் சாதனை படங்களுக்கு நடுவே மாட்டிக் கொண்டதால் அந்த வாய்ப்பும் அமையவில்லை.
அன்புடன்
Courtesy: Mr Pammal Swaminathan
நடிகர் திலகமும் பாகவதரும்
தமிழ்த் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டாராகத் திகழும் திரு.எம்.கே.தியாகராஜ பாகவதர் அவர்களின் நூற்றாண்டு, சமீபத்தில் 1.3.2010 அன்று நிறைவடைந்துள்ளது. தமது ஈடு, இணையற்ற கந்தர்வக் குரலாலும், வசீகரிக்கும் தோற்றப் பொலிவாலும், மக்கள் மனங்களில் நிரந்தர இடம் பிடித்தவர் பாகவதர் என்றால் அது மிகையன்று. எத்தனையோ பாகவதர்கள், "பாகவதர்" என்ற அடைமொழியுடன் இருந்தாலும், பாகவதர் என்று சொன்னால் அது திருவாளர் மாயவரம் கிருஷ்ணமூர்த்தி தியாகராஜ பாகவதரையே குறிக்கும். பாகவதர் 14 படங்களே நடித்தார். ஆனால், 100 படங்களில் நடித்த புகழைப் பெற்றார். வெள்ளித்திரையில் அவரது முதல் இன்னிங்ஸ்(1934-1944) சாதனைகளின் சிகரம். இரண்டாவது இன்னிங்ஸ்(1948-1959) சோதனைகளின் உச்சம். திரையிசையில் அமரத்துவ படைப்புகளை அளித்த பாகவதர் 1.11.1959 அன்று அமரத்துவம் அடைந்தார்.
இனி தலைப்பிற்கேற்ற தகவல்களைக் காண்போம்.
பாகவதரின் இரண்டாவது திரைப்படமான நவீன சாரங்கதரா(1936)வும், நடிகர் திலகத்தின் 50வது திரைப்படமான சாரங்கதரா(1958) திரைப்படமும் ஒரே கதைக்களங்களைக் கொண்டவை. சிந்தாமணி(1937) திரைப்படத்தில், பாபநாசம் சிவன் இயற்றி, அவரே செஞ்சுருட்டி ராகத்தில் இசையமைத்து உருவாக்கிய 'ராதே உனக்கு கோபம் ஆகாதடி' என்கின்ற பாடல் பாகவதரின் பிரசித்தி பெற்ற பாடல்களில் ஒன்று. இதையே நடிகர் திலகத்தின் குலமகள் ராதை(1963) திரைப்படத்தில், திரை இசைத் திலகம் கே.வி. மகாதேவன் அவர்கள் மிக அழகாக, மிகுந்த நேர்த்தியோடு, ஒரிஜினலையே மிஞ்சும் வண்ணம் ரீ-மிக்ஸ் செய்திருப்பார். கதைக்கும், காலத்துக்கும் ஏற்றாற் போல, கவிஞர் அ. மருதகாசி அவர்கள் பாடல் வரிகளை பாங்குற மாற்றியமைத்திருப்பார். பாகவதரின் பிம்பமான பாடகர் திலகம் டி.எம்.எஸ். பாட, நடிகர் திலகம் தமது நடையழகாலும், ரொமான்ஸாலும் பாடலை எங்கோ கொண்டு சென்று விடுவார். சரோஜாதேவியின் ரியாக்ஷ்ன்களும் இப்பாடலில் நன்றாகவே இருக்கும். பாடல் முடிந்ததும் சரோஜாதேவி நடிகர் திலகத்திடம், "முடிஞ்சுதா?" என்பார். "பெரிய பாகவதரோட பாட்ட இத்தன நேரமா மூச்ச புடிச்சுகிட்டு பாடிருக்கேன். இப்படிக் கேக்குறையே?" என்பார் நடிகர் திலகம். ரசிக்கத்தக்க அம்சங்கள். பாகவதருக்கு வான்புகழை அளித்த ஹரிதாஸ்(1944) திரைப்படத்தில் இடம்பெற்ற சூப்பர்ஹிட் பாடல், 'மன்மத லீலையை வென்றார் உண்டோ'. பாபநாசம் சிவனின் வைர வரிகளுக்கு, சாருகேசியை பழச்சாறாக பிழிந்து கொடுத்திருப்பார் திரை இசை மாமேதை ஜி.ராமநாதன். பாகவதர் குரலில் இப்பாடல், தமிழ்த் திரைப்பாட்டின் உச்சம். இதே 'மன்மத லீலையை' வார்த்தெடுத்தது போல், இதே சாருகேசி ராகத்தில், ஜி. ராமநாதன் அவர்கள் இசைமணம் பரப்பிய பாடல் தான், 'வசந்த முல்லை போலே வந்து'. சாரங்கதரா(1958)வில் இடம்பெற்ற இப்பாடலை இயற்றியவர் கவிஞர் அ.மருதகாசி. பாடலைப் பாடிய டி.எம்.எஸ்சை சௌந்தரராஜ பாகவதர் என்றே சொல்ல வேணடும். அந்த அளவுக்கு பாகவதரின் குரலை குளோனிங் எடுத்திருப்பார். தமது சிருங்கார காதல் நடிப்பால், இவையனைத்தையும் வென்று, முதலாவதாக நிற்பார் ஒருவர். அவர் தான் நடிகர் திலகம்.
1954-ல் திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் சீரும், சிறப்புமாக நடைபெற்ற நடிகர் திலகத்தின் ஒரே தங்கை பத்மாவதி அவர்களின் திருமண (பத்மாவதி-வேணுகோபால் திருமணம் தான்) வைபவத்திற்கு வந்தவர்களை வரவேற்று உபசரித்தவர் எம்.கே.டி.பாகவதர்.
1954-ல் வெளிவந்த மனோகரா திரைப்படத்தைக் திரையரங்கில் கண்டு களித்த பாகவதர், நடிகர் திலகத்தின் நடிப்பை இப்படிப் புகழ்ந்தார். "அம்மா என்ற ஒரு வார்த்தையை உணர்ச்சிப்பிழம்பாகச் சொல்லி கைத்தட்டல் பெற்ற ஒரே நடிகர் சிவாஜி தான்." நடிகர் திலகத்தின் நடிப்பில் மயங்கிய பாகவதருக்கு, நடிகர் திலகத்துடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பும் வந்தது. 1937-ல் சேலம் சங்கர் பிலிம்ஸ் தயாரிப்பில், அமெரிக்கர் எல்லிஸ்.ஆர்.டங்கன் அவர்களின் டைரக்ஷ்னில் வெளிவந்த அம்பிகாபதி திரைப்படத்தில் கதாநாயகன் அம்பிகாபதியாக பாடி நடித்தார் பாகவதர். படம் பொன்விழாக் கண்டது. 1957-ல் இதே அம்பிகாபதிக் கதையை ஏ.எல்.எஸ் புரொடக்ஷ்ன்ஸ் தயாரிக்க, ப.நீலகண்டன் இயக்கினார். கதாநாயகன் அம்பிகாபதியாக நடிகர் திலகம் நடித்தார். அம்பிகாபதியின் தந்தை கவிச்சக்கரவர்த்தி கம்பராக யாரை நடிக்க வைக்கலாம் என படக்குழுவினர் யோசித்த பொழுது, பாகவதரே பளிச்சிட்டார். அவரை படக்குழுவினர் அணுகிய போது 'கம்பராக நான் நடித்தால் சரி வராது' எனக் கூறி விட்டார். பின்னர் கம்பர் கதாபாத்திரத்தில் எம்.கே.ராதா நடித்தார். சிவாஜியுடன் நடிக்க பாகவதர் மறுத்து விட்டார் என சினிமாவுலகில் சிற்சில சர்ச்சைகள் கிளம்பின. அவைகளை பாகவதர், தமது சொல்லாலும், செயலாலும் ஒரு முடிவுக்குக் கொண்டு வந்தார். "சிவாஜியுடன் நடிக்க எல்லோரையும் போல் எனக்கும் விருப்பமே. ஆனால் அம்பிகாபதியின் தந்தை கம்பராக நடிக்க நான் விரும்பவில்லை. ஏனென்றால், ஏற்கனவே நான் அம்பிகாபதியாகவே நடித்திருக்கிறேன். அதனால் கம்பராக நடிக்க மனமில்லை." என அறிவித்தார். இதோடு நில்லாமல், தனது சொந்தத் தயாரிப்பில், நடிகர் திலகத்தைக் கதாநாயகனாகக் கொண்டு, தானும் நடிகர் திலகத்துக்கு தந்தையாக நடிக்க முடிவு செய்து ஒரு படத்தைத் துவக்கினார் பாகவதர். அந்தப் படத்தின் பெயர் "பாக்கிய சக்கரம்". இது நிகழ்ந்த ஆண்டு 1958. இந்த சமயத்தில், பாகவதரின் உடல்நிலை மோசமடைய, பாக்கிய சக்கரத்தின் படப்பிடிப்பு நடத்த முடியாமலே நின்று போனது. பின்னர் 1959-ல் பாகவதர் இயற்கை எய்தினார். "திரை, இசை உலகின் இமயம் வீழ்ந்தது" என நடிகர் திலகம் இரங்கல் விடுத்தார்.
சமீபத்தில், சிவாஜி-பிரபு அறக்கட்டளையின் பெருமுயற்சியில், திரையுலக முன்னோடிகளை கௌரவிக்கும் விதமாக, நடிகர் திலகத்தின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தன்று(21.7.2003), சென்னையில் நடந்த நிகழ்ச்சியில், தபால் துறை, பாகவதருக்கு சிறப்பு தபால் உறை வெளியிட்டு கௌரவித்தது. (இதே நிகழ்ச்சியில், நடிகர் பி.யூ.சின்னப்பா அவர்களுக்கும், கலைவாணர் என்.எஸ்.கே. அவர்களுக்கும் சிறப்பு தபால் உறை, அவர்களை கௌரவிக்கும் விதமாக வெளியிடப்பட்டதும் இங்கே குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று.)
அன்புடன்,
பம்மலார்.
Courtesy: Saradha Madam old post
வசந்த் தொலைக்காட்சியில் புதன் தோறும் ஒளிபரப்பாகும் 'சிங்கத்தமிழன் சிவாஜி' தொடர் நிகழ்ச்சியின் நேற்றைய (23.03.2010) எபிசோட்டில் கலந்துகொண்டு நடிகர்திலகத்தைப்பற்றிய அரிய பல விஷயங்களை வழங்கியவர், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் பாராளுமன்ற் உறுப்பினருமான திரு இரா. அன்பரசு அவர்கள். காங்கிரஸ் தலைவராதலால், அவருடைய உரை நடிகர்திலகத்தின் திரைப்படங்களைபற்றியல்லாது, காங்கிரஸ் பேரியக்கத்தில் அவருடைய பங்களிப்பின் அரிய தொகுப்பாக அமைந்தது. அவருடைய உரையிலிருந்து சில துளிகள்.....
"நடிகர்திலகத்தின் ஒவ்வொரு பிறந்தநாளின்போதும் ஆயிரக்கணக்கில் தொண்டர்களும் ரசிகர்களும் அன்னை இல்லத்தில் காலைமுதல் இரவு வரை அவருக்கு வாழ்த்துச்சொல்லிச் சென்றவண்னம் இருப்பார்கள். அனைவரும் சென்ற பின்னர் அவர்கள் விட்டுச்சென்ற செருப்புக்கள் இரவில் ஒரு லாரியில் ஏற்றி வெளியேற்றப்படும். ஒவ்வொரு பிறந்த நாளின்போதும் அவர் இல்லத்தில் விருந்துக்கழக்கப்படுவோரில் நானும் கண்டிப்பாக இருப்பேன். பிறந்தநாளின்போது அவருக்கு அளிக்கப்படும் பல்வேறு பரிசுப்பொருட்களை அவர் தனக்கென்று வைத்துக்கொள்ளமாட்டார். அங்கு வந்திருக்கும் ரசிகர்களுக்கு அளித்துவிடுவார்.
எப்போதுமே மிகவும் வெளிப்படையாக மனதில் இருப்பதை அப்படியே பேசும் வழக்கமுள்ளவராக இருந்தார். மனதில் ஒன்றை மறைத்துக்கொண்டு வெளியில் வேறொன்றைப்பேசி நிஜவாழ்க்கையில் நடிக்கத்தெரியாதவராக இருந்தார். அதனாலேயே அரசியலில் பலரால் ஏமாற்றத்துக்குள்ளானார்.
ஒவ்வொரு தேர்தலின்போதும் அவருக்கான சுற்றுப்பயணம் தனியாக தயாரிக்கப்படும். சிவாஜி அவர்கள் இருந்தவரையில் அவர் எந்த தேர்தல் பிரச்சாரத்திலும் பங்கேற்காமல் இருந்ததில்லை. அதிலும் குறிப்பாக அப்போது காங்கிரஸ் பேரியக்கத்துக்கு பெரிய தொண்டர் பாசறையாக செயல்பட்டதே அவரது ரசிகர் மன்றங்கள்தான். (இதை மிகவும் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்). ஒவ்வொரு தேர்தலின்போதும் சிவாஜி ரசிகர்களின் உழைப்பு, காங்கிரஸுக்கு பெரிய பலமாக அமைந்தது.
சிவாஜி அவர்களை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக நியமிக்க வேண்டும் என இந்திராகாந்தியிடம் அப்போது ராணுவ அமைச்சராக இருந்த ஆர்.வெங்கட்ராமன் தெரிவித்திருந்தார். அதை ஏற்று அது தொடர்பாக நேர்முக பேட்டிக்கு வருமாறு டெல்லிக்கு இந்திகாந்தி அம்மையார் அழைத்தார். சிவாஜி அவர்களுடன் நானும் டெல்லி சென்றிருந்தேன். வழக்கமாக இந்திரா அம்மையாரை சந்திக்க யார் சென்றாலும் அவர் அலுவலக அறையில் இருப்பார், போகின்றவர்கள்தான் வணக்கம் செய்துவிட்டு உள்ளே செல்வார்கள். ஆனால் சிவாஜி அவர்கள் சென்றபோது, இந்திரா அம்மையார் வாசல் வரை எழுந்துவந்து வரவேற்று அழைத்துச்சென்றார். கிட்டத்தட்ட அப்போது அவரையே தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக நியமிக்க முடிவு செய்தபோதிலும் அது நடைபெறவில்லை. அதற்கு கட்சியில் நிலவிய உட்கட்சிப்பூசல்தான் காரணம் என்று நான் அடித்துச்சொல்வேன். அப்போதுமட்டும் அவர் தலைவராகியிருந்தால், அப்போதே தமிழ்நாட்டில், இப்போது நாம் சொல்லிவரும் 'காமராஜ் ஆட்சி' ஏற்பட்டிருக்கும். அப்படி நடக்காமல் போனதால்தான் இன்னும் நாம் மாநிலக்கட்சிகளுக்கு மாறி மாறி பல்லக்குத் தூக்கிக்கொண்டிருக்கிறோம். (நெத்தியடி)
அவரது திரைப்படங்களில் எப்போதும் தேசியம் இடம்பெற்றிருக்கும். அவர் பங்குபெறும் காட்சிகளில் பின்னணியில் பெருந்தலைவர் காமராஜ் அவர்களின் படம் இருக்கும்படி பார்த்துக்கொள்வார். அதுபோல அவரது படங்களின் பாடல்களில் பெருந்தலைவர் அவர்களைப்பற்றி புகழ்ந்து பாடும் வரிகளை சேர்க்கச்சொல்வார். தேசியம் அவரது ரத்தத்தில் ஊறியிருந்ததால்தான் யாருமே ஏற்றிராத பல்வேறு தேசியத்தலைவர்களின் பாத்திரமேற்று நடித்து மக்கள் மத்தியில் எழுச்சியை உண்டாக்கினார். (இந்த இடத்தில் பகவத்சிங், திருப்பூர் குமரன் கிளிப்பிங்குகள் காண்பிக்கப்பட்டன).
தமிழ்நாட்டில் அதிகமான இடங்களில் பெருந்தலைவர் காமராஜ் அவர்களின் சிலை இடம்பெற்றுள்ள்தென்றால் அதற்கு முழுமுதற்காரணம் அண்ணன் சிவாஜி அவர்கள்தான். அதிகமான காமராஜ் சிலைகளின் பீடத்திலுள்ள கல்வெட்டைக் கவனித்தோமானால், அவற்றைத்திறந்து வைத்தவர் அண்னன் சிவாஜி அவர்கள்தான். தன்னை தங்கள் ஊருக்கு வரும்படி அழைக்க வரும் தொண்டர்கள்/ரசிகர்களிடம் 'உங்கள் ஊரில் பெருந்தலைவர் சிலையை நிறுவ ஏற்பாடு செய்யுங்கள், நான் வந்து திறந்து வைக்கிறேன்' என்று சொல்லியே ஊருக்கு ஊர் தலைவர் சிலை ஏற்படக் காரணமாயிருந்தவர் அண்னன் சிவாஜி அவர்கள். (அடுத்து அன்பரசு அவர்கள் சொன்ன விஷயம் சிலிர்க்க வைத்தது).
பெருந்தலைவர் ஆணைப்படி தமிழ்நாட்டில் விலைவாசி உயர்வுப்போராட்டத்தை முன்னின்று நடத்திய அண்னன் சிவாஜி அவர்கள், அந்தப்போராட்டத்தில் கலந்துகொள்வோர் பட்டியலை, தொண்டர்களின் முகவரிகளோடு சேகரிக்க அந்தந்த பகுதி மன்ற பொறுப்பாளர்களுக்கு உத்தரவிட்டார். முகவரி எதற்கென்றால், தொண்டர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்க நேர்ந்தபோது அவர்களின் குடும்பங்களுக்கு பண உதவி செய்தார். தமிழ்நாட்டில் எந்த கட்சித்தலைவரும் செய்யாத அரிய செயல் இது.
அதுபோல கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரிய வெள்ளம் வந்தபோது, 16 பேரைக்காப்பாற்றிய சிவாஜி ரசிகருக்கு, அப்போதைய அரசு 'வீர இளைஞர்' பட்டம் வழங்கியது. 'நீங்கள் என்ன பட்டம் வழங்குவது?. நான் வழங்குகிறேன்' என்று அவ்விளைஞருக்கு சென்னையில் பாராட்டுவிழா நடத்தி 'வீர இளைஞர்' பட்டம் அளித்ததோடு நில்லாமல் பணமுடிப்பும் வழங்கி கௌரவித்தவர் அண்ணன் சிவாஜி அவர்கள்.
1975 அக்டோபர் முதல்தேதி அவரது பிறந்தநாள்விழாவுக்கு வழக்கம்போல் ஏராளமான ரசிகர்களும், தொண்டர்களும் , திரைப்பட நடிகர்களும் வந்து வாழ்த்துச்சொல்லி சென்றவண்ணம் இருந்தனர். ஆனாலும் அண்ணன் சிவாஜி அவர்களுக்கு பெருந்தலைவர் அவர்கள் இன்னும் வரவில்லையே என்று மனதில் ஒரு தவிப்பு இருந்தது. அதே நேரம் திருமலைப்பிள்ளை ரோட்டில் தனது இல்லத்தில் உடல்நலமின்றி இருந்த பெருந்தலைவர் அவர்களுக்கு, 'சிவாஜியின் பிறந்தநாளில் அவரை வாழ்த்தப்போக முடியவில்லையே' என்ற துடிப்பு இருந்தது. ஒரே நேரத்தில் இருவருக்கும் ஒரே மாதிரியான தவிப்பு. இறுதியில் அங்கிருந்த குமரி அனந்தன், மணிவர்மா ஆகியோரிடம் 'புறப்படுங்கள், சிவாஜி வீட்டுக்குப்போவோம்' என்று காரில் கிளம்பிவிட்டார். தலைவர் புறப்ப்ட்டு விட்டார் என்ற செய்தி கிடைத்ததுமே அண்ணன் சிவாஜி அவர்கள் வீட்டுக்குவெளியே வந்து தலைவரை எதிர்பார்த்து நின்றவர், அவர் காரிலிருந்து இறங்கியதும் அவரது கைகளிரண்டையும் பிடித்துக் கண்ணில் ஒற்றிக்கொண்டு உணர்ச்சிவசப்பட்டார். எல்லோரையும் வீட்டுக்குள் அழைத்துச்சென்றார். தலைவர் அண்னன் சிவாஜியை வாழ்த்திவிட்டு சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு புறப்பட்டார். பெருந்தலைவர் கலந்துகொண்ட கடைசி நிகழ்ச்சி அண்ணன் சிவாஜி அவர்களின் பிறந்த நாள்தான். மறுநாள் பெருந்தலைவர் மறைந்தார்.
அண்ணன் சிவாஜி அவர்களுடைய கனவெல்லாம் தமிழ்நாட்டில் மீண்டும் 'காமராஜ் ஆட்சி' அமைய வேண்டுமென்பதாகவே இருந்தது. எனவே அவர் கனவு கணடது போல தழகத்தில் 'காமராஜ் ஆட்சி' அமையச்செய்வதே அவருக்கு நாம் செய்யும் பெரிய கைம்மாறு ஆகும் என்று கூறி விடைபெறுகிறேன்".
(காங்கிரஸ் பேரியக்கத்தில் நடிகர்திலகத்தின் பங்களிப்பு பற்றிய அரிய பல தகவல்களைத்தந்த அன்பரசு ஐயா அவர்களுக்கு சிவாஜி ரசிக நெஞ்சங்களின் நன்றிகள்).
Thanks to Mr Parthasarathy
நடிகர் திலகத்தின் நுணுக்கமான நடிப்பாற்றல்:-
நடிகர் திலகத்தின் நடிப்பைப் பற்றி பலர் பலவிதமாக ஆராய்ச்சி செய்து நிறைய விஷயங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்தத் திரியில், நாமும் பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டு வருகிறோம்.
எந்த ஒரு சிறந்த கலைஞனும் ஒரு படைப்பினைத் தரும்போது, முதலில், தன்னை அந்தக் கட்டம் மற்றும் கணத்துக்குள் தன்னுடைய மனதை மட்டும் நுழைத்துக் கொண்டு, அதுவாகவே பாவித்து, தன்னுடைய அனுபவம், அறிவு மற்றும் திறமை மூலம், ஒரு படைப்பினைத் தர முயற்சிக்கிறான். இந்த internalisation பரிபூரணமாக அமையப் பெற்ற உன்னதக் கலைஞன் உலகில் நடிகர் திலகம் ஒருவரே என்பது என்னுடைய தாழ்மையான கருத்து. அவருக்கு நடிப்புக் கலை என்பது கலைமகள் அருளிய வரம். அவரிடம் இருந்த spontaneity இதனை நிரூபிக்கும். இருப்பினும், தன்னுடைய வாழ் நாளில் கடைசி வரை, எப்போதும், தன்னுடைய கலையை அவர் மெருகேற்றிக் கொண்டே வந்திருக்கிறார் - பல வித முறைகள் மூலம். இதில், மிக முக்கியமானது அவரது ஆழ்ந்த, கூர்ந்து நோக்கி அணுகும் திறன். எந்த ஒரு விஷயத்தையும், அவர் மேம்போக்காக அணுகாமல், நூறு சதவிகித பரிபூரணத்துவத்துடன் தான் அணுகிக் கொண்டு வந்திருக்கிறார். இதனால் தான், அநேகமாக அவருடைய எல்லா படங்களும் கனமாகவே இருக்கும். இலேசான படங்கள் (so called light movies) அவரிடமிருந்து மிகவும் குறைவு தான்.
சில நாட்களுக்கு முன்னர், நண்பர் திரு. வாசுதேவன் அவர்கள், "அன்னை இல்லம்" படத்தில் ஒரு (இல்லை இது மூன்று ஒன்றோடொன்று தொடர்புடைய காட்சிகள்) காட்சியைத் தரவேற்றியிருந்தார். இந்தக் காட்சியில், நடிகர் திலகம் முத்துராமன் வீட்டிற்கு வந்து, உண்பதற்கு அமர்ந்து எம்.வி.ராஜம்மா அவர்களைப் பார்த்து (அவருடைய சுமங்கலித் தோற்றத்தைப் பார்த்து), பக்கத்தில், அவருடைய கணவருக்காக வைக்கப் பட்டிருக்கும் இலையையும் பார்த்து, 'அம்மா! உங்களது இந்த சுமங்கலிக் கோலம் சீக்கிரம் போகப் போகிறது' என்று நினைத்து வெதும்பி, எதுவும் சொல்லாமல், வெறும் முக பாவனைகளின் மூலம் அந்த சோகத்தைக் காண்பித்து அங்கிருந்து சென்று விடுவார். (எம்.வி. ராஜம்மா அவருடைய கணவர் எஸ்.வி. ரங்கா ராவ் உயிருடன் தான் இருக்கிறார் என்று வலுவாக நம்பி எப்போதும், அவருக்காக ஒரு இலையைப் போட்டு அதில், உணவு வகைகளை எப்போதும் பரிமாறி வைப்பார், என்றாவது ஒரு நாள் திரும்பி வந்து சேர்ந்து உண்டு மகிழ்வார் என்ற நம்பிக்கையில்!. எம்.வி ராஜம்மாவிற்கு, ரங்காராவ் கூடிய சீக்கிரம் மரண தண்டனை பெற்று இறக்கப் போகிறார் என்று தெரியாது. இது நடிகர் திலகத்துக்கும் தேவிகாவுக்கும் மட்டுமே தெரியும்.). அடுத்து, வழக்கறிஞரை சந்தித்து விட்டு ஏமாற்றத்துடன் திரும்பி, இப்போது, வாய் விட்டுக் கூறிக் கதறுவார், தேவிகாவிடம்! முதல் இரண்டு காட்சிகளில் ஒரு சிகை அலங்காரத்துடன் வரும் நடிகர் திலகம், அடுத்த காட்சியில், வேறொரு சிகை அலங்காரத்துடன் வருவார். அதாவது, முதல் இரண்டு காட்சிகளில் நீளமாக இருக்கும் கிருதா உடனே வரும் அடுத்த காட்சியில், சிறியதாக இருக்கும். ஆக, அடுத்தடுத்து வரும் இந்த மூன்று காட்சிகளில், முதல் இரண்டு காட்சிகளும், மூன்றாவது காட்சியும் வேறு வேறு சந்தர்ப்பங்களில் எடுக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும், முதல் இரண்டு காட்சிகளுக்கும் அடுத்த காட்சிக்கும் இருக்கும் அந்த உணர்ச்சிமயமான தொடர்பு சிறிதும் குறைந்திருக்காது. சரிய்யா, அவர் நுணுக்கமான நடிகர் என்று இப்போது தானே சொன்னீர், அதனால், அவருக்கு இருக்கும் நுணுக்கமான அறிவினாலும், ஈடுபாட்டினாலும், அவரைப் பொறுத்த வரை இது சுலபம் என்று நீங்கள் சொல்லலாம். ஒத்துக் கொள்கிறேன்.
இப்போது, அதே படத்தில் இடம் பெற்ற வேறொரு காட்சியைப் பார்ப்போம்.
இந்தக் காட்சி, முந்தைய காட்சியைப் போல பெரிய உணர்ச்சிக் குவியலான காட்சியல்ல. முந்தைய காட்சி படத்தின் இறுதிக் கட்டத்தில் வரும். இந்தக் காட்சியோ, படத்தின் நடுவில் வரும்.
நடிகர் திலகமும், முத்துராமனும் அருகருகே அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள். வழக்கம் போல, பக்கத்தில் ரங்கா ராவுக்காக ஒரு இலை போடப்பட்டு உணவு பரிமாறப் பட்டிருக்கும். அப்போது தான், முதன் முதல், அந்த வீட்டில் நடிகர் திலகம் சாப்பிடுவார். அப்போது தான், அவருக்கு அந்த இலையின் முக்கியத்துவம் தெரியும். எம்.வி. ராஜம்மாவின் பண்பை வியந்து பாராட்டி (எல்லாம் சாப்பிட்டுக் கொண்டே!), அவர்களை தன்னுடைய வீட்டிற்கு விருந்து சாப்பிட வர வேண்டும் என்னும் போது, எம்.வி. ராஜம்மா அவரிடம் "கண்டிப்பாக வருகிறோம். கல்யாண சாப்பாட்டிற்கு, வடை பாயாசத்துடன்" என்பார். அதற்கு, நடிகர் திலகமோ, "வடையாவது பாயாசமாவது, இங்கு உங்கள் வீட்டில், அந்த விருந்து, எனக்கு முன் வரப் போகிறது" என்று சொல்லி, முத்துராமனுடைய காதலைப் பற்றிக் கூறி, அந்தப் பெண் நல்ல நிறம், செக்கச் செவேரென்று இருப்பாள் என்று கூறி, மேலும் சில சம்பாஷணையுடன் அந்தக் காட்சி முடியும். இந்தக் காட்சி இரண்டு நிமிடங்கள் தான் வரும். இந்தக் காட்சியில், துவக்கத்திலிருந்து நீளமான கிருதாவுடன் வரும் நடிகர் திலகம், "அந்தப் பெண் செக்கச் செவேரென்று இருப்பாள்" என்று கூறும் அந்த ஒரு சில நிமிடங்கள் மட்டும், சடாரென்று, சிறிய கிருதாவுடன் காட்சி தருவார்! இது க்ளோசப்பில் எடுக்கப் பட்டிருக்கும். உடனே, மறுபடியும் அந்த சம்பாஷனை தொடரும் போது, பழைய நீள கிருதாவுக்கு மாறி விடுவார்! இத்தனைக்கும், முந்தைய காட்சியைப் போல, வேறு வேறு காட்சிகளல்ல இந்தக் காட்சி. தொடர்ந்து, இரண்டு நிமிடங்களுக்கு, நடிகர் திலகம், முத்துராமன் மற்றும் எம்.வி. ராஜம்மா நடிக்கும் காட்சி. இரண்டு வேறு வேறு காட்சிகள் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் எடுக்கப் படும் போதே (எனக்குத் தெரிந்து குறைந்த பட்சம் இரண்டு நாட்கள் கழித்து தான் எடுக்கப் பட்டிருக்கும்), தொடர்பு காட்டுவதற்கு நிறைய மெனக்கெட வேண்டியிருக்கும். நிலைமை இப்படியிருக்க, ஒரே நேரத்தில் எடுக்கப் பட்ட, நாம் மேலே கூறிய இந்தக் காட்சியில், தொடர்ந்து வரும் இரண்டு நிமிடங்களில், ஒன்றே முக்கால் நிமிடம் ஒரு ஒப்பனை, நடுவில், சில நொடிகள் மட்டும் வேறொரு ஒப்பனை; உடனே, கடைசி சில நொடிகளில் வேறொரு ஒப்பனை! இதுவும், வெவ்வேறு சந்தர்ப்பங்களில் எடுக்கப் பட்ட காட்சிகள். அப்படி என்றால், எந்த அளவிற்கு, நடிகர் திலகம் ஈடுபாடும், அர்ப்பணிப்பும், முனைப்பும், முயற்சியும் செய்திருக்கிறார்!!
இது போல், பல படங்களில் காணலாம். ஆனால், அவை எல்லாம் வேறு வேறு காட்சிகளாய் வரும். உதாரணத்திற்கு, புதிய பறவையில், வரும் "சிட்டுக் குருவி முத்தம் கொடுத்து" பாடலின் முதல் சரணம் பூராவும், படம் தொடங்கும் போதே எடுக்கப் பட்டிருக்கும். வேறொரு நீள கிருதாவுடன் வருவார். பல்லவியிலும், அனு பல்லவியிலும், இரண்டாவது சரணத்திலும், படம் நெடுகிலும் வரும் சிறிய கிருதாவுடன் வருவார். ஆரம்பத்தில், ஊட்டி ரேஸ் கோர்ஸில், சரோஜா தேவியுடன் பேசும் ஒரு காட்சியிலும், அடுத்தடுத்து, இதே போல், வேறு வேறு கிருதாக் கோலங்களில் வருவார்.
நடிகர் திலகம் 1953-லிருந்து, 1987 வரை, தொடர்ந்து, மூன்று ஷிப்டுகளில், நடித்துக் கொண்டே இருந்தார். வருடத்திற்கு ஆறு, ஏழு படங்களில் (சில வருடங்கள் நீங்கலாக - 1965, 1966, 1977, மற்றும் சில வருடங்கள்) நடித்துக் கொண்டு! வேறு வேறு கெட்டப்புகளில், வேறு வேறு பாத்திரங்களில், ஒவ்வொன்றும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில், காலங்களில்! அப்படி இருந்தும், காட்சித் தொடர்பினைத் (continuity) தொடர்ந்து நூறு சதவிகிதம் கடைப்பிடித்தார். இப்போதெல்லாம், ஒரு நடிகர் ஒரு நேரத்தில், ஒரு படம் மட்டுமே நடிக்கின்றார், நன்றாக concentrate செய்து நடிப்பதற்கு! இன்னும் சொல்லப் போனால், வட நாட்டின் புகழ் பெற்ற நடிகர் திலீப் குமார் அவர்கள், அந்தக் காலத்திலேயே, ஒரு நேரத்தில், ஒரு படம் தான் நடித்தார், மேற்கூறிய காரணத்துக்காக!
வேறு வேறு காட்சிகள் என்றால், ஓரளவு நடித்து விடலாம். ஒரே காட்சியில், இரண்டே நிமிடங்கள் தொடர்ந்து பேசும் வசனக் காட்சியில், இடையில், ஒரு சில நொடிகள் மட்டும் வேறு ஒரு கட்டத்தில் எடுக்கப்படும் போது கூட, எப்படி அவரால் பரிபூரணத்துவத்தைக் காட்ட முடிந்தது? இத்தனைக்கும், அப்போதெல்லாம் நேரடியாக பேசி நடித்தாக வேண்டும். இப்போது போல தனி ட்ராக் எல்லாம் கிடையாது! எல்லாம் அந்தக் கலைக் கடவுளுக்கும், அவரை தமிழ் நாட்டிற்கு ஈந்த அந்தக் கலைமகளுக்கும் தான் வெளிச்சம்!!
நடிகர் திலகத்தின் பாடல் கட்டுரைகளினூடே, இந்த சிறிய பதிவை இட சந்தர்ப்பமளித்த திரு. வாசு மற்றும் திரு. வெங்கிராமுக்கு நன்றிகள்.
இந்தக் காட்சி பற்றி சொல்லி, திரு. ராகவேந்திரன் அவர்களிடம் கேட்டு, மீண்டும் ஒரு முறை அந்தக் காட்சியைப் பார்ப்பதற்கு, அவரிடம் உதவும்படிக் கோரிய போது, அவரும் உடனே, எனக்கு அந்தக் காட்சியை மட்டும், என்னுடைய சொந்த மெய்லுக்கு அனுப்பினார். அவருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.
திரு. ராகவேந்திரன் அவர்களே, எனக்காக ஒரு முறை அந்தக் காட்சியைப் பதிந்து, கோடானு கோடி சிவாஜி ரசிகர்களின் நெஞ்சை நிறையச் செய்யுங்கள்.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
http://www.dinamalar.com/splpart_detail.asp?id=91
தேவையில்லாத விமர்சனம்...
தினமலரின் விஷமத்தனம் மீண்டும் நிரூபணமாகியிருக்கிறது. ஏம்பா.. தமிழனை நீங்கள் பாராட்டா விட்டாலும் பரவாயில்லை.. இப்படியெல்லாம் இன்னுமா புண்படுத்துவீர்கள்.. உங்களுக்கெல்லாம் கொஞ்சம் கூட தமிழுணர்வே இல்லையா...பகுத்தறிவிற்கொப்பாத விஷயத்தையெல்லாம் மீண்டும் மீண்டும் கிளறுகிறீர்கள்... சிவாஜி ரசிகர்கள் இளிச்சவாயர்கள் என எண்ணுகிறீர்களா.. அல்லது அவர்தான் இல்லையே என்ன வேண்டுமென்றாலும் எழுதலாம் என்கின்ற எண்ணமா...
தினமலரின் உள்நோக்கம் புரியவில்லை..
இல்லாத சென்டிமென்டை ஏன் மீண்டும் மீண்டும் எழுதுகிறீர்கள்.. காழ்ப்புணர்ச்சியின் மறுபெயர் தான் தினமலரா...
அல்லது தாங்களே சொல்லிக் கொடுக்கிறீர்களா..
ஒரு பக்கம் அவரைப் பற்றிய அவருடைய கட்டுரையின் பிரசுரம்..
மறு பக்கம் அவரைப் பற்றிய மூடநம்பிக்கையை உருவாக்கும் விமர்சனம்
இந்த இரட்டை வேடம் தினமலருக்குத் தேவையா..
எத்தனை பெரியார் வந்தாலும் ,தமிழ் நாட்டில் பகுத்தறிவு மலர செய்வது கடினம் என்பதையே இது உணர்த்துகிறது. அப்படியானால்,சிவாஜி சம்மந்த பட்ட எந்த விஷயம் நுழைந்தாலும் ,அது மெகா ஹிட் ஆகிறதே திரைபடங்களில்?(சந்திரமுகி,சிவாஜி,ஜிகர்தண்டா படங்களின் மெகா வெற்றி).அது எப்படியாம்?
வெற்றியின் பின்னால் மோப்பம் பிடித்து அலைந்து ,மனசாட்சி துறந்து,கொள்கைக்கும் வாழ்வுக்கும் சம்மந்தமற்று பொய் மனிதனாக வாழ்ந்து மடிவதுதான் உன்னத வாழ்க்கையா? அதிர்ஷ்டத்தின் உன்னதமா?இதைத்தானா இந்த சமுகம் எதிர்பார்க்கிறது?
உண்மை மனிதனாக,தன் மனசாட்சி படி தேசிய உணர்வு,இறை நம்பிக்கை,கலாசார குடும்ப வாழ்வு ,என்று வாழ்ந்த சிவாஜி என்ற தமிழன் தந்த அறிவு ,திறமை,நம்பிக்கை,உழைப்பு,உண்மை ,நேர்மை என்ற நல்லாயுதங்கள் போதும் எங்களுக்கு. உலகை வெல்வோம்.
இது தோல்வி என்றால், கம்பனும்,,கட்டபொம்மனும் ,பாரதியும்,பகத்சிங்கும் ,நேதாஜியும்,வ.வு.சியும்,சுப்ரமணிய சிவாவும்,புதுமை பித்தனும்,கலைவாணரும், காமராஜரும்,கண்ணதாசனும் வாழ்க்கையில் தோற்றவர்களே. செண்டிமெண்ட் சரியில்லாதவர்களே.அப்பாடா ,என்ன பகுத்தறிவு? அது சரி ,ஒரு எம்.எல்.ஏ வாக கூட ஆகாதவருக்கு, இவ்வளவு கவனிப்புகளா?
தன் திறமையால் ,உலகத்தையே நம் பக்கம் திருப்பிய ஒரு மாமேதையை,நாம் மதிக்கும் லட்சணம் இது.
தின மலர், தின விஷ விருட்சமாவதை இது உணர்த்துகிறது.
நவராத்திரி-03/11/1964.
பராசக்தியுடன் வந்து தீபாவளிக்கு உன் ஒலியினால் ஒளியூட்டியவனே,
நவராத்திரிக்கும் ஒரு தீபாவளியிலேயே ஒளி கூட்டினாய் ,
தீபாவளி இறுதி வரை நீ தந்த மரியாதைக்கு பதில் செய்தே வந்தது.
பண்டிகையோ,தெய்வங்களோ,தொழில்களோ,உன்னத மனிதர்களோ ,
நீ நினைவுறுத்திய பின்பு தான் ஒளி வட்டம் பெற்றது,பெற்றனர்,
.
ரசங்களின் உணர்வுகள் உணர்வு பெற்ற நாள் இது
அற்புதம் தன் அற்புதத்தை உணர்ந்தது. பயம் பயந்தது,
சிருங்காரம் நயந்தது ,வீரம் உரம் பெற்றது ,காருண்யம் இன்னொரு பௌத்தம் கண்டது,
காதல் காதலிக்க தொடங்கியது, அருவருப்பு தன்னையே அருவருத்தது,
நகை நகைக்க துவங்கியது, அமைதி பேரமைதி கண்டது,
ரௌத்ரமோ ,ரௌத்ரம் கண்டு , மாண்டே போனது ,
தொட்டு தடவாமல்,காமம் கலக்காமல், நீ தந்த ,பிரிவின் துயர் தீர்ந்த ஆயாச அழைப்பு ,
அவசர அழைப்பு ,காதலியின் கேசத்தை மட்டுமா கோதியது , பல கோடி உள்ளங்களை கொத்தியதே?
நம் மண்ணின் கலைகளை,ஒரே காட்சியில் ,கூத்தாடி ,
பல்லாயிரம் ஆண்டுகளின் கலை சரிதம்,சிலம்பு கூட உரைத் ததில்லையே?
கட கட வேட்டை சிரிப்பு ஒன்றே ,எதனையும் ஓடி விடாமல் வேட்டையாடி விட்டதே ?
தோள் கண்டார் தோளே கண்டார் ,உன் குலுக்கலை கண்டார்?
சும்மா சுட்டதில் விழுந்தவை எத்தனை எத்தனை இதயங்கள் ?
இரவினில் ஆடி வட்டமிடும் விழிகள் கண்டார் ,
உன்னையறிய நீ என்ன ஒரே மனிதனா? வெளி நாட்டான் ஒருவன் ,உன்னை
பலரென்று பகர்ந்ததே சான்று ,அடி-முடி அறிய முடியா ,மண்ணும் விண்ணும் அளந்த
எங்கள் தமிழ் கடவுளே, உனக்கு மட்டுமே பணியும் என் சிரம் .
புண்ணியபூமி (1978) : நடிக மன்னர் மன்னனே.....யாருக்காக இது யாருக்காக!
இன்றுவரை இந்தியத்திரைவானில் புகழ் மங்காமல் ஜொலித்துக்கொண்டிருக்கும் வட இந்திய நடிகைகள் மதர் இந்தியா நர்கிஸ் மற்றும் அனார்கலி மதுபாலா மட்டுமே. நர்கிசின் விருது வென்ற நடிப்பில் உருவான மதர் இந்தியா (1957) தமிழில் தன்னுடன் பலபடங்களில் நடித்த கதாநாயகி வாணிஸ்ரீக்கு முதன்மை தரவேண்டிய நன்றிக்கடன் வேண்டி நடிகர்திலகம் அவரது கணவராகவும்(ராஜ்குமார் ஏற்ற பாத்திரம்) மகனாகவும் (சுனில்தத் ஏற்ற பாத்திரம்) இரட்டை வேடங்களில் நடித்துச் சிறப்பு சேர்த்த இரண்டாவது படம் (சிவகாமியின் செல்வனை தொடர்ந்து). காலம் கடந்து வெளிவந்து எதிர்பார்த்த வெற்றிவாய்ப்பை ஓரளவு நிறைவு செய்த படம்). நர்கிசின் நடிப்பில் மேன்மை பெற்ற மதர் இந்தியா புண்ணியபூமியாக மெருகேற்றப்பட்டு பெருமை பெற்றது நடிகர்திலகத்தின் ஆளுமை நிறைந்த நடிப்பினால்!Our Tributes to Nargis!!
https://www.youtube.com/watch?v=8GiBCQ9QFjk
https://www.youtube.com/watch?v=Tuc380Ec53s
https://www.youtube.com/watch?v=2SxS4FhL70U
Watch Anbukkarangal NT's Super Hit Movie in Sun LIfe today at 7.00 pm
Thanks to Mr Neyveli Vasudevan
அண்ணன் ஒரு கோயிலை தரிசித்த அனுபவம்.
நேற்று 'சிவந்த மண்' நினைவலைகள் என்றால் இன்று நம் அண்ணன் நம்மிடையே ஒரு கோயிலாய் வலம் வந்த நினைவலைகள் நெஞ்சில் நிழலாட ஆரம்பித்து விட்டது. ஆம்... இன்று 'அண்ணன் ஒரு கோயில்' வெளியான நாளல்லவா! 77-ல் வெளியான அவன் ஒரு சரித்திரம், தீபம், இளைய தலைமுறை, நாம் பிறந்த மண் காவியங்களுக்கு அடுத்து 10-11-1977-ல் தித்திக்கும் தீபாவளித் திரை விருந்தாக 'அண்ணன் ஒரு கோயில்' ரிலீஸ். முந்தைய படங்களான இளைய தலைமுறை, நாம் பிறந்த மண் ஆகியவை சுமாராகப் போன நிலையில் சற்று சோர்வடைந்திருந்த நம் ரசிகர்களுக்கு தடபுடலாய் தலைவாழை தீபாவளி விருந்தளித்து அனைவையும் திக்குமுக்காடச் செய்தார் அண்ணன் (ஒரு கோயிலாய்). அண்ணனுக்கு சொந்தப்படம் வேறு. 74-ல் வெளிவந்த தங்கப்பதக்கத்திற்குப் பிறகு 77-ல் கிட்டத்தட்ட மூன்றரை வருடங்களுக்குப் பிறகு சிவாஜி புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் வெளிவந்த வெற்றிக் காவியம். மிகுந்த எதிர்பார்ப்பு இந்தக் காவியத்திற்கு. கோபால் சார் சொன்னது போல் தீபாவளி நமக்கு ராசியாயிற்றே. அதுவும் நம் சொந்த பேனர் வேறு. அமைதியாய் ஆர்ப்பாட்டமில்லாமல் வெளிவந்து அசுரத்தனமான வசூல் சாதனை புரிந்தது 'அண்ணன் ஒரு கோயில்'.
கடலூரில் நியூசினிமா திரையரங்கில் ரிலீஸ். நாம் பிறந்த மண்ணும் அதே தியேட்டரில்தான் ரிலீஸ். ஆனால் மூன்று வாரங்களே தாக்குப் பிடித்தது. அதற்கு முந்தைய படமான 'இளையதலைமுறை' கடலூர் துறைமுகம் கமர் டாக்கீஸில் ரிலீஸ் ஆகி இரண்டு வாரங்கள் ஓடி பின் நியூசினிமா திரையரங்கில் ஷிப்ட் செய்யப்பட்டது. எனவே மூன்று படங்களுமே தொடர்ந்து நியூசினிமாவில் ரிலீஸ். அதுமட்டுமல்ல. இளையதலைமுறைக்கு முந்தைய படமான தீபமும் இங்குதான் வெளியாகி வெற்றி சுடர் விட்டு பிரகாசித்தது. எனவே நியூசினிமா எங்களுக்கு கோயில் ஆனது. அங்கேயே 'அண்ணன் ஒரு கோயில்' வெளியானதில் எங்களுக்கு மகிழ்ச்சி. நியூசினிமா கடலூர் அண்ணா மேம்பாலத்திற்கு அதாவது பழைய கடிலம் ஆற்றுப் பாலத்தின் கீழ் அமைந்துள்ள தியேட்டர். வழக்கம் போல ஒன்பதாம் தேதியே தியேட்டர் திருவிழாக் கோலம் காண ஆரம்பித்து விட்டது. கொடிகளும் தோரணங்களுமாய் தியேட்டர் முழுக்க ஒரே அலங்கார மயம். அண்ணன் அழகான கண்ணாடி அணிந்து ஒயிட் கோட் சூட்டில் அற்புதமாய் (சுமித்ரா பாடும் "அண்ணன் ஒரு கோயிலென்றால்" பாடலில் அணிந்து வருவாரே... அந்த டிரஸ்.) நிற்கும் கண்கொள்ளா கட்- அவுட். அண்ணனின் முழு உடலையும் கவர் பண்ணும் அலங்கரிக்கப்பட்ட மிகப் பெரிய மாலை. ஜிகினாத் தாள்கள் மின்னும் அண்ணன் படங்கள் ஒட்டிய அழகழகான கண்ணைப் பறிக்கும் ஸ்டார்கள். தியேட்டரின் வாயிலே தெரியாத அளவிற்கு கீழே தூவப்பட்ட தென்னங் குருத்துகள். பழைய கடிலம் பாலம் இருமருங்கிலும் நடப்பட்ட ஆளுயர பச்சைத் தென்னங் கீற்றுகள். தியேட்டரினுள்ளே வைப்பதற்கு ரசிகர் குழாம் செய்து வைத்துள்ள வாழ்த்து மடல்கள் (கண்ணாடி பிரேம் போட்டு அலங்கரிக்கப்பட்ட தலைவர் ஸ்டில்களுடன் கூடிய படங்கள்) என்று அதம் பறந்து கொண்டிருக்கிறது. இரவு ஒருமணி தாண்டியும் அலங்காரங்கள் செய்வது நிற்கவே இல்லை. படம் எப்படி இருக்குமோ.என்று ஒவ்வொருவரும் ஆவல் மேலிடப் பேசிக்கொண்டிருக்கிறோம். படப்பெட்டி இரவே வந்து விட்டதாக வேறு தியேட்டர் சிப்பந்திகள் கூறி விட்டார்கள். அலங்காரங்கள் முடிந்து தியேட்டரை விட்டு போகவே மனமில்லை. ஆனால் மழைக் காலமானதால் மேகமூட்டமாக இருந்தது. மழை வந்து எல்லாவற்றையும் கெடுத்து விடப் போகிறது என்று வேண்டாத தெய்வமில்லை. அலங்காரங்கள் அனைத்தும் ஒரு நொடியில் பாழ்பட்டுப் போகுமே என்று அனைவர் முகங்களிலும் கவலை ரேகை. நல்லவேளையாக வேண்டியது வீண் போகவில்லை. சிறு தூறல்களுடன் வந்த மழை நின்று விட்டது. பெருமூச்சு விட்டுக் கொண்டு அவரவர் வீடுகளுக்குப் பிரிய மனமில்லாமல் பிரிந்தோம். சில தீவிரவாதிகள் வீட்டுக்கே போகவில்லை. செகண்ட் ஷோ முடிந்ததும் சைக்கிள் ஸ்டான்டிலேயே பழைய போஸ்ட்டர்களைத் தரையில் விரித்து அலங்காரங்கள் செய்த அசதியில் படுத்து குறட்டை விட ஆரம்பித்து விட்டனர்.
வீட்டை அடையும்போது சரியாக அதிகாலை இரண்டரை மணி. தூக்கம் வருமா... கண்களிலும், மனம் முழுவதிலும் அண்ணனே நிரம்பி வழிகிறார். சிறிது நேர தூக்கத்திலும் கோவில் கோவிலாக கனவு வருகிறது. அம்மாவிடம் சொல்லி ஐந்து மணிக்கெல்லாம் எழுப்பச் சொல்லிப் படுத்தேன். நான்கு மணிக்கு நான் அம்மாவை எழுப்பிவிட்டேன். "ஏண்டா.. தூங்கினா என்ன" என்று அம்மா செல்லக்கடி கடித்தார்கள். ஆனால் அவர்களுக்கு தெரியும் இது திருந்தாத கேஸ் என்று. விறுவிறுவென சாஸ்திரத்திற்கு தலையில் எண்ணெய் வைத்துக் கொண்டு அது சரியாக தலையில் ஊறக் கூட இல்லை... சுட்டும் சுடாததுமான வெந்நீரில்(!) திருக்கழு(கு)க்குன்றம் கழுகு போல கழுகுக் குளியல் குளித்துவிட்டு, அம்மா போட்டுத் தந்த காபியை (சு)வைத்து விட்டு, ஆறுமணிக்கெல்லாம் கிளம்பி விட்டேன். "ஏண்டா! தீபாவளி அதுவுமா சாப்பிட்டுட்டு போகக் கூடாதா," என்று அம்மா கோபித்துக் கொண்டார்கள். இது இந்த தீபாவளிக்கு மட்டுமில்லை. தலைவர் பட தீபாவளி ரிலீஸ்களின் அத்தனை தீபாவளிக்கும் இதே கூத்துதான். "சாமியாவது கும்பிட்டு விட்டுப் போ"..என்று அவசர அவசரமாக வடை சுட்டு, தீபாவளி பலகாரங்களை இலையில் வைத்து, எனக்காகவே ஒரு அவசர படையலை முன்னாடியே அம்மா போட்டு விடுவார்கள். ஏதோ பேருக்கு சாமி கும்பிட்டு விட்டு சைக்கிளில் ஒரே ஓட்டம். இது என் கதை மட்டுமல்ல. அனைத்து ரசிகர்களுக்கும் இதே கதைதான்.ஆறரை மணிக்கெல்லாம் தியேட்டரில் அனைவரும் ஆஜர். புதுத் துணியெல்லாம் கிடையாது. யார் அதையெல்லாம் பார்த்தார்கள்?... பின் முந்தைய இரவு செய்த அலங்காரங்களையெல்லாம் ஒரு தடவை கரெக்ட் செய்து பின் தலைவரைப் பற்றிய பேச்சும், படத்தின் வெற்றியைப் பற்றிய பேச்சும்தான். தீபாவளி அன்று ஐந்து காட்சிகள். முதல் காட்சி ரசிகர் ஷோ காலை ஒன்பது மணிக்கு. ரசிகர் ஷோ டிக்கெட்டுகள் அப்படியே இருமடங்கு விலை. தலைவர் படம் அச்சடித்த அட்டை ஒன்று கொடுப்பார்கள். ஒவ்வொரு கிளாஸுக்கும் தகுந்தவாறு அட்டையின் நிறம் மாறும். கவுண்ட்டரில் டிக்கெட் கிடையாது. ஒரு வாரம் முன்னமேயே டிக்கெட் காலி. நேரமாக ஆக கூட்டம் திருவிழா போல கூட ஆரம்பித்து விட்டது.
எங்கு நோக்கினும் ரசிகர்கள் தலைகள்தான். பட்டாசுகள் வெடிக்கத் துவங்கியாகி விட்டது. சும்மா ஆட்டம் பாம்களாக வெடித்துத் தள்ளுகிறது. அனைவரும் காதுகளைப் பொத்திய வண்ணமே இருக்கிறார்கள். புஸ்வானம் மத்தாப்புகளாய் சிதறுகிறது. சரவெடிகள் சரமாரியாய் கொளுத்தப்படுகின்றன. எங்கும் தலைவரை வாழ்த்தும் 'வாழ்க' கோஷம் தான்.ஆயிரம்வாலாக்களும், ஐயாயிரம் வாலாக்களும் தியேட்டர் வாசலைக் குப்பையாக்குகின்றன.
அரங்கினுள் நுழைய மணி அடித்தாயிற்று. அனைவரும் 'நான் முந்தி... நீ முந்தி'... என்று கேட்டில் முண்டியடித்துக் கொண்டு டிக்கெட் கிழிப்பவரிடம் அட்டையைக் கொடுத்துவிட்டு ஒரே ஓட்டம். செகண்ட் கிளாஸ் சீட்களின் வரிசையான மூன்று ரோக்களை வெளியிலிருந்து வரும் நண்பர்களுக்காக கயிறு கட்டி மொத்தமாக ஆக்கிரமிப்பு செய்தாகி விட்டது...(அராத்தல் குரூப் என்று எங்கள் குரூப்புக்கு பெயர்) அனைத்து ரசிகர்களும் பலூன்களை பறக்க விட்டுக் கொண்டே உள்ளே நுழைகின்றனர். கிடுகிடுவென தியேட்டர் ரசிகர்கள் தலைகளால் நிரம்பி வழிகிறது. திரையருகே சில வானரங்கள் பட்டாசுகளை சரம் சரமாய் கொளுத்திப் போட தியேட்டர் சிப்பந்திகள் கடுப்பாகி ஓடோடி வந்து பட்டாசுகள் வெடிக்கக் கூடாது என தடுக்கின்றனர். தியேட்டர் முன் மேடை முழுவதும் மெழுகுவர்த்திகள் கொளுத்தி வைக்க ஆரம்பித்து விட்டார்கள். படம் துவங்க பெல் அடித்து விளக்குகள் அணைக்கப்பட்டு முதல் 'நல்வருகை' ஸ்லைடில் என்.எஸ். கிருஷ்ணன் முகமலர்ந்து சிரித்து அனைவரையும் வரவேற்கிறார். பின் தியேட்டரின் 'புகை பிடிக்காதீர்கள்'...'முன் சீட்டின் மீது காலை வைக்காதீர்கள்'... 'தினசரி நான்கு காட்சிகள்'... 'தீபாவளியை முன்னிட்டு ஒருவாரத்திற்கு ஐந்து காட்சிகள்'... என்று சம்பிரதாய ஸ்லைடுகள் போட்டு முடித்த பின்னர் நம் ரசிகர்களின் "இப்படத்தைக் காண வந்த ரசிகர்களுக்கு நன்றி" என்று பல்வேறு ஸ்டைலான போஸ்களில் அண்ணன் நிற்கும் ஸ்லைடுகள் போடப்பட்டவுடன் சும்மா விசில் சப்தம் காது சவ்வுகளைப் பதம் பார்த்து விட்டது. சரியாக முப்பத்தைந்து நன்றி ஸ்லைடுகள். ஸ்லைடுகள் முடிந்ததும் உடனே படத்தைப் போட்டு விட்டார்கள். 'அண்ணன் ஒரு கோயில்' சென்சார் சர்டிபிகேட் போட்டவுடன் சும்மா அதம் பறக்கிறது. பின் 'நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அளிக்கும்' என்று போட்டதுதான் தாமதம்....ரசிகர்கள் இருக்கைகளை விட்டு எழுந்து ஒரே குதிதான். அண்ணன் ஒரு கோயில் என்று நெகடிவில் சிகப்பும் பச்சையுமாய் கோவில் கோபுரம் ஒன்று சுற்றுகையில் தேங்காய்கள் உடைபட்டு நொறுங்கும் சப்தம் முதல் வகுப்பு வரை கேட்கிறது. டைட்டில் வேறு அற்புதமாய் இருந்தது. எல்லோர் முகத்திலும் சந்தோஷத்தின் உச்சம். ('டைட்டில் பார்க்க வேண்டிய ஒன்று' என்று 'ராணி' வார இதழ் கூட விமர்சனத்தில் சிலாகித்து பாராட்டி எழுதியது.) டைட்டிலிலேயே தெரிந்து விட்டது படம் பிய்த்து உதறப் போகிறது என்று. டைட்டில் முடிந்தவுடன் எம்.எஸ்.வி.யின் அற்புதமான ரீ-ரிகார்டிங்கில் காட்டுப்பகுதியில் போலீஸ் வேட்டை நாய்கள் "லொள்..லொள்".. என்று குரைத்து காவலர்களுடன் துரத்த, லாங்க்ஷாட்டில் ஒரு உருவம் பரபரவென ஓடிவர, அனைவரும் இருக்கையை விட்டு தன்னையறியாமல் எழுந்து விட, தொப்பி அணிந்து, கண்ணாடிசகிதம் நம் அண்ணன் முழங்கால் வரையிலான வயலட் கலர் ஓவர்கோட்டுடன் ஓட்ட ஓட்டமாக, வேர்க்க விறுவிறுக்க, திரும்பி திரும்பிப் பார்த்தபடியே கோரைப் புற்களை கைகளால் விலக்கி விலக்கி ஓடி வர... விறு விறுவென அப்படியே நம்மைப் ப(தொ)ற்றிக்கொள்ளும் சீன் முதல் காட்சியிலேயே களைகட்டி விடும். சஸ்பென்ஸ். திரில் என்றால் அப்படி ஒரு திரில். ஒரு த்ரில்லர் மூவிக்குண்டான அத்தனை விஷேச அம்சங்களோடு விறுவிறுப்பு என்றால் முதல் பதின்மூன்று நிமிடங்களுக்கு அப்படி ஒரு விறுவிறுப்பு. படம் பிரமாதப்படுத்தப் போகிறது என நிச்சயமாகி விட்டது. பின் நடந்ததையெல்லாம் சொல்ல திரியின் சில பக்கங்கள் போதாது. தலைவர் ஏன் போலீசிடம் இருந்து ஓடிவருகிறார்?... அடுத்து என்ன? என்று ஆவல் மேலிட ஒரே பரபரப்பாகவே எல்லோரும் காணப்பட்டார்கள். பேய்ப்பட பாடல் போல 'குங்குமக் கோலங்கள் கோவில் கொண்டாட" பாடல் வேறு ஆவலை அதிகப்படுத்துகிறது... நிச்சயமாகவே ஒரு வித்தியாசமான அனுபவமாகவே இருந்தது. பின் தலைவர் சுஜாதாவிடம் சொல்லும் தலைவர் சம்பந்தப்பட்ட பிளாஷ்பேக் காட்சிகள்... தலைவர், சுமித்ராவின் அண்ணன் தங்கை பாசப் பிணைப்பு காட்சிகள்...அருமையான "அண்ணன் ஒரு கோவிலென்றால்", "மல்லிகை முல்லை"பாடல் காட்சிகளில் ரம்மியமாக அருமையான காஸ்ட்யூம்களில் அண்ணன் வந்து அசத்துவதையும், மீண்டும் ஒரு பாசமலரைக் கண்டு கொண்டிருக்கிறோம் என்ற ஆனந்தமும், பூரிப்பும் ஒன்று சேர, அனைவரையும் பாசமெனும் அன்பு நூலால் கட்டி போட்டுவிட்டார்கள் நடிகர் திலகமும், சுமித்ராவும். உயிரான தங்கையை வில்லன் மோகன்பாபு கெடுக்க முயலும்போது பதைபதைத்து படுவேகமாக காரில் வந்து மோகன்பாபுவை அண்ணன் சின்னாபின்னப் படுத்தும் போது தியேட்டர் குலுங்கியது. பின் சஸ்பென்சை மறைத்து மோகன்பாபு சுடப்பட்டு சாயும் போதும், அண்ணனையே தங்கை தன் நிலை மறந்து யாரன்று கேட்க அதைக் கேட்டு அதிர்ந்து அண்ணனின் தலை பல கூறுகளாகப் பிளப்பது போன்ற காட்சிகளிலும் அப்படி ஒரு நிசப்தம். பின் தங்கையை பிரிந்து வாடி சுஜாதாவிடம் கதறும் போதும், ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வரும் தங்கையைப் பார்த்து ஜெய்கணேஷிடம் அண்ணன் புலம்பும் அந்தக் குறிப்பிட்ட காட்சியில் தியேட்டரில் பூகம்பம் வெடித்தது என்றுதான் சொல்ல வேண்டும்... அப்பப்பா.. என்ன ஒரு ஆரவாரம்!... அந்த ஆரவாரத்தையே தூக்கிச் சாப்பிடும் கடவுளின் நடிப்பு...துடிப்பு...தங்கையின் குணநலன்களை விவரித்து, விவரித்து சிரித்து அழுதபடியே என்ன ஒரு புலம்பல்! ("அப்பப்பப்பா... ஒரு இடத்துல படுத்துக் கெடக்கறவளாஅவ! என்ன ஆட்டம்... என்ன ஓட்டம்... என்ன பாட்டு.... என்ன சிரிப்பு ...என்ன")... என்று வியந்தபடியே அண்ணாந்து அழுகையில் அரங்கு குலுங்கியதே....
அந்தக் காட்சியை ஒன்ஸ்மோர் கேட்டு ஓங்காரக் கூச்சலிட்டனர் ரசிகர்கள். இடைவேளையின் போது எல்லோர் முகத்திலும் வெற்றிப் பெருமிதம்...படம் டாப் என்று எல்லோரும் ஒருமித்த கருத்தையே கூறினர். படம் முழுவதும் நடிகர் திலகத்தின் நடிப்பு பட்டை கிளப்பியது. ரசிகர்கள் தம் பங்கிற்கு செய்த ஆரவாரம் சொல்லி மாளாது. தேங்காய் மனோரமா நகைச்சுவைக் காட்சிகளும் நன்கு ரசிக்க வைத்தன. அதைவிட காட்டில் போலீஸ் வேட்டையின் போது பெரிய மரக்கட்டைகளுக்கு மத்தியில் தலைவரும்,சுஜாதாவும் புரியும் சரச சல்லாப பின்னணிப் பாடலான "நாலு பக்கம் வேடருண்டு"...பாடலின் போது எத்தனை கோபால்கள் எம்பிக் குதித்தனர்! சீரியஸான காட்சிகளுக்கு நடுவே எல்லோரையும் நிமிர வைத்து வசியம் செய்த பாடல். (சற்று ஓவராக இருந்தால் கூட) இப்படியாக படம் முழுதும் ஒரே அட்டகாச அலப்பரைகள் தான். படமும் படு டாப். சஸ்பென்ஸ், திரில், பாசம், காதல், தியாகம் என்று எல்லாக் கலவைகளையும் மிக அளவாக அழகாகக் கலந்து, எல்லாவற்றுக்கும் மேல் வித்தியாசமான நடிகர் திலகத்தை நம்மிடையே உலாவ விட்டு படத்தை அட்டகாசமாய் இயக்கியிருந்த இயக்குனர் விஜயனுக்கு ஜெயமான ஜெயம். இறுதியில் படம் சுபமாய் முடிய அனைவர் முகத்திலும் மகிழ்ச்சித் தாண்டவம். அனைவரும் "அண்ணன் வாழ்க" என்ற விண்ணை முட்டும் கோஷத்துடன், பெருமிதத்துடன், முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்பு பிரகாசத்துடன் வெளியே வந்தோம்.
வெளியே வந்து பார்த்தால் ஐயோ! கூட்டமா அது... புற்றீசல் போல அவ்வளவு கூட்டம்... நீண்ட வரிசையில் கியூ... பழைய ஆற்றுப்பாலத்தில் தியேட்டரிலிருந்து கியூவளைந்து வளைந்து கண்ணுக்கெட்டிய தூரம் வரை கியூ நிற்கிறது. போலீஸ் வேன் வந்து கூட்டத்தை லத்தியால் பிளக்கிறது. கட்டுக்கடங்காத கூட்டம். மழை வேறு வந்து விட்டது... கூட்டம்...ம்ஹூம்... நகரவே இல்லை... அடுத்த ஷோ ஆரம்பித்தாகி விட்டது.... டிக்கெட் கிடைக்காதவர்கள் அப்படியே கியூவில் மனம் தளராமல் மறுபடி அடுத்த ஷோவிற்காக நிற்க ஆரம்பித்தார்கள். நாங்கள் வீட்டிற்கு போகவே இல்லை... அங்கேயே பொறை ரொட்டியை வாங்கிக் கடித்துக் கொண்டு கிடைத்த டீயைக் குடித்துக் கொண்டு (தீபாவளி அதுவும் அருமையான வகைவகையான பலகாரங்களும், அருமையான மட்டன் குழம்பும், சுழியான் உருண்டைகளும், இட்லி, தோசைகளும் வீட்டில் காத்துக் கிடக்க இங்கே நெய் வருக்கியும் டீயும்...தேவையா!) டிக்கெட் கிடைக்குமா என்று அலைஅலையாய் தவிக்கும் மக்கள் வெள்ளம்... படம் அட்டகாசமாய் வெற்றிபெற்றுவிட்டது என்ற சந்தோஷத்தில் தலைகால் எங்களுக்கு புரியவில்லை. பின் அடுத்த ஷோவிற்கு டிக்கெட் எடுக்க ஏற்பாடு செய்து விட்டு மூன்றாவது காட்சியையும் பார்த்து ரசித்தோம். பின் தினமும் தியேட்டரில்தான் குடித்தனமே. நாங்கள் நினைத்தது போலவே அருமையாக ஓடி வெற்றிவாகை சூடியதோடு மட்டுமல்லாமல் நடிகர் திலகத்தின் மீள் தொடர்வெற்றிகளுக்கு அடிகோலிய பெருமையையும் சேர்த்துப் பெற்றது 'அண்ணன் ஒரு கோயில்'.
Courtesy: Mr Neyveli Vasudevan
பக்த துக்காராம். (1973)
ஒரு அபூர்வ காவியத்தின் அலசல்.
(நம் பகுதி மட்டும்)
பக்த துக்காராமின் (நாகேஸ்வரராவ்) புகழ் பொறுக்காமல் அந்த கிராமத்தின் பெரிய மனிதன் போர்வையில் உலாவும் வஞ்சகன் மும்பாஜி (நாகபூஷணம்) துக்காராமுக்கு பலவகையிலும் தொல்லைகள் அளித்து வருகிறான். தான் வணங்கும் பாண்டுரங்கனின் அருளால் துக்காராமுக்கு வரும் மலை போன்ற சோதனைகள் யாவும் பனி போல விலகி விடுகின்றன. இறுதியில் மும்பாஜி ஒரு சதித்திட்டம் தீட்டி கிராமத்தின் பாண்டுரங்கநாதர் கோவிலில் உள்ள பாண்டுரங்கனின் விக்கிரகத்தை இரவோடு இரவாக திருடி, மறுநாள் துக்காராமரின் போலி பக்தியாலும், பகவானுக்கு துக்காராம் அபச்சாரம் செய்ததாலும்தான் துக்காராம் மேல் உள்ள கோபத்தினால் கடவுள் விக்கிரகம் மறைந்து விட்டது என்று கதை கட்டுகிறான். அதுமட்டுமல்லாமல் ஊர்மக்களை நம்பவைக்க பாண்டுரங்க சுவாமியே துக்காராமின் மீது பழி சொல்வது போல அசரீரி ஒலிக்குமாறு ஏற்பாடு செய்து துக்காராமுக்கு கெட்ட பெயர் உருவாக்குகிறான். துக்காராமை குற்றவாளியாக்கி மராட்டிய மன்னர் 'சத்ரபதி' சிவாஜியிடம் துக்காராமுக்கு தண்டனை அளிக்குமாறு வேறு வேண்டுகோள் விடுக்கிறான் மும்பாஜி. ஆனால் சிவாஜி துக்காராமை நேரடியாகவே விசாரணை செய்வதாகக் கூறி சம்பந்தப்பட்ட கோவிலுக்கு வந்து துக்காராமை விக்கிரகம் காணாமல் போனது பற்றி விசாரணை செய்கிறார். துக்காராம் தான் குற்றத்திற்கு காரணமல்ல என்று சிவாஜியிடம் எடுத்தியம்புகிறார். துக்காராமின் உண்மையான பக்தியும், அவர் நன்னடத்தையும் சிவாஜி அறிந்ததே. இருப்பினும் விக்கிரகம் மறுநாளைக்குள் உரிய இடத்தில் வந்து சேர வேண்டும்... இல்லையென்றால் துக்காராமுக்கு மரண தண்டனை என்று தீர்ப்பளித்து விடுகிறார் சத்ரபதி. துக்காராமனின் மனைவி தன் கணவர் குற்றவாளி அல்ல என்று சிவாஜியிடம் மன்றாடுகிறாள். துக்காராம் சிவாஜி முன்னிலையிலேயே பாண்டுரங்கனை மனதில் நிறுத்தி மனமுருகி பாடி வேண்ட மறைந்து போன விக்கிரகம் தெய்வ அருளாலும், துக்காராமின் உண்மையான பக்தியாலும் உரிய இடத்தில் மீண்டும் பிரதிஷ்டை ஆகிறது. துக்காராமின் உண்மையான பக்தியை சிவாஜியும், ஊர்மக்களும் உணர்கிறார்கள். அவரை மகான் என்று பூஜிக்கிறார்கள். துக்காராம் புனிதமானவர் என்று முன்னமேயே தனக்குத் தெரியும்... என்றாலும் ஊர்மக்கள் அதனை உணர வேண்டும் என்ற நல்லெண்ணத்தில்தான் துக்காராமிடம் சற்று கடுமையாக நடந்து கொண்டதாக சிவாஜி கூறுகிறார்.
இதற்கு நடுவில் மும்பாஜி சிவாஜியின் பரம வைரிகளான முகலாயர்களிடம் சிவாஜி கிராமத்தில் கோவிலில் தனியாக இருப்பதாகவும், சிவாஜியை சிறை பிடிக்க இதுதான் தக்க தருணம் என்றும் சிவாஜி இருக்கும் இடத்தைக் காட்டிக் கொடுத்து விடுகிறான். முகலாயப் படை சிவாஜியை பிடிக்க புறப்பட விஷயம் சிவாஜிக்கு தெரிந்து விடுகிறது. அடுத்த கணமே சிவாஜி போருக்குத் தயாராகக் கிளம்ப, துக்காராம் தம் மன்னரின் நன்மை கருதி சிவாஜியைத் தடுக்கிறார். சிவாஜியோ கோவிலில் போர் நடந்து ரத்தக்கறை படிய வேண்டாம் என்று கிளம்ப எத்தனிக்க, துக்காராமோ பாண்டுரங்கனின் அருளால் அப்படி எதுவும் நிகழாது என்று உறுதியளித்து சிவாஜியை போகவிடாமல் தடுத்து விடுகிறார். பின் சிவாஜிக்கும், நாட்டிற்கும் வரவிருக்கும் பேராபத்தை தடுத்து ஆட்கொள்ளுமாறு மனமுருகி பாண்டுரங்கனிடம் வேண்டிப் பாடுகிறார் துக்காராம். முகலாயர் படை கோவிலில் நுழைந்து சிவாஜியைப் பிடிக்க, பாண்டுரங்கனின் அருளால் முகலாயர்கள் பிடிக்கும் சிவாஜி ஊர்மக்களில் பலபேராக உருமாறி முகலாயர்களைத் திகைக்க வைக்கிறார். அதுமட்டுமல்லாமல் சிவாஜியைப் பிடிக்க வரும் முகலாயர்களின் குதிரைப்படையை பாண்டுரங்கநாதரே சிவாஜி உருவெடுத்து, குதிரையில் சென்று எதிர்கொண்டு, பல எண்ணற்ற சிவாஜிக்களாக பெருகி முகலாயர்களை சின்னாபின்னாப் படுத்துகிறார்.
கோவிலில் இருக்கும் 'சத்ரபதி' சிவாஜிக்கு இவ்விஷயம் தெரியவர, துக்காராமரின் உண்மையான பக்திதான் கடவுள் தன் உருவங்களில் வந்து முகலாயர்களிடம் போரிட்டு தன்னையும், தன் நாட்டையும் காப்பாற்றியதற்கு காரணம் என கண்கூடாக உணர்கிறார். துக்காராமை தன் குருவாக ஏற்றுக் கொண்டு தனக்கு "இந்த நாடு வேண்டாம்...துக்காராமுக்கு தொண்டு செய்து வாழ்வதே இனி தனது விருப்பம்" என்று கூற, துக்காராமோ "மன்னன் தனது கடமையில் இருந்து தவறக் கூடாது... வீரனுக்கு கைவாளே தெய்வமாகும்... நாட்டு மக்களை பாதுகாப்பாதே மன்னனது உண்மையான பணி' என்று சிவாஜிக்கு அறிவுரை கூறி அனுப்புகிறார்.
மராட்டிய மன்னன் 'சத்ரபதி' சிவாஜியாக 'நடிகர் திலகம்' சிவாஜி கணேசன். படம் முடியும் தருவாயில் கடைசி பதினைந்து நிமிடங்களில் 'சிவாஜி'யின் ராஜ்ஜியம் கொடி கட்டிப் பறக்க ஆரம்பிக்கிறது. எந்த வேடத்திற்கும் பொருத்தமான நம் நடிகப் பேரரசருக்கு இந்த 'சத்ரபதி' சிவாஜி வேடம் பொருந்தும் அழகு இருக்கிறதே! அது ஒரு தனி ஸ்பெஷல்தான் போங்கள். சும்மாவா பெயர் வைத்தார் பெரியார் 'சிவாஜி' என்று! அந்த உடையலங்காரமும், கழுத்தை அலங்கரிக்கும் முத்து மாலைகளும், தலையை அலங்கரிக்கும் அந்த 'சிவாஜி' ஸ்பெஷல் தலைப்பாகையும், உடையோடு சேர்ந்த கம்பீர நடையும், முகத்தில் கண நேரங்களில் தோன்றி மறையும் கணக்கில்லா உணர்வு பாவங்களும் சொல்லி மாள முடியாதவை.
மும்பாஜி துக்காராம் பெயரைச் சொல்லி சபையில் குற்றம் சுமத்தும் போது முகத்தைக் கேள்விக்குறியாக்கி, "துக்காராம்?"!!! என்று வினவ ஆரம்பிப்பதில் இருந்தே சிவாஜி சாம்ராஜ்யம் தொடங்கி விடுகிறது. துக்காராமின் மீது பழி கூறும் போது நம்ப முடியாமல் ,"நான் கேட்டது ஒன்று...நீ சொல்வது ஒன்று" என்று மும்பாஜியிடம் திகைக்கும் இடம் அருமையான அற்புதம். மும்பாஜி,"விக்கிரகம் மறைந்து போய் விட்டது," என்று கூறும் போது ,"என்ன விக்கிரகம் மறைந்து போய் விடுமா?!!! என்று ஏக ஆச்சர்யக் குறிகளுடன் பண்டிட்ஜியை 'சிவாஜி' நோக்குவது அம்சம். பின் விசாரணை மேற்கொள்ள கோவிலுக்கு வரும் போது நடந்து வரும் நடை இருக்கிறதே... நயமான நடை... (பக்தியுடன் கோவிலுக்கு வருவதைக் காட்ட வீர நடையை கொஞ்சம் தளர்த்தி சற்றே வீரமும், அமைதியும், பக்தியும் கலந்த நடையை இந்த இடத்தில் மிக வித்தியாசமாகக் காட்டியிருப்பார். கோவிலுக்கு செல்லுமுன் மிக அழகாக காலணிகளைக் கழற்றிவிட்டு செல்வார்.) விக்கிரகம் மறைந்து போனதை துக்காராமிடம் விசாரிக்கும் போது அதில் அதிகார தொனி அதிகமில்லாமலும் பார்த்துக் கொள்வார். எதிரே தாம் விசாரணை செய்வது ஒர் அப்பழுக்கில்லாத இறைவனடியார்... அவரிடம் மேற்கொள்ளக்கூடிய விசாரணை மிக மரியாதையானதாக இருக்க வேண்டும் என்ற ஜாக்கிரதை உணர்வு அதில் மிகச் சரியாகத் தெரியும். துக்காராமை 'சிவாஜி' உற்று நோக்குகையில் அவர் கண்களில் ஒரு தீட்சண்யமான ஒளி குடிகொண்டிருப்பதைக் காண முடியும். கண்களில் அப்படி ஒரு பிரகாசம் தீபமாய் ஜொலிக்கும் .நெற்றியில் இடப்பட்டுள்ள பிறைபொட்டு அவருக்குள்ளிருக்கும் வீரத்தை விவேகமாய் வெளிப்படுத்தியபடியே இருக்கும். துக்காராம் மெய்மறந்து பாண்டுரங்கனை பாடித் தொழுது கடவுளின் சிலை மறுபடி அதே இடத்தில் காணப்பட்டவுடன் 'சிவாஜி' யின் கண்களின் ஒளி மேலும் பிரகாசமாய் தீவிரமடையும். "இந்தப் புனிதமானவன் நிரபராதி என்றும், மகா பக்தர் என்றும் நாமறிவோம்....ஆனால் உலகமறிய வேண்டும்... அது குறித்தே இன்று இந்த கடின பரிட்சையை வைக்க வேண்டி வந்தது" என்று துக்காராமனின் மனைவி அஞ்சலிதேவியிடம் கூறும் போது நீதி நெறி தவறாத மன்னனின் மனநிலைமையை நியாயாதிபதியாய் அற்புதமாய் உணர்த்துவார் நடிகர் திலகம் 'சிவாஜி'
முகலாயர்கள் தன்னை சிறை பிடிக்க வருகிறார்கள் என்று ஒற்றன் மூலமாக செய்தி வந்தவுடன் அதுவரை சாந்தமாய் இருந்தவரிடம் வீரம் கொப்பளித்துக் கிளம்பும். "நாமே சென்று அவர்களை எதிர்ப்போம்... வெற்றியோ அல்லது வீர மரணமோ தெரிந்து கொள்வோம்" என்று முழக்கமிட்டு கிளம்பும் வேகம் இருக்கையை விட்டு நம்மை எழுந்து விடச் சொல்லும். பின் துக்காராம் சாந்தப்படுத்தும் போது,"என்னைத் தடுக்காதீர்கள்... திடீர்ப் போராட்டங்கள் நமக்கும், நம் வாளுக்கும் பழக்கம்தான்...ஜெய் பவானி!" என்று சிங்கமாய் கர்ஜிக்கும்போது 'சத்ரபதி' சிவாஜி மறைந்திருந்து எதிரிகளைத் தாக்கும் கொரில்லாப் போரை அந்த கர்ஜனை ஞாபகப்படுத்தும். அதற்கு துக்காராம் "தங்கள் தெளிவும், துணிவும், வீர பராக்கிரமும் எனக்கும் தெரியும்" என்று இவரிடம் கூறும் போது வீரமும், பெருமிதமும் ஒன்று சேர மீசையை ஒரு முறுக்கு முறுக்குவார் பாருங்கள்...தன் வீரத்தின் மீது தான் கொண்டிருக்கும் தன்னம்பிக்கை முகத்தில் அப்படியே பட்டவர்த்தனமாய் நர்த்தனமாடும்... பின் துக்காராம் சொல்லுக்குக் கட்டுப்பட்டு மீண்டும் அமைதியானவுடன் கடவுள் சிவாஜி அவதாரமெடுத்து குதிரையில் காட்டில் பயணிக்கையில் நடிகர் திலகம் குதிரையேற்றம் செய்தபடி வரும் காட்சிகள் அமர்க்களமோ அமர்க்களம். (இந்த இடத்தில் உடையின் நிறம் ரோஸ் கலருக்கு மாறியிருக்கும்... அவ்வளவு பொருத்தமாக அந்த உடையும், உடையின் நிறமும் நடிகர் திலகத்திற்குப் பொருந்தியிருக்கும்.) பொதுவாகவே நடிகர் திலகத்தின் குதிரையேற்றத்தைக் காணக் கண்கோடி வேண்டும். (உத்தம புத்திரன், மருத நாட்டு வீரன், படித்தால் மட்டும் போதுமா... இப்படிப் பல) அதிலும் இந்தக் குறிப்பிட்ட காட்சியில் ஒரிஜினல் சத்ரபதியே வந்து விட்டாரோ என்று அதிசயிக்கும் அளவிற்கு அற்புதமாக குதிரை சவாரி செய்து அசத்துவார். அதுவும் நெருக்கமான இரண்டு மரங்களுக்கு இடையே குதிரையை வெகு லாவகமாக ஓட்டியபடி வரும் அழகே அழகு. பின்னர் என்ன! ஒரே அதகளம்தான். எதிரிகள் தன்னைச் சுற்றி குதிரைகளில் சூழ்ந்து கொள்ள வாளை உருவியபடி நடுவில் புரவியில் அமர்ந்தபடி வாளால் எதிரிகளை வெட்டி வீழ்த்துவது அதியற்புதம். நடுநடுவில் ஹா ஹா ஹா,..என்று ஓங்காரமிட்டு வெற்றிக்களிப்பில் சிரித்தபடியே முகலாய வீரர்களைப் பந்தாடுவது செம தூள். ஒரு சிவாஜி பல சிவாஜிக்களாய் மாறி (matrix பாணியில்) சண்டையிடும் போது காமெராக் கோணங்கள் அற்புதம். மிக பிரமாதமாய் அமைக்கப்பட்ட சண்டைக்காட்சி. (லொக்கேஷன் வேறு நெஞ்சையள்ளும்) நடிகர் திலகத்தின் கம்பீரத்தாலும், ஈடு சொல்ல முடியாத அவருடைய ஈடுபாட்டாலும் இந்த சண்டைக்காட்சி அவருடைய சண்டைக்காட்சிகளில் ஒரு மணிமகுடம் என்றே சொல்லலாம். ஒவ்வொரு சமயமும் சண்டையிட்டபடியே குதிரையை அவ்வளவு அற்புதமாகத் திருப்புவார். நடிகர் திலகம் குதிரையில் அமர்ந்து அதை நாம் பார்க்கும் சுகமே அலாதி. ஆன்மீகக் கருத்துக்களை வலியுறுத்தும் இந்தப் படம் நடிகர் திலகம் சத்ரபதியாய் நமக்குக் காட்சியளிக்கத் தொடங்கியவுடன் விறுவிறுப்பின் எல்லைகளை நோக்கி வீறுநடை போட ஆரம்பித்து விடுகிறது. ஒரு கால் மணி நேரம்... அதுவும் நன்றிக்கடனுக்காக நடித்துத் தோன்றிய கௌரவத் தோற்றம்தான்.... ஆனால் நடிகர் திலகமாய் நம் கண்களுக்குத் தெரியாமல் முழுக்க முழுக்க மராட்டிய மாமன்னன் 'சத்ரபதி' சிவாஜியாகத்தான் இப்படத்தில் ஆளுமை புரிகிறார் நடிகர் திலகம். அந்த சில நிமிடங்களில் தன் தனிப்பட்ட 'சிவாஜி' முத்திரையால் நம்மை சிலிர்க்க வைத்து விடுகிறார் நடிகர் திலகம். (இப்படம் தமிழிலும் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டு வெற்றி வாகை சூடியது. தமிழ் டப்பிங்கில் நடிகர் திலகம் தன் சொந்தக் குரலிலேயே டப்பிங் கொடுத்திருந்தார். அதனால் இக்காவியம் இன்னும் உயிரோட்டமாய் இருந்தது)
பக்த துக்காராம் 'சிவாஜி'யால் மாபெரும் வெற்றி க(கொ)ண்டார் என்று சொல்லவும் வேண்டுமோ!