-
எம்.ஜி.ஆருக்குப் பல்வேறு பரிமாணங்கள் உண்டு. ரசிகர்களுக்குத் தலைவன். ஏழைகளுக்கு ரட்சகர். எதிர்க்கட்சிகளுக்கு சிம்ம சொப்பனம். படத்தயாரிப்பாளர்களுக்கு லாபதேவன். வறியவர்களுக்கு வள்ளல். தமிழ்நாட்டு மக்களுக்கு அவர்தான் கடவுள். இன்னும் இன்னும் நிறைய பரிமாணங்கள் எம்.ஜி.ஆர் என்ற மனிதருக்குள் புதைந்து கிடக்கின்றன. ஆச்சரியங்களாலும் சுவாரஸ்யங்களாலும் பிரமிப்புகளாலும் நிரம்பிய மனிதர் எம்.ஜி.ஆர்.
முத்துகுமார் - vathiyar
-
18.3..2016
the hindu -tamil
எம்ஜிஆர் 100 | 24 - மென்மையான உள்ளம் கொண்டவர்!
M.G.R தன்னால் ஒரு மனிதர் கூட வருத்தப்படக் கூடாது என்ற மென்மையான உள்ளம் கொண்டவர். தவிர்க்க இயலாத நிலையில், தன் நடவடிக்கையால் யாராவது பாதிக்கப்பட்டாலோ, மனம் புண்பட்டாலோ, உடனே அதற்கு பரிகாரம் தேடிய பிறகே அமைதி அடைவார் என்பதற்கு நிறைய உதாரணங்கள் உண்டு. சிலம்புச் செல்வர் என்று அழைக்கப்பட்டவரும் சுதந்திரப் போராட்ட வீரருமான ம.பொ.சி. தொடர்பான சம்பவம் அதில் ஒன்று.
‘மந்திரி குமாரி, ‘மலைக்கள்ளன்', ‘குலேபகா வலி', ‘மதுரை வீரன்' போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்து புகழ் பெற்று 1956-ம் ஆண்டிலேயே எம்.ஜி.ஆர். தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்தார். அந்த ஆண்டு ஜூன் 26-ம் தேதி ம.பொ.சி.யின் பொன்விழாவை முன்னிட்டு சென்னையில் அவருக்கு நடந்த பாராட்டு விழாவில் கலந்து கொள்ள எம்.ஜி.ஆர். அழைக்கப்பட்டிருந்தார். விழாவில் எம்.ஜி.ஆர். பேசும்போது, ம.பொ.சி.யின் தமிழறிவை பாராட்டி, ‘‘தமிழை மழை போல் பொழியும் சிவஞானம்’’ என்று கூறவும்... கூட்டம் ஆர்ப்பரித்தது.
1986-ம் ஆண்டு வரை தமிழகத்தில் மேல்சபை இருந்து வந்தது. சட்டசபைத் தேர்தலில் தோற்றவர் களை கொல்லைப்புற வழியாக பதவிக்குக் கொண்டு வரவே மேல்சபை பயன்படுகிறது என்று பொதுவாக ஒரு விமர்சனம் இருந்தது. இந்நிலையில், 1986-ல் எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது தமிழகத்தில் மேல்சபை கலைக் கப்பட்டது. அதுகுறித்து பல்வேறு சர்ச்சைகளும் வருத்தங்களும் நிலவின.
1984-ம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக தலைவர் கருணாநிதி போட்டியிடவில்லை. அப்போது அவர் மேல்சபை உறுப்பினராக இருந் தார். அரசியல் காரணங்களுக்காக சபை கலைக்கப் பட்டதாகவும் பேச்சு உண்டு. ஆனால், அரசுக்கு தேவையில்லாத வீண் செலவு என்பதால் மேல்சபை கலைக்கப்பட்டதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் அரசுக்கு வீண் செலவு என்று கூறி ஆந்திராவிலும் மேல்சபை கலைக்கப்பட்டது. அங்கே அப்போது எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ், தமிழகத்தில் அதுதொடர்பான வாக் கெடுப்பில் நடுநிலை வகித்தது.
காங்கிரஸில் செல்வாக்கு மிகுந்த தலைவராக விளங்கிய ஜி.கே.மூப்பனார், ‘‘மேல்சபை கலைப்பை நாங்கள் எதிர்க்கிறோம். ஆனால், கூட்டணிக் கட்சியான அதிமுகவுக்கு சங்கடம் ஏற்படுத்த விரும்பவில்லை என்பதால் காங்கிரஸ் நடுநிலை வகித்தது’’ என்றார். பாம்புக்கு தலையையும் மீனுக்கு வாலையும் காட்டுவதாக காங்கிரஸை திமுக குற்றம் சாட்டியது.
இந்த சர்ச்சைகளுக்கு நடுவே, மேல்சபை கலைக்கப்பட்டதில் மிகவும் வருத்தமடைந்தவர் ம.பொ.சி! அப்போது, மேல்சபைத் தலைவராக அவர்தான் இருந்து வந்தார். அரசின் முடிவை கடுமையாக எதிர்த்தார். முதல்வர் எம்.ஜி.ஆரை யும் விமர்சித்தார்.
எம்.ஜி.ஆரின் நண்பரான டாக்டர் பழனி ஜி.பெரியசாமி, ம.பொ.சி.க்கும் நெருக்கமானவர். அவரை அடிக்கடி சந்தித்துப் பேசுவார். அவர் ம.பொ.சி-யை சந்தித்தபோது, ‘‘மேல்சபை கலைப்பு முடிவுக்காக எதற்காக எம்.ஜி.ஆரை விமர்சிக்கிறீர்கள்?’’ என்று கேட்டார்.
பொதுவாழ்வில் ம.பொ.சி. தூய்மையானவர். தனக்கென்று எந்த சொத்து சுகமும் சேர்க்காதவர். ‘‘மேல்சபைத் தலைவர் பதவி போய்விட்டால் மாதம்தோறும் எனக்கு கிடைக்கும் சம்பளமும் போய்விடும். எனக்கு இப்போது அரசாங்க கார் இருக்கிறது. அந்தக் காரும் இருக்காது. வயது முதிர்ந்த காலத்தில் வெளியே செல்ல வேண்டு மானால் என் பாடு திண்டாட்டம்’’ என்று பழனி பெரியசாமியிடம் கூறி ம.பொ.சி. வருத்தப் பட்டிருக்கிறார். ம.பொ.சி. யாரிடமும் எதுவும் கேட் டுப் பழகாதவர். எம்.ஜி.ஆர். வீட்டுக்கு சென்றால் அவரிடம் எதுவும் கேட்கக் கூடாது என்று தனது மகள் மாதவி பாஸ்கரனிடம் சொல்லி அனுப்புவாராம்.
ம.பொ.சி. தன்னிடம் வருத்தப்பட்ட அன்று இரவே எம்.ஜி.ஆரை பழனி பெரியசாமி சந்தித் தார். விஷயத்தைச் சொன்னார். எம்.ஜி.ஆர். ‘‘அப்படியா?’’ என்று கேட்டுக் கொண்டாரே தவிர, எதுவும் சொல்லவில்லை.
அந்த சமயத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவுக்கு ம.பொ.சி. சென்றார். அங்கு, பழனி பெரியசாமியின் வீட்டில் தங்கியிருந்தார். அப்போது, எம்.ஜி.ஆரிடமிருந்து தொலைபேசி அழைப்பு. போனை எடுத்த பழனி பெரியசாமியிடம் பேசிவிட்டு ம.பொ.சி-யிடம் கொடுக்கச் சொன்னார் எம்.ஜி.ஆர்.
ம.பொ.சி-யிடம் நலம் விசாரித்து விட்டு, அமெரிக்காவை நன்கு சுற்றிப் பார்க்கும்படியும் ‘ஷாப்பிங்’ சென்று தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ளும்படியும் இதுகுறித்து பழனி பெரியசாமியிடம் சொல்லியிருப்பதாக வும் எம்.ஜி.ஆர். கூறினார்.
பின்னர், அமெரிக்காவில் இருந்து ம.பொ.சி. திரும்பிய பின் ஒருநாள், கோட் டையில் இருந்து வீட்டுக்கு காரில் புறப் பட்ட எம்.ஜி.ஆர்., திடீரென ம.பொ.சி-யின் வீட்டுக்குச் சென்றார். முதல்வரின் எதிர் பாராத வருகையால் ம.பொ.சி. மகிழ்ச்சி அடைந்தார். அவரிடம் அமெரிக்க சுற்றுப் பயணம் பற்றி விசாரித்துவிட்டு புறப்படத் தயாரானார் எம்.ஜி.ஆர்.
ம.பொ.சியும் வழியனுப்ப எழுந்துகொள்ள, அவரின் கையில் ஒரு சாவியை எம்.ஜி.ஆர். திணித்தார். புரியாமல் பார்த்த ம.பொ.சி-யிடம், ‘‘இது கார் சாவி. உங்களுக்கு அரசாங்கம் கார் கொடுத்திருக்கிறது. மேல்சபை தலைவராக இருந்தபோது உங்களுக்கு வழங்கப்பட்ட மாதச் சம்பளமான ரூ.15,000 தொடர்ந்து கிடைக்கும். அந்த பதவியில் இருந்த எல்லா சலுகைகளும் வசதி களும் உங்களுக்கு தொடரும். உங்களை தமிழ் வளர்ச்சித்துறை தலைவராக நியமித்திருக் கிறேன்’’ என்று எம்.ஜி.ஆர். கூறினார். உணர்ச்சி வசப்பட்டு கண்கலங்க நின்றார் ம.பொ.சி.
சிலருக்குத்தான் சில பட்டங்கள் பொருத்தமாக அமையும். அப்படி எம்.ஜி.ஆருக்கு என்றே மிகப் பொருத்தமாக அமைந்தது, திருமுருக கிருபானந்த வாரியார் வழங்கிய பட்டமான ‘பொன்மனச் செம்மல்.’
மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது திருத்தணி ஆந்திராவுடன் சேர்க்கப்பட் டது. வடக்கு எல்லை போராட்டம் நடத்தி திருத் தணியை தமிழகத்துக்கு மீட்டார் ம.பொ.சி.
பின்னாளில் அவர் குடல்புண் நோயால் பாதிக்கப்பட்டபோது, அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை. அவருக்கு தைரியம் சொல்லி மருத்துவமனையில் சேர்த்து, அறுவை சிகிச்சைக்கான ஏற்பாடுகளையும் செலவுகளையும் செய்து குணப்படுத்தி கடும் வயிற்று வலியில் இருந்து ம.பொ.சி-யை மீட்டார் எம்.ஜி.ஆர்.
-
-
-
-
மொரீஷியஸ் தீவின் அழைப்பு
பாண்டி-கோவை தேர்தல் முடிவுகள் வெளிவந்ததைத் தொடர்ந்து புரட்சித் தலைவர் கட்சிப் பணிகளிலும், கலைத்துறைப்பணிகளிலும் மும்முரமாக ஈடுபட்டிருந்தார். 1974 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இரண்டாம் வாரத்தில் அவர் மொரீஷியஸ் தீவு நாட்டுக்குச் செல்வதென்று ஏற்கெனவே முடிவு செய்திருந்தார்.
மொரீஷியஸ் தீவு இந்துமகா சமுத்திரத்தில் பசிபிக் கடலும் அரபிக்கடலும் சேரும் இடத்தில் ஆப்பிரிக்காவுக்கு அருகில் உள்ளது. சென்னை நகரிலிருந்து 4000 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள அந்தத் தீவு நாடு சுமார் 6 இலட்சம் மக்கள் தொகையைக் கொண்டது. அங்கு 4 இலட்சம் பேர் இந்திய வம்சா வழியைச் சேர்ந்தவர்களும் கணிசமான அளவுக்குத் தமிழர்களும் இருக்கின்றனர். சுதந்திரக்குடியரசு நாடான மொரீஷியஸ் நாட்டின் பிரதமராக ராம்கூலம் என்னும் இந்திய வமிசா வழியைச் சேர்ந்தவரே இருந்து கொண்டிருந்தார். மொரீஷியஸிலுள்ள 12 அமைச்சர்களுள் ஏ. செட்டியார் என்னும் தமிழரும் ஒருவர்.
அரசுப் பொறுப்பில் இல்லாதவருக்கு அழைப்பு
ஏ.செட்டியார் புரட்சித் தலைவரின் மேல் மிகுந்த அன்பும் மரியாதையும் கொண்டவர். புரட்சித் தலைவரை மொரீஷியஸ் நாட்டின் சுதந்திர தின விழா விசேஷ விருந்தினராக அழைத்துச் சென்று உபசரித்து அனுப்ப வேண்டுமென்பது அவர் விருப்பம்; பிரதமர் ராம்கூலமும் அடை ஏற்று, அதிகாரப் பூர்வமாக அழைப்பு விடுத்தார். அழைப்புக்கடித்த்தை எடுத்துக் கொண்டு 1974 ஆம் ஆண்டு ஜனவரியில் அமைச்சர் ஏ.செட்டியார் சென்னைக்கு வந்து புரட்சித் தலைவரிடம் அழைப்பைக்கொடுத்து அவசியம் வரவேண்டும் என்று வற்புறுத்தினார். புரட்சித் தலைவரும் அன்பழைப்பை ஏற்றுக் கொண்டார்.
எந்த ஓர் அரசுப் பொறுப்பிலும் இல்லாத புரட்சித் தலைவரை ஒரு குடியரசு நாட்டின் பிரதமர் தம் நாட்டின் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக் கலந்து கொள்ள அழைப்பு விடுத்ததும், அந்த அழைப்பை எடுத்துக்கொண்டு ஓர் அமைச்சரே நேரில் வந்து கொடுத்ததும் மிகவும் வியப்புக்குரிய செய்தியாகும்.
புரட்சித் தலைவரின் புகழ் கடல் கடந்த நாடுகளில்கூட எந்த அளவு பரவியிருக்கிறது என்பதையே அந்த அழைப்பு சுட்டிக் காட்டியது.
அந்த அழைப்பை ஏற்றுக் கொண்டு 1974 ஆம் ஆண்டு மார்ச்மாதம் இரண்டாவது வாரத்தில் புரட்சித்தலைவர் மொரீஷியஸ் நாட்டுக்குப் புறப்பட்டார்.
மார்ச் 15 ஆம் தேதியன்று மொரீஷியஸ் நாட்டின் குடியரசு தினவிழாவில் கலந்துகொண்ட அயல் நாட்டு விருந்தினர்கள் மிகச் சிலருள் புரட்சித் தலைவரும் ஒருவர்;அவருக்கு மொரீஷியஸ் பிரதமர் ராம்கூலம் மிகுந்த முக்கியத்துவம் அளித்து, தம் அருகிலேயே அமரவைத்துக் கொண்டார்; சகல அரசு மரியாதைகளையும் அளித்துக் கௌரவித்தார்!
குடியரசு தின விழா முடிந்ததும் பிரதமர் அளித்த விருந்திலும் புரட்சித் தலைவர் கலந்துகொண்டார்.
மறுநாள் அந்த நாட்டின் ஒரே துறைமுக நகரான ‘போர்ட்லூயி’க்குச் சென்ற புரட்சித் தலைவர். அங்கு கரும்பாலைகளில் பணியாற்றும் தமிழர்கள் வாழும் பகுதிக்குச் சென்றார். தமிழ் நாட்டின் தானைத் தலைவரைத் தமிழர்கள் பேரார்வத்தோடு வரவேற்று உபசரித்தனர்.
மக்களின் மனங்கவர்ந்தவர்!
புரட்சித் தலைவர், அவர்களுடைய தொழில் நிலவரம், குடும்ப நிலவரம், வாழ்க்கை முதலியவற்றை மிகுந்த அக்கறையோடு விசாரித்தார். அதனால், இவருக்குத்தான் நம் மீது எவ்வளவு அன்பு! என்று மொரீஷியஸ் தமிழர்கள் மனம் நெகிழ்ந்தார்கள்.
ஒரே ஒரு நகரசபை, ஒரே ஒரு துறைமுகம். ஒரே ஒரு விவசாயக் கல்லூரி, ஒரே ஒரு ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, 2 ஏரிகள், 3 வங்கிகள், 8 நாளேடுகள், 56 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றம், தெற்கு வடக்காக சுமார் 60 கிலோமீட்டர், கிழக்கு மேற்காக சுமார் 40 கிலோ மீட்டர் எனப் பரப்பளவு கொண்ட நிலப்பரப்பு ஆகியவற்றை மட்டுமே கொண்ட அந்தச் சின்னஞ்சிறு நாட்டைச் சுற்றிப் பார்க்கப் புரட்சித் தலைவருக்கு அதிக நாள்கள் ஆகவில்லை.
கடல் நடுவே பச்சைக் கம்பளத்தை விரித்தாற்போன்று அமைந்திருந்த அந்த அழகிய தீவையும், அந்தத் தீவு மக்கள் தம்மீது காட்டிய அன்பையும் புரட்சித் தலைவரால் மறக்கவே முடியவில்லை.
மொரீஷியஸ் தீவின் பாரம்பரிய மொழியின் பெயர் ‘கிரியோல்’ என்பதாகும். அந்த மொழியில் பாடப்பட்ட ஒரு நாட்டுப் பாடல் புரட்சித் தலைவரை மிகவும் கவர்ந்தது. அந்த நாட்டின் அழகையும், அதன் மீது அந்நாட்டு மக்கள் கொண்டுள்ள அனைபையும் விளக்கும் அந்தப் பாடல் வருமாறு;
”லில மொரிரீஸ் மோ ஜொலி பெய்
மோ பா பு ட்ரூவே என் பிளி ஜொலி
சி ஜாமே மோ கித் துவம்மூவாலே
ப ஜோதி ப தாமே முவா ரெட் வனே”
இதன் பொருள்; ”மொரிஷியஸ் மிக அழகான தீவு; இதைவிட அழகான தீவை உலகில் வேறெங்கும் காண முடியாது. இந்தத் தீவை விட்டு நான் ஒருபோதும் அகல மாட்டேன். அப்படியே அகன்றாலும், அகிலம் முழுவதும் சென்றாலும் என்றேனும் ஒருநாள் மீண்டும் இங்கேயேதான் திரும்பி வருவேன்!”
-
-
இன்று (18/03/2016) இரவு 11 மணிக்கு சன் டிவியில் நடிக மன்னன் எம்.ஜி.ஆர்.நடித்த
"மகாதேவி " திரைப்படம் ஒளிபரப்பாகிறது .
http://i63.tinypic.com/2rhuvt1.jpg
-
-
-
-
-
-
Quote:
Originally Posted by
ravichandrran
விரைவில் டிஜிடல் தொழில்நுட்பத்தில் வெளியாக உள்ள , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்களின் உன்னத மற்றும் பிரம்மாண்ட தயாரிப்பான "உலகம்
சுற்றும் வாலிபன் " திரைப்படத்தில் மிக சிறப்பாக , புத்த துறவியாக நடித்து
புகழ் பெற்ற நடிகர் கெம்பையா அவர்கள் , இந்த தருணத்தில் மறைந்தது கோடிக்கணக்கான மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். பக்தர்களுக்கு
மிகவும் வேதனை தரக்கூடிய செய்தி.
அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவன் எம்.ஜி.ஆர். அருள்
புரியட்டும்.
இறைவன் ஆயிரத்தில் ஒருவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு சார்பாக எனது
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் .
ஆர். லோகநாதன்.
-
-
-
உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் புத்த பிட்சுவாக நடித்த திரு கெம்பையா அவர்கள் மறைவிற்கு ஆழ்ந்த அனுதாபங்கள் .
-
எம்ஜிஆர் 100 | 25 - திரையுலகில் முடிசூடா மன்னர்!
M.G.R எப்போதுமே எடுத்தேன், கவிழ்த்தேன் என்று செயல்பட்டவர் அல்ல. திரையுலகில் முடிசூடா மன்னராக இருந்தபோதும் சரி; அரசியலில் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்தபோதும் சரி, அவரை யாரும் கேள்வி கேட்க முடியாது என்ற நிலை இருந்தபோதிலும் எதிர் கருத்துக்களுக்கும் மதிப்பளித்தவர் அவர். அதை விட முக்கியம், தனது கருத்தை செயல்படுத்துவதில் தானே முதலில் நிற்பார்.
http://i64.tinypic.com/2rcbww9.jpg
திமுகவில் இருந்து எம்.ஜி.ஆர். நீக்கப்பட்ட பிறகு, அதிமுக கொடியிலேயே தனது தலைவரான அண்ணாவின் உருவத்தை பொறித்தார். 1976-ம் ஆண்டு கட்சியினருக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை எம்.ஜி.ஆர். வெளி யிட்டார். அதிமுகவின் ‘தென்னகம்’ நாளிதழில் அந்த அறிவிப்பு வெளி யானது. ‘எனது ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புக்கள் அண்ணா உருவம் பொறித்த நமது கட்சியின் கொடியை பச்சை குத்திக் கொள்ள வேண்டும்’ என்பதுதான் அந்த அறிவிப்பு. ‘பச்சை குத்திக் கொள்ள வேண்டும்’ என்று கட்சியினருக்கு எம்.ஜி.ஆர். கூறியிருந்தாரே தவிர, அது கட்டாயம் என்று அதில் சொல்லவில்லை.
‘‘ஒருவரை ஒருவர் முன்பின் தெரியா விட்டாலும், கட்சிக் கொடியை பச்சை குத்திக் கொள்வதன் மூலம் அதைப் பார்த்ததும் ‘இவர் நம்ம ஆள்’ என்று அடையாளம் கண்டுகொண்டு கட்சியினரிடையே ஒற்றுமை மனப் பான்மை ஏற்படும், ஒருங்கிணைந்து செயல்பட உதவும்’’ என்று எம்.ஜி.ஆர். கூறினார். இதை ஏற்று லட்சக்கணக்கான தொண்டர்கள் கட்சிக் கொடியை பச்சை குத்திக் கொண்டனர்.
எம்.ஜி.ஆரின் இந்த அறிவிப்புக்கு கட்சியிலேயே எதிர்ப்பும் எழுந்தது. படத் தயாரிப்பாளரான கோவை செழியன், விருதுநகர் சீனிவாசன் போன்றவர்கள் பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், ‘‘கட்சியினர் பச்சை குத்திக் கொள்ள வேண்டும் என்பது எனது விருப்பம். இதை ஏற்பவர்கள் செய்யலாம். பச்சை குத்திக் கொள் ளாதவர்கள் அண்ணாவின் கொள் கையை விரும்பாதவர்கள் என்றோ, கட்சியில் இருக்க தகுதியில்லாதவர்கள் என்றோ கூற முடியாது’’ என்று எம்.ஜி.ஆர். விளக்கம் அளித்தார்.
இப்படி, மாற்றுக் கருத்துக்களுக்கும் ஜனநாயகரீதியில் எம்.ஜி.ஆர். மதிப்பு அளித்தார் என்பது மட்டுமல்ல; கட்சியையும் தன்னையும் கடுமையாக விமர்சித்ததால் நீக்கப்பட்ட கோவை செழியன் போன்றவர்கள் வருத்தம் தெரிவித்ததையடுத்து, அவர்களை மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொண்டார். தனது வழக்கமான இயல்புப்படி, தன்னை விமர்சித்தவர்களுக்கும் பின்னர் கட்சியிலும் ஆட்சியிலும் பதவிகள் கொடுத்தார்.
எல்லாவற்றையும் விட முக்கியமான விஷயம். ‘ஊருக்குத்தான் உபதேசம் எனக்கோ, என் குடும்பத்துக்கோ அல்ல’ என்று எம்.ஜி.ஆர். எப்போதுமே செயல்பட்டதில்லை. கட்சியினர் பச்சை குத்திக் கொள்ள வேண்டும் என்று அறிக்கை வெளியான உடனே அதை செயல்படுத்திய முதல் நபர் எம்.ஜி.ஆரேதான். சென்னை மாம்பலம் ஆற்காடு தெருவில் உள்ள அலுவலகத்துக்கு (இப்போது அந்த இடம்தான் நினைவு இல்லமாக உள்ளது) பச்சை குத்துபவரை வரவழைத்து தனது கையில் பச்சை குத்திக் கொண்டார் எம்.ஜி.ஆர்.
இதில் சுவாரசியமான ஒரு விஷயம், அதிமுகவில் சேர்ந்து பிறகு கட்சி மாறிய நாஞ்சில் மனோகரன் போன்றவர்கள் கையில் கடைசி வரை பச்சை குத்தப்பட்ட அதிமுக கொடி இருந்தது. இரண்டு நாட்களுக்கு முன் பா.ஜ.க-வில் சேர்ந்த நடிகர் விஜயகுமார் கையிலும் அந்தப் பச்சை உள்ளது.
எம்.ஜி.ஆர். நடித்த ‘பல்லாண்டு வாழ்க’ திரைப்படத்தின் பல காட்சிகள் கர்நாடக மாநிலம் கலசபுரா என்ற இடத் தில் படமாக்கப்பட்டன. அங்கு கதைக்கு ஏற்றபடி பாழடைந்த கட்டிடம் போல ‘செட்’ போட வேண்டும். இரண்டு, மூன்று முறை அமைத்தும் பலத்த காற்று அடித்து ‘செட்’ வீணாகிவிட்டது. காற்று சுழன்றடிக்காத இடமாக பார்த்து ‘செட் ’அமைக்குபடி எம்.ஜி.ஆர். சொல்லிவிட்டார். காற்று அடிக்காத பகுதியாக பார்த்த இடம் ஒரு குன்று பகுதி. அந்த இடத்தில் ‘செட்’ போட வேண்டும் என்றால் அங்கு பொருட்கள் வந்து சேர ஆகும் செலவும் அதிகமாகும். எம்.ஜி.ஆர். ஆலோசித்தார்.
அந்த ஊர் மக்களின் பிரதான தொழில் கல் உடைப்பது. அங்குள்ள மக்களையும் படப்பிடிப்புக்கு வந்த தொழிலாளர்களையும் கொண்டே சிறு குன்றை உடைக்கச் செய்து, பெருங் கற்களை கொண்டு பலமான காற்றடித்தா லும் அசைக்க முடியாதபடி, பாழடைந்த வீடு போன்ற கட்டிடம் கட்டப்பட்டது. இதில் ஒரே கல்லில் மூன்று மாங்காய் அடித்துவிட்டார் எம்.ஜி.ஆர்.!
படப்பிடிப்புக்குக் குறைந்த செலவில் ‘செட்’ தயாரானது. குன்று உடைக்கப்பட்டதால் குன்றை சுற்றி ஊருக்கு வராமல் நேர்வழியில் செல்ல மக்களுக்கு பாதை கிடைத்தது. முக்கியமாக, கல் உடைப்பதன் மூலம் ஊர் மக்களுக்கு ஒரு மாதத்துக்கு வேலை கிடைத்தது.
அப்போது, நெகிழச் செய்யும் ஒரு சம்பவம். குன்றை உடைக்கச் சொன்ன எம்.ஜி.ஆர்., வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கவில்லை. பலர் தடுத்தும், ‘‘விரைவில் வேலை ஆக வேண்டும், எல்லாரும் சேர்ந்து செய்தால்தான் முடியும்’’ என்று கூறி மக்களுடன் சேர்ந்து தானும் கல் உடைத்தார்.
தான் சொன்னதற்கு, தானே முன்னுதாரணமாக வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்.
கூட்டங்களில் எம்.ஜி.ஆர். பேசும்போது ‘‘என் ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புக்களே’’ என்று கூறி மக்களின் ஆரவாரத்துக் கிடையேதான் பேச்சைத் தொடங்குவார். இது குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. துப்பாக்கிச் சூடு சம்பவத் தால் சிகிச்சை பெற்றபோது, எம்.ஜி.ஆருக்கு ஏராளமான ரத்தம் செலுத்தப்பட்டது.
‘‘எனக்கு ரத்தம் அளித் தவர்கள் யார் என்று தெரி யாது; ரத்தம் கொடுத்தவர் களுக்கே கூட அது எனக்குத் தான் அளிக்கப்பட்டது என்று தெரிந்திருக்காது. யார், யார் ரத்தம் என் உடலில் கலந்திருக்கிறதோ? அத னால்தான் ‘ரத்தத்தின் ரத்த மான’ என்று குறிப்பிடு கிறேன்’’ என்று விளக்கம் அளித்தார் எம்.ஜி.ஆர்.
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
20.3.1977
டெல்லி பாராளுமன்றத்தை நோக்கி மக்கள் திலகத்தின் 19 வெற்றி வேட்பாளர்கள்
மக்கள் திலகம் எம்ஜிஆர் துவக்கிய அதிமுகவின் ஹாட்ரிக் தேர்தல் வெற்றி
மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்கள் தங்களை அதிமுகவில் இணைத்து கொண்டு தேர்தல் களத்தில் தீவிரமாக ஈடு படுத்தி கொண்டு .புரட்சித்தலைவரின் வெற்றிக்கு உழைத்த இனிமையான நாட்கள் மறக்க முடியாதது .
1.1973 திண்டுக்கல் நாடாளுமன்ற இடைதேர்தல் - மாபெரும் வெற்றி
2.1974 புதுவை நாடாளுமன்ற இடைதேர்தல் - மாபெரும் வெற்றி
3.1977 மார்ச் மாதம் நடந்த பாராளுமன்ற தேர்தலில் அதிமுக தமிழகம் புதுவை உள்ளிட்ட 20 தொகுதிகளில் போட்டியிட்டு தமிழகத்தில் `18 பாராளுமன்ற தொகுதிகளையும் , புதுவை தொகுதியையும் கைப்பற்றி அமோக வெற்றி கண்ட தினம் இன்று .
1977 பாராளுமன்ற தேர்தலில் புரட்சித்தலைவரின் வேட்பாளர்களின் சாதனை துளிகள் .
திண்டுக்கல் மற்றும் புதுவை தொகுதிகளில் இரண்டாவது முறையாக மாயத் தேவரும், பாலா பழனூரும் அமோக வெற்றி பெற்றனர் .
புதுக்கோட்டை - சிவகங்கை - பெரிய குளம் 3 தொகுதிகளில் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி .
நெல்லை - ராமநாதபுரம் -பெரம்பலூர்- திண்டுக்கல் - பொள்ளாச்சி- சிதம்பரம் - கிருஷ்ணகிரி - திருச்செங்கோடு -8 தொகுதிகளில் ஒரு லட்சம் வாக்குகள் மேல் வித்தியாசத்தில் வெற்றி .
சேலம் - தஞ்சை -வந்த வாசி - திருப்பத்தூர் 4 தொகுதிகளில் 50,000 -95,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி .
நீலகிரி - செங்கல்பட்டு - ஸ்ரீபெரும்புதூர் - புதுவை 4 தொகுதிகளில் 20,000- 45000 வித்தியாசத்தில் வெற்றி .
வட சென்னை தொகுதியில் மட்டும் அதிமுக வெற்றி வாய்ப்பை இழந்தது .
-
இனிய நண்பர் திருசத்யா அவர்களுக்கு இனியநல் பிறந்த நாள் வாழ்த்துக்கள் .மக்கள் திலகத்தின் நூற்றாண்டு விழா
முன்னிட்டு தங்களின் தொடர் பதிவுகளை மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் வழங்குவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன் .
-
மக்கள் திலகம் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா துவக்க நேரத்தில் மிகவும் சிறப்பாக புது வேகத்துடன் நமது திரியின் இனிய நண்பர்கள் பலரும் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் சிறப்புகளையும் , கருத்துகளையும் பதிவிட்டு பெருமை சேர்ப்பார்கள் என்று நம்புகிறேன் .
https://youtu.be/6zjtgbZxiS0
-
மக்கள் திலகம் எம்ஜிஆர் - ஜஸ்டின் மோதும் அருமையான சண்டைக்காட்சியில் மக்கள் திலகத்தின் இளமை தோற்றமும் , மின்னல் வேக வாள் வீச்சும் கண்ணுக்கு விருந்து .
https://youtu.be/v-N6yQ9HTEc
-
மக்கள் திலகம் எம். ஜி. ஆர். அவர்களின் நூற்றாண்டு விழா இன்று நடைபெறவிருப்பதையொட்டி, ,சென்னை மாநகரில் ,வாரந்தோறும் வெளியாகும் MYLAPORE TALK மற்றும் PERAMBUR TALK முதலான பத்திரிகைகளில் அனைத்துலக எம்.ஜி.ஆர். பொது நல சங்கத்தின் சார்பில்,, கொடுக்கப்பட்ட விளம்பரம்.
http://i63.tinypic.com/29xxfyr.jpg
-
தின இதழ் நாளிதழில், மக்கள் திலகம் திரியின் நெறியாளர் திரு. திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்கள் நடத்திய கூட்டத்தில் திரைப்பட நடிகர் திரு. ராஜீவ் அவர்கள் உரையை பிரசுரித்துள்ள செய்தி :
http://i63.tinypic.com/2q8x0sw.jpg http://i63.tinypic.com/2e3psmc.jpg
-
தேர்தல் வரலாற்றில் மக்கள் திலகமும் அவருடைய ரசிகர்களின் பங்களிப்பும் .
1957 மற்றும் 1962
மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்களின் இலக்கு - மக்கள் திலகம் எம்ஜிஆர் அடையாளம் காட்டிய திமுகவின் வேட்பாளருக்கு வெற்றி கனி பறிக்க அயராது உழைத்தார்கள் .
1967
மக்கள் திலகம் பரங்கிமலையில் போட்டியிட்ட போது மாநிலத்தில் உள்ள எல்லா எம்ஜிஆர் மன்றங்களும் அவருக்காகவும் , திமுக கட்சிக்காகவும் ராணுவ வீரர்கள் போல் கட்டுக்கோப்பாக உழைத்து வெற்றிகளை குவித்தார்கள் . மக்கள் திலகம் எம்ஜிஆர் தமிழ் நாட்டிலே அதிக ஒட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர் என்ற பெருமையை பெற்றார் .
1971
திரை உலகின் புகழின் உச்சியில் இருந்த மக்கள் திலகம் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டார் . மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்கள் தேனீக்கள் போல் சுறுசுறுப்பாக தேர்தல் பணி புரிந்து மீண்டும் மக்கள் திலகத்தை வெற்றி வீராராக தேர்ந்தெடுத்தார்கள் .
1977
https://youtu.be/qsVKb_kw7Ag
முகவை மாவட்டம் - அருப்புக்கோட்டையில் மக்கள் திலகம் எம்ஜிஆர்
மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்களின் அயராத உழைப்பின் சிகரமாக சென்னை கோட்டைக்கு தமிழக முதல்வராக அனுப்பிய பெருமை இந்த தொகுதிக்கு சேரும் .
1980
மதுரை நகரம் என்றென்றும் எம்ஜிஆரின் திரை உலகம் மற்றும் அரசியல் கோட்டை என்பதை அவருடைய ரசிகர்கள் மூலம் மதுரை மேற்கு தொகுதியில் அவரை வெற்றி பெற செய்து இரண்டாவது முறையாக தமிழக முதல்வராக அமர செய்தார்கள் . இந்த பெருமையை பெற்றவர்கள் மதுரை மண்ணின் மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்களும் மக்களும் என்பது பெருமை .
1984
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் மூன்றாவது முறையாக தமிழக முதல்வராக மதுரை மாவட்டம் ஆண்டிப்பட்டி தொகுதியில் இருந்து வெற்றி பெற்றார் . அவருடைய வெற்றிக்கு உழைத்த மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்கள்
பெருமைக்குரியவர்கள் என்பது சரித்திர வரலாறு .
தொடரும்... மதுரை கிழக்கு - மருங்காபுரி - 1989
-
ஒயிட் & ஒயிட் மக்கள் திலகம் எம்ஜிஆரின் அழகோ அழகு . பாடல் ஆரம்ப காட்சி முதல் இறுதி வரை அலட்டி கொள்ளாமல், சேஷ்டைகள் இல்லாமல் மிகவும் யதார்த்தமாக சிரித்த முகத்துடன் பாடும் அழகு நெஞ்சை விட்டு அகலாது .
https://youtu.be/S2RLsp1D58Q