http://oi65.tinypic.com/359y440.jpg
Printable View
Super SIVAA. Continue your fabulous work.
sekar.p
திரையுலக பிரபலங்கள் ஆகட்டும் அல்லது நடிகர் திலகத்தின் சம கால நடிகர்களாகட்டும் சினிமாவில் பார்க்கும் போது அழகானவர்களாக தெரியக்கூடும், ஒருவேளை
அவர்களை நேரில் பார்க்கும் பட்சத்தில் ஏமாற்றம் தான் மிஞ்சும்,
ஆனால் நடிகர் திலகத்தை சினிமாவில் பார்த்த கண்களுக்கு நேரில் பார்க்கும் பட்சத்தில் பேரானந்த மடையவே செய்யும்
இனைப்பில் திரிசூலம் விழாவில் கலந்து கொண்ட நடிகர் திலகம்
திரிசூலம் இளைய சிவாஜி "குரு" வைக் காட்டிலும் அழகாக தோன்றும் அதிசயம்.
... சென்னையில் ராஜா வெற்றி நடை போட்டு வருகிறார், இதை அறிந்த சன் டிவி தொடர்ந்து சன் லைப் சேனலில் நடிகர் திலகத்தின் சூப்பர் ஹிட் படமாக தேர்ந்தெடுத்து ஒளி பரப்பி வருகிறார்கள் நேற்றுக் கூட "உத்தம புத்திரன்"
இன்று இரவு 7 மணிக்கு " திரிசூலம் "
சன் லைப் சேனலில் வால் போஸ்டர் என்ற விளம்பர இணைப்பு சேர்க்கப்பட்டு அதில் ஒளி பரப்பாகும் படங்களை பற்றிய முக்கிய செய்திகள் இடம் பெற செய்து வருகின்றனர்,
அதன் படி "திரிசூலம் படத்தை காண அன்றைய நாளில் மூன்றரை கோடி டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன" என்ற வரலாற்று சிறப்பு மிக்க சாதனை செய்தியை இடம் பெற செய்கின்றனர்
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...c6&oe=5BBE155A
நடிகர் திலகத்தின் ஜூன் மாத வெளியீடுகள்
1) தங்க பதக்கம் 01. 1974
2) குலமகள் ராதை 07 1963
3) என் தம்பி 07 1968
4) ஆண்டவன் கட்டளை 12 1964
5) குரு தட்சணை 14 1969
6) ரத்தபாசம் 14. 1980
7) பொன்னூஞ்சல் 14 1973
8) பாலாடை 16 1967
9) ஜெனரல் சக்கரவர்த்தி 16 1978
10) சந்திப்பு 16. 1983
11) நீவுரு கப்பின நெப்பு (தெலுங்கு) 24 1982
12) படிக்காத மேதை 25 1960
13) உத்தமன் 25. 1976
14) அஞ்சல் பெட்டி520 .. 27 1969
15) எதிரொலி 27 1970
16) அமர தீபம் 29 1956
17) தங்கமலை ரகசியம் 29 1957
18) சிம்ம சொப்பனம் 30. 1984
இன்று தங்கப்பதக்கம் வெளியான நாள்
வசூலில் மாபெரும் புரட்சி ஏற்படுத்திய சித்திரம்
வெளிவந்த நாள்
யூன் 01 1974
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...97&oe=5B824B68
http://oi67.tinypic.com/239yco.jpg
vaannila
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...c1&oe=5BBE1435
(கர்ணன் முதல் வெளியீட்டில் சென்னையில் 3 தியேட்டர்களில்
100 நாட்கள் ஓடிய விளம்பரம்)
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...d6&oe=5BB6F330
மறு வெளியீட்டில் எந்தப்படமுமே ஏற்படுத்தாத சாதனை
எங்கள் நடிகர் திலகம் கர்ணன் அமெரிக்கா விஜயம். வேற எந்த நடிகரும் கனவிலும் நினைக்க முடியாத அளப்பரிய சாதனை: https://timesofindia.indiatimes.com/...w/15030087.cms
நடிகர் திலகம் என்றாலே வெற்றி தான். ஒரு மயக்கம் தான் !!
re-releaseல் கோடிகளை அள்ளிய ஒரே கர்ணன் இவரே. சாதனைகள் தொடரும். நடிகர் திலகம் ஒரு சரித்திரம்!!
வாழ்க அவரது புகழ்.
vee yaar
Digital Raja Emperor Raja – Part II
ஆல்பர்ட் அளப்பரை
27.05.2018 – எப்பேர்ப்பட்ட நாள் – சென்னை சூப்பர் கிங்ஸ் IPL இறுதிப்போட்டியில் சன்ரைஸர்ஸுடன் மோதும் போட்டி – நீயா நானா என்ற கோதாவில் இரண்டு அணிகள் முழு வீச்சுடன் மோதக் காத்திருந்த நாள். சாலைகளெல்லாம் வெறிச்சென அந்த நேரங்களில் காலியாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நாள். சில அரங்குகளில் திரைப்படக்காட்சிகளை ரத்து செய்யக் கூட தயங்காத அளவிற்கு தயாராக இருந்த நாள்.. அதுவும் இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பின் மீண்டும் Tournamentல் நுழைந்த போட்டி. கேட்க வேண்டுமா.
ஆனால் நடிகர் திலகம் யார்...
சவால் என்றால் அவருக்கு ரஸ்க் சாப்பிடுவது போல... ஊதித்தள்ளி விடுவாரே. அவர் வாழ்க்கையில் அவர் சமாளிக்காத சவால்களே இல்லை, துரோகம், வஞ்சம், என அத்தனையையும் சந்தித்து வென்றவராயிற்றே.. ராஜா என்றால் ராஜா தான் என்று நிரூபித்தவராயிற்றே..
அவருடைய ராஜா டிஜிட்டல் முறையில் வடிவமைக்கப்பட்டு பல்வேறு நவீன மெருகேற்றல்களுடன் துல்லியமான ஒலியமைப்புடன் சென்னை நகரில் வேலன் பிக்சர்ஸ் அவர்களால் வெளியாகியுள்ளது. இந்த ஐபிஎல் இறுதிக்கட்டத்தில் படம் வெளியாகிறதே என்ற பரபரப்பு நிச்சயம் அவர்களுக்கு இருந்திருக்கும். அது நியாயமே. ஆனால் இந்த நாளின் ஆல்பர்ட் திரையரங்கில் அந்த கவலை முற்றிலும் துடைத்தெறியப்பட்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
அநேகமாக சென்னை மாநகரில் இன்றைய நாளில் கிட்டத்தட்ட 90 சதவீதத்திற்கும் மேல் அரங்கு நிறைந்த ஒரே அரங்கு ராஜா வெளியான ஆல்பர்ட் திரையரங்காகத் தான் இருக்கும். அவ்வளவு பெரிய அரங்கில் 90 சதம் என்பதுடைய பரிணாமம் மேற்கூறிய சூழ்நிலைகளின் மூலம் நன்கு புலப்பட்டிருக்கும்.
வெளியே நடிகர் திலகத்தின் திருமுகம் எந்நெந்த பேனரிலெல்லாம் தென்பட்டதோ அத்தனையின் மேலும் ரசிகர்களின் கண்பட்டது. ஆரத்தி எடுக்கப்பட்டது. பட்டாசு வெடிக்கப்பட்டது. அவர்களுடைய கரங்களால் மலர்கள் தூவப்பட்டன. மக்கள் தலைவரைப்போற்றும் கோஷங்கள் விண்ணை முட்டின. ஆரவாரங்களால் அதகளமானது ஆல்பர்ட்.
பல ரசிகர்கள் மிக நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் சந்தித்தனர். நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர். இவையெல்லாம் 6.30 மணி அதாவது படம் துவங்கும் வரை தான். அதன் பிறகு உள்ளே துவங்கியது அந்த திருவிழா.,
விண்ணை முட்டும் கரகோஷம், உணர்ச்சி மயமான கோஷங்கள், உற்சாக நடனங்கள் என டைட்டில் தொடங்கி வணக்கம் வரை எத்தனை எத்த்னை காட்சிகளில் ரசிகர்கள் தங்களை மறந்தனர். எந்த அளவிற்கு ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர் என்பதை யூகத்திற்கு விட்டு விட்டு அவற்றை சந்தித்த காட்சிகளின் பட்டியல் இங்கே இடம் பெறுகின்றன. இதை வைத்தே சிவாஜி ரசிகர்கள் எப்பேர்ப்பட்ட ரசனைத் திலகங்கள் என்பதையும் தன் ரசிகர்களை நடிகர் திலகம் எந்த அளவிற்கு தனக்குள் வைத்திருக்கிறார் என்பதையும் எப்பேர்ப்பட்ட இதயங்கள் அவருக்காக தங்கள் இன்னுயிரையும் தரத்தயாராக இன்னும் இருக்கின்றன என்பதையும் இது நிச்சயம் புரியவைக்கும்.
1. டைட்டில் ... படத்தின் ஒரிஜினல் டைட்டில் துவங்கும் முன் டிஜிட்டல் நிறுவனத்தின் கார்டில் நடிகர் திலகம் பெயர் இடம் பெறும் போதே துவங்க விடுகிறது.
2. ஒரிஜினல் டைட்டில் இடம் பெறும் போது.
3. மனோகர் சிகரெட்டை வாயில் பற்றவைக்கும் போதே தயாராகி விட்டனர் ரசிகர்கள். அந்த சிகரெட் திரையில் வலது மூலையிலிருந்து இடது மூலைக்கு வருவதும் ஒரு கரம் லைட்டரை பற்ற வைப்பதும் காமிரா அந்த லைட்டரிலிருந்து நடிகர் திலகத்தின் முகத்தில் நெருங்குவதும்.. அப்ப்பபா. கரகோஷ பிரளயமே தான்... மொத்த அரங்கமும் எழுப்பிய அளப்பரையில் ஆல்பர்ட் திரையரங்கே அதிர்ந்து விட்டது.
4. பாபுவின் ஆளிடம் தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் காட்சி. முதுகைக் காட்டியவாறு உரை துவங்க ஸ்டைலாக சேரில் திரும்பும் லாவகம்..
5. அறை எண் 207ன் கதவைத் திறந்து ராதா பார்க்கும் போது வியப்பு மேலிட புன்னகையுடன் லேசாக கண்ணடிப்பதும், உதட்டால் ப்ஸ்ச்...என்பதும்...
6. கதவைத்திறந்தவுடன் ஒரு காலை குறுக்கே வைத்து கதவின் இடப்பக்க ஓரமாக டென்னிஸ் லாக்கெட்டை இரண்டு கையிலும் பிடித்தவாறே ஒயிலாக நிற்கும் காட்சி.
7. எனக்கு சேரவேண்டியதை குடுத்துட்டா என்று கூறியவாறே இடது கன்னத்தை சுட்டும் குறும்பு
8. விஸ்வம் சம்பந்தப்பட்டது என்று சொல்லி டென்னிஸ் லாக்கெட்டின் வெளிப்புறத்தில் விரலால் வருடும் ஸ்டைல்.
9. நில்லுங்க என்று ராதா சொன்னவுடன் டக்கென்று நின்று திரும்பும் ஸ்டைல்.
10. பின் கோட்டை சற்றே தள்ளி விட்டு இடது கையை பேண்டின் மேற்புறம் வைத்து நிற்கும் ஸ்டைல்.
11. பாத்தீங்களா பாத்தீங்களா என்னை நம்பறவங்களை நான் எப்பவுமே மோசம் செஞ்சதில்லே ... இந்த வசனத்திற்கு தியேட்டர் என்ன கதியாகியிருக்கும் என்று சொல்லவும் வேண்டுமோ..
12. அது தான் ராஜா என்று தன் நேர்மையைப் பற்றிக் கூறும் போது கையைத் தட்டும் ஸ்டைல்
13. ஆமா உங்க உண்மையான பேரென்ன என்று ராதா கேட்கும் போது டையின் இரு முனைகளையும் விரல்களால் சுற்றிக் கொண்டே ராஜா என ஸ்டைலாக சொல்லுவது.
14. நான் ஜோக்கடிச்சா உங்களை மாதிரியே இந்த மெட்ராஸ் போலீஸுக்கும் பிடிக்கிறதில்லே என்று சொல்லும் போது வலது கை கட்டை விரலை இரு புறமும் அசைத்து சொல்லும் பாடி லேங்குவேஜ்
15. உங்களைப் பாக்கறதைத் தவிர இனிமே எனக்கு வேற வேலையே இல்லே என்று சொல்லும் ஸ்டைல்.
16. போனவர் திரும்பி வந்து ஆப்பிளுக்கு தாங்க்ஸ் சொல்லும் Improvisation
17. போஸ்ட் மேன் வேஷத்தில் வந்தாலும் அம்மா கண்டு பிடிக்கும் போது சமாளித்தல். தன் அண்ணனின் பிறந்த நாளையொட்டி அவரை நினைத்து நெகிழ்தல். Subtle performance
18. ஓ ராஜா என்று ராதா அவனைப் பார்த்ததும் அவர் மேலே நின்று திரும்பும் காட்சி.
19. பாடல் காட்சி முழுதுமே அளப்பரை .. சொல்லி மாளாது.,
ஒரு நினைவூட்டல்.. மேற்காணும் யாவும் ஆல்பர்ட் திரையரங்கில் 27.05.2018 ஞாயிறு மாலைக்காட்சியில் ரசிகர்களின் ஆரவாரம் விண்ணைத் தொட்ட காட்சிகள்.. இது ஆரவாரத்தின் வர்ணனை.. காட்சியைப் பற்றிய வர்ணனையல்ல..
- தொடரும்
vee yaar
Digital Raja Emperor Raja III
ஆல்பர்ட் அளப்பரை 2 – தொடர்ச்சி..
20. நீ வரவேண்டும் பாடல் காட்சியில் குறிப்பாக உன் மனமும் குணமும் நாடகம் என்ற வரியின் போது வலது கையில் சூட்கேஸோடும் இடது கையில் ஜெயலலிதாவின் கரங்களைப் பற்றிக்கொண்டும் நடந்து வரும் காட்சி. அதகளம் தான்.
21. காவல் அதிகாரி சுந்தர்ராஜன் அனாவசியமாக ஃபிலிமை வேஸ்ட் பண்ணாதே என்று எச்சரிக்கும் போது லேசாக சிரித்தவாறே அவரைப் பார்த்து விட்டு தலையை அசைக்கும் இடம்.
22. சுந்தர ராஜன் வயர்லெஸ்ஸில் பேசி முடிக்கும் போது புன்னகைத்துக்கொண்டே, அவர் முடிக்கும் போது இடது கையால் Thank you Sir என்று கையை உயர்த்தி சொல்லும் இடம்
23. பாலாஜி விசாரணை செய்யும் காட்சியில் ராஜா தி கிரேட் என்னும் இடம். திரையரங்கமே அதிரும் அளவிற்கு கரகோஷம்
24. எப்படி தப்பித்தேன் என்று விவரித்துக் கொண்டே திடீரென ரந்தாவா பாலாஜி என அனைவரையும் ஒரு நொடியில் பந்தாடும் லாவகம்.
25. இதென்ன இன்னும் போகப் போகப் பாரு என்று சொல்லும் போது
26. ரந்தாவாவிடம் பாலாஜி அடி வாங்கி விழுந்தவுடன் அவன் தப்பித்து ஓட எத்தனிக்கும் போது வாசலில் நிற்கும் போஸிலிருந்து அந்த சண்டைக் காட்சி முடியும் வரை.. ஒவ்வொரு சின்னச் சின்ன நுணுக்கமான உடலசைவிற்கும் கரகோஷம்.. சோஃபாவிலிருந்து கீழே குதிக்கும் போது வலது காலை சற்றே நீட்டி பின் மீண்டும் ஒரு ஜெர்க்குடன் பேலன்ஸ் செய்யும் Body language
27. பேடா நீ எனக்கு குடுத்ததை நான் உனக்கு திருப்பிக் கொடுக்கவேணாம், என்ற வசனம் பேசும் போது
28. முதல் பஞ்ச் ரந்தாவிற்கு கொடுத்தவுடன் கை விரல்களை ஊதிவிட்டுக் கொண்டு எக்ஸ்யூஸ் மீ மேம் என்னும் போது.
29. தன்னை விட பலசாலியுடன் மோதும் போது உடல் பலம் மட்டும் போதாது புத்திப்பிரயோகமும் வேண்டும் என்பதை உணர்ந்து அதற்கேற்றவாறு தன் வழிமுறையை அமைத்துக்கொள்வது. குறிப்பாக ரந்தாவாவின் இரண்டு கைகளையும் வளைத்துப் பிடித்து முறுக்கிப் பிடித்து அந்த பிடிமானத்தையே தனக்கு பலமாக மாற்றி ஒரு எகிறு எகிறி தன் காலால் அவன் மார்பில் உதைத்து தள்ளி விடும் இடம்.
30. மீண்டும் எகிறு எகிறி அவனை காலால் உதைத்து விட்டு தான் விழும் போது அதே வேகத்தில் எழுந்து கால்களை பேலன்ஸ் செய்யும் போது
31. கே.கண்ணனுக்கு பெட்டியை திறந்து காட்டும் போது அவன் லபக்கென்று அந்த பணத்தை எடுக்க எத்தனிக்கும் போது இடது கையால் ஒரு வெட்டு வெட்டி அவனைப் புறந்தள்ளும் ஸ்டைல்.
32. கல்யாண பொண்ணு பாட்டு முழுதுமே ஆங்காங்கே. குறிப்பாக பாட்டின் துவக்கத்தில் அவளை ஒரு செமி சர்க்கிள் வடிவத்தில் இடமிருந்து வலமாக ஆடிக்கொண்டே வலம் வருவது.
33. பாட்டின் ஆரம்பத்தில் பல்லவி முடிந்த வுடனே இரு கைகளையும் அகல நீட்டிக்கொண்டே பேலன்ஸ் செய்து ஒரு குறுகலான Parapet சுவற்றின் மேல் கால்களை பேலன்ஸ் செய்து கொண்டே ஸ்டைலாக ஆடுவது.
34. பாட்டின் முடிவுக் கட்டத்தில் பல்லவியைப் பாடிக்கொண்டே அவள் பின்னால் துள்ளிக்குதித்து ஓடும் இடம்.
35. போட்டில் சரணம் முடிந்து நீ ஆடி ஆடி போகும் வேகம் வரியின் போது சுற்றிக்கொண்டே ஆடுவது.
36. பாட்டின் முடிவில் லால்லா லலல்லா பாடும் போது இரு கைகளையும் வீசியவாறே ஆடும் ஸ்டைல்.
37. கங்கையிலே ஓடமில்லையோ பாட்டின் முடிவில் நிறுத்துங்க எல்லோரையும் சோதனை செய்ய வேண்டிய அவசியமில்லை என்று சொல்லியவாறே போலீஸ் வேஷத்தில் நுழையும் இடம்
38. இரண்டில் ஒன்று பாட்டின் துவக்கத்தின் போது அந்த காஸ்ட்யூமின் காம்பினேஷனும் ஸ்டைலும் பெற்ற வரவேற்பையும் கரகோஷத்தையும் எழுத்தில் எழுதி மாளாது
39. பாட்டில் ஒரு கட்டத்தில் வீட்டுக்குள்ளேயே வந்து விடும் ராஜா எல்லா கதவையும் சாத்திவிட்ட பின் வேறு வழியில்லாமல் அவள் கட்டிலுக்கு போகும் போது கதவை ஒட்டி இரு கால்களையும் Stand at Ease Positionல் வைத்துக் கொண்டு கைகளை கட்டிக்கொண்டு அட்டகாசமான ஸ்டைலில் நிற்கும் இடம்.
40. மெத்தை போடும் தேவன் என்று என்னைச் சொல்லம்மா வரியின் போது வலது காலை பின் புறம் மடக்கி பின் அதே போல் இடது காலை பின்புறம் மடக்கி கைகளை மார்பின் குறுக்கே வைத்து பாட்டின் தாளத்திற்கேற்ப நடையை அளந்து வரும் ஸ்டைல்.. ULTIMATE ஸ்டைல் இது தான் இதற்கு மேல் பூலோகத்தில் என்ன வேண்டும் என்று ஆணித்தரமாக நிரூபித்து சவால் விடும் இடம்.
41. பாட்டு முடியும் போது இரண்டில் ஒன்று பல்லவி ஒலிக்க அவளைக் கட்டிப்பிடித்தவாறே கண்களை லேசாக உயர்த்தி மூடியவாறே செம்மையான புன்னகை ஒன்றை சிந்தும் இடம்
42. பாலாஜியுடனான சண்டையில் வாங்கிக்கோ லெஃப்ட் என குத்து விடும் ஸ்டைல். தாவி வந்து இரு கைகளையும் பரந்த விரித்தவாறே நின்று கொண்டு பின் வலது கையால் கம் ஆன் என்று பாலாஜியை அழைக்கும் இடம்.
43. பின் அப்படியே மனம் உருகி சந்தர் என அண்ணனை அழைக்கும் இடம்
44. இதற்குப் பிறகு தாயாரை விஸ்வம் அழைத்து வந்து கொடுமைப்படுத்தும் இடம். விஸ்வம் தாயாருக்கு இழைக்கும் சித்ரவதையைத் தாங்க முடியாமல் சங்கர் துடிக்கும் போது ராஜா மிகவும் சிரமப்பட்டு அதை சமாளிக்கும் இடம். மன வலியைத் தாங்கிக்கொண்டு சிரித்தவாறே சமாளிக்கும் இடம். உலகத்தில் உள்ள அத்தனை நடிகர்களுக்கும் ஒரு இலக்கணம் இந்த காட்சி.
45. இறுதியாக மணமேடையில் வேஷ்டி சட்டையில் அட்டகாசமாக தோன்றும் இடம்.
உலகத்தில் இப்படி காட்சிகள் தோறும் கைதட்டலும் புகழ் கோஷமும் உணர்ச்சி மேலிடலும் எந்த ஒரு நடிகனுக்கும் நிச்சயம் கிட்டாது.
தலைவர் படத்தில் சொல்வது போல் ராஜான்னா ராஜா தான்.
இவ்வளவு பெரிய அளப்பரையை மிஸ் பண்ணிட்டோமே என்று இப்போது தங்களில் பலருக்கும் நிச்சயம் தோன்றும்.
இதோ உங்களுக்காக அந்த வாய்ப்பு. எதிர்வரும் ஜூன் 3ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆல்பர்ட் திரையரங்கில் மாலைக்காட்சி ரசிகர் காட்சியாக மலர இருக்கிறது. இந்த வாய்ப்பினைப் பயன் படுத்திக்கொண்டு இதை விட இன்னும் அட்டகாசமான அளப்பரையோடு கொண்டாடுங்கள்.
மறக்காதீர்கள். ஞாயிறு 03.06.2018மாலை 6.30 மணி. காட்சி. சென்னை ஆல்பர்ட் திரையரங்கம்..
நன்றி.
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...d1&oe=5B819B79
நடிகர் திலகம் ஒருமுறை மும்பை சென்றபோது சிவசேனா கட்சியினர் அவரை சூழ்ந்துகொன்டு ஆர்பாட்டம் செய்கின்றனர். காரனம் தமிழர்கள் மீது கொன்ட வெறுப்பின் காரனமாக. இதை கேள்விபட்ட அக்கட்சியின் தலைவர் பால்தாக்கரே உடன் வந்து தொன்டர்களிடம் இவரை தமிழர் என்று பார்க்காதீர்கள் இவர் தேசியவாதி. மேலும் மும்பையில் ஏற்பட்ட வெள்ள சேதத்திற்கு முதல் நடிகராக தனது சொந்த பணத்தில் நிவாரன நிதியாக வழங்கியுள்ளார். எனவே இவருக்கு உரிய மரியாதை கொடுங்கள் என்று கூறி விலகி சொல்ல செய்தார்.
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...3e&oe=5B7FC221
courtesy muralidharan-sivaji group
எனது பார்வையில்
--------------------
நிறைய பதிவுகள் எம்ஜிஆர் அரசியலில் வென்றார்
சிம்மக்குரலோன் எம் சிவாஜி அரசியலில் தோற்றார் என
இது ஓர்முட்டாள்தனமான ஒப்பீடு
... எம்ஜிஆரின் அரசியல் என்பது திட்டமிடப்பட்டு நகர்த்தப்பட்ட சதுரங்க ஆட்டம் போல
எம் நடிகர் திலகத்தின் அரசியல் ஓர் சேவை போல
அவர் எப்போதும் தன்னை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி கொண்டதில்லை
போட்டியில் பங்கேற்காத ஒருவரை தோல்வியுற்றார் என பேசுவது எவ்வளவு மடமை
அவரின் அரசியல் திரைப்படங்களில் தேசத்தலைவர்கள் புகழ் பாடி
அதைத்தான்டி பெருந்தலைவர் புகழ் பாடி
அவர் அரசியல் தேவையை நோக்கி அல்ல
சேவைகளாய்
அவர் பதவி என கேட்டிருந்தால் எம் பெருந்தலைவன் காமராஜரும் மறுத்திருக்க மாட்டார்
எம் அன்னை இந்திராவும் மறுத்திருக்க மாட்டார்
அவரின் தமுமு என்ற பயணம் கூட உடன் பழகிய உற்ற சகோதரன் மனைவியை அரியனை ஏற்றவே தவிர தான் அரியனை ஏற அல்ல
கடைசியாய் ஒன்று
எல்லோர்க்கும் எல்லாம் அமைவது இல்லை
இவருக்கு நல் குடும்ப வாழ்க்கை கிடைத்தது
வாரிசுகள் கிடைத்தது
இன்றும் அவர் பெயர் போற்றும் ரசிகர் மன்ற பிள்ளைகள் கிடைத்தது
இன்றைய அரசியலை காணும் பொழுதில் இதற்கு மூலமானவரை எவராவது காரி துப்ப முயலலாம்
ஆனால் எச்சூழ் நிலையிலும் எவராலும் காரித்துப்பி இகழ முடியா கலங்கரை விளக்கு
எம் சிவாஜி என
வீரநடை போடுவோம்
தேசிய உறவுகளே
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...44&oe=5B7AC19F
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...62&oe=5BC4FE0B
courtesy kumaresan-sivaji group